ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 ayyasamy ram

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 ayyasamy ram

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்

View previous topic View next topic Go down

இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்

Post by balakarthik on Sat Aug 07, 2010 7:30 pm

இறைவனை பற்றிய சில கேள்விகள் பலநாட்களாக என்னுள் இருந்து வந்தது,இறைவனை பாடுபொருளாக வைத்து எழுத எனக்கு தகுதியில்லை என்பதை நன்கு அறிவேன். அச்சமயம், எனது ஆசான், வள்ளுவன் என் நினைவுக்கு வந்தான். நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், கேள்விகள், சந்தேகங்கள், அனைத்திற்கும் வள்ளுவனின் குறளில் தீர்வு உள்ளது. அப்படியென்றால் இறைவனை பற்றிய எனது கேள்விக்கும் வள்ளுவனிடம் பதில் இல்லாமலா போய்விட போகிறது. இறைவனை பற்றிய எனது ஏழு (ஒவ்வொரு குறளின் நீளம் ஏழு வார்த்தைகள்தானே..) கேள்விகளுக்கு வள்ளுவன் கூறும் பதிலை காணலாம்.


குறிப்பு:- முதலில் எனது கேள்வி இருக்கும். அதன் பின்னர் பதிலாக வள்ளுவனின் குறள்/குறளின் சில வார்த்தைகள் இருக்கும். வள்ளுவனின் அந்த பதிலை நான் எவ்வாறு புரிந்து கொண்டேன் என்பதை, அதன்பின்னர் விளக்கி இருக்கிறேன். எனது கேள்விக்கு ஏற்றாற் போல குறளின் வரிசையை மட்டும் மாற்றி இருக்கிறேன். பொருளை மாற்றவில்லை.

முதல் கேள்வி : இறைவன் இருக்கிறானா??

பதில் : ஆதி பகவன் முதற்றே உலகு.

விளக்கம்: 'உலகு' என்பது ஆகுபெயர். இந்த பூமியை மட்டுமில்லாமல், பூமியில் வாழும் உயிர்களையும் சேர்த்து உலகு என்று குறிப்பிடுகிறார். ஆக இப்புவியில் முதலில் தோன்றிய உயிருக்கும், கடைசியில் தோன்றும் உயிருக்கும் முதன்மையானவன் அவன். அப்படிப்பட்ட முதன்மையானவன் இல்லாமல் இருப்பானா?? நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த தாய்-தந்தையரும் இறைவனின் அம்சமாக கருதப்படுவதற்கும் காரணம் இதுவே... தாய் மூலம்தான் நாம் இந்த உலகிற்கு பிறந்தோம் என்று நம்புவோமேயானால், இறைவன் இருப்பதையும் நம்பித்தான் தீர வேண்டும்.

இரண்டாம் கேள்வி: 'எனது தாயை காண்கிறேன். அவளுடன் பேசுகிறேன். அவள் பேச்சை கேட்கிறேன்.' என்பதனால் அவள் இருப்பை நான் நம்புகிறேன். பார்க்க முடியாத, கேட்க முடியாத, இறைவனை இருப்பதாய் நான் எப்படி நம்ப முடியும்?

பதில் : தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான்.

விளக்கம்:- புரியாத ஒன்றை எளிதாய் புரிய வைக்க 'உவமை' கையாளப்படும். 'வெள்ளத்தனைய...', 'இனிய உளவாக...' போன்ற குறள்களில் உவமைகளை வெகுவாக, அழகாக கையாண்ட வள்ளுவனே இறைவனை ஒரு உவமைக்குள் அடக்க இயலவில்லை. ஐம்பொறிகளால் நாம் இறைவனை உணர முடியுமென்றால், வள்ளுவன் உவமையுடன் விளக்கி இருப்பான். ஆக மனதினால் மட்டுமே இறைவனை நீ உணர முடியும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

பிறவிக்குருடர்கள் யானையை தொட்டுப்பார்த்து அவரவர் கற்பனைக்கு ஏற்றபடி உணர்ந்து கொள்வதுபோல், மனதினால் இறைவனின் எண்குணத்தை உணரலாம்.

மூன்றாவது கேள்வி: மனதினால் மட்டுமே உணர முடிகின்ற இறைவனின் இயல்புகள் என்னென்ன?? (அல்லது) நான் இறைவனாக முடியுமா??

பதில் : வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், அறவாழி.

விளக்கம் : இறைவன் விருப்பு-வெறுப்பு அற்றவன். இவ்வுலக பொருள்களின்,உயிர்களின் மேல் விருப்பு-வெறுப்பு இருக்கும்பட்சத்தில் மனிதனுக்கு மன அமைதி இல்லாமல் போய்விடுகிறது. ஆக இந்த இரண்டும் இல்லாமல் சமநிலையில் இருக்கும்போது நாம் இறைவனாவோம். உதாரணம்: ரமணர். மனோநாசம் செய்து, விருப்பு-வெறுப்பு அற்றவர்.
இறைவன் ஐம்புல ஆசைகளை ஒழித்தவன். உலக ஆசைகள் எல்லாம் துறந்தால், நாமும் இறைவனாய் போற்றப்படுவோம். உதாரணம்: புத்தர், பட்டினத்தார்.
இறைவன் அறக்கடல். 'அறன் வலியுறுத்தல்' அதிகாரத்தில் அறத்தை பற்றி இன்னும் நிறைய சொல்லியிருக்கிறார். வள்ளுவன் வலியுறுத்தும் அறங்களை,நெறிகளை பின்பற்றினால், 'வானுறையும் தெய்வத்துள் வைக்கபடும்' என்று அவரே கூறியிருக்கிறார். உதாரணம்: பகவான் ராம கிருஷ்ணர், வள்ளலார்.

நான்காம் கேள்வி: அத்தகைய இயல்புடைய இறைவன் அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கட்டும். நான் என் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தொடர்பற்ற நிலையில் இருந்துவிட்டு போகிறோமே.. என்ன கெட்டு போச்சு??

பதில் : கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

விளக்கம் : என்னை அடித்து துவைத்த குறள் இது. இது வள்ளுவனின் இரண்டாவது குறள். முதல் குறளில் இறைவனை வணங்குகின்றார். அடுத்த குறளிலேயே நம் அனைவரையும் வணங்க சொல்கிறார். தனது குறளை படித்து அர்த்தம் புரிந்து கற்க முடியுமென்றால், அக்கல்வியின் பயனாக இறைவனை தொழுதே தீர வேண்டும் என ஆணித்தரமாக அடித்து சொல்கிறார்.

படிப்பது வேறு, கற்பது வேறு. படித்த,கேட்ட, மற்றவர் செய்து காட்டிய ஒன்றை நாம் செய்து பார்த்து அதை உணர்ந்து கொள்வதே கற்பது. அப்படி, நாம் உணர்ந்து கற்றுக்கொள்ள உறுதுணையாய் இருக்கும் இறைவனை தொழாமல் இருப்பது தவறு என்று இடித்துரைக்கிறார்.

ஐந்தாம் கேள்வி: இறைவனை தொழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். நான் தொழுவதால் எனக்கு என்ன பயன்?

பதில்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

விளக்கம்: இறைவனின் உண்மையான புகழை விரும்பி நினைக்கும் அன்பர்க்கு அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் அடைவதில்லை.

ஆறாம் கேள்வி: தொழ வேண்டிய அந்த இறைவனை நான் தொழாமல் போனால் என்னாகும் ? (அல்லது) இறைவனை தொழுவதால் ஏற்படும் பயன் எனக்கு ஒன்றும் தேவையில்லை. அப்படி தொழாமல் இருந்து விட்டு போகிறேனே... என்ன கெட்டு போச்சு??

பதில்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

விளக்கம்: பிறவி என்னும் பெருங்கடலில் நாம் அனைவரும் விழுந்து விட்டோம். அதான், பிறந்து விட்டோமே. கரை சேர வேண்டுமென்றால் இறைவனடியை தொழ வேண்டும். இல்லையென்றால் கரை சேர முடியாது.

ஏழாவது கேள்வி: ஒரு செயலை செய்யாவிட்டால் தீங்கு கண்டிப்பாக ஏற்படும். செய்தால் நன்மை ஏற்படும். அப்படிப்பட்ட செயலை செய்பவன் அறிவாளி, செய்யாதவன் கற்றறிந்த மூடன். இறைவனை தொழுவதும் அப்படிப்பட்ட செய்கையே ஆகும். நான் எப்படி இறைவனை தொழ வேண்டும்?? எந்த முறை சிறந்த முறை?

பதில் : மலர்மிசை ஏகினான்

விளக்கம் : அன்பரின் நெஞ்ச மலரில் வீற்றிருப்பவன் இறைவன். நமக்கு விருப்பபட்ட உருவத்தில் (விநாயகராய்,முருகனாய்,பெருமாளாய், அபிராமியாய்,இயேசுவாய்,அல்லாவாய், ராமனாய், கிருஷ்ணனாய், புத்தரை, அனுமானாய், ஈஷ்வரனாய்) இறைவனை அன்புடன் மனத்தினில் நினைத்தாலே, நமது இதய கமலத்தில் வந்து வீற்றிருப்பான். நமது வீட்டிற்கு வந்த ஒரு விருந்தினரை, குழந்தையை கனிவாய் கவனிப்பது போல், நமது இதய கமலத்தில் வந்து குடியேறிய இறைவனையும் விருப்பபடி உபசரிப்பதே மிகச்சிறந்த தொழுகையாகும்.

குறிப்பு :- இது முழுக்க முழுக்க எனக்கு தோன்றிய கேள்விகளும் , அதற்க்கு எனக்கு திருப்ப்தியளித்த குரல் பதில்களுமே தவறு இருப்பின், வள்ளுவனின் நேசர்கள் என்னை மன்னிக்கவும்.இதுபோல் உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் அதையும் இங்கே தெரிவிக்கலாம் தெரிந்தவர் அதற்கு பதிலளிக்கலாம்ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்

Post by ராஜா on Wed Aug 25, 2010 11:12 am

மிக அருமையாக , இருக்கிறது பாலா .... இந்த பதிவை இத்தனை நாள் பார்க்காமல் விட்டதற்காக வருத்தபடுகிறேன் .......


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30677
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 25, 2010 11:17 am

அருமை பாலா.... உங்கள் வழிகாட்டுதலுக்கும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்

Post by balakarthik on Wed Sep 15, 2010 7:50 pm

@ராஜா wrote: மிக அருமையாக , இருக்கிறது பாலா .... இந்த பதிவை இத்தனை நாள் பார்க்காமல் விட்டதற்காக வருத்தபடுகிறேன் .......

நன்றி தலை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்

Post by balakarthik on Wed Sep 15, 2010 7:50 pm

@பிளேடு பக்கிரி wrote:அருமை பாலா.... உங்கள் வழிகாட்டுதலுக்கும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி மாப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum