ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ராஜா Today at 12:50 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 12:48 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by rameshnaga Today at 12:04 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 12:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அவன் பெயர் ரவிவர்மன்....

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

அவன் பெயர் ரவிவர்மன்....

Post by Aathira on Wed Jul 28, 2010 12:14 am

First topic message reminder :

அவன் பெயர் ரவிவர்மன்....


வான்மதி கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது ஆள் அரவம் நிறந்த பீச் அல்ல. ஊரை விட்டு வெகு தொலைவில் உள்ள கடற்கரைப் பகுதி. இறக்க வேண்டும் என்று துணிந்து எவரும் அறியாமல் வீட்டை விட்டு
வெளியேறியவள், கால் வேகமாக நடை போட எப்படி வந்தாள் என்றே தெரியாமல், எண்ணி ஐம்பத்தைந்து நிமிடங்களில் ஊரின் எல்லையைத் தாண்டிவிட்டாள். பகல் பொழுதிலேயே இப்பகித்யில் ஆள் நடமாட்டம் இருக்காது. தூரத்தில் ஏதாவது கட்டுமரங்களக் காணலாம். அதுவும் கடலில்தான். இந்தக் கரை கட்டுமரங்கள் கூட ஒதுங்கும் கரையல்ல. அப்படிப்பட்ட இடத்தில் இரவு எட்டு மணிக்கு யார் வரப்போகிறார்கள்? இறப்பதற்கு முன்பு இன்ப நினைவுகளைச் சற்று நேரம் அசை போட எண்ணுகிறது வான்மதியின் மனம். இது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான
மரணப்போராட்டம் அல்ல. இறந்த கால இன்பத்தை எண்ணீத்துடிக்கும்
மனப்போராட்டம். இறப்பைக் கண்டு வான்மதி அஞ்சவில்லை. ஏனெனில் இறப்பில் மட்டுமே வான்மதியால் தன் காதலன் ஆதவனுடன் கலக்க முடியும்.


இந்த வெற்றுக் கடற்கரை போன்றதல்ல அவள் நினைத்து இன்புறத் துடிக்கும் பூம்புகார் கடற்கரை. எத்தனை முறை வந்திருப்பாள் பூம்புகார் கடற்கரைக்கு
அவள் அவனுடன். அவர்கள் பூம்புகார் வரும்போதெல்லாம் சிலப்பதிகாரக் கலைக்கூடம் செல்லாமல் இருக்கமாட்டார்கள். முதல் முறை கலைக்கூடத்தில் நடந்தது; நெஞ்சமதில் ஆழமாகப் பதிந்தது: கலக்கூடத்தில் இளங்கோவடிகள், ஊர் முரசறைதல் போன்ற சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவன், கோவலன் கண்ணகியின் கரங்கள் இணைந்த மணக்கோலச் சிற்பத்தைக் காண்கிறான். காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் என்ற அடியில் எழுதியிருந்த சிலப்பதிகார அடியை வாய்விட்டு படித்த ஆதவன், மணமகன் மணமகளின் கையைப் பிடிப்பதைப் போல அவன்தன் கையால் வான்மதியின் இடக்கையைப் பிடித்து அவள் நிதானித்து விலகுவதற்குள் அவள் சற்றும் எதிர்பாராது, அவள் நெற்றியில் பச் சென்று இதழ் பதித்துவிட்ட அந்த ஈரம் அவள் நெஞ்சில் இன்னும் உலரவில்லை. வான்மதி தன் இரு கைகளையும் இணைத்துக் கொண்டு அந்தக் காட்சியைத் தன் கண்களுக்குள் ஓட்டிக் கொண்டிருந்தாள்.

இயல்பாகவே ஆதவன் தமிழ் ஆர்வமுள்ளவன். அவன் வான்மதியை இந்த இன்ப அதிர்விலிருந்து மீள்ச்செய்ய, தமிழரின் முதல் காப்பியம் என்ற பெருமை பெற்ற சிலப்பதிகாரம் காதல் சுவையில் தொடங்கி அவலச்சுவையில்
முடிவது. இந்த உத்தியாலேயே அது படிப்பவர்களை ஈர்ப்பது என்றெல்லாம் ஒரு சிற்றுரை ஆற்றிக்கொண்டே வந்தான். அடுத்து நிகழ்ந்தது: மாதவியின் கூடல் காட்சி சிற்பத்தைக் கண்டவுடன், கோவலனின் கண்களில் தெரியும் கலை ஆர்வத்தைக் கூறி சிற்பியின் திறத்தைப் பாராட்டிக்கொண்டே ரசனையோடு பார்த்தவன், கோலவலனாக மாறி தன் இதழில் இதழ் பதித்தது, அவளுக்கு நினைவாக வரவில்லை. இப்போது நடந்துகொண்டிருக்கும் நிஜமாக உணர்கிறாள். தன் இதழில் பதிந்த அவன் இதழ்களைத் தன் விரல்களால் ஸ்பரிசித்து ஒரு முத்தம் பதித்தாள் இரு கண்களையும் இருக மூடியபடி. மெய்சிலிர்த்து அவள் நிமிர்ந்தபோது சுகநரகம் விழிகளில் தண்ணீர் கோலமிட்டது.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down


Re: அவன் பெயர் ரவிவர்மன்....

Post by Aathira on Mon Aug 16, 2010 12:59 am

V.Annasamy wrote:
சிவா wrote:பலநாட்கள் படிக்க முயன்று, நேரமின்மையால் குறித்து வைத்து இன்றுதான் படிக்க முடிந்தது!

இலக்கியமும் மருத்துவமும் காதலுடன் கைகோர்த்து மிக அழகான நடையில் சென்று சிறப்பான படைப்பாக என் மனதில் குடிகொண்டுவிட்டது அக்கா!

தங்களின் படைப்புகள் மேலும் மேலும் செழிப்புற்று புகழின் உச்சியைச் தொடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!



ஈகரையில் கருத்துத் தேரோட்டங்கள் தான் என்றும்.
மிக்க நன்றி ஆதிரா


மிக்க நன்றி அண்ணாசாமி..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: அவன் பெயர் ரவிவர்மன்....

Post by Aathira on Sun Sep 12, 2010 10:32 pm

megastar wrote:அருமையான புதினபடைப்பு, முதலில் தயங்கி தயங்கி சென்றகதை உதயாவின் வருகையில் நிமிர்ந்து உட்கார செய்தது. இடையில் அறிவியலின் முன்னேற்றத்தை அழகான நடையில் உணரச் செய்தது. வாடகை தாயின் அவசியத்தை சாமார்த்தியமாக புகுத்தி கதையின் கருத்தை தெளிவாக சொன்னது மட்டுமல்லாது, பெண்களின் இன்றைய பிரச்சனைக்கு தேவையான் தீர்வை சாதரணமாக அதே நேரத்தில் அழுத்தமாக விளக்கிய விதம் சபாஷ்! ரவிவர்மா ஒரு தெளிவான பார்வை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மெகா... மெகா சிறுகதையைப் படித்து அழகான விமர்சனம் தந்துள்ளீர்கள். படிப்படியாக கதையின் போக்கை சொல்லி மெய்சிலிர்க்க வைத்து விட்டது தங்கள் பின்னூட்டம்.. மிக்க நன்றி மெகாஸ்டார். குறைகளைச் சொன்னால் செப்பனிட்டுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.. மீண்டும் நன்றி...மெகா ஸ்டார்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: அவன் பெயர் ரவிவர்மன்....

Post by கலைவேந்தன் on Sun Sep 12, 2010 10:47 pm

சற்றே நீளமெனிலும் தவிர்க்க இயலா கதை நீளம் தான்..!

அறிவியலும் காதலும் தியாகமும் பின்னிப்பிணைந்து அருமையான கதையாக உருவெடுத்திருக்கிறது.

இன்னும் இதுபோன்ற சிறுகதைகளை மேலும் எழுத வாழ்த்து பாராட்டி மகிழ்கிறேன் ஆதிரா...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அவன் பெயர் ரவிவர்மன்....

Post by மஞ்சுபாஷிணி on Mon Sep 13, 2010 6:12 am

இவ்ளோ அழகா கதை எழுதிட்டு நீளம் அது இதுன்னு என்னப்பா ஆதிரா.... அருமையான கதைப்பா..... அன்பு பாராட்டுக்கள் ஆதிரா.....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: அவன் பெயர் ரவிவர்மன்....

Post by புவனா on Mon Sep 13, 2010 9:45 am

நம்பிக்கையான காதலோடு தியாகத்தையும் அறிவியலும் சேர்த்து சொன்னது அருமை அக்கா... ரவிவர்மன் நலமாய் வாழட்டும்...

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: அவன் பெயர் ரவிவர்மன்....

Post by Aathira on Wed Dec 01, 2010 6:42 pm

கலை wrote:சற்றே நீளமெனிலும் தவிர்க்க இயலா கதை நீளம் தான்..!

அறிவியலும் காதலும் தியாகமும் பின்னிப்பிணைந்து அருமையான கதையாக உருவெடுத்திருக்கிறது.

இன்னும் இதுபோன்ற சிறுகதைகளை மேலும் எழுத வாழ்த்து பாராட்டி மகிழ்கிறேன் ஆதிரா...!

மிக்க நன்றி கலை. முயற்சி செய்கிறேன் சிறுகதை பக்கம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum