புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
3 Posts - 2%
bala_t
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
1 Post - 1%
prajai
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
6 Posts - 1%
prajai
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_m10அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 23, 2010 5:33 pm

இது ஒரு ஆப்புகளின் கதை. ஒருவர் மாற்றி ஒருவருக்கு வைத்த ஆப்பு இப்போது எங்கே வந்து முடிந்திருக்கிறது என்பதைச் சொல்லும் கதை.

ஐஸ்வர்யாராய்... ஐஸ்வர்யாராய்... என்னும் முன்னாள் உலகப் பேரழகியும், சல்மான்கான்... சல்மான்கான்... என்கிற இந்திப்பட நடிகரும் முன்னொரு காலத்தில் நகமும் சதையுமாக இருந்து வந்தனர். பிற்பாடு யாருடைய கண்ணோ காதோ பட்டதோ தெரியாது அந்த உறவு அம்போன்னு ஆக... ஐஸ்வர்யாராய் தனக்கு ஆப்பு வைத்துவிட்டதாக நினைத்த சல்மான்கான் சலம்போ சலம்பென்று சலம்ப அது போலீஸ் ஸ்டேசன் வரை போனது.

இது சினிமா செய்திகளைக் கண்ணும் கருத்துமாக வரிவிடாது வாசிக்கும் சகலருக்கும் தெரிந்த விசயம்.

அப்போது பார்த்து கண்ணியவானாய் உலக அழகியின் கண்முன்னே வந்து நின்ற விவேக் ஓபராய் ‘‘சகல ஆறுதலின் தேவனாக’’ அவதாம் எடுக்க... அதுவும் கொஞ்சகாலம் ஓடியது.

ஐஸ்வர்யாராயின் அன்பைப் பெற அலப்பறை வழிமுறை செல்லுபடியாகாது என்பதை புரிந்துகொண்ட மிஸ்டர். கண்ணியம், சலம்பல் சிங்கத்தின் கதி தனக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்று முடிவுகட்டி சமூகசேவை சிங்கமாக அவதாரம் எடுத்து சுனாமிக் கரையோரங்களில் சுற்றி வந்தார்.

ஆனால் அந்த ஆசாமிக்கும் வந்தது ஆப்பு அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சன் வடிவத்தில். அந்த அபிஷேக்பச்சனை கரம் பிடித்ததன் மூலம் ஆப்புகள் முறையே சல்மான்கான் மற்றும் விவேக் ஓபராய் இருவருக்கும் சரிசமமாக அடிக்கப்பட்டது. ஐஸின் ஆப்பால் அல்லோலகல்லோலப்பட்ட இருவரும் மரியாதை நிமித்தமான மறு ஆப்புக்காகக் காத்திருந்த வேளையில்தான்...

இடைவேளை!

ஈழத்தில் சிங்களக்காடையர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்ததும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையின் விளைவாக மயான அமைதி ஏற்படுத்தப்பட்டதும் நடந்து முடிந்தது. ரத்தக்கறைகளை மறைக்க கேளிக்கை விழாக்களை கொண்டாட வேண்டிய நிர்பந்தம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

இந்த வேளையில்தான் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை கொழும்பில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டது. ‘‘படுகொலைகளை மறைக்கத்தான் இந்தக்கூத்தும் கும்மாளமும் இதில் எக்காரணம் கொண்டும் கலந்துகொண்டு விடாதீர்கள்’’ என ஒட்டுமொத்த தமிழர்களது வேண்டுகோளையும் ஏற்று தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், அமீர்கான், அபிஷேக்பச்சன் உட்பட பலர் இதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர் என்பது நாம் ஏற்கெனவே அறிந்த செய்தி.

அதுவும் அதன் தூதுவராக இருந்த அமிதாப்பச்சனே தமிழர்களது வேண்டுகோளை ஏற்று புறக்கணித்துவிட்டார் என்கிற செய்தி அவரது மருமகளின் ஆப்புகளால் ஏற்கெனவே அவதிப்பட்டு வந்த சல்மானுக்கும், அந்த ஓபராயுக்கும் ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்த... எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது அவர்களுக்குள்.

‘‘மேய்ச்சா மேய்ப்பேன் இல்லாட்டி பரதேசம் போவேன்’’ என்று ஒற்றைக்காலில் நின்றிருந்த இந்த இரண்டும் ‘‘நீ இலங்கை போகாட்டி என்ன? நாங்க போய்த்தான் தீருவோம். எந்தத் தமிழன் எதிர்க்கிறான் பார்ப்போம்’’ என்று தொடைதட்டிக் கிளம்பின.

அப்போதுதான் அரங்கேற ஆரம்பித்தது ‘அறக்கட்டளை அரசியல்.’ அதுவும் அறமே இல்லாத நாட்டில்.

கொலைபாதகன் ராஜபக்ஷேவின் கமன் நாமல் ராஜபக்ஷே, தான் நடத்தி வரும் ‘அறக்கட்டளை’யின் பெயரால் இலங்கையில் ஒரு விழாவை ஏற்பாடு பண்ண...

இந்தியாவில் ‘அறக்கட்டளை’ ஒன்றை நடத்திவரும் ஆப்பழகன் ஓபராய் அங்கு போய் இறங்க...

ஏற்கெனவே மொரீசியசில் ‘ரெடி’ என்கிற தனது இந்திப்பட சூட்டிங்கை நடத்துவதாக இருந்த முதலாம் ஆப்பழகன் சல்மான்கான் அதனை இலங்கைக்கு மாற்றிக் கொண்டு கொழும்பில் கால்வைக்க...

எங்கியோ போற மாரியாத்தா...
எம்மேல வந்து ஏறாத்தா... என்கிற கதையாக ஏற்கனவே துயரத்தின் விளிம்பில் நிற்கும் தமிழர்கள் மீது வந்து ஏறின இந்த ரெண்டு ஜென்மங்களும்.

கதாநாயகன் போனால் கதாநாயகி போக வேண்டாமா? அப்படிப் போனவர்தான் சேச்சி அசின்.

‘‘என்னாத்தை சொல்வேணுங்கோ... வடுமாங்கா ஊறுதுங்கோ’’ என்று தமிழகத்தில் ‘கலைச்சேவை’ செய்து கொண்டிருந்த அசின் தயிர்சானம் ரெடி பண்ண இந்திக்குத் தாவினார். அப்படியே இந்தி ரெடி சூட்டிங்குக்காக இலங்கைக்கும் தாவினார்.

ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழ்த்திரை உலகினரின் தடை உத்தரவை தூக்கி குப்பைக் கூடையில் வீசிவிட்டு ‘‘ஐபா (திரைப்படவிழா) பிரச்னை முடிந்து விட்டது. இலங்கைக்குள் செல்ல தொழில் துறையினருக்கும், விளையாட்டுத் துறையினருக்கும் தடையில்லை. கலைஞர்களான எங்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? இதையும் மீறி தடை விதிக்கப்பட்டால் அது குறித்து நான் கண்டுகொள்ள மாட்டேன்’’ என்று முதலில் திமிர்த்தனமாக சிங்கள அரண்மனையில் இருந்து பேட்டி கொடுத்தார் அசின்.

ஒருவேளை நாளை இந்திப்பட உலகம் தனக்கு அல்வா கொடுத்துவிட்டால் தமிழ்நாட்டுப் பக்கம் தப்பித்தவறிக்கட தலைவைத்தும் படுக்கமுடியாதே என்ன செய்ய?

அட... இருக்கவே இருக்கு ‘அறக்கட்டளை டெக்னிக்’.

ஒன்றரை மாதமாய் ஈழத்தமிழர் அவலம் குறித்து அமைதி காத்த அம்மணி, வாழும் தெரசாவாய் அவதாரம் எடுத்தார்.

‘‘தமிழ் மக்களைக் காப்பாற்ற அறக்கட்டளை ஒன்று ஆரம்பித்து விட்டேன். ஐந்தே நாட்களில் 300 பேருக்கு ஆபரேஷன் £கிவிட்டது. இன்னும் பலருக்கு பண்ண 5 கோடி ஒதுக்கி இருக்கிறேன்’’ என்று அம்மக்களது கண்களைப் பிடுங்கி இந்தகதிக்கு ஆளாக்கிய ராஜபக்ஷேவின் தர்மபத்தினியை உடன் வைத்துக்கொண்டு அள்ளிவீசினார் அம்மணி அசின்.

ஆக இனப்படுகொலை நடத்திய ராஜபக்சேவின் மகனும் ஒரு அறக்கட்டளை.

அமிதாப் மருமகளை லவட்டப் பார்த்த விவேக் ஓபராயும் ஒரு அறக்கட்டளை.

இலங்கைக்கு சூட்டிங் போன அசினும் ஒரு அறக்கட்டளை.

அப்புறம் என்ன ஒரே நான்ஸ்டாப் கொண்டாட்டம்தான்.

உண்மையில் இவர்களது அறக்கட்டளைகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், யார்?

சர்வதேச தொண்டு நிறுவனங்களைக்கூட இலங்கைக்குக் கால் வைக்க அனுமதிக்காத சிங்கள அரசு இவர்களை மட்டும் உலாவர எப்படி அனுமதிக்கிறது?

சர்வதேச பொது மன்னிப்புச் சபை, ஐரோப்பிய யூனியனது மனித உரிமை அமைப்புகள் என எவரையுமே அனுமதிக்காத சிங்களம் எப்படி ஓபராய்களுக்கும், சல்மான்களுக்கும், அசின்களுக்கும் சிவப்புக் கம்பள ரரவேற்பு அளித்து, கண்ணொளி வழங்கும் திட்டம்... காதொலி வழங்கும் திட்டம் என சகல திட்டங்களுக்கும் அனுமதி வழங்குகிறதே... இதன் பின்னிருக்கும் திட்டம் என்ன? இவைதான் நம் முன்னே உள்ள மிக எளிமையான கேள்விகள்.

போதாக்குறைக்கு மருத்துவமனையில் ராஜபக்ஷே பெண்டாட்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேட்டி அளித்த அசின் சேச்சி, ‘‘இலங்கை ஒரு அருமையான நாடு. இங்கு தமிழர்கள் அனைவரையும் அத்தனை சிரத்தையுடன் பார்த்துக் கொள்கிறது ராஜபக்ஷே அரசு. சர்வதேச தரத்தில் இங்கு வைத்திய வசதிகள் தரப்படுகின்றன. தமிழர்களுக்கு ராஜ வைத்தியம் அளிக்கப்படுகிறது. எனவேதான் இங்குள்ள தமிழர்களுக்கு சுதந்திரமோ சுயாட்சியோ முக்கியமில்லை’’ என்று முழங்கியதைக் கேட்டதும் நம் காலில் இருப்பதைக் கழட்டி நம்மை நாமே தலை தலையாய் அடித்துக் கொண்டால் கூட தப்பேயில்லை என்று தோன்றியது.

இதற்கிடையே அறக்கட்டளை புகழ் விவேக் ஓபராயுடன் கொங்குச் சீமைச் சிங்கம் சூர்யா சேர்ந்து நடித்த ‘ரத்த சரித்திரம்’ படம் வெளிவருமா வராதா என பெங்களூர் மிரர் பத்திரிகை கேள்வி கேட்டபோது, ‘‘அதெல்லாம் முடிந்துபோன கதை. விவேக் ஓபராய் செய்தது சரிதான்’’ என தன்னை வளர்த்து விட்ட தமிழக மக்களுக்கும் சேர்த்து சூர்யா வைத்தார் ஒரு ஆப்பு.

எது எதன் பின்னாடி அலைஞ்சா என்ன?

எது எதைக் கல்யாணம் கட்டிகிட்டா என்ன?

எது எதை ஆப்படிச்சா என்ன?

இந்தக் கர்மம் எல்லாம் நமக்குத் தேவையா? என நீங்கள் எரிச்சலின் உச்சத்தல் நின்று கேட்பது புரிகிறது.

என்ன செய்ய? கண்ட கண்ட கருமாந்திரமெல்லாம் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்தின் தலையில் கை வைக்கிறதே... அதன் பின்னணி என்ன... யார் இயங்குகிறார்கள் என்கிற சதிகளையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் சில கழிசடைகளின் கடந்த காலத்தையும் கவனித்துத்தான் தீர வேண்டியிருக்கிறது.

அதன் விளைவே துர்நாற்றம் வீசும் இந்த ஆப்பு வரலாறு.

யானை இளைத்தால், ‘குடும்பம் நடத்தலாம் வா’ என்று எலி கூப்பிடுமாம். அதைப்போல ஆயிற்று தமிழர்களின் நிலை.

ஆனால் கவலையும் கோபமும் பொங்க தமிழீழ மக்களும் தமிழக மக்களும் இவர்களது ஆட்டத்தை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அது சல்மான்கானாய் இருந்தாலும் சரி...

சேச்சி அசினாயிருந்தாலும் சரி...

விவேக் ஓபராயாய் இருந்தாலும் சரி...

அந்த ஐந்துவுக்கு ஒத்தூதும் சூர்யாவாகவே இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும்.

சரியான நேரம் வரும்போது ஒட்டுமொத்தத் தமிழர்களும் சேர்ந்து வைப்பார்கள் ஒரு ஆப்பு...

ஆனால் அது சாதாரண ஆப்பாக இருக்காது.... உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வைக்கும் மெகா ஆப்பாக இருக்கும் அது!

நன்றி, தமிழக அரசியல் வாரஇதழ்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Jul 23, 2010 6:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் அதுதான் பெரிய ஆப்பு! எழுத்தாளர் பாமரன் குமுறல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக