ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 1:55 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 1:50 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ஜாஹீதாபானு Today at 1:48 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!

View previous topic View next topic Go down

மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!

Post by சிவா on Wed Sep 29, 2010 5:19 am

மண்டுதல் - என்றால் கூடுவது, கூடுதல் என்று பொருள். அரசர், அவர் சார்ந்தோர், பொது மக்கள் ஆகியோர் கூடுவதற்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டது "மண்டபம்'. அது திருவோலக்க மண்டபம், மணி மண்டபம், பட்டி மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் எனப் பலவகைப்படும்.

இவற்றுள் தூண்களின் கீழ், பட்டிகைக்கல் (பட்டியக்கல்) வைத்துக் கட்டப்பட்ட மண்டபம் "பட்டி மண்டபம்' ஆகும்.

சிலப்பதிகாரம் -இந்திரவிழவூரெடுத்த காதையில்,

"மகதநன் னாட்டு வாளவாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் (அடி:101-102)

என்று, போரில் வெற்றிபெற்ற கரிகாலனுக்கு மகதநாட்டு மன்னனின் "பட்டி மண்டபத்தை' அளித்த வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்றுதல் - என்றாலும் கூடுவது, கூடுதல் எனப் பொருள் உண்டு. அதாவது, மக்கள் கூடுகின்ற இடம் மன்று - மன்றம் ஆனது. "மன்றம்' என்பது, பொதுவிடம், மரத்தடி பொதுவிடம், வெளியிடம் சபை எனப் பொருள்படும். இதற்குச் சான்றுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளன.

"மலர்தலை மன்றத்துப் பலரும் குழீஇ'' (பட்டினப்பாலை அடி: 69)

என்பதில் பொதுவிடத்தையும்,

"மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்'' (திருமுருகாற்றுப்படை அடி:226) என்பதில் ஊர்மக்கள் கூடும் மரத்தடி இடத்தையும், மன்றம் என்னும் சொல் குறிப்பிடுகிறது. "மன்றில் பழிப்பார்' (குறள்-820) இதில், சபையைக் குறிக்கிறது. எனவே, இத்தகைய சான்றுகளால் முற்காலத்தில் மண்டபம் என்பது கட்டப்பட்ட இடத்தையும், மன்றம் என்பது கட்டப்படாத பொதுவிடத்தையும் குறிப்பதை அறியலாம்.

மணிமேகலையில் (16:1) கூறியுள்ளதுபோல, பட்டி மண்டபத்தில் நிகழ்ந்த சொற்போர் (விவாதம்) நாளடைவில் இடப்பெயரை ஏற்றுச் "சொற்போரை'க் குறிக்கும் சொல்லாக வழங்கப்பட்டது.

பின்பு கல்வி, கலை, இலக்கியம் தொடர்பான சொற்போர்களுக்கும் "பட்டி மண்டபம்' என்ற சொல்லே தொடர்ந்தது. பலவகையான மண்டபங்கள் அமைத்துப் பலபெயரால் அழைக்கப்பட்ட போதும் "பட்டி மண்டபம்' என்றால் சொற்போரைக் குறிக்கும் சொல்லாகவே வழங்கப்பட்டது. இதைக் கம்பரின் பாடலால் (பால.நகர் படலம்: 62) அறியலாம்.

காலப்போக்கில் மண்டபங்களில் நடத்தப்பட்ட பட்டி மண்டப நிகழ்ச்சிகள், பல்வேறு பொதுவிடங்களில் அதாவது, மன்றங்களில் மேடை அமைத்தும், பந்தல் அமைத்தும் நடத்தப்பட்டன. பின்பு "பட்டி மண்டபம்' என்பது இடப்பெயரையே குறிப்பதாக மக்கள் கருதும் நிலை ஏற்பட்டது. சொற்போர் நிகழ்ச்சியைக் குறிக்க "பட்டி மன்றம்' என்பதே சரி எனக் கருதினர்.

இம்மன்றங்களின் சார்பாக நடத்தப்படும் சொற்போர் நிகழ்ச்சிகளைப் "பட்டி மன்றம்' என்றே அழைப்பது இன்று பெருவழக்காகிவிட்டது.

பட்டுதல் - தட்டுதல் - ஒருபொருளைக் குறிப்பன. தட்டிப் பேசுதல் போன்று பட்டிப் பேசுதலும் உண்டு. வெட்டிப் பேசுதல், ஒட்டிப் பேசுதல், தட்டிப் பேசுதல் போன்று பட்டிப் பேசுதலும் சரியானது! "பட்டுதல் என்பது தட்டுதலைக் குறித்த ஒரு பண்டைய வினைச்சொல்'' என்பார் பாவாணர் (முதற்றாய் மொழி பக்-117). பட்டி என்பதற்கு வகைப்படுத்தல், அட்டவணைப்படுத்தல் என்னும் பொருளும் உண்டு.

பட்டி என்பதற்கு, எதிரணியில் பேசுபவரின் கருத்தைத் தட்டி (மறுத்து)ப் பேசுதலும், கருத்துகளை வகைப்படுத்தி - அட்டவணைப்படுத்தல் போன்று முறைப்படுத்திப் பேசுதலும் பொருள் எனக்கொண்டு, அதற்கு இடம் தரும் மன்றம் என்பதைச் சேர்த்துப் பார்த்தால் "பட்டி மன்றம்' என்பது சரியானது.

சிறந்த தமிழறிஞரான பெருஞ்சித்திரனாரும் "பட்டி மன்றம் வைப்பதிலும் பாட்டரங்கம் கேட்பதிலும்'' (கனிச்சாறு, முதல் தொகுதி பாடல்: 15) எனப் பட்டி மன்றம் என்றே குறிப்பிட்டுள்ளார். எனவே, "பட்டி மன்றம்' என்று வழங்குவது இன்றைய நிலையில் சரியானதே எனக்கொண்டால், அவ்வாறு வழங்குவதில் தவறில்லை!

புலவர் ப.எழில்வாணன்



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790116 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!

Post by karpahapriyan on Sat Oct 02, 2010 10:06 am

தமிழே ....! உன்னை நினைத்தாலே இனிக்கிறதே

karpahapriyan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 151
வசிப்பிடம்: Singapore
சேர்ந்தது: 15/09/2010
மதிப்பீடு: 0

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

Re: மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!

Post by பேகன் on Mon Nov 21, 2011 3:35 pm

மண்டபம் மற்றும் மன்றம் நல்ல விளக்கம்!!! நன்றி சிவா!!

பேகன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100

Back to top Go down

Re: மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!

Post by கேசவன் on Mon Nov 21, 2011 6:26 pm

நல்ல பதிவு

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2759
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum