ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by கே. பாலா Today at 10:25 pm

» அறிமுகம் ...
by யினியவன் Today at 10:25 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நாட்டுப்புறப் பாடல்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:00 pm

முன்னுரை


நாட்டுப்புறப் பாடல்கள் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாட்டுப்புறப் பாடலைக் கேட்டு மயங்கும் சூழல் அமைந்துள்ளது. நாட்டுப்புறப் பாடலின் இன்ப இசை எல்லா மக்களாலும் வெகுவாகச் சுவைக்கப்படுகின்றது. பாரதியார் கூட,


ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்



நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாடுகின்றார்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பியல்புகளை அறியும் வண்ணம் இப்பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.


நாட்டுப்புற இலக்கியங்கள் பற்றிய முந்தைய பாடத்தில் பாடல்கள் உள்ளிட்ட அனைத்து வகை நாட்டுப்புற இலக்கியங்களின் தன்மைகள் பற்றிக் கூறப்பட்டது. நாட்டுப்புற இலக்கியத்தின் ஓர் அங்கமான நாட்டுப்புறப் பாடல்களுக்கும் அந்தத் தன்மைகள் அப்படியே பொருந்தும். இந்தப் பகுதியில் நாட்டுப்புறப் பாடல் பற்றிய வரையறைகள், அவற்றை வகைப்படுத்துதல், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் உத்திகள், தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பு ஆகியவை பற்றி விளக்கமாகக் காணலாம். தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் எனும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.


நாட்டுப்புறப் பாடல் - வரையறைகள்


நாட்டுப்புறப் பாடல்கள் எவை என்பதை அவற்றைக் கேட்கும் போதோ படிக்கும் போதோ கண்டுபிடித்துச் சொல்லி விடலாம். எதைக் கொண்டு அவ்வாறு சொல்ல முடிகிறது? அவற்றின் தன்மைகள் கேட்டுப் படித்த அனுபவத்தில் உங்களுக்குள் பதிவாகியிருக்கின்றன. அவற்றின் வரையறைகளை விளக்கிச் சொல்ல முடியுமா? அறிஞர் பலர் நாட்டுப்புறப் பாடல்களுக்கான வரையறைகளைத் தெரிவித்துள்ளனர். அவற்றை இங்குக் காண்போம்.


நாட்டுப்புறப் பாடல்களை - நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் எனப் பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். (சு.சண்முக சுந்தரம், நாட்டுப்புறவியல், பக். 186)


"புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை இலக்கியங்கள். பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புறப் பாடல்கள். இலக்கிய வரலாறு என்னும் கடலில் சங்கமம் ஆகும் ஆறுகளில் நாட்டுப்புறப் பாடல் என்னும் ஆறு ஒன்றாகும்" என்கிறார் ஆறு. அழகப்பன்.


நாட்டுப்புறப் பாடல் பற்றி விளக்கும்போது சு. சண்முக சுந்தரம் பின் வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார். " நாட்டுப்புறம் என்பது கிராமமும் கிராமீயம் சார்ந்த இடங்களும் ஆகும். இவ்விடங்களில் பாடப்பட்டு வருகின்ற பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். இப் பாடல்கள் எளியவை; இனியவை; எழுதப்படாதவை. வாயில் பிறந்து செவிகளில் உலவிக் காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. இவை தனி உரிமை, உடைமை உள்ளவையல்ல. பொது உரிமையும், உடைமையும் கொண்டவை. என்று பிறந்தவை, எவரால் பிறந்தவை என எடுத்துச் சொல்ல இயலாத பண்பும் பாங்கும் இவற்றுக்கு உண்டு."


நாட்டுப்புறப் பாடல்களின் தன்மைகள் பற்றி அவர் மேலும் கூறுகிறார்.


"நாட்டுப்புறப் பாடல்களின் சொற்கள் எளியவை, எங்கும் தேடிப் பெறாதவை; அன்றாட வாழ்வில் புழங்குபவை; கொச்சையானவை. நாட்டுப்புறப் பாடல்களில் அடிகளைத் திரும்பப் பாடும் வழக்கம் உண்டு. இதனால் அவர்களுக்குச் சலிப்பு ஏற்படுவதில்லை. மாறாக, சொன்னதையே சொல்வதன் மூலம் அக்கருத்து வலுப் பெறுகிறது. கேட்கவும் இனிமை பயக்கிறது".



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:00 pm

ஆல்பர்ட் பேட்ஸ்லார்டு என்பவர், "வாய்மொழிப் பாடல் என்பது எழுதப் படிக்கத் தெரியாத மக்களால் வாய்மொழியாக நிகழ்த்தப் பெறும் போது உருவாக்கப்படுவது. இது மரபுவழிப் பாடல், நாட்டுப்புறப் பாடல் என்பவற்றிற்குச் சமமானது," என்கிறார். மக்கவுன் என்பவர், "வாய்மொழிப் பாடல்கள் என்பன முழுவதும் பெரிய, சிறிய வாய்பாடுகளால் உருவாக்கப்படுபவை. மாறாக எழுத்திலக்கியங்கள் வாய்பாடுகளற்றவை", என உறுதியாகக் கூறுகின்றார்.


ஆய்வாளர்கள் ஒரு பாடலை வாய்மொழிப் பாடல் என்று குறிப்பிடுவதற்கு மூன்று முக்கிய வழிமுறைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். பாடல் ஒன்று உருவாக்கப்படும் அல்லது கட்டமைக்கப்படும் முறை [Composition], அது பரப்பப்படும் முறை [Transmission], அது நிகழ்த்தப் பெறும் முறை என்ற மூன்று முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு பாடல் வாய்மொழி சார்ந்தது என வரையறுக்கின்றனர். சில பாடல்கள் இம் மூன்று முறைகளிலும் பொருந்தி அமைகின்றன. சில, ஒன்று அல்லது இரண்டு முறைகளே பொருந்தி அமைகின்றன.


ஆக இங்கே ஓர் ஐயம் தோன்றி விடுகிறது. நாட்டுப்புறப் பாடல் வாய்மொழி இலக்கியம் மட்டுமா? ஆம். அது வாய்மொழி இலக்கியமே. ஆயினும் படிப்பறிவற்ற நாட்களில் வாய்மொழியாக இருந்தவை படிப்பறிவு, எழுத்து, அச்சு வசதிகள் வந்த பின்னர் அவை எழுத்து இலக்கியமாகவும் மாறிவிடும். எழுதப்பட்டு விடுவதாலோ, எழுதியவர் சிலர் பெயர்கள் பாட்டிலேயே அமைந்திருப்பதனாலோ அவை நாட்டுப்புறப் பாடல் தன்மையை இழந்துவிட மாட்டா என எடுத்துக்காட்டுகிறார் அறிஞர் வானமாமலை.


நாட்டுப்புறப் பாடல்களை நாம் பின்வருமாறு வரையறுத்துக் கொள்ளலாம். மரபு வழியைப் பின்பற்றி யாரேனும் ஒருவரால் படைக்கப்பட்டு, வாய்மொழியாகப் பரவி, ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களைக் கொண்டதாக, மக்களின் கூட்டுப் படைப்புக்களாக மாறுபவை நாட்டுப்புறப் பாடல்கள். இவை மக்கள்தம் பட்டறிவின் பதிவேடுகள்; மழை நீர் நிலத்தின் தன்மைக்கேற்ப நிறத்திலும் குணத்திலும் மாறுபடுவது போல, வழங்கப்படும் மக்களின் வாழ்க்கைக்கேற்ப - பாடுபவரின் தன்மைக்கேற்ப - காலத்திற்கேற்ப - நிலத்திற்கேற்ப - மாறுபடுபவை; பயன்பாட்டுக்காக உருவாக்கப்படுபவை; பயன்படும் நிலையில் வழக்கில் இருப்பவை; பயன்பாடு இல்லாதபோது உருமாறுபவை அல்லது உதிர்பவை; ஏட்டிலக்கியங்களில் சொல்லப்பட்டவற்றையும் சொல்லப்படாதவற்றையும் சொல்ல மறுக்கப்பட்டவற்றையும் பொருண்மையாகக் கொண்டவை. மக்கள் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி படம் பிடித்துக் காட்டும் வாழும் இலக்கியமாகத் திகழ்பவை. தோன்றிய காலம், வழங்கி வந்த காலம், வழங்கும் காலம் என்று முக்காலத்தையும் பிரதிபலிப்பவை.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:02 pm

நாட்டுப்புறப் பாடல் - வகைப்படுத்தல்


"ஒரே மாதிரியாக இருப்பவற்றை இனங் கண்டு ஒன்றாக்குதலே வகைப்படுத்தல் எனப்படும்" என்கிறார்தே.லூர்து. "நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு, ஓரினப் பொருளை ஒருபுடை வைப்பது"என்ற ஓத்தின் இலக்கணத்தை வகைப்படுத்தலின் இலக்கணமாகக் கொள்ளலாம். சரியான வகைப்பாடு இல்லையென்றால் எந்த ஒரு துறையும் அல்லது ஆய்வும் சிறப்புற இயலாது. வகைப்படுத்தல் எவ்வளவுக்கெவ்வளவு நுணுக்கமாகவும் செம்மையாகவும் அமைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஆய்வுகள் நுணுக்கமாக அமையும்.


வகைப்படுத்தும் முயற்சி


நாட்டுப்புறப் பாடல்களை வகைப்படுத்தும் முயற்சியில் இத்துறையில் ஈடுபாடு கொண்ட தமிழறிஞர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். வகைப்படுத்தும் முயற்சிகளைத் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை வரலாற்று அடிப்படையில், பாடல்களை உதிரியாகப் பெயர் சுட்டிய நிலை, பல்வேறு அளவுகோல்களை வைத்து வகைப்படுத்திய நிலை, ஒரே அளவுகோலை வைத்து வகைப்படுத்திய நிலை என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம். இந்த மூன்று பிரிவுகளையும் பற்றிய தெளிவான கண்ணோட்டம் புதிய வகைப்பாட்டுக்கான தேவையை உங்களுக்கு உணர்த்தும்.


பாடல்களை உதிரியாகப் பெயர் சுட்டிய நிலை


பாடல்களை அவற்றின் பொருள் அடிப்படையிலோ வேறு எந்த அடிப்படையிலுமோ தொகுத்து வகைப்படுத்தாமல் ஒவ்வொரு பாடலுக்கும் தனித் தலைப்பிட்டுத் தருவதை உதிரியாகப் பெயர் சுட்டிய நிலை எனலாம்.


தமிழக நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிடத் தொடங்கிய தொடக்க காலத்தை இப்பிரிவில் அடக்கலாம். தமிழில் முதல் தொகுப்பினை வெளியிட்ட மு. அருணாசலம், பாடல்களைப் பன்னிரண்டு பெயர்களில் உதிரியாகச் சுட்டுகின்றார். சாம்பமூர்த்தி பத்தொன்பது பிரிவுகளில் உதிரியாகப் பெயர் சுட்டியுள்ளார். இக்கால கட்டத்தில் பாடல்களை வகைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கும் பணி மிக அருகிக் காணப்பட்டதேயாகும். பாடல்கள் குறைவாகக் கிடைத்ததால் அவற்றை வகைப்படுத்தும் தேவை எழவில்லை. ஆயினும் வகைப்படுத்தும் முயற்சிக்கு இந்தத் தொடக்க காலகட்டமே தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகின்றது.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:03 pm

பல்வேறு அளவுகோல்களைக் கொண்டு வகைப்படுத்திய நிலை


பாடல் சேகரிக்கும் பணியில் பலர் ஈடுபடத் தொடங்கியதால் பல்வேறு வகைப்பட்ட பாடல்கள் கிடைத்தன. இவை அனைத்தையும் உதிரியாகப் பெயர் சுட்டுவது இயலாததொன்றாகும். எனவே, பாடல்களை உதிரியாகப் பெயர் சுட்டும் நிலைமாறி, தொடர்புடைய பாடல் தொகுதிகளைக் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வகைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தத் தேவையை உணர்ந்து இதனைத் தொடங்கி வைத்த பெருமை கி.வா. ஜகந்நாதனைச் சாரும். இவரைத் தொடர்ந்து அன்னகாமு, ஆறு. அழகப்பன், மா. கோதண்டராமன், மா. வரதராஜன், சு. சண்முகசுந்தரம் போன்றோர் இம்முயற்சியில் ஈடுபட்டனர்.


கி.வா. ஜகந்நாதன் பாடல் பாடப்படும் சூழல், பாடலால் பயன் பெறுவோர், பாடல் பொருண்மை, பாடல் வடிவம் - கதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை வகைப்படுத்தினார். பல்வேறு அளவுகோல்களைக் கொண்ட இந்த வகைப்பாடு பொருத்தமற்றதாக உள்ளது என்பதை உணர முடிகின்றது. அதைப் போலவே அன்னகாமு, ஆறு. அழகப்பன், மா. கோதண்டராமன், மா. வரதராஜன் ஆகியோரது வகைப்பாடுகளும் குறைவுடையவையாகவே உள்ளன. சு. சண்முகசுந்தரம் பாடல்கள் பாடப்படும் சூழல், பாடுவோர் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வகையாக வகைப்படுத்துகின்றார். பல அளவுகோல்களை வைத்து வகைப்படுத்திய வகைப்பாடுகளுள் இதுவே சிறப்பானதாகக் காணப்படுகின்றது. எனினும் சில வகைப் பாடல்களை இதில் அடக்க இயலவில்லை.


ஒரே அளவுகோலைக் கொண்டு வகைப்படுத்திய நிலை


முதன் முதலில் பொருண்மை என்ற ஒரே அளவுகோலைக் கொண்டு பாடல்களை வகைப்படுத்தியவர் நா. வானமாமலை.

1. தெய்வங்கள்
2. மழையும் பஞ்சமும்
3. தாலாட்டு
4. விளையாட்டு
5. காதல்
6. திருமணம்
7. குடும்பம்
8. சமூகம்
9. உழவும் தொழிலும்
10. ஒப்பாரி

என்று அவர் வகைப்படுத்துகின்றார். இவ்வகைப்பாடு நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டும் வருகின்றது.


ஒரு சூழலில் பாடப்படும் ஒரு பாடல் பல்வேறு பாடல் துணுக்குகளின் சேர்க்கையாகலாம், அவ்வகைப் பாடல்களில் பல்வேறு பொருண்மை அமைந்திருக்கும். பொருண்மை அடிப்படையில் வகைப்படுத்த வேண்டுமானால் ஒரு பாடலைச் சிறு சிறு துண்டுகளாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு மாற்றுவது பாடல் பாடுவோரின் திறமை, நினைவாற்றல், உத்திமுறை முதலியனவற்றை அறிந்து கொள்ளப் பயன்படாது. மேலும் காதல் பொருண்மை அமைந்த பாடலைத் தொழில் செய்யும் போது பாடினால் அது தொழிற்பாடலா காதற்பாடலா என்ற ஐயம் ஏற்படும். எனவே பொருண்மையை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு நுண்மையானது அல்ல என்று முடிவு செய்யலாம்.

சா. வளவன் மனிதப் பருவங்கள் என்ற ஒரே அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை மழலை, இளமை, முதுமை என்ற மூன்று பிரிவுகளில் அடக்க முயல்கிறார். ஆனால் அவர் இப்பிரிவுகளுக்கான வயது வரையறை எதுவும் செய்யவில்லை. இவர் தாலாட்டு, விளையாட்டுப் பாடல் முதலியனவற்றை மழலையிலும், காதல், தொழில், மணம் தொடர்பான பாடல்களை இளமையிலும், பக்தி, ஒப்பாரி, விழா, பொழுது போக்கு தொடர்பான பாடல்களை முதுமையிலும் அடக்குகின்றார். இந்த வகைப்பாடு பாடுவோரை அடிப்படையாகக் கொண்டது என்று கொண்டால் தாலாட்டினை இளமையிலும் முதுமையிலும் சேர்க்க வேண்டும். அது போல பக்தி, ஒப்பாரி, விழா, பொழுதுபோக்கு முதலியனவற்றை இளமையிலும் முதுமையிலும் அடக்கலாம். இந்த வகைப்பாடு பாடலின் பொருண்மையை அடிப்படையாகக் கொண்டது எனக் கொண்டால், இளமையில் பக்தி, ஒப்பாரி, பொழுதுபோக்கு முதலிய பொருண்மையுடைய பாடல்களைப் பாடமாட்டார்கள் என்றோ முதுமையில் காதல், மணம் போன்ற பொருண்மை அமைந்த பாடல்களைப் பாடமாட்டார்கள் என்றோ கூறமுடியாது. எனவே மனிதப் பருவங்களை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடும் பொருத்தமற்றதாகவே தெரிகின்றது.


புதிய வகைப்பாடு


இதுவரை கண்டவற்றால் தமிழக நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஒரு புதிய வகைப்பாடு தேவை என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. நாட்டுப்புறப் பாடல்களை அவை வழங்கும் ‘சமுதாயச் சூழல்’ அல்லது ‘வாழ்க்கைச் சூழல்’ என்ற ஒரே அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துவதே சிறப்பானதாகவும் பொருத்தமானதாகவும் தெரிகின்றது. (இதனை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆறு. இராமநாதன்) சூழலை அடிப்படையாகக் கொண்டு தமிழக நாட்டுப்புறப் பாடல்களைத் தாலாட்டு, குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், இழப்புப் பாடல்கள் என்று எட்டுப் பிரிவுகளாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:05 pm

நாட்டுப்புறப் பாடல்கள் - வகைகள்


மேற்காட்டிய எட்டுவகை நாட்டுப்புறப் பாடல்களையும் இனித் தனித் தனியாகப் பார்க்கலாம். அவற்றுக்குரிய சூழலை அறிந்து கொள்ளலாம்.


தாலாட்டுப் பாடல்கள்


குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் அல்லது தூங்கச் செய்யும் சூழலில் பொதுவாகத் தாயினால் தாலாட்டுப் பாடல் பாடப்படுகின்றது. "தால்" என்ற சொல்லுக்கு நாக்கு என்று பொருள். நாவினை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது. தாலாட்டு பேச்சு வழக்கில் ரோராட்டு, ஆராட்டு, ராராட்டு, ஓராட்டு, தாராட்டு என்றெல்லாம் வழங்கப்படுகின்றது. இவை நாவினை ஆட்டிப் பாடும்போது எழும் ஒலியால் பெற்ற பெயர்கள். பாடலமைப்பாலும், பொருண்மையாலும், பாடப்படும் சூழலாலும் தாலாட்டினைத் தனி வகையாகக் கருதலாம். இதனைக் குழந்தையின் தாய், பாட்டி, அத்தை, சகோதரி, செவிலி முதலியோர் பாடுவர். ஆண்கள் தாலாட்டுப் பாடுவதில்லை. விதிவிலக்காகச் சில நேரங்களில் பாடுவதுண்டு.


தாலாட்டுப் பாடல்களின் பொருளாக அமைவனவற்றைத் தொகுத்துப் பின் வருவனவற்றைத் தருகின்றார் பா.ரா. சுப்பிரமணியன்.


1. குழந்தை 2. அதற்கு வேண்டிய சாதனங்கள் 3. உறவினர்கள்


இப்பொருள்களின் விரிவாக அவர் கூறுவன :


1. குழந்தையை மையப் பொருளாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:
அ. குழந்தையின் அழகு, அருமந்தத்தன்மை
(அருமருந்தன்ன தன்மை), எதிர்காலம் இவற்றைப் பாராட்டல்.
ஆ. குழந்தையைப் பெறத் தாய் செய்த நோன்பு.


2. சாதனங்களை மையமாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:
அ. சாதனங்களின் அழகு, வேலைப்பாடு ஆகியவற்றைப் பாராட்டல்.
ஆ. அந்தச் சாதனங்களைச் செய்தவர்களுக்கும் பரிசாக அளித்தவர்களுக்கும் நன்றி கூறல்.


3. உறவினர்களை மையமாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:
உறவினர்களின் செயல் வீரத்தை, ஈகைத் திறனை, சொல் வளத்தைப் பாராட்டல்.


இப்பொருள்களும் அவற்றின் உட்கூறுகளும் தாலாட்டுப் பாடல்களுக்குரிய அடிப்படையான கருத்துகளாகின்றன.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:07 pm

நாட்டுப்புறப் பாடல்களுள் தாலாட்டுப் பாடல் வடிவம் அனைத்துச் சாதி மக்களிடமும் காணப்படுகின்றது. இன்றைய நிலையில் தாலாட்டுப் பாடுவது அருகி வருகின்றது. எதிர்காலத்தில் இப்பழக்கம் மறைந்து விடவும் வாய்ப்புள்ளது. பின்வரும் பாடல் குழந்தையை மையமாகக் கொண்ட தாலாட்டுப் பாடல் ஒன்றின் ஒரு பகுதி ஆகும். குழந்தையின் அருமையை, அது தனக்கு எத்தகைய இனிமையானது என்பதைத் தாய் மகிழ்ந்து பாடுகிறாள்.


ஆராரோ ஆரிராரோ - என் கண்ணே
ஆரிராரோ ஆராரோ
என் கண்ணே நவமணியே - என் அப்பா நீ
கல்கண்டு சர்க்கரையோ
என் தேனோ தினைமாவோ - என் கண்ணே நீ
தெகுட்டாத தேங்கனியோ
என் வெள்ளி நிலவோ நீ - என் தம்பிய
வெளிச்சமுள்ள பால்நிலவோ
என் காய்க்கப்பட்ட தோப்புலியும் - என் தம்பிய நீ
தனியப்பட்ட என் மாங்கனியோ.



[தெகுட்டாத - திகட்டாத; தோப்புலியும் - தோப்பிலேயும்]
[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 1; பக் - 112, 113]


குழந்தைக்குரிய கருவிகள் அவற்றைக் கொடுத்தோர் பற்றிய விவரங்கள் இடம்பெறும் தாலாட்டு :


பால் குடிக்கக் கிண்ணி
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்


(நா. வானமாமலை, 1964, ப. 82)


குழந்தையைத் தாலாட்டும் போது அதன் உறவினர்கள் - குறிப்பாகத் தாய் மாமன் பெருமையைச் சொல்லித் தாலாட்டும் பாடல்கள் பல உண்டு.

செக்கச் சிவப்பரோ - உங்க மாமா
சீமைக்கோர் அதிபதியோ
அழகு சிவப்பரோட - ஐயா நீ
அருமை மருமகனோ ? ....
முத்தளக்க நாழி
முதலளக்கப் பொன்னாழி
வச்சளக்கச் சொல்லி
வரிசையிட்டார் தாய்மாமன்


(நா. வானமாமலை, 1964, பக். 90-91)


குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள்


குழந்தை வளர்ச்சி நிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாடல்கள் மாறுபடுகின்றன. குழந்தை தவழும் போதும், உண்ணும் போதும், சாய்ந்தாடும் போதும், கை வீசும் போதும், கை தட்டும் போதும் பெற்றோரும் உற்றாரும் மகிழ்ந்து பாடி அச்செயல்களை மேலும் செய்யுமாறு குழந்தைகளைத் தூண்டுவர். மேலும் பெற்றோர் அம்புலி காட்டும் போதும், நாப்பயிற்சி அளிக்கும் போதும், சிரிப்பூட்டும் போதும் பாடல்களைப் பாடுவதும் பாடுவிப்பதும் உண்டு. பின்வருவன குழந்தைக்கு நாப்பயிற்சி அளிக்கப் பாடப்படும் பாடல்கள் ஆகும்.


1. "இது யாரு தச்ச சட்டை?
எங்க தாத்தா தச்ச சட்டை."
2. "கடலிலே ஒரு உரல் உருளுது பெரளுது
தத்தளிக்குது தாளம் போடுது."
3. ஓடுற நரியிலே ஒரு நரி சிறுநரி
சிறு நரி முதுகிலே ஒரு பிடி நரைமயிர் (ஓடுற...)


விளையாட்டுப் பாடல்கள்


குழந்தைகள் ஓடியாடி விளையாடும் சிறுவர்களாக மாறத் தொடங்கும் போது பெரியோர்களாலும் சற்று வளர்ச்சியடைந்த சிறுவர்களாலும் அவர்களுக்குப் பல்வேறு விளையாட்டுகள் கற்றுத் தரப்படுகின்றன. அந்த விளையாட்டுகள் பலவற்றுள் பாடல்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இவ்வாறு விளையாடும் சூழல்களில் பாடப்படும் பாடல்களை விளையாட்டுப் பாடல்கள் என்ற பிரிவில் அடக்கலாம். இந்த விளையாட்டுக்களை உடற்பயிற்சி விளையாட்டு [Physical Play], வாய்மொழி விளையாட்டு [Verbal Play] என இரண்டாக வகைப்படுத்தலாம்.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:08 pm

உடற்பயிற்சி விளையாட்டு


உடலுக்குப் பயிற்சி கொடுக்கும் விளையாட்டுகளை உடற்பயிற்சி விளையாட்டுகள் எனலாம். உடல் வலிவு பெற இத்தகைய விளையாட்டுகள் உதவுகின்றன. சடுகுடு, திம்பி, கண்ணாமூச்சி, வெயிலா நிழலா, ஏழாங்காய், கோலி முதலிய விளையாட்டுகள் இப்பிரிவில் சேரும். மேலும் வாழ்வில் நடைபெறும் வீடு கட்டல், திருமணம், இறப்புச் சடங்கு முதலியவற்றைத் தாங்கள் கண்டவாறே நடித்து விளையாடுவதைக் குழந்தைகளிடம் காண முடிகின்றது. இத்தகைய விளையாட்டுகளைப் போலச்செய்யும் விளையாட்டுகள் [Imitation Plays] என்று அழைக்கலாம். இவை பெரும்பாலும் உடற்பயிற்சி விளையாட்டுகளாகவே காணப்படுகின்றன.


காளை காளை வருகுதுபார்
கருப்புக் காளை வருகுதுபார்
சூரியனுக்கு வேண்டிவிட்ட
துள்ளுக்காளை வருகுதுபார்



[துள்ளுக்காளை - துடிப்பான அடக்க முடியாத காளை]
[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 1, பக் - 126]


மேற்கண்ட பாடல் ‘சடுகுடு’ விளையாட்டின் போது பாடப்படும் பாடல். பாடிச் செல்பவர் எதிரணியின் எல்லைக்குள் நுழையும்போது அந்த அணியினரைச் சீண்டுவது போலவும் சவால் விடுவது போலவும் இதைப் பாடுகிறார். இந்தப் பாடலைப் பாடும் போது பாடலின் இறுதிச் சொல் (வருகுதுபார்) திரும்பத் திரும்பப் பாடப்படும். இந்த அமைப்பு அனைத்துச் சடுகுடுப் பாடல்களிலும் இருக்கும்.


கண்ணாமூச்சி விளையாட்டில் குழந்தைகள் ஒருவர் கண்களை கட்டி விட்டு மற்றவர்கள் ஓடி ஒளிந்து கண்டுபிடித்து விளையாடும் போது பாடும் பாடல் ஒன்று.


"கண்ணாமூச்சி டேடே
காட்டுமூச்சி டேடே
உனக்கொரு பழம் எனக்கொரு பழம்
கொண்டுவா"



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:09 pm

வாய்மொழி விளையாட்டு


ஓரிடத்தில் இருந்துகொண்டே வாய்மொழியாக விளையாடும் விளையாட்டுக்களை வாய்மொழி விளையாட்டுக்கள் எனலாம். ஒருவரையொருவர் கேலி செய்து பாடும் கேலி விளையாட்டு, ஒருவருக்கொருவர் திறமைகளைக் காட்டிக் கொள்ளும் வினா விடை விளையாட்டு முதலியன இப்பிரிவில் சேரும். புதிர் விளையாட்டும் இப்பிரிவில் சேருமாயினும் புதிர்களை நாட்டுப்புற இலக்கியங்களின் ஒரு தனி வகையாகக் கொள்ளுவதால் அவற்றை இங்குச் சேர்க்கவில்லை.


அதோபார் காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணுவரா ஜோக்கா
ஏஞ்சிபோடா மூக்கா



[சீக்கா - சிகைக்காய்; ஏஞ்சி - எழுந்து]
[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 1, பக் - 135]


இந்தப் பாடல் கேலி செய்து பாடும் பாடல் ஆகும். ஒவ்வொரடியிலும் இறுதி எழுத்து ஒன்றி வரப்் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஓசைத் தொடர்பு அன்றிப் பொருள் தொடர்ச்சி ஏதுமில்லை.


கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேவல?
மழபெஞ்சுது நான் வேவல.
மழையே மழையே ஏன் பேஞ்ச?
புல்லு வளர நான் பேஞ்சேன்.
புல்லே புல்லே ஏன் வளந்த?
மாடு திண்ண நான் வளந்தேன்.
மாடே மாடே ஏன் திண்ண?
மாட்டுக்காரன் அவுத்துஉட்டான் நான் திண்ணேன்.
மாட்டுக்காரா மாட்டுக்காரா ஏன் அவுத்து விட்டே?
புள்ள அழுவுது நான் அவுத்துவிட்டேன்
புள்ள புள்ள ஏன் அழுவுற?
எறும்பு கடிச்சி நான் அழுவுறன்.
எறும்பே எறும்பே ஏன் கடிச்சே?
என் புத்துக்குள்ள கையஉட்டா சும்மா இருப்பேனா?



[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-1, பக்-140, 141]

இந்தப் பாடல் வினா - விடைப் பாடல் ஆகும். சிறுவர் சிறுமியர் விரும்பிப் பாடும் பாடல் வகைகளுள் இதுவும் ஒன்று. வினாக்கள் விடைகளிலிருந்து பிறப்பதைப் பாருங்கள். விடைகளில் சுவைக்கத் தக்க ஒரு விளையாட்டுத் தன்மை இருப்பதையும் இறுதிவிடை, வினாவுவோர் விடை சொல்வோர் இருவரும் சேர்ந்து சிரித்து மகிழத்தக்க முத்தாய்ப்பாக இருப்பதையும் கவனியுங்கள்.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:12 pm

தொழிற் பாடல்கள்


வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டியுள்ளது. செய்யும் தொழில்கள் வேறுபட்டாலும் கூட அவற்றின் நோக்கம் ஒன்றே. தொழிலில் ஈடுபட்டிருக்கும் சூழலில் தொழிலின் கடுமை தெரியாமல் இருக்கும் பொருட்டும் தொழிலுக்குத் துணைபுரிய வேண்டியும் பாடல்கள் பாடப்படுவதுண்டு. இவ்வகைப் பாடல்களைத் தொழிற் பாடல்கள் எனலாம்.


தொழிற் பாடல்களின் உள்ளடக்கங்களைப் பார்க்கும் போது தொழில்களை வேளாண்மைத் தொழில்கள் என்றும் வேளாண்மையல்லாத பிற தொழில்கள் என்றும் இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம்.


வேளாண்மைத் தொழில்கள்



வேளாண்மை செய்யும் சூழல்களில் பாடப்படும் பாடல்கள் அந்தந்தத் தொழில் பிரிவைக் குறிக்கும் பெயர்களாலேயே சுட்டப்படுகின்றன. சான்றாக, ஏற்றமிறைக்கும் சூழலில் ஏற்றமிறைப்போர் பாடும் பாடல்களை ஏற்றப் பாடல்கள் என்று அழைப்பதைக் காணலாம். இவ்வாறே ஏர்ப்பாடல், நடவுப் பாடல், களை வெட்டும் பாடல், அறுவடைப் பாடல் என்று பிற சூழல்களில் பாடப்படும் பாடல்கள் பெயர் சுட்டி அழைக்கப்படுகின்றன.


வேளாண்மைத் தொழில் பாடலுக்குச் சான்றாகப் பின்வரும் ஏர்ப்பாடலைக் கூறலாம்.


காளேஏஏ நல்ல சந்திரரே சூரியரே என்தோழி காளையரே
எங்கள் சாமி பகவானே
காளேஏஏ அங்க காளே கரப்புக்காளே என்தோழி காளையரே
அங்க கண்ணாட்டி மயிலக்காளே
காளேஏஏ அங்க சூடுபோட்ட வெள்ளக்காளே என்தோழி காளையரே
அங்க சுத்துதங்க மத்தியானம்
காளேஏஏ அங்க கூடைமேல கூடடுக்கி என்தோழி காளையரே
அங்க கோயிலுக்குப் போறபெண்ணே
காளேஏஏ அங்க கூடைமேலே சிந்தையா என்தோழி காளையரே
அங்க குணமெல்லாம் மாறுதங்க.



[கூடடுக்கி - கூடை அடுக்கி]
[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-1, பக்-149]


சந்திர சூரியரை வணங்கித் தொடங்கப்படும் உழவுத் தொழிலைக் குறிக்கும் இப்பாடல் முதலில் காளைகளை நலம் பாராட்டுகிறது. பின்னர்க் கோயிலுக்குப் போகிற பெண்ணைப் பற்றிச் சுட்டுகிறது.


களையெடுக்கிறவர்கள் பாட்டு. அவர்கள் களையை மட்டுமா கவனிக்கிறார்கள்? பாடுகிறவன் கவனம் எப்படிப் போகிறது, பாருங்கள்:


கண்ணாடி வளையல் போட்டுக்
களையெடுக்க வந்த புள்ள
கண்ணாடி மின்னலில
களையெடுப்புப் பிந்துதடி.



(நா. வானமாமலை, 1964, பக். 402)



களையெடுப்பு எனும் புறப்பொருளில் காதல் என்னும் அகப்பொருளும் கலந்து விடுகிறது. பல பாடல்களில் எளிய மக்களின் இயல்பான காதலுணர்வு தொழிலோடு சேர்ந்து இணைந்து வருவதைப் பார்க்க முடியும்.


அத்தை மகன் கிணற்றில் கமலை கட்டித் தண்ணீர் பாய்ச்சுகிறான். மாமன் மகள் பாடுகிறாள். அவள் ஆசையில் அந்த நீர் சர்க்கரையாகிறது.


செடியோரம் கெணறு வெட்டி
செவலைக் காளை ரெண்டு கட்டி
அத்தைமகன் ஓட்டும் தண்ணி
அத்தனையும் சக்கரையே


(நா. வானமாமலை, 1964, ப. 406)



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:13 pm

வேளாண்மையல்லாத பிற தொழில்கள்


வேளாண்மை அல்லாத பிற தொழில்கள் செய்யும் போது பாடப்படும் பாடல்களையும் அந்தத் தொழில் பெயர்களாலேயே சுட்டலாம். நெல் குற்றும் பாடல், சுண்ணாம்பு இடிக்கும் பாடல், பாரஞ்சுமக்கும் பாடல், வண்டியோட்டும் பாடல், மீன் பிடிப்புப் பாடல் முதலியன இவ்வகையுள் அடங்கும்.


இவ்வகைக்குச் சான்றாகப் பின்வரும் மாடு மேய்ப்புப் பாடலைக் கூறலாம்.

டே என்னாரே டேயோ டேயோ - அம்மா
டே என்னாரே டேயோ டேயோ
ஓட்டுங்கடா மாட்ட நல்ல - அங்க
உளுத்தங் கொல்ல ஓரம்போகும்
சாயுங்கடா மாட்டநல்ல - தம்பி
சாமங்கொல்ல ஓரம்போகும்
என் அண்ணன்மாரே தம்பிமாரே - அங்க
எடுக்க வாரும் எந்தன் பில்ல
அங்க பொழுதுபோச்சே நேரமாச்சே - அங்க
ஓட்டுங்கடா மாட்டநல்ல - அங்க
உளுத்தங் கொல்ல ஓரம்போகும் - அங்க
சாயுங்கடா மாட்டநல்லா அங்க
சாமங்கொல்ல ஓரம் போகும்



[வரிகள் 1,2 - மாடு ஓட்டும் ஒலிக் குறிப்பு; எந்தன் பில்ல - எந்தன்புல்லை
(அறுத்துக் கட்டி வைத்திருக்கும் புல்லை)]
[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-2, பக் - 57]


தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள், குடியானவர்கள் என்று அழைக்கப்பட்ட சாதியினரிடம் மாடு மேய்க்கும் பணியில் அமர்வர். ஒரு வீட்டை அல்லது சில வீடுகளைச் சேர்ந்த மாடுகளை ஓட்டிச் சென்று மாடு மேய்ப்பர். இந்தப் பாடல் அது போன்ற சூழல்களில் பொழுது போக்குவதற்காகப் பாடப்பட்ட பாடல்களுள் ஒன்று.


மீனவர்கள் படகில் துடுப்புத் தள்ளுகிறார்கள், வானம் கிடுகிடுக்கிறது; இடி முழங்குகிறது.


மானம் நல்ல ஏலேலோ கிடுகிடுங்க ஐலலோ
கிடுகிடுங்க ஐலலோ
மத்தளமே ஏலேலோ ஓசையிட ஐலலோ
ஓசையிட ஐலலோ



(சு. சண்முகசுந்தரம், 1975 ப. 198)


என்று பாடுகிறார்கள்.


சாலை அமைப்போர் மண்ணை வெட்டிப் போடும் போது,


ஒரு தட்டு ஏலேலோ மண்ணெடுத்து ஐலசா
நான் போட்ட ஏலேலோ ரயிலுரோட்டு ஐலசா.



(சு. சண்முகசுந்தரம், 1985, ப. 197)


என்று பாடுகிறார்கள்.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:14 pm

வழிபாட்டுப் பாடல்கள்


தங்களுக்கு நன்மை வேண்டும் போதும், நன்மை கிடைத்த போது அந்த நன்மை கிடைக்கச் செய்ததற்காக நன்றி செலுத்தும் போதும் கிராமப்புற மக்கள் தெய்வங்களை வழிபட்டுச் சிறப்புச் செய்வர். கிராமப் புறங்களில் பெருந்தெய்வ வழிபாடு காணப்பட்டாலும் நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகளே மிகுதி. அவ்வாறு வழிபடும் காலங்களில் வழிபடும் தெய்வங்களைக் குறித்துப் பாடல்கள் பாடப்படும். அம்மை வார்த்திருக்கும் போது மாரியம்மனை வேண்டிப் பாடல் பாடப்படும். பூசை, நோன்பு, சாமி ஊர்வலம் முதலிய சூழல்களில் பாடல்கள் பாடப்படும். இவ்வாறு தெய்வங்களை வழிபடும் சூழல்களில் பாடப்படும் பாடல்கள் அனைத்தையும் வழிபாட்டுப் பாடல்கள் என்ற பிரிவில் அடக்கிக் கொள்ளலாம். தொழில் செய்யும்போது பாடப்படும் பாடல்களிலும் தெய்வங்களைப் போற்றி வழிபடும் பாடல்கள் இடம்பெறும். வழிபாடு அதன் பொருளாக இருந்தாலும் பாடப்படும் சூழலால் அவற்றைத் தொழிற் பாடல்கள் என்று கருத வேண்டுமேயொழிய வழிபாட்டுப் பாடல்கள் என்று கருதக் கூடாது.


திண்டிவனம் பகுதியில் உள்ள வெள்ளிமேடுப்பேட்டை எனும் ஊரில் சேகரிக்கப்பட்ட வழிபாட்டுப் பாடல் ஒன்று எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது.


கெங்க கரைமேல
கரவங்க ஜோடிச்சி
மாய சஞ்சுதா இத
மாயமா போறாளே
ஆத்தங்கரை ஓரம்
கரவங்க ஜோடிச்சி
மாய சஞ்சுதா இது
மாயமா போறாளே



[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-2, பக் - 76]


நாட்டுப்புறத் தெய்வங்களை தூக்கிக் கொண்டு ஊர்வலமாக வரும் பழக்கம் இந்தப் பகுதியில் உண்டு. அவ்வாறு வரும் முன் நீர் நிலைக்குச் சென்று, கரகம் சோடித்து, பாட்டுப் பாடி, தெய்வத்தை வரவழைத்த பின் ஊர்வலம் புறப்படும். இந்தப் பாடல் கன்னிமார் சாமி தூக்குவதற்கு முன் கரகம் சோடிக்கும் போது பாடப்படும் பாடல் ஆகும்.

குறிப்பிட்ட வேண்டுதல்கள் சொல்லித் தெய்வத்தை வழிபடுவதுண்டு - வயிற்றுவலி தீர வேண்டுமாம், பாட்டு வருகிறது :


நாட்டரசன் கோட்டையிலே
நல்லதொரு கண்ணாத்தா
வயித்தவலி தீர்த்தியானா
வந்திருவேன் சன்னதிக்கே



(கண்ணாத்தா - கண்ணகியைக் குறிக்கும்)


ஒரு பெண் பிள்ளையாரிடத்தில் குழந்தை வரம் கேட்கிறாள்


நத்தத்துப் பிள்ளையாரே
நான் நடந்தேன் மாதாந்தம்
கைக்குழந்தை தந்தியானா-உனக்கு
கடைவிளக்கு நான்விடுவேன்



(நா. வானமாமலை, 1964, ப. 53, 55)



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:16 pm

கொண்டாட்டப் பாடல்கள்


கொண்டாட்டம் என்ற சொல்லுக்கு சந்தோஷம், உற்சவம் முதலிய விசேஷங்கள் என்று தமிழ்ப் பேரகராதி பொருள் கூறுகின்றது. மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கொண்டாட்டம் எனலாம். கொண்டாட்டமான சூழல்களில் பாடப்படும் அனைத்துப் பாடல்களையும் கொண்டாட்டப் பாடல்கள் என்று வகைப்படுத்தலாம். கொண்டாட்டப் பாடல்களைச் சமுதாயத்திற்குரியவை, குடும்பத்திற்குரியவை என இரண்டாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.


சமுதாயத்திற்குரிய கொண்டாட்டப் பாடல்கள்



பொங்கல், தீபாவளி போன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளின் போதும், கார்த்திகை தீபம், ஆடிப்பெருக்கு போன்ற சில பகுதிகளுக்குரிய விழாக்களின் போதும், நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டு விழாக்களின் போதும் மக்கள் பல்வேறு களியாட்டங்களில் ஈடுபடுவர். மக்கள் தாங்களே களியாட்டங்களில் நேரடியாகப் பங்குபெறுவதும் கலைஞர்களைக் கொண்டு களியாட்டங்கள் நிகழ்த்தச் செய்து அதைக் கண்டு கேட்டு மகிழ்தலும் உண்டு. சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில கலைஞர்கள் தாங்களாகவே களியாட்டங்கள் நிகழ்த்தி வெகுமதி பெறுதலும் உண்டு. இச் சூழலில் பாடல்கள் பாடப்படும். இத்தகைய பாடல்களை சமுதாயத்திற்குரிய கொண்டாட்டப் பாடல்கள் எனக் கூறலாம். இப்பாடல்களைப் பொது மக்கள் பாடல்கள், கலைஞர் பாடல்கள் என்று இரண்டாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.

பொதுமக்கள் பாடல்கள்


பொதுமக்கள் கும்மி, கோலாட்டம் முதலியவற்றில் நேரடியாகப் பங்கு பெறும் சூழல்களில் பாடப்படும் பாடல்களைப் பொதுமக்கள் பாடல்கள் என்று கூறலாம். சான்றாகப் பின்வரும் பாடலைக் காண்போம்.


ஒரு சொம்பு லே லேலே நீரெடுத்து
ஊத்துங்கடி லே லேலே பூஞ்செடிக்கு
கிள்ளுங்கடி லே லேலே முல்லரும்ப
சாத்துங்கடி லே லேலே சரஸ்வதிக்கு


ரெண்டுசொம்பு லே லேலே நீரெடுத்து
. . . . . . . . . . . . . . . . . .


[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-2, பக் - 82]





இந்தப் பாடல் ஒரு கும்மிப் பாடல் ஆகும். பெண்களில் ஒருவர் ஓர் அடியைப் பாட ஏனைய பெண்கள் அதே அடியைத் திரும்பப் பாடிக் கும்மியடிப்பர். இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகள் திரும்பத் திரும்பப் பாடப்படும். அவ்வாறு பாடப்படும் போது முதல் வரியின் முதற் சொல்லான ‘ஒரு சொம்பு’ என்பது மட்டும் ‘ரெண்டு சொம்பு’, ‘மூன்று சொம்பு’ எனப் பத்து வரை எண்ணிப் பாடப்படும். இவ்வாறு எண்ணை மட்டும் மாற்றிப் பாடலைத் திரும்பத் திரும்பப் பாடிக் கும்மியடிப்பர்.


கலைஞர் பாடல்கள்


கலைஞர்கள் பொதுமக்களின் ஆதரவுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவர். விழாக்களின் போது நிகழ்பவை இவை. கரகாட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம், மயிலாட்டம் முதலியவை பாடல் இடம்பெறாத கலை நிகழ்ச்சிகள். பாடல் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளும் மிகுதியாக இடம்பெறும். அப்பாடல்களில் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளும் உண்டு; கதைத் தொடர்பில்லாத நிகழ்ச்சிகளும் உண்டு.


கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளுள் கதைப் பாடல் நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, தெருக்கூத்து, தோல் பொம்மலாட்டம், கொலைச் சிந்து ஆகியன சிறப்புடையன. இவை ஒவ்வொன்றும் தனித் தன்மை கொண்டவை. எனினும் இவை அனைத்தும் அவற்றுக்கென்றே உரிய கலைஞர்களால் பாடப்படுபவை; கதையோடு தொடர்புடைய பாடல் நிகழ்ச்சிகள் என்ற அளவில் ஒன்றுபடுகின்றன. இத்தகைய

நிகழ்ச்சிகளின்போது கதையோடு தொடர்பற்ற உதிரிப் பாடல்களும் இடம் பெறுவதுண்டு. இத்தகைய பாடல்களில் பல அந்தந்தக் கால நிகழ்ச்சிகளைச் செய்தியாகவோ, விமர்சனமாகவோ வெளியிடுவனவாக இருக்கும். இதில் பஞ்சப் பாடல், புயல் - வௌ்ளப்பாடல், விபத்துப் பாடல் முதலியன அடங்கும். இவை தவிர நகைச்சுவையை முதல் நோக்கமாகக் கொண்ட ஏராளமான உதிரிப் பாடல்களும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பாடப்படும். பொதுவாக இந்தப் பாடல்கள் கதைத் தொடர்பு நிகழ்ச்சிகளின்போது பாடகன் ஓய்வு வேண்டும் போதோ அல்லது நன்கொடைகள் பெறும்போதோ பாடப்படும். இத்தகைய பாடல்களுக்குச் சான்றாகத் தெருக் கூத்தின் போது பாடப்படும் பின்வரும் பாடலைக் கூறலாம்.


தற்கால நாகரிகம் தலையகெடுக்குது இப்ப
டிராமா சினிமா வந்து பெண்கள் துணிய
கெடுக்குது ஆத்தில்கட்டும் பாலம்போல
பூவவைக்கிறாங்கோ அதை பார்த்த மைனர்
பதைபதைத்து துடிதுடிக்கிறாங்க ஆலம்விழுத
போலஜிமிக்கி ஆள மெரட்டுது - அத கண்ணால்
கண்ட மைனரெல்லாம் கண்ணடிக்குது
தங்கமெல்லாம் மாறிப்போச்சு தங்கம் தில்லாலே - இது
வாத்தியார் மாணிக்கப் பாட்டுஇது தாங்கு தில்லாலே
தைதோம் தைதோம் தித்தித்தா.



[ஆறு. இராமநாதன்;
2001, தொகுதி - 3, பக் - 66]


[தலைய - தலையலங்காரத்தை; மைனர் - Minor, பதினெட்டு வயது நிரம்பாத இளைஞன்; ஜிமிக்கி சிறு குடை வடிவில் உள்ள மகளிர் காதணி, தொங்கட்டான்]


கலைஞர்கள் கதைத் தொடர்பில்லாத நிகழ்ச்சிகளான கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம் போன்றவற்றின் இடையிடையே பாடுவதும் உண்டு. இதற்குச் சான்றாகக் கரகாட்ட நிகழ்ச்சியின் இடையே பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களைக் கூறலாம்.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:18 pm

மஞ்சக்கொல்ல நரிக்கொறவங்க நாங்களசாமி - திருச்சி
மண்டலத்த சுத்திவருவங்க கேளுங்கசாமி அஆ
மண்டலத்த சுத்திவருவங்க கேளுங்கசாமி
சாமிய மறக்கமாட்டோம் சாமி
சத்தியங்க செய்யமாட்டோம்
குளிச்சி மொழுவ மாட்டோம் சாமி
கோவிலுக்கோ போகமாட்டோம்
பொய்பொருட்டு பேசமாட்டோம் சாமி
போலீசு கச்சேரி போகமாட்டோம்
ஊருஊரு சென்றிடுவோம் சாமி
ஒன்றாவந்து சேர்ந்திடுவோம்
பச்சமணி பவளமணி நாங்களசாமி இந்த
பட்டணத்தில் கட்டிவருவோம் கேளுங்க சாமி அஆ
பட்டணத்தில் கட்டிவருவோம் கேளுங்கசாமி
ஏழுபான பொங்கவப்போம் சாமி
எருமகெடா வெட்டிபடைப்போம்
எருமகெடா வெட்டயிலே சாமி
ஏகசத்தம் போட்டிடுவோம்



[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-3, பக் - 115, 116]


இந்தப் பாடல் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உறுமிசெட் பாடல் என அழைக்கப்படுகின்றது. இதில் நரிக் குறவர்களின் வாழ்க்கை முறை, இயல்புகள், தொழில், வழிபாடு முதலியன பற்றிக் கூறப்பட்டுள்ளது.


குடும்பம் தொடர்பான கொண்டாட்டப் பாடல்கள்


குடும்பத்திற்குரிய கொண்டாட்டங்களில் அந்தக் குடும்பத்தினரும் உறவினரும் மட்டுமே கலந்து கொள்வர். காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம் அதனைச் சார்ந்த விழாக்கள், வளைகாப்பு விழா முதலியன குடும்பம் தொடர்பான கொண்டாட்டங்களாகும். இக்கொண்டாட்டச் சூழல்களில் பாடப்படும் பாடல்களை அந்தந்த

நிகழ்ச்சிகளின் பெயரால் காதணி விழாப் பாடல்கள், மணவிழாப் பாடல்கள், சம்பந்தப் பாடல்கள், வளைகாப்புப் பாடல்கள் என்று பெயர் சுட்டிக் குறிப்பிடுவர். ஒரு மணவிழாப் பாடலைப் பாருங்கள். மணவிழாவில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கிடையே கேலிகள் கிண்டல்கள், நகைச்சுவைப் பேச்சுகள் நிறைந்திருக்குமல்லவா! விழாவைக் காண்போர்க்கு இத்தகைய பேச்சுகள் சுவையாக இருக்கும். நாட்டுப் பாடல்களில் இச்சுவையைக் காணலாம்.


ஏரி(யி)லே மேஞ்சிவரும்
எரும ஒதடனுக்க
வச்சிருந்து பொண்குடுத்தன்
வரணப்ப சுங்கிளிய


குட்டையில மேஞ்சிவரும்
குணுக்கு ஒதடனுக்கு
வச்சிருந்து பொண்குடுத்தன்
வரணப்ப சுங்கிளிய


[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 3, பக் - 169]
[குணுக்கு - பணியார வகைகளுள் ஒன்று, மாதர் காதணிகளுள் ஒன்று]


இந்தப் பாடலில் மணமகள் வீட்டார் மணமகனைக் கேலி செய்வது தெரிகிறதல்லவா? அதே போல் மணமகளை மணமகனின் சகோதரிகள் கேலி செய்தும் பாடுவர்.


கொக்குக் கழுத்துபோலக்
குறுங்கொடிந்த மங்கையர்க்கு - எங்கள்
கோவேந்தன் தம்பியரும்
எங்கிருந்து வாய்ச்சார் காண்.



(சு. சண்முகசுந்தரம், 1975, ப. 201)


மணமகளை அவள் நாத்தனார், நாழி அரிசி வடிக்கத் தெரியாதவள் என்றும், தன் அண்ணனிடம் சரணடைந்தாள் என்றும் பாடுகிறாள். கேலி சற்று முற்றி ஏச்சுப் போலத் தோன்றுவதும் உண்டு.

நெய்க்கிணறு வெட்டி
நிழல் பார்க்கப் போகும்போது - என்
அண்ணார் அழகைக் கண்டு
பெண்ணாள் சரணமென்றாள்
பால்கிணறு வெட்ட
பல்விளக்கப் போகும்போது - என்
அண்ணார் அழகைக் கண்டு
பெண்ணாள் சரணமென்றாள்
நாழி வரவரிசி நயமாய் வடிக்கிறியா?
நாதேரிச் சிறுக்கிமகள் எங்கிருந்து வாச்சாளோ?
உழக்கு வரவரிசி
உருவா வடிக்கிறியா
ஊதாரிச் சிறுக்கிமகள்
எங்கிருந்து வாச்சாளோ?



(நா. வானமாமலை,
1564, ப. 282)



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:20 pm

இரத்தல் பாடல்கள்


இரத்தலாவது யாசித்தல். ஊர் ஊராகச் சென்று யாசித்து வாழ்வதையே வாழ்க்கையாக உடைய நாடோடிகள் பலர் உள்ளனர். பிச்சைக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், குறி சொல்லிகள், உண்டிபிலிகாரர்கள் முதலியோர் இவ்வகையினர். இவர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை முதலியவற்றை யாசிக்கும்போது பாடல்கள் பாடுவதுண்டு. பெரும்பாலும் பாடுவோரின் தேவை பற்றியும், பொருளளிப்போரின் சிறப்பு, எதிர்காலம் பற்றியும் பாடல்கள் அமைந்திருக்கும். பொருள் தர மறுப்போரின் கருமித் தனத்தைக் கேலி செய்யும் பாடல்களும் உண்டு. இவை அனைத்தும் இரத்தலையே - யாசித்தலையே - முதன்மை நோக்காக உடையவை. ஆதலால் இவற்றை இரத்தல் பாடல்கள் என ஒரு பிரிவில் அடக்குவது பொருத்தமானது ஆகும்.

கஞ்சி குடுவகொண்டு நானு
கருவேட்டு மண்ட சுட்டு
இஞ்சி தொய்யிலுடனே நானு
இளங்கொ டியாள் கொண்டு வந்தேன்
மாடறக்கும் காவலனே நானு
மங்கையாள் வாடுறனே.



[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 3, பக் - 185]

[தொய்யிலுடனே - துவையலுடன்; மாடறக்கும் - மாடு அறுக்கும்]


இந்தப் பாடல் வீடுவீடாகப் பாடி உணவு, காசு முதலியன வாங்கிச் செல்லும் நோக்கர் எனும் இனத்தவர் பாடிய பாடலின் ஒரு பகுதி ஆகும்.


பெருமாள் மாட்டுக்காரன் பாடி இரக்கிறான் :


சிரிச்சமுகத்தோட
சீதேவி கையோட - ஆயாநீ
கொடுத்தும் குறையாது
குறைவந்தும் நிற்காது.



பிச்சைக்காரி பாடுகிறாள் :


உன்னாட்டம் பெண்ணுக்கு
ஏசாதே பேசாதே - அம்மா
காலணா அரையணா - அம்மா
கால்காசு அரைக்காசு - அம்மா



எவ்வளவு கெஞ்சல் இந்தப் பாட்டில் அடங்கியிருக்கிறது, பாருங்கள்!


குடுகுடுப்பைக்காரன் தேவதைகளை வரவழைத்துப் பாடுகிறான்


காளி கபாலி மகா சூலி மகேஸ்வரி
கருணை செய்ய ஓடி வா.



பண்டாரங்கள் பாட்டில் குறியீடாகத் தத்துவம் மிளிர்கிறது.

நந்த வனத்திலார் ஆண்டி
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி



(சு. சண்முகசுந்தரம், 1975, ப. 204 - 205)



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டுப்புறப் பாடல்கள்

Post by சிவா on Tue Sep 14, 2010 10:22 pm

இழப்பு (ஒப்பாரி)ப் பாடல்கள்


மிக நெருங்கியவர்களையோ உடைமைகளையோ இழக்கும் போது ஏற்படும் சோகத்தில் பாடப்படும் பாடல்களை இழப்புப் பாடல்கள் எனலாம்.சாவை ‘இழவு’ எனும் சொல்லால் குறிப்பது உண்டல்லவா! மகளிர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு; கலைஞர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு. இறந்து போனவரின் உறவினர்களாகிய பெண்கள் ஒப்பாரி வைத்துப் பாடுவது நாம் அறிவதே. சில இடங்களில் சாவு நிகழ்ச்சியில் கூலி வாங்கிக் கொண்டு ஒப்பாரி பாடுவதற்கென்று கலைஞர்களே உள்ளனர் என்பது நாம் அறியத்தக்க செய்தி.


மகளிர் பாடுவன


நெருங்கிய உறவினர்கள் இறக்கும்போது இழப்பின் துயரம் தாங்காமல் அழும் மகளிர் இறந்தவர்களின் சிறப்புகளையும் அவர்களை இழந்ததால் தாம் அடையப் போகும் துயரங்களையும் பாடலாகப் பாடுவர். கணவன், பிள்ளைகள், தாய், தந்தை, உடன்பிறந்தோர், மாமனார், மாமியார், கொழுந்தன், கொழுந்தி, சுற்றத்தார் ஆகியோர் இறக்கும் போது பாடுவதற்கென்று ஒவ்வொருவர் இழப்பையும் குறிக்கும் தனித் தனிப் பாடல்கள் உள்ளன. இறந்தவுடன் பாடப்படும் பாடல், எட்டாம் நாள் பதினாறாம் நாள் சடங்கில் பாடப்படும் பாடல், இறந்து பல ஆண்டுகள் நினைத்து நினைத்து அழும் பாடல் என்று இப்பாடல்கள் அமைந்துள்ளன. ஆயினும் உயிர் இழப்புப் பாடல்களை அவை பாடப்படும் சூழல்களில் சேகரிக்க இயலாது ஆகையாலும் ஒரு காலத்தில் பாடிய பாடல் மற்ற காலங்களில் பாடப்பட மாட்டாது எனத் திட்டமாகக் கூறவியலாதாகையாலும் ஒரே பாடலே அனைத்துச் சூழல்களிலும் சிற்சில மாறுபாடுகளுடன் பாடப்படுகின்றதாகையாலும் இவற்றைத் தனித் தனியே தெளிவான வகையாகப் பிரிப்பது இயலாமல் போகிறது. எனவே, இவற்றை உயிர் இழப்புப் பாடல்கள் என்ற ஒரே பிரிவில் வகைப்படுத்திக் கொள்வதே பொருத்தம். பாடப்படும் சூழலிலேயே பாடலைப் பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டால் பாடலின் குறிப்புரையில் அதனைக் குறிப்பிடலாம். உயிர் இழப்புப் பாடல்கள் ஒப்பு, ஒப்பாரி, விண்ணாலம், அழுகாச்சி என்ற சொற்களால் சுட்டப்படுகின்றன.

பாம்பு கடித்து இறந்த கணவனை நினைத்துப் பெண் ஒருத்தி பாடும் பாடலைப் பார்க்கலாம்.


கருப்புக்கர வேஷ்டித்துண்டு
காராளனா போடுந்துண்டு
காராளனும் கன்னியாளும்
கலந்து படுக்கும்போது
கருந்தல நாகேந்திரன்
செவுரேறி வந்ததென்ன
கன்னிய விட்டுப்போச்சி - கன்னிக்கு வந்த
காராளன தொட்டதென்ன.


செவப்புக்கர வேஷ்டித்துண்டு
சீராளனா போடுந்துண்டு
சீராளனும் செல்வியாளும்
சேர்ந்து படுக்கும்போது
செந்தல நாகேந்திரன்
செவுரேறி வந்ததென்ன
செல்விய விட்டுபோச்சி - செல்விக்கு வந்த
சீராளன தொட்டதென்ன.


[ஆறு. இராமநாதன்
2001, தொகுதி 3, பக். 188]


(காராளன் - வேளாளன்; கன்னியாள் - திருமணமானவள் தான்; மோனைக்காகக் கன்னியாக மாறியுள்ளாள்; செவுரேறி - சுவர் ஏறி.)


இது எதிர்பாராத அதிர்ச்சி தந்த சாவு. கணவனை இழந்த இழப்பை மட்டுமே காட்டும் பாடல்.


நம் நாட்டில் கணவனை இழந்த விதவை எஞ்சிய வாழ்நாளில் எவ்வளவோ இழக்கிறாள். தாலி நகை, பட்டு, மங்கலச் சின்னங்கள், ஊராரின் மதிப்பு போன்றவற்றையும் இழக்கிறாள். இவற்றையெல்லாம் சொல்லி அழுவதுண்டு.

கடுகு சிறுதாலி
கல்பதிக்க அட்டியலாம்
கல்பதிக்க அட்டியலை - நான்
கழட்டி வைக்க நாளாச்சே
பட்டு கழட்டி வச்சேன்
பாதம் வரை வெள்ளையிட்டேன்
சிகப்பு கழட்டி வச்சேன் - என்
தேகமெல்லாம் வெள்ளையிட்டேன்



விதவையை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? உறவினர் மதிப்பதில்லை; ஊராரும் மதிப்பதில்லை; உடன் பிறந்தோர் மனைவிகள் விதவையைப் புறக்கணிக்கின்றனர்.


கள்ளிமேல் கத்தாழ
கருணனெல்லாம் எம்பிறப்பு
கருணனுக்கு வந்தவளே - என்னை
மதிக்காளில்லே



விதவை ஊருக்குள் நடுமாடுவதே முடியாததாகி விடுகிறது.


பொன்னு அடுப்பு வச்சு
பொங்க வச்சேன் சாதங்கறி
பொங்கி வெளியவந்தா
பொகை போவச் சன்னலுண்டு
பொங்கி வெளியே வந்தா
புருசனில்லாப் பாவியென்பார்


(நா. வானமாமலை, 1964, ப. 455, 458, 484)


கலைஞர் பாடுவன


சாவு வீடுகளில் பாடல் பாடி மாரடிப்பதற்கென்றே சில கலைஞர்கள் உள்ளனர். தமிழகத்தின் தென் பகுதிகளில் இப்பழக்கம் காணப்படுகின்றது. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வழங்கும் ‘கூலிக்கு மாரடிப்பவர்’



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790830 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum