ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புதிய தொழிலில் பாலியல் பெண்கள்!

View previous topic View next topic Go down

புதிய தொழிலில் பாலியல் பெண்கள்!

Post by சிவா on Sun Nov 14, 2010 2:31 pm

மும்பையின் ஒரு தொண்டு நிறுவனத்தின் நற்பணியால், பாலியல் தொழிலில் இருந்து பல பெண்கள் விடுதலையாகி, கார் ஓட்டுநர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி புதுவாழ்வு பெற்றிருக்கும் பெண்களில் ஒருவர் சுதர்ஷனா. 22 வயதே ஆகும் இந்த இளம்பெண், மும்பையின் இருட்டுப் பகுதிகளில் ஏற்கனவே நிறைய அவதிப்பட்டு விட்டார். `மீட்பு அறக்கட்டளை' என்ற தொண்டு நìறுவனத்தால் விபசார சேற்றிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்.

விரைவில் புது வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் சுதர்ஷனா, தற்போது வாடகைக் கார் டிரைவருக்கான பயிற்சி பெற்று வருகிறார்.

டிரைவிங் பயிலுவதால் எல்லாம் என் கட்டுப்பாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு. நானே எனது வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதைப் போலவும், எந்தத் திசையில் செல்வது என்று `ஸ்டியரிங்' மூலம் செலுத்துவதைப் போலவும் தோன்றுகிறது'' என்கிறார் சுதர்ஷனா.

கர்நாடகாவில் இருந்து ஒரு வேலை தேடி 2005-ம் ஆண்டு மும்பையில் வந்திறங்கினார் சுதர்ஷனா. அவர் நினைத்தமாதிரி சீக்கிரமே ஒரு வேலை கிட்ட, `அதிர்ஷ்டசாலி' என்று தன்னைத் தானே மெச்சிக் கொண்டார். ஆனால் அப்புறம்தான் பயங்கரம் தெரிந்தது.

சதை வியாபாரக் கும்பலுக்குள் நான் இழுக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிந்தபோது எனக்குப் பயங்கர அதிர்ச்சி. நான்கு மாத காலம் நான் அந்த நரகத்தில் உழன்றேன். எனக்கு வாழ்க்கையே முடிஞ்சு போச்சு என்றுதான் தோன்றியது'' என்று அந்த நாளை கசப்போடு நினைவுகூர்கிறார் சுதர்ஷனா.

கடந்த 2005-ம் ஆண்டு மே 17-ம் தேதி, இந்த இருட்டுத் தொழிலில் இருந்து மீட்கப்பட்டவர்,தற்போது, தன்னைப் போல் மீட்கப்பட்ட பெண்களுடன் சேர்ந்து கார் ஓட்டுநர் பயிற்சி பெற்று வருகிறார். லயன்ஸ் கிளப்பின் உதவியால் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மூன்று மாத காலப் பயிற்சியில் இப்பெண்களுக்கு கார் ஓட்ட மட்டுமின்றி, போக்குவரத்து விதிகள், நாகரீக நடைமுறைகளுடன், தற்காப்பு உத்திகளும் கற்றுக் கொடுக்கப்படும்.

இந்தப் பெண் டிரைவர்களுக்கான பாதுகாப்பில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். காரில் பயணிக்கும் பயணிகளையும் இவர்களையும் பிரிக்கும் வகையில் ஒரு திரைச்சீலை இடப்பட்டிருக்கும். எமர்ஜென்சி அலார அமைப்பும் காரில் உண்டு'' என்று தன்னார்வ அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவிக்கிறார்.

தான் ஒரு முன்னாள் பாலியல் தொழிலாளி என்று கண்டுபிடித்து விடுவார்களோ என்ற கவலையில்லை சுதர்ஷனாவுக்கு. ஆனால் உடன் பயிற்சி பெறும் பெண் மீனாட்சிக்கு அந்தக் கவலை உண்டு.

அவர், நான் எனது வேலையில் பொறுப்பாக இருப்பேன். ஆனால் எனது பழைய காலத்தை அறிந்த யாராவது சீண்டினால் என்ன செய்வது?'' என்று கேட்கிறார்.

இந்தக் கவலையில் உள்ள நியாயத்தை மீட்பு அறக்கட்டளை புரிந்து கொண்டிருக்கிறது.

எங்களால் பயிற்சி கொடுக்கப்பட்ட பெண்கள் யாருக்கும் தங்களைப் பற்றிய அடையாளம் வெளித் தெரிவதில் விருப்பமில்லை. அப்பெண்களை வேலைக்கு அமர்த்திய பலருக்கும் கூட அவர்கள் பாலியல் தொழிலாளர்களாக இருந்தவர்கள் என்று தெரியாது. வேலைவாய்ப்பு நிறுவனங்களுடனான எங்களின் புரிதல் அடிப்படையில் அவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்'' என்கிறார், தொண்டு நிறுவனத்தின் தலைவரான திரிவேணி ஆச்சார்யா.

2012-ம் ஆண்டுக்குள் இம்மாதிரி 500 பெண்களையாவது மீட்டு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று இந்த அமைப்பு திட்டமிட்டிருக்கிறது. பாலியல் தொழிலில் இருந்து பெண்களை மீட்டு கார் ஓட்டுநர் பயிற்சி கொடுக்கும் திட்டத்துக்கு `வீரா' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அதற்கு சமஸ்கிருதத்தில், `வீரமான பெண்' என்று அர்த்தம். நிச்சயம் இவர்கள் வீரப் பெண்கள்தான்!


தினதந்தி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புதிய தொழிலில் பாலியல் பெண்கள்!

Post by உதயசுதா on Sun Nov 14, 2010 2:39 pm

நல்ல விசயம்தான்.உண்மையிலுமே அந்த தொண்டு நிறுவனத்தை பாராட்டத்தான் வேண்டும்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: புதிய தொழிலில் பாலியல் பெண்கள்!

Post by அப்புகுட்டி on Sun Nov 14, 2010 4:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: புதிய தொழிலில் பாலியல் பெண்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum