ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொன் விழா காணும் உலக நாயகன்

View previous topic View next topic Go down

பொன் விழா காணும் உலக நாயகன்

Post by சிவா on Thu Aug 13, 2009 2:00 pm
தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் நடிகர் கமல்ஹாசன், 'இந்திய சினிமாவில் பொன் விழா' கண்ட நாயகனாக வலம் வருகிறார்..!

வெவ்வேறு மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், இந்த ஆண்டுடன் இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறார்.

நம் நாட்டின் சினிமா கலைத் திறமையை உலக அரங்கில் கொண்டுச் செல்வதற்கு தொடர்ந்து முனைந்து வரும் இந்த நாயகன் நடித்த முதல் திரைப்படம் வெளியானது, 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ல்!

கமல்ஹாசன் 1959-ம் ஆண்டில் நடந்த படப்பிடிப்புகளில், தனது 5வது வயதில் கலந்து கொண்ட 'களத்தூர் கண்ணம்மா', 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ல் வெளியானது.

ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் திரையுலகமே கமல்ஹாசனின் கலையுலக பொன் விழாவைக் கொண்டாடத் தொடங்கும் இவ்வேளையில், அந்த அசாத்திய கலைஞனது சினிமா வாழ்க்கையின் சாரம் 50 முக்கியக் குறிப்புகளாக இங்கே...

1. ஏ.வி.எம் தயாரிப்பில் பீம் சிங் இயக்கிய படம் 'களத்தூர் கண்ணம்மா'. ஜெமினி கணேசன் - சாவித்திரி நடித்த இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், 1960-ல் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றார்.

2. மழலைக் கமலின் உதட்டசைவில் உருவான களத்தூர் கண்ணம்மாவில் இடம்பெற்ற 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' இன்றைக்கும் ரசிகர்கள் மனத்தில் இருந்து நீங்கா இடம் பெற்றுள்ளது.

3. நடிகர் திலகம் என்று போற்றப்பட்ட சிவாஜி கணேசனுடன் 'பார்த்தால் பசிதீரும்', மக்கள் திலகம் என்றழைக்கப்பட்ட எம்.ஜி.ஆருடன் 'ஆனந்த ஜோதி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

4. சென்னை புரசைவாக்கத்திலுள்ள எம்.டி.சி. முத்தையா செட்டி பள்ளியில் தான் படித்தார் கமல்ஹாசன். படிப்பின் மீது கொஞ்சமும் மனம் ஒட்டாத கமலுக்கு கலை மீது மட்டுமே ஆர்வம் இருந்தது.

5. கமல்ஹாசன் நாயகனாக நடித்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமானார், ரஜினிகாந்த். இப்படம் 1975-ம் ஆண்டில் சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. அன்று முதல் இருவரது நட்பு தொடர்கிறது.

6. 16 வயதினிலே படத்தில் சப்பாணியாக நடித்து ஹீரோயிஸத்துக்கான பிம்பத்தை தகர்த்தவர். அந்தப் படத்துக்குப் பிறகு வெற்றி நாயகனாக வலம்வரத் தொடங்கினார்.

7. 70 மற்றும் 80களில் கமல் - ஸ்ரீதேவி ஜோடி வெற்றிக் கொடி கட்டியது. இந்த இணை மொத்தம் 23 படங்களில் நீடித்தது.

8. கமல்ஹாசனும் ரஜினியும் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளனர். அவற்றில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சி, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

9. கமல்ஹாசனிடம் இருந்து ரஜினிக்கு மிகவும் பிடித்த விஷயம் பஞ்சுவாலிட்டி.

10. இளம் வயதில் மலையாள சினிமாவில் தன்னை வெகுவாக ஈடுபடுத்திக் கொண்ட கமல்ஹாசனால் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச முடியும். அதோடு இந்தி, ஆங்கிலம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளையும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்.

11. உலக சினிமா மீது அப்போது அவருக்கு மோகமுண்டு. கமலுக்குப் பிடித்த படம், விட்டோரியா டேசிகாவின் 'பைசைக்கிள் தீவ்ஸ்.

12. ஷர்ட் இல்லாமல் உடம்பை காட்டிக் கொண்டு நடிப்பது இப்போதையை ஹீரோக்களிடையே ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. இதற்கு முன்னோடியாக இருந்து, கே.பாலச்சந்தர் படத்தில் ஷர்ட் இல்லாமல் நடித்தவர் கமல்!

13. இலக்கியம் மீது ஆர்வம் கொண்ட கமல்ஹாசனுக்கு பிடித்த நாவல்கள் தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' மற்றும் 'மரப்பசு'.

14. சிவாஜி கணேசன் மீது பற்றுகொண்ட கமல்ஹாசன், எப்போதும் அவரை 'அப்பா' என்றே அன்புடன் அழைப்பார். சிவாஜியின் தாக்கம் இல்லாமல் தமிழ் திரையுலகில் எவரும் நடிக்க முடியாது என்பது கமலின் எண்ணம்!

15. பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள கமல்ஹாசன் எப்போதும் தன்னை நாத்திகர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புவார்.

16. தான் நடிக்கும் கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் கமல்ஹாசன் அதன் மூலம் நிறைய கலைகளை கற்றுள்ளார். அபூர்வ ராகங்களுக்காக மிருதங்கம் கற்றார்; அவள் ஒரு தொடர் கதைக்காக மிமிக்ரி கற்றார்; தேவர் மகனுக்காக சிலம்பாட்டம் கற்றார்... இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

17. கமல்ஹாசன் தயாரித்த முதல் திரைப்படம் 'ராஜபார்வை'.

18. கமல்ஹாசன் இளம் ஹீரோவாக வலம் வந்த காலத்தில் அவரது 'சட்டம் என் கையில்' படத்தில் வில்லனாக அறிமுகமானார், நடிகர் சத்யராஜ். பிற்காலத்தில் கமலின் தயாரிப்பில் வெளியான 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்தின் ஹீரோ சத்யராஜ்!

19. சோதனை முயற்சிகளில் ஈடுபடும் தமிழ் திரைக் கலைஞர்களில் தன்னிகரற்ற கமல்ஹாசன், சிங்கீதம் சீனிவாச ராவ் உடன் இணைந்து 'புஷ்பக்' என்ற வசனமற்ற படம் (தமிழில் 'பேசும் படம்') உருவாக காரணமாக இருந்தார். இப்படம் சிறந்த படத்துக்கான் ஃபிலிம் ஃபேர் விருது பெற்றது.

20. இந்தியில் 'சாகர்', 'ஏக் தூஜே கேலியே' போன்ற படங்கள் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தன.

21. கமலைக் கவர்ந்த இந்தித் திரைப்படங்கள் 'மோஹால் இ ஆஸாம்' மற்றும் 'ஷோலே'.

22. அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள கமல் இன்றளவும் பேசப்படுபவர். தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத முயற்சி அது.

23. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு வேடங்களில் அசத்தியது குறிப்பிடத்தக்க முயற்சி.

24. மகாத்மா காந்தியை கொல்ல முனைந்த ஒருவனது வாழ்க்கையைச் சொல்லும் 'ஹேராம்' படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெறாமல் போனாலும் கமலுக்கு நிறைவையே தந்தது.

25. பழைய நட்புகளைத் தொடர்வதில் மிகுந்த கவனம் செலுத்துவார். சந்தான பாரதி, பி.வாசு, மணி ரத்னம், பி.சி.ஸ்ரீராம் என இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொன் விழா காணும் உலக நாயகன்

Post by சிவா on Thu Aug 13, 2009 2:01 pm

26. குருநாதர் கே.பாலச்சந்தர் மீது அளவு கடந்த பற்று நிறைந்தவர், கமல்ஹாசன்.

27, தனது ரசிகர்களை நல்வழிப்படுத்தும் வகையில், ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றங்களாக மாற்றி பல்வேறு சமூக சேவைகள் புரிய வழிவகை செய்தார்.

28. தமிழ் இலக்கியவாதிகளை சினிமாவுக்கு அழைத்து வருவதில் ஆர்வம் கொண்டவர். கமலுடன் அதிகம் பணியாற்றியவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா.

29. கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தை ஆல் டைம் பெஸ்ட் ஃபிலிம்ஸ் 100 பட்டியலில் ஒன்றாக சேர்த்து கெளரவம் தந்தது, டைம்ஸ் பத்திரிகை.

30. 'நாயகன்' படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் உடனடியாக கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சிறப்பம்சம், "நீ நடிகனின் நடிகன்".

31. 'நாயகன்' படத்தைப் பார்த்த சிவாஜி கணேசன் படம் முடிந்தும் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். பிறகு, கண்ணீர்த் துளியுடன் கமலைக் கட்டிப் பிடித்த சிவாஜி, "படம் நல்லா வரும்," என்றார்.

32. சட்டம் என் கையில் படத்துக்காக சென்னை மொழியை லூஸ் மோகனிடம் கற்றார். 'சதிலீலாவதி'க்காக கோயம்புத்தூர் பாஷையை கோவை சரளாவிடம் இருந்து கற்றுக் கொண்டார். தெனாலி படத்துக்காக பிரபல வானொலி வர்ணனையாளர் அப்துல் ஹமீத்திடம் இருந்து இலங்கைத் தமிழை எப்படி பேசுவது என்பதைக் கற்றுக் கொண்டார்.

33. தமிழ் சினிமாவில் என்றென்றும் வாழும் கலைஞர் நாகேஷ். அவரை மிகச் சிறப்பாக பயன்படுத்தியவர்களில் கமல்ஹாசனுக்கும் பங்குண்டு. கமல்ஹாசனின் 'நம்மவர்' படத்தில் நடித்ததற்காக நாகேஷ் என்ற உன்னத நடிகருக்கு தேசிய விருது வழங்கி தனது விருதுக்கு பெருமை சேர்த்துக் கொண்டது இந்திய அரசு.

34. திட்டமிட்டு இயக்குனராக களமிறங்க இருந்த கமல்ஹாசன், நியமிக்கப்பட்ட இயக்குனர் செய்த குளறுபடியால் எதிர்பாராத விதமாக இயக்குனராக வேண்டியாகிவிட்டது. அவ்வைசண்முகியின் இந்தி பதிப்பான 'சேச்சி 420' தான் அவர் இயக்கிய முதல் திரைப்படம்.

35. மூன்றாம் பிறை (1982), நாயகன் (1987) மற்றும் இந்தியன் (1996) ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளைப் பெற்றார்.

36. ஆஸ்கார் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான விருது பிரிவுக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட படங்களில், இதுவரை அதிக எண்ணிக்கையில் கமல்ஹாசன் நடித்த படங்களே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

37. இந்திய சினிமாவிலேயே 'மேக்கப்புக்கு முக்கியத்துவம்' அளிப்பதன் அவசியத்தை உணர்த்தியதில் கமலுக்கு பெரும் பங்குண்டு. இதற்காக ஹாலிவுட்டில் இருந்து கலைஞர்களை வரவழைத்தவர். இந்தியன், அவ்வைசண்முகி, தசாவதாரம் ஆகியவை இதற்கு நல்ல உதாரணம்.

38. எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, நடன இயக்குனர், இயக்குனர் என கலையுலகில் பல அவதாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள கமல்ஹாசனுக்கு பாடல் திறன் சற்று மிகுதியாகவே இருக்கிறது. ஒரு முறை பால முரளிகிருஷ்ணா தனது பேட்டியில், தன்னிடம் சங்கீதம் கற்க வந்த கமலின் திறமையை சில நாட்களிலேயே கண்டு வியந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்!

39. 1990-ல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

40. 2005-ல் சத்யபாமா பல்கலைக்கழகத்தால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொன் விழா காணும் உலக நாயகன்

Post by சிவா on Thu Aug 13, 2009 2:01 pm

41. 2009-ல் 'வாழும் வரலாறு' விருதை வழங்கியது FICCI அமைப்பு.

42. கமல்ஹாசன் இயக்கிய படங்கள்... சாச்சி 420 (1997), ஹே ராம் (2000) மற்றும் விருமாண்டி (2004).

43. கதை எழுதிய படங்கள்... தேவர்மகன் (1992), வீராசட் (1997), பிவி நேம்பர் 1 (1999), ஹெராம் (2000), ஆளவந்தான் (2001), நளதமயந்தி (2003), விருமாண்டி (2004), மும்பை எக்ஸ்பிரஸ் (2005), ராம்ஜி லண்டன்வாலா (2005), தசாவதாரம் (2008).

44. திரைக்கதை எழுதிய படங்கள்... தேவர்மகன் (1992), சேச்சி 420 (1998), ஹேராம் (2000), அன்பே சிவம் ( 2003), நளதமயந்தி (2003), தசாவதாரம் (2008)

45. இந்தியன் (1996), வேட்டையாடு விளையாடு (2006) படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதுகள் பெற்றார்.

46. ஆகிலி ராஜ்யம், சுவாதி முத்யம் மற்றும் இந்துருடு சந்துருடு ஆகிய மூன்று படங்களுக்காக ஆந்திர அரசின் சிறந்த நடிகருக்கான நந்தி விருதைப் பெற்றார்.

47. கமல்ஹாசன் பெற்ற ஃபிலிம் ஃபேர் விருதுகளின் எண்ணிக்கை 18.

48. 'தசாவதாரி'யாக கமல் எடுத்த கமர்ஷியல் அவதாரம், இந்திய பாக்ஸ் ஆபீஸின் டாப்களில் ஒன்று. கலைத் தந்தையின் 'நவராத்திரி'க்குப் போட்டியாக, மகன் போட்ட 10 கெட்டப்புகளைப் பரவச எக்ஸிபிஷனாகப் பார்த்துக் களித்தனர் உலகத் தமிழர்கள்.

49. இந்தியத் திரையுலகிலேயே 50 ஆண்டுகாலம் பல்துறை கலைஞனாக வலம் வரும் ஒரே கலைஞனும் இவரே.

50. சினிமாவை மூச்சாக அர்ப்பணிப்புடன் அணுகி வரும் கலைஞனுக்கு இருக்கும் ஒரே நீண்டகால வருத்தம்... 'மருதநாயகம்' என்ற கனவுப் படத்தை உருவாக்கிவிட வேண்டும் என்பதே!

காலத்துக்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்ளும் கலைஞர்களில் கமல்ஹாசன் முதன்மையானவர். ரீமேக் கலாசாரம் மிகுதியாகத் தொடங்கிய இந்தக் காலக்கட்டத்தில், வேறு மொழிகளில் வெளிவரும் தரமான படங்களை தமிழுக்குக் கொண்டு வரும் முயற்சியாக, இந்தியில் சிறப்பிடம் பெற்ற 'தி' வெட்னஸ்டே' படத்தை தமிழில் 'உன்னைப் போல் ஒருவன்' ஆக உருவாக்கி வருகிறார், கமல்ஹாசன்.

ஆனால், திரையுலகில் 'உன்னைப் போல் ஒருவன்' யார்? என்பதே கமல்ஹாசனை 'உலக நாயகன்' எனப் பாசத்துடன் அழைக்கும் ரசிகர்கள் கேட்கும் கேள்வி!

நன்றி - விகடன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொன் விழா காணும் உலக நாயகன்

Post by பாலாஜி on Thu Aug 13, 2009 2:07 pm

பொன் விழா காணும் உலக நாயகனுக்கு , வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பொன் விழா காணும் உலக நாயகன்

Post by VIJAY on Thu Aug 13, 2009 2:10 pm

நன்றி பாடகன்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: பொன் விழா காணும் உலக நாயகன்

Post by பாலாஜி on Thu Aug 13, 2009 2:10 pm

"ஆனால், திரையுலகில் 'உன்னைப் போல் ஒருவன்' யார்? என்பதே கமல்ஹாசனை 'உலக நாயகன்' எனப் பாசத்துடன் அழைக்கும் ரசிகர்கள் கேட்கும் கேள்வி! "

மிக மிக சரி
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பொன் விழா காணும் உலக நாயகன்

Post by ramesh.vait on Thu Aug 13, 2009 2:15 pm

புன்னகை
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பொன் விழா காணும் உலக நாயகன்

Post by Anandh on Thu Aug 13, 2009 2:24 pm

வாழ்த்துகள் உலக நாயகன் அன்பு மலர்

Anandh
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 148
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பொன் விழா காணும் உலக நாயகன்

Post by VIJAY on Thu Aug 13, 2009 2:33 pm

அன்பு மலர்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: பொன் விழா காணும் உலக நாயகன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum