ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 ayyasamy ram

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 ayyasamy ram

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 ayyasamy ram

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குறைபாடுள்ள குழந்தைப்பிறப்பை தடுக்கலாம்

View previous topic View next topic Go down

குறைபாடுள்ள குழந்தைப்பிறப்பை தடுக்கலாம்

Post by அப்புகுட்டி on Wed Aug 25, 2010 5:31 am

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள் ளிட்ட தெற்காசிய நாடுகளில் மருத்துவம் படிக்கும் பெரும்பாலான பெண்கள், மகப் பேறு துறையினை தெரிவு செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது. ""மேற்கத்திய தேசங்களை காட்டிலும் தெற்காசியர்களுக்கு குழந்தைகள் மீது தனி ஈடுபாடும், தணியாத ஆர்வமும் உண்டு. அத்துடன் குடும்பம் என்கிற சமூக அமைப்பின் மீதும் தெற்காசியர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு'' என்று விளக்கமளிக்கிறார்கள் இத்துறையை தெரிவு செய்து, மகப்பேறு மருத்துவர்களாக செயல் படுபவர்கள். இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் படித்த மற்றும் படிக்காத இளம் தலைமுறையினருக்கு மாறிவரும் கால சூழலுக்கேற்ப குழந்தை பெற்றெடுப்பதில் ஏராளமான சந்தேகங்கள் இருந்து கொண்டே யிருக்கின்றன. இவர்களது தற்கால சந்தேகங்களுக்கு தமது நீண்ட நெடிய அனுபவத்தின் மூலம் பதிலளிக்கிறார் டாக்டர் திருமதி. ஆக்னஸ்.

இலக்கிய ஆர்வம் உள்ளவர். தனித்தமிழ் பற்று மிக்கவர். டெல்லியில் "விஜயரத்னா' விருதினையும், தனி தமிழ் கழகத்தின் சார்பில் மகத்தான மருத்துவ சேவைக்காக "மருத்துவ மாமணி' என்ற விருதினையும் பெற்றவர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக நகரான திருநெல்வேலியில் ஜோசப் மகப்பேறு மருத்துவமனை என்ற மருத்துவ மனையினை நிறுவி, அதனூடாக மகப்பேறு பணியினை செவ்வனே செய்து வருபவர்....

· கர்ப்பிணி பெண்களிடம் குரோமோசோம் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் எதற்காக பரிந்துரை செய்கிறார்கள்?.

தாய் தந்தையருக்கு இயற்கையாகவே மரபணுவில் குறையிருந்தால், பிறக்கும் குழந்தையும் குறையுடன் பிறப்பதற்கு சாத்திய கூறு உண்டு. இதனை தவிர்க்கவே இந்த சோதனையை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்தால், அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இத்தகு சோதனைகள் அவசியமாகிறது. மரபணுத் தாக்கத்தால் சில நோய்கள் ஆண்குழந்தைகளுக்கும், சில நோய்கள் பெண் குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. இத்தகு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்காமல் இருக்க, முன்கூட்டியே செய்யப்படுவது தான் இந்த குரோமோசோம் சோதனை. இதன் முடிவுகளை முன்வைத்து, கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் குறைபாட்டை களையமுடியும். மிகச் சிலருக்கு தான் குறையுடைய குழந்தை பிறப் பதை தவிர்க்க, கரு கலைப்பு செய்து கொள்ளுங்கள் என்று பரிந்துரை செய்கிறோம்.

இந்த சோதனை மூலம் "டவுண்கிண்ட் ரோம்' முதலான குறைகளும் கண்டறியப் படுகிறது. இந்த சோதனை மூலம் குறைகளைக் கண்டறிந்து, குறைகள் ஏற்படும் வாய்ப்புகளையும் கூறி, குழந்தை உண்டாகாமல் இருக்க பெற்றோருக்கு வழி காட்டவும் உதவுகிறது.

· குழந்தைப்பேறு உண்டவாதில் தைராய்டு சுரப்பியின் பங்களிப்பு குறித்து கொஞ்சம் விளக்குங்களேன்?.

தைராய்டு பிரச்சினையால், மகப்பேறில் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. ஹைபோதைராடிஸம் தைராய்டு குறைவாகச் சுரத்தல் ஹைபர் தைராடிஸம் தைராய்டு அதிகமாகச் சுரத்தல் ஒருவர் கருவுற்றிருக் கிறார் என்று உறுதியாகத் தெரிந்தவுடன் தைராய்டு சோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும். கருவுற்ற தாய்க்கு தைராய்டு சுரப்பு படிப்படியாகக் குறைந்து, "ஹை போ தைராய் டிஸம்' பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகு மாற் றத்தை தாயால் உணரமுடியாது. இந்த பிரச்சி னை யால் பிறக்கும்போதே, மந்த புத்தியுடை ய குழந்தையாகப் பிறக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்திலேயே இக் குறையைக் கண்டறிந்தால், மருந்துகள் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்..

ஆனால், "ஹைபர் தைராய்டிஸம்' இருப்பது ஆபத்தானதாகும். அதிகப் படியாகச் சுரக்கும் தைராய்டினைக் குறைக்கச் சாப்பிடும் மாத்திரைகளால் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. குழந்தைப்பேறு வேண்டும் என்ற ஆவலால், ஹைபர் தைராய்டிஸத்திற்கு மருந்து சாப் பிட்டு குழந்தை உண்டான பெண்கள், பிரசவத்தின்போது பல ஆபத்தான நிலையினை சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே, தைராய்டு அதிகரிக்கும் பிரச்சினையுள்ள மிகச்சில பெண்களுக்கு மட்டும், கருக்கலைப்பு செய்து கொள்வது தான் சிறந்த வழி என்று பெரும்பாலான மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனாலும் கருகலைப்பை விரும்பாத சில பெண்களுக்கு ஏற்படும் இந்தப் பிரச்சினையை மருந்துகள் மூலமும் குணப்படுத்துகிறோம்..

· குழந்தையின்மைக்கு தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணியா?.

இயல்பாகவே அருந்தும் தண்ணீரில் அயோடின் இல்லாது இருந்தாலும், உணவுப் பொருள்களில் அயோடீன் பற்றாக்குறை இருந்தாலும் தைராய்டு பிரச்சினை வரும். எனவே, போதிய அளவு அயோடின் சத்து ள்ள உணவு பொருளை சேர்த்து கொள்ளுங் கள் என்று அறிவுறுத்துகிறோம். குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அயோடீன் பற்றாக்குறை ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் இருப்பதால் அயோ டீன் கலந்த உப்பைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறோம்.

தைராய்டு அதிகமாகவும், குறைவாகவும் சுரக்கும் குறைகளைத் தவிர்க்க, பல்வேறு மருந்து மாத்திரைகள் தற்போது இருக்கின்றன. தைராய்டு குறைபாட்டினைச் சீராக்க மாத்திரைகளை உட்கொள்ளும் போது, த ரொய்டு சுரப்பு அதிகமாகி பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தொடர்ந்து தைராய்டின் அளவை சோதித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தைராய்டு பிரச்சினையால் குழந்தை யின்மை ஏற்படும் என்று கூறமுடியாது. பல்வேறு இசைக்கருவிகளின் சங்கமிப்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறுவது போல், பல்வேறு சுரப்பிகளின் இணைந்த செயல் பாட்டினாலேயே குழந்தைப்பேறு உருவா கின்றது. இத்தகு நிகழ்வுக்கு பிட்யூட்டரி மற்றும் ஹைபோதாலமஸ் என்னும் சுரப்பிகள் தான் மூலகாரணமாக அமை கின்றன. இச்சுரப்பிகள் தலையில் உள்ளது. இங்கிருந்துதான் தைராய்டு, ஓவரி, அட்ரினல் முதலான சுரப்பிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் சுழற்சி வட்டத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட் டுவிட்டால் அனைத்தையும் பாதிக்கிறது.

· மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவற்றால் கூட குழந்தையின்மை ஏற்படுமா?

இன்றைய சூழலில் குழந்தையின்மைக்கு மன உளைச்சல், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவை கூட முதன்மைக் காரணங்களாக மாறிவிட்டன. சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசுபாட்டின் காரணமாகவே இப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கருமுட்டை வெளிவருதல், கரு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு, கருப்பையில் நீர் கோர்த்திருத்தல், கருக்குழாய் அடைப்பு மற்றும் அதிகரித்து வரும் ஆண் மலட்டுத்தன்மை என பல காரணங்கள் உள்ளன.

குழந்தைப் பேறினைத் தள்ளிப் போடுவதாலும், எதிர்பாராமல் உருவான கருவினைச் சிதைப்பதாலும், கருக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. செடியில் பூக்கும் முதல் பூவைப் போல், முதல் குழந்தையானது வரப்பிரசாதம் போன்றது. ஆதலால் முதல் கருவை அழிக்காதீர்கள். இதனால் தொடர்ந்து குழந்தைப் பேறு கிடைக்கும் வாய்ப்பு பெருமளவு குறைந்து போகும் வாய்ப்பு அதிகம்.

ஒரு பசுமையான இலை பழுத்து, காம்புகள் சுருங்கி, காய்ந்து உதிர்வதைப் போல, நாட்கள் தள்ளிப்போய், மெதுவாக மாத விலக்கு நிற்கவேண்டும். இந்த நிலையிலிருந்து மாறுபட்டு, மாதவிலக்கின் போது, இரத்த ப்போக்கு அதிகமாக இருந்தால், மருத் துவ சோதனைகளை செய்து புற்றுநோய் இருக்கிறதா அல்லது வேறு பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறி ந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆறுமாத இடைவெளிக்குப் பின், மாத விலக்கு ஏற்படுவது நின்று விட்டால், கர்ப்பப்பை உள்ளுறையின் கணம், மார்பக பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். எந்தக் குறைபாடுகளும் இல்லை யென்றாலும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் மாதவிலக்கிற்கு பின்னர் உடலில் கல்சிய சத்து குறையும். இதனால் எலும்புகளில் பாதிப்புகள் உண்டாகும். உடல் பருமனாகும். இதய அழுத்தம் வரும். மார டைப்பும் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே இது போன்ற பிரச்சினைகள் நிகழ்ந் தால், மருத் துவ ஆலோசினை கண்டிப்பாகத் தேவை.

மாதவிடாய் நின்ற பிறகு, சில பெண்க ளுக்கு கோபம் அதிகமாக வரும். திடீரென்று அதிக வியர்வை. ஏ/சிக்கு உள்ளேயும் விய ர்த்தல், உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது போன்ற பாதிப்பிற் குள்ளானவர்களின் கவனத்தைத் திசைனப்பி, தனிமையைப் போக்கி, சமூகப் பணிகள், செய்திகளை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற வற்றில் ஈடுபடுத்த வேண்டும். அதாவது மன மாற்ற த்தை எற்படுத்துவதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளிலிருந்து அவர் களை மீட்கலாம்.

"ஈஸ்ட்ரோஜன்' என்ற ஹார்மோனில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே இதற்கு காரணமாகும். இதனை களைய முறையான பரிசோதனைகளை, மருத்துவரின் ஆலோசனைப் படி மேற்கொள்ள வேண்டும். "ஈஸ்ட்ரோஜன்' மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். கல்சியமுள்ள உணவுப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். விற்றமின் டி யும் அதிகம் தேவை.

· அறுவைச்சிகிச்சை செய்து குழந்தை பெற்ற பெண்கள், மறுபிரசவத்தின்போதும் அறுவைச்சிகிச்சை மூலமாகத்தான் குழந்தை பெறமுடியும் என்கிறார்களே, இது சரி தானா ?

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை ஏற்படுமாமே உண்மையா ? ஒரு முறை அறுவைச் சிகிச்சை மூலம் பிர சவம் பார்த்தால், தொடர்ந்து அறுவைச் சிகிச்சை மூலமாகத் தான் பிரசவம் செய்ய வேண்டியதிருக்கும் என்று எண்ணுவது தவறு. இயற்கையான பிரசவத்திற்கு உடலமைப்பு தான் பிரதான காரணம். உடலமைப்பு தடை யாக உள்ள பெண்களுக்கு கூட ஒருமுறை அறுவைச் சிகிச்சை முறை மூலம் குழந்தை பெற்றெடுத்த பின்னர், மறுமுறை சுகப்பி ரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கு உடல் எடை அதி கரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக் கும், உடல் எடை கூடுவதற்கும் மருத்துவ ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum