புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
78 Posts - 49%
heezulia
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
6 Posts - 4%
prajai
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து

Page 1 of 2 1, 2  Next

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Nov 17, 2010 12:45 pm

2.1 அரசனின் இயல்புகள்

ஒரு நாட்டை ஆளும் அரசனுக்குச் சில இயல்புகள் இருக்க
வேண்டும். அவனுக்கு உரிய பண்புகளாகச் சில அமைய வேண்டும்.
இவை பொருந்தி இருப்பவனே நாட்டை ஆளும் மன்னனாகத்
திகழ்வதற்கு உரியவன் என்பது வள்ளுவர் கருத்து.

சில இயல்புகள், நம்மிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். சில
நாமாக முயன்று பெறக் கூடியவையாக இருக்கும். பின்னர் அவை
நம் பண்பாக மாறி அமையும் தன்மை உடையன. வள்ளுவர்,
மன்னனுக்குரிய பண்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார் அவை
முறையே அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நான்கும்
ஆகும். இவைகளை உடையவனே மன்னனாக ஏற்றுக்
கொள்ளத்தகுந்தவன் என்பது வள்ளுவர் கருத்து.

அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

(குறள்: 382)

எதனையும் அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றலும், பிறருக்குக்
கொடுக்கும் ஈகைத் தன்மையும், நூற்களைக் கற்றுப் பெறும்
அறிவும் ஊக்கமும் மன்னனுக்கு முழுமையாக அமைந்திருக்க
வேண்டிய இயல்புகள்.

நன்றி- Tamil virtual university
2.1.1 அஞ்சாமை

நல்லவனாக இருந்தாலும் வல்லவனாக இருக்க வேண்டும் என்று
பொதுவாகக் குறிப்பிடுவர். இதற்கு என்ன காரணம்? நல்ல
இயல்புகள் ஒருவன் கொண்டிருந்தாலும், அவன் கோழையாக
இருந்தால் அவனால் எதையும் செயல்படுத்த முடியாது. எந்தச்
சூழலாக இருந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய மனத்திண்மை
(Boldness) அல்லது வீரம் வேண்டும். அப்பொழுதுதான்
நினைத்ததை ஒருவனால் செய்ய முடியும். இந்தத் மனத்திண்மை
அல்லது வீரத்தைத்தான் வள்ளுவர் அஞ்சாமை என்று
குறிப்பிடுகிறார்.

செய்யும் பணியின் வெற்றி மனத்திண்மையுடன் அஞ்சாமல்
செயல்படும் தன்மையில்தான் அமைந்துள்ளது. எனவே எந்த ஒரு
செயலில் ஈடுபட்டாலும், அஞ்சாத் தன்மையுடன் ஈடுபட வேண்டும்.
அப்பொழுதுதான் அவன் செய்யும் வினை அல்லது செயல்
வெற்றிபெறும். மனத்திண்மையில்தான் வினைத் திட்பம்
அமைந்திருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற

(குறள்: 661)

ஒருவனது செயல்பாட்டில், அவனது மனத்திண்மையாகிய
அஞ்சாமையே முதன்மையானது. ஏனையவை எல்லாம் அதற்குப்
பின்னர்தான் என்பது வள்ளுவர் கருத்து. இது அரசர்களுக்கு உரிய
இயல்புகளில் முதன்மையானது.

2.1.2 ஈகை

வறுமையைப் பற்றி இன்னோர் இடத்தில் கூறும் பொழுது
வள்ளுவர், பற்றினால் நம்மை அழிக்கக் கூடிய தீயினுள் கூட
ஒருவன் தூங்கலாம், ஆனால் நம் உடலில் பசி என்ற ஒன்று
இருந்தால் தூங்க முடியாது என்று குறிப்பிடுவார். அத்தகைய
கொடுமை வாய்ந்தது பசி. மணிமேகலை என்னும் காப்பியத்தை
இயற்றிய சீத்தலைச் சாத்தனார் கூட பசியின் கொடுமையை
உணர்ந்து, ‘பசிப்பிணி எனும் பாவி’ என்று கூறுவார்.

இத்தகைய துன்பம் மிகுந்த பசியைப் போக்குவது ஒரு சிறந்த
செயல். அவ்வாறு செய்வது வறுமையோடு வருந்தும் ஒருவனை
இறப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதாகும். எனவே சீத்தலைச்
சாத்தனார்.

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே’

(மணிமேகலை : 11: 95?96)

என்று குறிப்பிடுகிறார்.

வறுமையின் அல்லது பசியின் கொடுமையை உணர்ந்தவர்
வள்ளுவர். எனவே பிறர் துன்பத்தை நீக்கும் இரக்க உணர்வு,
நாட்டை ஆளும் மன்னனுக்கு இயற்கையாக அமைந்திருக்க
வேண்டிய இயல்புகளில் ஒன்று என்று குறிப்பிடுகிறார்.

இரக்க உணர்வு கொண்டவன்தான் பிறர் துன்பத்தைப் போக்கும்
ஈகை உள்ளம் கொண்டவன். தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்களின்
வறுமையை - துன்பத்தை நீக்க வேண்டியது மன்னனின்
முதன்மையான கடமை. அந்தக் கடமையைத் தனக்கு இருக்கும்
ஈகைக் குணத்தால் அல்லது இயல்பால்தான் நிறைவேற்ற முடியும்.
அந்த ஈகைக் குணம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதனை

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி

(குறள்: 226)

என்று குறிப்பிடுகிறார்.

(அற்றார் = வறியவர், அழி = அழிவைத் தரக் கூடிய,
வைப்புஉழி = சேமித்து வைக்கும் இடம் (உழி - இடம்) (Savings
Bank)

வறியவர்களது அழிவு தரக்கூடிய பசியை நீக்க வேண்டும்.
இத்தகைய செயல், தான் ஈட்டிய பொருளைத் தனக்கு உதவும்படி
சேமித்து வைக்கும் வைப்பு நிதி போன்றது என்கிறார் வள்ளுவர்.

எனவே, ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கு நாட்டிலுள்ள மக்களின்
வறுமையைப் போக்க வேண்டும் என்ற இயல்பு இருக்க வேண்டும்.
அந்த இயல்பு வருங்காலத்தில் நாட்டைப் பாதுகாப்பதற்குச்
சேமித்து வைக்கும் செல்வம் போல் பயன்தரும். அது எவ்வாறு?

உலகில் நிகழும் பல்வேறு வகையான தீய செயல்களுக்கும்,
வன்முறைகளுக்கும் அடிப்படைக் காரணம் எது? வறுமை.
திருடினவனைப் பார்த்து ‘நீ ஏன் திருடினாய்?’ என்று கேட்டால்
‘வறுமை’ என்று குறிப்பிடுவான். இதைப் போல் பிற தீய
செயல்களில் பலவும் வறுமையின் காரணமாக நிகழ்கின்றன. எனவே
தீமைகளுக்குக் காரணமான வறுமையை ஒரு மன்னன் ஈகை
என்னும் தன் இயல்பால் நீக்கினால், அவன் நாட்டில் நிகழும் தீய
செயல்கள் குறையும் இல்லையா? அதன் காரணமாக அந்த நாடு
நலம் பெறும். அந்த இயல்பு வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு
சேமிப்பு நிதி போன்றது தானே? எனவேதான் வள்ளுவர்,
மன்னனுக்கு இயல்பாக ஈகை செய்யும் இயல்பு இருக்க வேண்டும்
என்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 2:04 pm

சிறந்த கட்டுடைக்கு நன்றி சாந்தி. ஆனால் இவைகள் எல்லாம் இன்று எழுத்தளவில் மட்டுமே உள்ளது. நடைமுறைப் படுத்த யாருமே விரும்புவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விடயம்!

அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 2:20 pm

அருமை அக்கா இன்னொரு விஷயம் இந்த தகுதிகள் எல்லாமே எனக்கு இருக்கு நம்புங்க ப்ளீஸ்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Nov 17, 2010 2:48 pm

அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 2:50 pm

sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்

இறைவா நான் அரசியலுக்கு வரலான தமிழகத்தை யார் காப்பாற்றுவார்கள் சொல்லுங்க அக்கா சொல்லுங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 2:52 pm

sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்

தமிழ் உங்களிடம் கொஞ்சி விளையாடுகிறது! அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196

அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 17, 2010 2:55 pm

sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
அடேங்கப்பா................நம்ம சாந்தியா இது ?! என்ன ஒரு முன்னேற்றம் , இனிமேல் சாந்திகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பேசணும் அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196 அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 2:57 pm

ராஜா wrote:
sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
அடேங்கப்பா................நம்ம சாந்தியா இது ?! என்ன ஒரு முன்னேற்றம் , இனிமேல் சாந்திகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பேசணும் அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196 அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196

நம்ம சகோதர ரத்தமல்லவா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 17, 2010 3:01 pm

maniajith007 wrote:
ராஜா wrote:
sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
அடேங்கப்பா................நம்ம சாந்தியா இது ?! என்ன ஒரு முன்னேற்றம் , இனிமேல் சாந்திகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பேசணும் அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196 அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196
நம்ம சகோதர ரத்தமல்லவா
அதானே ...... அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 678642

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 3:02 pm

ராஜா wrote:அதானே ...... அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 678642

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக