புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு  Poll_c10உணவு  Poll_m10உணவு  Poll_c10 
64 Posts - 58%
heezulia
உணவு  Poll_c10உணவு  Poll_m10உணவு  Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
உணவு  Poll_c10உணவு  Poll_m10உணவு  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உணவு  Poll_c10உணவு  Poll_m10உணவு  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு  Poll_c10உணவு  Poll_m10உணவு  Poll_c10 
106 Posts - 60%
heezulia
உணவு  Poll_c10உணவு  Poll_m10உணவு  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
உணவு  Poll_c10உணவு  Poll_m10உணவு  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
உணவு  Poll_c10உணவு  Poll_m10உணவு  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு


   
   
avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Sat Jul 10, 2010 1:41 am


இயற்கையில் விளைந்த காய், கனி, இலை, கிழங்கு, விதை போன்றவற்றுடன்
இறைச்சியையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதி மனிதன்
, நெருப்பினால் உணவைச்
சமைத்து உண்ணலாம் என்று கண்டறிந்தது பெரிய கண்டுபிடிப்புதான்
. வயிற்றில் தோன்றும்
ஒருவிதமான உணர்ச்சியானது ஏதாவது ஒன்றை வாய்க்குள் திணிக்குமாறு எண்ணத்தை
ஏற்படுத்துவது பசிக்கான மூலம்
. வயிற்றுப் பசியின் காரணமாக மனிதனின் நடத்தை
விலங்கினைப் போல மாறுவது சாதாரணமானதுதான்
. குழந்தைகள் பசிக்கின்ற நேரமெல்லாம்
சாப்பிடலாம்
. உடலுழைப்பில் ஈடுபடுகின்ற ஆரோக்கியமான மனிதனுக்கு இருவேளை உணவு
போதும்
. ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் உணவு சாப்பிடுகிறவனை 'ரோகி' (நோயாளி) என்று சித்த
வைத்தியமுறை குறிப்பிடுகின்றது
.

அறுபதுகளின் தொடக்கத்தில் பசுமைப் புரட்சி
மூலம் செயற்கை உரம்
, பூச்சி மருந்து வயலில் தெளிக்கப்படவில்லை. இலை, தழை என இயற்கை
உரத்துடன் விளைந்த தானியங்கள் சுவையுடன் இருந்தன
. சிறுமணி, குளு குளு சம்பா, டொப்பி, கார், குதிரை வாலி, சீரகச் சம்பா... இப்படி
இருபதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்களைத் தமிழக விவசாயிகள் வயலில் பாவினர்
. இத்தகைய
நெல்லிலிருந்து தயாரான அரிசியை விறகு அடுப்பில் வைத்துச் சமைப்பார்கள்
. மறுநாள் நீர்
ஊற்றப்பட்ட பழைய சோறுதான் பல வீடுகளில் இருக்கும்
. நீராகாரம் எனப்படும்
நீச்சத்தண்ணி குடிப்பதற்கு நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்
. பலர் காலையில்
வெறும் வயிற்றில் நீராகாரத்தைக் குடிப்பார்கள்
.
அது வயிற்றுக்கு இதமாக
இருக்கும்
. நீர் ஊற்றப்பட்ட சோறு நொந்து போய் நசநசவென்று ஆகாமல் விரைப்பாக
இருக்கும்
. எனவே ஒரு கையில் பச்சை மிளகாயை வைத்துக் கொண்டு, மறுகையில் சோற்றை
அள்ளி விழுங்குவார்கள்
. அன்று முழுக்கக் கடுமையான வெயிலில் வேலை
செய்து
, உடம்பிலிருந்து நிரம்ப வியர்வை கொட்டினாலும், வேறு எந்தவிதமான
தொந்தரவும் ஏற்படாது
. பழைய சோறு சாப்பிடுவது என்பதையே கேவலமாகக்
கருதுவது எண்பதுகளில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்
.

பசி தாங்காமல் திருடுகிறவர்கள் கிராமத்தில்
இருந்தனர்
. ஆண்டு முழுக்க வேலை கிடைக்காதபோது நல்ல உணவு என்பது சிலரின்
கனவாக மாறிவிடும்
. பசியைப் போக்கிடச் சிலர் செய்த வேலைகளைப்
பதிவாக்கினால்
, இன்று நம்புவதற்குச் சிரமமாக இருக்கும். எழுபதுகளில் எங்கள்
ஊரில் ஒரு பஞ்சாயத்து நடைபெற்றது
. அதில் சம்பந்தப்பட்ட குற்றம்
சுமத்தப்பட்டவர்கள் முரண்பட்டதனால்
, பிரச்சினை காவல் நிலையம் போனது. பிராது இதுதான். இரவு வேளையில்
வயலில் கிடை அமர்த்தப்பட்டிருந்த ஆடுகளிலிருந்து ஒரு கிடாயைப்
பிடித்துப்போய் நான்கு பேர் இரவோடு இரவாகத் தின்றுவிட்டனர் என்பதுதான்
வழக்கு
. காவலர்களின் அன்பான உபசரிப்பிற்குப் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள்
குற்றத்தை ஒப்புக் கொண்டனர்
. சுமார் பத்துக் கிலோ எடையுள்ள ஆட்டுக்
கிடாயின் சங்கை ஒதுக்கிக் கத்த விடாமல் தூக்கிக் கொண்டுபோய்
, கொன்று, அதன் தோலையுரித்து, கறியை உப்பு
மட்டும் போட்டு வேகவைத்து நால்வரும் இரவோடு இரவாகச் சாப்பிட்டுள்ளனர்
. அவர்கள் சாராயமும்
குடித்திருந்தனர் என்பது மேலதிகத் தகவல்
. அந்தக் காலகட்டத்தில் இச்செய்தி எனக்கு
வியப்பைத் தந்தது
. ஓரிரவில் 2 1/2
கிலோ ஆட்டுக் கறியை
சாப்பிடமுடியுமா என்று
. பசியும், ஆட்டுக்கறியின் மீது ஏக்கமும்
கொண்டவர்களுக்கு
'அளவு' என்று எதுவும் இருப்பதில்லை.

உணவு  Tamil%20feast%5B1%5Dஅன்றைய காலகட்டத்தில்
உடலுழைப்பாளிகள் மட்டுமின்றி எல்லோருமே நிரம்பச் சாப்பிட்டனர்
. பானை நிரம்பச் சோறு
ஆக்கி
, 'வேண்டாம்' என்று தடுத்தாலும் இலையில் சோற்றைக்
கொட்டுவது என்பது கிராமத்துப் பெண்களுக்கு இயல்பாகக் கைவரப் பெற்ற விஷயம்
. நல்ல உணவு
கிடைக்கும் போது
'ஒருகை' பார்த்துவிடவேண்டும் என்பது பொதுப் புத்தியாக நிலவியது. கோயில்களில் ஆடு
வெட்டிப் போட்டு விருந்து போட அழைப்பு வந்தால்
,
எல்லோரும் உற்சாகமாகக்
கிளம்பிவிடுவார்கள்
. சாமிக்கு பலியிடப்பட்ட ஆட்டுக் கிடாயைச்
சமைத்துக் கறியைப் பெரிய அகப்பையில் அள்ளி
, இலையில் போடப்பட்ட சோற்றின் மீது
ஊற்றுவார்கள்
. 'உஸ்... உஸ்' என உறைப்பு தாங்க முடியாமல், வாயினால் ஊதிக் கொண்டே, சோற்றையும்
கறியையும் அள்ளி வாயினுள் திணிப்பார்கள்
. சாப்பிட்டு முடித்தவுடன் மனத்திருப்தியுடன்
வெற்றிலை பாக்கினை மென்று கொண்டு
, உடலை அசைத்துக் கொண்டு மரத்தடியில்
ஓய்வெடுப்பார்கள்
.

கோவில் திருவிழா மட்டுமல்ல, இறந்த
வீட்டிலும்கூட சாப்பாட்டைத் தயக்கமின்றிச் சாப்பிடுகிறவர்கள் உண்டு
. சில சாதியினரில்
எண்பது வயதுக்கு மேற்பட்ட வசதியான பெரிசுகள் இறந்துவிட்டால்
, 'நல்ல சாவு' என்று கருதுவார்கள். நெருங்கிய உறவினர்
வீடுகள் அல்லது பள்ளிக் கூடங்களில் உணவு சமைத்துப் பரிமாறுவார்கள்
. எழுபதுகளின்
தொடக்கத்தில் எங்கள் சித்தியின் மாமனார் இறந்துவிட்டார்
. அவர் மாடசாமி
கோயில் பூசாரி
. எனவே அவருடைய பூர்வீக ஊரிலிருந்து-
பட்டிக்காடு- முப்பதுக்கும்
மேற்பட்டவர்கள் துக்கம் கேட்கக் கிளம்பி வந்துவிட்டனர்
. பக்கத்திலிருந்த
தொடக்கப் பள்ளிக்கூடத்தில் இரவு உணவாகச் சோறு
,
சாம்பார், கத்திரிக்காய்க்
கூட்டினை உள்ளூர்ச் சமையல்காரர் ஏதோ சமைத்திருந்தார்
. ரொம்பச் சுமாரான
உணவு
. முதல் பந்தியிலேயே அரிசிச் சோறு காலியாகிவிட்டது. கிராமத்துக்காரர்கள்
ஒரு படிச் சோற்றினை நால்வர் என்ற கணக்கில் சாப்பிட்டிருந்தனர்
. இன்றைய கணக்கில்
சொல்வதெனில் ஒருகிலோ அரிசிச் சோற்றை இருவர் என்ற ரீதியில்
சாப்பிட்டிருந்தனர்
. அப்பொழுது மதுரைப் பக்கத்துக் கிராமங்களில்
பஞ்சமும் வறட்சியும் நிலவியது
. எனவே வெறும் கேப்பைக் கூழுக்கே சிரமப்பட்டுக்
கொண்டிருந்தவர்களுக்கு
, அரிசிச் சோறு பெரிய விருந்தாகிவிட்டது. அப்புறம் வயலில்
கடுமையாக உழைக்கின்றவர்களுக்கு
, நாசுக்காகக் கொறித்துப் பெயருக்குச்
சாப்பிடும் போலித்தனம் வழக்கமில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்
. அதனால்தான் இறந்த
வீட்டினர் போடும் உணவையும் அவர்கள் தங்கள் வயிற்றுக்காகச் சாப்பிட்டனர்
.

பெரும்பாலான கிராமத்தினர் வீடுகளில்
ஏழெட்டுக் குழந்தைகள் அடுத்தடுத்து இருக்கும்
.
கூலிவேலை செய்து கிடைக்கும்
ஊதியத்தில் சமைக்கும் உணவின் அளவு போதாது
. குழந்தைகள், கணவன், மாமனார், மாமியார் சாப்பிட்டவுடன் பெண்களுக்குச்
சிறிய அளவு உணவே உண்ணக் கிடைக்கும்
. அதிலும் கறி, மீன் குழம்பு வைக்கும் நாட்களில், எல்லோரும்
சாப்பிட்ட பின்னர் சட்டியின் அடியில் கொஞ்சம் குழம்பு மட்டும்தான் மிஞ்சும்
. ஆனால் பெண்கள்
உணவுப் பற்றாக்குறையைப் பெரிது பண்ணமாட்டார்கள்
. அதற்காக அடுத்தநாள்
உணவின் அளவைக் கூட்டவும் முயற்சிக்க மாட்டார்கள்
. ஏனெனில் வீட்டின்
பொருளாதார நிலை அவர்களுக்கு நன்கு தெரியும்
.

உணவு  Appamவயிறார உண்டு ஏப்பம் விட்டு, ஓய்வாகப் படுத்துத்
திண்ணையில் தூங்குவது என்பது
, கிராமங்களில் வசதியானவர்களுக்கு மட்டுமே
சாத்தியம்
. பெரும்பாலான உழைப்பாளிகள், அன்றாடங் காய்ச்சிகள் அரைவயிற்றுக் கூழ், கஞ்சிதான்
குடிப்பார்கள்
. இதனால் விருந்துச் சாப்பாடு என்றவுடன், பலரும்
உற்சாகத்துடன் கிளம்பிவிடுவார்கள்
. நான்கைந்து கூட்டுப் பொரியல், ரசம், மோர், ஊறுகாய், சாம்பார், அப்பளம், பாயாசம் போன்ற உணவு
வகைகள் பலருக்கு நாக்கில் எச்சிலை வரவழைக்கும்
. விருந்து
சாப்பிட்டுவிட்டு
'நொள்ளை' சொல்லுவது என்பது பெரும்பாலும் கிடையாது. உணவு சுமாரான
தரத்தில்
, வசதிக் குறைவான இடத்தில் பரிமாறப்பட்டாலும் அவற்றைப் பொருட்படுத்த
மாட்டார்கள்
.

கல்யாணம், பூப்புனித நீராட்டு விழா, காது குத்து விழா
போன்றவற்றில் சமையலைக் கவனிக்க மூவர் அல்லது நால்வர் இருப்பார்கள்
. காய்கறி நறுக்குதல், தண்ணீர் தூக்கி
வருதல்
, போன்ற வேலைகளைப் பலரும் செய்வார்கள்.
உணவு பரிமாறுதல்
இளவட்டங்கள்தான்
. பந்தியில் இடம் பிடிக்கக் கூட்டம் அலைமோதும். ஒரே சத்தமாக
இருக்கும்
. பனைநார்ப் பெட்டியில் சோற்றை ஒருவர் தூக்கி வர, பரிமாறுபவர்
கைகளினால் அள்ளி இலையில் போடுவார்
. அன்னக்கை பல வீடுகளில் இருக்காது. பெரிய அகப்பையில்
சாம்பாரை முகந்து
, சோற்றுக் குவியலின் மீது ஊற்றுவார்கள். சாப்பிட்டு
முடிப்பதற்குள் வியர்வையில் உடம்பு ஈரமாகிவிடும்
. சாப்பிட்டு எழுந்து
வரும்போதும் தள்ளு முள்ளுவாக இருக்கும்
. கிராமத்துக் கல்யாண விருந்துகளில் இடம்
பிடித்துச் சாப்பிடுவதற்குள் பசியானது குடலைத் தின்றுவிடும்
. உறவினர், நண்பர்கள்
வட்டத்தில் விருந்து என்பது இப்படித்தான் என்பது போல சாதாரணமாக
இருப்பார்கள்
.

இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைச்
சேகரித்துச் சமையல் செய்து சாப்பிடும் வழக்கம் கிராமப்புறங்களில் நிலவியது
. காய்கறிக் கடைகள்
பெரிய கிராமங்களில்தான் இருக்கும்
. கறிவேப்பிலை விற்கும் பெண் கைப்பிடியளவு
அரிசியை வாங்கிக் கொண்டு
, அதற்குப் பண்ட மாற்றாகக் கறிவேப்பிலை தருவாள். வயல்வெளியில்
முளைத்திருக்கும் பொன்னாங்கண்ணிக் கீரை
, குமட்டிக்கீரை போன்றவற்றைப் பறித்து வந்து
சமையல் செய்வார்கள்
. தொடந்து நான்கைந்து நாட்கள் இடி, மின்னலுடன் மழை
பெய்தால்
, காலை வேளையில் பெரிசுகள் வயல், தோப்புகளில் காளான் பறிக்கப் போவார்கள். குடைக் காளான், அவல் காளான் போன்ற
காளான்களைப் பறித்துத் துணியில் முடிந்து
, வீட்டிற்குக் கொண்டு வருவார்கள். காளான் குழம்பு
அசலான இறைச்சிக் குழம்பு போலவே இருக்கும்
.

உணவு  Papayaவறண்ட இடங்களில் காட்டுமரம், செடியில்
படந்திருக்கும் தாவரமான பிரண்டையும் தமிழர் வாழ்வில் முக்கியமான உணவுப்
பொருள்
. பிரண்டையைச் சிறிய துண்டாகக் கிள்ளி,
வற மிளகாயை அரைத்து ஊற்றிக்
குழம்பு வைத்தால்
, அயிரை மீன் குழம்பு போலச் சுவையாக இருக்கும். சைவ உணவுப்
பழக்கமுள்ளவர்கள் அல்லது இறைச்சி வாங்கிட வசதியற்றவர்களுக்கு இயற்கை
அளித்திருக்கும் கொடைதான் பிரண்டையும் காளானும்
.

குளத்தில் படர்ந்திருக்கும் தாமரைக் கொடியின்
கிழங்கினைப் பறித்துக் குழம்பு வைத்துச் சாப்பிடுவார்கள்
. வாழைப்பூ, வாழைத்தண்டு என
மலிவாகக் கிடைக்கும் காய்கறிகள் சமையலுக்குப் பயன்பட்டன
.

எழுபதுகளில்கூட சில வகைப்பட்ட காய்கறி, பழங்கள்
சாப்பிடுவதை மக்கள் விலக்காகக் கருதினர்
... இன்று ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதற்காக
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் முள்ளங்கி ஒருகாலத்தில் பாவப்பட்ட
ஏழைகள் சாப்பிடுவது என்று ஒதுக்கி வைத்தனர்
. பன்றிகளுக்குப் போடப்படுவது முள்ளங்கி என்று
மட்டமாகக் கருதினர்
. இலவசமாகப் போடப்படும் உணவில் முள்ளங்கிச்
சாம்பார் இடம்பெற்றிருக்கும்
. அரசாங்கம் இலவசமாக நடத்திய இலவச மாணவர்
விடுதிகளில் முள்ளங்கி முக்கியமான காய்கறியாகும்
.

உணவு  KhmerCurry%5B1%5Dபப்பாளிப் பழம்
வேலியோரம் காய்த்துக் கிடக்கும்
. அதைப் பறவைகள் கொத்தித் தின்னும். பப்பாளிப் பழம்
சாப்பிட்டால் சூட்டைக் கிளப்பிவிடும் என்று கிராமத்தினர் கருதினர்
. கர்ப்பிணிப்
பெண்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் கருவைக் கலைத்துவிடும் என்று உறுதியாக
நம்பினர்
. பப்பாளிப் பழத்தை வயிற்றுப் பசியால் வாடுகிறவர்கள்தான்
சாப்பிட்டனர்
. பப்பாளிப்பழம் சாப்பிடுவது கௌரவமான விஷயமல்ல.

கிராமங்களில் வீட்டிற்கு விருந்தினர்
வரும்போது கீரையைச் சமைத்துப் போடுவது கிடையாது
. இயற்கையாகக்
கிடைக்கும் கீரையைச் சமைத்துப் போடுவது விருந்தினர்களைக் கேவலப்படுத்துவது
போன்றதாகும்
.

பசி அல்லது இறைச்சி மீதான விருப்பம் காரணமாக, பக்கத்து வீட்டுக்
கோழியைப் பிடித்துக் கொன்று சமைத்துச் சாப்பிடுவதைச் சிலர் ரகசியமாகச்
செய்தனர்
. இதனால் கோழியை இழந்தவர்கள் மண்ணை வாரித் தூற்றிச் சாபமிடுவார்கள். ஓரளவு துப்புத்
தெரிந்தவர்கள் நேரடியாகச் சண்டைக்குப் போவார்கள்
. திருடித் தின்பது
கேவலம் என்பதை நன்கறிந்தும்
, நாக்கைக் கட்டுப்படுத்த முடியாததனால்
இப்படியெல்லாம் செயல்கள் நடைபெற்றன
. பசி ருசி அறியாதது மட்டுமல்ல, வெட்கமும் அறியாதது.

உணவு  Puliyotharai%5B1%5Dகிராமப்புறங்களிலிருந்து
தொலைவிலுள்ள ஊர்களிலுள்ள கோயில்களுக்குப் பயணமாகும்போது
'கட்டுச்சோறு' கொண்டு செல்லும்
வழக்கமிருந்தது
. செல்லுமிடங்களில் அல்லது வழிப் பயணத்தில் நல்ல உணவு கிடைக்காது
அல்லது செலவு மிச்சம் என்ற நோக்கில் உணவைச் சமைத்துக் கையோடு எடுத்துச்
சென்றனர்
. பெரும்பாலும் 'புளியோதரை' தான் தயாரிக்கப்பட்டது. புளிக்கரைசலைக்
காய்ச்சி
, அரிசிச் சோற்றில் கலந்து கிண்டப்பட்ட புளிச் சோற்றுக்குத்
தொட்டுக் கொள்ள முருங்கைக்காய்
, கத்திரிக்காய் போட்டு சமைக்கப்பட்ட
புளிக்குழம்பு பயன்படுத்தப்பட்டது
. புளியோதரையைச் சிறிய அண்டா அல்லது குத்துச்
சட்டியிலிட்டு
, தட்டினால் மூடி, வெள்ளைத் துணியினால் சுற்றித் தூக்கிச்
செல்வார்கள்
. பயணத்தின் போது உணவுப் பாத்திரத்தின் மீது கால்பட்டுவிட்டால்
புளியோதரை நொந்து போய்க் கெட்டுவிடும் என்று கவனமாக இருப்பார்கள்
. மூன்று
நாட்களுக்குக்கூட மூன்று வேளைகளும் புளியோதரையைப் புளிக் குழம்பில்
புரட்டிச் சாப்பிடுவார்கள்
. வெளியூர்களிலுள்ள கோவிலுக்குச் செல்லும்போது, ஓட்டல்களில்
சாப்பிடாமல் கையில் எடுத்துச் செல்லும் கட்டுச் சோற்றைச் சாப்பிட்டதற்கு
செலவு குறைவு என்பது முக்கியமான காரணம்
.

உணவில் இனிப்பு என்பது அபூர்வமான விஷயம். பொங்கலும்
பணியாரமும் மட்டும்தான் இனிப்பாகச் சாப்பிடும் உணவு வகைகள்
. கோவில்களில்
சர்க்கரைப் பொங்கல் வழங்கினால்
, வாங்கிச் சாப்பிடக் கூட்டம் அலைமோதும். மார்கழி மாதம்
எங்கள் ஊர்க் கோவில்களில் அதிகாலையில் பஜனை நடைபெறும்
. சிறுவர், சிறுமியர், எப்பொழுது பாடல்
பாடி முடிப்பார்கள் எனக் காத்திருப்பார்கள்
. சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை
உள்ளங்கையில் வாங்கிச் சாப்பிடுவது மார்கழிக் குளிருக்கு இதமாக இருக்கும்
.

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் நாளில்
சர்க்கரைப் பொங்கல் வைத்துக் கடவுளுக்குப் படையலிட்டு விருப்பத்துடன்
சாப்பிடுவார்கள்
. பொங்கல் சோறு பெரிய பித்தளைப் பானையில் மறுநாளும் வீட்டில்
இருக்கும்
. குட்டிப் பிள்ளைகள் நாக்கைச் சப்பிக் கொண்டு பொங்கலை விரும்பிச்
சாப்பிடுவார்கள்
.

ஓரளவு வசதியானவர்கள் வீட்டில்
விழாக்காலத்தில் அதிரசம்
, எள்ளுருண்டை, முறுக்கு, ரவைப் பணியாரம் சுடுவார்கள். இறந்த வீட்டில்
மூன்றாம் நாள் படையலில் படைப்பதற்காக காய்ச்சப்பட்ட கருப்பட்டிப் பாகை
, அரிசி மாவில் ஊற்றி, 'அர்த்தப் பணியாரம்' என்ற இனிப்புப்
பலகாரம் சுடும் வழக்கமிருந்தது
. அப்பலகாரம் கடைகளில் கிடைக்காது. ஆனால் கேரளாவில்
கிராமப்புறங்களில் அதே பலகாரம்
'நெய்யப்பம்' என்ற பெயரில் விற்கப்படுகிறது.

உளுத்தங்களி என்ற இனிப்பு உணவு, வயது வந்த
பெண்ணுக்குத் தின்பதற்காகச் செய்யப்படும் விசேஷமான பலகாரம்
. உளுந்தமாவைக்
கிண்டி
, அதில் வெல்லத்தைச் சேர்த்துக் களியாக்கிச் செய்யப்படும் உணவு
சத்துமிக்கது
. சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

கிராமப்புறங்களில் லட்டு, ஜிலேபி, பால்கோவா போன்ற
இனிப்பு வகைகள் அறுபதுகளில் கிடையா
. அவை எப்படி இருக்கும் என்றுகூடப் பலருக்குத்
தெரியாது
. மதுரை மீனாட்சியம்மன் கோவில், கிழக்குக் கோபுர வாயிலுக்கு எதிரிலுள்ள 'நாகப்பட்டினம்
ஒரிஜினல் நெய் மிட்டாய்க்கடை
' யிலிருந்து என் தந்தையார் அவ்வப்போது
வாங்கிவரும் அல்வாவின் சுவை இன்னும் என்னுடைய நாக்கில் படிந்துள்ளது
.

கிராமங்களில் அச்சுவெல்லம்தான் இனிப்பு. கல்யாண வீடுகளில்
சீர் கொண்டுவரும் தட்டுகளில் கல்கண்டு இருக்கும்
. பலசரக்குக்
கடைகளுக்குச் சாமான்கள் வாங்கப் போகும்போது குழந்தைகள்
, வெல்லக் கட்டியை
ஓசியாக வாங்கிச் சாப்பிடுவார்கள்
.

கிராமத்தில் உணவு உண்ணுவதற்காகத்தான் எல்லா
வேலைகளும் என்று சொல்லிக்கொள்வார்கள்
. எவ்வளவுதான் வறுமை வாட்டிய போதிலும் இரவு
வேளையில் உணவு கேட்டுவரும் யாருக்கும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள்
. இப்பத்தான் 'உலை பொங்குது' என்று நயமாகச்
சொல்வார்கள்
. உண்மையும் அதுவாகத்தானிருக்கும். பசியின் கொடுமை தினமும் பசியைப் போக்கிவிடப்
போராடிக் கொண்டிருக்கிறவர்களுக்கு அன்றி வேறு யாருக்குத் தெரியும்
?


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக