ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மோட்ச விளக்கு

View previous topic View next topic Go down

மோட்ச விளக்கு

Post by சிவா on Wed Sep 15, 2010 1:39 am

நிறைவாக வாழ்ந்த மனித உயிர் உடலைப் பிரிந்த பிறகு சொர்க்கலோகம் போகும் என்பது தமிழரின் பொதுவான நம்பிக்கை. இப்படி இறந்து போனவரின் உயிரை சொர்க்கத்துக்கு வழியனுப்பும் சடங்கு 'மோட்ச விளக்கு' என அழைக்கப்படுகிறது. இச்சடங்கு பல்வேறு சாதியினரிடையே வழக்கத்திலும் உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஈத்தாமொழியில் நாடார் சமூகத்தில் 80 வயதுவரை வாழ்ந்து பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், கண்டு இறந்து போன ஒரு அம்மையாருக்கு 'மோட்ச விளக்கு' எடுத்தபோது செய்யப்பட்டச் சடங்குகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இச்சடங்கு இறந்த 16ம் நாள் அன்று நடத்தப்படுகிறது. வீடு வெள்ளையடிக்கப்பட்டு, சட்டி பானையெல்லாம் மாற்றப்பட்டு, ஒரு வாரம் தயாரிப்பு வேலைகள் நடத்தப்படுகின்றன. 16ம் நாள் அன்று இச்சடங்கு நடத்துவதற்கென்று, ஒதுக்கப்படும் அறையை விட்டுப் பெண்கள் கழுவி மெழுகி கோலமிட்டு அழகுபடுத்துவார்கள்.

மாலையில் சொந்தக்காரர்களெல்லாம் வீட்டில் கூடுவார்கள். ஒவ்வொருவரும் பனைநாரில் பின்னப்பட்டப் பெட்டியில் தத்தம் தகுதிக்கு ஏற்றாற்போல அரிசியும், குப்பியில், தேங்காய் எண்ணெய்யும் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு அவித்த பெரும் பயறு வழங்கப்படுகிறது.

இச்சடங்கில் முக்கியமாகக் கலந்துகொள்ள வேண்டியவர்கள் இறந்தவரின் சொக்காரன்மார்கள். அதவாது பங்காளிகள்.

இறந்துபோனவரை வழிபடுவதற்கென்று மெழுகிக் கோலமிடப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு வாழை இலையை விரித்து, அதில் இறந்து போனவருக்குப் பிடித்தமான சோறு கறிவகைகள், பண்டங்கள் எல்லாம் இறந்தவரின் மூத்த மகன் (அவர் இல்லையென்றால் அந்த உரிமைக்குரிய அடுத்தவர்) படைக்கிறார்.

இறந்து போனவருக்கு பீடி, சுருட்டு, சாராயம் படைக்கப்படுகின்றன. படைப்புக்குச் சாம்பிராணி புகை காட்டிப் பூசை செய்கிறான் மூத்தமகன். அவனுக்குக் குடிமகன் உதவுகிறான்.

பின் மூத்தமகனும், சொக்காரன்மாரும், பாடையில் வரிசையாகக் குழிக்கரைக்கும் (புதைக்கப்பட்ட இடம்) போகிறார்கள். குடிமகன் சங்கு ஊதிக்கொண்டு முன்னே போகிறான். உறவினர்கள் நண்பர்கள் பின்னால் போகிறார்கள். குழிக்கரையை அடைந்ததும் சங்கு ஊதிக்கொண்டே எல்லோரும் குழியைச் சுற்றி வருகிறார்கள். கொண்டு வந்த சாமான்களைக் கீழே இறக்கி வைக்கிறார்கள்.

குழியின் கிழக்குப் பக்கமாக அடுப்புக் கூட்டி, புதுப்பானை, வைத்து பனை ஓலையால் தீ மூட்டி, குடிமகன் பச்சயரிசியில் கஞ்சி காய்ச்சுவார். இதற்கு 'அன்னப்பால்' என்று பெயர். அன்னப்பால் பொங்கி வழிந்ததும், அதை அப்படியே பானையோடு இறந்தவர்களுக்கு படைக்கிறார்கள். இதற்கு சமாதியைப் பூக்களால் அலங்காரம் செய்து, வாழை இலை போட்டு, வீட்டிலேயே சமைத்துக் கொண்டு வந்த உணவு வகைகளைப் படைக்கிறார். மூத்த மகன் அதோடு பழம், வெற்றிலை பாக்கு இவற்றையும் படைத்து, ஊதுபத்தி கொழுத்தி வைக்கிறார். படைப்புகளின் முன்னே புது மண் சட்டியில் மா விளக்கு ஏற்றி வைக்கிறார் குருக்கள். குருக்கள் (முன்காலத்தில் இவர் பண்டாரம் என்ற வகுப்பினராக இருப்பார். இப்போது சுயசாதிக்குள்ளே இந்தச் சடங்கை செய்கிறார்கள்) சாம்பிராணிப் புகை காட்டி, மணி கிலுக்குகிறார். 'தோடுடைய செவியன்.... என்று மனமுருகப் பாடுகிறார். எல்லோரும் வணங்குகிறார்கள். சொக்காரன் மார் சமாதியை மூன்று முறை சுற்றி வந்து பூப் போட்டுக் கும்பிடுகிறார்கள். மூத்த மகன் பூப்போட்டுக் கும்பிட்டதும், குருக்கள் 'பித்தா பிறை சூடீ.... என்று ராகமாகப் பாடுகிறார். அவரும் சமாதியைச் சுற்றி கும்பிடுகிறார். பின் அவர் இறந்தவருடைய ஆவியிடம் பணிவாகச் சொல்லுகிறார். ''அய்யா உங்கள் ஆத்மாவை மோட்டத்துல ஒப்படைக்கிறோம். நீங்க எங்க கூட வரணும்'' இவ்வாறு மூன்று முறை சொல்லி, அவர் சமாதியில் பூப்போட்டுக் கும்பிடுகிறார். இறந்தவரின் ஆவி இந்த மா விளக்கில் ஏறிவிட்டதாக ஐதீகம்.

மா விளக்கை மூத்த மகன் கையில் எடுத்துக் கொடுப்பார் குருக்கள். பாடையில் மா விளக்கோடு மூத்த மகன் முன்னே வர மற்றச் சொந்தக்காரன்மார் பின்னே வர, குடிமகன் சங்கு ஊத எல்லோரும் வீடு திரும்புகிறார்கள். மா விளக்கை நடு வீட்டில் இறக்கி வைக்கிறார் மூத்த மகன். அடுத்த கட்டப் பூஜை தொடங்குகிறது.

கோலமிட்ட தரையில் வடக்கே பார்த்து உட்கார்ந்திருக்கார் குருக்கள். அவர் முன்னே நிறை நாழியும் நெல்லும் ஒரு பெரிய வாழை இலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இலையின் இடது ஓரமாக ஒரு சாணிப் பிள்ளையார் இருக்கிறார். பிள்ளையார் அருகே ஐந்து கண் குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. விளக்கு பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. பக்கத்தில் ஒரு பெரிய வாழை இலையில் செம்பவள நிறத்தில் சம்பா அரிசி (புழுங்கல்) விரிக்கப்பட்டிருக்கிறது. அரிசியின் மீது ஒரு வரிசையில் ஒரே மாதிரியான ஐந்து பித்தளைச் செம்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. செம்புகள் மீது வெள்ளை நூல் சுற்றப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு செம்பின் வாயிலும் பூ இதழ்கள் போல ஐந்து வெற்றிலைகள் வைக்கப்பட்டு, அவற்றின் மேல் முழுத் தேங்காய் வைக்கப்பட்டிருக்கிறது. குருக்களின் முன்னே ஓம குண்டம் எரிந்து கொண்டிருக்கிறது. மா விலையால் கிண்ணத்திலிருந்து நெய்யைக் கோரி குண்டத் தீயில் விட்டு அவர் தீயை வளர்க்கிறார். சிறிய மணியைக் கிலுக்கிக் கொண்டே 'அரோகரா அரோகரா' என்கிறார்.

'அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே....' என்ற பாட்டை ராகமாகப் பாடுகிறார். பெண்கள் மூன்று தடவை குலவையிடுகிறார்கள். குருக்கள் மணியை வேகமாக ஆட்டி, மீண்டும் அரோகரா அரோகரா என்கிறார். இப்போது குருக்களைச் சுற்றி நிற்கும் பெண்கள் ஒவ்வொருவராக குருக்களின் முன்னே குனிகிறார்கள். குருக்கள் தன் வலதுகைக் கட்டை விரலால் இலையில் தயாராக இருக்கும் கருஞ்சாந்தைத் தொட்டு ஒவ்வொருவர் நெற்றியில் கறுப்புப் பொட்டு வைக்கிறார். பூசை முகத்தில் வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்து ஒவ்வொருவருடைய உள்ளங்கையிலும் சிறிது எண்ணெய் விடுகிறார். எல்லோரும் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுகிறார்கள். பதிநாலு நாள் எண்ணெய் தேய்க்காத தலையில் ஒவ்வொருவரும் எண்ணெய் தேய்த்துக் கொள்வார்கள். இது எண்ணெய் தேய்ப்பு சடங்கு.

இப்பொழுது குருக்கள் நிறை நாழியருகே சீவி தயாராக வைக்கப்பட்டிருக்கும் இளநீரை எடுத்து ஓம குண்டத்தின் மீது கவிழ்த்தி, நெருப்பை அணைக்கிறார். மாவிளக்கு மட்டும் தகதகவென்று எரிந்து கொண்டிருக்கும். பெண்கள் வரிசையாக வந்து மாவிளக்கைக் குனிந்து கும்பிடுவார்கள்.

பூம் பூம் பூம் என்று குடி மகனின் சங்கோசை அறை முழுவதும் விம்மிப் பரவுகிறது. குளித்துப் புது வேட்டி கட்டி, அதன் மேலே இடுப்பில் புதுத் துண்டைச் சுற்றிக் கொண்டு தயாராக நின்று கொண்டிருக்கும் மூத்த மகனின் வலதுகையில் அருகம் புல் காப்பு கட்டுகிறார் குருக்கள். இப்போது குருக்கள் மா விளக்கை இரண்டு கைகளாலும் எடுத்து மகன் கையில் கொடுக்கிறார். சங்கொலியோடு மகன் வெளியே வருகிறான்.

வீட்டு முற்றத்தில் தேர் ஒன்று தயாராக நின்று கொண்டிருக்கும். இதை உருவாக்க வேண்டிய கடமை ஊர் குடிமகனுக்குரியது. இணையாக இரண்டு மூங்கில்களை அடிப்பாகத்தில் வைத்து அதன் மையப்பகுதியில் தேரை அமைத்திருப்பார்கள். சுமார் 4 அடி அளவில் கன சதுர வடிவத்தில் கோயில் கருவறைப் போன்ற அமைப்பும், அதன் நாக்கு முகப்பட்டமாகத் தேர் அமைந்திருக்கும். உறுதியான மரக் கட்டைகளைக் கொண்டு இதை அமைத்து முன் பாகத்தை மட்டும் வாசலாக விட்டு மற்ற பாகத்தையெல்லாம் வண்ணச் சேலைகளால் மூடி விடுவார்கள். கட்டுமானத்தில் உச்சியில் பூசி மினுக்கப்பட்ட ஒரு பித்தளைச் செப்பு வைக்கப்பட்டு, அதில் முதிராத தென்னம்பூக் குலை செருகப்பட்டிருக்கும். தேரின் நான்கு பக்கமும் வரிசை வரிசையாக அரளி மாலைகளைக் கட்டித் தொங்க விடுவார்கள். பூ வேலைகள் செய்யப்பட்ட குருத்து ஓலைகளையும் தொங்க விடுவார்கள். பூச் சேடனை செய்யப்பட்டுத் தேர் ரொம்ப அழகாக இருக்கும். கட்டுமானத்தில் ஓலை அலங்காரங்கள் செய்து, அரிசி முறுக்கு, அச்சு முறுக்கு தேன்குழல், முந்திரிக்க கொத்து போன்ற பண்டங்கள் தொங்க விடுவார்கள்.

மா விளக்குடன் வெளியே வரும் மூத்த மகன் படிக்கட்டின் கீழே முற்றத்தில் கால் வைப்பதற்காக வண்ணார் மாற்று விரிப்பார். அலங்கரிக்கப்பட்டத் தேரை நான்கு பேர் தூக்கிக் கொண்டு வந்து நடு முற்றத்தில் கிழக்கு முகமாக வைப்பார்கள். வேட்டுகள் வெடிக்கும். குலவையிட்டவாறு பெண்கள் ஒரு பக்கம் குவிவார்கள். மறுபக்கம் ஆண்கள் இருப்பார்கள். குடிமகன் குடை பிடிக்க மூத்த மகன் மாவிளக்கைச் சுமந்துகொண்டு முற்றத்தில் வண்ணான் விரிந்த மாற்றில் இங்கி தேரருகே வருவார். தேரைச் சுமப்பவர்கள், தேரைத் தோள்கள் மீது தூக்குவார்கள். மூத்த மகன் மாவிளக்குடன் தேருக்குள்ளே நுழைந்து நின்று கொள்வார்.


''அய்யா, சொக்காரன் மாரெல்லாம் பாடைக்குள்ளே, வாருங்க'' குடிமகன் கூட்டத்தைப் பார்த்து குரல் கொடுப்பார்.

பாடையின் கீழே கொக்காரன்மார் போக, நையாண்டி மேளம் பின் தொடர, மாவிளக்கு ஏந்திய மூத்த மகன் தேருக்குள்ளே நடந்து போக, பெண்கள் முற்றத்திலேயே தங்கி விடுவார்கள். தேர் போய்ச் சேரும் இடம் வரை. வண்ணார் இருவர் மாற்றுக்களை விரித்து கொண்டே போக, ஊர்வலம் அதன் மீது நடக்கும். தேரின் இரண்டு பக்கமும் ஆட்கள் போவார்கள். தேரின் உச்சி தட்டாமல் இருக்கும் வகையில் ஒரு சிலர் தேர் செல்லும் பாதையில் வளர்ந்து கிடக்கும் மரக்கிளைகளை வெட்டித் தள்ளிக் கொண்டே போவார்கள். வரிசை வரிசையாக 'பெட்ரோமாக்ஸ்' விளக்குகள் முன்னும் பின்னும் செல்ல, மேளதாள ஓசையோடு தேர் குளத்தங்கரையை அடையும்.

குளத்தங்கரையில் வசதியான இடத்தில் வந்ததுமூ தேரை மூன்று சுற்றுச் சுற்றிக் கொண்டு முழக்கத்தோடு கிழக்கு முகமாக இறக்கி வைப்பார்கள். இரட்டை வேட்டு முழங்கும். முக்கியமான சடங்குகள் தொடங்கும்.

தேரின் முன்னே மாற்றுத் துணிகளை நான்கு சுவர்களாக நான்கு பேர் மடக்கிப் பிடித்து கொள்ள, உள்ளே தளவாடங்களடன் போய் உட்கார்ந்து கொள்வார் குருக்கள். குருக்களின் சீடர் தேருக்குள் உட்கார்ந்து கொள்வார்கள். தேரின் முன் பக்கமும் திரையால் மூடப்படும். கொஞ்ச நேரம் மணியைக் கிலுக்கி விட்டு குருக்கள் 'அரோகரா, அரோகரா என்று விட்டு 'தோடுடைய செவியன்.....' என்ற பாடலைப் பாடுகிறார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மோட்ச விளக்கு

Post by சிவா on Wed Sep 15, 2010 1:40 am

இரண்டு கைகளாலும் உதிரிப் பூக்களை அள்ளித் தேர் மீது போட்டுவிட்டு, உரைநடை போலுமில்லாமலும், பாடல் போல் இல்லாமலும் இடைநிலையான ஒரு இழுத்தக் குரலில் சொல்லுகிறார்.

'அரகரா சாமி
துரிதமாய் ஓடி வந்தேன் இன்னும்
வாசலைத் திறக்க வில்லையே.....
நாலுத்திக்கும் ஓடி வந்தும்
நற்கதி கிடைக்கவில்லையே
உம்வாசல் வந்து நின்று
மிகவுமே சோர்வு கொண்டேன்.....
அம்மையே அப்பா ஒப்பில்லாமணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே.....
எங்கெழுந்து அருளுவது இனியே'

என்று வருத்தத்தோடு முடித்தபடி விட்டு இரண்டு கைகளிலும் பூக்களை அள்ளி தேர் மீது போடுகிறார். மணிகிலுக்குகிறார் விருந்த ஓசையில் பாடுகிறார்.

புதுமை........புதுமை.........புதுமை
புதுமணம் வீசுதே
பூங்காவனம் என்று
புகழ்ந்திடலாகுமே.......... நாமே
பாதிப்பிறையை
சடையில் தரித்தோன்
பரமன் இருக்குமிடம்.....
இதுதானோ
புதுமை........புதுமை..........புதுமை
ஆட்டக்காலிட்டு
அம்பலத்தில் நின்று
அஷ்டத்திக்கு நிகராகிய
தேவரோடு தேவாரம்
நஞ்சும் அஞ்சும்..........

இப்போது அவர் இரண்டு கைகளிலும் பூக்களை அள்ளி தேர் மீது செரிகிறார். அரகரா சாமி பராக், பராக் என்கிறார். பின் சிறு மவுனம் இப்போது. குருசாமி கம்பீரமான கட்டைக் குரலில் அதட்டுவது போல, ஆனால் முன் மாதிரியே வசன பாடலாகச் சொல்லுகிறார்.

'அஷ்டதிக்கும் நிகராகிய
கயிலங் கிரியில்
தேவனே தேவாரம்
சிலம்பொடு புலம்பக் கேட்டு
நேரமே புரியா வண்ணம்
நெஞ்சுக்கு
அப்பு, பிரதியு,
வாயு, தேயு,
அஹாசமாகிய
அஞ்சு பூதமும்
அடங்கிப் போகும் போது ...
அருளீர் மோட்ச கதி வாசல்
அரி பரி மன்றாடியேன் என்று
நான் இருக்கிற கைலயங்கிரி வாசலில்
அகோ ராத்திரி
ஆரவாரத்துடன்
யாரைப் பார்த்து வந்தீர் பிள்ளாய்?

பின் அவரே தாழ்ந்தக் குரலில் பதிலும் கூறுகிறார்.

அடியேன்
நன்றி கூறுகிறான் சாமி,
அரகரா சாமி
குருக்கள் மணி கிலுக்குகிறார்

இரண்டு கைகளாலும் பூக்களை அள்ளி எறிகிறார். எழுந்து துணிச்சுவரை நீக்கிவிட்டுத் தேரை மூன்று முறை சுத்தி வருகிறார். பின் கிழக்கே வந்து மேற்கே பார்த்து, பக்தி ரசம் ததும்பப் பாடுகிறார்.

நன்றி கூறுவோமே
நம்மையாள்பவர்க்கு
......... நன்றி கூறுவோம்

படி முடிந்ததும் வசன ராகத்தில் சொல்லுகிறார்.

எல்லையென கோபுரத்தின்
வாசல் கண்டாயா
நல்ல செம்புக் கோபுரத்தின்
நடைகள் கண்டாயா?

மெளனமாகக் கும்பிடுகிறார் சொல்லுகிறார்.

அரகரா
ஆனந்த நாதா
தர்மபுரம் ஊர்

மனகாவலப் பெருமாள் நாடார் மனைவி தங்கம்மை அம்மையார் மோட்ச விளக்கை வாசலில் வந்து நிற்கிறார். நகரவாசல் அடைச்சு மோட்ச வாசல் திறக்கணும் சாமி மறைவில் உட்கார்ந்திருக்கும் சீடன் உற்சாகமான குரலில் பதில் கொல்லுகிறான்.

அடைக்க ஆயிரம் பொன்
திறக்க ஆயிரம் பொன்
தரவேண்டும் பிள்ளையாய்
குருக்கள்...
தருகிறேன் சாமி
விஜயன் வில்கொண்டு எறிந்தான்
இந்திரன் கல்கொண்டு எறிந்தான்
அடியேன்
எண்ணெய் கொண்டு எறிகிறேன் சாமி
தேவீர்
வாசல் திறக்க வேணும் சாமி
ஒரு கிண்ணத்திலிருக்கும்
எண்ணையை சுற்றிலும் தெளிக்கிறார்.

திறக்கிறேன் பிள்ளாய் என்கிறான் உள்ளே இருக்கும் சீடன்

ஊர் நாடார் தன் மடியிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் குடிமகனிடம் கொடுத்து குருக்களுக்கு கொடுக்கச் சொல்லுகிறார். குருக்கள் அதை வாங்கிக் கண்களில் ஏற்றி இடுப்பில் செருக்கிக் கொண்டு, பூக்களை அள்ளி வீசி 'அரோகரா அரோகரா'

வாத்தியம் வாத்தியம்......... என்று நகர்கிறார். உறங்கிக் கொண்டிருக்கும் வாத்தியங்கள் திடுக்கிட்டு முழங்குகின்றன. சங்கு முழங்கியது. தேரிலிருந்த மாவிளக்குச் சட்டியைப் பூசாரி இரண்டு கையாலும் எடுத்து மூத்த மகன் கையில் கொடுத்து, அவனைக் குளத்தங்கரைக்கு நடத்திக் கொண்டு போகிறார். அவன் கையிலிருந்த காப்பை அவிழ்த்துவிட்டு, மாவிளக்கை வாங்கிக் குளத்துத் தண்ணீரில் மிதக்க விடுகிறார். சுற்றி நின்றவர்கள் நீரை அலம்பிக் கொஞ்ச தூரம் குளத்தில் மாவிளக்கைப் போக விடுகிறார்கள்.

'சட்டிய முக்குங்கலே' ஊர் நாடார் கத்துகிறார். இளைஞன் ஒருவன் தண்ணீருக்குள் குதித்து, சட்டியைத் தண்ணீருக்குள் அமிழ்த்தினான்.

தேரில் தொங்கிக் கொண்டிருக்கும் திண்பண்டங்களை பிடுங்க இளைஞர்கள் போட்டி போடுகிறார்கள்.

குளத்தங்கரை மேட்டு இளமணலில், நடுவில் விசாலமான இடம் விட்டுச் சதுரமாக மாற்று விரிக்கிறார் வண்ணார். ''அய்யா ஊர் நாடாமார் எல்லாரும் மாத்துல வாருங்க'' என்ற மூன்று தடவை கூப்பிடுகிறார் குடிமகன்.

ஊர் நாடார், மாற்றுத் துணியில் நடு நாயகமாக முதலில் உட்கார்கிறார். மற்றவர்கள் சுற்றி உட்காருகிறார்கள். ''அய்யோ மாத்துக்குள்ளே வாரேன்'' என்று மூன்று தரம் சொல்லிவிட்டுக் குடிமகன் மாற்றக்குள்ளே வருகிறார். பனை ஓலையாலான ஒரு வெற்றிலைப் பெட்டியை ஊர் நாடார் முன்னும், இன்னும் சில பெட்டிகளை மற்றவர்கள் முன்னும் வைக்கிறார். எல்லோரும் வெற்றிலை போட்டுக் கொண்ட பின், அன்றைய சமூகக் கடமைகளைச் செய்வதற்காக வண்ணாருக்கும் குடிமகனுக்கும் வழக்கப்படி உள்ள பணம் கொடுக்கப்படும். இதற்கு 'சுதந்திரம்' என்று பெயர். வண்ணாருக்கும் நாவிதருக்கும் உதவி செய்த அவர்கள் சாதியிலுள்ள இதரருக்கு பணம் கொடுப்பார்கள். அதற்கு பெயர் 'வழக்கம்'. இதோடு மோட்ச விளக்குச் சடங்கு முடிவடையும்.


பொன்னீலன்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum