ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பெட்ரோல் குரங்கு!
 ayyasamy ram

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள்

View previous topic View next topic Go down

பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள்

Post by கோவை. மு. சரளா on Wed Aug 18, 2010 1:32 pmசங்க இலக்கியங்களில் பாடலால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு ஓன்று கலித்தொகை மற்றொன்று பரிபாடல் எல்லா சங்க இலக்கியங்களும் பலரால் பாடப்பட்டு தொகுக்கப்பட்ட நூல் தான். பரி பாடலும் பலரால் பாடபாட்டு தொகுக்கப்பட்ட நூல். இதை பரி பாட்டு என்றும் கூறுவார்.

அகத்திணை செய்யுள்களுக்கு பாடல் வகைகளாக கலிப்பவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.

" நாடக வழக்கினும், உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரிய தாகும் என்மனார் புலவர்." ( தொல்.99 )

பரி + பாடல் என்று பிரித்தால் ,பரிதல் என்ற சொல்லுக்கு பற்று வைத்தல், , இறங்குதல், வருந்துதல், பிரிதல், அழித்தல், வெளிபடுதல், பகுத்தறிதல், அறிதல், நீக்குதல், வாங்கி கொள்ளுதல் போன்ற பல பொருள்கள் உள்ளன. அந்த பரிதல்களை கொண்ட பாடல்கள் பரி பாடல்கள் எனப்படும் .

பொதுவாக இறைவன் மீது தான் அதிக பற்றும் காதலும் கொண்டு பாடுவார்கள் அதுபோல தாய் போல தரணியெங்கும் உலாவரும் காவிரி தாயை பற்றி பரி பாடல் மிகுதியாக பேசுகிறது.

வைகையின் தோற்றம்


வைகை எப்படி தோன்றியது என்பதை நல்லந்துவனார் அழகாக கூறுகிறார்.

" நிறைகடல் முகந்துஉறாய் , நிறைந்துநீர் தும்பும்தம்
பொறைதவிர்ப்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்
நிலம்மறை வதுபோல் மலிபுனல் தலைத்தலைஇ,
மழைய இனம்கலங்க, மழைய மயில்அகவ
மலைமாசு கழியக் கதழும் அருவி இழியும் "

இவ்வாறு மேகம் கடல் நீரைபருகி பறந்து நிலம் மறைவது போல மிகுதியான மழையைப் பொழிந்து மலையிடத்து மான் இனங்கள் கலங்கவும், மயில்கள் மகிழ்ந்து அகவவும் மழை அழுக்கு நீங்கவும் அருவிகள் கீழ் இறங்கி வந்தன. அருவிகள் நிறைந்து நீர் வரும் வழிகள் மிகுதியான மலைச் சாரலில் நூலறிவு உடைய புகழ்மிக்க புலவர்கள் புனைந்த பாடல்கள் பொய்க்காது. தொழில் வளம் பெருக வைகையில் குளிர்ச்சி பொருந்திய நீர் எல்லா இடங்களிலும் பரவி விரைந்து ஓடியது என்கிறார் . இவாறு மழையில் தோன்றி உயிர்கள் அனைத்திற்கும் உயிராய் உலவி வரும் வையை மழையில் தோன்றினாலும் மண்ணில் மனம் வீசுவதை நினைக்கையில் பெண்ணின் பெருமை உணர முடிகிறது.

பெண்ணாய் பிறந்தாலும் அவள் புகுந்த வீட்டுக்கு சென்று அங்கு எல்லோர் மனங்களிலும் நிறைந்து குளிர்ந்வதால் பிறந்த வீட்டின் பெருமையை பரப்புகிறாள் இதனால் தான் என்னவோ நதிகளை அன்னையின் வடிவமாக நம் முன்னோர் கண்டு வணங்குகிறார்கள்.

ஊடலும் வைகையும்

தலைவியை பிரிந்து தலைவன் பரதையிரிடம் சென்று மேலும் போது அவனின் மேல் ஊடல் கொள்கிறாள் தலைவி. இதை குறிப்பிடும் ஆசிரியர்.

"காதல்அம காமம்
ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் - சூழ் உரல்! - வையைப்
பெருக்கு அன்றோ ? பெற்றாய் பிழை "

காமம் பெருக்கும் வையைப் பெருக்கு போன்றதே சிலரிடம் அன்பின் மிகுதி விரைந்து சுருங்குவதும் சிலரிடம் விரிந்து பெருகுவதும் இயல்பு . மழை பொழியும் கார்காலத்தில் வையையில் நீர் மிகுதியாகும் போது ஓடம் ஏறி வருவது காலத்தை தாழ்த்துகிறது. அதே சமயம் இளவேனில் காலத்தில் நாரை இரை தேடும் அளவிற்கு வையையில் நீர் சுருங்கி விடுகிறது. அதனால் இளவேனில் காலத்தில், உன் அன்புமிகுதியும் குறைந்து விடுகிறது என்று தலைவனை பார்த்து தலைவி கூறுவது . எத்தனை ஆழமாக உற்று நோக்க வேண்டி விஷயம் இதை அழகாக வையைக்கும் காமத்திற்கும் ஒப்புமையுடன் கூறிய ஆசிரியரின் அறிவு கண்டு வியக்கிறேன்.

துன்பத்திலும் இன்பம் உணருதல்
வையை கரை புரண்டு ஓடியதால் ஊரில் உள்ள அனைத்தும் மூழ்கியதை கண்டு ஊரே வையை வைதது. அதிலும் கூட சிந்திக்க கூடிய அழகியலாக வையை பார்க்க எப்படி முடிந்ததோ இந்த ஆசிரியருக்கு .

" "களனி வந்து கால் கோர்தன
பலான வாளை பாலை உண்டன"

இந்த வரிகளை பார்க்கும் போது புலவனின் ரசிப்பு திறன் வெளிபடுகிறது வெள்ளத்தால் ஊரில் ஆனதும் மூழ்கி மக்கள் அவதிப்பட்டு புலம்ம்புகின்ற்றனர் ஆடு மாடுகள் எல்லாம் மூழ்கிப்போனது அப்படி ஒரு துன்ப கரமான சூழலிலும் வயலில் உள்ள கமுகு, தென்னை ,முதலிய மரங்கள் கழுத்தளவு வெள்ளம் உயர்ந்ததால் அங்குள்ள பாளைகளை வயலில் இருந்த வாளை மீன்கள் உண்டன என்கிறார்.

எந்த ஒரு துன்பமான விசயத்தையும் அப்படியே நினைத்து கொண்டு இருந்தால் அதில் இருந்து மீள முடியாது .அதில் இருந்து நம்மை சமநிலை படுத்த கூடிய இன்பமான நல்ல விசங்களை உற்று நோக்க வேண்டும் என்ற உளவியல் நோக்கு இங்கு உற்று நோக்க கூடியது. மேலும் அந்த வையையின் உடைப்பையும் கரைபுரண்டு ஓடுவதையும் பார்கையில் புலவருக்கு காதலனின் நினைவு வருவதால்
" உணர்த்த உணரா ஒள்இல்லை மாதரைப்
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைத்து"

என்பதுபோல அந்த வைகையானது ஊடலை தணிக்க முயன்றும் இயலாத கணவர் மனைவியை கூடுவதற்கு முயலும் ஆசைபோல வெள்ளம் பெருகி விரைந்தது என்கிறார் . எத்தனை பொருத்தமான உவமை இப்படி யோசிக்க ஒரு ஞானம் வேண்டும் போல பரி என்பதன் பொருத்தம் மிகவும் பொருந்துகிறது இந்த பாடல் கல் வழியாக.


இறைவன் முதல் இறகு வரை சிறு துரும்பை கூட தூணாக , வானாக உயர்த்தி தங்களின் உணர்வுகளை திறமையாக வெளிபடுத்துவதில் வல்லவர்கள் நம் முனோர்கள் என்பதில் ஐயம் இல்லை.

காவிரியின் பெருமை உணர்ந்ததுபோல காலத்தை உணர்ந்து கன்னியரின் மனங்களையும் உணருங்கள் களிப்புடன் இருங்கள் என்கிறது பரி பாடல்.

கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 264
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள்

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 18, 2010 2:31 pm

நன்றி நன்றி நன்றி நன்றி[You must be registered and logged in to see this image.]
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள்

Post by தமிழ் on Wed Aug 18, 2010 2:34 pm

நல்லதொரு பகிர்வு. தொடரட்டும் தங்கள் பகிர்வுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
தமிழ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1153
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum