|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சிலேடை சிரிப்புகள்
Page 8 of 9 • Share •
Page 8 of 9 •
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 
சிலேடை சிரிப்புகள்
First topic message reminder :
எங்கே விழுது?
கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.
இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.
பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.
கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.
கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
தலைவனை பையனாக...?
கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.
கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.
அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.
அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.
ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?
தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.
உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.
(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)
நீரில் குவளை
ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.
நானா தள்ளாதவன்...?
கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.
கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.
ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;
"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.
வாயிலில் போடுவேன்..!
கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.
அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.
அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.
கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
தன்னுடைய கதாநாயகனுக்கு கோவலன் என்று இளங்கோ அடிகள் பெயர் சூட்டியதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.
இளங் – கோ என்றால் இளவரசன். அவரோ துறவியானவர். அரசனாவதற்கு பதில் ஆண்டியானவர். அதாவது தலைகீழ்.
இளங் – கோ, கோ – இலன் ஆனார். (ங் ஈற்றெழுத்தாக வராது என்பதால் அதே ஓசை தரும் ன்)
கோ – இலன் என்றால் அரசனில்லை என்கிற பொருளும் வருகிறது. பெயரின் எழுத்துக்களைத் தலைகீழாக்கினால் பொருளும் தலை கீழாகிறது!
அலன், இலன் இரண்டுமே ஒரே பொருள் தரும் விகுதிகள்தான். ஆகவே கோ – அலன் என்றும் சொல்லலாம். கோ வும் அலனும் இணையும் போது கோவலன் ஆகிறது.
இளங் – கோ என்றால் இளவரசன். அவரோ துறவியானவர். அரசனாவதற்கு பதில் ஆண்டியானவர். அதாவது தலைகீழ்.
இளங் – கோ, கோ – இலன் ஆனார். (ங் ஈற்றெழுத்தாக வராது என்பதால் அதே ஓசை தரும் ன்)
கோ – இலன் என்றால் அரசனில்லை என்கிற பொருளும் வருகிறது. பெயரின் எழுத்துக்களைத் தலைகீழாக்கினால் பொருளும் தலை கீழாகிறது!
அலன், இலன் இரண்டுமே ஒரே பொருள் தரும் விகுதிகள்தான். ஆகவே கோ – அலன் என்றும் சொல்லலாம். கோ வும் அலனும் இணையும் போது கோவலன் ஆகிறது.

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
கண்ணகி என்றால் என்ன அர்த்தம்?
கண் + நஹி கண்ணில்லை என்று அர்த்தமா?
நகை என்றால் சிரிப்பு. கண் நகி என்றால் கண்ணால் சிரிக்கிறவள் என்று அர்த்தம்.

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Re: சிலேடை சிரிப்புகள்
வசை பாடல் - காளமேகம்
மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!
இந்த வெண்பாவை மேலோட்டமாக பார்க்கும்போது வரும் அர்த்தம், மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள். நீங்கள் கேட்டதில்லையா?
இனி சிலேடையின் உட்பொருளை பாருங்கள்: மாட்டுக்கோன் – மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோன் – ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள்.
கோட்டானை என்பது கோடு – ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க – நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி – அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி. எவ்வளவு அருமையான விளக்கம்.

balakarthik wrote:

அற்புதம்...அருமை...சூப்பர்...
அருமையானப் பதிவு-பகிர்வு...
நன்றி பாலாகார்த்திக்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5041
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 842
Re: சிலேடை சிரிப்புகள்
balakarthik wrote:கண்ணகி என்றால் என்ன அர்த்தம்?
கண் + நஹி கண்ணில்லை என்று அர்த்தமா?
நகை என்றால் சிரிப்பு. கண் நகி என்றால் கண்ணால் சிரிக்கிறவள் என்று அர்த்தம்.
ஏன் இப்படி பொய் சொல்றீங்க பாலா? அந்தம்மா எந்தக் காலத்துல சிரிச்சிச்சு......
Re: சிலேடை சிரிப்புகள்
வசை பாடல் மிகவும் நன்று பாலாகார்த்திக்....காளமேகம் இதற்குப் பேர்போனவர் அல்லவா. விரும்பினேன் உங்கள் பதிவை.
Re: சிலேடை சிரிப்புகள்
கண்ணகி என்றால் என்ன அர்த்தம்?
கண் + நஹி கண்ணில்லை என்று அர்த்தமா?
நகை என்றால் சிரிப்பு. கண் நகி என்றால் கண்ணால் சிரிக்கிறவள் என்று அர்த்தம்.
பி கே அண்ணா unmaiya சொல்லுங்க கண் +நஹி என்றாள் கண் இல்லாதவள் என்று தானே பொருள் , இதுல இருந்தே தெரியுது நீங்க ஒரு டுபாக்கூறு ஹிந்தி மாஸ்டர்
Re: சிலேடை சிரிப்புகள்
இரா.பகவதி wrote:கண்ணகி என்றால் என்ன அர்த்தம்?
கண் + நஹி கண்ணில்லை என்று அர்த்தமா?
நகை என்றால் சிரிப்பு. கண் நகி என்றால் கண்ணால் சிரிக்கிறவள் என்று அர்த்தம்.
தம்பி கண்ணில்லாதவலுக்கும் இல்லாத கண்ணுக்கும் நியையா டிபரன்ஸ் உள்ளது
பி கே அண்ணா unmaiya சொல்லுங்க கண் +நஹி என்றாள் கண் இல்லாதவள் என்று தானே பொருள் , இதுல இருந்தே தெரியுது நீங்க ஒரு டுபாக்கூறு ஹிந்தி மாஸ்டர்![]()

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
பிரிமொழிச் சிலேடை
ஒரு சொற்றொடரில் உள்ள சொற்களை வேறுவேறு வகையாகப் பிரித்துப் பல பொருள் கொள்வது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
எள்ளா அரிமா னிடர்மிகுப்ப - உள்வாழ்தேம்
சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம்
நந்தும் தொழில்புரிந்தார் நாடு
அருஞ்சொல் பொருள்
இப்பாடல், சோழனைப் பகையாதவர் (நட்புக் கொண்டோர்) நாட்டிற்கும், அவனைப் பகைத்தவர் நாட்டிற்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள், பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால் ஒரு வகையாகவும், பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால் வேறு ஒரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருளைத் தருகின்றன.
சோழனைப் பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
தள்ளா இடத்து - அழகு கெடாத விளைநிலத்தில்;
ஏர் - பகட்டேர் அதாவது உழும் எருது;
தடம் - பெரிய;
தாமரை - தாமரை மலர்;
எள்ளா - இகழாத;
அரி - நெற்சூடு;
மானிடர் - உழவர்;
மிகுப்ப - திரட்ட;
உள்வாழ்தேம் - உள்ளே உண்டாகிய தேன்;
சிந்தும் - பொழியும்;
நந்தும் தொழில் புரிந்தார் - விரும்பும் பணி செய்தோர்.
சோழனைப் பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
விடத்தேர் - முள்ளுடைய ஒருவகை மரம்;
தள்ளா - அசையாத;
தடம் - மலை;
சிந்தும் - அழியும்;
தா மரை - தாவுகின்ற மரை என்னும் மான்;
எள்ளா - இகழாத;
அரி மான் - சிங்கப் போத்து, ஆண் சிங்கம்;
இடர் - துன்பம்;
மிகுப்ப - செய்ய;
உள்வாழ்தேம் - உள்ளத்தில் வாழும் நாடு;
நந்தும் தொழில் புரிந்தார் - வேறுபடும் தொழில் செய்தோர்.
இப்பாடலின் பொருள்
அழகு கெடாத விளைநிலங்களில் உளதாகிய பகட்டேர் (உழுகின்ற எருது) பெரிய தாமரை மலரைப் பொருந்தவும், இகழப்படாத நெற்கதிர்களை உழவர்கள் திரட்டவும், அத்தாமரை மலரில் உளதாகிய தேன் பொழியும் பெருமையை உடையது, எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் விரும்பும்படி நடந்தோருடைய நாடு.
அசையாத விடத்தேர் என்னும் முள்மரங்களை உடையதாய், பெரிய மலைச் சிகரங்களைத் தாவும் மான்களை உடையதாய், இகழப்படாத ஆண் சிங்கங்கள் துன்பமுறுத்த, நல்லோர் உள்ளங்களில் வாழும் இடங்கள் எல்லாம் அழிவுபடும் தன்மையை உடையது. எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் வெறுக்கும்படி நடந்தோருடைய நாடு.
நன்றி:- www.tamilvu.org

இப்பாடலில் உள்ள சொற்கள், சோழனுடைய நண்பர்கள் நாட்டிற்கு ஆகுங்கால் ஒரு வகையாகவும், பகைவர்கள் நாட்டிற்கு ஆகுங்கால் வேறொரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருள் தருவதால் இது, 'பிரிமொழிச் சிலேடை' ஆயிற்று.
நன்றி:- www.tamilvu.org

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
இரு பொருள் தரும் ஒருச்சொல்லை கண்டுபிடிப்பதே எனக்கு கடினம்.இங்க ஒரு பாவே இருக்கு.நன்றி பாலா தகவல் தந்தமைக்கு.,
Re: சிலேடை சிரிப்புகள்
ராஜா wrote:என்னமோ சொல்லுரிங்க ... என்னன்னு தான் புரியல
எனக்கும்தான் பாஸ்

முரளிராஜா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5444
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 449
Page 8 of 9 •
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum