ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்!

View previous topic View next topic Go down

சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்!

Post by சிவா on Wed Sep 15, 2010 2:19 am

காகவிகள், ஞானிகள், புலவர்கள் போன்றவர்களின் சொல், செயல், இவற்றைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். தமிழில் சங்க இலக்கியத்தில் ஓர் அரசனை வாழ்த்தும்போது, ‘‘உன் வெண்கொற்றக் குடை மடங்கட்டும்’’ என்றார் ஒரு புலவர். ‘இது அமங்கலமான வாழ்த்தாயிற்றே!’ என்று பலர் திகைத்தவுடன் விளக்கம் சொன்னார்.

‘‘எப்போதும் எங்கு தன் ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் அரசன் தன் வெண் கொற்றக்குடையை விரித்துக் கொண்டுதான் போகவேண்டும். அதுதான் புகழ். ஆனால், அவன் இறைவன் திருக்கோயிலுக்குள் நுழையும்போது மட்டும் அரசரின் வெண்குடை மடக்கப்படும். அரசன் அடிக்கடி இறைவனை வணங்கும் பேறு பெற்றவன் ஆகட்டும் என்பதே வாழ்த்தின் உண்மைப் பொருள்!’’ என்றார். எல்லோரும் ‘"ஆஹா... ஆஹா..."’ என்றார்கள்.

இதுபோலவே இன்னொரு நிகழ்ச்சி!

ஒரு சைவ மடத்தில் ஆட்சியில் இருந்த சந்நிதானம் இறைவனடி சேர்ந்தார். அடுத்து அவரால் நியமிக்கப் பட்ட இளைய சந்நிதானம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் கொலு என்கிற தர்பாரில் அமர்ந்ததும் ஆதீனப் புலவர்கள் எல்லாம் புதிதாகப் பொறுப்பேற்ற மடாதிபதியைப் புகழ்ந்து தள்ளினார்கள். அவரும் புன்முறுவலோடு புகழாரங்களை ஏற்றுப் பொன்னாரங் களைப் பரிசாக வீசினார்.

மிக மூத்த ஆதீனப் புலவர் கடைசியாகப் பேசும் போது, ‘‘எல்லோரும் இந்தச் சுவாமிகளை வெகுவாகப் புகழந்தார்கள். பழைய சந்நிதானத்தைவிட இவர் அதிகம் படித்தவர், திறமைசாலி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அவருக்கு இவர் ஈடாக மாட்டார். எவ்வளவு சொன்னாலும் பழைய சந்நிதானம் மாதிரி இவரால் ஒரு காரியம் மட்டும் செய்ய முடியாது!’’ என்று சொல்லி விட்டுச் சபையோரை மௌனமாகப் பார்த்தார். சபையில் அதிர்ச்சியான அமைதி. சந்நிதானம்கூடச் சங்கடப்பட்டு விட்டார்.

மூத்த ஆதீனப் புலவர் தொடர்ந்து, ‘‘இந்த சுவாமிகள் என்ன முயன்றாலும் நமது பழைய சுவாமிகள் செய்த ஒரு காரியத்தைச் செய்யவே முடியாது. அது என்ன தெரியுமா? இந்த மடத்தின் அருளாட்சிக்குத் தமக்குப் பிறகு தக்கவர் யார் என்று ஆராய்ந்து தேடி, தம்மை விட மிகத் திறமைசாலி யான இந்தப் புதிய சுவாமிகளைப் பழைய சுவாமிகள் நியமித்தார்கள் அல்லவா?

இப்படிச் செய்ய இந்தச் சுவாமிகளால் முடியுமோ? முடியாது... ஏனென்றால், நம் புதிய ஆதீனத்தைவிட கெட்டிக்காரரான ஒரு இளையவர் இவருக்கு எக்காலத்திலும் கிடைக்க வாய்ப்பே இல்லையே!’’ என்றதும் சபை கரவொலி யில் அதிர்ந்தது. புதிய மடாதிபதியின் முகத்தில் புன்னகை மின்னியது.

இவைகூட சாமர்த்தியம் என்று வைத்துக் கொண்டால், இவற்றைவிடவும் நுட்பமான ஒரு நிகழ்வு! குருநானக் வாழ்வில் நடந்தது.

சீக்கியர்களின் மதகுரு குருநானக். அவர் தமது பிரியமான சீடர் குழாத்துடன் கிராமம் கிராமமாகச் சென்று நல்லொழுக்கம், இறைஉணர்வு, சகோதர நேயம் இவற்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

பாடல், பஜனை என்று அவரது வருகை ஆனந்தமாக இருக்கும். கிராம மக்களும் அவரைக் கடவுளாகவே உணர்ந்து வரவேற்பார்கள், வணங்குவார்கள். அவருக்கும் அவருடன் வருகிற பக்தர்களுக்கும் விருந்து கொடுத்துக் கௌரவம் செய்வார்கள்.

இத்தகைய யாத்திரையில் ஒருமுறை ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார் குருநானக். அவரது பாடல், சொற்பொழிவு, அறிவுரை எதையுமே அந்தக் கிராம மக்கள் பொருட்படுத்தவில்லை.

அவரோடு வழிபாட்டில் கலந்து, நல்லுரைகள் கேட்காவிடினும் பரவாயில்லை... அவருக்குக் குடிக்கக்கூட யாரும் தண்ணீர் தரவில்லை. பசியாறும்படி ரொட்டி தரவேண்டும் என்கிற பண்புகூட எவருக்குமே அந்த ஊரில் இல்லை.

மாறாக, அவரது பஜனைகளுக்கு இடையூறாகச் சத்தம் போடுவது, கூட்டத்தில் நாய் | கழுதைகளை உள்ளே விரட்டுவது என்று தொல்லை தந்தார்கள்.

பொறுமையுடன் அன்றைய பொழுது அங்கு தங்கித் தமது இயல்பான வழிபாட்டுக் கடமைகளைக் களைப்புடன் செய்தார் குருநானக். இரவு குளிரில் அவர் ஒதுங்கக்கூட யாரும் இடம் தராததால், குளிரில் மிகவும் துன்புற்றார் குருநானக். ஆனால், காலை எழுந்து ஊரைவிட்டுப் புறப்படுமுன், அந்தக் கிராம மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.

தம்முடன் வந்த சீடர்களைப் பார்த்து, ‘‘இந்தக் கிராம மக்கள் எப்போதும் இந்தக் கிராமத்திலேயே வாழ்க்கை வசதிகளோடு வாழவேண்டும். வறட்சி, துன்பம் ஏதும் வந்து, இடம்பெயர்ந்து எங்கும் போய், இவர்கள் துன்பப்படாதபடி இறைவா அருள்புரிய வேண்டும்’’ என்று வேண்டச் சொன்னார். அவரது வார்த்தையை மீறமுடியாததால், வேண்டாவெறுப்பாகச் சீடர்கள் பிரார்த்தனை செய்தனர்.

ஆனால், அடுத்த கிராமத்துக்குப் போனபோது கதை வேறாக இருந்தது. வரவேற்பே நல்லவிதமாக இருந்தது. அந்த மக்கள் குருநானக்கை அன்பில் நனைய வைத்தனர்.

புறப்படும் தருணத்தில், ‘‘இந்தக் கிராம மக்கள் இந்தக் கிராமத்திலேயே அடைந்திடாதபடி, உலகெங்கும் சிதறிச் செல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டும்!’’ என்று குருநானக் பிரார்த்தனை செய்தார். சீடர்களுக்கு ஏதும் புரியவில்லை.

‘இரக்கமற்ற கிராமத்து மக்கள் வெளியே சிதறாதபடி இருக்க வளம்தர வேண்டினார் குரு. நல்லவர்கள் ஊர் ஊராகச் சிதற வேண்டுகிறார். இது சரியில்லையே...’ என்று தயங்கித் தயங்கி அவரிடமே நியாயம் கேட்டனர்.

‘‘அந்தக் கிராமத்து மக்கள் தீமையே வடிவமாக இருக்கிறர்கள். அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது தானே நல்லது! ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் பல ஊர்கள் செல்ல நேர்ந்தால், பல ஊர்மக்களைப் பாழாக்கிவிடுவார்கள்.

இவர்களோ மிக நல்லவர்கள். இவர்கள் ஒரே ஊரில் இருந்தால் எப்படி? இவர்கள் போகிற ஊர்களில் எல்லாம் பண்பும் பக்தியும் வளரும் அல்லவா? அதனால்தான் அவர்களை ஒரே ஊரில் இருக்கவும் இவர்களைப் பலப்பல ஊர்களில் இருக்கவும் ஆண்டவனை வேண்டினேன்!’’ என்றார்.

சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும். அதுதானே நல்லது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum