ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 மூர்த்தி

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 krishnanramadurai

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 krishnanramadurai

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 krishnanramadurai

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 ayyasamy ram

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 ayyasamy ram

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

மாதவிடாய் நிற்றல்!!

View previous topic View next topic Go down

மாதவிடாய் நிற்றல்!!

Post by சம்சுதீன் on Wed Jun 02, 2010 1:41 am

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -

அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத விடாய்
வர வேண்டிய தினத்துக்கு வரவில்லையாம். 10 நாட்கள் பிந்திவிட்டதாம்.
பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தங்கினால் வெட்கக் கேடு.

இன்னொரு
பெண்ணின் பிரச்சனை மிகவும் அந்தரங்கமானது. கணவனுடன் சேர்ந்திருக்க
விருப்பமுள்ள போதும், சேர்ந்திருக்கும் போது அவளுக்கு முடிவதில்லை. சற்று
வேதனை. பொறுத்துக் கொண்டாலும், கணவனுக்கு இதமாக இல்லை என
அதிருப்திப்படுகிறான்.

மற்றொருத்திக்கு மேலெல்லாம் எரிவு, படபடப்பு,
பதற்றம், சினம், காரணம் சொல்ல முடியாத வியர்வை, உடல் உழைவு.

இவர்களுக்கெல்லாம்
என்ன பிரச்சனை?

இவர்கள் வயது 50க்கு சற்று கூட அல்லது குறைய.
மாதவிடாய் முற்றாக நிற்பதோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.

முதற் பெண்ணுக்கு சிறுநீர்ப் பரிசோதனை செய்தபோது
கர்ப்பம் தங்கவில்லை என்பது உறுதியாகிற்று.

மாதவிடாய் முற்றாக
நிற்பதற்கு முந்தைய காலங்களில் இவ்வாறு பிந்தி வருவது சகசம். நாற்பது வயதை
அண்டிய காலங்களிலேயே மாதவிடாய் குழப்பங்கள் சிலரில் ஆரம்பித்து விடும்.

ஆரம்பத்தில்
8 நாள் 10நாள் என முந்தி முந்தி வரும். ஆயினும் நாட் செல்லச் செல்ல
பிந்தத் தொடங்கும். 10, 15 நாட்கள் என ஆரம்பித்து 2,3 மாதத்திற்கு ஒரு
தடவையென தாமதமாவதுண்டு.

ஆனால் எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கும்
என்று சொல்ல முடியாது. திடீர் என எவ்வித ஆர்ப்பாட்டம் இன்றி நின்று
விடுவதும் உண்டு. மோசமான நிலையில் குருதி இறைத்து சத்திரசிகிச்சை வரை
போவதும் உண்டு.

எவ்வாறாயினும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 24
மாதங்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 12 மாதங்களுக்கும்
தொடர்ந்து வராதிருந்தால் மட்டுமே மாதவிடாய் முற்றாக நின்று விட்டதென
நிச்சயமாகக் கூறலாம். சாத்தியங்கள் குறைவாயினும் அதுவரை கரு தங்காது என
அறுதியாகக் கூற முடியாது. இவ்வயதில் கருத்தடை முறையாக ஆண் உறை பாவிப்பது
பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது பெண்ணுக்கு மாதவிடாய் முற்றாக
நின்றுவிட்டதால் உறுப்பின் மென்சவ்வுகள் முதிர்ந்து அவளது பிறப்புறுப்பு
சற்று இறுகிவிட்டது. அத்துடன் அதற்கு ஈரலிப்பையும் வழவழுப்பையும் தரும்
சுரப்பிகளின் செயற்பாடு குறைந்ததால் வரட்சியாகி விட்டது. இதனாலேயே உறவு
சுகமாக இருக்கவில்லை.

இதற்காக கணவனும் மனைவியும் கடுகடுப்பாகி
சினத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. வரட்சியையும், இறுக்கத்தையும்
தணிக்கக் கூடிய கிறீம் வகைகள் இருக்கின்றன. இவற்றை உபயோகிப்பதின் மூலம்
குடும்ப வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசவைக்கலாம்.

மூன்றாவது
பெண்ணுக்கு ஏற்பட்ட வியர்வை, பதற்றம், படபடப்பு, தூக்கக் குறைவு, முதலானவை
மாதவிடாய் நிற்கும்போது நிகழும் ஹோர்மோன் குறைபாடுகளால் ஏற்படுவது.
நோயாளிக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும் இவ்வறிகுறிகள் வீட்டில் உள்ள
ஏனையவர்களால் பொதுவாக உணரப்படாதவை.

'என்ன சின்ன விசயங்களுக்கெல்லாம்
பெரிய Fuss பண்ணுகிறா' என அவர்களை எண்ண வைக்கும்.

தினசரி
உடற்பயிற்சி, தியானம், சுவாசப் பயிற்சி, குளிர்ச்சியான சூழல் போன்றவை
இவ்வறிகுறிகளைத் தணிக்க உதவும். Evening primrose oil, Soya, மற்றும் சில
கிழங்கு வகைகளிலிருந்து பெறப்படும் இயற்கை பொருட்கள் அவ்வறிகுறிகளைத்
தணிக்கின்றன என நம்பப்படுகிறது.

இவற்றால் முடியாதபோது ஹோர்மோன்
மாத்திரைகளை சில காலம் உட்கொள்ள வேண்டி வரலாம்.

மாதவிடாய் முற்றாக
நிற்றல் என்பது ஒரு நோயல்ல. வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத ஒரு
பகுதி. ஆயினும் அதன் போது ஏற்படும் உடல் ரீதியானதும், உளரீதியானதுமான பல
மாற்றங்கள் சில பெண்களுக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கின்றன.

மேற்கூறிய
மாற்றங்களைத் தவிர சிறுநீர் சம்பந்தமான சில பிரச்சனைகளும் மிகுந்த
இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில்
இதற்காக அடிக்கடி எழும்புவதால் தனதும், வீட்டில் உள்ளவர்களினதும்
தூக்கத்தையும் குழப்பல், சிறுநீரை அடக்க முடியாமல் தன்னிச்சையின்றிச்
சிந்துதல், இருமும்போதும், தும்மும்போதும், முக்கும்போதும் தன்னையறியாது
சிறுநீர் சிந்துதல் போன்றவை சில்லறைப் பிரச்சனைகள் போல் தோன்றினாலும்,
நோயாளிக்கும் வீட்டினருக்கும் சிரமங்களையும் மனவிரிசல்களையும் ஏற்றபடுத்தக்
கூடியளவு சிக்கலானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எலும்புத் தேய்வு (Osteoporosis), இருதய நோய்கள் போன்ற
வேறு சில பாதிப்புகளும் மாதவிடாய் முற்றாக நின்றபின் பெண்களுக்கு
வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

தலை முடி உதிர்ந்து மென்மையாகி சோபை இழப்பது
மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் மற்றொரு பிரச்சனையாகும்.


'வயதாகிவிட்டது.
என்ன செய்வது? போறமட்டும் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்'
என விரக்தியோடு வாழ வேண்டியதில்லை. பெண்ணாய்ப் பிறந்த பாவம் என
கழிவிரக்கம் கொள்ள வேண்டியதில்லை.

நீங்களும் மற்றவர்கள் போல மகிழ்வோடு வாழலாம். வசந்தங்கள்
மீண்டும் வரும்.

இவற்றைக் குணமாக்க மருத்துவம் இருக்கிறது. ஒரு
சிலவற்றை முற்றாகக் குணமாக்க முடியாவிட்டாலும் பிரச்சனைகளின் தாக்கங்களைத்
தணித்து நலமாகவும் மகிழ்வாகவும் வாழ வழிகள் இருக்கவே செய்கின்றன.

நீங்கள்
செய்ய வேண்டியது ஒன்றுதான். தயக்கத்தை விட்டு உங்கள் பிரச்சனைகளை
மருத்துவருடன் வெளிப்படையாகக் கலந்துரையாடுங்கள். வெளிப்படையாக என்பதை
என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: மாதவிடாய் நிற்றல்!!

Post by சம்சுதீன் on Wed Jun 02, 2010 1:45 am

கருத்தரிப்பின்
போது

கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்.

கருத்தரிப்பின்
போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி
மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் யாவும்
பிரசவமான ஆறு கிழமைகளுக்குள் பழையபடி முன்போல் மாறிவிடுகின்றன. உங்கள்
உடலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் (பிரதானமாக)
கருக்கொடியிலிருந்து (Placenta) சுரக்கும் இயக்கு நீர்களினால் ஏற்படுவன.
இம்மாற்றங்களில் பெரும்பாலானவை கருத்தரிப்பு ஏற்பட்ட உடனேயே தொடங்கி
கர்ப்பகாலம் முடிவாகும் வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு
ஏற்படும் மாற்றங்களில் அதிகமானவை பெண் பாலுறுப்புகளில் ஏற்படும்
மாற்றங்களே.

கருப்பை (Uterus)
இது சாதாரண
பெண்களில் (கரு அற்ற நிலையில்) 50-60 கிராம் எடையுடையஇ அநேகமாக கெட்டியான
ஒரு உறுப்பாக உள்ளது. கருத்தரித்த பின்னர்இ இது மெலிவான ஒரு உறுப்பாக மாறி
ஒரு குழந்தைஇ கருக்கொடிஇ குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்கொடி என்பவற்றை
ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுப்பாகின்றது. அதன் முழு எடை 1 கி;.கிராமிற்கு மேல்
இருக்கும். இதன் உள் அளவு 500-1000 தடவை கரு அற்ற நிலையிலிருந்து
கூடியுள்ளது! இவை பிரதானமாக கருப்பையிலுள்ள திசுக்கள் நீள்வதாலும் மிகை
வளர்ச்சியினாலும் (இயக்கு நீர்களினால்) ஏற்படுவன. வழக்கமாக தலைகீழாக
வைக்கப்பட்ட பேரிக்காய் உருவத்திலிருந்து உருண்டையான உருவமாக 3ம்
மாதத்திலும் நீள் வட்டமாக கர்ப்ப முடிவிலும் இருக்கும்.

கருப்பை
வாய் (Cervix)
இது கரு அற்ற நிலையில் இருக்கும் கெட்டியான
தன்மையிலிருந்து மெதுவான தன்மையை அடைகின்றது. இதன் நிறமும் சற்று நீல நிறச்
சாயலை அடைகின்றது. இவை இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஏற்படுவன. அது
மட்டுமன்றி கருப்பை வாய் முழுவதும் ஊதுகின்றது. கருத்தரிப்பு ஏற்பட்ட உடன்
ஒருவித சளிக்கட்டி (Mucus) இதன் வாயை அடைகின்றது. இது பிரசவம் தொடங்கிய
பின் வெளியேறுகின்றது. இது சற்று இரத்தத்துடன் சேர்ந்து பிரசவத்
தொடக்கத்தில் இரத்தக் கசிவாக (Show) வெளி வருகின்றது. கர்ப்ப கால முடிவில்
கருப்பை வாய் இன்னும் மெதுமையாகி, இலகுவாக விரிவடையக் கூடியதாக
மாறுகின்றது. இதனால் பிரசவத்தின் போது முழுமையாக விரிவடைந்து குழந்தை
வெளியேற உதவுகின்றது. இம் மாற்றங்கள் எல்லாம் பிரதானமாக கருப்பை இயக்கு
நீரினால் ஏற்படுகின்றன.

யோனிக்குழல். (Vagina)இதன்
உள் வரி மென் சவ்வு (Mucosa) கருத்தரித்த பின்னர் கடினமாகிறது. இதன் இரத்த
ஓட்டமும் அதிகரிக்கின்றது.இதன் விளைவாக இதிலிருந்து சுரக்கும் திரவம்
(Secretions) அதிகரிக்கின்றது. இதனால் யோனிக்குழலின் நிறமும்
மாற்றமடைகின்றது. சளி கட்டிபடுதல் யோனிக்குழலின் அணுக்கள் விரிவடைதல்
அணுக்களைச் சேர்த்து வைக்கும் இணைப்புத் திசுக்கள் (Connective tissues)
தளர்தல் என்பன மூலம் யோனிக்குழலின் நீளம் அதிகரிக்கின்றது. அத்துடன் இதன்
சுவர்கள் விரிவடையவும் உதவுகின்றது. இவ்வாறு விரிவடைவதனால் இதன் மூலம்
குழந்தை (சில வேளைகளில் 4-5 கி.கி குழந்தைகள் கூட) பிறக்கக் கூடியதாக
உள்ளது.

கருப்பை வாயிலிருந்தும் யோனிக் குழலிருந்தும்
உற்பத்தியாகும் திரவங்கள் கூடுதலால் கருவுற்ற பெண்களில் அதிகம்
வெள்ளைபடுதல் ஏற்படுகின்றது. “வெள்ளை படுதல்” என்பது யோனிக்குழல் மூலம்
வரும் திரவத்தை குறிப்பது. இது சாதாரண சுரப்புஇ கருவுற்றிருக்கும் போது
ஏற்படும் மாற்றங்களால் கூடுதலாக ஏற்படுகின்றது. இதனால் ஒரு தீங்கும்
ஏற்படாது. இது வெள்ளை நிறமாகவும் சற்றுத் தடிப்புள்ளதாகவும் இருக்கும். இது
அமிலத்தன்மை வாய்ந்தது. யோனிக்குழலில் உள்ள ஒரு தீமையற்ற லக்டொபசிலஸ்
(Lactobacillus) என்னும் நுண்கிருமியால் ஏற்படுவது. சில வேளைகளில் இம்
மாற்றங்களால் துன்பம் விளைவிக்கக் கூடிய கிருமிகளும் யோனிக்குழலில்
ஏற்படும். இவை கருத்தரிப்பின் போது ஏற்படும் மிதமிஞ்சிய யோனிக்குழல் கிருமி
நோய்களுக்குக் காரணமாகின்றன. (இவற்றைப் கற்றி “கருத்தரிப்பின போது
ஏற்படும் நோய்த் தொற்றுக்கள்” என்ற அத்தியாயத்தில் பார்க்கவும்.

மார்பகங்கள்.
(Breasts)
மார்பகங்கள் பெரிதாகி அவற்றின் முலைக் காம்புகளும்
பெரிதாகின்றன. அவற்றின் நிறமும் மாற்றமடைகின்றன. (மேலும் கருமை அடைகின்றன.)
அவை சற்று அதிகமாக நிமிர்ந்தும், சிலிர்ப்பும், தொடு வலியுணர்ச்சியும்
ஏற்படுகின்றன. முலைக் காம்புகளிலிருந்து ஒரு வகையான திரவம் ஊறும். இதை
களிம்புப் பால் அல்லது சீம்பால் என்று கூறுவார். இது 12 கிழமைகள் மட்டில்
தொடங்கும். மார்பகங்களை சற்று அழுத்தினால் இத்திரவத்தை வெளியேற்றலாம்.

இருதயமும்
இரத்தக் குழாய்களும்(Heart and Blood Vessels)
கருத்தரிப்பு
முடிவடையும் காலத்தில் (பிரசவத்திற்கு முன்னர்) உங்கள் இரத்த ஓட்டம் 40 வீத
மட்டில் அதிகமாகி இருக்கும். இது உங்கள் பெருக்கும் கருப்பை இரத்தக்
குழாய்கள் என்பவற்றைத் தாக்குப்பிடிப்பதற்காக ஏற்படுகின்றது. உங்கள்
இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களும் அதிகரிக்கின்றன (1ஃ3 பங்கு). இது பிரதானமாக
குழந்தைக்கு தேவைப்படும் பிராண வாயுவையும் இரும்புச் சத்தையும் கொண்டு
செல்வதற்காகவே ஏற்படுகின்றது. சாதாரண கருத்தரிப்பின் போது உங்களுக்கு
தேவையான இரும்புச்சத்து 1000மி.கி அளவுடையது. இது கூடிய சிவப்பணுக்கள்
குழந்தைஇ கருக்கொடி என்பன மட்டுமன்றி பிரசவத்தின் போது ஏற்படும் இரத்த
ஒழுக்கையும் தாக்குப் பிடிப்பதற்காகத் தேவைப்படுகின்றது. (பிரசவத்தின் போது
500 மி.லீ அளவுள்ள இரத்தம் சாதாரணமாக வெளியேறும்.) இரும்புச்சத்தை போதிய
அளவு எடுக்காவிட்டால் (சாப்பாட்டு மூலமோ அல்லது மாத்திரை மூலமோ ) உங்களில்
இரும்புச் சத்துக் குறைவான இரத்தசோகை (யுயெநஅயை) ஏற்படும். இரத்தத்தைக்
கட்டி படச் செய்யும் பொருட்களும் (உறைதல் காரணிகள் - (Clotting factors)
அதிகமாகின்றன. இதனால் கருத்தரிப்பின போது இரத்தம் அதிகமாக ஓடுவதற்கும்
கட்டிபடுவதற்கும் இடையிலுள்ள நிலைஇ மிக நுண்மையான சமப்படுத்தல் சற்று
மாறுபட்டுஇ இரத்தம் கட்டி படும் பக்கமாக மாறுகின்றது. இதன் காரணமாக
கருத்தரிப்பின் போதும் பிரசவமான ஆறு கிழமைகளுக்குள்ளும் இரத்தக் கட்டி
ஊந்படுதல் இது இரத்தக் குழாய்களை அடைத்தல் இக்கட்டி பிரிந்து போய்
நுரையீரலிலுள்ள நாளங்களை அடைப்பது என்பன அதிகரிக்கின்றன. கருத்தரிப்பில்
ஏற்படும் மாற்றங்களை தாங்குவதற்காக இருதயமும் இரத்தக் குழாய்களும் அளவுக்கு
சற்று அதிகமாகவே மாற்றங்கள் அடைகின்றன. இரத்த ஓட்டம் 40-50 வீதம்
அதிகரிக்கின்றது. இருதயத் துடிப்பு 1 நிமிடத்திற்கு 10-15 அதிகரிக்கின்றது.
இக் கூடிய இரத்த ஓட்டம் இரத்தக் குழாய்களில் எற்படும் புற எதிர்பாற்றலால்
சமப்படுத்தப்படுகின்றது. கருத்தரித்தலின் போது ஏற்படும் இரத்த அழுத்த
நோய்கள் உள்ளவர்களை தவிர்த்து மற்றவர்களில் இரத்த அழுத்தத்தில் அதிக
மாற்றம் ஏற்படுவதில்லை.

உடம்பின் அதிகமான பாகங்களுக்கு பிரதானமாக
சிறுநீரகங்களுக்கும்இ உடம்பை மூடியிருக்கும் தோலிற்கும் இரத்த ஓட்டம்
அதிகமாகின்றது. இது இரத்தக் குழாய்கள் (பிரதானமாக மிகச் சிறிய குழாய்கள்)
விரிவடைவதற்கும் (னுடையவந) அதனால் உடம்பிலுள்ள சுடு வெளியேறுவதற்கும்
ஏதுவாகின்றது. (இச்சுடு உடம்பில் ஏற்படும் வளர்சிதை வினை மாற்றத்தால்
(ஆநவயடிழடளைஅ) ஏற்படுகின்றது). இதனால் ஏற்படும் கழிவுப்பொருட்களை
சிறுநீரகங்களும் தோலும் வெளியேற்றுகின்றன. கருத்தாரிப்பவர்கள் உடம்பு
சுடாய் இருக்கிறது என்று கூறுவதற்கு இதுதான் காரணம். அத்துடன் அதிகமாக
வியர்ப்பதற்கும் இது காரணமாகின்றது. இதனால் மூக்கடைப்பும் முரசிலிருந்து
இரத்தக் கசிவும் எற்படக் கூடும்.

சுவாச மண்டலம்
(Respiratory System )
பிரிப்புத்தசை (உதரவிதானம், Diaphragm –
நெங்சக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள திசுக்களாலான ஒரு சுவர்) மேல்
உயர்வதாலும் அதன் அசைவு குறைவதாலும் (வளரும் கருப்பை தடை செய்வதால்)
நீஙடகள் மூச்சு விடும் போதுஇ உங்களால் மூச்சு விடுதலை உணரக்கூடியதாக
உள்ளது. சுhதாரணமாக மூச்சு விடுதல் ஒருவராலும் உணரப்படுவதில்லை. (நுரை ஈரல்
நோயாளிகளைத் தவிர.) நீங்கள் சற்று ஆழமாகவும் மூச்சு விட வேண்டி ஏற்படும்.
சில வேளைகளில் இதைத் தவறாக மூச்சுக் குழலிலோ நுரை ஈரலிலோ ஏதோ பிழை என்று
பரிசோதனை செய்பவர்களும் உண்டு. ஆனால் இதில் ஒரு பிழையும் இல்லை என்ற
முடிவையே தரும்.

கர்ப்பத்தினால் ஏற்படும் பிராண வாயுவின அதிக தேவை
(சுவாசப்பை சுவாசக்குழல் என்பன வழக்கம் போல் வேலை செய்தாலும்) கிருமி
நோய்கள் தொற்றினால் இவை மிகவும் அபாயகரமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும்.
ஆகவே உடனடியான சிகிச்சை அளிப்பது மிக அத்தியாவசியமாகின்றது.
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: மாதவிடாய் நிற்றல்!!

Post by ஹாசிம் on Wed Jun 02, 2010 9:38 am

நன்றி அன்பு மலர்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: மாதவிடாய் நிற்றல்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum