ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

View previous topic View next topic Go down

கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

Post by Ramya25 on Thu Aug 13, 2009 7:29 pm

கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

டிகேவி ராஜன் (Tamilhindu.com)இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றில், தனிப்பட்ட ஒரு மனிதனோ, அல்லது
சம்பவமோ மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்று
சொல்லமுடியாது. ஆனால் கண்ணனுடைய தாக்கம் இந்திய வரலாற்றில்,
இலக்கியத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில் எல்லாவற்றிலும் இருக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை கிருஷ்ணன் ஒரு மிக முக்கியமான அம்சம். கலாசார
மையம். எவ்வித அறுபடுதலுமற்ற தொடர்ச்சியான ஆளுமை.

கிருஷ்ணனின் காலகட்டம்:

கிருஷ்ணன் பிறந்து சற்றேறக்குறைய 5200 ஆண்டுகள் ஆகின்றன என்று
கண்டுபிடித்திருக்கிறார்கள் தொல்லியல் நிபுணர்கள். கண்ணன் எப்படி
வாழ்ந்தான் என்பதைப்பற்றி அறிவது மட்டுமல்லாமல், கண்ணனுடைய வாழ்க்கை
இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ள
வேண்டும் என்பதுவும் முக்கியம். அதற்காகவே இந்தியா முழுவதும் கண்ணனை
மையப்படுத்திக் கண்காட்சிகள் நடத்தி வருகிறோம். இந்த கண்காட்சியின்
முக்கியநோக்கமே கண்ணன் எப்படி என்றென்றைக்குமான ஒரு ஆளுமையாக இருக்கிறான்
என்பதை உணர்த்துவதே. இந்த கண்காட்சியின் பெயர் The Glorious World of
Kanna - கண்ணனின் பெருமைவாய்ந்த உலகம். இந்தக் கண்காட்சியில் கண்ணன்
பிறந்து வளர்ந்த இடமான கோகுலம்,பிருந்தாவனம், துவாரகை ஆகிய இடங்களில் உள்ள
திருக்கோவில்கள், அங்கு நடைபெற்ற அகழ்வாய்ச்சிகள், அப்போது கிடைத்த அரிய
தகவல்கள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம். அதன் மூலம் கண்ணனின்
காலத்தைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

Ramya25
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

Post by Ramya25 on Thu Aug 13, 2009 7:31 pmஅலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான
கிரேக்கர்கள் கண்ணனை வழிபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவை
மிகவும் சுவைமிக்க ஆதாரங்கள். உதாரணத்திற்கு, மத்திய பிரதேசத்திலுள்ள்
டெக்ஸ் என்னும் நகரத்தில் உள்ள ஒரு கருட ஸ்தம்பம் பற்றிச் சொல்லலாம். இந்த
ஸ்தம்பத்தை உருவாக்கியவர் ஒரு கிரேக்கர். அவர் கண்ணனை ’என்னுடைய தலைவர்,
கடவுள் வாசுதேவ கிருஷ்ணன்’ என்று சொல்கிறார். அதேபோல் சமீபத்தில்
ஆப்கானஸ்தானில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்ணன், பலராமனுடைய காசுகள்
கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் என்பது அந்த காலத்தினுடைய
காந்தஹார். காந்தாரி பிறந்த இடம். காந்தாரியின் சகோதரன் சகுனி பிறந்த
இடம். ஆகவே கண்ணனுடைய தாக்கம் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு
நாடுகளிலும் பரவியுள்ளது என்பது நமக்குத் தெரியவருகிறது.
இரண்டாவது, மஹாபாரதம் நடைபெற்ற காலகட்டம் வழியாகவும் கண்ணனின் காலத்தை
நாம் யூகிக்கலாம். மஹா பாரதம் நடந்தது சுமார் 5000 ஆண்டுகள் முன்பு.
துவாரகை என்பது தற்போதைய குஜராத்தில் உள்ளது. அதிலிருந்து ஏறக்குறைய ஒரு
150 கிலோ மீட்டர் டோல வீரா என்ற இடம் சமீபத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகத்திலேயே முழுவதுமாக
’உருவாக்கப்பட்ட ஒரு நகரம்’ என்று சொல்லலாம். உலகின் பத்து அதிசயங்களில்
ஒன்றாக இதையும் சேர்த்துள்ளனர். டோல வீராவுக்கு நான் போயிருந்தபொழுது,
ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நகரம் மிக செழிப்பாக
இருந்திருக்கவேண்டும் என்பதை உணர முடிந்தது. அங்கு பல்வேறு வகையாக
கட்டடங்கள் இருந்திருக்கவேண்டும். உயர்வர்க்கத்தினருக்கு, நடுத்தர
வர்கத்தினருக்கு, அங்காடிகளுக்கு என பல்வேறு கட்டடங்கள்
இருந்திருப்பதற்கான சான்றுகளைப் பார்க்கமுடிந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும்
தனித்தனியான குடிநீர் இணைப்பு என்று, மிகவும் பிரமிப்பான வகையில் அந்த
‘உருவாக்கப்பட்ட நகரம்’ இருந்துள்ளது. இதனுடைய காலகட்டம் கிமு 3200 என்று
தொல்லியலாலர்கள் கணித்துள்ளனர். அதாவது இன்றிலிருந்து கிட்டத்தட்ட 5200
ஆண்டுகளுக்கு முன்னால்!. இது ஏறக்குறைய கிருஷ்ணர் பிறந்த, வாழ்ந்த
காலகட்டம்தான். ஆகவே டோல வீராவும் கண்ணனுடைய தலைநகராயிருந்திருக்கலாம்,
கண்ணன் சார்ந்த ஒரு இடமாயிருக்கலாம் என்று இப்போது சொல்லுகிறார்கள்.

கண்ணன் - ஒரு நேர்மறைப் பிம்பம்

கண்ணனைப்பற்றி மிகப்பிரபலமான ஒரு ஸ்லோகம் உண்டு. அது ‘கிருஷ்ணம் வந்தே
ஜகத்குரும்’ என்று சொல்லுகிறது. ஜகத்துக்கெல்லாம் குரு என்பது கண்ணனுக்கு
மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஜகத்குரு
என்று சொல்லும்பொழுது நமக்கு என்ன நினைவில் தோன்றவேண்டும்? ஒரு மனிதன்,
125 ஆண்டுகள் முழுமையாக, வெற்றிகரமான வாழ்க்கையை நடத்திக் காண்பிக்க
முடியுமென்பதை உலகுக்கு அறிவித்தவர் கண்ணன் என்பதே. அதாவது ஒரு மனிதனுடைய
ஒட்டுமொத்த தீரம். இதைப்பற்றி மேல்நாட்டு அறிஞர்கள், ’கண்ணனுடைய வரலாறு
மனிதனுக்கு மனிதநேயத்துக்கு மட்டுமல்ல; மனிதனுடைய வெற்றிக்கு ஒரு சான்றாக
இருக்கிறது’ என்கிறார்கள். ஏனென்றால் கண்ணன் எல்லாவற்றிலும் வெற்றி
பெற்றார். பதினெட்டு நாள் போரையும் எதிர்கொண்டு ஆயுதமெதுவும் எடுக்காமல்,
ஒட்டுமொத்த போரையும் உள்வாங்கி, பாண்டவர்களின் வெற்றிக்காக திறமையான
திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்தவர். வகுத்ததோடு மட்டுமன்றி
அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்துகொண்டு போரில் நேரிடையாகப்
பங்குபெற்றவர். அதாவது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும்
நஷ்டங்களையும் எப்படி சமாளிக்கலாம் என்பதை, கூடவே இருந்து சொல்லிக்கொடுத்த
ஒரு தலைவர். ஒரு தோழர்.


அதுமட்டுமில்லாமல்
இன்றைய மேலாண்மை சார்ந்த பல்வேறு நேர்மறைக் கூறுகளை நாம் கண்ணனிடம்
காணமுடியும். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் அறிவுபூர்வமான தளத்தில்
இருந்ததோடு, நடைமுறை வாழ்க்கையிலும் இயைந்து கிடக்கிறது. கண்ணனின்
வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எங்கள் அமைப்பில் நாங்கள் என்ன செய்கிறோம்
என்பதை உங்களுக்குச் சொன்னால், கண்ணன் எப்படி நம் வாழ்க்கையில்
கலந்திருக்கிறான் என்பது புரியும்.
கண்ணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, தினசரி வாழ்க்கையில்
ஏற்படக்கூடிய பிரச்சினையை சமாளிக்க ஏறக்குறைய 35 சூத்திரங்களை (formula)
வகுத்திருக்கிறோம். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்கேற்ற ஒரு
சூத்திரத்தைப் பயன்படுத்தமுடியும். மிக மிக எளிமையான மற்றும் நடைமுறை
சாத்தியங்கள் நிறைந்த சூத்திரங்கள். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம்
இன்றும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறது. எனவேதான் கிருஷ்ண உள்ளுணர்வு
நிலை (Krishna Consciousness) பற்றி ஓயாது பேசுகிறோம்.

Ramya25
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

Post by Ramya25 on Thu Aug 13, 2009 7:31 pmசில உதாரணங்களைச் சொன்னால் எப்படி கண்ணனின் வாழ்வு இன்றும் பொருந்தி
வருகிறது என்பதனை உணர்ந்துகொள்ள முடியும். குருக்ஷேத்திரப் போர் நடந்தபோது
பீஷ்மருக்கு திடீரென்று ஒரு ஆசை. கண்ணனின் ரௌத்ரமான, வீரமான பாவத்தைப்
பார்க்க வேண்டும் என்கிறார். அது முடியாத காரியம். ஏனென்றால், கண்ணன்
போரின்போது ஆயுதத்தை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறான். ஆனால்
பீஷ்மர் அவ்வாறு வேண்டியது கண்ணனுக்கு தெரிந்துவிட்டது. பீஷ்மர்
கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஒரு பக்தர். எனவே பக்தர் சொன்னதை கேட்டுத்தான்
ஆகவேண்டும். ஆனால் அதை எப்படி செய்வது? காத்துக்கொண்டிருக்கிறார். கால,
தேச வர்தமானங்களுக்காக கண்ணன் காத்துக்கொண்டிருக்கிறார். பீஷ்மர் கேட்டது
போரின் நான்காவது நாளில். கண்ணன் ஐந்தாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை.
ஆறாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை, ஏழாவது நாள் காலை. அர்ஜூனனுடைய
உயிராற்றல் மிகவும் குறைவாக இருந்தது. அர்ஜுனன் சரியாக வில்லைப்
பயன்படுத்திப் போர் செய்யவில்லை.
இந்த சமயத்தில் கிருஷ்ணர் என்ன செய்கிறார் என்று பாருங்கள். ‘அர்ஜுனா
நீ பயனற்றவன். உனக்கு ஒன்றும் தெரியவில்லை. என்னைப் பார், நான் போய்
சண்டைபோட்டு பீஷ்மரை கொல்கிறேன், நீ பேசாமல் இரு’ என்று கூறிவிட்டு வேகமாக
ஓடுகிறார். ஓடும்போது கண்ணெல்லாம் சிவந்துபோய்விடுகிறது. கையில் வில்லை
எடுத்துக்கொண்டு போகிறார். எந்தமாதிரியான ரூபத்தை பீஷ்மர் பார்க்க
ஆசைப்பட்டாரோ அந்த ரூபத்திலேயே சென்றார் கண்ணன். உடனே அர்ஜுனன் பின்னாலேயே
ஓடிவந்து அவர் காலிலே விழுந்து ’கண்ணா! நீ இதுமாதிரி செய்யாதே, ஏனென்றால்
எனக்கு கெட்டபெயர் வந்துவிடும்’ என்றுகூறி, அவரை அழைத்துக்கொண்டு
போகிறான். அர்ஜுனனின் தேகத்தில் ஒரு புத்துணர்ச்சியும் வேகமும்
வந்துவிடுகிறது. இதுவும் கண்ணனின் செயலே. இது ஒரு புறம் இருக்க, கண்ணன்
உடனே பீஷ்மர் விரும்பிய ரூபத்தைக் காட்டிவிடவில்லை.அந்த நேரத்துக்காகக்
காத்துக்கொண்டிருந்தார். மேலாண்மை இயக்குநர் ஒருவர், தனக்குக் கீழே வேலை
செய்யும் ஒருவரின் மேல் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால்கூட உடனே
எடுக்கக்கூடாது. தக்க சமயத்திற்காக காத்துக்கொண்டிருக்க வேண்டும். எந்த
சமயத்தில் நடவடிக்கை எடுத்தால் தனது நிறுவனத்துக்குக் கெடுதல் வராதோ
அப்போதுதான் செயல்படுத்தவேண்டும். கண்ணன் எந்தக் காலத்தில் இருந்து எந்தக்
காலத்துக்கு அனாசாயமாகத் தாவுகிறான் என்பதைப் பாருங்கள்.சிசுபால வதத்தின்போதும் கண்ணனிடம் நாம் ஒரு அரிய பாடத்தைப்
பெறமுடியும். அவன் நூறுமுறை மட்டுமே தீயமொழி பேசமுடியும். அதைத்
தாண்டினால், உடனே அவனைக் கொல்வேன் என்றான் கண்ணன். எவ்வெப்பொழுதெல்லாம்
சிசுபாலன் கண்ணனைப்பற்றித் தீயமொழி பேசுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனுடைய
விரல் உயராது. அதாவது அதெல்லாம் எண்ணிக்கையில் வராது. நீ இடைப்பையன்
என்பான் அவன். பேசாமல் நின்றுகொண்டிருப்பான் கண்ணன். நீ மாமாவை கொன்ற
பாதகன் என்று சொல்வான். அப்போதும் பேசாமல் இருப்பார் கிருஷ்ணர். ஆனால் இதே
சிசுபாலன் பீஷ்மரைப் பற்றி சொன்னவுடனேயே விரல் உயரும். தன்னைப்பற்றி என்ன
சொன்னாலும் கண்ணனுக்கு கவலை இல்லை. தனக்கு பிடித்தமானவர்கள், தன்னுடைய
சிஷ்யர்களைப் பற்றி சொன்னால் தாங்கமாட்டான். இதை நாம் இன்றைக்கும்
பொருத்திப் பார்த்துக்கொள்ளமுடியும். ஒரு மேலாண்மை இயக்குநர் (எம்.டி.)
தன்னை நேரடியாக எது சொன்னாலும் கவலைப்படக்கூடாது. நீ என்ன திட்டினாலும்
எனக்கு கவலை இல்லை என்று இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் அதையெல்லாம்
கடந்துவந்துவிட்டவர். ஆனால் தனது நிறுவனத்துக்கு நேர்மையாக வேலை செய்பவன்
மீது யாரேனும் அவதூறு சொன்னால் அமைதியாக இருக்கக்கூடாது. மீண்டும்
கண்ணனின் காலம் கடந்த பாய்ச்சல்.
இப்படி கண்ணனின் வாழ்க்கை முழுவதிலும் இருந்து நாம் இன்றைக்குத்
தேவையான நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளமுடியும். கண்ணன் இந்தியக்
கலாசாரத்தின் மையம் மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருந்திவரக்கூடிய
நிகரற்ற ஓர் ஆளுமை.

ஆசிரியர் குறிப்பு:

டிகேவி ராஜன் - தமிழ் உலகம் நன்கறிந்த பத்திரிகையாளர், தொல்லியல்
ஆய்வாளர். தொல் இந்திய சமூகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்
தாக்கம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி நீண்ட காலமாக ஆய்ந்து வருபவர்.
‘கண்ணனைத் தேடி’, ’லெமூரியாவைத் தேடி’, ‘நமது புதைக்கப்பட்ட பழங்காலம்’,
‘பழங்காலத்தைத் துளைத்துக்கொண்டு’ என்பன உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகளை
நடத்தியவர். ’கண்ணனைத் தேடி’, ‘கண்ணனின் சுவடுகள்’ உள்ளிட்ட நூல்களையும்
எழுதியிருக்கிறார். அமெரிக்க ஆய்வாளர் டபிள்யூ. கில்லரின் ‘அக்ரஹார பிராமண
சாதி நகரமயமாக்கப்பட்டதன் விளைவுகள்’ என்பது உள்ளிட்ட கட்டுரைகளை
மொழிபெயர்த்தவர். சன் டிவி தொடங்கப்பட்டடபோது மிகவும் பாராட்டப்பட்ட
‘சினிமா க்விஸ்’ என்னும் நிகழ்ச்சியை மிக அறிவுபூர்வமான தளத்தில் நடத்திக்
காண்பித்தவர். தற்போது ‘கண்ணனின் பெருமைவாய்ந்த உலகம்’ என்னும் தலைப்பில்,
கண்காட்சியை இந்தியாவெங்கும் நடத்திவருகிறார்.

Ramya25
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

Post by நிலாசகி on Thu Aug 13, 2009 7:38 pm

மிகவும் அறிய கட்டுரை நன்றி!
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

Post by krishnaamma on Thu May 28, 2015 5:31 pm

அற்புதமான பகிர்வு புன்னகை ............ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

Post by shobana sahas on Fri May 29, 2015 3:18 am

அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum