ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரை விமர்சனம் - ஜெயம் கொண்டான்

View previous topic View next topic Go down

திரை விமர்சனம் - ஜெயம் கொண்டான்

Post by Admin on Wed Oct 08, 2008 10:40 pm

ஜெயம் கொண்டான்

ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல், காமெடி என்று கலந்து கட்டி சுவையான மசாலா படத்தை கொடுத்து முதல் படத்திலேயே முத்திரை படைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கண்ணன்.

லண்டனில் வசிக்கும் நாயகன் வினய், தனக்கு இருந்த ஒரேயொரு சொந்தமான அப்பா இறந்த பின்னர் சென்னைக்கு திரும்புகிறார். அதுவரை தான் சம்பாதித்து அப்பாவுக்கு அனுப்பிய 60 லட்சம் ரூபாயை வைத்து தொழில் தொடங்க திட்டமிட்டு வங்கிக்கு செல்கிறார். ஆனால் அப்பாவின் வங்கி கணக்கில் வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடையும் வினய், அந்த பணம் எங்கே போனது என்று தேடுகிறார். இந்த தேடுதல் வேட்டையில் தெரியவரும் தகவல் அவரு‌க்கு மேலும் அதிர்ச்சியை தருகிறது. அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதையறிந்து அங்கு செல்கிறார் வினய். இதுவரை தனக்கு தெரியாமல் இருந்த அந்த குடும்பத்தை பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்புகிறார். போதாக்குறைக்கு அழகான தங்கை‌ வேறு அண்ணா என்று அன்பு மழை பொழிய... தனக்கு யாருமே இல்லை என்று நினைத்திருந்த வினய்க்கு மனதுள் மகிழ்ச்சி.

அப்பாவுக்கு சொந்தமான வீட்டை விற்றாவது தொழில் செய்ய நினைக்கும் வினய்யின் திட்டத்துக்கு குறுக்கே நிற்கிறார் தங்கை. அந்த நேரத்தில் தாதா ஒருவனும் வீட்டை விற்கவிடாமல் குறுக்கே நிற்க... படம் சூடு பிடிக்கிறது. இடையிடையே பாவனாவுடன் காதல் கலாட்டா வேறு. நேரம் போவதே தெரியாமல் கதை நகர்ந்து செல்கிறது.

மெழுகு பொம்மை ‌போல புன்னகையுடன் வந்து செல்கிறார் பாவனா. சரண்யா மோகனுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டி பர்ஸ்ட் கிளாஸ். சின்ன வயதில், வினய் இடுப்பில் நாய் கடித்தது என்று பாவனா அவிழ்த்துவிடும் காட்சி சிரிப்பலை. விவேக்கை விட சந்தானத்தின் காமெடி கூடுதல் சிரிப்பை வரவழைக்கிறது. போற போக்கை பார்த்தால் விவேக்கை சந்தானம் முந்திவிடுவார் போலிருக்கிறது.

லோகா வாஷிங்டன் கிடைத்த வாயப்பை பயன்படுத்தி நன்றாக நடித்திருக்கிறார். வில்லனாக வரும் கிஷோர் பயமுறுத்துகிறார். வித்யாசகரின் இசையில் 'நான் வரைந்து வைத்த ஓவியம்.... பாடல் இனிமை. பாலசுப்ரமணியத்தின் கேமரா சுழன்றிருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது.

ஜெயம் கொண்டான் - வெற்றி கொண்டான்


- தினமலர் விமர்சன குழு -


Last edited by இளங்கோ on Wed Oct 08, 2008 10:43 pm; edited 1 time in total
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திரை விமர்சனம் - ஜெயம் கொண்டான்

Post by Admin on Wed Oct 08, 2008 10:41 pm

ஜெயம் கொண்டான்

தாய்நாட்டுக்கு திரும்பும் லண்டன் அண்ணன். அமெரிக்கா போகத்துடிக்கும் இந்திய தங்கச்சி. குறுக்கே பாயும் வில்லன் குரூப். புரியாத ப்ரியம். புரிந்த பின் சமாதானமாய் வருகிற பாசம் என அழகான குடும்பச் சண்டை தான் கதை.

வினய் அம்சமாக இருக்கிறார். சாக்லெட் பாய். இமேஜ் தான் பாவம் அவருக்கு தொந்தரவு. நடிப்பதற்கான காட்சிகள் நிறைய இருந்தும், ஹீரோயின் கையை பிடித்து கொண்டால் தான் எனக்கு பேச்சு வரும்... என அடம் பிடிக்கிறார்.

துறு துறு தங்கச்சியாக லேகா வாஷிங்டன் எதிர்வீட்டு மொட்டைமாடி பெண் மாதிரி இயல்பாக தெரிகிறார். முகம் முழுக்க ஆத்திரத்தை தேக்கி கொண்டு நானும் அவருக்கு தான் பொறந்திருக்கேன் என புழுங்குவது வெகு அழகு.

அப்பாவின் சொத்து சம்பாத்தியங்களை கைப்பற்ற அண்ணன்-தங்கை இருவருமே சரவெடியாய் மோதுகிறார்கள். வழக்கம் போலவே கதாநாயகனின் நண்பனாக விவேக். பொண்ணுங்கள்லாம் பீர் பாட்டில் மூடியை வாயாலேயே ஓபன் பண்றாங்கப்பா... என காமெடியில் நிறையவே கலாச்சார குத்து குத்துகிறார். பிரியமான மனைவி இறந்து போய் விட வினயை விரட்டுகிறார் கிஷோர்.

வினய் தன்னை பெண் பார்க்க வந்திருக்கிறார் என நினைத்து ஐ லைக் மணிரத்னம்... என குச்சி ஐஸாய் உருகும் இடங்களில் பாவனாவின் அக்மார் குறும்புத்தனம் பளிச்.

க்ளைமாக்ஸ தங்கை மனம் திருந்துகிறார். நண்பர்கள் துணைக்கு வருகிறார்கள். திடீரென வில்லனை போல் போலீஸ் என் கவுன்ட்டர் செய்கிறது என அரதப்பழசான அதே சங்கதியை சொல்லி முடிப்பது அலுப்பை தான் தருகிறது.

ரெண்டு பொண்டாட்டி உறவுப்பிரச்னையை இன்னும் உத்வேகமாக திரைக்கதையில் சொல்லியிருந்தால், ஜெயம் கொண்டானுக்கு பயமில்லாமல் வெற்றி கிடைத்திருக்கும்.

- குமுதம் விமர்சன குழு -
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திரை விமர்சனம் - ஜெயம் கொண்டான்

Post by Admin on Wed Oct 08, 2008 10:41 pm

ஜெயம் கொண்டான்

அடாவடித் தங்கையைப் பாசத்தாலும் அதிரடி வில்லனைப் பலத்தாலும் ஜெயிப்பவனே, ஜெயம் கொண்டான்!

அப்பாவின் மரணத்தை அடுத்து லண்டனில் இருந்து சென்னை வருகிறார் வினய். அப்பாவுக்குத் தான் அனுப்பிய 60 லட்சத்தை வைத்து பிஸினஸ் செய்வது வினய்யின் திட்டம் பார்த்தால் பணம் மிஸ்ஸிங். எங்கே அந்தப் பணம்? எனத் தேடும்போது தெரிய வருகிறது. அப்பாவுக்கு இன்னொரு மனைவியும் மகளும் உண்டு என்கிற உண்மை. சொத்தில் பங்கு கேட்டு மல்லுக்கு வருகிறார் தங்கை லேகா. அவருக்கு ஆதரவாக ரியல் எஸ்டேட் தாதா கிஷோர். இந்தச் சண்டையில், கிஷோரின் மனைவி அதிசயா இறந்து போகிறார். ஒரு பக்கம் கிஷோர் வெறிகொண்டு துரத்த இன்னொரு பக்கம் சண்டைக் கோழியாக லேகா, வினய்யின் தங்கச்சி எனச் சொல்வதற்கு முன்பே இருவரும் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் என்று காட்டியிருக்கும் இடத்திலிருந்தே ஆரம்பிக்கிறது க்யூட் க்ளிப்பிங்ஸ்.

அதேபோல ஆக்ஷன் கதையில் க்ளைமாக்ஸ் வரை ஹீரோவும், வில்லனும் மோதிக்கொள்ளாத திரைக்கதையும், ஃப்ரெஷ் பாசந்தி. ஆக்ஷன் காட்சிகளில் சைலன்ட்டாக சூடேற்றுவது தில் என்றால் காதல் ட்ராக்கில் செம ஜாலி ஜில். வினய்யும் பாவனாவும் அடிக்கிற சின்ன வயசு பீலா ரீல்கள் கலர்ஃபுல் ரொமான்ஸ்.

வேலுண்டு வினை இல்லை மாதிரி, வேலை உண்டு வினய் இல்லை! அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். சென்டிமென்ட் காமெடி, ஆக்ஷன் என எல்லா உணர்வுகளுக்கும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்தான். முயற்சி பண்ணுங்க நண்பா! படம் முழுக்க ஈகோவில் முறைத்து, வினய்யை வெறுத்து ஒதுக்கும் கேரக்டரில் அசத்தலாகப் பொருந்துகிற லேகா, ஆஹா!

படத்தின் பளபள பாவனா, வினய்தான் தன் வீட்டு ஓனர் என்று தெரியாமல் பெண் பார்க்க வந்தவர் ஒன்று நம்பி வகை தொகையில்லாமல் வாயாடும் இடத்தில் "பாவனை'னா. மதுரை வில்லனாக வருகிற பொல்லாதவன் கிஷோர்குமார், ஆர்பாட்டம் இல்லாத ஆக்ஷனில் மிரளவைக்கிறார். சின்னச் சின்ன பார்வைகளில் மமதையான பெருமிதத்தை வெளிப்படுத்தும் கேரக்டரில் அதிசயா, அபாரம்யா!

முன் பாதியின் பலமான திரைக்கதையைச் சவால்விட்டுப் பின்னுக்கு இழுக்கிறது. பின்பாதி திரைக்கதை. கொலைவெறியோடு வினய்யைத் தேடி சென்னை வருகிற கிஷோர், அவரைக் கண்டுபிடிக்காமல் "தேமே' என்று சோகம் காப்பது... இழுவை. ஹீரோ மதுரையில் பிரச்னைக்குத் திரி கிள்ளிய பிறகு அது சென்னையயிட்லல் வெடிக்கும் இடங்களில் மதுரை மல்லியோடு சேர்த்து கில்லி வாசம்.

டைமிங்கில் ரைமிங் பேசி காமெடிக் கரகம் எடுக்கும் விவேக், எமோஷனல் காட்சிகளில் மட்டும் மௌனம் காத்திருக்கலாம். "சுத்தும் பூமி," "ஒரே ஒரு நாள்' பாடல்களில் தெரிகிறது வித்யாசாகர் முத்திரை. ஆக்ஷன் காட்சிகளுக்கான அதிரடி பின்னணி இசை மட்டும் மிஸ்ஸிங். பாலசுப்பிரமணியெம் கேமராவில். மழையில் நனைந்த பாறையாகப் பளபளக்கின்றன காட்சிகள்.

படத்துக்குத் திருஷ்டி, க்ளைமாக்ஸ். வில்லனிடம் அடிவாங்கி நொந்து நைந்து நிற்கும் வினய், லேகாவின் நெற்றியில் ரத்தத்தைப் பார்த்ததும் பொங்கி எழுந்து புரட்டியெடுப்பது... தமிழ் சினிமா.

அழகாகக் கதை சொன்னவர்கள், திரைக்தையிலும் திருத்தமாகத் திருப்திப்படுத்தியிருக்கலாம்!

- விகடன் விமர்சன குழு -
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திரை விமர்சனம் - ஜெயம் கொண்டான்

Post by Admin on Wed Oct 08, 2008 10:42 pm

ஜெயம் கொண்டான்

ஹீரோவும் வில்லனும் க்ளைமாக்ஸ்வரை மோதிக் கொள்ளாத ஆக்ஷன் கதையில், அண்ணன் தங்கை இருவரும் காட்சிக்குக் காட்சி சண்டைக் கோழியாகக் கலவரப்படுத்துவதுதான் "ஜெயம்கொண்டான்' ஸ்பெஷாலிட்டி.

உறவுகளைப் பாசத்தாலும், எதிரிகளைப் பலத்தாலும் எதிர்கொள்ளத் தெரிந்தவனுக்கு, திசையெங்கும் ஜெயம்தான் என்பதுதான் படத்தின் லாஜிக். அறிமுக இயக்குநர் ஆர்.கண்ணன், குட்டிக்குட்டி சுவாரஸ்யங்களால் கதையை நகர்த்தி வெற்றி பெறுகிறார்.

அடாவடித் தங்கையை அன்பினால் தாக்கும் ஆர்ப்பாட்டமில்லாத அண்ணனாக வினய். மனிதர் கதையின் கனத்தைத் தாங்கமுடியாமல் திணறுவது பெருத்த சோகம். அதுவும் எல்லா உணர்வுகளுக்கும் ஒரே ஃபேஸ் எக்ஸ்பிரஷன். இப்படி இருந்தா எப்படி ஸார் நிலைச்சு நிக்கறது? வினய்யை வெறுக்கும் ஈகோயிஸ்ட் தங்கையாக லேகா. செம ஸ்கோர். அவரது மின்வெட்டுப் பார்வையும், அலட்சியப் பேச்சும், தனிமையில் ஏக்கமும்... பாத்திரத்துக்குப் பாந்தம்.

படம் முழுக்க பளபள பாவனா க்யூட் ப்யூட்டி. வினய்தான் வீட்டு ஓனர் என்று தெரியாமல், பெண் பார்க்க வந்திருக்கிறார் என நினைத்துக் கொண்டு அவரிடம் வாயடிக்கும் காட்சிகளில் ஸ்வீட் மிர்ச்சி.

மதுரை வில்லன் கிஷோர் மனசுக்குள் கலவரமூட்டும் லாஞ்சர் ராக்கெட், ஆனால் சென்னையில் வினய்யைத் தேடிக் கொண்டு அலைகையில் புஸ்வாணமாகிறது அவரது கேரக்டர். வில்லனோடு வில்லியாக வளைய வரும் அதிசயா, அநியாயத்துக்கு அபாரம். சின்னச்சின்ன மேனரிஸங்களில் மனசுக்குள் மத்தளம் அடிக்கிறார்.

வார்த்தைகளில் கரகம் விளையாடும் விவேக் எத்தனை நாளுக்கு அரைச்ச மாவையே அரைப்பீங்க. ஏதாவது புதுசா பண்ணுங்க அப்பு. "நான் வரைந்த சூரியன்', ஒரே நாளில், இரண்டு படங்களில் தான் மெலடி கிங் என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறார் வித்யாசகர். பின்னனி இசையில் ஏனோ சுவாரஸ்யம் மிஸ்ஸிங். பாலசுப்ரமணியெம் கேமராவில், மதுரை மல்லி வாசனையோடும், சென்னை பீக் அவர் டென்ஷனோடும் பதிவாகியிருக்கிறது. பட்டுக்கோட்டை பிரபாகரின் இயல்பான வசனங்கள் படத்துக்குப் பக்கபலம்.

முன்பாதியில் ஜில்லென்று நகரும் திரைக்கதை ஆர்வமேற்பத்த, பின்பாதியோ டல்லடிக்கிறது. அதுவும் மதுரையில் தொடங்கி சென்னையில் முடியும் திரைக்கதை புதுசா?! யூகிக்கமுடியாத க்ளைமாக்ஸில் இதயம் நுழைகிறார் இயக்குநர்.

- கல்கி விமர்சன குழு -
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திரை விமர்சனம் - ஜெயம் கொண்டான்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum