ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்!

View previous topic View next topic Go down

ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்!

Post by சிவா on Wed Sep 15, 2010 2:29 am

பழம்பெருமையும் புகழும் வாய்ந்த நம் ஜோதிடக்கலையின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா? கவலைக்கிடம்தான். இதற்குக் காரணம் சில அரைகுறை ஜோதிடர்களின் அனுபவமில்லாத அணுகுமுறைதான். ஜோதிடக்கலையில் ஆழ்ந்த ஈடுபாடும் மிகுந்த நம்பிக்கையும் கொண்டவர்களை கவலைப்படச் செய்திருக்கிறது இந்தப் போக்கு. ஜோதிடக்கலையின் அருமை பெருமைகளை பலரும் சீரியஸாகவே எடுத்துக் கொள்வதில்லை.

ஜோதிடக்கலைக்குத் தற்போது இறங்குமுகமான காலம் என்று சொன்னால், அதற்குக் காரணமே சில ஜோதிடர்கள்தான் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், நமது நாட்டில் குறிப்பாக & தென்னிந்தியாவின் சாலையோரங்களில் ’இங்கு ஜோதிடம் பார்க்கப்படும்’ என்று போர்டுகளை மாட்டிக்கொண்டு ஜோதிடம் பார்க்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக் கின்றனர்.

இவர்கள் உண்மையிலேயே ஜோதிடம் பார்த்தால், அது பாராட்டக்கூடிய விஷயமாகத் தான் இருக்கும். ஆனால், ஏதோ மெத்தப் படித்த பண்டிதர் மாதிரி பலரும்நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சமான உண்மை.

இத்தகைய ரோட்டோர ஜோதிடர்கள் பலருக்கும் ஜோதிடத்தின் அடிப்படை விஷயம்கூடத் தெரிவதில்லை. ஜோதிடத்தின்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மூலதன மாக வைத்து, குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கவே இந்த அரிய கலையை இவ்வகையினர் பயன்படுத்துகிறார்கள்.

அடுத்ததாக, இந்தத் துர்பாக்கிய நிலைமைக்குப் பொதுமக்களும் ஒரு காரணம்தான் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும். தன்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஜோதிடரிடம் செல்லும் சாமானிய மனிதர்கள் அந்த ஜோதிடர் எப்படிப்பட்டவர், இவர் இந்தக் கலையில் முழுத் தகுதியுடையவர்தானா என்பதை எந்தக் கட்டத்திலும் ஆராய்வ தில்லை. ஜோதிடரைப் பற்றிய விவரங்களை அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்து கொள்வதில் சாமான்ய மக்களுக்கு அக்கறையும் விருப்பமும் இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

‘இந்த ஆள் நன்றாகவே ஜோதிடம் பார்ப்பாராம்.. இவர் சொல்வதெல்லாம் அப்படியே பலிக்குமாம்!’ என்று ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையுடன்தான் அத்தகையோரை அணுகு கின்றனர். இதுமாதிரியான நிலைதான் ஜோதிடக் கலைக்குப் பெரும்அவ மானத்தை உண்டு பண்ணு கின்றது.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான அம்சத்தையும் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எனக்கு உண்டு. அதாவது, மீடியா எனப்படும் தகவல் தொடர்புச் சாதனங்களான பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஜோதிடம் எத்தகைய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதுதான் அது.

ஜோதிடம் குறித்த பலமான காரசாரமான விவாதங்கள், விமரிசனங்களை வெளியிடும் பிரபலமான பத்திரிகைகள்கூட, ஏதாவது ஒரு வகையில் ஜோதிடம் பற்றிய குறிப்புகளையும் தங்கள் இதழ்களில் வெளியிடத்தான் செய்கின்றன. அதாவது, ஒருபுறம் ஜோதிடக்கலைக்கே எதிர்மறை யான செய்திகளை & விமரிசனங்களை, பரபரப்புக்காகவும் விளம்பரத்துக்காகவும் வெளியிடுகின்றன. மறுபுறமோ ஜோதிடக்கலைக்கு ஆதரவான ஒருசில விஷயங்களை வெளியிட்டு தன்னை நல்ல மாதிரியாகவும் வாசகர்கள் மத்தியில் நிலைநிறுத்திக் கொள்கின்றன. சில பத்திரிகைகளின் இந்த இரட்டைவித நிலைப்பாடு ஜோதிடத்துக்குக் கேடு விளைவிக்கிறது.

அதுமட்டுமல்ல, அரைகுறை ஜோதிடர்களை பத்திரிகைகளின் இத்தகைய செயல்பாடுகள் ஊக்குவிக்கின்றன என்பதுதான் ஆபத்தான விஷயம்.

சமீபகாலமாகச் சில தொலைக்காட்சி சேனல்களில் வரும் ஜோதிட பலன் சொல்லும் நிகழ்ச்சிகளும், மற்ற விமரிசன நிகழ்ச்சிகளும் ரொம்பவே இம்சிக்கின்றன. இந்த அரைகுறை ஜோதிடர்களை ஆகாவென்றும் ஓகோவென்றும் புகழின் உச்சத்துக்கு உயர்த்துகின்றன சம்பந்தப்பட்ட சேனல்கள். இந்தப் போக்கு மாறவேண்டும்.

ஜோதிடம் என்பது பாங்க், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைப் போலவோ அல்லது கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் போன்றதோ அல்ல. இவையெல்லாம் நாம் கொடுப்பதை உள்வாங்கிக் கொண்டு, அவற்றை வேறுவிதமாக நமக்கே திருப்பிக் கொடுக்கின்றன. ஆனால், ஜோதிடம் அப்படி யல்ல. அதில் எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டவைதான்.

இன்றைய காலகட்டத் தில், ஒரு ஜோதிடரின் புலமையை நிர்ணயிப்பது விளம்பரம்தான் என்றாகிவிட்டது. ஜோதிடர் என்று சொல்லிக் கொள்ளும் நபர், விளம்பரங்களுக்காகச் செலவிடும் தொகையைப் பொறுத்துதான் அவரது நிபுணத்துவமும் பிரபலமும் வரையறுக்கப்படுகிறது. இதுவும் ஓர் ஆபத்தான போக்கு என்றுதான் சொல்லவேண்டும்.

பல பத்திரிகைகளும் டி.வி. சேனல்களும் ஜோதிடத்தை ஏதோ ஒரு சாதாரண விற்பனைப் பொருளாக்கி, அக்கலையின் தரத்தைத் தாழ்த்திவிட்டன. இதற்கு மீடியாக்களின் பரபரப்பான உத்திகள்தான் துணை போகின்றன என்பது தெளிவான, கண்கூடான விஷயம்.

இவை எல்லாவற்றையும் விட இன்னொரு விஷயம் என்னவெனில், வேறுசில கலைகளைச் செய்வோர் | குறிப்பாக மை போட்டுப் பார்ப்பது, மந்திரவாதம், எண்கணிதம், கைரேகை போன்றவற்றைத் தங்கள் தொழிலாக வைத்திருக்கும் பலர், தங்களது செயல்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரம் கிடைப்பதற்காக ஜோதிடக் கலையைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் இத்தகைய விஷயங்களுக்கும் நம் பாரத ஜோதிடக் கலைக்கும் துளிகூடச் சம்பந்தமே கிடையாது.

பண்டைக் காலத்தில், நம் பாரத நாட்டின் ஜோதிடக் கலைக்கு மிக உயரிய, மரியாதையான சூழ்நிலை இருந்து வந்திருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் நிலைமை அப்படியில்லை என்றுதான் சொல்லவேண்டும். முன்பிருந்த பழைய நிலையை நாம் மீண்டும் கொண்டுவருவது சற்றுச் சிரமமான விஷயம்தான்.

இன்று ஜோதிடக்கலைக்குள்ள அவல நிலைமையை மாற்றி, மீண்டும் அதற்கு ஒரு புதுப் பொலிவும் பழம்பெருமையும் நிலைக்கும் வகையில் சில நடவடிக்கைகளை நாம் எடுத்தே ஆகவேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நான் மேலே சொன்ன மைபோட்டு பார்த்தல், மந்திரவாதம், எண்கணிதம், கைரேகை போன்ற கலைகள் பற்றிய மறுசிந்தனை வேண்டும்.

ஜோதிடத்தை ஆராய முற்படும்போது கணிதம், இயற்பியல் போன்ற நவீன அறிவியலை ஏன் நாம் அளவு கோலாக்கிக் கொள்ளக்கூடாது? நவீன அறிவியலில் ஈடுபாடு உள்ளவர்கள் பலரும், ‘ஜோதிடக்கலையில் நம்மால் என்ன செய்ய முடியும்?’ என்று சிந்திக்க வேண்டும்.

ஜோதிடம் குறித்த நூல்களும் அதுதொடர்பான ஸ்லோகங்களும் வெறும் அறிக்கைகளாகவே (statement) இன்றளவும் உள்ளன. பண்டைய இந்தியாவில் இருந்த வேதம் முதலான மற்ற சாஸ்திரங் களைப் போல ஜோதிடம் குறித்த விரிவான ஆராய்ச்சிகள் எதுவும் இன்றளவும் மேற் கொள்ளப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் துவங்கப்படவில்லை என்பதுதான் வருந்தத்தக்க ஒன்று.

இங்குதான் விஷயமறிந்தவர்கள், விஞ்ஞானிகள், சாஸ்திர வல்லுநர்களின் பங்கு முக்கியமான ஒன்றாகிறது. ஜோதிடக்கலை குறித்து கண்ணை மூடிக்கொண்டு தவறான அபிப்பிராயம் கொள்வதை விடுத்து, அதன் நுணுக்கங்களை ஆழமாக ஆராய்ந்து, அதுவும் நவீன அறிவியலை அடிப் படையாக வைத்துக்கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக,

”ஸத்வித்யவ்தனதானதான்
பஹுகுண
ஸுக்ரேயனா யுக்தே ஹுரவ்”


என்று வராஹமிஹிரர் என்ற ஆச்சாரியார், தனது ஹோரை சாஸ்திரத்தில் குறிப்பிட்டிருக் கிறார்.

இதன் பொருள் , ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனும் (வெள்ளி) குருவும் (வியாழன்) ஒரே ராசியில் இருந்தால், அந்த ராசிக்குரிய ஜாதகக்காரர் சிறந்த கல்விமானாகவும் செல்வந்தனாகவும் நல்ல பல பண்புகளை உடையவனாகவும் இருப்பான் என்பது.

இப்படி இருந்தால், ஏன் இப்படியெல்லாம் அமைகிறது என்ற கேள்விகளுக்கான விடை அந்த சாஸ்திரத்தில் இல்லை. ஒருவரது ஜாதகத்தில் உள்ள குருவோ, சுக்கிரனோ செல்வம், கல்வி மற்றும் குணநலன்களை எப்படி நிர்ணயிக்கிறது என்பதை வராஹமிஹிரர் ஆச்சாரியார் விரிவாக விளக்கவில்லை.

இப்படி விரிவான விளக்கங்கள் இல்லாததால்தான் நவீன அறிவியல் யுகத்தில் ஜோதிடத்தை ஒருவித சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்களோ என்னவோ! எனவே, இதுபற்றிய விரிவான, தீவிரமான ஆராய்ச்சி அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.

இதே பார்வையில்தான் கணித சாஸ்திரம் ஆராய்ச்சி செய்யப் பட்டிருக்கிறது. கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் எழுதிய 'எண் கணித அறிவியல்’ (Numerical Science) என்ற நூலில் அதுவரை வெளியில் அறிந்திரப்படாத பல சூத்திரங்கள், கணக்கீடுகள் ‘வெறும் அறிக்கை’ (statement) மாதிரியான நிலையில்தான் இருந்தது. அவற்றின் காரண காரியங்களை வெளிக்கொணர்ந்த பிறகு, கணித வல்லுநர்கள் அதை கவனமாக ஆராய்ந்து அவை சரியான கணக் கீடுதான் என்பதை ஊர்ஜிதப் படுத்தி (proof) உள்ளனர்.

நவீன அறிவியலுக்கும் ஜோதிடக்கலைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க, இதே ரீதியிலான கண்ணோட்டம் மிகவும் உபயோகமானதாக இருக்கும். பண்டைய காலத்தில் பிரபலமாக இருந்த அறிஞர்கள் பலரும் ஜோதிட சாஸ்திரத்தில் பெரும் நம்பிக்கை உடைவர் களாகவே இருந்திருக்கின்றனர்.

ஜோஹன்ஸ் கெப்ளர் (Johannes Kepler), டைகோபிரேக் (Tychobrache), ஐன்ஸ்டீன் (Einstein) ஆகிய அறிஞர்கள் ஜோதிடத்திலும் சாஸ்திரத்திலும் அதீத நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர்.

டைகோ பிரேக் என்ற அறிஞர் எழுதிய தனது நூலில், ஜோதிட சாஸ்திரத்தில் பல அபாயகரமான ரகசியங்கள்அடங்கியுள்ளன என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டுள் ளார். இந்த ரகசியங்கள் மன்னர்கள், பிரபுக்களின் கை களில் கிடைத்தால், அவர்கள் அவற்றை வெளியில் சொல்லாமல் மறைத்துவிடுவார்கள். அல்லது, அதைத் தவறான வழிகளில் பயன் படுத்திவிடுவார்கள் என்பதால் தானோ என்னவோ... பண்டைய வல்லுநர்கள் ஜோதிடக் கலையின் ஆழ்ந்த பல நுணுக்கங்களை பரம ரகசியமாக வைத்துவிட்டார் கள் என்றுகூடச் சொல்கிறார்கள்.

சக்திவிகடன் - 18-05-2004
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum