ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

பேல்பூரி..!!
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 SK

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

நலங்கு மாவு !
 krishnaamma

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 SK

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

என்னைப் பற்றி...பாலமுருகன்
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

செம்மொழி மாநாடு 5 நாள் நிகழ்ச்சி நிரல்

View previous topic View next topic Go down

செம்மொழி மாநாடு 5 நாள் நிகழ்ச்சி நிரல்

Post by கோவை ராம் on Wed Jun 09, 2010 12:25 pm

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தொடக்க விழா, 23ம் தேதி காலை 10.30 மணிக்கு கோவை மாநாட்டு வளாகத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து, மாநாடு மைய நோக்க பாடலுக்கு பின்னர், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார். கவர்னர் பர்னாலா சிறப்பு மலர் வெளியிடுகிறார். நிதி அமைச்சர் அன்பழகன் தகுதி உரை வழங்குகிறார். பின்லாந்து தமிழறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு, ‘முதல்வர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை’ ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், வழங்குகிறார்.
அமெரிக்க தமிழறிஞர் ஜார்ஜ் ஹார்ட், இலங்கை தமிழறிஞர் சிவதம்பி, வா.செ.குழந்தைசாமி வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி தலைமையுரை ஆற்றுகிறார். கவர்னர் பர்னாலா சிறப்புரை ஆற்றுகிறார். ஜனாதிபதி தொடக்க உரை ஆற்றுகிறார். தலைமை செயலர் ஸ்ரீபதி நன்றி கூறுகிறார். மாலை 4 மணிக்கு, Ôஇனியவை நாற்பதுÕ என்ற தலைப்பில் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் பேரணி, வ.உ.சி. மைதானத்தில் இருந்து தொடங்கி அவினாசி சாலை வழியாக சென்று மாநாட்டு வளாகத்தை அடையும்.
* 2ம் நாள் (24ம் தேதி) பொது அரங்க நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் மாநாட்டு வளாகத்தில் நடக்கின்றன. காலை 9.30 முதல் 10.30 மணி வரை மங்கள இசை. 10.30 முதல் 11.30 மணி வரை லாரன்ஸ் குழுவினரின் மாற்றுத் திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள், பாலு குழுவினரின் சலங்கை ஆட்டம், சின்னப்பொண்ணு குமார் மற்றும் பலர் வழங்கும் கிராமியப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பகல் 12 மணிக்கு பொது கண்காட்சி திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக மலேசிய மனிதவள அமைச்சர் சுப்பிரமணியம் பங்கேற்கிறார். அதை தொடர்ந்து நடைபெறும் இணையதள கண்காட்சி திறப்பு விழாவுக்கு, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலை வகிக்கிறார். யுனேஸ்கோ இயக்குனர் ஆர்முகம் பர்சுராமென் பங்கேற்கிறார்.
பின்னர், புத்தகக் காட்சி திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் முன்னிலை வகிக்கிறார். மாலத்தீவு சுற்றுலா இணையமைச்சர் அகமது நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிற்பகல் 2.30 மணிக்கு, Ôபுதியதோர் உலகம் செய்வோம்Õ தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார்.
கவிஞர்கள் வா.மு.சேதுராமன், சிற்பி பாலசுப்பிரமணியம், அப்துல் காதர், பொன்னடியான், ஆண்டாள் பிரியதர்ஷினி, வின்சென்ட் சின்னதுரை, கவிதை பித்தன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மாலை 4.30 மணிக்கு Ôசமயம் வளர்த்த தமிழ்Õ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமை தாங்குகிறார். பேராயர் சின்னப்பா, சாரதா நம்பி ஆரூரான், முன்னாள் போலீஸ் அதிகாரி ஸ்ரீபால், பெ.ஞானசுந்தரம், அமுதன் அடிகள், கே.எம்.காதர் மொய்தீன் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டு வளாகத்தில் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை எழிலரசி ஜோதிமணியின் வீணை இசை, 7.30 முதல் 9 மணி வரை பத்மா சுப்பிரமணியம் வழங்கும் முதல்வர் கருணாநிதியின் Ôபோர் வாளும் பூ இதழும்Õ நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெறும். இரவு 9 முதல் 10 மணி வரை இலங்கை நாட்டிய கலைஞர் வாசுகி ஜெகதீஸ்வரன் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடக்கிறது.
முன்னதாக மாலை 5 முதல் 6 மணி வரை கொடிசியா வளாகத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகம் நடைபெறும்.
* 3ம் நாள் (25ம் தேதி) மாநாட்டு வளாகத்தில் பொது அரங்க நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி காலை 10 மணிக்கு கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், நெல்லை ஜெயந்தா, தமிழச்சி தங்கப்பாண்டியன், முத்தையா, பேராசிரியர் கருணாநிதி, விவேகா, நா.முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். காலை 11.30 மணிக்கு சோ.சத்தியசீலனை நடுவராக கொண்ட பட்டிமன்றம் நடக்கிறது. குமரி அனந்தன், இலங்கை ஜெயராஜ், சுந்தர ஆவுடையப்பன், அறிவொளி தேசமங்கையர்கரசி, அரங்க மல்லிகா, தென்னவன் ஆகியோர் பங்கேற்கிறார்.
பிற்பகல் 3 முதல் 4 மணி வரை ரேவதி கிருஷ்ணா குழுவினரின் வீணை இசை. மாலை 4 மணிக்கு Ôஎங்கும் தமிழ் எதிலும் தமிழ்Õ என்ற சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். கே.வி.தங்கபாலு, சீதாராம்யெச்சூரி எம்பி, கி.வீரமணி, ராமதாஸ், இல.கணேசன், எம்பிக்கள் டி.ராஜா, ஆர்.எம்.வீரப்பன், திருமாவளவன் மற்றும் ஸ்ரீதர் வாண்டையார், காதர் மொய்தீன், பூவை ஜெகன்மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்டாப், எல்.சந்தானம், எம்.பஷீர் அகமது ஆகியோர் பேசுகிறார்கள். இரவு 7.30 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக கொடிசியா வளாகத்தில் மாலை 5.30 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
* 4ம் நாள் (26ம் தேதி) மாநாட்டு வளாகத்தில் பொது அரங்க நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை 10 மணிக்கு கவிஞர் வாலி தலைமையில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர்கள் மு.மேத்தா, பா.விஜய், பழனிபாரதி, தணிகை செல்வன், இளம்பிறை, உமா மகேஸ்வரி, தமிழ்தாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர். 11.30 மணிக்கு வா.செ.குழந்தைசாமி தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. கவிஞர் மன்னர்மன்னன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இளம்பிறை மணிமாறன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.
அதைத்தொடர்ந்து 2.30 மணிக்கு க.ப.அறவாணன் தலைமையில் கருத்தரங்கமும், மாலை 4.30 மணிக்கு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடக்கிறது. மாலை 6.30 மணி முதல் வயலின் இசை, நாட்டிய நாடகம், டிரம்ஸ் சிவமணி இசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணி முதல் கொடிசியா வளாகத்தில் நடிகை ரோகினியின் Ôபாஞ்சாலி சபதம்Õ நாடகம் நடக்கிறது.
* 5ம் நாள் (27ம் தேதி) காலை 10 மணிக்கு நடிகர் சிவகுமார் தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. சுப.வீரபாண்டியன், பீட்டர் அல்போன்ஸ், ஜெகத் கஸ்பார், கம்பம் செல்வேந்திரன், திருச்சி செல்வேந்திரன், பர்வீன் சுல்தானா, தா.ராமலிங்கம், அருள் மொழி உள்ளிட்டோர் பேசுகிறார்கள். இதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது.
மத்திய அமைச்சர் ராஜா சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுகிறார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியதற்காக கனியன் பூங்குன்றனார் பரிசை, முதல்வர் கருணாநிதி வழங்கி நிறைவுரை யாற்றுகிறார். மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன் நன்றியுரை ஆற்றுகிறார்.
24 முதல் 27ம் தேதி வரை ஆய்வரங்க நிகழ்ச்சிகள், தமிழ் இணைய மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு 5 நாள் நிகழ்ச்சி நிரல்

Post by உதயசுதா on Wed Jun 09, 2010 12:33 pm

இப்ப இவங்க செம்மொழி மாநாடு நடத்தி என்ன செய்ய போறாங்க. யாரு வீடு காச எடுத்து இவரு பேரு சம்பாதிக்க பாக்குறாரு. வேறு எந்த மொழிக்காரனும் செய்யாத மாநாடு தமிழில் மட்டும்தான் நடக்குது.செம்மொழி மாநாடு நடத்துற காசுல எத்தனையோ நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்யலாம்.வெட்டி பசங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு 5 நாள் நிகழ்ச்சி நிரல்

Post by கோவை ராம் on Wed Jun 09, 2010 2:10 pm

ஏனுங்க அம்மனி.இப்பொதுதான் கோவை நகரம் பொலிவு பெற்று வருது.அது உங்கலுக்கு பிடிக்கலையா? மாநாடு முடிவில் கோவை மாவட்டம் முழுவதும் முதல்வர் பல திட்டங்களை அரிவிப்பார் என நினைக்கிறோம் .தமிழகத்தின் 2வது பெரிய நகரமான கோவையில் பிற மொழி பேசுபவர்கலின் என்னிக்கை மிக அதிகம்.மொத்த தமிழினதிற்க்கும் புத்துனர்ச்சி ஊட்ட வேன்டிய நெரம் இது. எனவே இதுதான் மிக சரியான நேரம்

இத்தனை கோடி ரூபாய் கொட்டப்படும் 'இவை எல்லாமே தேவை தானே' என்று எல்லோரும் கேட்கலாம். கண்டிப்பாக இந்த ஏற்பாடுகள் எல்லாம் தேவை தான்

ஆனால், அதே மக்களுக்கு சின்னதாய் ஒரு நெருடல் இருக்கிறது. இதற்கு செலவழித்த தொகையைப் போல கொஞ்சம் நிதி ஒதுக்கியிருந்தால், கோவை கலெக்டருக்கு புதிய அலுவலகம் கட்டியிருக்கலாம்.அரசு அலுவலர் குடியிருப்புகளுக்கு காத்திருக்கும் ஆபத்தை நீக்கியிருக்கலாம். பஸ்ஸ்டாண்டை பெரிதாக்கியிருக்கலாம். மாநாட்டின் நினைவாக ஒன்றிரண்டு பாலங்களையாவது கட்ட ஆரம்பித்திருக்கலாம். இப்போதும் கூட, இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்; முதல்வர் வரும்போது இதையெல்லாம் அறிவிப்பாரென்று.


'உலகத்தமிழ் செம்மொழி மாநாடு' எனும் ஒரே சாட்டை, அரசுத்துறைகளின் ஒட்டுமொத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் கோவையில் பம்பரமாக சுழலச் செய்கிறது.

மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, போலீஸ், நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் என ஒட்டுமொத்த அரசுத் துறைகளும் களத்தில் குதித்துள்ளதால், நகரமே களைகட்டியுள்ளது. மாநாடு நடக்கும் 'கொடிசியா' தொழிற் காட்சி வளாகத்தில் அரங்கு அமைக்கும் பணிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.

நெடுஞ்சாலைத்துறை அதிவேகம்: மாநாட்டில் பங்கேற்க பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பல லட்சம் தொண்டர்கள் வாகனங்களில் வருவார்கள் என்பதால், சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவிநாசி சாலை, திருச்சி சாலை, பாலக்காடு சாலைகளை விரிவுபடுத்தும் பணியும், ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியும் இரவு, பகலாக தொடர்கின்றன. குண்டும், குழியுமாக; கல்லும், மண்ணுமாக காட்சியளித்த சாலைகள் கூட ஒரே இரவில் மறுபிறவி கண்டு புதிய தார்ரோடுகளாக புதுப்பொலிவு பெற்றுள்ளன. இது போன்ற, நெடுஞ்சாலைத்துறையின் அசுர வேக பணியை, இதற்கு முன் கோவை நகரவாசிகள் கண்டதில்லை.

மின்வாரியம் சுறுசுறுப்பு: மாநகரின் முக்கிய சாலைகளான அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் மாநாடு விருந்தினர்கள் அதிகம் பயணிக்கும் ரேஸ்கோர்ஸ் பகுதி சாலைகளில் மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, நிலத்தடியில் மின்சார கேபிள் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்காக, வெளிமாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் வரவழைக்கப்பட்டுள்ளனர். மின்வாரியத்தினர் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை சாலையில் 'தவமிருந்து' மும்முரமாக வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மின்வாரிய அலுவலகங்கள் ஊழியர், அதிகாரிகள் இல்லாமல் வெறிச்சோடியுள்ளன.

மாநகராட்சி விறுவிறுப்பு: மாநகரிலுள்ள முக்கிய சாலைகளின் சந்திப்பிலும், குடியிருப்பு பகுதிகளிலும் பசுமை பூங்காக்கள் துரித கதியில் அமைக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று, நடைபாதைகளை புதுப்பிக்கும் பணியும், சுகாதார மேம்பாடு பணிகளும் வேகமெடுத்துள்ளன. மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான நடமாடும் கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள், வாகன பார்க்கிங் வசதிகள், சுகாதார பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான முன்னேற்பாடுகளும் நடக்கின்றன. அன்றாட பணிகளின் முன்னேற்றத்தை மாநகராட்சி கமிஷனர், மேயர் உள்ளிட்டோர் நேரடி ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகின்றனர்.

போலீசார் பரபரப்பு: மாநாடு பாதுகாப்பு பணிக்கு வெளிமாவட்டங்களில் இருந்து 8,000 ஆயிரம் போலீசார் கோவைக்கு வரவுள்ளனர். இவர்களுக்கான தங்குமிடம், உணவு ஏற்பாடு, போக்குவரத்துக்கு தேவையான வாகன வசதிகளை தயார்படுத்தும் பணியில் போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, பல்கலை நிர்வாகங்களை போலீஸ் அதிகாரிகள் நேரடியாக சந்தித்து, வெளிமாவட்ட போலீசாருக்கான தங்குமிட வசதிகளை உறுதி செய்து வருகின்றனர்.அதே போன்று, மாநாடுக்கு வருவோரின் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல, போக்குவரத்து மேலாண்மை திட்டம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக, சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து 1.70 கோடி ரூபாய், போலீசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிதியில், முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான வேலைகள் அனைத்தும் முழுவீச்சில் நடப்பதால், போலீஸ் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மாநாடு பாதுகாப்பு தொடர்பாக தினமும் காலை, மதியம், மாலை என உயர்அதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்கள் இடைவிடாது நடந்து கொண்டிருக்கின்றன. இதனால், பல்வேறு சொந்த பிரச்னைகளுக்காக கமிஷனர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க வரும் பொதுமக்கள், நீண்ட நேரம் காத்திருப்பது, தவிர்க்க முடியாததாகிவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளும் ஜரூர்: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவை நகரில் நடக்கும் போதிலும், நகரையொட்டிய புறநகர் பகுதிகளும் களைகட்டியுள்ளன. 'செம்மொழி மாநாடு பூங்கா' என்ற பெயரில் பல்வேறு இடங்களில் பசுமை பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள், முக்கிய சாலைகளில் மாநாடு அழைப்பு பேனர்கள் பெரிய அளவில் வைக்கப்பட் டுள்ளன. இவ்வாறு, ஒட்டுமொத்த அரசுத் துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் மாநாடு நிகழ்வை, மாபெரும் விழாவாக கொண்டாட தயாராகி வருகின்றன.

நன்றி தின மலர்

மாநாடு முடிந்தவுடன் மீண்டும் விமர்சனம் பன்னலாங்கோ

raam
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு 5 நாள் நிகழ்ச்சி நிரல்

Post by உதயசுதா on Wed Jun 09, 2010 2:17 pm

நீங்க சொல்லி இருக்கற அனைத்து வேலைகளையும் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தாமலேயே செய்யாலாமே
ஏன் செய்யமாட்டேன்குறார் உங்க தலைவர்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு 5 நாள் நிகழ்ச்சி நிரல்

Post by Cynthia Francis on Wed Jun 09, 2010 3:44 pm

ஏனுங்க அண்ணா ,இந்த செலவோட சேர்த்தி 3 மணி நேர மின் வெட்டையும்,10 நாள் ஒரு தடவை (திருச்சி சாலை,அவினாசி சாலை ) தண்ணீர் பஞ்சத்தையும் சீர் செய்திருந்தால் நம்ம ஊரு மக்கள் இன்னும் நல்ல இருப்பாங்க ,மக்கள் அவதி படும் நேரத்தில் அழகு என்ன வேண்டி இருக்கு ,எளிமையா கொண்டாடின மக்கள் வராமையா இருக்க போறாங்க மாநாட்டுக்கு,அட போங்க சொல்லனும்னு தோணுச்சுங்க சொல்லிபோடேனுங்க,
avatar
Cynthia Francis
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 63
மதிப்பீடுகள் : 1

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு 5 நாள் நிகழ்ச்சி நிரல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum