ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

புதிய சமயங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

ஒரு சந்தேகம்??
 மூர்த்தி

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

View previous topic View next topic Go down

மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by sriramanandaguruji on Wed Aug 04, 2010 11:22 am

ரு
காலத்தில் சினிமாவுக்கு போவது என்பது கிராமங்களில் திருவிழா போலவே
நடந்தேறும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழா மிகவும்
சுவரச்சியமானது, அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் சுகம் தெரியும்.
இப்போது மாதிரி அப்போது எல்லாம் நகரங்களை தவிர கிராமங்களில் சினிமா வெளி
வந்தவுடனயே பார்த்து விட முடியாது. வெளிவந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு
கூட சில கொட்டகைகளில் பிரம்ம பிரயத்துடன் தான் படம் வரும்.
நகரத்திலிருந்து
கிராமத்திற்கு வருபவரோ அல்லது கிராமத்திலிருந்து நகரத்திற்க்கு சென்று
படம் பார்த்தவரோ ஊருக்கு வந்த உடனே கதையை சொல்லி விடுவார். அதில் நடிகர்,
நடிகைகளின் நடிப்பு உடை அலங்காரம், சண்டை, அழகை எல்லாமே படம் பார்த்தவர்
விவரிக்க கேட்பவர்கள் வாய்பிளந்து கொண்டிருப்பார்கள், பக்கத்து ஊரில்
அந்த படம் வந்தவுடன் இதுவரை மனதிற்குள் கற்பனையாக முடங்கி கிடந்ததை
திரையில் காண்பதற்கு இளைய மனதுகள் துடியாய் துடிக்கும். வீட்டில்
இருக்கும் பெரியவர்களிடம் அனுமதி பெறாமல் சினிமா பக்கம் தலை வைக்க
முடியாது. தயங்கி தயங்கி ஆவலை அவர்களிடம் சொன்னால் நெல்லு கதிர் சாயும்
பருவத்தில் இருக்கிறது. வாழை குலைத் தள்ள போகிறது, உரம் வாங்கி போட்டால்
தான் விளைச்சலை நல்லபடியாக பார்க்கலாம். நாலு பேர் சினிமாவுக்கு போனால்
பத்து, முப்பது ரூபாய் செலவாகி விடும். அடுத்தமாதம் பார்த்து கொள்ளலாம்.
இப்போது சும்மாயிரு என்று கடுப்பாக பேசி விடுவார்கள்.

நெல் கதிர் சாயும் வரை, வாழை குலை தள்ளும் வரை, தியேட்டரில் அதே படம்
ஒடிக்கொண்டிருக்குமா? சிவாஜி கனேசனின் நடையழகை சரோஜா தேவியின்
அபிநயத்தை. எம்.ஜி.ஆர்-ன் சண்டை போடும்; திறமையை விரும்பிய போது பார்க்க
முடியாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என விம்மி வெடித்தவர்கள் எத்தனை பேர்,
கோபத்தில் குதித்தவர்கள் எத்தனை பேர், கெஞ்சி கூத்தாடி அப்பா, அம்மாவை
தாஜா செய்து காரியம் கைகூடாமல் கண்ணீர் விட்டு அழதவர்கள் எத்தனை பேர்,
அந்த கதைகளை எடுத்தாலே ஆயிரம் சினிமாவை இன்னும் புதிதாக எடுக்கலாம்.

நான் பிறந்த ஊரில் புதிய படமென்பதை நினைத்து பார்க்கவே முடியாது. ஊர்,
உலகமெல்லாம் ஒடி தேய்ந்து சாயம் போன பிலிம் சுருள்தான் வந்து சேரும்,
ஆனால் அதை பார்ப்பதில் எவ்வளவு சந்தோஷம். எங்கள் தெருவில் சினிமா
பார்க்கும் திருவிழா எப்போதாவது ஒரு மூறைதான் நடக்கும். பத்து பதினைந்து
குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்து கொள்வார்கள்.
இடுக்கி, இடுக்கி உட்கார்ந்தால் கூட பத்து பேருக்கு மேல் அமர முடியாது
ஜீப்பில் குஞ்சும் குறுமானுமாய் முப்பது பேருக்கு மேல் திணிக்கப்படுவோம்.
பிள்ளைகளூக்கு பால் பாட்டில், மாற்றுதுணி, கொறிக்க முறுக்கு என்று
ஏகப்பட்ட அயிட்டகளுடன் பெண்கள் வளையல் ஒடிய இறுக்கைகளில் நெருக்கி தங்களை
அடுக்கி கொள்வார்கள். ஆண்கள் ஜீப்பின் மேல் கூரையிலும் அதன் நீண்ட
முகத்திலும் பின்புறத்திலும் சர்க்கஸ் சாகசம் செய்து கொண்டு தொங்குவார்கள்
அங்கங்கே இருக்கும் சின்ன இடைவெளிகளில் சின்ன பிள்ளைகளான நாங்கள்
சொருகப்பட்டிருபோம் கூட்டமும் இறுக்கமும், வியர்வை நாற்றமும் எங்களுக்கு
ஒன்றும் பெரிதாக தெரியாது, மனமெல்லாம் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயசங்கர் என
கற்பனையில் பறந்து கொண்டிருக்கும்

இப்போது ஒருவர் சினிமா பார்ப்பதற்கே நூறு ரூபாய்க்கு மேல் செலவாகி
விடுகிறது. அப்போது ஜீப் வாடகை, சினிமா கட்டணம், வாங்கி சாப்பிடும் செலவு
உட்பட முப்பது பேருக்கு நூறு ரூபாய் தாண்டாது, ஆனால் அந்த செலவுக்கு கூட
பெருவாரியான மக்களிடம் பணம் இருக்காது. பனைமரம் ஏறி பணைவெல்லம் காய்ச்சி,
பீடி சுத்தி, கூடை பின்னி சிறிது சிறிதாக சேர்க்கும் பணம் இரண்டரை மணி நேர
சந்தோஷத்திற்காக செலவு செய்வது அவர்களால் எப்படி முடியும். மக்கள்
இவ்வளவு கஷ்டப்பட்டு தான் தியேட்டருக்கு வருகிறார்கள் அவர்களிடமிருந்து
வாங்கும் பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டுமென அப்போதைய தயாரிப்பாளர்கள்
இயங்குநர்கள், கலைஞர்கள் எல்லோரும் நினைத்தனர், அதனால் தான் அவர்களால்
தரமான திரைப்படங்களை தர முடிந்தது.

இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது பணத்தை கொட்டி தர வேண்டியது மக்களின்
கடமை கதையும் வேண்டாம், கத்திக்காயும் வேண்டாம் கதாநாயகனுக்கு எட்டு
வசனத்தையும், நான்கு பாடலையும் கொடுப்போம், தேவையிருக்கிறதோ, இல்லையோ
நரம்புகளை முறுக்கேற்றும் சண்டை காட்சிகளை திணிப்போம்,
துவக்கத்திலிருந்து முடியும் வரை கதாநாயகியை அரை குறை ஆடையில் நடமாட
விடுவோம், நம் கல்லா பெட்டி நிரம்பினால் சரி என்ற எண்ணம்
சினிமாகாரர்களுக்கு தலைக்கு மேல் ஏறிவிட்டது, திரைத்துறையினர் என்றாலே
சமுதாய அக்கறையில்லாதவர்கள், அரசியல்வாதிகளுக்கும் போதை மருந்து
வியாபாகளுக்கும், இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என்று
நினைக்க வேண்டிய காலம் வந்து கொண்டே இருக்கிறது.

பிரம்மாண்டம் என்றே போர்வையில் எடுக்கப்படும் திரைபடங்கள் எல்லாம்
கவர்ச்சியையும், வன்முறையை மட்டுமே பிரதானபடுத்துவதாகயிருக்கிறது,
திரையில் வரும் காட்சியில் உண்மை எது, பொய் எது என்று தெரியாமல் நடுத்தர
தமிழனும், இளைய தமிழனும் தடுமாறி போய் தெருவில் நிற்கிறார்கள்.
கொள்ளையடிப்பதில்
எத்தனை வகையிருக்கிறது தமிழ் சினிமாவை பார், நவீன முறையில் எப்படி எல்லாம்
மக்களை சுரண்டலாம் தமிழ் சினிமாவை பார். சுரண்டிய பணத்திற்கு வரிகட்டாமல்
தப்பிக்க என்னென்ன வழிகள் உள்ளன தமிழ்சினிமாவை பார். குறுக்கு வழியில்
பதவியை பிடிக்க வேண்டுமா?தமிழ் சினிமாவை பார்.

.
பருவம் அரும்பும் முன்னே காதல் கடிதம் எழுத வேண்டுமா? தமிழ் சினிமாவை
பார். காதலனை அல்லது காதலியை அடிக்கடி மாற்றி கொள்ள வழி தெரியவில்லையா?
தமிழ்சினிமாவை பார். பான்பார்க், ஜர்தா, இன்னும் என்னென்ன புகையிலை
அயிட்டங்கள் உண்டோ அத்தனையும் தெரிந்து கொள்ள வேண்டுமா? தமிழ் சினிமாவை
பார். குடித்துவிட்டு நடுரோட்டில் கலாட்டா செய்யும் ரகசியம்
தெரியவில்லையா? தமிழ்சினிமாவை பார். வெடிகுண்டுகள் தயாக்கும்
தொழில்நுட்பம் தெரிய வேண்டுமா? தமிழ் சினிமாவை பார். எங்கெங்கு குண்டு
வைத்தால் கொத்தாக மக்கள் சாவார்கள் என்று தெரியாமல் விழிக்கிறாயா?
தமிழ்சினிமாவை பார். ஆதரமே இல்லாமல் கொலை செய்ய வேண்டுமா? செய்த கொலையை
அடையாளமே இல்லாமல் மறைக்க வேண்டுமா? கொலை செய்வதற்கு வெட்டு, குத்து தவிற
நவீன முறைகள் எதாவது வேண்டுமா? கவலையே வேண்டாம் தமிழ்சினிமா ஆயிரம்
வழிகளை கற்பிக்க தயாராக இருக்கிறது. ஆடைகளை குறைத்தால் மட்டும்; போதுமா?
அங்கங்களின் கவர்ச்சியை கடைதெருவுக்கு கொண்டு வர வழி தெரியவில்லையா?
என்னென்ன ரீதியில் பாலியல் பலத்காரம் செய்யலாம் என்று நினைத்து குழம்பி
போய் கிடக்கிறாயா? ஒரு படம், ஒரே ஒரு படம் தமிழ் படம் போதும்,
உலகத்திலுள்ள அனைத்து வக்கிரங்களையும் தெள்ளத்தெளிவாக கற்று கொள்ளலாம்.

சினிமா ஊடகம் என்பது மிக சக்திவாய்ந்த கருவியாகும். ஆயிரம் புத்தகங்களில்
எழுத வேண்டிய விஷயத்தை, ஆயிரம் மேடை போட்டு பேச வேண்டிய விஷயத்தை இரண்டே
காட்சிகளில் மக்கள் மனதிற்குள் ஆழ பதிய வைத்து விடலாம் சுகந்திர தாகத்தை
வளர்க்க விரும்பியது சினிமா. சமதாயத்தில் உள்ள வறுமை கொடுமையை ஏழ்மை
நாற்றத்தை மக்களுக்கு சொல்லி விழிப்படய செய்தது சினிமா. ஜாதியின்
பிடிக்குள் அகப்பட்டு அடிமைப்பட்டு, பலமற்று கிடந்த அப்பாவி மனிதர்களை
கூட்டணியாக சேர்த்து உறிமைக்கு ஒங்கி குரல் கொடுக்க செய்தது சினிமா,
அத்தகைய அற்புதமான சாதனம் இன்று அற்பர்களின் கைக்குள் அகப்பட்டு விஷ
விதைகளை நாடெங்கும் தூவி கொண்டிருக்கிறது. தான் உண்ணுவது விஷ மென்பது
தெரியாமலே இந்த விஷம் தன்னையும் தனது தலைமுறையும் சுவடு கூட இல்லாமல்
அழித்து விட போகிறது என்பது அறியாமல் மக்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள்.

ஆன்மிகம், மதம் என்பவையெல்லாம் மக்களின் அறிவை மழங்கடித்து, கற்பனையான
மாயா உலகில் சஞ்சரிக்க செய்கிறது. எனவே மதம் என்னும் அபினை ஒழித்து கட்ட
வேண்டும் என்று காரல்மார்க்ஸ் சொன்னார். அவர் வாழ்ந்த காலத்தில் மதம்
என்னும் கொடிய அரக்கன் தான்மக்களின் உழைப்பையும், உயர்வையும் உண்டு
கொளுத்துக் கொண்டிருந்தான். உலகம் முழவதும் மதமும் மதவாதிகளும் அன்று
செய்த நாசகார வேலையை இன்று சினிமாவும், சினிமாகார்களும் செய்து
கொண்டிருக்கிறார்கள், ஆன்மிக போர்வையை போர்த்திய மதவாதிகள் போல்
கலைப்போர்வையை இவர்கள் போர்த்தி இருக்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்
.
நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி வேலை வெட்டி எதுக்கும் போகாமல்,
ஊர் சுற்றி கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் அனைவருமே தற்கால திரைப்பட
நடிகர்களின் ரசிகர் கூட்டம் தான். வீதியில் நின்று வம்பளப்பது குடித்து
விட்டு கலாட்டா செய்வது, பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வது இன்னும் பிற
முக்கிய பணிகளே இவர்களின் அன்றாட வாழ்க்கை ஆகும். தங்களது தலைவர்களின்
படம் ரீலிஸ் ஆகுமென்று சுவற்றில் எழதுவது, கட் அவுட் கட்டுவது பாலாபிஷேகம்
செய்வது, வெள்ளி திரைக்கு தீபாராதனை காட்டுவது என புதிய அவதாரம்
எடுப்பார்கள். பொது சொத்துக்களை அதிகமாக பாதிப்படைய செய்வது யாரோ அவர்களே
மிகச் சிறந்த ரசிகர்கள் என்று பாராட்டி சம்பந்தப்பட்ட நடிகர்கள் பட்டயம்
கொடுப்பார்கள்.

இவ்வளவு பெரிய வெட்டி கும்பல் தனக்கு பின்னால் இருப்பதை அறிந்து கொள்ளும்
நடிகர்கள் கோடம்பாக்கத்தை விட்டுவிட்டு கோட்டையை பிடிக்க களமிறங்கி
விடுவார்கள். சினிமாவில் எழுதி தரும் வசனத்தை பேசி மக்களை மயக்குவது போல்
மேடையில் பேசி நாற்காலியில் உட்கார்ந்து விடலாம் என்ற கனா காண்கிறார்கள்.
1967-முதல்
இன்று வரை தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே எதாவது ஒரு
வகையில் சினிமாவை தொழிலாக கொண்டவர்கள் தான். சினிமாகாரர்களால் மட்டும்
தான் சின்ன விஸயத்தையும் மாபெரும் தியாகமாக சித்தத்து மக்களை மூளைச்சலவை
செய்து விட முடிகிறது. இதனால் உண்மையான நிர்வாகிகள், திறமைசாலிகள்
கவர்ச்சி புயலில் கரைந்து போய் ஒட்டு மொத்த தமிழ் நாடே சினிமா கொட்டகையாக
மாறிக் கிடக்கிறது.

இப்படி நான் மொத்தமாக குற்றம் சாட்டுவதினால் நல்ல, சினிமா எதுவும் என்
கண்ணில் படவில்லையா? நல்ல சினிமா காரர்கள் யாரையும் நான்
பார்த்ததில்லையா? என்று கேட்க தோன்றும் இன்று கூட பல நல்ல சினிமாக்கள்
திரைக்கு வருகின்றது. உதாரணத்திற்கு அப்படிப்பட்ட படம் ஒன்றை
சொல்வதுயென்றால் மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தை சொல்லாம். ஒரு
குடும்பத்தில் இயல்பாக உருவாகும் பிரச்சனைகளை எந்த ஆயுதத்தை கொண்டு
தகர்த்து எறியலாம் என்பதை மிக யதார்த்தமாக சொல்லி இருப்பார் இயங்குநர்
ஆனால் அப்படிப்பட்ட சிறந்த படம் எத்தனை பேரால் பார்க்கப்பட்டது. அது
அடைந்த வெற்றி என்ன? ஒன்றும் பிரம்மாதமாக சொல்வதற்கில்லை.

இப்படி நான் சொன்னவுடன் பார்த்தீர்களா நல்ல படம் எடுத்தால் பார்ப்பதற்கு
நாட்டில் ஆள் இல்லை. படத்தை ஒட்டும் தியேட்டர் முதலாளி தலையில் மட்டுமல்ல
வயிற்றிலும் துண்டை போட்டு கொள்ள வேண்டியது தான். சினிமாகாரரும் மனிதன்
தானே, அவனுக்கம் குடும்பம் இருக்கிறது. பசியெடுக்க வயிறு இருக்கிறது.
மக்கள் விரும்புவதை எடுத்து நாலு காசு சம்பாதித்தால் என்ன தவறு என்று
கேட்க தோன்றும்.

இந்த
கேள்வியில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் உண்மையென்பது இந்த
கேள்வியையும் தாண்டி உள்ளே மறைந்திருக்கிறது அந்தகால சினிமாவிலும்
கவர்ச்சியிருந்தது, உண்மையை பட்டவர்த்தனமாக சொல்வதாயிருந்தால் எம்.ஜி.ஆர்
படங்களில் அந்த கவர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கும். ஆனால் அது முகம்
சுளிக்கும் அளவிற்கு அசிங்கமாக இருக்காது. அழகுணர்ச்சியை தூண்டுவதாகவே
அந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். உண்மையான கிரோயிசம் என்பது
கதாநாயகியை துரத்துவதிலோ சண்டை போடுவதிலோ இல்லை. ஒழக்கமாக நடந்து
கொள்வது, சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் அர்ப்பணிப்போடு உழைப்பதில்
இருக்கிறது என சிவாஜி, எம்.ஜ.ஆர், கால படங்கள் மக்களுக்கு பாடம் நடத்தியது.ஒருவனை வலிய குடிக்க வைத்து விட்டு அவனுக்கு குடிகாரன் என பட்டம்
சூட்டுவது போல கீழ்த்தரமான படங்களை தொடர்ச்சியாக எடுத்து விட்டு மக்களின்
ரசனை உணர்வை ஆபாசமாக்கி விட்டு நாங்கள் என்ன செய்வது நிலைமை
அப்படியிருக்கிறது என பம்மாத்து காட்டுவது சுத்த அயோக்கியத்தனம். நான்
வேண்டுவது ஒன்றே ஒன்று தான். மக்களிடம் இருந்து வாங்கும் பணத்திற்க்க
மயக்கமருந்துகளை கொடுக்காதீர்கள். மயக்கம் தீர்க்கும் மருந்துகளை
கொடுங்கள் என்பது தான்.

Read more
avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by கோவை ராம் on Wed Aug 04, 2010 11:56 am

மக்கள் எவ்வழி சினிமாகாரர்கலும் அவ்வழி.60,70,80 கலில் மொத்த குடும்பமும் சினிமா பார்த்தது.இதில் பெண்கள் மிக அதிகம்.இப்போது குடும்ப பெண்கள் சினிமா செல்வது கிட்டதட்ட இல்லை.அவர்கள் தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டனர்.இப்பொது சினிமா பார்க்க வருபவர்கல் 18 - 30 வயதுக்கு உட்பட்ட ஆண்கலும் பெண்கலும் எனவே அதற்கு தகுந்த படங்கள் வெளிவருகின்றன.சினிமாவின் மிக முக்கிய அம்சமே கவர்சிதான்.அப்பொது எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெயலலிதா போன்ற கவர்சிகலுக்குதான் படம் ஓடியது.குப்பனும் கருபாயியும் நடித்தால் படம் ஓடாது

என் வாழ்க்கையில் நடப்பதை பார்க்க நான் சினிமா செல்ல வேன்டிய அவசியமில்லை.என் வாழ்க்கையில் நடக்காத ,ஆனால் நான் நடக்க விருப்புகிர நிகழ்வுகலை பார்க்கதான் சினிமா போகிறேன்
குறைசொல்லவேண்டியவ்ர்கல் மக்கள்தான்.

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 04, 2010 12:01 pm

அருமையான பதிவுavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by நவீன் on Wed Aug 04, 2010 12:21 pm

அருமை
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

மனசாச்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by sriramanandaguruji on Wed Aug 04, 2010 12:58 pm

ராம் உங்கள் கருத்துக்கு நன்றி

avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by sriramanandaguruji on Wed Aug 04, 2010 1:06 pm

@பிளேடு பக்கிரி wrote:அருமையான பதிவு

பிளேடு பக்கிரி உங்கள் கருத்துக்கு நன்றி
avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by sriramanandaguruji on Wed Aug 04, 2010 1:08 pm

நவீன்

உங்கள் கருத்துக்கு நன்றி
avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by அருண் on Wed Aug 04, 2010 1:19 pm

ஒரு படம், ஒரே ஒரு படம் தமிழ் படம் போதும்,
உலகத்திலுள்ள அனைத்து வக்கிரங்களையும் தெள்ளத்தெளிவாக கற்று கொள்ளலாம்...........................
இன்றைய காலகட்டத்தின் படி இது உண்மைதான் ஆனால் மக்கள் இதை
ஏற்றுகொள்கிறார்கள்....மக்கள் புரகணிதல் மட்டும்தான் இதனை சரி செய்ய
முடியும்.........
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by sriramanandaguruji on Wed Aug 04, 2010 1:23 pm

இன்றைய காலகட்டத்தின் படி இது உண்மைதான் ஆனால் மக்கள் இதை
ஏற்றுகொள்கிறார்கள்....மக்கள் புரகணிதல் மட்டும்தான் இதனை சரி செய்ய
முடியும்........

arun_vzp

உங்கள் கருத்துக்கு நன்றி
avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by அன்பு தளபதி on Wed Aug 04, 2010 1:46 pm

சினிமா மட்டும் இல்லை தொலைகாட்சி இதை விட பெரிய அளவில் நம் மீது தாக்குதல் நடத்துகிறது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by sriramanandaguruji on Wed Aug 04, 2010 1:53 pm

maniajith007 wrote:சினிமா மட்டும் இல்லை தொலைகாட்சி இதை விட பெரிய அளவில் நம் மீது தாக்குதல் நடத்துகிறது

maniajith

உங்கள் கருத்துக்கு நன்றி
avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by sriramanandaguruji on Wed Aug 04, 2010 1:55 pm

maniajith007 wrote:சினிமா மட்டும் இல்லை தொலைகாட்சி இதை விட பெரிய அளவில் நம் மீது தாக்குதல் நடத்துகிறது

maniajith

உங்கள் கருத்துக்கு நன்றி
avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by உதயசுதா on Wed Aug 04, 2010 2:08 pm

உங்களின் அனைத்து கருத்துகளும் இன்றைய நடைமுறையில் நடக்கும் அவலங்களை சொல்வதாக இருக்கிறது.அருமை,அருமை,அருமை.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

» மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by sriramanandaguruji on Wed Aug 04, 2010 2:22 pm

உதயசுதா
உங்கள் கருத்துக்கு நன்றி
avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

போதை மருந்தாகும் சினிமா

Post by sriramanandaguruji on Wed Aug 04, 2010 6:54 pm

@sriramanandaguruji wrote: ரு
காலத்தில் சினிமாவுக்கு போவது என்பது கிராமங்களில் திருவிழா போலவே
நடந்தேறும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழா மிகவும்
சுவரச்சியமானது, அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் சுகம் தெரியும்.
இப்போது மாதிரி அப்போது எல்லாம் நகரங்களை தவிர கிராமங்களில் சினிமா வெளி
வந்தவுடனயே பார்த்து விட முடியாது. வெளிவந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு
கூட சில கொட்டகைகளில் பிரம்ம பிரயத்துடன் தான் படம் வரும்.
நகரத்திலிருந்து
கிராமத்திற்கு வருபவரோ அல்லது கிராமத்திலிருந்து நகரத்திற்க்கு சென்று
படம் பார்த்தவரோ ஊருக்கு வந்த உடனே கதையை சொல்லி விடுவார். அதில் நடிகர்,
நடிகைகளின் நடிப்பு உடை அலங்காரம், சண்டை, அழகை எல்லாமே படம் பார்த்தவர்
விவரிக்க கேட்பவர்கள் வாய்பிளந்து கொண்டிருப்பார்கள், பக்கத்து ஊரில்
அந்த படம் வந்தவுடன் இதுவரை மனதிற்குள் கற்பனையாக முடங்கி கிடந்ததை
திரையில் காண்பதற்கு இளைய மனதுகள் துடியாய் துடிக்கும். வீட்டில்
இருக்கும் பெரியவர்களிடம் அனுமதி பெறாமல் சினிமா பக்கம் தலை வைக்க
முடியாது. தயங்கி தயங்கி ஆவலை அவர்களிடம் சொன்னால் நெல்லு கதிர் சாயும்
பருவத்தில் இருக்கிறது. வாழை குலைத் தள்ள போகிறது, உரம் வாங்கி போட்டால்
தான் விளைச்சலை நல்லபடியாக பார்க்கலாம். நாலு பேர் சினிமாவுக்கு போனால்
பத்து, முப்பது ரூபாய் செலவாகி விடும். அடுத்தமாதம் பார்த்து கொள்ளலாம்.
இப்போது சும்மாயிரு என்று கடுப்பாக பேசி விடுவார்கள்.

நெல் கதிர் சாயும் வரை, வாழை குலை தள்ளும் வரை, தியேட்டரில் அதே படம்
ஒடிக்கொண்டிருக்குமா? சிவாஜி கனேசனின் நடையழகை சரோஜா தேவியின்
அபிநயத்தை. எம்.ஜி.ஆர்-ன் சண்டை போடும்; திறமையை விரும்பிய போது பார்க்க
முடியாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என விம்மி வெடித்தவர்கள் எத்தனை பேர்,
கோபத்தில் குதித்தவர்கள் எத்தனை பேர், கெஞ்சி கூத்தாடி அப்பா, அம்மாவை
தாஜா செய்து காரியம் கைகூடாமல் கண்ணீர் விட்டு அழதவர்கள் எத்தனை பேர்,
அந்த கதைகளை எடுத்தாலே ஆயிரம் சினிமாவை இன்னும் புதிதாக எடுக்கலாம்.

நான் பிறந்த ஊரில் புதிய படமென்பதை நினைத்து பார்க்கவே முடியாது. ஊர்,
உலகமெல்லாம் ஒடி தேய்ந்து சாயம் போன பிலிம் சுருள்தான் வந்து சேரும்,
ஆனால் அதை பார்ப்பதில் எவ்வளவு சந்தோஷம். எங்கள் தெருவில் சினிமா
பார்க்கும் திருவிழா எப்போதாவது ஒரு மூறைதான் நடக்கும். பத்து பதினைந்து
குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்து கொள்வார்கள்.
இடுக்கி, இடுக்கி உட்கார்ந்தால் கூட பத்து பேருக்கு மேல் அமர முடியாது
ஜீப்பில் குஞ்சும் குறுமானுமாய் முப்பது பேருக்கு மேல் திணிக்கப்படுவோம்.
பிள்ளைகளூக்கு பால் பாட்டில், மாற்றுதுணி, கொறிக்க முறுக்கு என்று
ஏகப்பட்ட அயிட்டகளுடன் பெண்கள் வளையல் ஒடிய இறுக்கைகளில் நெருக்கி தங்களை
அடுக்கி கொள்வார்கள். ஆண்கள் ஜீப்பின் மேல் கூரையிலும் அதன் நீண்ட
முகத்திலும் பின்புறத்திலும் சர்க்கஸ் சாகசம் செய்து கொண்டு தொங்குவார்கள்
அங்கங்கே இருக்கும் சின்ன இடைவெளிகளில் சின்ன பிள்ளைகளான நாங்கள்
சொருகப்பட்டிருபோம் கூட்டமும் இறுக்கமும், வியர்வை நாற்றமும் எங்களுக்கு
ஒன்றும் பெரிதாக தெரியாது, மனமெல்லாம் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயசங்கர் என
கற்பனையில் பறந்து கொண்டிருக்கும்

இப்போது ஒருவர் சினிமா பார்ப்பதற்கே நூறு ரூபாய்க்கு மேல் செலவாகி
விடுகிறது. அப்போது ஜீப் வாடகை, சினிமா கட்டணம், வாங்கி சாப்பிடும் செலவு
உட்பட முப்பது பேருக்கு நூறு ரூபாய் தாண்டாது, ஆனால் அந்த செலவுக்கு கூட
பெருவாரியான மக்களிடம் பணம் இருக்காது. பனைமரம் ஏறி பணைவெல்லம் காய்ச்சி,
பீடி சுத்தி, கூடை பின்னி சிறிது சிறிதாக சேர்க்கும் பணம் இரண்டரை மணி நேர
சந்தோஷத்திற்காக செலவு செய்வது அவர்களால் எப்படி முடியும். மக்கள்
இவ்வளவு கஷ்டப்பட்டு தான் தியேட்டருக்கு வருகிறார்கள் அவர்களிடமிருந்து
வாங்கும் பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டுமென அப்போதைய தயாரிப்பாளர்கள்
இயங்குநர்கள், கலைஞர்கள் எல்லோரும் நினைத்தனர், அதனால் தான் அவர்களால்
தரமான திரைப்படங்களை தர முடிந்தது.

இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது பணத்தை கொட்டி தர வேண்டியது மக்களின்
கடமை கதையும் வேண்டாம், கத்திக்காயும் வேண்டாம் கதாநாயகனுக்கு எட்டு
வசனத்தையும், நான்கு பாடலையும் கொடுப்போம், தேவையிருக்கிறதோ, இல்லையோ
நரம்புகளை முறுக்கேற்றும் சண்டை காட்சிகளை திணிப்போம்,
துவக்கத்திலிருந்து முடியும் வரை கதாநாயகியை அரை குறை ஆடையில் நடமாட
விடுவோம், நம் கல்லா பெட்டி நிரம்பினால் சரி என்ற எண்ணம்
சினிமாகாரர்களுக்கு தலைக்கு மேல் ஏறிவிட்டது, திரைத்துறையினர் என்றாலே
சமுதாய அக்கறையில்லாதவர்கள், அரசியல்வாதிகளுக்கும் போதை மருந்து
வியாபாகளுக்கும், இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என்று
நினைக்க வேண்டிய காலம் வந்து கொண்டே இருக்கிறது.

பிரம்மாண்டம் என்றே போர்வையில் எடுக்கப்படும் திரைபடங்கள் எல்லாம்
கவர்ச்சியையும், வன்முறையை மட்டுமே பிரதானபடுத்துவதாகயிருக்கிறது,
திரையில் வரும் காட்சியில் உண்மை எது, பொய் எது என்று தெரியாமல் நடுத்தர
தமிழனும், இளைய தமிழனும் தடுமாறி போய் தெருவில் நிற்கிறார்கள்.
கொள்ளையடிப்பதில்
எத்தனை வகையிருக்கிறது தமிழ் சினிமாவை பார், நவீன முறையில் எப்படி எல்லாம்
மக்களை சுரண்டலாம் தமிழ் சினிமாவை பார். சுரண்டிய பணத்திற்கு வரிகட்டாமல்
தப்பிக்க என்னென்ன வழிகள் உள்ளன தமிழ்சினிமாவை பார். குறுக்கு வழியில்
பதவியை பிடிக்க வேண்டுமா?தமிழ் சினிமாவை பார்.

.
பருவம் அரும்பும் முன்னே காதல் கடிதம் எழுத வேண்டுமா? தமிழ் சினிமாவை
பார். காதலனை அல்லது காதலியை அடிக்கடி மாற்றி கொள்ள வழி தெரியவில்லையா?
தமிழ்சினிமாவை பார். பான்பார்க், ஜர்தா, இன்னும் என்னென்ன புகையிலை
அயிட்டங்கள் உண்டோ அத்தனையும் தெரிந்து கொள்ள வேண்டுமா? தமிழ் சினிமாவை
பார். குடித்துவிட்டு நடுரோட்டில் கலாட்டா செய்யும் ரகசியம்
தெரியவில்லையா? தமிழ்சினிமாவை பார். வெடிகுண்டுகள் தயாக்கும்
தொழில்நுட்பம் தெரிய வேண்டுமா? தமிழ் சினிமாவை பார். எங்கெங்கு குண்டு
வைத்தால் கொத்தாக மக்கள் சாவார்கள் என்று தெரியாமல் விழிக்கிறாயா?
தமிழ்சினிமாவை பார். ஆதரமே இல்லாமல் கொலை செய்ய வேண்டுமா? செய்த கொலையை
அடையாளமே இல்லாமல் மறைக்க வேண்டுமா? கொலை செய்வதற்கு வெட்டு, குத்து தவிற
நவீன முறைகள் எதாவது வேண்டுமா? கவலையே வேண்டாம் தமிழ்சினிமா ஆயிரம்
வழிகளை கற்பிக்க தயாராக இருக்கிறது. ஆடைகளை குறைத்தால் மட்டும்; போதுமா?
அங்கங்களின் கவர்ச்சியை கடைதெருவுக்கு கொண்டு வர வழி தெரியவில்லையா?
என்னென்ன ரீதியில் பாலியல் பலத்காரம் செய்யலாம் என்று நினைத்து குழம்பி
போய் கிடக்கிறாயா? ஒரு படம், ஒரே ஒரு படம் தமிழ் படம் போதும்,
உலகத்திலுள்ள அனைத்து வக்கிரங்களையும் தெள்ளத்தெளிவாக கற்று கொள்ளலாம்.

சினிமா ஊடகம் என்பது மிக சக்திவாய்ந்த கருவியாகும். ஆயிரம் புத்தகங்களில்
எழுத வேண்டிய விஷயத்தை, ஆயிரம் மேடை போட்டு பேச வேண்டிய விஷயத்தை இரண்டே
காட்சிகளில் மக்கள் மனதிற்குள் ஆழ பதிய வைத்து விடலாம் சுகந்திர தாகத்தை
வளர்க்க விரும்பியது சினிமா. சமதாயத்தில் உள்ள வறுமை கொடுமையை ஏழ்மை
நாற்றத்தை மக்களுக்கு சொல்லி விழிப்படய செய்தது சினிமா. ஜாதியின்
பிடிக்குள் அகப்பட்டு அடிமைப்பட்டு, பலமற்று கிடந்த அப்பாவி மனிதர்களை
கூட்டணியாக சேர்த்து உறிமைக்கு ஒங்கி குரல் கொடுக்க செய்தது சினிமா,
அத்தகைய அற்புதமான சாதனம் இன்று அற்பர்களின் கைக்குள் அகப்பட்டு விஷ
விதைகளை நாடெங்கும் தூவி கொண்டிருக்கிறது. தான் உண்ணுவது விஷ மென்பது
தெரியாமலே இந்த விஷம் தன்னையும் தனது தலைமுறையும் சுவடு கூட இல்லாமல்
அழித்து விட போகிறது என்பது அறியாமல் மக்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள்.

ஆன்மிகம், மதம் என்பவையெல்லாம் மக்களின் அறிவை மழங்கடித்து, கற்பனையான
மாயா உலகில் சஞ்சரிக்க செய்கிறது. எனவே மதம் என்னும் அபினை ஒழித்து கட்ட
வேண்டும் என்று காரல்மார்க்ஸ் சொன்னார். அவர் வாழ்ந்த காலத்தில் மதம்
என்னும் கொடிய அரக்கன் தான்மக்களின் உழைப்பையும், உயர்வையும் உண்டு
கொளுத்துக் கொண்டிருந்தான். உலகம் முழவதும் மதமும் மதவாதிகளும் அன்று
செய்த நாசகார வேலையை இன்று சினிமாவும், சினிமாகார்களும் செய்து
கொண்டிருக்கிறார்கள், ஆன்மிக போர்வையை போர்த்திய மதவாதிகள் போல்
கலைப்போர்வையை இவர்கள் போர்த்தி இருக்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்
.
நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி வேலை வெட்டி எதுக்கும் போகாமல்,
ஊர் சுற்றி கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் அனைவருமே தற்கால திரைப்பட
நடிகர்களின் ரசிகர் கூட்டம் தான். வீதியில் நின்று வம்பளப்பது குடித்து
விட்டு கலாட்டா செய்வது, பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வது இன்னும் பிற
முக்கிய பணிகளே இவர்களின் அன்றாட வாழ்க்கை ஆகும். தங்களது தலைவர்களின்
படம் ரீலிஸ் ஆகுமென்று சுவற்றில் எழதுவது, கட் அவுட் கட்டுவது பாலாபிஷேகம்
செய்வது, வெள்ளி திரைக்கு தீபாராதனை காட்டுவது என புதிய அவதாரம்
எடுப்பார்கள். பொது சொத்துக்களை அதிகமாக பாதிப்படைய செய்வது யாரோ அவர்களே
மிகச் சிறந்த ரசிகர்கள் என்று பாராட்டி சம்பந்தப்பட்ட நடிகர்கள் பட்டயம்
கொடுப்பார்கள்.

இவ்வளவு பெரிய வெட்டி கும்பல் தனக்கு பின்னால் இருப்பதை அறிந்து கொள்ளும்
நடிகர்கள் கோடம்பாக்கத்தை விட்டுவிட்டு கோட்டையை பிடிக்க களமிறங்கி
விடுவார்கள். சினிமாவில் எழுதி தரும் வசனத்தை பேசி மக்களை மயக்குவது போல்
மேடையில் பேசி நாற்காலியில் உட்கார்ந்து விடலாம் என்ற கனா காண்கிறார்கள்.
1967-முதல்
இன்று வரை தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே எதாவது ஒரு
வகையில் சினிமாவை தொழிலாக கொண்டவர்கள் தான். சினிமாகாரர்களால் மட்டும்
தான் சின்ன விஸயத்தையும் மாபெரும் தியாகமாக சித்தத்து மக்களை மூளைச்சலவை
செய்து விட முடிகிறது. இதனால் உண்மையான நிர்வாகிகள், திறமைசாலிகள்
கவர்ச்சி புயலில் கரைந்து போய் ஒட்டு மொத்த தமிழ் நாடே சினிமா கொட்டகையாக
மாறிக் கிடக்கிறது.

இப்படி நான் மொத்தமாக குற்றம் சாட்டுவதினால் நல்ல, சினிமா எதுவும் என்
கண்ணில் படவில்லையா? நல்ல சினிமா காரர்கள் யாரையும் நான்
பார்த்ததில்லையா? என்று கேட்க தோன்றும் இன்று கூட பல நல்ல சினிமாக்கள்
திரைக்கு வருகின்றது. உதாரணத்திற்கு அப்படிப்பட்ட படம் ஒன்றை
சொல்வதுயென்றால் மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தை சொல்லாம். ஒரு
குடும்பத்தில் இயல்பாக உருவாகும் பிரச்சனைகளை எந்த ஆயுதத்தை கொண்டு
தகர்த்து எறியலாம் என்பதை மிக யதார்த்தமாக சொல்லி இருப்பார் இயங்குநர்
ஆனால் அப்படிப்பட்ட சிறந்த படம் எத்தனை பேரால் பார்க்கப்பட்டது. அது
அடைந்த வெற்றி என்ன? ஒன்றும் பிரம்மாதமாக சொல்வதற்கில்லை.

இப்படி நான் சொன்னவுடன் பார்த்தீர்களா நல்ல படம் எடுத்தால் பார்ப்பதற்கு
நாட்டில் ஆள் இல்லை. படத்தை ஒட்டும் தியேட்டர் முதலாளி தலையில் மட்டுமல்ல
வயிற்றிலும் துண்டை போட்டு கொள்ள வேண்டியது தான். சினிமாகாரரும் மனிதன்
தானே, அவனுக்கம் குடும்பம் இருக்கிறது. பசியெடுக்க வயிறு இருக்கிறது.
மக்கள் விரும்புவதை எடுத்து நாலு காசு சம்பாதித்தால் என்ன தவறு என்று
கேட்க தோன்றும்.

இந்த
கேள்வியில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் உண்மையென்பது இந்த
கேள்வியையும் தாண்டி உள்ளே மறைந்திருக்கிறது அந்தகால சினிமாவிலும்
கவர்ச்சியிருந்தது, உண்மையை பட்டவர்த்தனமாக சொல்வதாயிருந்தால் எம்.ஜி.ஆர்
படங்களில் அந்த கவர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கும். ஆனால் அது முகம்
சுளிக்கும் அளவிற்கு அசிங்கமாக இருக்காது. அழகுணர்ச்சியை தூண்டுவதாகவே
அந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். உண்மையான கிரோயிசம் என்பது
கதாநாயகியை துரத்துவதிலோ சண்டை போடுவதிலோ இல்லை. ஒழக்கமாக நடந்து
கொள்வது, சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் அர்ப்பணிப்போடு உழைப்பதில்
இருக்கிறது என சிவாஜி, எம்.ஜ.ஆர், கால படங்கள் மக்களுக்கு பாடம் நடத்தியது.ஒருவனை வலிய குடிக்க வைத்து விட்டு அவனுக்கு குடிகாரன் என பட்டம்
சூட்டுவது போல கீழ்த்தரமான படங்களை தொடர்ச்சியாக எடுத்து விட்டு மக்களின்
ரசனை உணர்வை ஆபாசமாக்கி விட்டு நாங்கள் என்ன செய்வது நிலைமை
அப்படியிருக்கிறது என பம்மாத்து காட்டுவது சுத்த அயோக்கியத்தனம். நான்
வேண்டுவது ஒன்றே ஒன்று தான். மக்களிடம் இருந்து வாங்கும் பணத்திற்க்க
மயக்கமருந்துகளை கொடுக்காதீர்கள். மயக்கம் தீர்க்கும் மருந்துகளை
கொடுங்கள் என்பது தான்.

Read more
avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: மனசாட்சி இல்லாத சினிமாகாரர்கள் பரபரப்பு தகவல்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum