ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by கே. பாலா Today at 9:28 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Tue Oct 26, 2010 12:20 pm


அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாவதும்,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பதூம்,
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்
.................இது சிலப்பதிகாரத்தின் செய்திகளை சுருங்கக் கூறும் செய்யுள்.
புகார் காண்டம் (சோழ நாடு)
மதுரைக் காண்டம் (பாண்டிய நாடு)
வஞ்சிக் காண்டம் (சேர நாடு)
சேர, சோழ மற்றும் பாண்டிய நாட்டில் வசித்த கோவலன், கண்ணகியின் வாழ்க்கை வரலாறு சிலப்பதிகாரமாக இளங்கோவடிகளால் எழுதப்பட்டது. ஏன் பாண்டியநாட்டு மன்னன் மட்டும் தேரா மன்னன் ஆனான்? ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? ஊழ்வினை உருத்துவந்து ஊட்டினாலும் மதுரை மட்டும் தீக்கரையானது ஏன்? இதற்க்கு ஏதாவது முன் சாப வினைகள் இருப்பதாக இளங்கோவடிகள் சொல்லி உள்ளார்களா? யாராவது ஈகரையில் விளக்கமுடியுமா?

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by maniajith007 on Tue Oct 26, 2010 12:25 pm

முன் சாபவினைகள் குறித்தோ இது குறித்தும் ஏதும் தெரியவில்லை அனால் மன்னன் செய்த தவறுக்கு அப்பாவி மக்களை எரித்தது மாபெரும் குற்றமே

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik on Tue Oct 26, 2010 12:47 pm

சினம் எல்லோருக்கும் வரும்; அந்த சினத்தினால் கண்களும் சிவக்கும். ஆனால் சிவனுடைய கண்களுக்கு மட்டுமே எரிக்கும் ஆற்றல் உண்டு. அதனால் தான் சிவனை 'கண்ணுதல் பெருமான்' என்று அழைப்பர். சிவனுக்கு மட்டுமின்றி சீவனுக்கும் (மாந்தருக்கும்) எரிக்கும் ஆற்றல் உண்டு என்பதற்கு ஓர் சான்றே கண்ணகி ஆவாள். நீதிமுறை தவறி தன் கணவனை கொன்ற பாண்டிய மன்னனின் மீது பெரும்சினம் கொண்ட கண்ணகி ஓர் பத்தினி (கற்புக்கரசி) என்பதால் அவளது சினம் மதுரை நகரை எரித்தது எனலாம். பெருகிய சினத்தினால் சிவந்து வெம்மையுற்ற தனது கண்களில் இடது கண்ணைப் பறித்த கண்ணகி மதுரையினை மூன்றுமுறை சுற்றிவந்து எறிந்ததாகக் கீழ்வரும் சிலப்பதிகாரப் பாடல் கூறுகிறது.

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்

- பா.எண்: 5
கோவலனை இழந்ததால் சினம் கொண்ட கண்ணகி 3 முறை மதுரையை வலம் வந்து, தன் வலது கையால், இடது முலையை பறித்து எறிந்து, மதுரையை எரித்தாள் !
அப்பொழுது அங்கு தோன்றும் அக்கினித்தேவன் கண்ணகியிடம் -”யார் பிழைப்பார் ஈங்கு” என்று ஆணை கேட்கிறான்.

அதற்க்கு கண்ணகி ”பார்ப்பார் (அந்தணர்), அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர்,மூத்தோர், குழவி (குழந்தைகள்) எனும் இவரை கைவிட்டுத்தீத்திறத்தார் பக்கமே சேர்க “- இவர்களைத் தவிர்த்து விட்டு ம்ற்றவர் அனைவரையும் தீயில் பொசுக்கவும் என்று சொல்கிறாள். என்று இளங்கோ அடிகள் கூறுகிறார், ஆக மதுரை எரிந்ததற்கு எந்த ஊழ்வினையும் காரணமல்ல என்று நினைக்கிறேன் , மேலும் ஒரு அரசனென்பவன் அந்நாட்டின் மக்களின் தலைவன் ஆவான் அப்படிபட்டவன் ஒரு தவறு செய்யும் பொழுது அது அந்நாட்டு மக்களையும் பாதித்திருக்கலாம் இல்லையென்றால் மதுரையில் கோவலனை கள்வன் என குற்றம் சாட்டபட்டபோழுது அவனுக்கு ஆதரவாக யாரும் வராததால் கூட மதுரை மக்கள்மேல் கோவன் கொண்டு மதுரையை எரித்திருக்கலாம் என்று நினைக்கிறேன் விவரம் தெரிந்தவர்கள் திருத்தவேண்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Tue Oct 26, 2010 12:53 pm

யதார்த்தமான பாலகார்த்திகின் விளக்கம் சான்றுகளுடன் இருக்கிறது. மேலும் விவரம் அறிய விழைகிறேன்.


கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik on Tue Oct 26, 2010 1:23 pm

Kaa Na Kalyanasundaram wrote:யதார்த்தமான பாலகார்த்திகின் விளக்கம் சான்றுகளுடன் இருக்கிறது. மேலும் விவரம் அறிய விழைகிறேன்.


தேடிகிட்டு இருக்கேன் கிடைத்ததும் சொல்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik on Tue Oct 26, 2010 1:51 pm

கணவனின் பிரிவுத் துயரால் உள்ளம் கொதித்துச் சுடுமூச்செறிகிறாள். கண்ணகி. கால் போன இடமெல்லாம் சுற்றித் திரிகிறாள். கவலையோடு மயங்கிச் செய்வதறியாது திகைத்து நிற்கிறாள். அப்போது ஊர் எரிந்து அழிந்ததைப் பொறுக்க முடியாத மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன் தோன்றுகிறது.
கட்டுரை காதை

மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குக் கோவலனின் பழைய வினை பற்றிக் கூறுதல், கண்ணகி மதுரையை விட்டு வெளியேறித் திருச்செங்குன்றத்தினை அடைந்து தன் கணவனோடு சேர்தல் ஆகியவை பற்றிக் கூறும் பகுதி இது.

கண்ணகியின் முன்னால் தோன்றிய மதுராபதித் தெய்வம் கண்ணகியைப் பணிந்து போற்றிப் பாண்டியனுக்கும் மதுரைக்கும் நேர்ந்தவற்றுக்கு ஊழ்வினையே காரணம் எனச் சொல்கிறது. கோவலன் முற்பிறவியில் பரதன் என்பவனாகப் பிறந்து சங்கமன் என்ற வணிகனை ஒற்றன் எனக் காட்டிக் கொன்றான். ஆகவே கோவலனின் இறப்புக்குக் காரணம் அவன் முன் வினைப் பயனே என்று கூறுகிறது. பின்னர்ச் செங்கோலினையும் குறைபடாத வெற்றியையும் உடைய பாண்டியர்களின் குலப்பெருமையை எடுத்துக் கூறிப் பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக நிகழ்ச்சி ஒன்றையும் விளக்குகிறது.

சோழ நாட்டைச் சேர்ந்த பராசரன் என்பவன் சேரன் பெருஞ்சோற்று உதியலாதனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் வழியில் தக்கிணன் என்பவனுடைய அறிவுத் திறத்தைப் பாராட்டிப் பொன், முத்துக்களால் ஆகிய அணிகலன்களைத் தந்து விட்டுச் சென்றான். பாண்டிய நாட்டுக் காவலர் சிலர் தக்கிணன் பரிசு பெற்ற பொருள்கள் அரசனிடமிருந்து திருடியவை என்று எண்ணித் தக்கிணனைச் சிறையில் அடைத்து விட்டனர். இதனைக் கேட்ட அவன் தாய் கதறி அழுதாள். அவள் துயரம் கண்டு, கொற்றவை கோயிலின் கதவு அடைபட்டுப் போயிற்று. இதனை அறிந்த பாண்டியன் தக்கிணனை விடுவித்து அவனிடம் மன்னிப்புக் கேட்டதோடு திருத்தங்கால் என்றும் ஊரினையும் இறையிலி நிலமாகத் தருகிறான். உடனே கொற்றவையின் கோயில் கதவு திறந்தது. மேலும் பாண்டியன் சிறைக் கோட்டங்களையும் திறந்து விடுமாறு ஆணையிட்டான்.

இடுபொருள் ஆயினும், படுபொருள் ஆயினும்
உற்றவர்க்கு உறுதி, பெற்றவர்க்கும் ஆம்


(கட்டுரை காதை, 128-129)

என முரசறைந்தான். இவ்வாறு அரச நீதியிலிருந்து பிறழாத அவனும் தவறு செய்தான் என்றும் அத்தெய்வம் கூறுகிறது.

அடுத்து, கோவலனின் முற்பிறப்புச் செய்தியையும் கூறுகிறது. முற்பிறப்பில் பரதன் என்னும் பெயரில் தோன்றிய கோவலன் கபிலபுரத்து வணிகனான சங்கமன் என்பவனை ஒற்றன் என அரசனிடம் காட்டிக் கொல்வித்தான். அவன் மனைவி நீலி அழுது புலம்பிக் கடைத்தெருவிலும் ஊர் மன்றத்திலும் உள்ளோரிடமெல்லாம் முறையிட்டாள். பதினான்கு நாட்கள் கடந்தபின் ஒரு மலைமீது ஏறித் தன் தலைவனைக் கூடுவதற்காக நின்றாள். மலையுச்சியிலிருந்து வீழ்ந்து உயிர்துறக்குமுன் ஒரு சாபமிட்டாள். ‘எங்களுக்குத் துன்பம் இழைத்தவர்கள் இதே போன்ற துயரத்தை அடைவார்களாக’ என்பது அவள் சாபம். அந்தச் சாபம்தான் கோவலன் கொலைப்படக் காரணமாகியது என எடுத்துக் காட்டுகிறது மதுராபதித் தெய்வம். மேலும், பண்டை ஊழ்வினை வந்து தன் பயனை ஊட்டும்போது, இக்காலத்துச் செய்யும் நல்வினையால் பயனில்லை.

உம்மை வினை வந்து உருத்த காலைச்
செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது

(கட்டுரை காதை, 171-172)

எனவும் உரைக்கிறது.

கண்ணகியிடம் ‘நீ பதினான்கு நாட்கள் கழித்து உன் கணவனை வானவன் வடிவில் காண்பாய்’ என உரைக்கிறது. பின்னர் மதுரை மாநகரைப் பற்றிய தீயிலிருந்து விடுதலை பெற்றுத் தந்து நெருப்பையும் தணிவிக்கிறது.



Last edited by balakarthik on Tue Oct 26, 2010 1:53 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik on Tue Oct 26, 2010 1:52 pm

கல்யான் அண்ணா இதையும் பாருங்கள் அதே சிலபதிகாரத்தில்

வஞ்சினமாலை

கண்ணகி, அரசனோடு மட்டுமல்லாமல் மதுரை மாநகரையும் அழிப்பேன் என்று வஞ்சினம் கூறுதல், தீக்கடவுளை மதுரை மீது ஏவுதல் ஆகியவற்றைக் கூறும் பகுதி இது.

பாண்டியன், அரசி இருவரும் இறந்து விழுந்ததைக் கண்ட கண்ணகி , ‘தீவினையேன் யான்’ என்று கூறுகிறாள் ‘முற்பகல் தீவினை செய்த ஒருவன் பிற்பகல் அதன் பயனை அனுபவிப்பான்’ என்று உரைக்கிறாள். பின்னர்த் தான் அறிந்த பத்தினிப் பெண்கள் எழுவர் வரலாறுகளைச் சொல்கிறாள்.

வன்னி மரத்தையும் மடப் பள்ளியையும் தன் கற்புக்குச் சாட்சியாகக் கொணர்ந்து காட்டினாள் பத்தினிப் பெண் ஒருத்தி. மணற்பாவையை ‘உன் கணவன்’ எனத் தோழியர் கூறியதால், அலை வந்து அழிக்காமல் அதனைக் காத்து நின்றாள் மற்றொரு பத்தினிப்பெண். கரிகாலன் மகள் ஆதிமந்தி. அவள் கணவன் ஆட்டனத்தி காவிரிப் பெருக்கில் அடித்துச் செல்லப் பட்டான். அப்போது அவள் நீரோட்டத்தின் வழியே கரை மீது தொடர்ந்து சென்றாள். இறுதியில் அவன் கடலுள் அடித்துச் செல்லப்பட்டது கண்டு கடலின் முன் நின்று கதற, கடல் அவள் கணவனைக் கொண்டு வந்து நிறுத்தியது. அவனைத் தழுவி மகிழ்ச்சியோடு ஊர் திரும்பினாள் ஆதிமந்தி.

கணவன் பிரிந்து சென்ற பிறகு கடற் கானலில் கல் உருவாக மாறி இருந்து கணவன் திரும்பி வந்தபிறகு நல் உருவம் பெற்றாள் பத்தினிப் பெண் ஒருத்தி.

மாற்றாள் குழந்தை கிணற்றில் விழுந்துவிட, தன் குழந்தையையும் கிணற்றுள் வீசிப் பின்னர் இரு குழந்தைகளையும் கிணற்றிலிருந்து பெற்றாள் மற்றொரு பத்தினிப்பெண்.

கணவன் ஊரில் இல்லாத நேரத்தில் காமுகன் ஒருவன் தன் முகத்தை நோக்குகின்றான் என்பதற்காகத் தன் முகத்தைக் குரங்கு முகமாக வேண்டிப் பெற்றுப் பின்னர்க் கணவன் வந்தவுடன் அக்குரங்கு முகத்தைப் போக்கிக் கொண்டாள் ஒருத்தி்,

தாய் தன் தோழிக்குத் தந்த வாக்குறுதிக்காகத் தாயின் தோழியின் மகனை மணந்தாள் ஒரு பெண்.

இவ்வாறு புகாரில் வாழ்ந்த பத்தினிப் பெண்கள் எழுவரின் சிறப்புகளை எடுத்துக் கூறி அவர்களைப் போல நானும் ஒரு பத்தினி என்றால் அரசனோடு மட்டுமல்லாமல் மதுரையையும் அழிப்பேன் என்று கூறித் தன் இடப்பக்கத்து மார்பகத்தைத் திருகி எறிகிறாள். தீக்கடவுள் அவள் முன் தோன்ற ‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோரைத் தவிர்த்துத் தீயவர் பக்கம் சேர்க’ என்று ஏவுகிறாள். மதுரை நகரம் பற்றி எரியத் தொடங்குகிறது.


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik on Tue Oct 26, 2010 1:56 pm

அண்ணா இங்கே மிக அழகாக சிலபதிகாரத்தை பற்றி மேலும் விரிவாக உள்ளது படித்து பாருங்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by மஞ்சுபாஷிணி on Tue Oct 26, 2010 2:05 pm

எங்க பாட்டி வேற கதை சொன்னாங்க இதைப்பற்றி...

இது உண்மையா பொய்யா தெரியாது...

ஆனால் பாட்டி எனக்கு சின்னப்ப சொன்னதை நான் உங்களுக்கு சொல்றேன்பா...

ஒரு ஊர்ல கணவன் மனைவி இருவரும் இருந்தாங்களாம்... அப்ப கணவன் வியாபாரத்திற்காக தூர தேசம் போய் வருவாராம்.. மனைவி வீட்டில் உத்தமியாய் இருந்து பிள்ளைகளை வளர்த்து பண்புடன் இருந்தாராம்....

அப்ப அந்த ஊர்ல ஒரு பராசக்தி கோவில் இருந்திச்சாம்..
அந்த ஊர்ல மழை பெய்யாத காரணத்தால் ராஜா கோச்சிண்டு விளக்கேத்தே கூடாதுன்னு சொல்லிட்டாராம்..

அப்ப இந்த மனைவி யாருக்கும் தெரியாம போய் போய் விளக்கேத்திட்டு சாமி கும்பிட்டு வருவாங்களாம்...

கணவன் வியாபாரம் முடிந்து ஊருக்கு வந்தப்ப ஊரின் கட்டுப்பாட்டு முறை கண்டு கோபமுற்று அன்னிக்கு குடும்ப சமேதமா போய் விளக்கேற்றி கும்பிடும்போது ராஜா பார்த்துட்டு கோபம் அதிகமாகி வெட்ட சொல்லிட்டாராம்...

அப்ப மனைவி பராசக்தியை பார்த்து அம்மா தாயே நீ தானே எங்களுக்கு கதி எங்களை ராஜா கொல்கிறாரே என்று கதறிட்டு இருக்கும்போதே கணவனை கொன்னுட்டாராம் ராஜா...

அப்ப பராசக்தி சொன்னாளாம்...
நீ அழாதே அடுத்த பிறவியில் நானே பிறப்பேன் கண்ணகியாய்...
இதோ இவனும் பிறப்பான் கோவலனாய்....

நீயும் பிறப்பாய் மாதவியாய்....

நீ உன் புருஷனுடன் சந்தோஷமாய் இருப்பே....

இதோ இன்னிக்கு வெட்டின ராஜா அடுத்த பிறவியிலும் பிறப்பான் ராஜாவாய்...

அடுத்த பிறவியிலும் கோவலனுக்கு நற்கதி இல்லை... இதே ராஜா அப்பவும் வெட்டுவான்.... ஆனால் முக்தி கிடைக்கும் என்னால் உங்கள் எல்லோருக்கும் அப்டின்னு சொல்லி மறைஞ்சுட்டாளாம் பராசக்தி....

மனைவி குழந்தை எல்லாரையும் வெட்டிட்டானாம் ராஜா...

அப்ப இடி மின்னல் மழை வேகமாக பெய்து மழை வெள்ளத்தில் ஊரே வெள்ளக்காடாகி அழிந்துவிட்டதாம்...

அடுத்தப்பிறவியில் அம்பாள் சொன்னமாதிரி ராஜாவாவே பிறந்தார் ராஜா...

கணவன் கோவலனாய் பிறந்தான்...

அம்பிகே கண்ணகியாய்..... அம்பாளைத்தொட முடியுமா...

அதான் வியாபார சகிதமாய் போன கோவலன் மாதவியிடம் அதாவது தன் முற்பிறவி மனைவியுடன் மனம் பறிகொடுத்து கல்யாணமும் செய்துக்கொண்டாராம்...

ராஜா மனைவி போட்டிருந்தது முத்து போட்டிருந்த சிலம்பு....
மனைவியின் சிலம்பு ஏதோ வளைஞ்சுட்டுதுன்னு ரிப்பேர் செய்ய ஆச்சாரி கிட்ட கொடுத்திருந்தப்ப...

ஆச்சாரி அதை சரி செஞ்சு மாடத்துல வெச்சிருந்தப்ப ஒரு கழுகு அதுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு ராஜா வேட்டைக்கு போனப்ப ஒரு கழுகு தன் குஞ்சுகளை கூட்டில் வெச்சிட்டு இரை தேட போச்சாம்.. அப்ப ராஜா வந்து கூட்டை கலைச்சுட்டாராம்... அந்த கோபத்துல கழுகு மாடத்துல வெச்சிருந்த ராணியோட சிலம்பை எடுத்து ஒளிச்சிருச்சாம் தன் கூட்டில்...

சோ சிலம்பு காணாம போயிடுத்தா?

இங்க கோவலன் காசில்லாம சிரமப்பட்டப்ப அம்பாள் தன் காற்சிலம்பு... ( அரசனை மனைவி போட்டிருதது வெறும் முத்துக்கள் அடங்கிய சிலம்பு.... ஆனால் அம்பாள் போட்டிருந்ததோ மாணிக்கம் ரொம்ப வெல உசத்தியாம்ல? )

அதை கோவலன் கிட்ட கொடுத்து வித்து பணம் கொண்டு பிழைக்கச்சொன்னப்ப கோவலன் கொண்டு போனப்ப தான் ராஜாவோட ஆட்கள் பிடிச்சு கொண்டு வந்துட்டு வெட்டிட்டா கழுத்தை...

கண்ணகி அம்பாளாச்சே... ஸ்வாமி ஆச்சே... உண்மை என்னன்னு தெரிஞ்சுண்டு வர நேரா கோவலன் இறந்த இடத்துக்கு போய் அவனை எழுப்பி விவரம் கேட்டுட்டு ( சாமி என்ன வேணாலும் மேஜிக் செய்யுமாமே)

ராஜாவை உண்டு இல்லன்னு பண்ணிட்டு ஊழித்தாண்டவம் ஆடி ராஜாவின் தவறை சுட்டிக்காட்டி ஊரையே துவம்சம் பண்ணிட்டு நீரோடு நீரா மூழ்கிட்டா அம்பாள் அதாம்பா கண்ணகி...

இதான் எங்க பாட்டி சொன்னது....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik on Tue Oct 26, 2010 2:09 pm

அக்கா உங்க பாட்டி சாதாரண பாட்டி இல்ல ஜெட்டிக்ஸ் பாட்டி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Tue Oct 26, 2010 2:13 pm

ஆகா! உண்மையிலேயே பால கார்திக்க் உங்களுக்கு நன்றி.
1 )பத்தினிப் பெண்டிர் எழுவர் பற்றிய வரலாறு பாண்டிய மண்ணில் ஏற்கனவே அரங்கேற்றமாகி உள்ளது. எனவே இளங்கோவடிகள் கண்ணகியின் பதிவிரதா (பத்தினி) தன்மையை மதுரையிலேயே வெளிக்கொணர்ந்துள்ளார்
எனத் தோன்றுகிறது.
௨) மதுராபதித் தெய்வம் மதுரை மன்னர்களின் நீதி வழுவா சான்றுகளையும் பகன்ருள்ளது. எனவே சாபம் இங்கே எதுவுமில்லை. ஊழ்வினையால் மட்டுமே கோவலன் கொலைகளப்பட்டதும் உறுதியானது.

மேலும் ஏதாவது செய்திகள் உண்டோ? மற்றவர்கள் பேச்சு மூச்சையே காணோம்?

கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by கோவை ராம் on Tue Oct 26, 2010 2:17 pm

கண்ணகி எங்கே சமாதி ஆனார்கள் என இளங்கோவடிகள் கூறுகிறார்

மதுரையை எரித்த பின் கண்ணகி சென்னையை அடுத்த ஒற்றியூரில் வட்ட பாறை அம்மனாக சமாதியானதாகவும் /தேனியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் ,கன்னியாகுமரியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் /தஞ்சய் பகுதியில் கோவில் கொண்டதாகவும் கேள்வி


இதில் எது உண்மை அல்லது இளங்கோ என்ன சொல்கிறார்
தெரிந்தால் விளக்கவும்

ராம்

கோவை ராம்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 977
வசிப்பிடம்: கொங்குநாடு
சேர்ந்தது: 16/03/2009
மதிப்பீடு: 48

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik on Tue Oct 26, 2010 2:19 pm

rarara wrote: கண்ணகி எங்கே சமாதி ஆனார்கள் என இளங்கோவடிகள் கூறுகிறார்

மதுரையை எரித்த பின் கண்ணகி சென்னையை அடுத்த ஒற்றியூரில் வட்ட பாறை அம்மனாக சமாதியானதாகவும் /தேனியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் ,கன்னியாகுமரியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் /தஞ்சய் பகுதியில் கோவில் கொண்டதாகவும் கேள்வி


இதில் எது உண்மை அல்லது இளங்கோ என்ன சொல்கிறார்
தெரிந்தால் விளக்கவும்

ராம்

ராம் இளங்கோ அடிகள் கூற்று படி கண்ணகி சேரநாட்டில் சமாதி ஆனால் என்று கூறுகிறார் மேலும் கேரளாவில் மட்டுமே கண்ணகிக்கு கோவில் ஒன்று உள்ளது என்று நினைக்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik on Tue Oct 26, 2010 2:27 pm

rarara wrote: கண்ணகி எங்கே சமாதி ஆனார்கள் என இளங்கோவடிகள் கூறுகிறார்

மதுரையை எரித்த பின் கண்ணகி சென்னையை அடுத்த ஒற்றியூரில் வட்ட பாறை அம்மனாக சமாதியானதாகவும் /தேனியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் ,கன்னியாகுமரியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் /தஞ்சய் பகுதியில் கோவில் கொண்டதாகவும் கேள்வி


இதில் எது உண்மை அல்லது இளங்கோ என்ன சொல்கிறார்
தெரிந்தால் விளக்கவும்

ராம்



மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து வைகை ஆற்றின் தென்கரை வழியாக, நடந்து சென்று சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.

இங்கு வசித்து வந்த குன்றக் குறவர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைகிறது. அவர்களிடம் தன வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.

இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூறினர். இதை விசாரித்து அறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.


இந்த மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் இருந்த சிலை காணாமல் போய்விட்டதால் சந்தனத்தில் சிலை போன்ற அமைப்பு செய்யப்பட்டு வெள்ளியிலான முகம் அதில் பொருத்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலின் அருகில் சிவபெருமான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலில் வழிபடுபவர்கள் அனைவருக்கும் திருநீறு, குங்குமம், மஞ்சள்தூள் போன்றவை அளிக்கப்படுகின்றன. கோயிலுக்கு வெளியில் அனைவருக்கும் தக்காளி சாதம், எலுமிச்சைச் சாதம், தயிர் சாதம் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.


சிறப்புக்கள்

சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு அமைக்கப்பட்ட 2000 வருடப் பழமையான கோயில் இது.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தில் பெரியாறு வனவிலங்குகள் சரணாலயம், தேக்கடி ஆகியவை மிக அருகில் இருக்கின்றன.

தேனி மாவட்டத்தில் இருக்கும் சுருளி அருவி எனும் சுற்றுலாப் பகுதி கம்பம் எனும் ஊரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.



நன்றி :- முத்து கமலம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by மஞ்சுபாஷிணி on Tue Oct 26, 2010 2:54 pm

balakarthik wrote:அக்கா உங்க பாட்டி சாதாரண பாட்டி இல்ல ஜெட்டிக்ஸ் பாட்டி


பாலா ஆச்சர்யம் அதிகமாகிறது ஆர்வமும் அதிகமாகிறது.. இன்னும் இன்னும் நிறைய அறிய மனம் வேண்டுகிறது.. அடேங்கப்ப்பா எவ்ளோ விஷயங்கள்.. படிக்க படிக்க சுவை கூடுகின்றது... எனக்கு கதை கேட்பதில் ரொம்ப இஷ்டம்... சின்னப்ப கதை சொல்லி சொல்லி சாப்பாடு ஊட்டி இருக்காங்க.. அதான் ஜெட்டிக்ஸ் கதை எல்லாம் சொல்லி புன்னகை எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி சொன்னால் என்பதால் சொல்லி இருப்பாங்க போல புன்னகை

அன்பு நன்றிகள் பாலா அருமையான பகிர்வை பகிர்ந்தமைக்கு...

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum