ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
heezulia
 
மூர்த்தி
 

Admins Online

மூதுரை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

மூதுரை

Post by Aathira on Sun Oct 31, 2010 1:26 pm

First topic message reminder :

மூதுரை

[You must be registered and logged in to see this image.]

கடவுள் வாழ்த்து

1.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

2.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா -நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

3.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

4.
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

5.
அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் - கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

6.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா .

7.
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.

8.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம் .

9.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

10.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.

13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.

14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.

15.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.

17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.

20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.

21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.

22.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

23.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

24.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.

25.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

26.
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

27.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

28.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.

29.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.

30.
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்.

31.
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


Re: மூதுரை

Post by சதாசிவம் on Sat Sep 17, 2011 10:15 am

10.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

பொருள் விளக்கம்

தீயச் செயல்களைச் செய்பவர்களை காண்பது தீமையை தரும். இனிய சொல் இல்லாத கடுமையான சொற்களை கூறும் தீயோர் சொல் கேட்பதும் தீமையை தரும். தீயாரைப் பற்றி பேசுவதும், அவரோடு இணைந்து இருப்பதும் தீமையை தரும்.

11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

பொருள் விளக்கம்

உலகத்தில் உள்ள மக்களின் பசியார உதவும் நெல்லுக்கு இரைக்கும் நீர், வாய்க்கால் வழியாக ஓடி பயன் தராத புல்லுக்கும் பாயும், அதுபோல் இந்த பழமையான உலகத்தில் நல்ல செயல்கள் செய்யும் ஒருவர் உள்ளவரை அவருக்காக அனைவருக்கும் மழை பெய்யும்.

12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.

பொருள் விளக்கம்

உமி நீங்கி செடியாக முளைப்பது அரிசியே ஆனாலும், அந்த அரிசி, உமியுடன் சேர்ந்த நெல்லாக விதைத்தால் தான் முளைக்கும். அதுபோல் எத்தனை ஆற்றல் உடையவருக்கும் தக்க துணை இருந்தால் தான் எடுத்த காரியம் நடைபெறும்.

13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.

பொருள் விளக்கம்

கற்றாழை மடல்கள் மிகவும் பெரியது, ஆனால் மணம் வீசாது. ஆனால் தாழம்புவின் மடல்கள் சிறியதாக இருந்தாலும் மிகுந்த மணத்துடன் மணம் வீசும். கடல் பெரியது, ஆனால் ஒருவரின் தாகத்தை தீர்க்க உதவாது, அதன் அருகில் இருக்கும் சிறிய ஊற்று நீர் மக்களின் தாகத்தை தீர்க்க உதவும். ஆதலால் உருவத்தை கொண்டு, அவர்கள் இருக்கும் வசதி வாய்ப்பை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது. எளிமையாக இருக்கும் ஒருவர் நமக்கு செய்யும் உதவி போல் பெரியவர்கள் செய்யமாட்டார்கள்.


14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.

பொருள் விளக்கம்
இலை கிளைகளுடன் நீண்டு உயர்ந்து காட்டில் வளர்ந்த மரங்கள், மரங்கள் ஆகாது. தேவையான நூல்களை கற்காமல் படித்தவர்கள் சபையில் அவர்கள் பேசும் விஷயத்தை புரிந்து கொள்ளாமல் மரம் போல் நிற்கும் மனிதன் தான் சிறந்த மரம்.

தொடரும்......
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Sep 18, 2011 7:26 pm

ஆதிரா அவர்களுக்கும் பொருள் விளக்கம் அளித்த சதாசிவம் அவர்களுக்கும் எம் நன்றி உரித்தாகுக . :வணக்கம்:
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: மூதுரை

Post by சதாசிவம் on Mon Sep 19, 2011 1:45 pm

Sundararaj Thayalan wrote:ஆதிரா அவர்களுக்கும் பொருள் விளக்கம் அளித்த சதாசிவம் அவர்களுக்கும் எம் நன்றி உரித்தாகுக . :வணக்கம்:

நன்றி ஐயா
நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by சதாசிவம் on Mon Sep 19, 2011 2:15 pm

15.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.


பொருள் விளக்கம்


அழகான மயில் ஆடுவதை பார்த்து, வான்கோழியும் தன்னை மயில் போல் பாவித்து தன் சிறிய சிறகுகளை விரித்து ஆடும். அது போல் தான் திறமை இல்லாதவன் திறமை இருப்பது போல் நடிப்பது, கல்வி கற்காதவன் சொல்லும் கவி எப்படி இருக்குமே அது போல் இருக்கும்.

16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.


பொருள் விளக்கம்


புலிக்கு இரக்கப்பட்டு அதன் காயத்திற்கு மருந்து போட்டால், அது குணம் ஆன உடன் மருந்து போட்ட மருத்துவனை தின்னப் போகும், அது போல் தான், முட்டாளுக்கு நாம் செய்யும் உபகாரம், அவர்கள் நம்மிடமே கற்று நன்றி இல்லாமல் நமக்கு பகை ஆவார்கள். அவர்களுக்கு செய்யும் உதவி கல்லின் மேல் வேகமாக பானை வைத்தால், பானை உடைந்து விடுவதைப் போல் வீணாக போகும்.

17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.


பொருள் விளக்கம்


ஒருவர் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பதால் அவரை நாம் முட்டாள் என்று எண்ணக் கூடாது. குளத்தில் சிறிய மீன்களை விட்டு விட்டு பெரிய மீனுக்காக காத்திருக்கும் கொக்கைப் போல் அவர்கள் வேண்டிய நேரத்தில் அவர்களின் திறமையை நிரூபிப்பார்.

18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.


பொருள் விளக்கம்


குளத்தில் நீர் இருக்கும் போது தான் அதில் பலன் பெரும் கொக்கு, நாரை அதன் அருகில் இருக்கும். அந்த குளத்தில் நீர் வற்றி விட்டால் அது நீர் உள்ள குளத்தை நோக்கி பறந்து சென்று விடும். ஆனால் அந்த குளம் வற்றி போனாலும் அங்கு இருந்த ஆம்பல், தாமரை போன்ற செடிகள் அங்கு இருந்து, மழை பெய்த பின்பு குளத்துடன் தழைத்து வளரும். அது போல் நமக்கு வறுமை, பிரச்சனை வந்தவுடன் நம்மை விட்டு விலகி விடுபவர்கள் நமக்கு உறவினர், நண்பர்கள் இல்லை. கஷ்டம் வந்த காலத்தில் நம்முடன் இருப்பவரே சிறந்த உறவினர் /நண்பர்.

19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.


பொருள் விளக்கம்


தங்கத்தால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது திரும்ப குடமாக செய்து விடலாம், அதன் மதிப்பு மாறாது, அது போல் நல்ல குணம் உடையவர்கள் வறுமை வந்தாலும், தங்களுக்கு கஷ்டம் வந்தாலும், தங்களின் குணம் இழக்க மாட்டார்கள், அவர்களின் மதிப்பு மாறாது. ஆனால் தீய குணம் உடைய சிறியவர்கள், மண்ணால் செய்யப்பட்ட குடத்தை போன்றவர்கள், ஒரு முறை உடைந்தால் ஒட்ட முடியாது. அவர்களின் குணம் காலத்திற்கு தகுந்தது போல் மாறும்.

20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.


பொருள் விளக்கம்


நடுக்கடலில் ஆழமான பகுதில் சென்று ஒரு பாத்திரத்தை நன்றாக மூழ்கி நீரை எடுத்தாலும், பாத்திரத்தின் அளவே தான் நீரை அள்ள முடியும், மிகப் பெரிய அளவில் நீர் இருந்தாலும் நாம் விரும்பும் அளவு நீரை அள்ள முடியாது. அது போல் தான் ஒரு பெண்ணுக்கு பணம், கணவன் நல்லபடியாக அமைந்தாலும் என்ன அனுபவிக்க வேண்டுமோ அதை மட்டும் தான் அனுபவிக்க முடியும்.

21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.


பொருள் விளக்கம்


நம்முடன் பிறந்தோர் மட்டுமே உதவி செய்வார் என்று எண்ணக்கூடாது. நம்மை துன்புறுத்தும் வியாதி நாம் பிறக்கும் போது நம் கூடத் தான் பிறக்கிறது. ஆனால் அதைக் குணமாக்கும் மருந்து எங்கோ ஒரு மலையில் இருந்து கிடைக்கிறது. அது போல் எங்கோ இருந்து வரும் நண்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.[b]
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by kitcha on Mon Sep 19, 2011 3:34 pm

அனைத்துமே அருமையான விளக்கங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by உதயசுதா on Mon Sep 19, 2011 6:07 pm

பள்ளி கூடத்துல படிக்கும்போது கூட இத்தனை ஆர்வமாக படித்ததில்லை.அப்போது தமிழ் என்ற பாடத்தை பாஸ் செய்ய உதவும் என்றுதான் படித்தேனே தவிர அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை.இப்பதான் சதாசிவம் சார் நான் முழுசா படிக்கிறேன்.
அத்தனை விளக்கமும் அருமை.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by சதாசிவம் on Wed Sep 21, 2011 4:37 pm

22.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

பொருள் விளக்கம்

நல்ல மனைவி வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் இல்லாதது என்ற ஒன்று இல்லை. மனைவி துன்பம் செய்பவளாயின், வலியை ஏற்படுத்தும் கடுஞ்சொல் பேசுபவளாக இருப்பின் அந்த வீடு புலி வசிக்கும் குகைப்போல் மாறிவிடும் (அந்த வீட்டிற்கு யாரும் வர மாட்டார்கள்)

23.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

பொருள் விளக்கம்


நாம் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லையே என்று வருந்தும் மடைமை பொருந்திய நெஞ்சமே, எதை கேட்டாலும் கொடுக்கும் கற்பக மரத்தின் கீழே இருந்து பழம் கேட்டு, அது தின்ன முடியாத எட்டிக்காயை கொடுத்தால் அது யார் குற்றம், அனைத்தும் முன் பிறவியில் நாம் செய்த செயல்கள் மூலமே, நம் தலையில் எழுதி வைத்தபடி நடக்கிறது . ஆதலால் நன்மையை வேண்டின் நன்மையை செய்.

24.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.

பொருள் விளக்கம்


தீய குணம் உடைய கடைநிலை நண்பர்களோடு ஏற்படும் பிரிவு, கல் பிளந்ததுப் போல் மீண்டும் ஒட்டாது. இடைநிலை நண்பர்களிடம் ஏற்படும் பிரிவு ஒருவர் வலிய வந்து பேசினால் , பொன் பிளந்த பிறகு சூடாக்கினால் மீண்டும் ஒட்டுவதுப் போல் ஒட்டிக்கொள்ளும். ஆனால் மேண்மை குணம் உள்ள முதல் நிலை நண்பர்களிடம் ஏற்படும் பிரிவு ஓடும் நீரில் ஒரு அம்பை வைத்து ஒரு கோடு போட்டால், அது சில நொடிகளில் மறைந்து போவதைப்போல் உடனடியாக மறைந்து மீண்டும் இணைந்து விடும்.

25.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

பொருள் விளக்கம்


நல்ல தாமரை இருக்கும் குளத்தில் நல்ல அன்னம் வந்து சேரும், அது போல் கல்வி கற்றோரை கல்வி கற்றவர் மதித்து அவருடன் இணங்கி வாழ்வார்கள். ஆனால் பிணத்தை தேடிப் போய் தின்னும் காக்கைப்போல் மூர்க்க குணம் உடைய முட்டாள்கள் முட்டாள்களுடன் தான் சேர்ந்து வாழ்வார்கள்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by kitcha on Wed Sep 21, 2011 4:40 pm

ரொம்ப மகிழ்ச்சி,[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by கேசவன் on Wed Sep 21, 2011 5:23 pm

தமிழ் நூலுக்கு இனை ஏதும் இல்லை
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by சதாசிவம் on Thu Sep 22, 2011 10:18 am

26.
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

பொருள் விளக்கம்

ஒருவர் நம்மிடம் பழகுவதை வைத்து அவர் நல்லவரா கெட்டவரா என்று நாம் கண்டறிய முடியும். பல்லில் விஷம் இல்லாத தண்ணீர் பாம்பு அனைவரும் உலவும் பகல் வேளையில் அங்கும் இங்கும் உலவும். அது நஞ்சு இல்லாதது என்று அறிந்த மக்கள் அதை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனால் பல்லில் விஷம் உள்ள நல்ல பாம்பு, மக்கள் நடமாடும் பகல் வேளையில் வெளியில் வராது, யாரும் இல்லாத இருட்டு வேளையில் தான் அது வெளிவரும். அது போல் நெஞ்சில் தவறு, குற்றம், களவு இல்லாதவர்கள் எப்போதும் வெளிப்படையாக பேசுவார்கள், அனைவரிடம் சகஜமாக பழகுவார்கள். அவர்களின் செயல்கள் அனைவருக்கும் தெளிவாக இருக்கும். ஆனால் மிகக்குறைவாக பேசுபவர்கள், அனைவரையும் தவிர்த்து ஒரு சிலரிடம் மட்டுமே பழுகுபவர்கள், தன் செயலை அடுத்தவருக்கு மறைத்து செய்பவர்கள் என்றும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை, ஒருவருக்கும் உண்மை ஆக மாட்டார்கள் அவர்கள் நெஞ்சில் வஞ்சம் நிறைந்து இருக்கும். இது போல் உள்ளவர்களிடம் நல்ல பாம்பை கண்டு நாம் விலகுவதைப் போல் விலகி இருக்க வேண்டும்.

27.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

பொருள் விளக்கம்

ஒரு நாட்டை ஆளும் மன்னனையும் கல்வி கற்றவனையும் ஒப்பு நோக்கினால் (compare செய்தால்), மன்னனை விட கல்வி கற்றவனே சிறந்தவன், ஏனெனில் மன்னனுக்கு அவன் வாழும் நாட்டில் மட்டுமே சிறப்பு, ஆனால் கல்வி கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

28.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.

பொருள் விளக்கம்

கல்வி கற்காத மனிதர்களுக்கு கல்வி கற்றவர் சொல்லும் அறிவுரை எமனைப் போல் கொல்லும். தவறு செய்யும் கெட்ட மனிதர்களுக்கு அறம் எமனைப் போல் கொல்லும். மென்மையான வாழைக்கு அது ஈன்ற கன்று எமனைப் போல் கொல்லும், அது போல் இல்வாழ்க்கைக்கு ஒத்து வராத பெண் , வீட்டிற்கு எமனைப் போல் இருந்து அந்த வீட்டின் மகிழ்ச்சியை கொல்லுவாள்.

தொடரும் ......
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by சதாசிவம் on Thu Sep 22, 2011 4:48 pm

29.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.

பொருள் விளக்கம்
சந்தன மரத்துண்டு சிறியதாக இருந்தாலும்/ ஆனாலும் அதன் மணம் குறையாது, அதுபோல் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் வள்ளல் குணம் உடைய, மன்னர்கள் தங்கள் தனம் குறைந்து வறுமை வந்த போதிலும் அடுத்தவர் கேட்டால் அவர்களுக்கு இல்லை என்று கூற மாட்டார்கள்.

30.
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்.

பொருள் விளக்கம்

ஒருவனுக்கு பணம் வரும் போது, உறவுகள் கூட வரும், சாதாரண மனிதனுக்கு கிட்டாது என்று நினைக்கும் சிறந்த பொருளும் கிடைக்கும், கம்பீரமான உருவம் வரும், உயர் குல தொடர்பும் ஏற்படும், ஆனால் பணம் அவனை விட்டு சென்று விட்டால் அது கொண்டு வந்து சேர்த்த அனைத்தையும் எடுத்துச் செல்லும்.

31.
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

பொருள் விளக்கம்

மரத்தை வெட்ட வருபவனுக்கும் அவன் தங்க குளிர்ந்த நிழல் கொடுக்கும் மரத்தைப் போல் , நல்ல குணம் உடைய அறிவுடையோர், தங்களுக்கு துன்பம் செய்பவனுக்கும் உதவி செய்வார்.


முற்றும்...


ஊக்கம் அளித்த அனைத்து தோழர்/தோழிகளுக்கு நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by kitcha on Thu Sep 22, 2011 4:53 pm

முற்றும்...

அனைத்து பாடல்களுக்கும் விளக்கம் அளித்த

தங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்.நன்றிகள்.[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இதே போல் வேறு ஒரு பதிவு தொடருங்கள்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by சதாசிவம் on Thu Sep 22, 2011 6:28 pm

தோழமைக்கு நன்றி

பள்ளிக்கூடத்தில் படித்த பாடல்கள் மட்டுமல்லாமல் தமிழில் நாம் படிக்க வேண்டிய, நல்வழி, விவேக சிந்தாமணி, ஆசாரக்கோவை,கொன்றை வேந்தன் போன்ற நூல்களில் இருந்து சிறந்த பாடல்கள் பொருளுடன் பதிக்க எண்ணியுள்ளேன்.

மூதுரையை தொடர்ந்து நல்வழி தொடரும் ........
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: மூதுரை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum