ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கனவு பற்றிய கண்ணோட்டம்!

View previous topic View next topic Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by சிவா on Tue Jun 01, 2010 3:47 am

நம்முடைய எண்ணங்களே கனவுகளாக வருகின்றன என்பது சிலரது கருத்து. நாம் நினைக்காத செய்திகள், பார்க்காத பொருட்கள், மனிதர்கள், தெய்வங்கள் கனவில் வருவது உண்டு. இப்படி நாம் காணுகின்ற பொருட்களை ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் நாம் பார்த்ததாக நினைவும் இருக்கிறது.

மனிதனுடைய வாழ்க்கையில் அவன் செய்யக் ஊடிய தர்மங்களுக்கும், பாவ புண்ணியங்களுக்கும் ஏற்ப பல்லாயிரம் முறை பிறப்பதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!

"புனரபி ஜனனம் புனரபி மரணம்"

மரணத்திற்குப் பின் ஜனனம், ஜனனத்திற்குப் பின் மரணம். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சாதாரமாக மனிதனிலிருந்து தேவர்கள், அசுரர்கள், ஏன் தெய்வங்களுக்கும் கனவு உண்டானதாக சாஸ்திரங்கள் மூலம் நாம் படித்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.

கனவு என்பது அறிவியல் ரீதியாக பகுத்துப் பார்த்து கொடுக்க முடியாத ஒரு விஷயமாகும்.

பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அகநானுறு, மனோன்மணியம், கம்பராமாயணம், சிவகசிந்தமணி போன்ற பல்வேறு நுல்களில் கனவுகளைப் பற்றிய செய்திகள் அங்கங்கே அசைக்க முடியாத நம்பிக்கையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

கனவு என்பது அறிவியலையும் கடந்த விஷயமாகும். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தான் சுடப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக ஒரு கனவு கண்டார்.

வைகறையில் கண்ட கனவு, வைகறை என்றால் விடியற்காலை என்று பொருள். வைகறையில் அவர் கண்ட கனவு. வெள்ளை மாளிகையில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட நபர்களால் தான் சுடப்பட்டுக் கிடப்பதையும், அந்த இடத்தில் குறிப்பிட்ட சில நபர்களையும் அவர் தன கனவில் கண்டார்.

எழுந்தவுடன் அந்தக் கனவை தன மனைவியிடம் கூறிவிட்டு வழக்கம்போல் தன அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்.

மூன்று நாட்கள் கழித்து ஆபிரகாம் லிங்கன்கனவு கண்ட அதே அறையில் சுடப்பட்டு மாண்டார். அவர் கனவில் கண்ட அதே நபர்கள் அந்த இடத்தில் இருந்ததை அவர் மனைவி கண்டார்.

இந்தப் பிரபஞ்ச வாழ்கையில் மனிதன் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ, அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ அது பல தலைமுறைகளுக்கு முன்பு அவன் வாழ்க்கையில் நடந்துவிட்ட ஒரு விசயமாகும்.

அவனுடை அமானுஷ்யமான சக்தி, அவனுடைய ஆற்றல் மிகுந்த மூளை இந்த நிகழ்ச்சிகளை ஈர்ப்பு செய்து அதைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு விஷயம் பகுதிக் கனவாகவும் சொல்லப்படுகிறது!

கனவு என்பது நம்முடைய வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தேவர்கள் வாழ்க்கையிலும், அசுரர்கள் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது!

இராமயணத்தில் இராமரிரம் போர் செய்வதற்கு முன்பாக இராவணனுக்கு ஒரு கனவு ஏற்பட்டது.தொடரும்....


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by ரிபாஸ் on Tue Jun 01, 2010 10:01 am

அருமையான தகவல் தலைவா வாழ்த்துக்கள்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by ப்ரியா on Tue Jun 01, 2010 10:04 am

என்ன கனவு சீக்கிரம் பதிவிடுங்கள் அண்ணலே ...
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by சிவா on Tue Jun 01, 2010 12:39 pm

அவருடைய கனவில் இரண்டு பறவைகள் தெரிகின்றன. ஒன்று வெள்ளை நிறத்திலும் மற்றொன்று கருப்பு நிறத்திலும் உள்ள பறவை ஆகும்.

வெள்ளை நிறத்தில் உள்ள பறவை கருப்பு நிறத்தில் உள்ள பறவையை வென்று விடுகிறது.

இந்தக் கனவை தன அரண்மனையிலுள்ள மந்திரிகளிடமும், உயர் அதிகாரிகளிடமும் கூறி அதன் விளக்கத்தைக் கேட்கிறான்.

அதற்கு அவர்கள் வெள்ளைப் பறவையை இராமரகவும், கருப்புப் பறவையை இரவனனாகவும் வைத்து இராமர் உங்களை வெற்றி கொள்ளப் போகிறார் என்பதை அறிவுறுத்தியிருக்கிறது. அந்தக் கனவிற்குக் கட்டாயம் பலன் உண்டு. ஆகவே நீங்கள் போரில் இராமரால் கொல்லப்படுவீர்கள். அதற்கு முன்னதாக அந்தப் போரைத் தடுப்பதற்கு சீதாதேவியை இராமரிடம் ஒப்படைத்து விட்டால் போர் நின்றுவிடும். அதனால் உங்கள் உயிரும் காக்கப்பட்டுவிடும் என்று அறிவுரை கூறினார்கள்.

ஆனால் இந்த அறிவிரையைக் கேட்க மறுத்த இராவணன் அறிவுரை கூறிய அனைவரையும் காவலில் இட்டு துன்புறுத்தினான்.

இறுதியில் அவன் கண்ட கனவு பலித்தது.

இறைப்பூர்வமாக வழிபாட்டில் ஈடுபட்டிருக்கக் கூடியவர்களுக்கு இந்தக் கனவுகள் கட்சிக்காக வரக்கூடிய ஒரு விஷயமல்ல. எதிர்காலத்தில் நடக்ககூடிய விஷயங்களை சொல்லக்கூடிய ஒரு மறைமுகமான சமிக்ஞைகளாக வருகின்றன.

சிலப்பைதிகரத்தில் கோவலன் கொல்லப்படுவதற்கு முன்னாள் கண்ணகி தீய கனவு காண்கிறாள். கோவலனுக்கு மரணம் ஏற்படும் என்கிற செய்தி கனவின் மூலம் அவளுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது.

இராமயணத்தில் இறைவனின் மனைவியாகிய மண்டோதரி இராவணனைப் பற்றி கண்ட கனவு பலித்தது.

சீதை இராமனைப் பிரிவோம் என்று கண்ட கனவு பலித்தது.

இராமயணத்தில் வாலி, தான் கொல்லப்படுவோம் என்று கண்ட கனவும் பலித்தது.

இராவனின் சகோதரன் விபீஷணன் கண்ட கனவும் பலித்தது.

இராம இறவன் யுத்தத்தில் இராவணன் கொல்லப்படுவான் என்பதை இலங்கையில் இருந்த ரிஷிமார்களுக்கும், இராவணன் சபையிலிருந்த மிக முக்கிய குருமார்களுக்கும் கனவு மூலமாகவே உணர்த்தப்பட்டது.

இராமயணத்தில் விபீஷணின் புத்திரி திரிஜடை கண்ட கனவு பின்னொரு நாளில் நனவாக மாறியது.

வாலியின் மனைவி தாரை கண்ட கனவு பலித்தது.

சிலப்பைதிகரத்தில் கோப்பெருந்தேவி கண்ட கனவு பலித்தது.

வரலாற்றில் சக்கரவர்த்தி ஜூலியஸ் சீஸர் கண்ட கனவு சீஸரின் மரணத்தின் போது உறுதிப்படுத்தப் பட்டது.

இப்படி கனவுகளுக்குப் பலன் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. பொதுவாக ஆண்கள் காணக்கூடிய கனவுகளைவிட பெண்கள் காணக்கூடிய கனவுகளுக்கு உடனடி பலன் தெரியும். இதை மேற்கூறிய விஷயங்களிளிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

இப்படி கனவு என்பதற்கு ஒரு திட்டவட்டமான தீர்க்கமான அறிவியல் ரீதியாக ஆதாரப்பூர்வமான விஷயங்களை வரையறுத்துக் கூறமுடியாத நிலை இருக்கின்றது. ஏனெனில் பெருவாரியான கனவுகள் பலித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இப்படி கனவுகள் பலித்துக் கொண்டிருக்கின்றன என்று சொல்லும் நாம் பகலில் காணக்கூடிய கனவு பலிக்காது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து வர இருப்பது.....

கனவு பற்றி இந்து மத சாஸ்திரம் கூறும் உண்மைகள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by எஸ்.எம். மபாஸ் on Tue Jun 01, 2010 12:44 pm

கனவு...

கனவு கனவாகவே இருந்துவிடாமல்....

தகவலுக்கு நன்றி தலைவா..
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 01, 2010 1:36 pm

கனவு பற்றி இத்தனை விவரங்கள் இப்போது தான் அறிய முடிந்தது சிவா...

எனக்கு நிறைய இதுவரை பார்த்திராத கோவில்கள் எல்லாம் எத்தனையோ தடவை கனவில் வந்து அதன்பின் அந்த கோவிலுக்கு போய் வழிப்பட்டிருக்கேன்...

ஷீர்டி சாய்பாபா

விக்ரமாதித்தன் வழிப்பட்ட பெட்டிகாளியம்மன்

இன்னும் பார்க்காத ஸ்ரீ சைலம் ஆனால் கனவில் இந்த கோவில் வந்தாச்சு...

ரோம்ல ஒரு சர்ச் இதுவும் கனவில் வந்தது...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...

இன்னும் தொடரும்னு போட்டிருக்கீங்க... போடுங்க சிவா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by சிவா on Tue Jun 01, 2010 1:43 pm

மஞ்சுபாஷிணி wrote:கனவு பற்றி இத்தனை விவரங்கள் இப்போது தான் அறிய முடிந்தது சிவா...

எனக்கு நிறைய இதுவரை பார்த்திராத கோவில்கள் எல்லாம் எத்தனையோ தடவை கனவில் வந்து அதன்பின் அந்த கோவிலுக்கு போய் வழிப்பட்டிருக்கேன்...

ஷீர்டி சாய்பாபா

விக்ரமாதித்தன் வழிப்பட்ட பெட்டிகாளியம்மன்

இன்னும் பார்க்காத ஸ்ரீ சைலம் ஆனால் கனவில் இந்த கோவில் வந்தாச்சு...

ரோம்ல ஒரு சர்ச் இதுவும் கனவில் வந்தது...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...

இன்னும் தொடரும்னு போட்டிருக்கீங்க... போடுங்க சிவா...

நிச்சயம் எழுதுகிறேன் மஞ்சுக்கா!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by சிவா on Wed Jun 02, 2010 1:48 am

கனவு பற்றி இந்துமத சாஸ்திரம் கூறும் உண்மைகள்


இரவு நேரத்தில் அயர்ந்து உறங்குகின்றோம். அந்நேரத்தில் நம்முடைய உடலானது எவ்வித இயக்கமுமின்றி அசைவற்று கீழே கிடக்கிறது! கண் பார்க்க முடியாத நிலையிலும் இருக்கிற நித்திரையில்தான் கனவு வருகிறது! ஆனால் கனவில் மட்டும் நாம் கீட்கிரூம், பார்க்கிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம். இது எப்படி.

நமது உடம்பை அறிவியலாளர்கள் ஸ்தூல உடம்பு, சூட்சும உடம்பு என இருபாகமாக பிரிக்கிறார்கள்.

அவற்றில் கனவு காணும் நிகழ்ச்சிகளைக் காட்டுவது இந்த ஸ்தூல உடம்பில்லை, சூட்சும உடம்பே ஆகும்.

பெருவாரியாக இந்து மதத்தில் நாம் துங்குபோது நமது சூட்சும உடலானது பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவதாக சொல்லப்படுகிறது. இது உண்மையுங்கூட. ஆவியுலக ஆராய்ச்சியில் உள்ளவர்களும், அறிவியலாளர்களும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாம் கனவு காணும்போது அசையாது இருக்கும் இந்த ஸ்தூல உடம்பு எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாவது இல்லை. ஆனால் ஆவி உடல் என்று வர்ணிக்கப்படும் சூட்சும சரீரம் பலவித பதிப்புக்களுக்கு உள்ளாகிறது.

இந்த சூட்சும உடலுக்குக் கிடைக்கும் பல்வேறு விதமான அனுபவக் கோர்வைகளே நமக்குக் கனவுகளாக காணக்கூடிய உணர்வுகளை உண்டாக்குகின்றன.

இந்த சூட்சும உடல் நாம் தூங்கும்போது நம்முடைய உடலை விட்டு வெளிஎரிஸ் செல்கிறது. வெளிஎரிஸ் செல்லக்கூடிய இந்த சூட்சும உடல் சகலவிதமான சக்திகளையும் பெற்றிருக்கிறது.

இதன் காரணத்தினாலேயே சூட்சும உடலால் பறப்பது, கடவுளைக் காண்பது, பேய்களுடன் உறவாடுவது, விசித்திரமான உலகில் சஞ்சரிப்பது, வித்தியாசமான மனிதர்களுடன் உரையாடுவது, தூரத்திலுள்ள உறவினர்களுடன் உரையாடுவது ஆகிய நிகழ்ச்சிகளை சாதாரணமாக நிகழ்த்த முடிகின்றது.

இந்த ஒழுங்கு நியதிக்குட்பட்ட ஒருவிதமான வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிகளே நமக்குக் கனவுகளாக தெரிகின்றன என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக நமக்கு நன்மை செய்யக்கூடியவர்கள் வாழ்ந்து மறைந்து போயிருந்தால் அவர்கள் நம் நலன் கருதி நமக்கு ஏற்படப்போகும் பிரச்சனைகளை நமது சூட்சும உடலைத் தொடர்பு கொண்டு கனவின் மூலம் எச்சரிக்கின்றனர் என்றும் நமது இந்து மத சாஸ்திரம் கூறுகிறது.


அடுத்து.......

ஏழு விதமான கனவுகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by prashanth on Wed Jun 02, 2010 4:47 am

என் கனவில் அடிக்கடி நமீதா வருகிறாள் ,....அப்ப்டடியானால் ...!!!!!?

prashanth
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by ப்ரியா on Wed Jun 02, 2010 9:15 am

prashanth wrote:என் கனவில் அடிக்கடி நமீதா வருகிறாள் ,....அப்ப்டடியானால் ...!!!!!?

உமக்கு நிறைய பிரச்சனை இருக்கு ... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by தமிழ்ப்ரியன் விஜி on Wed Jun 02, 2010 10:15 am

கனவுகள் மற்றும் அதன் பலன்கள் பற்றி புத்தகம் கிடைக்குமா
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by சிவா on Fri Jun 04, 2010 12:04 pm

ஏழு விதமான கனவுகள்:

1. திருஷ்ட சொர்ப்பனம்

நாம் விழித்திருக்கும்போது கண்ணால் பார்க்கக்கூடிய விஷயங்கள் நம் கனவில் தோன்றுதல்!

2. ச்ருத சொர்ப்பனம்


நாம் விழித்திருக்கும்போது காதுகளால் கேட்கப்பட்ட விஷயங்கள் நம் கனவில் தோன்றுதல்.

3. அநுபூத சொர்ப்பனம்

நாம் விழித்திருக்கும்போது மிகவும் சந்தோஷமாக நடந்த நிகழ்ச்சிகள் கனவில் தோன்றுதல்.

4. பிரார்த்தித சொர்ப்பனம்

நாம் விழித்திருக்கையில் அந்த நாளில் எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நினைத்திருந்தோமானால் கனவில் அடைவதாகத் தோன்றுதல்.

5. கல்பித சொர்ப்பனம்


நடைமுறை வாழ்க்கையில் நாம் காணாத ஒரு இடத்தையோ, நிகழ்ச்சியையோ அல்லது பொருளையோ கனவில் காணுதல்.

6. பாவிக சொர்ப்பனம்

நடைமுறை வாழ்க்கையில் கேட்கப்பட்டும், பார்க்கப்பட்டும் இருந்த விஷயங்களுக்கு எதிர்மறையாக கனவில் தோன்றுவது. அதாவது எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் கனவில் தெரிதல்.

7. தோஷக சொர்ப்பனம்

நம் உடம்பில் நோய் தாக்கியிருக்கும்போது ஏற்படும் கனவுகள். நோய்கள் நம் மனோவசிய நாடிகளில் ஓடுவதால் அதனால் பலவித துன்பங்கள் தோன்ற வாய்ப்புண்டு.

கனவு காணும் நேரத்தின் பலன்

பகலில் காணப்படுகிற கனவுகளுக்கும், மறந்து போன கனவுகளுக்கும், வெகு நீண்ட அல்லது வெகு குறுகிய கனவுகளுக்கும் எவ்வித பலனும் உண்டாகாது.

இரவின் முற்பகுதியில் காணும் கனவுக்கு முகக் குறைந்த அளவில், வெகுகாலத்திற்குப் பிறகு பலன் கிடைக்கும். அதிகாலையில் காணப்படும் கனவிற்கு அதே தினத்தில் பலன் கிடைக்கும்.

கனவு கண்டவுடன் விழித்துவிட்டு பின்னர் தூங்காமல் இருந்தால் அந்தக் கனவிற்கு அதே தினம் பலன் கிடைக்கும்.

தீய கனவு கண்ட பின் சுப கனவு கண்டால் தீய கனவு பலிக்காது. அதேபோல் சுப கனவு கண்டு பின்னர் தீய கனவு கண்டால் அந்தத் தீய கனவு பலித்துவிடும்.

பத்து மணி முதல் பன்னிரெண்டு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு ஒரு வருடத்திற்குள் பலன் தெரிகிறது.

பன்னிரெண்டு மணியிலிருந்து இரண்டு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு எட்டு மாதத்திற்குள் பலன் தெரிகிறது.

இரண்டு மணியிலிருந்து நான்கு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு நான்கு மாதத்திற்குள் பலன் தெரிகிறது.

நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு நான்கு நாட்களில் பலன் தெரிகிறது.

அடுத்து......

தூக்கத்தில் கனவின் பங்கு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by T.N.Balasubramanian on Wed Jun 09, 2010 1:23 am

கனவுகளை பற்றிய ரசித்து படிக்ககூடிய அருமையான பதிவு. அபிரகம் லிங்கன் டிராமா கொட்டகையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நினைவு.
ரமணீயன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20578
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by krishnaamma on Wed Jun 09, 2010 9:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by krishnaamma on Wed Jun 09, 2010 10:46 am

[quote="சிவா"]

கனவு கண்டவுடன் விழித்துவிட்டு பின்னர் தூங்காமல் இருந்தால் அந்தக் கனவிற்கு அதே தினம் பலன் கிடைக்கும்.

தீய கனவு கண்ட பின் சுப கனவு கண்டால் தீய கனவு பலிக்காது. அதேபோல் சுப கனவு கண்டு பின்னர் தீய கனவு கண்டால் அந்தத் தீய கனவு பலித்துவிடும்.


அதனால் தான் விடியற்காலை நல்ல கனவு கண்டால், மீண்டும் தூங்காமல் எழுந்துவிடவேண்டும் என எங்கள் அத்தை சொல்வார்கள். மேலும், தீய கனவு கண்டால் எழுந்து கைகால் அலம்பி ஸ்வாமி சேவித்துவிட்டு மீண்டும்
தூங்கபோகலாம் என்றும் சொல்வார்கள். புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum