ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

விஷ சேவல் கோழி மீன்
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 M.Jagadeesan

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அற்புத ஆபரணங்கள்

View previous topic View next topic Go down

அற்புத ஆபரணங்கள்

Post by சிவா on Sun Nov 14, 2010 2:05 pm

தமிழக வரலாற்றில் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முந்திய கால கட்டத்தை எட்டிப்பார்க்க நினைப்பவர்களுக்கு ஆவணமாக கிடைப்பது கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் தான்.

அவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்கள், அந்த காலங்களில் ஆண்ட மன்னர்கள் யார்? அவர்கள் போரில் சாதித்த சாதனைகள் என்ன? என்பன போன்ற செய்திகளே இருக்கும்.

ஆனால் தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுக்கள், மேற்கண்ட தகவலுடன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எந்த அளவு நாகரிகத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் மற்றும் அனைத்து துறைகளிலும் தலை சிறந்து விளங்கினார்கள் என்பதை உலகுக்கு பெருமையுடன் எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடியாக திகழ்கின்றன.

மன்னர் ராஜராஜன் காலத்தில், மக்கள் எந்த வகையான ஆடை, ஆபரணங்களை அணிந்து இருந்தார்கள், எவ்வளவு செல்வச்செழிப்போடு வாழ்ந்தார்கள் என் பதையும் தஞ்சைப்பெரிய கோவில் கல்வெட்டுக்கள், விலாவாரியாக சொல்கின்றன.

அப்போது பெரும் அளவு புழக்கத்தில் இருந்தது பண்ட மாற்று முறைதான். இதற்கு அடிப்படையாக இருந்தது நெல்.

``தஞ்சை சோறுடைத்து'' என்பதற்கு ஏற்ப, சோழர்களின் தலைநகரமான தஞ்சை, அப்போதே நெல் விளைச்சலில் உயர்ந்தோங்கி இருந்தது.

கோவில் பணியாளர்கள் உள்பட எல்லோருக்கும் ஊதியமாக நெல் கொடுக்கப்பட்டது. அதைக்கொண்டு அவர்கள் மற்ற பொருட்களை வாங்கிக்கொண்டார்கள். மன்னரின் முத்திரை பெற்ற நாணயங்களும் வழக்கத்தில் இருந்தன.

செப்புக்காசுகளோடு தங்க நாணயங்களும் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து இருக்க வேண்டும். கடல் கடந்து நடைபெற்ற வாணிபத்துக்கு தங்க நாணயங்களே ஈடு கொடுக்கப்பட்டன என்பது பல வெளிநாடுகளில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகளின் போது கிடைத்த சோழர்கால தங்க நாணயங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

மன்னர் ராஜராஜன் ஆட்சியின்போது பெரும் தொகையிலான வரி, வணிகர்களிடம் இருந்து தங்கமாக பெறப்பட்டது. அவை, `பண்டாரம்' எனப்படும் பொக்கிஷ சாலையில் பாதுகாக்கப்பட்டது.

மன்னர், எதிரி நாடுகளின் மீது போர் தொடுத்து வெற்றிவாகை சூடி வரும்போது, அந்த நாட்டில் உள்ள கஜானாவை காலி செய்து, அத்தனை செல்வங்களையும் அள்ளி வருவது வழக்கம். அந்த செல்வத்தின் ஒரு பகுதி, படைவீரர்களுக்கு பரிசாக வழங்கப்படும். மற்ற பொன்னும், மணியும், வைரங்களும், முத்துக்களும், தங்க நாணயங்களும், அப்படியே மன்னரின் கருவூலத்தில் அடைக்கலமாகி விடும். இதுபோன்று கிடைக்கும் செல்வம், மக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன்பட்டதுடன், அறப்பணிக்கும் கணிசமான அளவில் அர்ப்பணிக்கப்பட்டது.

மன்னர் ராஜராஜன், போர்க்களத்தின் மூலம் தனக்கு கிடைத்த செல்வம் பற்றியும் அந்த தங்கத்தை உருக்கி அதன் மூலம் செய்த நகை மற்றும் பாத்திரங்கள் ஆகிய அனைத்தையும் தஞ்சைப்பெரிய கோவிலுக்கு வழங்கிய விவரத்தையும், மிகத்தெளிவாக, கல்வெட்டில் பதியவைத்தார்.

இதன் மூலமாகத்தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் எந்த வகையான ஆபரணங் கள்- அணிகலன்கள், மற்றும் பண்டபாத்திரங்கள் பயன் படுத்தப்பட்டு வந்தன என்பது நமக்கு உறுதியான சான்றாகக் கிடைத்து இருக்கின்றது.

அந்த காலத்தில் தங்கம், குன்றிமணி, மஞ்சாடி, கழஞ்சு என்ற நிறுத்தல் முறையில் கணக்கிடப் பட்டது.

இதற்காக `ஆடவல்லான்' என்ற எடைக்கல் பயன்படுத்தப்பட்டது.

இரண்டு குன்றிமணி என்பது ஒரு மஞ்சாடி. 10 மஞ்சாடி கொண்டது ஒரு கழஞ்சு ஆகும். கழஞ்சு என்பது தற்போதைய எடையில் 5.4 கிராம் ஆக கணக்கிடப்பட்டது.

தங்க நகைகளின் தரத்திற்கு இப்போது 24 காரட், 22 காரட் என்று குறிப்பிடுகிறோம் அல்லவா? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுத்தமான பத்தரை மாற்று தங்கம் `தண்டவாணி' என்று குறிப்பிடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுக்களில் தங்க நகை பற்றி குறிப்பிடும் போது ஒவ்வொரு நகையும் தண்டவாணிக்கு கால் மாற்று குறைவு அல்லது ஒரு மாற்று குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

மன்னர் ராஜராஜன், தஞ்சைப்பெரிய கோவிலுக்கு தானமாக வழங்கிய நகைகளை மிக துல்லியமாக நிறை பார்த்து அவற்றின் எடை என்ன? அவை என்ன வகையிலான நகைகள்? அவற்றில் கோர்க்கப்பட்ட முத்து எந்த வகையை சேர்ந்தது என்ற எல்லா விவரங்களையும், கல்வெட்டாக எழுத உத்தரவிட்டார்.

இந்த கல்வெட்டு விவரங்கள் தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கானவை அல்ல.

தன்னைப்போல மற்றவர்களும் வழங்கும் தானங்கள், எந்தவித சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல் கணக்கு விவரம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாகத்தான் இந்த முறையை மன்னர் ராஜராஜன் கையாண்டார்.

தங்க நகைகளை நிறுத்து அட்டவணையிடும் போது, அந்த நகையில் உள்ள அரக்கு, செப்பாணி (செம்பு ஆணி), சரடு (கயிறு), சட்டம், பிஞ்சு நீங்கலாக எவ்வளவு தங்கம் உள்ளது என்று குறித்து இருக்கிறார்கள். அந்த நகையில் முத்து போன்ற நவமணிகள் பதித்து இருந்தால், அவற்றின் எடை என்ன? அவற்றின் தன்மை என்ன? அந்த நகையின் மதிப்பு எத்தனை காசு? என்ற எல்லா விவரங்களும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டன.

வைரம், நீலம், புஷ்பராகம், கோமேதகம், பவளம், பச்சை அல்லது மரகதம், வைடூர்யம், மாணிக்கம் உள்பட 11 வகையான ரத்தினங்கள் புழக்கத்தில் இருந்தன என்பதையும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

ரத்தினங்களை குறிப்பிடும்போது, அந்த ரத்தினங்களில் குறை இருந்தால், அவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. `பொறிவு', `முறிவு', `காகபிந்து', `ரத்தபிந்து' என்ற விதங்களில் அவை குறைவுபட்டன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முத்துவட்டம், அனுவட்டம் (வட்டவடிவிலானவை) ஒப்பு முத்து (ஒப்பனை, அதாவது பாலீஷ் செய்யப்பட்ட முத்து), குறுமுத்து (சிறிய முத்து) நிம்பொளம், பயிட்டம், அம்பு முதுங்கறடு, இரட்டை சப்பத்தி, குளிர்ந்த நீர், சிவந்த நீர் உள்பட 23 வகையான முத்துக்கள் பற்றிய குறிப்புகளை கல்வெட்டில் காணமுடிகிறது.

50-க்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள் புழக்கத்தில் இருந்தன என்ற தகவல்கள் வியக்க வைக்கின்றன. இவற்றில் ஒன்று சோணகச்சிடுக்கு என்று அழைக்கப்பட்டது. `சோணகன்' என்பது கிரேக்கர்களையும், அரேபியர்களையும் குறிப்பது ஆகும். எனவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யவனர்களும், அரேபியர்களும் சோழ நாட்டுக்கு வந்து வாணிபத்தில் ஈடுபட்டது இதன் மூலம் தெளிவாகிறது.

மன்னர் ராஜராஜன், தஞ்சைப்பெரிய கோவிலுக்கு 100 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளையும், வைரம், வைடூர்யம், கோமேதகம், முத்து ஆகிய நவரத்தினங்கள் கோர்க்கப்பட்ட ஆபரணங்களையும், தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பூஜை பாத்திரங்களையும் வழங்கினார்.

காளம், தளிகை, மண்டை, குடம், கலசப்பானை, முத்து வட்டிகை, கை வட்டிகை, வட்டில், மடல், பிங்களம், படிக்கம், சட்டுவம், நெய் மூட்டை, கலசம், எறிமடல், குறுமடல், தட்டம், இலைத்தட்டு உள்பட 158 வகை வெள்ளிப் பாத்திரங்களை கோவிலுக்கு தானமாக கொடுத்தார்.

கோவில் விழாக்களில் இசைக்கப்படும் வாத்தியமான எக்காளங்கள், மற்றும் திருப்பள்ளித்தொங்கல், தவளச்சத்திரம், திருக்கொற்றக்குடை, ஈச்சோபிகை, வெண் சாமரக்கை, காளாஞ்சி, முதலியவைகளையும், ஸ்ரீமுடி, வீரப்பட்டம், திருஉத்தரபந்தனம், திருவடிக்காறை, திருப்பட்டிகை, சப்தசரி, பஞ்சசரி, திருக்குதம்பை, தோடு, ராஜாவர்த்தம், திரள்மணிவடம், தாலிமணி, ஸ்ரீசந்தம் ஆகிய தங்க நகைகளையும், வடுகவாளி, ஏகாவலி, முத்தின் சூடகம், திருக்கால்வடம் ஆகிய முத்து நகைகளையும், கண்டநாண், புல்லிகைகண்டநாண், பாசமாலை, மாணிக்கத்தின்தாலி,ஸ்ரீவாகுவலையம், பதக்கம், ரத்ன வளையல், ரத்ன கடகம், ரத்ன மோதிரம், நவரத்ன மோதிரம், பிருஷ்ட கண்டிகை ஆகிய ரத்தின ஆபரணங்களையும், தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட ஒட்டுவட்டில், கலசம், குடம், தட்டம், குறுமடல், கிடாரம் ஆகிய பாத்திரங்களையும் மன்னர் ராஜராஜன் வழங்கியதாக கல்வெட்டு பட்டியலிடுகிறது. விலை உயர்ந்த நகை முதல், மிகச்சிறிய கரண்டி உள்பட எல்லா பொருட்களும் கல்வெட்டில் காணப்படுகின்றன.

இதுதவிர, தஞ்சைப்பெரிய கோவில் கட்டிமுடிக்கப்பட்டதும் அதன் மேல் வைப்பதற்காக தங்கமுலாம் பூசப்பட்ட மிகப்பெரிய கலசத்தையும், கோவில் விமானம் முழுவதும் தங்கத் தகடு பதிக்கத் தேவையான தங்கத்தையும், இன்னும் ஏராளமானவற்றையும் ராஜராஜன் வாரிவழங்கிய தகவலையும் கல்வெட்டு தாங்கி நிற்கிறது.

மன்னரைப்போலவே, மற்றவர்களும் கோவிலுக்கு வழங்கிய நன்கொடைகள் ஏராளம். இதன்மூலம், அந்த காலத்திய விதம் விதமான ஆபரணங்கள் மற்றும் அணிகலன்கள் பற்றிய அரிய தகவலை நாம் அறிய முடிகிறது.


- அமுதன்


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அற்புத ஆபரணங்கள்

Post by ரபீக் on Sun Nov 14, 2010 2:09 pm

தகவலுக்கு நன்றி ,,,,,,,,,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum