ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 ayyasamy ram

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அமிர்தநதி மாமாங்கேஸ்வரர் திருவூஞ்சல்

View previous topic View next topic Go down

அமிர்தநதி மாமாங்கேஸ்வரர் திருவூஞ்சல்

Post by சிவா on Wed Sep 29, 2010 4:13 am

காப்பு

தேன் கதலி நெல் கரும்பு செறிந்து தோன்றித்
திகழ்ந்திடு மா மட்டுநகர்ப் பதியின் ஓர்பால்
கான்மலியும் அமிர்தநதியூரில் ஒன்றாய்(க்)
கணபதியும் உமைசிவனும் சேர்ந்து தேன்றும்
வான்பொலியும் புகழ்பூத்த மாமாங்கேசர்
மகிமையுரை செய்கின்ற ஊஞ்சல் பாட
மீள்வளரும் வாவிதிகழ் வளநாட்டில் வாழ்
வாரணமே யுன்பதங்கள் காப்பதாமே .

வேதங்கள் நான்குமவை தூண்களாக
விரிந்திடு நல்லாகமங்கள் விட்டமாக
போதமிகு சிவஞானம் வடமதாக
பொருந்திய நற்பிரணமே பீடமாக
நாதவடிவான சிவனுமையாள் கூட
நலமான பொன்னூசல தனிலே ஏறி
மாதரசி வல்லபையும் மருங்கே சேர
மாமாங்க ஈஸ்வரனே ஆடீரூஞ்சல்.

அரிபிரமனிந்திரர்கள் வடந்தொட்டாட்ட
அருகினிலே ஸ்ரீராமன் குடையுந்தாங்க
வரிசைபெறு மரம்பையரும் கவர்வீச
வந்தணைந்து நாரதனும் யாழைமீட்ட
வரிசடையோன் பெற்றெடுத்த செல்வா என்றே
விளங்குதமிழ்ப் புலவோரும் கவிதைபாட
திரிபுரிநூல் மார்பிலங்க மணிகள் ஓங்க
மாமாங்க ஈஸ்வரனே ஆடீரூஞ்சல்.

நாதசுர ஓசையெங்கும் நிறைந்து கேட்க
நயமாக வீணையொலி இசைந்து நிற்ப
வேதவொலி முழகடகமது விண்ணையெட்ட
விண்ணவரும் மண்ணவரும் வியந்து நிற்ப
தூதகிட தகஜணுத தீம்தோம் என்றே
தகவுடனே பூதகணம் பலசதிகளாட
மோதகம் நல் அங்குசமும் பாசமுங்கை ஏந்தி
மாமாங்க ஈஸ்வரனே ஆடீரூஞ்சல்.

வீரர்கள் தம் கணபதியே ஆடீரூஞ்சல்
வெற்றிதரும் குணவதியே ஆடீரூஞ்சல்
போரதனில் வென்று நின்ற ராமன் கொண்ட
பிரம்மகத்தி தோஷமது நீங்கும் வண்ணம்
பாரதமே சென்று பல தீர்த்தம் கொண்டு
பாங்கான அமிர்தநதிக் குளமுந்தொட்ட
மாருதியும் மனமகிழ்ந்து மலர்கள் தூவ
மாமாங்க ஈஸ்வரனே ஆடீரூஞ்சல்.

பொன்னழகி எனும் பெயராள் பெண்ணின் நல்லாள்
பேரரசி பெருந்தகையாள் பலகால் தீரா (த்)
தன்னரிய நோயதனைத் தீர்க்கும் வண்ணம்
தானுணர்ந்து தேடிவந்து தீர்த்தம் ஆட (க்)
கன்னியவள் பிணிதீர்த்துக் கருணைசெய்து
களங்கமிலாப் பெருவாழ்வும் கொடுத்து அங்கே
புன்னைமரச் சோலைதன் நிழலில் மேவும்
மாமாங்க ஈஸ்வரனே ஆடீரூஞ்சல்.

கள்ளவினைப் பசுபோதம் கவளமாக்கி (க்)
கனிவுடனே உண்டதனை வயிற்றில் தேக்கி
வெள்ளமதம் பொழிகின்ற வேழம் ஆகி
விளங்கிடு நல் விநாயகமாம் பொருளும் ஆகி
உள்ளமதில் ஊக்கமெனும் தறியை ஊன்றி
உறுதியுடனுனை நினைக்கும் அடியார்க்கென்றும்
மெள்ளவந்து சிவஞானமளிக்கும் மேலாம்
மாமாங்க ஈஸ்வரனே ஆடீரூஞ்சல்.

சுpறையகற்றும் சின்மயனே ஆடீரூஞ்சல்
சிந்தூரம் விளங்கிடவே ஆடீரூஞ்சல்
பிறையறியும் பெருமகனே ஆடீரூஞ்சல்
பிள்ளையெனும் பெயர் பெற்றீராடீரூஞ்சல்
கறைமிடந்த பெருமானார் கனிந்து தந்த
கஜமுகனே கற்பகமே ஆடீரூஞ்சல்
மறைமிழற்றும் அமிர்தநதிப் பதியில் மேவும்
மாமாங்க ஈஸ்வரனே ஆடீரூஞ்சல்.

பிரணவத்தின் பெரும்பொருளே ஆடீரூஞ்சல்
பேசரிய பெற்றியனே ஆடீரூஞ்சல்
சுரவணத்தான் முன்னவனே ஆடீரூஞ்சல்
சங்கடங்கள் தீர்ப்பவனே ஆடீரூஞ்சல்
அரவணைக்கும் அம்மை சிவனருகே நன்றா
யமர்திருக்கப் பொன்னூஞ்சல் தனிலே ஏறி (ச்)
சிரமசைத்து மாந்தர்குறை தீர்க்குஞ்செல்வ
மாமாங்க ஈஸ்வரனே ஆடீரூஞ்சல்.

தேங்காரும் சோலையுடன் கரும்பம் நெல்லும்
திகழ்ந்திடு மா மட்டுநகரப்; பதியில் மேவி
ஓங்காரப் பொருளதுவாய் உலகையாளும்
உத்தமனே தத்துவனே உவமையில்லீ
நீங்காமல் நெஞ்சினிலே நிறையவல்லாய்
நிர்க்குணனே சற்குருவே நீசனேற்கும்
ஆங்காரந் தவிர்த்தெமையே ஆண்டு கொள்ளும்
மாமாங்க ஈஸ்வரனே ஆடீரூஞ்சல்.


மங்கையர்கள் பூமாரி பொழிந்து போற்ற
மாதவரும் மறையோதி மகிழ்ந்து ஏற்ற
செங்கையதில் தீகொண்ட செல்வன் தானும்
சிவகாம சுந்தரியும் சேர்ந்து தோற்ற
தெங்குசெறி யமிர்தநதிப் பதியின் ஓர்பால்
தீராதநோய் தீரத்தருளும் தீர்த்தம் கண்டே
மங்களங்கள் தங்கவரும் மனதை ஈர்க்கும்
மாமாங்க ஈஸ்வரனே ஆடீரூஞ்சல்.

வாழி

ஆனினங்கள் நான்மறைகள் வாழிவாழி
அந்தணரும் வானவரும் வாழிவாழி
வான்மழையும் வளநாடும் வாழிவாழி
வனிதையர்கள் நிறைவழுவாதென்றும் வாழி
தானுயரும் மலர்ச்சோலை குளமும் வாழி
கருணைமிகு மஞ்சணையின் புதல்வன் வாழி
மானமிகு மமிர்தநதிப் பதியோர் வாழி
மாமாங்க ஈஸ்வரனார் வாழிவாழி

பராக்கு

எச்சிலையும் உவந்தேற்கும் உச்சிட்ட கணபதியே பராக்கு
எழிலான வல்லமையின் மணாளா பராக்கு
கச்சியில் விகடசக்கரம் கரத்தேற்றாய் பராக்கு
கசமுகனின் உயர்செகுத்ததீரா பராக்கு
பச்சறுகிற் பூசை பரிந்தேற்பாய் பராக்கு
இச்சைகளைத்த தீர்த்தருளும் இறiவா பராக்கு
உச்சியிலே மகுடம் மின்னும் தேவா பராக்கு
உயர்ந்திடு மாமாங்க ஈஸ்வரனே பராக்கு

எச்சரிக்கை

அன்னம் பாலிக்கும் அமிர்தநதக்கிறைவா எச்சரிக்கை
அகத்தியர் தம் குடமுருட்டும குழகா எச்சரிக்கை
அருள்தாராய் எச்சரிக்கை
முன்னம் தமிழ்கிழவி தன்னைச் சுந்தரர்முன் கயிலை
ஏற்றினையே எச்சரிக்கை
முருகனவன் முன்னே செல்லும் மூத்தவனே எச்சரிக்கை
முழுமுதலே எச்சரிக்கை
பென்னம் பெருவடிவமுறு மதகளிறே எச்சரிக்கை
பேதங்கள் போக்கியருள் குருநாதா எச்சரிக்கை
பிறைசூடி எச்சரிக்கை
பொன்னம்பலத் தீசனவன் புதல்வா எச்சரிக்கை
மன்னர்தமக் கருள்புரியும் மாதேவா எச்சரிக்கை
மாமாங்க ஈஸ்வரனே எச்சரிக்கை.


லாலி

நேயமுடை விநாயகரே லாலி லாலி
நயந்தருளும் தேசிகனே லாலி லாலி
தூயமனமருள்பவனே லாலி லாலி
துங்கக்கரிமுகனே லாலி லாலி
நோயனைத்தும் தீர்ப்பவனே லாலி லாலி
நூலனைத்தும் உணர்பவனே லாலி லாலி
முhயவன் தன் மருகனே லாலி லாலி
மாமாங்க ஈஸ்வரனே லாலி லாலி.

மங்களம்

ஜோதிவானவர்க்கு ஜெயமங்களம் - அங்கு
சேர்ந்திருக்கும் வல்லபைக்கும் ஜெயமங்களம்
ஆதிமுதல் நாயகர்க்கு ஜெயமங்களம் - அந்ந
ஆதிசக்தி நாயகிக்கும் ஜெயமங்களம்
நீதிமுதலானவர்க்கு ஜெயமங்களம் - நல்ல
நித்திலப் பொன்னானையர்க்கு ஜெயமங்களம்
மேதினியில் யாவருக்கும் ஜெயமங்களம் - அருளும்
மாமாங்க ஈஸ்வரற்கு ஜெயமங்களம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum