Latest topics
» வில்லியம் சேக்ஷ்மியர் இறந்த தினம்: ஏப்.23- 1616
by சிவா Today at 12:48 am

» ஏக்கம்
by சிவா Today at 12:46 am

» வாக்களிப்பதால் எந்தப் பலனும் இல்லையா?
by சிவா Today at 12:45 am

» இலக்கணக் காதல்
by சிவா Today at 12:44 am

» அதிகாலைப்பொழுது
by சிவா Today at 12:42 am

» தேர்வறை
by சிவா Today at 12:40 am

» கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
by சிவா Today at 12:40 am

» சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!
by சிவா Today at 12:37 am

» கோடை கவிதைகள் {சென்ரியு }
by சிவா Today at 12:35 am

» வாக்குப்பதிவு - 4 வகைகளில் கண்காணிக்கும் தேர்தல் கமிஷன்!
by சிவா Today at 12:30 am

» தமிழக தேர்தல் தகவல்கள்!
by சிவா Today at 12:27 am

» வாக்குப்பதிவை இணையத்தில் மக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு
by சிவா Today at 12:23 am

» விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?
by சிவா Today at 12:08 am

» தமிழகத்தின் முதல் வாக்காளர் - தீபா!
by சிவா Yesterday at 11:50 pm

» அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!
by சிவா Yesterday at 11:43 pm

» உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23
by சிவா Yesterday at 11:40 pm

» தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
by சிவா Yesterday at 11:37 pm

» வாக்களிக்க தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள 12 ஆவணங்கள்!
by சிவா Yesterday at 11:34 pm

» ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல
by jawhar Yesterday at 10:56 pm

» யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்
by கோ. செந்தில்குமார் Yesterday at 10:45 pm

» ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?
by jawhar Yesterday at 9:32 pm

» படித்ததில் பிடித்தது :) - இதையுமா வீடியோ எடுப்பர் ??????????
by உதயசுதா Yesterday at 6:16 pm

» ஈகரை உறவுகளின் WhatsApp
by சிவா Yesterday at 6:02 pm

» கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
by சிவா Yesterday at 6:00 pm

» ஓட்டு போடுவது எப்படி?
by தமிழ்நேசன்1981 Yesterday at 5:43 pm

» 500 மில்லியன் பயனாளர்களை தாண்டியது வாட்ஸ் அப்!
by சிவா Yesterday at 5:37 pm

» தேர்தல் நகைச்சுவை
by soplangi Yesterday at 5:33 pm

» மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
by SajeevJino Yesterday at 5:17 pm

» ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
by சிவா Yesterday at 5:16 pm

» உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!
by சிவா Yesterday at 5:10 pm

» வேட்பாளரின் வேண்டுகோள்
by jawhar Yesterday at 4:51 pm

» என் கவிதை நூல்
by jawhar Yesterday at 4:37 pm

» கொலம்பஸ் என்கிற கொடுங்கோலன்!
by சாமி Yesterday at 3:58 pm

» ஏப்ரல் 23: உலக புத்தக தினம் - சிறப்பு பகிர்வு...
by Powenraj Yesterday at 3:35 pm

» சந்தோஷம் என்பது...
by கிருஷ்ணா Yesterday at 3:34 pm

» ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் ,,தயார் செய்துள்ளார் தமிழர் கே.ஆர். ஸ்ரீதர்....
by Dr.S.Soundarapandian Yesterday at 3:18 pm

» சென்னை சூப்பர் கிங்சுக்கு டோனி ஒருவரே தலைவர்: டுபெலிசிஸ்
by ராஜா Yesterday at 12:54 pm

» என் கனவு
by ilayaraja abi Yesterday at 11:11 am

» ந.க.துறைவன் புதுக் கவிதைகள்
by ந.க.துறைவன் Yesterday at 9:15 am

» கவிதையில் யாப்பு
by ரமணி Yesterday at 9:08 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























Tamil Typing On This Site Is Powered By Quillpad.

வர்மக்கலை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வர்மக்கலை

Post by balakarthik on Thu Aug 05, 2010 6:39 pm

First topic message reminder :

மறைத்தே வைத்திருந்து மறைவாகவே செயல்படுவதுதான் வர்மக்கலை அல்லது மர்மக்கலை. இது உடலின் உறுப்புகளில் மர்மமாக அதாவது மறைபொருளாகக் காணப்படும் இடங்களப் பயன்படுத்தி போர்க்கலையும், வைத்தியமுறையும் செயற்படுத்தப்பட்டன. செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. வர்மக்கலை எளிமையானது. ஏழைக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது.

வர்மம் மர்மமோ, மாயமோஇ தந்திரமோ அல்ல; விஞ்ஞான ரீதியில் ஆனது. வர்மக்கலை ஆபத்துக் காலங்களில் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதற்காகப் பயிற்று விக்கப்பட்டது. இது அடுத்தவர்களின் அழிவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கலை அன்று. ஆக்கப்பூர்வமானது. அவசரமான நேரங்களில் ஒருவரைக் காக்கும் வகையில் செயல்பட வல்லது.இச்சீரிய கலை எதிரியின் மர்மஉறுப்புகளில் அடித்தோ, தட்டியோ, தொட்டோ அவனைக் கணப்பொழுதில் நினைவிழக்கச் செய்து, அக்காலக்கட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமைந்த கலையே வர்மக்கலையாகும். தட்டி வீழ்த்தப்பட்ட ஒருவனை மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்ய மீண்டும் தட்டி விடுவதும் வர்மக்கலையின் தர்மமாகும். வீழ்த்தப்பட்டவனை மேலும் தட்டி எழுப்பத் தெரிந்தவனே மர்மக்கலையின் நல்மாணாக்கன் ஆவான்.

வர்மக்கலைப் பயிலத் தகுதி:

வர்மக்கலையைக் கற்கத் தகுதியுடையவர் மிகச் சிலரே உள்ளனர். சாதிவீக குணம், தாமசக் குணம், இராட்சத குணம் ஆகிய மூவகை குணங்களே மனிதனிடம் உள்ள குணங்கள் ஆகும்.

1. சாத்வீக குணம்: சாத்வீக குணம் உடையவர்கள் தவம், கல்வி, தியானம், இரக்கம், மகிழ்சி, பொருமை, அடக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.

2. தாமசக் குணம்: தாமசக் குணம் உடையவர்கள் சோம்பல், அறியாமை, அதர்மம், மந்தபுத்தி, தூக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.

3. இராட்சத குணம்: இராட்சத குணம் உடையவர்கள் கோபம், அகங்காரம், மூர்க்கத்தனம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.

இவர்களுள் எக்குணமுடையோர் வர்மக்கலையைப் பயில ஏற்புடையவர்கள் எனப் பார்க்கலாம்.

வர்மக்கலை அற்புதம், அபாயம் இரண்டும் நிறைந்த கலை, அழிவிற்கும் கூட பயன்படுத்தபடக்கூடிய கலை. அதை இராட்சத குணம் உடையோர் பயிலும்போது சமுதாய அமைதிக்குப் பங்கம் ஏற்படும். எனவே, இந்தக் குணமுடையவர் இதைப் பயிலுவது அவ்வளவு உகந்தது அல்ல.

மேலும் சோம்பல், மந்தபுத்தி, அறியாமை நிறைந்தவர்களான தாமசக் குணமுடையோரிடம் அகப்பட்டு கொண்டால் என்னாவது? சட்டென்று முடிவெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். நொடிப்பொழுதில் கை, கால்களைச் சுழற்றி முத்திரை போட வேண்டிவரும். எனவே, தாமச குணமுடையவர்கள் உடனடியாக எதையும் சுறுசுறுப்புடன் செய்ய மாட்டார்கள்.

எனவே, தவ வலிமை பெற்ற தியானத்தில் சிறந்த கல்வி, கேள்வி ஞானம் நிரம்பப் பெற்ற அடக்கத்தைத் தன்னகத்தே கொண்ட இரக்க சீலர்களாகிய ஞானிகளைப் போன்ற சாத்வீக குணம் உடையவர்கள் வர்மக்கலையைப் பயில முற்றும் தகுதியானவர்கள் ஆவார்கள், அவர்கள் கற்கும்பொழுதுதான் இந்தக் கலையின் உண்மையான நோக்கம் மக்களைச் சென்றடையும். மேலும் அனைவருக்கும் பயனுடையதாகத் தகழும்.

வர்மக்கலைக்க அடிப்படைத் தேவை மனக்கட்டுப்பாடு, இதற்குத் தவப் பயிற்சி அவிசயம் தேவை. தவத்தில் சிறந்து இறையுணர்வு பெற்று அறநெறியில் வாழ்கின்றவர்களுக்கே வர்மக்கலை கற்றுத் தரப்படுகிறது. தவம் தெரியாமல் வர்மக்கலையைக் கற்பது என்பது அரிது.

மேலும் குரு-சீடன் என்று நேரடியாக குருவின் மூலமே வர்மக்கலையைக் கற்க முடியும். குரு தொட்டுக் காட்டாமல் சீடன் வர்ம இடங்களை அறிந்து கொள்வது கடினம். ஒருவருக்குக் குருவின் துணையும் இறையின் அருளும் இருந்தால் தான் வர்மக்கலையைக் கற்று பிறருக்கு உதவ முடியும்.

வர்மக்கலையும் ஆறுவகை ஆதாரங்களும்:

நூற்றியெட்டு வர்மங்களை உடலில் உச்சிமுதல் கழுத்துவரை, கழுத்து முதல் மூலாதாரம் வரை, முதுகு, கால், கை என்று ஐந்து பகுதிகளில் அமைத்துக் காட்டியுள்ளார்கள். அவை நிலைபெரும் இடங்களை ஆறுவகைப்படுத்தியிருக்கிறார்கள். அவை: (1) குதம், (2) குய்யம், (3) நாபி, (4) இதயம், (5) அடிநா, (6) நெற்றி எனப்படும். இவற்றை மூலாதாரம். சுலாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்றும் கூறுவார்கள்.

வர்மக்கலையும் பிராணாயாமமும்:

பிராணாயாமம் என்பது வடமொழிச்சொல். இதை பிராண + அயமா என்று பிரித்து பொருள் கூறலாம். பிராணா என்பது உயிராற்றல் என்றும் அயமா என்பது விறைப்பின்றி இருத்தல் என்றும் பொருள்படும். மொத்தத்தில் உயிராற்றல் விறைப்பின்றி நெளிவு சுழிவுடன் வில்போல் வளையும் தன்மையைத் தன்னகத்தே கொள்வதற்கு பிராணாயாமம் (அனுவாசியோகம்) என்று பெயர் கொள்ளலாம்.

"ஏறுதல் பூரகம் ரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊருதல் முப்பத்திண் டதிகேசம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சக மாமே." (திருமந்திரம்)

இதன் பொருளாவது பதினாறு மாத்திரை அளவு நல்ல சுத்தமான காற்றை இடப்பக்க நாசி வழியாக உள்ளே இழுத்து அறுபதது நான்கு மாத்திரை அளவு காலம் உள்ளே நிறுத்தி முப்பத்திரண்டு மாத்திரை அளவு வலப் பக்க நாசி வழியாக மெல்ல வெளியே விடுதல் என்பதாகும். உள்ள சென்றும், வெளியே வந்தும் கட்டுபாடின்றித் திரிந்து கொண்டிரக்கிற காற்றை முறைப்படுத்தி சுவாசிக்கத் தொடங்கினால், நமது உடலில் உள்ள அத்தனை அவயங்களும் சிறப்படைவதோடு உறுப்பு சிவக்கும். உரோமம் கருக்கும் என்கிறார் திருமூலர்.

"புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
வெளிப்பட உள்ளே நின்மலம் அக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
புறப்பட்டும் போகான் புரிசடை யோனே." (திருமந்திரம்)


வர்மக்கலையில் அடிகொடுக்கும் போது மூச்சை அடக்கிப் பிடிக்க வேண்டியிருக்கும் எனவே, இதற்குப் பிராணாயாமம் துணை செய்கிறது.

வர்மப் பிரிவுகள்:

"வர்ம பீரங்கி" என்ற ஓர் ஏட்டுச் சுவடியிலுள்ள வர்வாமானிய நூல், வர்மப்பகுதிகளை 108 பாகங்களாகக் பிரித்துள்ளன.
அவை பின்வருமாறு:

தலை முதல் கழுத்து வரை உள்ள வர்மங்கள் : 25
கழுத்து முதல் உந்தி வரை உள்ள வர்மங்கள் : 45
நாபி முதல் மூலம் வரை உள்ள வர்மங்கள் : 9
கைகளில் உள்ள வர்மங்கள் : 14
கால்களில் உள்ள வர்மங்கள் : 15
மொத்த வர்மங்கள் :108

"வர்ம சூத்திரம்" என்ற நூல் வர்மத்தை 5 பிரிவுகளாகவும், 108 பாகங்களாகவும் அட்டவணையிட்டுள்ளது. அவை பின்வருமாறு:

வாத வர்மம் : 64
பித்த வர்மம் : 24
சிலேத்தும வர்மம் : 6
உள்வர்மம் : 6
தட்டு வர்மம் : 8
மொத்த வர்மங்கள் :108

"வர்ம சூத்திரம்" என்ற பெயரில் இருக்கும் ஓலைச் சுவடியாகவே இருக்கும் நூல் வர்மத்தைப் படுவர்மம், தொடு வர்மம் என்று இரண்டே பிரிவுகளாக்கிக் கீழ்கண்டவாறு அட்டவணையிட்டுள்ளது.
படு வர்மங்கள் : 12
தொடு வர்மங்கள் : 96
மொத்த வர்மங்கள் :108

எனினும் சுமார் 80 வர்மப்பகுதிகள் பற்றிய செய்திகளே வர்மா நூல்களில் காணப்படுகின்றன. மீதமுள்ள சுமார் 28 வர்மப் பகுதிகள் பற்றிய விளக்கங்கள் நூல் வடிவத்தில் கூட மறைக்கப்படுள்ளன.

balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள்: 22564
மதிப்பீடுகள்: 1919

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: வர்மக்கலை

Post by gunashan on Fri Aug 06, 2010 11:07 am

திவா wrote:சிறந்த பதிவு . ஆமா இப்போ வர்மக்கலை பயிற்ருவிக்க படுகிறதா ? ஏங்கே பயிலலாம் ?

வணக்கம் திவா.....எப்படி நலமா ?
உங்க ரஷ்யாவுல வர்மக் கலை இல்லையா..... ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 3805
மதிப்பீடுகள்: 9

View user profile

Back to top Go down

Re: வர்மக்கலை

Post by திவா on Fri Aug 06, 2010 11:10 am

gunashan wrote:
திவா wrote:சிறந்த பதிவு . ஆமா இப்போ வர்மக்கலை பயிற்ருவிக்க படுகிறதா ? ஏங்கே பயிலலாம் ?

வணக்கம் திவா.....எப்படி நலமா ?
உங்க ரஷ்யாவுல வர்மக் கலை இல்லையா..... ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
நான் நலம் , கொழும்பு சென்று நேற்று தான் யாழ்பாணம் வந்தேன் . தாங்கள் நலமா ? எனக்கு தெரிந்து ரஷ்யாவில் இல்லை சோகம் சோகம் சோகம் சோகம்

திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 2645
மதிப்பீடுகள்: 24

View user profile

Back to top Go down

Re: வர்மக்கலை

Post by gunashan on Fri Aug 06, 2010 11:38 am

திவா wrote:
gunashan wrote:
திவா wrote:சிறந்த பதிவு . ஆமா இப்போ வர்மக்கலை பயிற்ருவிக்க படுகிறதா ? ஏங்கே பயிலலாம் ?

வணக்கம் திவா.....எப்படி நலமா ?
உங்க ரஷ்யாவுல வர்மக் கலை இல்லையா..... ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
நான் நலம் , கொழும்பு சென்று நேற்று தான் யாழ்பாணம் வந்தேன் . தாங்கள் நலமா ? எனக்கு தெரிந்து ரஷ்யாவில் இல்லை சோகம் சோகம் சோகம் சோகம்

எனக்கு எட்டியவரை கேரளாவில் வர்மக்கலை இன்னும் போதிக்கப் படுவதாக அறிந்தேன். எவ்விடம் என்பது தெரியவில்லை. இப்போது என்ன விடுமுறையா திவா.....

gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 3805
மதிப்பீடுகள்: 9

View user profile

Back to top Go down

Re: வர்மக்கலை

Post by திவா on Fri Aug 06, 2010 12:31 pm

ஆமா இப்போது விடுமுறை மீண்டும் செப்டம்பர் தொடங்குகிறது . அப்புறம் மலேசியா எப்படியிருக்கிறது ?

திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 2645
மதிப்பீடுகள்: 24

View user profile

Back to top Go down

Re: வர்மக்கலை

Post by gunashan on Fri Aug 06, 2010 12:44 pm

திவா wrote:ஆமா இப்போது விடுமுறை மீண்டும் செப்டம்பர் தொடங்குகிறது . அப்புறம் மலேசியா எப்படியிருக்கிறது ?

மலேசியாவுக்கு என்ன குறைச்சல்.......வெயிலுதான் கொழுத்துது......நண்பா.........

gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 3805
மதிப்பீடுகள்: 9

View user profile

Back to top Go down

Re: வர்மக்கலை

Post by திவா on Fri Aug 06, 2010 2:21 pm

gunashan wrote:
திவா wrote:ஆமா இப்போது விடுமுறை மீண்டும் செப்டம்பர் தொடங்குகிறது . அப்புறம் மலேசியா எப்படியிருக்கிறது ?

மலேசியாவுக்கு என்ன குறைச்சல்.......வெயிலுதான் கொழுத்துது......நண்பா.........
இவ்வாண்டு பெரும்பாலும் அனைத்து பகுதிகளிலும் தான் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 2645
மதிப்பீடுகள்: 24

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum