ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
சிலேடை சிரிப்புகள் 5 5 4

சிலேடை சிரிப்புகள்

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik on Sun May 30, 2010 5:36 pm

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by Aathira on Thu Jun 17, 2010 8:11 pm

அருமையான பகிர்வு.. பலருக்கு கி.வ.ஜ. பற்றித் தெரியாது.. இவரின் மாணவ்ர் திரு திருப்பூர் கிருஷணன். அவர் பேசும்போதேல்லாம் த்ன் ஆசிரியரைப்பற்றி பேசுவது மட்டும் அல்லாமல் அவரும் பலமான நகைச்சுவைத் திலகம்.. நான் அவர் கூறி கி. வ. ஜ வை அறிந்தேன்.. பகிர்வுக்கு மிக்க ந்னறி...பாலா..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by கலைவேந்தன் on Thu Jun 17, 2010 8:50 pm

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

நன்றி

Post by நியாஸ் அஷ்ரஃப் on Thu Jun 17, 2010 8:56 pm

இனிய பதிவு
நன்றி..

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik on Tue Jun 22, 2010 2:26 pm

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார். புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன்னால் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் வந்தது. 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது. மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik on Tue Jun 22, 2010 3:44 pm

கவியரசு கண்ணதாசன் ஒரு பட்டி மன்ற தலைமை ஏற்றிருந்த பொழுது கடைமடை என்ற ஊரிலிருந்து பேச்சாளர் தாமதமாக வந்தார். அவரை வரவேற்கும் பொழுது கண்ணதாசன் சிறிது கிண்டலாக “வாருங்கள் கடைமடயரே” என்றார். அவரும் சலிக்காமல் “வணக்கம் மடத்தலைவரே” என்றாரே பாக்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik on Tue Jun 22, 2010 3:48 pm

கவி காளமேகம் கடற்கரையோர நாகப்பட்டினம் காத்தான் சத்திரத்தில் பசியோடு காத்திருந்தார்.

சாப்பாடு ஒரேயடியாகத் தாமதம் ஆனது.

ஒரு வழியாக சாப்பாடு பரிமாறப்பட்டு அவர் சாப்பிட்டும் முடித்தார். காளமேகத்தின் பெருமை அறிந்த சாத்திரப் பொறுப்பாளர் அவரை ஒரு பாடல் பாடச் சொன்னார்.

கத்துகடல் சூழ் நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும்; குத்தி
உலையிலிட ஊரடங்கும்;ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி முளைக்கும்

அத்தமிக்கும் – சூரிய அஸ்தமனம்
ஊரடங்கும் – எல்லாரும் உறங்கிப் போவார்கள்
வெள்ளி முளைக்கும் – விடிந்து விடும்

என்று பாடினார்.

சத்திரப் பொறுப்பாளருக்கு வருத்தம்.

“அன்னமிட்டோர் உள்ளம் நோக பாடுதல் முறையா?” என்று வருத்தமாகக் கேட்டார்.

காளமேகம் அவரது பாடலுக்குச் சொன்ன விளக்கம் :

அத்தமிக்கும் போதில் அரிசி வரும் என்றால், பஞ்சத்தில் எல்லா இடத்திலும் அரிசி அத்தமித்தாலும் (மறைந்தாலும்) காத்தான் சத்திரத்துக்கு அரிசி வரும். அதை அள்ளி உலையிலிடும் போதே அந்த நல்லெண்ணத்தில் ஊரின் பசி அடங்கும். ஒரு கரண்டி சோறு இலையில் வைத்ததும் பளீரென்று வெள்ளி நிறமாக ஜொலிக்கும்.

சத்திரப் பொறுப்பாளர் சாந்தமானார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 22, 2010 3:52 pm

balakarthik wrote:ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார். புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன்னால் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் வந்தது. 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது. மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.

புலவரின் சமயோஜிதத்தை மெச்ச வேண்டியது தான்... ஹே பாலா நீ தான் அந்த புலவரா இருந்தியோ?? சிவா தான் மன்னரா இருந்தாரா?

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik on Tue Jun 22, 2010 3:54 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார். புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன்னால் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் வந்தது. 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது. மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.

புலவரின் சமயோஜிதத்தை மெச்ச வேண்டியது தான்... ஹே பாலா நீ தான் அந்த புலவரா இருந்தியோ?? சிவா தான் மன்னரா இருந்தாரா?

அவரு மன்னனா இருந்தா 100 பைசா கூட கொடுக்கமாட்டார்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik on Tue Jun 22, 2010 4:02 pm

இது ஒரு சிலேடை சிரிப்பு

வந்தவர் :- உங்க கடைல ரவா வாங்கணும்ங்கறது தான் என் பேரவா. நானே வரவா, இல்லை என் பையனை அனுப்பித் தரவா?

கடைகாரர் :- இதென்னய்யா தொந்தரவாப் போச்சு!'

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by ரபீக் on Tue Jun 22, 2010 4:09 pm

தோட்டா ரவா தீர்ந்துபோச்சு .... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik on Tue Jun 22, 2010 4:11 pm

ரபீக் wrote:தோட்டா ரவா தீர்ந்துபோச்சு .... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

அப்போ ஆட்டா ரவா வச்சு சுடுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik on Tue Jun 22, 2010 4:17 pm

எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு.
என் தந்தைக்கு வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார்.
அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டிகளை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும்
பார்க்க ஒரே கன பரிமாணத்தில் இருந்தது.
வேட்டிக் கான தொகயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப்போனார்.
இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது கடை சிப்பந்தி உதவிக்கு வந்தார்.
மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத்தினார்.
அந்தச் சொற்றொடரை தவறாய்ப்புரிந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by பிச்ச on Tue Jun 22, 2010 4:23 pm

balakarthik wrote:எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு.

அவர் ஏன் அப்படி நினைத்தார் தெரியுமா? (அதாவது வெட்டி அவிழ்கிறது என்று)
பக்கத்துல இருந்தது நீங்கலாச்சே! (பாலு வாச்சே...)

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik on Tue Jun 22, 2010 4:33 pm

பிச்ச wrote:
balakarthik wrote:எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு.
என் தந்தைக்கு வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார்.
அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டிகளை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும்
பார்க்க ஒரே கன பரிமாணத்தில் இருந்தது.
வேட்டிக் கான தொகயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப்போனார்.
இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது கடை சிப்பந்தி உதவிக்கு வந்தார்.
மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத்தினார்.
அந்தச் சொற்றொடரை தவறாய்ப்புரிந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!

அவர் ஏன் அப்படி நினைத்தார் தெரியுமா? (அதாவது வெட்டி அவிழ்கிறது என்று)
பக்கத்துல இருந்தது நீங்கலாச்சே! (பாலு வாச்சே...)

இத சொல்லுரவரு நம்ம பிச்ச

கவித கவித

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum