ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

Delta IV உந்துகணை

View previous topic View next topic Go down

Delta IV உந்துகணை

Post by ரிபாஸ் on Sun Jun 20, 2010 12:28 pm

Delta IV உந்துகணை

உந்துகணைகளும் அவற்றின் பயன்பாடுகளும் பல்வேறு வடிவங்களில்
பயன்படுத்தப்படும் தேவைகளுக்கேற்ப காணப்படுகின்றன. இன்றைய விண்வெளிப்
பயணங்கள் அனைத்தும் உந்துகணைகளின் உதவியுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன.விண்வெளிப்
பயணங்களிலும் குறிப்பிட்டதொரு விண்வெளிப் பயணத்தின் தேவையினைப் பொறுத்து
அத்தேவைக்குப் பொருத்தமான உந்துகணை பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு விண்வெளிக்குச் செயற்கைக் கோள்களை ஏவுவதற்குப்
பயன்படுத்தப்படும் உந்துகளை வகையைச் சார்ந்ததே இந்த DeltaIV
உந்துகணையாகும். இந்த Delta IV ஏவுகணையானது காவிச்செல்லும் நிறை மற்றும்
காவிச்செல்லும் உயரம் என்பவற்றிற்கேற்ப மேலதிக உந்துசக்தியைப் பெறுவதற்கான
மேலதிக உந்துகணை ஊக்கிகளை (additional rocket boosters) பொருத்திப்
பயன்படுத்தவல்லதாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்த உந்துகணை
விரிவுபடுத்தவல்ல ஏவு தொகுதி (expandable launch system)
என்றழைக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனமான போயிங்
நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த உந்துகணை, அமெரிக்க
வான்படையினால் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்கான செயற்கைக் கோள்களை
சுற்றுப்பாதையில் ஏவுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த உந்துகணைகள்
ஐந்து வெவ்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அமெரிக்கப்
பாதுகாப்புப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையிலேயே
இவ்வுந்துகணைகள் உற்பத்தி செய்யப்பட்டன. 63 மீற்றர் தொடக்கம் 72 மீற்றர்
வரையான உயரங்களில் காணப்படும் இவ்வுந்துகணை, 5 மீற்றர் விட்டத்திலும்
249500 – 733400 கிலோகிராம் நிறையுடையதாகவும் காணப்படுவதுடன், இரண்டு
தொகுதிகளால் ஆனதாகவும் காணப்படுகின்றது.
Delta IV உந்துகணை ஒன்று பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது தொகுதியே பிரதான தொடக்கநிலை உந்துகணை இயந்திரத்தைக் (rocket
engine) கொண்டுள்ளது. உந்துகணையின் வடிவத்திற்கேற்ப இவ்வுந்துகணையின்
முதலாவது தொகுதி RS-68 உந்துகணை இயந்திரத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக
உந்துகணைகளின் முதலாவது தொகுதி இயந்திரங்கள் திண்ம எரிபொருள் (solid fuel)
இல்லது மண்ணெய் (kerosene) பயன்படுத்தியே இயக்கப்படும். ஆனால் இந்த Delta
IV உந்துகணை முதலாவது தொகுதி இயந்திரத்திற்கு திரவ ஐதரசன் மற்றும் திரவ
ஒட்சிசன் கலவையையே எரிபொருளாகப் பயன்படுத்துகின்றது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட உந்துகணை இயந்திரங்களில் மிகவும்
பெரியது, இந்த Delta IV உந்துகணையின் முதலாவது தொகுதியில்
பயன்படுத்தப்பட்டிருக்கும் RS-68 உந்துகணை இயந்திரமேயாகும். இவ்வுந்துகணை
இயந்திரத் தயாரிப்பின் பிரதான நோக்கம் குறைந்த செலவில் அதிக வலுவைப்
பெறவல்லதாக இவ்வியந்திரத்தை உருவாக்குவதே. இவ்வுந்துகணையின் இரண்டாவது
தொகுதி RL-10B2 உந்துகணை இயந்திரத்தைக் கொண்டுள்ளது.
இந்த Delta IV இன் சிறிய வடிவத்தில் RS-68 வகை இயந்திரம் முதல் சில
நிமிடங்களுக்கு 102% உந்துவிசையை உந்துகணைக்கு வழங்குகின்றது. முதல் நிலை
இயந்திரத்தின் உந்துவிசை 58% ஆகக் குறைவடைந்து இதன் இயக்கம் செயலிழந்ததும்,
முதல்நிலைத் தொகுதி உந்துகணையிலிருந்து பிரிந்துவிட, அடுத்தநிலை இயந்திரம்
தொடர்ந்து உந்துகணையை உந்திச்செல்லும். அதேபோன்று இவ்வுந்துகணையின் கனரக
வடிவத்தில் முதற்தொகுதியின் இயந்திரம் முதல் 50 செக்கன்களுக்கு 120%
உந்துசக்கியை உந்துகணைக்கு வழங்கி 50 செக்கன்களின் முடிவில் உந்துவிசை 58%
ஆகக் குறைவடைந்து இயந்திரம் செயலிழக்கின்றது. இயந்திரங்களின் இந்தச்
செயற்பாடுகள் யாவும் வழிநடத்தற் தொகுதியிலிருந்து (guidance system)
கிடைக்கும் கட்டளைகளுக்கேற்ப இடம்பெறுகின்றன.
Delta IV உந்துகணையில் பயன்படுத்தப்படும், L3 Communication
நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட, வழிநடத்தற் தொகுதியானது, சுழல்காட்டி
(gyroscope) மற்றும் முடுக்கமானி (accelerometer) ஆகியவற்றின் துணையுடன்
தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டளைகளையும் உள்வாங்கி மிகவும் மிகவும்
துல்லியமாக உந்துகணையினை வழிநடாத்திச் செல்கின்றது.
இந்த உந்துகணையானது தேவைக்கேற்ப பல்வேறு வகையான சுமைகளைக் (payload)
காவிச்செல்லவல்லது. இதன் சுமையேற்றும் பகுதியானது வெவ்வேறு வகையான சுமைகளை
ஏற்றக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சுமைகளின் தன்மைக்கேற்ப,
சுமையேற்றும் பகுதியையும் மாற்றக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டிலிருக்கும் உந்துகணைகளிலேயே, இந்த Delta IV
உந்துகணையே மிகவும் உயரம் கூடிய உந்துகணையாகும். விண்வெளிப்
பயணத்துறையினுள் இந்த Delta IV உந்துகணை அறிமுகப்படுத்தப்பட்டபொழுது,
விண்ணுக்கு செய்மதிகள் மற்றும் பிற பொருட்களை அனுப்புவதற்குத் தேவையான
உந்துகணைகள் போதுமானளவிற்குப் பயன்பாட்டில் இருந்தன. அதீத திறனுடன் இந்த
உந்துகணை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இதனை ஒருதடவை ஏவுவதற்கு ஆகும்
செலவு, வர்த்தக நிறுவனங்களுக்குக் கட்டுபடியற்றதாக இருந்தது. இதன் காரணமாக
வர்த்தக நோக்கில் இந்த உந்துகணை எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை என்றே
சொல்ல வேண்டும். இருப்பினும் அமெரிக்க அரசு இந்த உந்துகணையினை தேவைக்கேற்ப
பயன்படுத்தியே வருகின்றது.
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum