ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
heezulia
 
மூர்த்தி
 

Admins Online

‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

View previous topic View next topic Go down

‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:04 am

‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

[You must be registered and logged in to see this image.]ரங்கநாயகியின் காதலன் என்ற இந்தக் குறுநாவல் ஒரு போர்வீரனுக்கும், ரங்கநாயகிக்கும் இடையான காதலாக மட்டும் படைக்கப்படாமல் காதலுடன் சேர்த்து தமிழர்களின் வீரமும் அவர்களுடைய ஆட்சித் திறனும் எவ்வாறு ஈழத்தில் நிலைகொண்டிருந்தன என்ற வரலாற்று உண்மைகளை ஆவணப்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டிருப்பது ஈழத்தில் ஆட்சி நிலவியமைக்கான வரலாற்றுச் சான்றாதாரமாகவும் விளங்குகின்றது.


தம்பலகாமத்தின் சிறப்பையும் அங்கே அந்த அழகிய கிராமத்தை மருவிச் செல்லும் குடமுருட்டியாற்றையும், இயற்கை அழகின் எளிமையையும் வாசகர்களின் மனங்களில் மிக இலாவகமாகப் பதியச் செய்துள்ளார்.

ஈழத்தில் தமிழர் ஆட்சி ஒன்று இருந்ததா? என்ற வரலாற்றுத் திரிபு வழிகளுக்கு ஆப்புவைப்பதுபோல் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் இக்குறுநாவலினூடாக ஆங்காங்கே 800 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் வாழ்ந்த அவர்களால் ஆட்சிசெய்யப்பட்ட பிரதேசங்களை இன்று ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டன என்ற தகவல்களை இந்தக் குறுநாவலினூடாக அறிய முடிகின்றது.

தம்பலகாமம் நூறு வீதம் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டதால் அது தமிழர் பட்டணம் என்ற பெயரில் அன்று இருந்ததை அறியும்போது எமது நெஞ்சுகளும் ஒரு கணம் நிமிர்கின்றன.

ரங்கநாயகியின் காதலை உணர்வுபூர்வமாக இக்குறுநாவலினூடாக வளர்த்துச் சென்று இறுதியில் வாசகர்களின் நெஞ்சங்களைக் கனக்கச் செய்யும் வகையில் கதையை முடித்து அவளது வரலாற்றை தம்பலகாமம் ஆதிகோணேசர் ஆலயத்துடன் முடித்து வைப்பது முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது.


வல்வை.ந. அனந்தராஜ்
திருக்கோணமலை.
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:10 am

குறுநாவல் பகுதி 1

[You must be registered and logged in to see this image.]

தம்பலகாமம் கோட்டை சில நாட்களின் பின், அப்போதுதான் மீள உயிர் பெற்றதுபோல் செயற்படத் தொடங்கியிருந்தது. வழமை யான முறைக் காவல்கள் புதுவேகத்துடன் ஆரம்பமாகியிருந்தன.
போரிலே தளபதி காயப்பட்டுப் படுக்கையில் கிடந்த நாள் முதற்கொண்டு சோர்வாகிப் போனது கோட்டை அலுவல்கள்.தொடர்ந்து அரசர் கலிங்கத்து விஜயவாகு, தளபதியை காயங்கள் சுகமாகி உடம்பு தேறுதலாகி வரும்வரை ஓய்வில் அனுப்பத் தீர்மானித்த செய்தி கோட்டைக்குத் தெரியப்படுத்தப்பட்ட போது, ஒரு ஸ்தம்பித நிலையையே கோட்டை கண்டது.தளபதி கோட்டையை விட்டு வெளியேறிய நாளே அது சோகம் என்பதை முதலில் கண்ட நாளாக இருக்கவேண்டும். கண்கலங்காத வீரர்களில்லை. சமையல்கட்டு உதவியாளர் முதல் உபதளபதிகள் வரை அழுத கண்களுடன், கனத்த இதயத்துடன் அவரை மீண்டும் வரவேண்டும் என்ற அன்புக் கட்டளையுடன் அனுப்பிவைத்தனர். அவரும் அந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்டாலும் வருவேனா? என்ற சிந்தனையுடனேயே பிரிந்து சென்றார்.அவரைப் பொறுத்தவரை, அவர் தோளில் அரசர் சுமத்திய பணியை திருப்தியாகவே இதுவரை பூர்த்தி செய்திருக்கிறார். எதிரிகளின் அச்சுறுத்தல் திருகோணமலைப் பிராந்தியத்துக்கு ஒரு சகாப்தம் வரையிலாவது தலை தூக்காதபடிக்கு அவர் செய்து இருக்கிறார். அந்த வகையில் அரசருக்கு ஒரு நிம்மதியைத் தந்ததில் அவருக்குப் பெரும் ஆறுதல்.ஓய்வை அவர் நாடியதில்லை. ஆனாலும் மன்னர் அவரை விடுவதாயில்லை. அடுத்த தளபதியாக யாரை நியமிக்கலாம் என்று அவரிடமே ஆலோசனை கேட்டபோதுதான் மறுத்தாலும் மன்னரே நேரில் வந்து தூக்கிக்கொண்டு போனாலும்போவார் போலிருக்கிறது என்று தனக்குள் எண்ணி, மன்னர் தன்மேல் கொண்டுள்ள பாசம் குறித்துப் பெருமிதமும் கொண்டார்.தனக்குப் பின்னர் கோட்டைக்குரிய தளபதியை அவர் மன்னரிடம் சிபாரிசு செய்து செய்தி அனுப்பினார். அவரைப் பொறுத்த வரை அவன் ஒரு வீரன். சிறு வயதுக்குள்ளேயே களம் பல கண்ட அனுபவசாலி, மன்னருக்கும் உறவுமுறை. தனக்குப்பின்னர் அந்தப் பிராந்தியமும், அமைந்துள்ள கோட்டைகளும் பாதுகாக்கப்படுவதில் எந்தக் குறைபாடும் வராது என்பதில் அவருக்கு உறுதியிருந்தது. இதனாலேயே அவருக்குத் தான் திரும்பி வரவேண்டிய தேவை எழாது என்ற நிலைப்பாடும், வருவேனா? என்ற கேள்வியும் ஏற்பட்டது.தன் சொந்த மண்ணாக எண்ணிய தம்பலகாமம் பசுஞ்சோலைக் கிராமத்தையும், தம் வீரத்தால் உரமூட்டிய அந்த கோட்டையையும் விட்டு அவர் கனத்த இதயத்தோடுதான் நீங்கினார்.அதற்குப் பிறகு சோர்வு, இழப்பு, எதிர்பார்ப்பு, இப்படிப் பல உணர்வுப் போராட்டங்கள் மனதில் எழ, எந்திரம் போன்று கடமை பண்ணிய போர்வீரர்கள் இப்போது புத்தூக்கம் பெற்று செயற்படத் தொடங்கியிருந்தார்கள்.புதிய தளபதி வந்தார். ஒரு இளம் தளபதியாக இருந்தார். எளிமையும், கண்டிப்பும், உழைப்பும் அவனில் தெரிந்தது. கோட்டைப் பாதுகாப்பில் எடுத்த எடுப்பிலே செய்த சிறு சிறு மாற்றங்களைக் கண்டு ஆரம்பத்தில் அலட்டிக் கொள்ளாதவர்கள் நாளாக அதனால் கோட்டை பலம் பெற்றது போன்ற உணர்வைப் பெறவே புதியவனில் புது அக்கறை கொள்ளத் தலைப்பட்டனர்.கோட்டைக்குள் முறைக்காவல் உசாராக நடந்தது. காவல் பணி மாறும்போது எழும் கட்டளை ஒலிகளால் கோட்டை உயிர் கொண்டது. நாளாந்தப்பணிகள் உசாராக நடக்கத்தொடங்கின.உச்சிமீது நின்று நர்த்தனமாடிக் களைத்துப்போன சூரியன் ஓய்வெடுக்கவென்று மேற்கு நோக்கி நகரத்தொடங்கி சுமார் நான்கரை நாளிகையாகியிருந்தது.வங்கப்பெருங்கடலில் தவழ்ந்து சூட்டைத் தணித்துக்கொண்ட கொண்டல் காற்று தம்பலகாமத்தின் வடகிழக்கு மூலையால் ஊருக்குள் புகுந்து குளிர்மை பரவச்செய்துகொண்டு இருந்தது.மாலைப்பொழுதாவது குறித்து மகிழ்ந்தவைபோல பறவை இனங்கள் குடில்தேடி கிளம்பிக் கொண்டிருந்தன. அவைகளின் இனிய நாதத்தைக் கூட தாண்டி ஒரு இளம் குரல் குயிலோடு போட்டி போடக்கூடிய இனிமையோடு பாடும் குரல் கேட்டது. அந்த அந்திசாயும் வேளையில் தம்பலகாமம் தெற்கு
ஊர்களுக்கு அருகாக சலசலத்துப் பாயும் குடமுருட்டியாற்றின் வெண்மணல் பரப்பில் ஆற்றோரம் அமர்ந்திருந்து ஒரு யுவதி பாடிக்கொண்டிருந்தாள்.அவள் கைகளிரண்டையும் பின்னால் ஊன்றியிருந்தாள். கண்கள் மூடியிருந்தன. கால்கள் இரண்டும் ஆற்று நீரால் கணுக்கால் வரை நீராட்டப்பட்டுக்கொண்டிருந்தன. நிமிர்ந்திருந்த நெஞ்சத்து எழில்களின் திமிர்ப்பு அவளை சுமார் பதினேழு பதினெட்டு வயதினளாகக் காட்டியது. தன்னை மறந்து தான் மீட்டும் இராகம் சரிதானா என்று தானே எடைபோட்டுப் பார்ப்பவளாக அவள் தெரிந்தாள். அவளது இராக ஆலாபனையைக் கேட்டு எப்போதும்போல் அப்போதும் களிகொண்ட குடமுருட்டி ஆறு களுக் களுக் கென்று தனது பாராட்டைச் சொல்லி ஓடிக்கொண்டேயிருந்தது.


தொடரும்......


தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:17 am

அவளது இராக ஆலாபனையைக் கேட்டு எப்போதும்போல் அப்போதும் களிகொண்ட குடமுருட்டி ஆறு களுக் களுக் கென்று தனது பாராட்டைச் சொல்லி ஓடிக்கொண்டேயிருந்தது........

இனி...
குறுநாவல் பகுதி 2

[You must be registered and logged in to see this image.]

ஆற்றுக்குச் சமாந்தரமாக அமைத்திருந்த பாதை அவளுக்குப் பின்புறமாக இருந்தது. அந்தப்பாதையிலே தம்பலகாமத்தின் கிழக்குப்பக்கத்தில் இருந்து மேற்கு நோக்கி ஒரு ஆஜானுபாகுவான வாலிபன் வெண்புரவி ஒன்றிலமர்ந்து வந்துகொண்டிருந்தான். புரவியை அவன் விரட்டாமல் தன்போக்கில் விட்டிருந்ததால் துள்ளல் நடைபோட்டு அது நகர்ந்து கொண்டிருந்தது.அதன் எடை காரணமாகவோ, மணல் பகுதியான பாதை காரணமாகவோ தெரியவில்லை குளம்பொலி எழவேயில்லை. அதன் நடையின் துள்ளலை வெகுவாக அனுபவித்துக் கொண்டு, பக்கத்தில் சுழல் விட்டு ஓடும் குடமுருட்டியாற்றின் எழில் ஓட்டத்தையும் ஆற்றின் வடபுறத்தில் சோலையாகச் சொரிந்து நின்ற தென்னை, கமுகு, மா, பலா, வாழை, கரும்பு போன்ற பயன்தரு விருட்சங்களையும், தம்பலகாமம் தெற்கில் தொடர்சங்கிலி போன்றிருந்த திடல்கள் எனப்பட்ட ஊர்களின் இயற்கை அழகையும் ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தான்.
செம்மூக்கன் மாங்காய்கள் ஆற்று நீருக்குமேல் ஆற்றைத் தொட்டுவிடுவது போல குலை குலையாய்த் தொங்கி நிற்கும் அழகை அவன் வேறெங்கும் கண்டதில்லை. அதுமட்டுமல்ல தெற்கே கண்ணுக்கெட்டிய தூரம்வரை மரகதப் போர்வையால் போர்த்துவிட்ட காணி போன்று பசுமையாய்த் தோன்றிய நெல்வயல்களின் அழகு, அதைத் தொட்டுவரும் காற்று நாசியில் ஊட்டிவிடும் குடலைப்பருவத்து மணம், நாற்றுக்கள் காற்றில் அலை அலையாய் ஆடும் எழில்.... அந்த வயல் நடுவே குடில் ஒன்றைப் போட்டுக்கொண்டு ஆயுள் முழுவதும் தங்கிவிடலாம்போலத் தோன்றியது அந்த வாலிபனுக்கு.அவனைத் தாங்கியிருந்த புரவிகூட தன் எஜமானனின்உணர்வில் இரண்டறக் கலந்ததுபோல தலையை நிமிர்த்தி அந்தக் காற்றின் சுவையை அனுபவித்துக் கொண்டே நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக் குதிரையின் அழகே தனியாக இருந்தது. சுலபமாகக் கிடைத்துவிடக் கூடிய குதிரையல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட அரேபிய புரவி அது என்பதில் சந்தேகமேயில்லை.முன்னங்கால்களை அது மாறி மாறி ஊன்றும் போது, அதன் புஜங்களின் தசைகள் அசைந்த விதமும், பின்னங்கால்களின் உதைப்பின் போது அதன் தொடைகளில் ஏற்பட்ட தசை அசைவுகள், அதன் கால் உதைப்பு விசை எவ்வளவு உந்துதலைத் தரக்கூடும் என்பதை ஊகித்துக்கொள்ள உதவின. பிடரி மயிர்களும், வால் மயிர்களும் நீவிவிட்ட பொலிவுடன் இருந்தன. நாளாந்தம் அதன் உடல் நீவி விடப்படுவது தெளிவாக இருந்தது.துள்ளல் நடைபோட்டு அந்தக் குதிரை ஒரு புதர் முடக்கினைக் கடந்ததும் ஆற்றை அண்டிய மணல்பரப்பிலே ஒரு இளம் பெண் தனியே அமர்ந்திருப்பது கண்டு வியப்படைந்தான். அவன் அவளுக்கு நேர் அருகாக வந்தபோதுதான், அவள் இராகம் ஒன்றை பாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. எனவே அந்த வாலிபன் சந்தடி செய்யாமல் குதிரையிலிருந்து இறங்கி, அதன் கழுத்தில் தட்டிக்கொடுத்து சத்தம் போடாதே, என்று வாயில் விரல் வைத்து சைகை காண்பித்து விட்டு அருகிலிருந்த செடிக் கிளையில் வெறுமனே அதன் கடிவாளத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு மெதுவாக நடந்து சத்தமின்றி அவளை நெருங்கி நின்று, புடைத்து நிமிர்ந்து நின்ற தன் நெஞ்சுக்குக் குறுக்காக கைகளை மடித்துக் கட்டிக்கொண்டு அவள் பாடும் அழகைக் கேட்டு ரசித்துக் கொண்டு நின்றான்.அவன் ஒரு சங்கீதப் பிரியன். அவனே ராகங்கள் சிலவற்றைச் சுமாராக உருப்போடக்கூடியவன். பாராட்டக் கூடியவகையில் பாடக்கூடியவன் என்று சொல்ல முடியும். இப்போது இந்தப் பெண் சாதகம் செய்யும் கரகரப்பிரியா ராகம் அவனுக்குப் பழக்கப்பட்ட தொன்றுதான். ஆனால் இவள் பாட்டில் ஒரு புதுமை தெரிந்தது. நளினம் தெரிந்தது. இவள் பாடும் விதம் கூட வித்தியாசமாகத் தோன்றியது. அவன் மனதை அது கவரவே செய்தது. சுருள் சுருளாக - பூவானம் சொரிவதுபோல் இராகத்தைக் கொஞ்சங் கொஞ்சமாய் உச்சஸ்தாயிக்கு அவள் கொண்டு செல்லும் லாவகம், பின்னர் மலையிலிருந்து நெளிந்து வளைந்து கீழிறங்கும் அருவிபோல அவள் குரலில் அந்த இராகம் கீழிறங்கிய பாவம், அவனை வெகுவாகத் தொட்டது. ஒரு கைதேர்ந்த வித்துவானின் பாணியில் அவள் ஆலாபணம் செய்து கொண்டிருந்தாள் என்றே அவனுக்குப் பட்டது.இப்படி அவளை நெருங்கி நின்று அவன் பாட்டை ரசிப்பது உணர்ந்து, அவள் குழம்பி பாட்டை நிறுத்திவிடப் போகிறாளே என்ற அச்சம் கூட அவனுக்குள் தலைதூக்காமல் இல்லை. தனது எந்தவொரு அசைவும், அப்படியொரு நிகழ்வுக்கு இடம் வைத்துவிடக் கூடாது என்பது போல, சிலைபோன்று அசையாமல் நின்றான். ஏதோ அவன் சிலைபோல நின்று கொண்டிருந்தாலும், அவனது உள்ளமும் சிந்தனையும் அசைவாடவே செய்தன.அவனது போதாத காலம், அவனது குதிரை அந்த நேரம் பார்த்துத்தானா கனைக்க வேண்டும்?

தொடரும்......


தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:24 am

அவனது போதாத காலம், அவனது குதிரை அந்த நேரம் பார்த்துத்தானா கனைக்க வேண்டும்?

இனி...
குறுநாவல் பகுதி 3

[You must be registered and logged in to see this image.]

தீடீரென்று பாடலை நிறுத்தியவள், வலக்கையை ஊன்றியவாறே திரும்பி ஒலிவந்த திசைநோக்கிப் பார்த்தாள். அவள் கண்கள் படபடவென அடித்துக்கொண்டன. முகத்தில் பூரணமாக வியப்பின் சாயல். அவள் கேட்டதோ குதிரையின் கனைப்பு, அருகில் காண்பதோ ஒரு கம்பீரமான காளை! அவள் பார்வை அவனினின்றும் விடுபட்டு குதிரைக்காகத் தேடியது. அவன் புரிந்து கொண்டான்.~~மன்னிக்கவேண்டும். தங்கள் பாடலை இடையூறு செய்து குழப்பியது என் குதிரைதான். இதோ... என்றவன், சற்று நகர்ந்து பின்னால் புதரண்டை ஒன்றுமே அறியாததுபோல நின்று கொண்டிருந்த குதிரையைக் காட்டியபோது, அது தன் முன்காலொன்றால் நிலத்தைத் தட்டி தலையை மேலும் கீழும் ஒருமுறை ஆட்டியது.


குதிரையைக் கண்டுவிட்ட திருப்தியில் தன் பார்வையை அவனுக்காகத் திருப்பினாள். வசீகரமான முகம், ராஜகளை சொட்டும் தோற்றம், விஷமம் சொரியும் கண்கள், குறும்புப் பார்வை. அரும்பி மேலுதட்டின் மேலாக கோடிழுத்தது போல வளரும் மீசை - அகன்ற மார்பு, உரமேறிய தோள் தசைகள், அவன் மார்பின் குறுக்காக இருந்த கரங்களின் புடைப்பு அவனது பலத்தை எடுத்துக் காட்டின. நீண்ட கால்கள் மணல்பரப்பில் உறுதியாக நின்ற விதம் - எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காத ஆண்மையின் உருவாக அவன் இருந்தான். அவனை அணுஅணுவாக இரசிக்கும் தன் செயலை அவளால் தடுக்கமுடியவில்லை.


மீண்டும் அவன் கண்களுக்காக, பார்வையைக் கொண்டு சென்றபோதுதான், அவனது விஷமம் நிறைந்த பார்வை தன்னை அவதானிப்பதையும், தன்னை அங்கம் அங்கமாக அலசுவதையும் கண்டு நாணிப்போய், சரேலென எழுந்து நின்றுகொண்டு, வலது கால் பெருவிரலால் மணலில் கிளறிக் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஒரு அச்சம் எழவே செய்தது. தனித்த இந்த சூழலில்.. அவள் தலை கவிழ்ந்து நின்றது அவனுக்கு வசதியாகப் போய்விட்டது.


இது பெண்ணா இல்லை தங்கச் சிலையா என்ற அவனது ஆராய்ச்சி தடையின்றித் தொடர்ந்தது. சங்குக் கழுத்திற்குக் கீழே அடங்காமல் திமிறிக் கொண்டிருந்த அவளது அழகு யாரையும் மயக்கிப் போடும் போல இருந்தது. அவளது கைகளின் மினுக்கம் மேனியெல்லாம் பரவிக் கிடந்தது. கடைந்தெடுத்த சிற்பம் போல அவள்......... நான் சவாரி கிளம்பிய வேளை நல்ல முகூர்த்தம் போலிருக்கிறது, என்று தனக்குள் மெச்சிக் கொண்டான். தனிமையிலிருக்கும் பெண்ணை இப்படி ரசிப்பது பண்பாகாது என்று
தனக்குத்தானே கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தபோதுதான்,அவள் பாடல் நின்றுவிட்ட வெறுமையை அவனால் உணரக்கூடியதாக இருந்தது.அவள் வாயினின்று புறப்பட்டுக் கொண்டிருந்த இனிய ராக ஆலாபணை திடீரென்று நின்று போனது, மகுடியின் ஓசையால் மயங்கி ஆடிக்கொண்டிருந்த நாகசர்ப்பம் திடீரென குழலோசை நின்றால் எப்படித்தவிக்குமோ, அப்படியொரு தவிப்பில் தன் உள்ளம் இருப்பதை உணர்ந்தான். இதற்கெல்லாம் இந்தப் புரவிதான் காரணம் என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவன்,


மன்னிக்கவும் உங்கள் பாட்டைக் குழப்பி விட்டமையைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். பாட்டைத் தொடருங்கள்... நிறுத்தி விட்டீர்களே பாடுங்கள்... எல்லாம் இந்தப் புரவியால் வந்தவினை அவன் அவளது பதற்றத்தை நீக்கமுயல்வது அவளுக்குத் தெரிந்தது.

அவன் காணாதபடி புன்னகைத்துக் கொண்டாள்.

பாடவே மாட்டீர்களா?................. சரி நான் நின்றால் பாட மாட்டீர்கள் போலிருக்கிறது. உங்களைக் குழப்பி விட்டேன் போலிருக்கிறது


அவன் குரலில் இருந்த ஏக்கம் அவளைத் தொட்டது. இல்லை என்று சொல்வது போல் தலையை வெட்டித் தூக்கினாள். மறுகணம் அவனது பார்வையை சந்திக்க வெட்கித் தலை குனிந்து கொண்டாள். அவளது மனவோட்டம் அவனுக்குப் புரிந்தது. திருப்தியாகவும் இருந்தது. அவளைச் சீண்டுமாப்போல, சரி.. பார்க்கலாமே. நான் போன பிறகு பாடுங்கள். என்றபடி அஸ்வத்தை நோக்கிச் சென்று கடிவாளத்தை கையிலெடுத்துக் கொண்டு, பாய்ந்தேறினான். அவன் நகரத்தொடங்கியது அவளது உணர்வுக்குத் தெரிந்தது தலை நிமிர்ந்தாள்.இன்றில்லாவிட்டாலும் மீண்டும் உங்கள் இனிய கானத்தை
கேட்கவே செய்வேன், வரட்டுமா?
என்று அவளைப் பார்த்து கூறி
புன்னகைத்துவிட்டு அஸ்வத்தை மேற்குத் திசையால் செலுத்திச் சென்றான். அதுவும் அவன் உள்ளத்தின் துள்ளலுக்கு ஈடுகொடுத்துப் போய்க் கொண்டிருந்தது.அவன் தன்பார்வையினின்றும், பாதையினின்றும் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றவள், வீட்டுக்குப் போக முனைந்தாள். அவன் பார்வைக்கு மறைந்தாலும், அவன் நினைவில் அகலமாட்டான் போலிருந்தது. அவனது எண்ணம் மனதுக்குள் எழுந்து அலையாடியது. யார் அந்த கம்பீரமான வாலிபன்...? ஊருக்குப் புதியவனாக தென்படுகின்றானே! யாராக இருக்கலாம். குதிரையில் போகும் மிடுக்கையும் ஆளின் தோற்றத்தையும் பார்த்தால், இவன் தம்பன் கோட்டை வீரர்களின் ஒருவனாக இருக்கலாம் என்று தெரிகிறது.. யாரும் புதிதாக வந்திருக்கலாம்.. என்று ஒரு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டாலும், சிந்தனை அதற்கு இடம் தரவில்லை. ஆள் கவர்ச்சியானவன்தான். இளம் மங்கையர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சுந்தர புருஷன் என்பதில் ஐயமேயில்லை என்று, அவனது ஆனந்த நினைவை நெஞ்சில் சுமந்து கொண்டு நடையை எட்டிப் போட்டாள்.


தொடரும்......

தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 4:39 pm

இளம் மங்கையர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சுந்தர புருஷன் என்பதில் ஐயமேயில்லை என்று, அவனது ஆனந்த நினைவை நெஞ்சில் சுமந்து கொண்டு நடையை எட்டிப் போட்டாள்.

இனி...
குறுநாவல் பகுதி 4

[You must be registered and logged in to see this image.]

வைத்திலிங்கம்பிள்ளை வீட்டு முற்றத்தில் பார்த்துக்கொண்டு நின்றார். வழமையாக அவள் இவ்வளவு தாமதித்து வந்ததில்லை. அவளைப் பற்றி அவருக்குக் கலக்கம் கிடையவே கிடையாது. தாயில்லாப் பிள்ளை என்று அவளைப் பொத்தி வளர்த்து, அவள் பயந்தாங்கொள்ளியாகிவிடக்கூடாது, என்று, துணிச்சலாக உலகை எதிர்நோக்குமளவுக்கு வளர்த்து விட்டவர் அவர். ஆனாலும் ஊர் என்று ஒன்று இருக்கிறதே!வேகமாக வந்தவள் தந்தை முற்றத்தில் நிற்கக் கண்டாள். தனக்காக அவர் பார்த்து நிற்பது புரிந்தது.என்னம்மா எங்கே போயிருந்தாய்? இன்னும் சற்றே பொழுது தாமதித்திருந்தால் உன்னைத்தேடி எங்கெல்லாம் அலைந்திருப் பேனோ? என்றார் பிள்ளை ஆதங்கத்துடன்.


என்னப்பாநீங்க! உங்களுக்கு என்னைப் பற்றிப் பயம் வரலாமா? இன்றைக்கு பாடிக்காட்டிய இராகத்தை தனிமையில் பாடிப் பழகிச், சரிபார்க்க நீங்கள் முன்னம் அழைத்துப் போய் காட்டியிருந்த குடமுருட்டியாறு மணல் பரப்புக்குத்தான் போயிருந்தேன். என்னை குடமுருட்டியாறு ஒன்றும் உருட்டிக் கொண்டு போய்விடாது அப்பா.


என்ன! இராகத்தைப் பாடிச் சரிபார்த்தாயா...? அதற்காக, மணல் பரப்புக்கா போனாய்? ... இராகம் சரி வந்ததா? எங்கே பாடு பார்க்கலாம். என்றார் அவள் தந்தை.அவ்வளவுதான்! அடுத்த கணமே தனது குயில் குரலில் தந்தையின் நாதஸ்வர சுளிவு நெளிவுகளுடன் தனக்கேயுரிய லாவகத்துடன் கரகரப்பிரியா இராகத்தைப் பாட ஆரம்பித்து தொடர்ந்தாள். தாம் பாடிக்காட்டியதிலும் மேலாக மகள் படிப்படியாக இராகத்தை உச்சஸ்தாயியிக்கு ஏற்றிச் செல்வதையும், அதற்கு இசைவாக அவளின் இனிய குரல் தடங்கலின்றி இராக ஆலாபனைக்கு துணை போவதையும் கண்டு பெருமைப்பட்டார்.அதுமட்டுமல்லாது, அவளது இராக ஆலாபனையிலும், பல்லவி எடுப்பிலும், தான் நாதஸ்வரத்தில் கையாளும் பாணி மிளிர்வதையும் கண்டு குளிர்ந்துபோன பிரபல நாதஸ்வர வித்துவான் வைத்திலிங்கம் பிள்ளை, மீன் குஞ்சுக்கு நீந்தவும் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்று தனக்குள் மகிழ்ந்ததுடன் நில்லாது வாய்விட்டு, ஆகா ... அபூர்வம், அபூர்வம் என்று மகளைப் பாராட்டவும் செய்தார்.சிறு பராயத்திலே தகப்பனை இழந்துவிட்டார் வைத்திலிங்கம் பிள்ளை. அவர் தாய்மாமன் பரசுராமன் அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று நாதஸ்வர மாமேதை பொன்னுச்சாமி பிள்ளையிடம், பையனின் ஆதரவற்றநிலையைக் கூறி, குரு - சீடன் முறையில் நாதஸ்வரம் கற்க ஏற்பாடு செய்திருந்தார். வைத்திலிங்கம், பக்தியுடன் குருவுக்கும், அவர் பத்தினிக்கும் அவர்களது மனம்குளிர சிருஷைகள், தொண்டுகள் செய்து அவர்களின் பரிபூரண ஆசியுடன் நாதஸ்வரம் கற்று வித்துவானாக ஊர் திரும்பினார்.ஊர் திரும்பிய அவருக்கு அவரது திறமை, ஈழத்தின் தம்பலகாமத்தில் கோணேஸ்வரர் ஆலயத்தில் சேவகம் புரியும் வாய்ப்பைத் தேடித்தந்தது. நாளடைவில் அவருக்கு நாட்டு வைத்தியரின் அறிமுகம் கிட்டியது. அந்த நாட்களில் பெரும்பாலும் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளைக் கற்றுத் தேர்ந்திருப்பது என்பது சாதாரணம். வைத்தியரும் இதற்கு விதிவிலக்கில்லை. அவருக்கு கர்நாடக இசை கைவந்த கலை. நன்கு பாடுவார். அவரது திறமை வைத்திலிங்கத்தை கவர்ந்தது. அவர் வீட்டுக்குப் போய் இருவருமாக சங்கீதத்தை உருப்போடுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
வைத்தியருக்கு ஹம்சாம்பிகா என்றொரு மகள். வைத்திலிங்கம் பிள்ளையின் ஆற்றல்களால் கவரப்பட்டு, அவரைக் காதலித்து மணந்து கொண்டாள். ஊரெல்லாம் தம்பதியை மெச்சிப் போற்றுமளவுக்கு அவர்களது வாழ்க்கை இருந்தது. இதோ வள்ளுவனும் வாசுகியும் என்றே சொல்வது வழக்கமாக இருந்தது. தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்தில் ஆனி உத்திர தினத்தில் தொடங்கும் உற்சவ விழாக்களுக்கு உபயக்காரர்கள் போட்டி மனப்பான்மையுடன் இந்தியாவினின்றும், இலங்கையின் யாழ்ப்பாணம் போன்ற பல இடங்களிலிருந்தும் நாதஸ்வரம், பாட்டு, சங்கீதக் கச்சேரி என்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்ணித் தூள் கிளப்பிவிடுவார்கள். சுவாமி எழுந்தருளலுக்கு முன் இரவு பதினொரு மணிக்கு அப்பாலும் நாதஸ்வரக் கச்சேரிகள் தொடரும். அவ்வாறான கச்சேரிகளில் கலந்து கொண்ட வித்துவான்கள் எவரிடமும் தோல்வி காணாத ஒரு வித்துவானாக வைத்திலிங்கம் பிள்ளை புகழ்பரப்பிக் கொண்டிருந்தார். என் வெற்றிக்கெல்லாம் என் கம்சாதான் காரணம் என்று மனைவியின் புகழ்பாடுவார் வைத்திலிங்கம்பிள்ளை.அவரது வாழ்க்கையின் எதிர்பாராத இழப்பு மின்னாமல் முழங்காமல் அவரைத் தேடிவந்தது. இரண்டொரு நாட்கள்தான் சோர்வாகக் காணப்பட்ட அவரது மனைவி, தந்தை கற்றுக் கொடுத்திருந்த அறிவைக் கொண்டு கசாயம் அது இது என்று குடித்துப் பார்த்து சமாளிக்க முயற்சித்தாள். ஒரு நாள் நெஞ்சடைப் பில் போயே விட்டாள். இடிந்து போனார் வைத்திலிங்கம் பிள்ளை. மனைவியின் பிரிவு அவரை பைத்தியமாக மாற்றியடித்துவிடும்போல் இருந்தது. அவரது நிலை கண்டு ஊரே கலங்கியது. நாதஸ்வரத்தை கிடப்பில் போட்டுவிட்டார். அவருக்குப் பைத்தியம் பிடிக்காமல் தவிர்த்தது அவரது கடைசி மகளான ரங்கநாயகிதான். தந்தைக்கு அப்படியேதும் அவல நிலை வராது தடுக்கும் ஆதாரமாக அவள் இருந்தாள். காலம் அவரை மாற்றும் என்று அவள் நம்பினாள். நாளானபோது அவர் கோயில் சேவையைச் செய்ய தனது மகன் கணபதிப்பிள்ளையை ஏற்பாடு பண்ணிக் கொடுத்துவிட்டு, கடைக்குட்டி ரங்கநாயகியுடன் ஒன்றிக் கொண்டார். நாதஸ்வரத்தை உயிரிலும் மேலாக மதித்தவர் அவர். இப்போதோவென்றால் அதை ஏறிட்டுப் பார்ப்பதே சிரமமாக இருந்தது.
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 4:40 pm

தொடக்கத்தில் தன் தனிமையில் ஆறுதல் தேடிக்கொள்ள குடமுருட்டியாற்று மணல் பரப்புக்குப் போய்வருவார். பிறகு ஓரிரு சந்தர்ப்பங்களில் ரங்கநாயகியையும் அழைத்துச் சென்றிருக்கின்றார். இந்த பயணங்களின் போது மகளுக்கு இராகங்கள் பற்றி எதையாவது சொல்லிக்கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவளது கிரகிக்கும் சக்தி அவரையே அசத்தியது. படிப்படியாக அவளுக்கு இராகங்களைப் பாடிக்காட்டலானார். மனமும் தேறுதல் கண்டது. அவரது பயிற்சிகளால் ரங்கநாயகியும் இசைத்துறைக்குள் படிப்படியாக நுழைந்து கொண்டிருந்தாள்.பிரபலமான நாதஸ்வர வித்துவானாகப் புகழ் பெற்ற மனிதர் அவர். நாதஸ்வரத்தை அவர் கையிலெடுக்காவிட்டாலென்ன அவரைத் தேடிக்கொண்டு சந்திக்க எப்போதும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். தந்தையிடம் கற்றதை உருப்போட்டுப் பார்க்கத் தனிமையான சூழல் இல்லா நிலையில் அவளாகத் தேடிக் கொண்ட மேடைதான் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பு. அப்படி போயிருந்த வேளையில்தான் ரங்கநாயகி அந்த புரவி வாலிபனைக் கண்டாள்.தகப்பன் ஆகா... ஆகா... அபூர்வம் என்று பாராட்டியபோது அவளுக்கு ஏனோ குதிரை மீது கம்பீரமாக சென்ற வாலிபனது எண்ணம் தோன்றியது. அந்த வாலிபன் இந்த இராகத்தைப் பாடச் சொல்லிக் கெஞ்சியது நினைவில் தோன்றி உடல்முழுவதும் ஒரு இன்பக் கிளர்ச்சியை ஓடவிட்டது. முன் பின் தெரியாத ஒருவன் கேட்டால் நான் எப்படிப் பாடுவதாம்? தனக்குள் பதிலொன்றை உருப்போட்டுப் பார்த்துக் கொண்டாள் ரங்கநாயகி.

தொடரும்......

தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 4:45 pm

முன் பின் தெரியாத ஒருவன் கேட்டால் நான் எப்படிப் பாடுவதாம்? தனக்குள் பதிலொன்றை உருப்போட்டுப் பார்த்துக் கொண்டாள் ரங்கநாயகி.


இனி...

குறுநாவல் பகுதி 5

[You must be registered and logged in to see this image.]

ரங்கநாயகிக்கு ஏனோ குடமுருட்டியாற்று வெண்மணல் பரப்புக்குப் போகவேண்டும் என்று ஆசையாக இருந்தது. நிச்சயமாக பாடிப்பழக மட்டும்தான் என்பதல்ல ஒரே காரணம் என்று அவளுக்குத் தெரிந்தது. அதனால் அவள் போனாள். அந்த குதிரை வாலிபனைச் சந்தித்த இடத்தினின்று சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. ஆற்றோரமாகச் செல்லும் சாலையை நோக்கி அவளது பார்வையைக் கண்கள் இழுத்துச் சென்றன, ஏமாற்றமாக இருந்தது.பாடுவதற்கு மனம் வராத நிலையில் மெல்ல மெல்ல ஆற்றில் இறங்கினாள். பாவாடையைச் சற்று உயர்த்தி நனையாமல் பார்த்துக் கொண்டாள். திடீரென்று நீர்மட்டம் கூடுவதுபோல் தோன்றியது. உடனே ஊரில் கூறப்படும் காரணம் நினைவுக்கு வரவே கரைக்கு ஓடி வந்துவிட்டாள். திரும்பவும் ஆற்றைப்பார்த்தாள் நீர் மட்டம் கூடியதாகத் தெரியவில்லை. வீண் பிரமை என்றவாறு, ஊர்க் கதையை நினைத்துப்பார்த்தாள். அந்த ஆற்றுக்கு குடமுருட்டியாறு என்று பெயர் வந்த கதையது.காலை வேளையில் ஊர்ப்பெண்கள் தண்ணீர் அள்ளக் குடங்களுடன் ஆற்றுக்கு வந்து கரையில் குடங்களை வைத்து விட்டுப் பல்துலக்கிக் கொண்டும், பராக்குப் பார்த்துக் கொண்டும், ஊர்க்கதைகளை அலசிக் கொண்டும் நிற்கின்றபோது, வினாடிக்கு வினாடி நீர்மட்டம் கூடிக் குறைந்து ஓடும் அந்த ஆறு, அருகிலிருக்கும் குடங்களையும் உருட்டிக்கொண்டோடுமாம். இதனால்தான் குடமுருட்டியாறு என்று பெயர் வந்தது என்று ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள்.அந்தக்காலகட்டத்தில் பெரிய வாழைத்தோட்டம் இங்கே இருந்திருக்கின்றது. இப்போது வாழைகள் அங்கு இல்லை ஆனாலும் அது வாழைத்தோட்டம் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த இடத்தில் குடமுருட்டியாறு வடதிசை திரும்பி பால் துறைக்கடலை நோக்கிப் பாய்கிறது. இந்த ஆற்றுப் பிரதேசம் பதிவான தரைப்பிரதேசமாக இருப்பதால் மாரிவெள்ளம் மணலை வார்த்துச் சென்றுள்ளது.

( தற்போது குடமுருட்டியாறு, மழைக்காலங்களில் நீர்பாயும்
ஓடையாகத் தூர்ந்துபோய் இருக்கிறது
.)


ரங்கநாயகி இந்த நினைவினின்றும் விடுபட்டுத் தான் நின்று கொண்டிருக்கும் மணல்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயிராகி வளர்ந்து நின்ற மருத மரங்களை கவனித்தாள். நான்கு திசைகளிலும் கிளைபரப்பி விதானம்போல் ஆகாயத்தை மறைத் திருந்ததால் இயற்கை அன்னை சிருஷ்டித்த தூண்களாலான மண்டபம் போலத்தெரிந்தது. ~ஊர் மக்கள் பொழுதுபோக்க எவ்வளவு அழகான இடம்.... அமைதியான இடம் இது என்று நினைத்துக் கொண்டாள்.உண்மைதான்! இந்த இடத்தை ஒரு உல்லாசமான பொழுது போக்கு இடமாக ஊரவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏனோ அதில் கவனம் செலுத்துவதில்லை. மாறாக தம்பலகாமம் தெற்கு நெற் செய்கையாளர்கள்தான் அந்த இடத்தை உணவு உட்கொள்ளும் இடமாகத் தண்ணீர், நிழல் ஆகியவற்றை முன்வைத்து பயன்படுத்துவதுண்டு. அறுவடையான பிறகு அந்தப்பயன்பாடும் இல்லை. அதனால்தான் இந்த இடம் ஏகாந்தமாக மனித சஞ்சாரமில்லாது இருக்கிறது. ஏதோ இதுகூட நமக்கு அனுகூலம்தான்.


ரங்கநாயகி சிந்தனைகளில் இருந்து விடுபட்டாள். அவளுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கம் போல மனதில் பட்டது. தந்தையோடு வந்த முதல் நாளே அவளுக்கு இந்த இடம் பிடித்துப்போய் விட்டது. அந்த மணல் சோலையைக் கண்டதும் என்ன அழகான இடம் என்று அவள் பரவசப்பட்டவள் அல்லவா? அவளுக்கு பாடல்களைத் தனிமையில் பாடிப்பழக இதைவிடச் சிறந்த இடம் இருக்குமா?திடீரென்று கேட்ட குதிரைக் குழம்பொலி அவளைத் திடுக்கிடப் பண்ணியது. சாலையை நோக்கிய கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. ஒரு கணம்தான்! தனது அவசரம் குறித்துத் தன்னைக் கடிந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவளாகத் திரும்பி ஆற்றை நோக்கினாள்.


அந்த வாலிபன் அருகில் வந்து என்ன இன்றைக்குப் பாடவில்லையா? என்று கேட்கும் வரை அவள் திரும்பவில்லை.


அவள் புன்னகைத்தாள்.


நான் உங்கள் ரசிகன்..... நம்புங்கள்

அவள் சிரித்தாள்.

ஏன்? சிரிக்கிறீர்கள்

ஒரு நாள் ரசிகனா?

ஏன் இனி நீங்கள் பாடமாட்டீர்களா?

மனம் சொன்னால் பாடுவேன்

நான் சொன்னால் பாடமாட்டீர்களாக்கும்

முன்பின் தெரியாதவர் சொல்லப்பாடுவது எங்கள்
ஊர்பழக்கமில்லை

அப்பா! பெரிய பழக்கம்தான்

இப்படியாக அந்த வாழைத்தோட்டம் அவர்களது சந்திப்புக்கான தளமாக அமைந்துவிட்டது. நாளாக ஆக ரங்கநாயகியின் மனதில் இருந்த அச்சமும் தயக்கமும் அகன்று விட்டது. அவன் தனக்கொரு பாதுகாவலன் என்பதாக உணரத் தலைப்பட்டாள்.அவன் அருகில் வந்து பாடச்சொல்லிக் கெஞ்சுவான். அப்படிக் கெஞ்ச வைப்பதில் அவளுக்கொரு ஆனந்தம். அவனது உயர்வான பண்புகளும், நல்ல நடத்தைகளும் அவளை அவன் நம்பத்தகுந்தவன் என்று எண்ணவைத்தன. அவன் வரத் தாமதமாகிவிட்டாலோ என்னவோ? ஏதோ? வென்ற பதைப்பு எழுந்து, என்ன காரணம்? என்று தேடிக் குழம்பியது அவள் உள்ளம்.அவனும் அவள், தான் கேட்டுக் கொண்டபோது பாடாதது கண்டு சினக்கவில்லை. அவளை விளங்கிக் கொண்டான்.


அந்நியனான நான் அப்படிக்கேட்டதே தவறு என்று சமாதானம் சொல்லிக் கொண்டான். இந்த நிலை கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடித்தது. இப்போதெல்லாம் அவள் அவனை ஏமாற்றவும், சீண்டவும் விரும்பவில்லை. இசைமீது அவனுக்கிருந்த ஆவலை அவன் சொல்லிக்கேட்டு ஏற்றுக்கொண்டு பாடலானாள். அவனும் அவளது இராக ஆலாபனைகளை எத்தனையோ ஆகாக்கள் போட்டு ரசிக்கலானான்.ஒரு நாள் அவனே சொன்னான். நான் தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவன். பெயர் குமரன். என்னைக் கண்டு அஞ்சத்தேவையில்லை.நான் ஊருக்குப் புதியவன்தான் என்று அவள் கேளாமலே தன்னை வெளிப்படுத்தத் தொடங்கினான்.முதல் நாள் ஊகம் ஊர்ஜிதமானது. தன் கணிப்பு சரியாக அமைந்தது அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. இருந்தாலும் அவன் தோரணை எல்லாம் அவன் சாதாரண வீரனல்ல என்ற எச்சரிக்கை உணர்வை அவளுக்கு கொடுக்காமலில்லை. அப்படித் தான் இருந்தாலும் அவ்வாறான ஒருவன் தன்னோடு சமனாகப் பழகி, பேசி, ஏன்? பாடச் சொல்லிக்கேட்டு ... ஒரு பக்கம் எண்ணும்போது பெருமையாகவும் இருந்தது. வேடிக்கை என்னவென்றால் இதுநாள் வரையிலும் அவன் அவள் பெயரைக் கேட்டதேயில்லை.


தொடரும்......


தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 4:53 pm

நான் தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவன். பெயர் குமரன்..........
ஒரு பக்கம் எண்ணும்போது பெருமையாகவும் இருந்தது. வேடிக்கை என்னவென்றால் இதுநாள் வரையிலும் அவன் அவள் பெயரைக் கேட்டதேயில்லை.


இனி...

தம்பன் கோட்டை

[You must be registered and logged in to see this image.]

தம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.


கலிங்கத்து விஜயபாகு கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.ஆனால் கலிங்க விஜயவாகு, கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.இலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம் (தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.
தம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).இந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயவாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.தனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்தது மில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.(ஏறத்தாழ 800 வருடங்களுக்கு முன்னான காலப்பகுதியிலே இந்தக் கதை நடக்கிறது) கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறது. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.

தொடரும்......

தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 5:00 pm

தம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது........
தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.

இனி...
குறுநாவல் பகுதி 6

[You must be registered and logged in to see this image.]

தொன்மைமிக்க தமிழ்பட்டணத்தில் கலிங்க விஐயபாகு கட்டிய கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த படைகளுக்கு மலையாள வீரனான தம்பன் தளபதியாக இருந்து கிழக்கிலிருந்து வந்த படைகளை முறியடித்து மன்னனின் நோக்கத்தை நிறைவேற்றினார்.அவனது வீரத்திற்கு அடையாளமாகத் தம்பன் கோட்டை என்று அழைக்கப்பட்ட கோட்டைமீது அந்த இராப்பொழுதில் குமரன் வானை அண்ணாந்து பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். நிர்மலமான வானில் விண்மீன்கள் கண்சிமிட்டி அவனுக்கு உற்சாகம் ஊட்டின. கோட்டைச்சுவரில் சொருகியிருந்த பந்தங்களின் வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்து அவனது கம்பீரத்தை கூட்டிக்காட்டின.என்னால் தளபதி தம்பன்போல இந்தக் கோட்டையைக் கட்டிக்காக்க முடியுமா? புகழ்பெற்ற அவர் எங்கே... நான் எங்கே...?

அவன் தன்பார்வையை கோட்டைச் சுவர்கள் மீது ஓடவிட்டான். என்னால் முடியுமென்றபடியால்தானே மன்னர் என்னை இங்கு அனுப்பியிருக்கின்றார்?.... சந்தர்ப்பம் வரும்போது திறமையைக் காட்டவேண்டியதுதான்.....ஆனாலும் கேள்விப்படுகின்றதைப் பார்த்தால் கிழக்கிலிருந்து இந்த ஜென்மத்திற்கே மோதல் வராது போலிருக்கிறதே.... தம்பன் தளபதி கிழக்கு எதிரிகளின் முது கெலும்பை உடைத்துவிட்டார் என்றல்லவா கூறுகின்றார்கள்.உண்மையில் அவர் பெரும் வீரர்தான்... அவரது ஆற்றலுக்கு முன் நான் ஒரு பொருட்டே அல்ல. அவனது சிந்தனை நீண்டு கொண்டே போனது. இத்தனை பெருமைக்குரிய தளபதி நோய்வாய்ப்பட்டார் என்ற செய்தி எல்லோருக்கும் பெருந்துயரத்தை கொடுக்கவே செய்தது.தம்பன் தளபதி நோய்க்காளானபோது அரச மருத்துவர்கள் அவருக்கு ஓய்வும், சிறந்த மருத்துவ வசதிகளும் தேவை என்றபடியால், அவர் தாயகம் திரும்புவதே சாலவும் சிறந்தது என்று கடுமையான ஆலோசனைகளைக் கூறியிருந்தார்கள். மன்னனும் அப்படிச் செய்வது தனது கடமையென்று தளபதியை தாயகம் அனுப்பிவைத்தார். முதலில் கோட்டையை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ள மறுத்த தளபதி தம்பன், தனக்குப் பிறகு தளபதியாக நியமிக்கப்படுவது யாரென்று அறிந்தபிறகுதான் தாயகம் திரும்ப சம்மதித்தார். தனது சிபாரிசை மன்னர் ஏற்றதையிட்டு அவர் சந்தோஷப்பட்டார்.உதயகுமரன் சக்கரவர்த்தியின் ராணியின் மூத்தசகோதரி ரத்தினாவதிதேவியின் மகன், போரில் ஆற்றல் மிக்கவன், இளைஞன், நல்லபுத்திசாலி, திறமைசாலி, அவனை விட்டால் தளபதி தம்பனின் இடத்திற்கு வேறு பொருத்தமானவன் கிடைக்கமாட்டான் என்ற உறுதி மன்னனுக்கு இருந்தது.புதிய தளபதியாக வந்து பொறுப்புக்களைப் பாரம் எடுத்து இரண்டு மூன்று நாட்களில் ஊரை அறிந்துகொள்ள அவன் புரவிப்பயணத்தை மாலை வேளைகளில் மேற்கொள்ள தலைப்பட்டான். இப்படியான ஒரு பயணத்தில்தான் அவன் ரங்கநாயகியை ஆற்றுமணலில் ராகம் பாடிக்கொண்டிருந்த நிலையில் சந்தித்தான்.அவளது நினைப்பு மனதில் பட்டதுமே அவனைச் சுற்றியிருந்த அனைத்தும் அந்தக் கோட்டை, அதன்பொறுப்பு காவல்நின்ற வீரர்கள், முறைக்காவல் அழைப்பொலிகள் எல்லாமே மறந்துபோயின. இதை அவன் உணர்ந்து கொள்ளாமலில்லை மெல்லச்சிரித்துவிட்டு தலையை அசைத்தவன் ரங்கநாயகியின் நினைப்பில் மூழ்கிப்போனான்.


அவளது குரலில்தான் எத்தனை இனிமை. அவள் வாயினின்று புறப்படும் இனிமையான ராக ஆலாபனை உயர்ந்ததா? இல்லை அளவெடுத்து கடைந்தெடுத்தது போன்ற அவயவங்கள் கொண்ட வனப்புமிக்க அவளது சௌந்தர்ய உடழழகு சிறந்ததா? தாமரை மொட்டு முகத்தில் வெட்டிச் செல்லும் வண்டுகள் போன்ற அந்தக் கண்கள், அவளிடம் உள்ள ஆற்றல், அழகு என்ற இரண்டு மேன்மைகளுமே அவனைப் பெரிதும் கவர்ந்தன.அவனுக்குத் தெரியும், அவன் அவளுக்கு அடிமையாகிவிட்டான். ஆற்றல் மிக்க வீரன் ஒரு சாதாரண பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து விட்டான்! அவள் எனக்கு மனைவியாவாளா? அப்படி அவள்கிடைத்து விட்டால் என்னைப்போல பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது?
தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.உயிரைத் துச்சமாக எண்ணி போர்க்களத்தில் நுழைந்து வாளைச்சுழற்றி எதிரியைப் பந்தாட அவன் தயங்கியதில்லை. அஞ்சியதில்லை. ஆனாலும் அவளை இழப்பதென்பது அவனுக்கு வாழ்வே இல்லைப்போலிருந்தது. நாளை அல்லது மறுநாளாவது அவளைச் சந்திக்கும்போது முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன்.


தொடரும்......

தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 5:56 pm

அவளைச் சந்திக்கும்போது முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன்.


இனி...
குறுநாவல் பகுதி 7

[You must be registered and logged in to see this image.]


உண்மையில் ஓரிரண்டு கிழமையிலேயே இருவரும் தயக்கமின்றி பேசிக்கொள்ளத் தலைப்பட்டனர். அபின் உண்டு பழகிய மயில் போல கோட்டைவாலிபன் அவன்தான் உதயகுமரன் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பிற்கு நாளும் வரலானான். ஒரு நாள் ரங்கநாயகி வெண்மணல் பரப்பில் அவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது,

உங்களால் கல்யாணி ராகத்தைப் பாடமுடியுமா? என்று கேட்டான்.

ஓ ... பேஷாக ! என்றவள் தயக்கமின்றி ஆரம்பித்தாள்.என்ன ஆச்சரியம்! கூடவே ஒரு ஆண் குரலும் அவளோடு இணைந்து கொண்டது. தன் பாடலை நிறுத்தாமலே தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். சாட்சாத் அவனேதான் பாடிக்கொண்டிருந்தான். சாதாரணமாக அல்ல, ஒரு தேர்ந்த பாடகன்போல அழகாகப் பாடினான். அவன் குரல்கூட கரகரப்பில்லாமல் மதுரமாக ஒலித்தது.


இது கண்டு போர்க்களங்களில் வாள் சுழட்டும் இவரும் நன்றாகப்பாடுகிறாரே... பாடலுக்கேற்றபடி குரலும் ஒன்றிப்போவது சிறப்பாக இருக்கிறது. என்று அதிசயித்தது மட்டுமல்ல, வாய்விட்டு பாராட்டவும் செய்தாள்.அமர்க்களமாகப் பாடுகிறீர்கள்... இதுவரை என்னிடம் சொல்லவில்லையே.... எங்கே கற்றீர்கள் இந்த வித்தையெல்லாம்? என்று கேட்டு வைத்தாள்.


கலைவாணி போன்ற அவள், தன்பாடலைப் பாராட்டியதைப் பெரும்பேறாக எண்ணி மட்டில்லா மகிழ்ச்சியடைந்த அவன், தான் சிறிய தந்தையாருடன் தென்னிந்தியாவில் சில காலம் வாழ்ந்தபோது சிறு வயதில் சங்கீதம் கற்றுக் கொண்டதாகச் சொன்னான்.


சங்கீதத்தில் நல்ல ஆர்வம் போலிருக்கிறது...

இல்லாது போனால் இப்படியொரு அழகு தேவதையை நான் சந்தித்திருக்கமாட்டேன். சந்தித்திருந்தாலும் பழக வாய்ப்புக் கிடைத்திருக்குமோ தெரியாது

அவன் தன் உறவை எந்தளவு விரும்புகிறான் என்றறிந்த போது, மனம் அலைபாய்ந்தது. அவனே அவள் மன ஓட்டத்தை நிறுத்தினான்.


தங்களது தந்தையின் பெயர் என்ன....? தங்களின் பெயர் போன்ற விபரங்களை நான் அறிந்து கொள்ளலாமா? கேட்டு வைத்தான் குமரன்.


ஓ.... அறியலாமே! என்னுடைய பெயர் ரங்கநாயகி. எனது தகப்பனார் பிரபல நாதஸ்வர வித்துவான் வைத்திலிங்கம் பிள்ளை. எனது தாயாரின் மறைவுக்குப் பிறகு அவர் நாதஸ்வரம் வாசிப்பதே யில்லை...... என்று நிறுத்தினாள்.நாதஸ்வர வித்துவானின் மகளா நீங்கள்?.... அதுதானே பார்த்தேன்... இராகங்கள் எப்படியடா உங்களோடு இத்தனை சரளமாக உறவாடுகிறது என்று எனக்குள் நானே யோசித்ததுண்டு....காரணம் இப்போதுதான் தெரிகிறது... அவனை இடைமறித்தாள் ரங்கநாயகி.


உங்களின் எல்லாத் திறமைகளும், பண்புகளும் எனக்கு இரட்டிப்பாய்ப் பிடிக்கிறது.... ஆனால்....


ஆனால் ஆனால் என்று ஏதோ என்னில் பிடிக்காத எதையோ ஒன்றைப்பற்றி சொல்ல வந்தீர்களே..?. அதை ஒளிவு மறைவின்றிக் கூறிவிடுங்கள் என்றான் அவன். அவனுக்குள் ஒரு கேள்விக்குறி. அவன் புத்திக் கூர்மையை உள்ளூர மெச்சிக் கொண்டவள்,


சாதாரண சிறு பெண்ணாகிய என்னை பெரிய போர்வீரராகிய தாங்கள்... நீங்கள்... நீங்கள் என்று பெரும் கௌரவம் கொடுத்து அழைப்பதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. கேட்கும்போது கூச்சமாக இருக்கிறது. சிணுங்கிக் கொண்டாள்.நீங்கள் உங்களை சிறியவள் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாம். கலைவாணியின் அருளால் பெரிய சங்கீதப் பொக்கிஷமே உங்களிடம் இருக்கிறது...சரி...சரி முறைக்கவேண்டாம்... உன்னை... இப்போது சம்மதம்தானே... உன்னை ரங்கநாயகி என்றே அழைக்கின்றேன்... சரிதானே?

இருவரும் சிரிப்பில் கலந்தனர்.சிறிதுநேரத்தின் பின் அவன் கேட்டான்.


அதுசரி... நான் ஏதோ அரையும் குறையுமாகத்தான் இராகங்களைப் பாட கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போதுமட்டும் வாய்ப்புக் கிடைக்குமாக இருந்தால் உன் தந்தையாரிடம் சங்கீதம் முறையாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அந்த பெரியாரைச் சந்திக்க நான் வீட்டுக்கு வரலாமா...? உன்னால் ஏற்பாடு செய்து தரமுடியுமா?


அவள் பதிலுக்கு மௌனம் சாதித்தாள்... மனம்தான் பேசியது


இதுக்குத்தான் நாளும் என்னைத் தேடிவந்ததும்... பாடச் சொல்லிக் கேட்டதும் போலிருக்கிறது அவள் உற்சாகத்தில் பாதி போய்விட்டது. அவள் சிந்தனையைக் கலைத்தது அவன் கேள்வி.


ஏன் மௌனம் சாதிக்கிறாய்?


அதற்கு என்னை காக்காய் பிடிக்கத்தேவையுமில்லை... அதற்குரிய அவசியமுமில்லை. நீங்களே நேரடியாக தகப்பனாரைக் கேட்பதுதானே அவள் தூக்கலாகச் சொன்னாள்.
அவள் குரல் அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டது. சிரித்துக் கொண்டே சொன்னான்...


அப்பா...போதுமே கோபம்...இங்கே இரகசியமாக சந்திப்பதைவிட வீட்டில் பெரியவர்களின் அனுமதியுடன் சந்திக்கலாமே என்றுதான் கேட்டேன்... இதற்குப்போய்... அவளுக்கு அசடு வழிந்தது. இருவரும் ஒருவரையொருவர் தெளிவாகத் தெரிந்து கொண்டாலும் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படையாகப் பேசத்தயங்கினர்.


இதற்கிடையில் அவர்களது சந்திப்பொன்றும் இரகசியமான தாக இருந்து விடவில்லை. கோட்டை வாலிபன் நெடுகிலும் அங்கு வருவதைக் கண்ட ஊரவர்கள் அந்த நேரத்தில் அந்த இடத்திற்குப் போவதை தவிர்த்துக் கொண்டார்கள். ஆனாலும் ஓரிருபேர் சிலவேளைகளில் அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதையும், பாடிக்கொண்டு இருப்பதையும் கேட்கவும் செய்தனர், காணவும் செய்தனர். அதுவும் ஆளையாள் மாறிமாறிப் பாடும்போதுகேட்கக் காதுகள் கோடி வேண்டும் போல இருக்கும்.


மத்தியமாவதி, அடானா, ஆரபி, பைரவி, தேசிகம், செஞ்சுருட்டி, சுருட்டி, மோகனம், காம்போதி, ஆனந்தபைரவி போன்ற மேளகர்த்தா ராகங்களையும் ஜன்னிய ராகங்களையும், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று கீர்த்தனைகளையும் பாடி மகிழ்ந்தனர்.


இவர்களை அறியாமல் இவர்களது பாட்டுக்கு செவி கொடுத்தவர்கள் நாதஸ்வரக்காரரின் மகள் நல்ல பொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின.தொடரும்......


தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:02 pm

பொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின.

இனி...
குறுநாவல் பகுதி 8

[You must be registered and logged in to see this image.]

ரங்கநாயகி குடமுருட்டியாறு வெண்மணற்பரப்பில் கோட்டை வாலிபனுடன் பாடிமகிழ்ந்து விட்டு வீட்டுக்கு வந்தாள். திண்ணையில் இருந்து எங்கோ பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த வைத்திலிங்கம் பிள்ளை மகளிடம் சற்று கடுமையாகவே கேட்டார்.


நான் கேள்விப்படுவதெல்லாம் உண்மையா?

அவளில் தயக்கமோ சுணக்கமோ இருக்கவில்லை.

ஆம் அப்பா! அவர் என் ரசிகர், சங்கீத ஞானமுள்ளவர். ராகங்களை நன்றாகப் பாடவும் செய்கிறார்.


அவர் மறித்தார்.

அவர் ராகம் பாடுவது இருக்கட்டும். அவர் யார் என்றாவது அறிந்து கொண்டாயா?


ஆம் அப்பா. அவர் பக்கத்தில் உள்ள தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவராம். சங்கீதம் கற்றுக் கொள்ளும் ஆசை இருக்கிறது.ராகங்களை சுமாராகப் பாடுகிறார். பெயர்கூட குமரன் என்றும் சொன்னார். உங்களைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னார். உங்களை சந்திக்க அனுமதியுண்டா அப்பா?


அவனது பெயரைச் சொல்ல அவள் காட்டிய தயக்கத்தைக் கண்டு தூரத்துப் பார்வையை வெட்டிவிட்டு அவளை உற்று நோக்கினார். அவளது பருவத்து ஞானத்திலும் குழந்தைத்தனம் விட்டுப்போகாததைக் கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டார் வைத்திலிங்கம் பிள்ளை.


வேண்டாம்... வேண்டாம்... அவரை இங்கு அழைத்து வந்து
விடாதே...அவர் அவசரம் காட்டினார்.


ஊர் ஏதேதோ பேசுகிறது. அந்த வாலிபரைப்பற்றி நீ அறிந்து கொண்டதாகச் சொன்னதில் அரைப்பகுதிதான் உண்மை... அவர் கோட்டையில் சாதாரண வீரரல்லம்மா... அவர்தான் தம்பன் கோட்டைக்கான புதிய தளபதி... பெயரும் வெறும் குமரனல்ல, உதயகுமாரன். எல்லாவற்றையும் விட கலிங்க விஜயபாகு பேரரசரது பட்டத்து தேவியின் மூத்த சகோதரியின் மகன். அரச குலத்தவன்...அவர் பேசப் பேச அவள் அதிர்ந்து போனாள். ஒரே குழப்பமாக இருந்தது.... அப்பா ஏதோ தவறான விடயத்தை அறிந்திருக்கிறார் என்று எண்ணியவள், அதே குழப்பத்தைக் குரலிலும் காட்டி கோட்டை தளபதியின் பெயர் தம்பன் என்றல்லவா முன்பு எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்றள்.


மகளின் குழப்பத்தைக் கண்டு பரிதாபப்பட்ட அவர் ஆறுதலாகச் சொன்னார். ஆம் அம்மா, மகா வீரரான தளபதி தம்பரை வாத நோய்தாக்கி படுக்கையில் சாய்த்துவிட்டது. நோய் குணமாக வேண்டி தளபதி தன் தாயகமான கேரளம் சென்றிருக்கிறார். சக்கரவர்த்திதான் இந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்ததும். அவரே தளபதியின் இடத்திற்கு தன் ராணியின் மூத்தசகோதரியின் மகன் உதயகுமரனை அனுப்பியும் புதிய தளபதியாக பதவியேற்கவும் வைத்திருக்கின்றார்.புதிய தளபதி கோட்டை பொறுப்பை ஏற்கும் வைபவத்தில் உன் அண்ணாதான் நாதஸ்வரம் வாசித்தான். மனம் விரும்பவில்லைதான் நானும்...... அந்த வைபவத்திற்கு கொஞ்சநேரம் போயிருந்தேன். புதிய தளபதியை நானும் கண்டேன். வெண்புரவி ஏறிவரும் அவரின் தோற்றம் பார்க்க ஆசையாக இருந்தது. அவர்தான் குடமுருட்டியாறு ஆற்றங்கரையில் உன்னைச் சந்திப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாதஸ்வரக்காரரே உங்கள் மகள் நல்ல புளியங்கொம்பைத்தான் பிடித்திருக்கிறாள், என்று அவர்கள் கூறுவது ஓன்றும் மகிழ்ச்சி தரக்கூடியதில்லை.அவளது கண்களை உற்றுப்பார்த்துச் சொன்னார்.அம்மா நாம் சாதாரண குடிமக்கள். தளபதி உதயகுமரன் அரசகுலத்தவர். எட்ட நினைத்தாலும் கிட்டாத தூரம்.... அரச குலத்தவர் ஒருபோதும் வேறு இனங்களில் பெண் கொள்வதில்லை. அதற்கு இடமுமில்லை என்று நான் அறிவேன்.

அவளில் தெரியும் ஏக்கத்தின் சாயலைக் கண்டு கழிவிரக்கப்பட்ட அவர், நாடுகடத்தப்பட்டு இந்த நாட்டில் ஒரு அந்நியனாக வந்து
இறங்கிய விஜயனுக்கு இந்த நாட்டில் ஏக சக்கரவர்த்தியாகவர பேருதவி நல்கிய இயக்கர் குலக்கொடியான குவேனிக்கு விஜயன் தொடர்பாக பிள்ளைகள் இருந்தும், குவேனியையும் பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு விஜயன் பாண்டிய ராஐகுமாரியை மணந்து கொண்டவரலாற்றையும் கருத்தில் எடுத்து, நீ தெளிவு பெறவேண்டும். நம்முடைய நிலமைக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வது மகிழ்ச்சி தரக்கூடியதில்லை. சர்வஐர்க்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும் என்றார்.


இதைவிட மேலான அறிவுரையை அவரால் கூறமுடியாது என்றே அவருக்குப்பட்டது. கவலையின் ரேகைகள் அவர் முகத்தில் கீறல்போட்டு, அவர் வயதை கூட்டிக்காட்டின. அவர் நிலை இப்படியென்றால் அவளோ..குடமுருட்டியாற்றங்கரையில் தன்னைச் சந்தித்தவர் தாசாரண வீரர் அல்ல, அவர்தான் தம்பன் கோட்டைப் புதிய தளபதி, கலிங்க விஜயபாகு சக்கரவர்த்திக்கு நெருங்கிய உறவினர் என்று தந்தை சொல்லக் கேட்கக் கேட்க பேதைமனம் துயரம்....... பயம்... ஏமாற்றம்.... மகிழ்ச்சி... போன்ற உணர்ச்சிகளால் கதிகலங்கிப் போனது.அவரே கூறியது போல அவர் சாதாரண வீரராக இருந்திருக்கக் கூடாதா? அவரோடு பாடி மகிழ்ந்த இந்தக்காலததுக்குள் என்னென்ன தவறுகள் செய்து அபச்சாரம் தேடிக் கொண்டேனோ....?| இவற்றிற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்வேனோ...? அவரை நெருங்கும் தகுதி எனக்கு உண்டா? என்ற கலக்கமும், பயமும் அதே சமயம் என் மனதைக் கவர்ந்தவர் ஒரு தளபதி, என்று எண்ணும் போது மகிழ்ச்சியும் மாறி மாறி தோன்றி அவளை திக்கு முக்காட வைத்தன. இந்த குழப்ப உணர்வுடன் வீட்டினுள் நுழைந்தவள் நேரே அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தாள்.


அவளது ஒவ்வொரு அசைவையும் அவதானித்தபடி உட்கட்டிலில் இருந்த அவளது அத்தை மீனாட்சி கதவடியில் போய் நின்று ரங்கநாயகி ஏதாவது சாப்பிட்டுவிட்டு படு அம்மா என்று குரல் கொடுத்தாள். நாதஸ்வரக்காரரின் மனைவி இறக்கும் முன்பே கணவனை இழந்த அவரது தங்கை மீனாட்சி, அந்த குடும்பத்திற்கு பேருதவியாக இருந்து வந்தாள். அண்ணியார் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பெல்லாம் அவளே ஏற்றுக்கொண்டிருந்தாள். இதனால்தான் வயது வந்த பெண்ணான ரங்கநாயகி எந்தக்கவலையுமின்றி வீட்டுக்கும், ஆற்றுக்கும் இடையில் மான்குட்டி போல் துள்ளித்திரிய முடிந்தது.
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:02 pm

எனக்குப் பசிக்கவில்லை அத்தை

என்னதான் பிரச்சினை இருந்தாலும் வெறும் வயிற்றோடு
படுக்காத பிள்ள. பால் காய்ச்சித் தரமட்டுமா?

பால் குடிச்சால்மட்டும் நித்திரை வந்துவிடுமாக்கும். என்னைச்
சும்மா விட்டுவிடுங்கள் அத்தை.

வயதானபிள்ளையை அப்படி விட்டுவிடலாமா? பொறு நான் பால் காய்ச்சி வருகின்றேன்.


அவள் அப்படி சொன்னபிறகு பாலைக்குடிக்காமல் இருக்கமுடியாது என்று ரங்கநாயகிக்கு தெரியும்.


பொறுத்திருந்து பாலைக்குடித்துவிட்டு படுக்கையில் சரிந்தாள். மனம் ஓய மறுத்தது. இனி என்ன செய்வது. அப்பா சொல்வதைப் பார்த்தால் அவரைத் துணைவராக அடைவது இந்த ஜென்மத்தில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத காரியம். அவர் என்னிடம் தன்னைப்பற்றிய உண்மையை மறைத்திருக்கவே கூடாது என்றும் கோபப்படவும் செய்தாள். ஒன்றும் அறியாத என் மனதை குழப்பி... ஏன்? அவர் உண்மையைச் சொல்லியிருந்தால் அவருடைய உறவை அன்றே வெட்டியிருப்பேன் அப்படிச் செய்திருந்தால் அந்த உன்னத புருஷனின் அன்பு எனக்கு கிடைத்திருக்குமா?


யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது? அப்பாவோடு இனிப்பேசி பயனில்லை என்று தெரியும். அவர் சுலபத்தில் முடிவெடுப்பதில்லை. எந்த முடிவையும் மாற்றியதில்லை.

அத்தை ... இதெல்லாம் அவளுக்குச் சரிப்படாது. இனி குடமுருட்டியாற்றை மறந்துவிடவேண்டியதுதான். குடமுருட்டியாற்றுக்கு மட்டுமல்ல வெண்மணற்பரப்பு, வாழைத் தோட்டம், ஏன் வெண்புரவிக்கு கூட கும்பிடு போட்டுவிட வேண்டும். படுக்கையில் புரண்டாள். புரவி என்றதுமே குமரன் நெஞ்சை நிறைத்தான். குடமுருட்டியாற்றுக்கு போகாமல் விடும் உறுதி எனக்கு இருக்கிறதா?


எதற்கும் நாளை கடைசியாக ஒருதடவை அவரைப்பார்த்து பேசிவிட்டு வந்து விடவேண்டும். கிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டியதுதான் அவளால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை எப்போது விடியுமென்றிருந்தது.

தொடரும்......

தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:09 pm

கிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டியதுதான் அவளால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை எப்போது விடியுமென்றிருந்தது.

இனி...
குறுநாவல் பகுதி 9

[You must be registered and logged in to see this image.]

கோட்டைக்குள் படுத்திருந்த உதயகுமரனுடைய நிலையும் ஏறத்தாழ இதேதான். அன்று மாலையில் குடமுருட்டியாற்று கரையினின்றும் மிக சந்தோஷமாகத்தான் திரும்பியிருந்தான். ஆனால் ஏனோ தெரியவில்லை கோட்டையை அண்மித்தபோது அதற்குள் போகவேண்டாம் என்று இருந்தது. அவன் வருகைக்காக காத்திருக்கும் வீரர்களை ஏமாற்றக் கூடாது என்று கோட்டைக்குள் நுழைந்து ஏதோ எந்திரம்போல் இரா உணவுவரை அலுவல்களை முடித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து, கதவை அடைத்துவிட்டு கட்டிலில் விழுந்தான். மனம் அமைதியடையாமல் இருந்தது.இன்று ஏன் இந்தக் குழப்பம். மாலையில் ரங்கநாயகியுடன் கதைத்துவிட்டு வரும்போதுகூட நன்றாகத்தானே இருந்தேன்? அவளது நினைப்பு இன்னும் வாட்டியது. கலைவாணியே நேரில் வந்தது போன்ற தோற்றம் உள்ள அவள் எனக்கு கிடைப்பாளா?, சாதாரண வீரனல்ல நான்.... கோட்டைத்தளபதி என்று தெரிந்து கொண்டாள் என்றால், நான் உண்மையை மறைத்ததிற்காக என்மீது கோபம் கொள்ளமாட்டாளா? எப்படி இருந்தாலும் அவளின்றி நான் இல்லை என்பதே உறுதி. இருப்பினும் தடைகள் பல தாண்டவேண்டி இருக்கிறதே! என்று ஒவ்வொரு சிக்கலாகப் பட்டியல் போட்டு எடைபோட்டான்.ஒன்று எனது குலம்... நான் ராஜகுலத்தினன்... ஒரு நட்டுவகுலப்பெண்ணை திருமணம் செய்ய அரச குடும்பம் என்றுமே சம்மதிக்கப்போவதில்லை. அடுத்தது, அன்னை இரத்தினாவதிதேவி இதற்கு ஒருபோதும் சம்மதிக்கப்போவதில்லை, மன்னர்... அவருக்கென்று சில கொள்கைகள், அரச குடும்பம் பற்றிய கனவுகள், தனது சாம்ராச்சியம் தொடர்பாக எங்கள் ஒவ்வொருவர்மீதும் நம்பிக்கை வைத்து தீட்டியிருக்கும் திட்டங்கள்... இவர்களுக்காக என் எதிர்காலத்தை இழக்க வேண்டியதுதானா? என் மனம் கவர்ந்த தேவதையை மறந்து வாழத்தான் வேண்டுமா? எண்ணவே முடியாமல் இருக்கும் இந்த உறவின் பிரிவை எப்படி நிஜமாக எண்ணால் தாங்கிக்
கொள்ளமுடியும்?புதிய பிரதேசம் என்று இயற்கை எழிலை அள்ளிப்பருகிக் கட்டில்லாக் காளைபோல கட்டிளங்காளை நான் மகிழ்ந்து திரிந்தேனே... இச்சிறு பெண்ணைக் கண்டது முதல் மன நிம்மதியைப் பறிகொடுத்துவிட்டேனே! படுக்கை முள்ளாய் குத்தியது. கட்டிலில் இருந்து எழும்பி ஐன்னலுக்கு தாவினான். விண்மீன்கள் துயிலாது காவல் செய்தன.தீடீரென அவன் மனதில் ஒரு மின்வெட்டு யோசனை! ஆம் அப்படித்தான் செய்யவேண்டும்.... அதைவிட்டால் வேறு வழியில்லை. யார் என்ன எதிர்த்தாலும்... அவள்மட்டும் சரி என்று ஒரு வார்த்தை சம்மதம் சொன்னால் போதும், அவளையும் அழைத்துக்கொண்டு தென்இந்தியாவுக்குச் சென்று விடலாம். அங்கு சோழ அரசப் பிரதிநிதியாக இருக்கும் சிற்றப்பா கமலசேகரரின் சிபாரிசில் சோழ சைன்னியத்தில் சேர்ந்து விட வேண்டியதுதான்.நடக்கவேண்டியது நடந்து விட்டது என்று மன்னர் மன்னித்து விட்டாலும் விடுவார்... ஆனால் அன்னை இரத்தினாவதிதேவிதான் பெரிதாகத் துயரப்படுவார்.... இறப்புக்குச் சமனான துயர் அவளை வாட்டி எடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்!ரங்கநாயகி எப்படியோ.. வயதான தந்தையை, ஆசானுக்கு ஆசானாக இருக்கின்றவரை இங்கே தனித்து விட்டுவிட்டு நம்முடன் வரச்சம்மதிப்பாளா? ... அவள் மட்டும் வர மறுத்துவிட்டால்? படுக்கைக்குத் திரும்பியவன் நீண்ட நேரம் துயிலவேயில்லை. இரண்டாம் சாமத்தில் காவல் மாறும் ஒலியைக் கேட்டபடியே மெல்லக் கண்மூடத்தொடங்கினான்.அவள் ஆவலோடு எதிர்பார்த்த பொழுது விடிந்தது. பொழுது விடிந்ததா? இல்லை இரவு முடிந்ததா? அவளுக்கு இது தேவையில்லா ஆராய்ச்சி. பகல் முழுவதும் பதைபதைப்புடன் குட்டிபோட்ட பூனைபோல கூடத்திற்கும் அறைக்குமிடையே அலைந்தாள். கடைசியாக மாலையானதும் வீட்டில் இருக்கப் பிடிக்காமல், அலைமோதும் சிந்தனைக்கு தடைபோடும் முயற்சியாக மணல் பரப்புக்கு வந்த ரங்கநாயகி அமர்ந்திருந்தாள். அவள் சிந்தனையோ கட்டறுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது.குமரன் வந்ததையோ, புரவியை மரத்தில் கட்டிவிட்டு அவளை நெருங்கியதையோ அவள் உணர்ந்து கொள்ளவில்லை. என்ன ரங்கா ஒரு மாதிரியாக இருக்கிறாய்? இராகம் பாடலாமா? என்று சிரித்தபடி கேட்டபோதுதான், திடுக்கிட்டுத் தலையைத் திருப்பினாள். அவள் கண்களில் முத்தாகிப் பளபளத்த கண்ணீர்த் துளிகள்!


ஏன்...... ஏன் இந்தக்கலக்கம்?


இத்தனை நாட்களாக அவனுடன் அருகே அமர்ந்து பாடி மகிழ்ந்தவள் இன்று அவனைக் கண்டதும் திரண்டு வந்த கண்ணீரை மறைக்க முயன்றவளாய் சரேலென எழுந்து தலை வணங்கி நின்று பிரபு! தாங்கள் கோட்டைத்தளபதி என்று தெரியாமல் இத்தனை நாட்கள் தகுந்த மரியாதை செலுத்தாமல் அபச்சாரம் செய்து விட்டேன். சிறுமி என்னை மன்னிக்க வேண்டும் என்றாள் அவள் கேலிபண்ணுகிறாளா.... அல்லது உண்மையாகத்தான் சொல்லுகிறாளா?


தொடரும்......

தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:19 pm

சிறுமி என்னை மன்னிக்க வேண்டும் என்றாள் அவள் கேலிபண்ணுகிறாளா.... அல்லது உண்மையாகத்தான் சொல்லுகிறாளா?

இனி...

குறுநாவல் பகுதி 10

[You must be registered and logged in to see this image.]


ஏதேது என்னை அரசனாக்கினாலும் ஆக்குவாய் போலிருக்கிறது.... நான் கோட்டைத் தளபதியா?... இந்தத் தவறான தகவலை யார் உனக்குத் தந்தது? நான் ஏற்கனவே என்னைப் பற்றிய விபரங்களை உனக்குக் கூறியிருக்கிறேனே.... நம்பவில்லையா?


நம்பியதால்தான் இவ்வளவு துன்பம் அனுபவிக்கிறேன். நீங்கள் கூறியதுபோல் சாதாரண வீரராக இருந்தால் என் சந்தோஷத்துக்கு கரையேது? அப்பாதான் எனக்கு எடுத்துச் சொன்னது.... நீங்கள் கலிங்க விஜயவாகு சக்கரவர்த்தியின் பட்டத்து இராணியின் மூத்த சகோதரியின் புதல்வர்.. உதயகுமரன் .. கோட்டைப்புதிய தளபதி... அரச குலத்தினர்... இதையெல்லாம் நான் நம்பியவர் சொல்லவில்லை... எனது தந்தைதான் சொன்னார்...


அவள் கண்கள் கலங்கின.


ரங்கா அழாதே ... நான் சொன்னதை நம்பாமல் அப்பாவும் மகளும் துருவித் துருவி ஆராய்ந்திருக்கிறீர்கள்... நல்லதுதான் அதை ஒருபுறம் வைத்துவிட்டு உன்னோடு சில விடயங்களைப் பேசி நான் சில முடிவுகளை எடுக்கவேண்டும். உட்கார் அவள்


உட்காராமல் நின்றுகொண்டே அடம்பிடிப்பதைக் கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டு, குரலில் போலியாக ஒரு கடுமையைக்காட்டி நான் தம்பன் கோட்டைத்தளபதி உத்தரவிடுகிறேன்... நீ வழமைபோல் இருக்கும் இடத்தில் போய் உட்கார்... என்றான். அவன் குரலில் கடுமை போலியானது என்று உணரும் நிலையில் அவள் இருக்கவில்லை. நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தவள், அவன் உத்தரவிற்குக் கட்டுப்பட்டாள்! ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.


உதயகுமரன் அவ்விடத்தில் வந்தமர்ந்து சிறிது நேரம் ஆசையோடு அவளைப் பார்த்தான். அவள் தலைகுனிந்து கொண்டாள். அவன் ஒரு முறை தொண்டையைக் கனைத்து அடைப்பை அகற்றிவிட்டு கனிவு ததும்பும் குரலில்....ரங்கநாயகி நீ பாட்டுப்பாடி என்னை மகிழ்விப்பது மட்டும் தானா? உன் மனதில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாயா? என்று கேட்டான். பதிலேயில்லை... மௌனமாக இருந்தாள்.


என்னோடு கோபத்தில் இருப்பதால் நீ பேசமாட்டாய் அப்படித்தானே... சரி நான் பேசுகிறேன் நீ கேள்... ரங்கநாயகி ! நான் உன்னை ஏமாற்ற எண்ணியவனுமல்ல, எண்ணுபவனுமல்ல... இதை முதலில் நீ நம்பு...


எனக்கது தெரியாதா என்ன? அவள் மனதுக்குள் சொன்னாள்.


உண்மையில் உன் இனிய கானத்தைக்கேட்டுத்தான் உன்னோடு பேசவிரும்பினேன்.... பிறகு உன் கானத்தைவிட உன்னைப் பார்க்கலாமே என்று வந்து உன்னைச் சந்திக்கத் தொடங்கினேன். என்னையறியாமலே நான் ஒவ்வொரு மாலைப் பொழுதுக்கும் ஏங்கத் தொடங்கினேன். என்னையே நான் கேட்டுப்பார்த்தேன்... எது என்னை இங்கு நாளாந்தம் இழுத்துவந்து உன்காலடியில் சேர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்தேன்.... பாடலை விட, சிலைபோன்ற உடல் அதை நான் சேர வேண்டும்... அதற்குள் நடமாடும் உயிர்.... அதோடு நான் கலக்கவேண்டும் என்ற ஆசைதான் காரணம் என்று தெரிந்து கொண்டேன்... அதுமட்டுமல்ல இசை மீது எனக்கிருந்த ஆவலுக்கு நீ ஒரு வழிகாட்டி என்றும் ஆசான் என்றும் கருதினேன்.வார்த்தைகளை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவள் அப்போதும் சிறுபிள்ளைபோல் குனிந்த தலை நிமிராமல் மண்ணைச் சுட்டுவிரலால் கிளறிக்கொண்டேயிருந்தாள்.


அரச குலத்தவர்கள் வேறு குலத்தில் பெண் கொள்ள முடியாது என்று அப்பா சொன்னார். அவள் குரல் தளம்பியது. தலையை நிமிர்த்தி ஆற்றுக்காகத் திரும்பியவள் ஒரு கையால் கன்னங்களில் வடிந்த கண்ணீரை மாறி மாறி துடைத்துக்கொண்டாள்.


நியதி அப்படித்தான்... நான் மறுக்கவில்லை. ஆனால் நாம் நியதிகளை மாற்றலாமல்லவா?

அவள் தலை அவன் பக்கம் வேகமாகத் திரும்பியது. அவள் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு பளிச்சிட்டது.


உண்மைதான் நமக்கு வேண்டுமென்றால் நியதியை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்... மாற்றிக்கொள்வோம்.


அதெப்படி ...? அவளுக்கு ஒரு நம்பிக்கை உதயமானாலும், சந்தேகம் அதைத் திரைபோட்டு தடுக்கப்பார்த்தது.


வழிவரும்...! நான் ஒரு பயணம் செல்ல வேண்டியிருக்கிறது. ம்கூம் பயப்படாதே....... அதிக தூரமில்லை... ஒரு மூன்று நான்கு நாளாகும்... அதற்கு முன் உன்னிடம் சில வேண்டுகோள்...

என்ன? என்பதுபோல் அவனைப்பார்த்தாள்.


உனக்குத் தளபதி உதயகுமரனைப் பிடிக்குமா? சாதாரண வீரன் குமரனைப் பிடிக்குமா?

ஏன் தயக்கம் சொல்... உன்னைக் கரம்பிடிப்பவன் ஒரு சாதாரண வீரனாக இருந்தாற் போதுமா? இல்லை தளபதியாகத்தான் இருக்க வேண்டுமா? அவள் விழியில் வழிந்த நீரைத் துடைத்துவிடத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.


இதுவரையில் எனக்குத் தளபதி யாரென்றே தெரியாது. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படவே மாட்டான். எனக்குத் தெரிந்தவர் ஒருவர்தான்! இதோ இந்த மண்ணில் என்னோடு கூடஇருந்து பாடி மகிழ்ந்த அந்த கோட்டை வாலிபனைத்தான் என் மனதுக்குப் பிடிக்கும்


அப்படியென்றால் சில சமயம் நாம் வேறிடம் சென்று வாழ வேண்டிவரும்.. நம் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிவரும்... நம் சுற்றஞ் சூழலை மறக்க வேண்டிவரும் நீ ... தயாரா?


அவள் குழப்பமாகப் பார்த்தாள்.


அவசரமில்லை உனக்குச் சில நாள் அவகாசமிருக்கிறது. சிந்தித்துப்பார்.. நான் நாளை மறுநாள் குதிரைப்படையுடன் சதுர்வேதமங்கலம் போகிறேன்.. நான்மறை ஓதும் அந்தணர் வதியும் அந்த ஊரில் வேதாகம மகாநாடு ஒன்று நடக்கப்போகிறது. இந்து மத அறிஞர்களுக்கும் இந்து கலாசார நிபுணர்களுக்கும், யோகிகள் மடாதிபதிகளுக்கும், கோட்டை தளபதிகளுக்கும் இந்துமத கலாசார அறிஞர் பெருமக்கள் பலருக்கும், ஊர் முக்கிய பிரமுகர்களுக்கும் ஓலைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் மகாநாட்டிற்கு கலிங்க மன்னர் விஜயவாகு அவர்களே தலைமை தாங்குவார் எனக் கூறப்பட்டிருக்கிறது. எனவே நான் போகின்ற இந்தப் பயணத்தில் மன்னரைச் சந்திக்க நிறைய வாய்ப்புக் கிடைக்கும். நான் அவரைச் சந்தித்துப் பேசினால் நம் திருமணத்திற்கு சம்மதம் கிட்டவே
செய்யும் என்பது என் எதிர்பார்ப்பு. இதை உன்னிடம்சொல்லி விடைபெற்றுப்போகவே நான் ஓடி வந்தேன்.
ஒரே மூச்சில் உணர்ச்சியோடு பேசிமுடித்தான். அவன் பேசிக்கொண்டு போகும்போது அவன் முகத்தில் ஓடிய உணர்ச்சி மாற்றங்களையும், வார்த்தைகளில் எதிரொலித்த நம்பிக்கையையும் கண்வாங்காமல் அவள் உள்வாங்கிக் கொண்டிருந்தாள். செவிகள் அவன் வார்த்தைகளுக்குக் கூர்மையாக இருந்தன., கண்கள் அவன் முகத்தை மொய்த்துக் கொண்டிருந்தன.


என்னை மறந்து விடமாட்டீர்களே?
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:19 pm

என்னதான் நம்பிக்கை மனதில் ஊறினாலும் அவள் ஒருபெண்தானே?

என்னை இன்னுமா நம்பவில்லை? அவன் குரலில் தெரிந்த வேதனை அவளை உசுப்பியது.


இல்லை... உங்களை நம்பாமலில்லை... பரிபூரணமாக நம்புகிறேன்.அவசரமாக மறுத்தாள். என்ன இருந்தாலும் நான் ஒரு பெண்தானே... உயர நிற்கும் நீங்கள்...


பயப்படாதே... சங்கீதத்தில் இணைந்த எங்கள் உறவை யாராலும் பிரிக்கமுடியாது. தைரியமாக இரு... நான் நல்ல சேதியோடு திரும்பி வந்து உன்னைச் சந்திக்கிறேன்.


விரைந்து குதிரையில் ஏறியவன், அவளைப்பார்த்து புன்னகைத்துவிட்டு குதிரையை திருப்பிக்கொண்டு அதை ஓடவிட்டான்.


அவன் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தவள் மனது மகிழ்சியால் நிறைந்திருந்தது. அவனது மனக்கருத்தை அவன் சொல்லக்கேட்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மெல்ல இரு கைகளையும் மார்பின்மேல் வைத்து அழுத்தி கண்களை மூடி அந்தமகிழ்ச்சியை ஆத்மார்த்தமாக அனுபவித்துக்கொண்டாள்.திடீரென கண்களை விழித்து அந்த நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டவள் மனதில், ஐயோ அப்பாவும் அத்தையும் தேடப்போகிறார்களே, என்ற எண்ணம் தோன்றியது. எட்டிக் குதித்து நடை போட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

தொடரும்......


தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:24 pm

திடீரென கண்களை விழித்து அந்த நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டவள் மனதில், ஐயோ அப்பாவும் அத்தையும் தேடப்போகிறார்களே, என்ற எண்ணம் தோன்றியது. எட்டிக் குதித்து நடை போட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

இனி...

குறுநாவல் பகுதி 11

[You must be registered and logged in to see this image.]


தம்பன் கோட்டையை விட்டுப்புறப்பட்ட அந்த அணி சதுர்வேத மங்கலம் என்ற கந்தளாயை நோக்கி நகர்ந்தது. தளபதியைப்போல வீரர்களும், குதிரையை ஓட விரட்டாமல், சிறு பாய்ச்சலிலேயே செல்ல அனுமதித்தனர்.


பயணம் சேனை வழிக்கல்வழியூடாகச் செல்லலாயிற்று. சேனைவழிக்கல்வழி சதுர்வேத மங்கலத்திற்கும் (கந்தளாயிற்கும்) தம்பலகாமத்திற்கும் இடையில் இரு ஊர்களையும் இணைக்கின்ற நெடுஞ்சாலையாகும். இரண்டு ஊர்களுக்கும் இடையே 24 மைல் தூரம் அடர்ந்த காடு ஆகும். இந்தப் பெரும் வனத்தை ஊடறுத்து அமைவதுதான் இந்த ஒரே பாதையான சேனைவழிக்கல்வழி. பொதுவாக இது மாட்டு வண்டிப்பாதையாகவே அமைந்திருந்தது.
இரண்டு ஊர்களையும் இக்கானக நெடுஞ்சாலை இணைத்து நின்றதால் இரண்டு ஊர்களதும் அரச நிர்வாகம் இவ்வழியின் இரண்டு மருங்குகளையும் இரு ஊரவர்க்கும் பங்கு வீதம் அளந்து கொடுத்து சுமார் ஐந்து முழ அகலத்திற்கு மரம் செடி கொடிகளை வெட்டியழித்து துப்பரவு செய்யப்பணித்திருந்ததால் இந்தப் பெரும் வனத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய எட்டு முழத்திற்கும் (25 அடிவரை) அதிக அகலமான இப்பாதைவழியில் பயணிகள் அச்சமின்றிப் போகக்கூடியதாக இருந்தது.காலத்திற்குக் காலம் வழியின் இருமருங்கும் ஐந்து முழ அகலம் என்று காடு வெட்டி துப்புரவு செய்திருந்தாலும் பாதையை ஒட்டி நின்ற பாலை, இலுப்பை போன்ற விருட்சங்களை விட்டு வைத்தும் இருந்தனர். எண்திசையும் கிளை விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிழல் தந்தவண்ணம் இம்மரங்கள் இருந்தன.வழியில் இத்தகைய மரங்கள் இரண்டு ஒன்றாகி இருந்த இடத்தில் நிழல்போதுமானதாக இருந்ததால் ... குதிரைகளை ஓரமாகக் கட்டிவிட்டு அத்தனைபேரும் அமர்ந்து, கொண்டுவந்திருந்த புளிச்சாதத்தை சாப்பிட்டு சில கணங்கள் இருந்துவிட்டுப் புறப்பட்டனர்.வேறெங்கும் நிற்காமல் சதுர்வேதமங்கலத்தை (கந்தளாய்) வந்தடைந்த உதயகுமரனையும், குதிரைப்படைவீரர்களையும் மகாநாட்டு நிர்வாகிகள் வரவேற்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விருந்தினர் விடுதியில் தங்கவைத்து, உடலில் படிந்திருந்த தூசியையும், வியர்வையையும் அகற்ற குளியலுக்கு ஏற்பாடு பண்ணிவிட்டு, மதிய உணவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிச் சென்றனர்.நாட்டின் நாலா புறமுமிருந்து கோட்டைத்தளபதிகள், படைவீரர்கள் என்று மட்டுமல்லாது மடாதிபதிகள், சமய அறிஞர்கள் வேதவிற்பன்னர்கள், யோகிகள், சமயப் பிரமுகர்கள், சைவப் பெருமக்கள் என்று திரள் திரளாய் வந்து சதுர்வேத மங்கலத்தை நிறைத்துக்கொண்டிருந்தனர். அரோகரா ஒலிகளும் ,ஓம் உச்சாடனங்களும் எங்கும் ஒலித்தவண்ணம் இருந்தன.அன்று மதியத்திற்கு பின்னர் பொலன்னறுவையிலிருந்து கலிங்க விஜயவாகு மன்னர் நால்வகைச் சேனைகளும் புடைசூழ, வாத்திய கோஷங்கள் முழங்க, அமர்க்களமாக சதுர்வேதமங்கலம் வந்தடைந்தபோது, உதயகுமரனும், ஏனைய தளபதிகள், அதிகாரிகளுடன் சென்று வணக்கம் செலுத்தினான்.அன்று மாலையே விழா ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால்... மன்னர் அதிகளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்காமல் ஒரு சில முக்கியமான கோட்டைகளின் தளபதிகளுடன் மட்டும் கலந்துபேசினார். அவர் உதயகுமரனின் முறை வந்தபோது, தம்பன் கோட்டையின் குறிப்புக்களைச் சொல்லி விபரங்கேட்டபோது, அவன் அசந்தேபோனான். இத்தனை தெளிவாக கோட்டையின் மூலைமுடுக்குகள், பாதாள அறைகள், களஞ்சிய சாலை... சிறைக்கூடம் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிராரே... என்று வியந்தான். மறுகணம் இல்லையென்றால் பௌத்தர்களின் எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி செய்யமுடியுமா என்று கலிங்கவிஜயபாகு சக்கரவர்த்தியின் ஆட்சிவண்ணத்தை மெச்சவும் செய்தான்.வேளையானதும் மேள தாள சீர்களுடன் அரசர் மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு இலங்கையிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தும் கூட பல பாகங்களிலிருந்தும் தவசிரேஷ்டர்கள், தத்துவ ஞானிகள், யோகிகள், வேதாகமப்பண்டிதர்கள், அரச பிரதிநிதிகள், தளபதிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் என்று வந்திருந்து மண்டபத்தை நிறைத்திருந்தவர்கள் மன்னரைக் கண்டதும் எழுந்து நின்று ஜயகோஷம் எழுப்பி வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மன்னர் தமக்கான சிம்மாசனத்தில் அமர்ந்ததும் சபையும் அடங்கியது.


விழா ஏற்பாட்டாளர்கள், சம்பிரதாயபூர்வமாக, மன்னரை விழித்து, தலமை தாங்கி அம்மாநாட்டை ஆரம்பித்து வைக்குமாறு அவரிடம் பணிவாக வேண்டிக் கொண்டனர்.


கலிங்க விஜயபாகுச் சக்கரவர்த்தியும் எழுந்து, சபைக்கு வணக்கம் செலுத்திவிட்டு, குத்துவிளக்கேற்றி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். ஆத்திசூடி பாடப்பட்டதும், மன்னர் மாநாட்டுப் பேராளர்கள் மத்தியில் பேசத்தொடங்கினார்.


கலீரென கம்பீரமான குரலில் பேசத்தொடங்கினார் மன்னர். சபை மகுடியில் கட்டுண்ட நாகம்போல கவனம் திரும்பாமல் செவிமடுக்கலாயிற்று...
தொடர்ந்து ஒவ்வொருவராக முறையெடுத்துப் பேசலாயினர். சமயஅறிஞர்கள், யோகிகள், வேதவிற்பன்னர்கள் என்று தாங்கள் கடைப்பிடிக்கும் தெய்வக் கொள்கைகளை விளக்கி உரையாற்றலாயினர். எல்லோரது பேச்சும் மன்னர் குறிப்பிட்ட உபநிடதக் கொள்கைகளை அனுசரித்துப் போவதாகவே அமைந்தன. இவ்வாறாக ஆரம்பித்த வேதாகம மாநாடு மூன்று நாட்களாக இடம்பெற்றன. இடையிடையே சமயக் கருத்துக்களை விளக்கும் நாடகங்கள், நடனங்கள், தெருக்கூத்துக்கள், சங்கீதக்கச்சேரிகள் என்று நாளுக்கு நாள் நிகழ்ச்சிகளால் மாநாடுகளை கட்டிக் கொண்டிருந்தது.
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:24 pm

உதயகுமரனுக்கு மனம் எதிலும் ஓடவில்லை. அவன் சிந்தனையெல்லாம் குடமுருட்டியாறு, வெண்மணற்பரப்பு, ரங்கநாயகி ஆகியவற்றிலேயே நிலைத்திருந்தது. எப்படியாவது மன்னருடன் பேசி அவளை மணம்முடிக்க அனுமதி பெறவேண்டும் என்ற உறுதி அவனுக்குள் எழலாயிற்று.


மாநாட்டு நிகழ்வுகள் களியாட்டங்களுடன் நிறைவு பெற்றன.... சகலரும் மாநாட்டைப் பற்றியும், அதை ஏற்பாடு செய்த மன்னரைப்பற்றியும் புகழ்ந்தபடியிருந்தனர். அரசரும் மறுதினமே ராஜதானி திரும்ப ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த கோட்டைத் தளபதிகள், அயல்நாட்டு பிரதிநிதிகள், பிரமுகர்கள் சக்கரவர்த்தியை வணங்கி சந்தித்து விடைபெற்று வணங்கிக் கொண்டு ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினார்கள்.தன்பங்கிற்கு விடைபெற உதயகுமரன் அவசரப்படவில்லை. மன்னருடன் ஆறுதலாக ரங்கநாயகி பற்றி காதில் போட்டு எப்படியாவது காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிடவேண்டும் என்பதில் அவன் முனைப்பாக இருந்தான்.உதயகுமரனும் சிலவீரர்களும், இளஞ்செழியனும் வந்து அரசரை வணங்கி நின்றார்கள். அமர்ந்திருந்த அரசர் உப்பரிகைச்சாரளத்தின் பக்கமாக உதயகுமரனை அழைத்துச் சென்றார். அவர் அப்படிச் செய்தது உதயகுமரனின் வீரர்களுக்கு பெருமையாக இருந்தது. தங்கள் தளபதி சக்கரவர்த்திக்கு நெருங்கியவர் என்பதில் அவர்களுக்கு ஏதோ உயர்ந்த எண்ணம். உதயகுமரா....... தளபதி தலைநகர் வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. என்றார்.


உதயகுமரனுக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது. அதே சமயம் சந்தேகமாகவும் இருந்தது.


தொடரும்......


தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:28 pm

உதயகுமரா....... தளபதி தலைநகர் வந்திருக்கிறார்என்ற தகவல் கிடைத்தது. என்றார்.
உதயகுமரனுக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது. அதே சமயம் சந்தேகமாகவும் இருந்தது.


இனி...

குறுநாவல் பகுதி 12

[You must be registered and logged in to see this image.]

அவர் படுக்கையை விட்டெழ ரொம்பநாளாகும் என்றார்களே பிரபு

உண்மைதான்.... ஆனாலும் தளபதி தம்பன் நினைத்தால் எமனையே புறமுதுகிட வைத்து விடுவார் என்பதல்லவா பிரபலம், அவனை ஒருமுறை உற்றுப்பார்த்தவர் தொடர்ந்தார்.


அவருக்குப் பரிபூரண சுகம் இல்லைதான். ஆனாலும் அங்குள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் அவர் உடல்நிலைபற்றி மலையாளத்தில் நல்ல அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள்... அதைக்கேட்ட இவர்... எனக்கிப்போ பரவாயில்லை என்றும் கலம் ஏறி வந்துவிட்டார் போலிருக்கிறது..... நானும் அவரைக் கண்டபிறகுதான் உண்மையை அறிந்து கொள்ளமுடியும்.தளபதி குணமாகி வந்து விட்டார் என்ற சேதி உறைத்ததும் உதயகுமரனின் முகத்தில் ஏமாற்றம் படர்ந்து மறைவதை மன்னர் அவதானித்தாரோ இல்லையோ.... அவர் முகத்தில் இள நகை படர்ந்தது.


தளபதி தலைநகர் திரும்பியதற்கென்ன அங்கேயே அவருக்கு நிறைய அலுவல்கள் காத்திருக்pன்றன. தம்பன் கோட்டைப் பொறுப்பைவிட மேலான பொறுப்புக்கள் அவருக்கு இருக்கப் போகின்றன. தம்பன் கோட்டை தொடர்ந்தும் உன் பொறுப்பில்தான் இருக்கும். என்றார்... அவர் சிரிப்பு அகன்றது. அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க முனைவது அவருக்கு புரிந்தது... ஆனாலும் அவனைப்பேச அனுமதிப்பதாகக் காணோம்.சரி சரி நீ எப்போது கிளம்பப்போகிறாய்? என்று கேட்டார்.

நாளைய பொழுது புலர்ந்து வரும் வேளையில் புறப்பட ஆயத்தம் பண்ணச்சொல்லி கட்டளையிட்டிருக்கிறேன் பிரபு


நல்லது நானும் நாளையே கிளம்புகிறேன். அதோ இரதத்தையும் தயார்படுத்துகிறார்கள். என்று சுட்டிக்காட்டினார். தங்கமாய் மின்னிய அவரது இரதம் கழுவப்பட்டுக்கொண்டிருந்தது. எனக்கு மட்டுமல்ல, உனக்கும் ஓய்வு வேண்டும். விடைபெற்றுக் கொள். என்று கூறிவிட்டு உரையாடல் முடிந்து விட்டது என்பது போல் நின்று கொண்டிருந்த இடத்தைவிட்டு ஆசனத்திற்காக நகர முற்பட்டார் சக்கரவர்த்தி.உதயகுமரனுக்கோ முகம் வாடிவிட்டது. இனி மன்னனுடன் பேசமுடியாது. வந்தவேலை நிறைவேறப்போவதுமில்லை. ரங்கநாயகியிடம் நான் என்ன சொல்வேனோ?... இதை நினைக்கும்போதே அவன் முகம் கறுத்து வாடியது.


வேறு வழிதெரியாது இயந்திரம்போல் வெளியேற, திரும்பி அவன் ஒரு சில அடிகளே வைத்திருப்பான்.

உதயகுமரா...! என்று அழைத்தார். அவன் இரண்டே எட்டில் அவர் அருகில் நின்றான். நீ வாலிபன், துடிப்புக்கள் அதிகமான பருவம், அதனால்தான் நான் சொல்ல வேண்டியிருக்கின்றது. நீ அரசகுலத்தினன் என்பதையோ, அரசகுலத்தவர் வேறு இனங்களில் பெண் கொள்ளமுடியாது என்பதையோ மறந்துவிடாதே... நீ ஜாக்கிரதையாக நடந்துகொள்... நீ சிந்தித்துப்பார்.... மக்கள்.... நாடு... இதை முன்நிறுத்தியே முடிவு எடுக்கவேண்டியவர்கள் அரசகுலத்தினர். நீ முன்னேற்றம் அடையவேண்டும், பேர் புகழ் ஈட்டவேண்டும், என்பதுதான் என்னுடையதும் உன் அன்னை இரத்தினாவதி தேவியினதும், உன் சிற்றன்னையினதும் எதிர்பார்ப்பு....எங்கள் எதிர்பார்ப்பைச், சிதைத்துவிடாதே... அரசகுலத்தவருக்கு சொந்த விருப்பு வெறுப்பு இருக்கமுடியாது....இருக்கவும் கூடாது...அரசர் பேசப் பேச சம்மட்டியால் தலையில் அடிப்பது போல் இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. என்னைப்பற்றித் தகவல் அவருக்கு கிடைத்திருக்கிறது.!


நீ போகலாம்... என்று உள்அறைக்குச் சென்றுவிட்டார் மன்னர். அவனால் ஓரடி கூட எடுத்து வைப்பது சிரமமாக இருந்தது. தம்பன் கோட்டையில் அவன் கட்டியது வெறும் மணல் கோட்டைதானா? மன்னன் கூறிய வார்த்தைகள் அவன் காதில் நாராசம் போல் பாய்ந்தன. அப்படியானால் ரங்கநாயகி...? அவளை மறந்துவிடவேண்டியதுதானா?தளபதி தலைநகர் வந்துவிட்டார் என்றதுமே அவனுக்கு ஒரு வகையில் ஏக்கம் பிடித்துவிட்டது. அப்படியென்றால் தம்பரிடம் கோட்டையைப் பொறுப்புக் கொடுத்துவிட்டு தலைநகருக்கு கிளம்பவேண்டியிருக்குமே... அப்படியானால் ரங்கநாயகியை எப்படி சந்திப்பது? என்ற ஏக்கம்அவனுக்கு.... மறுகணமே ஒரு நப்பாசையும் உதித்தது. தம்பரிடம் கோட்டையை ஒப்படைத்துவிட்டு பொறுப்பகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ரங்கநாயகியுடன் இந்தியா கிளம்பிவிடலாமா? என்று ஆசை கிளம்ப, மன்னரிடமே அதை சொல்லிவிடுவது என்று சிந்திக்க தலைப்பட்டான்.ஆனாலும் எந்த சிந்தனைகளும், திட்டங்களும் மன்னரின் முன்னிலையில் எடுபடவேயில்லை.... மாறாக அரச குலத்தவர் வேறு இனங்களில் பெண் கொள்ளமுடியாது... நீ ஜாக்கிரதையாக நடந்துகொள் எங்களை ஏமாற்றிவிடாதே, என்ற மன்னரது வார்த்தைத் தொடர்கள் அவன் நாடி நரம்புகளை எல்லாம் ஒடுங்கச் செய்துவிட்டன.அதுமட்டுமல்ல மன்னரது ஆற்றல்மீது அவனுக்கேற்பட்டுள்ள மலைப்பும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. என் ஒவ்வொரு அசைவும் அவருக்கு தெரிந்திருக்கிறது. அவரை விஞ்சி இந்த இராச்சியத்திலும் சரி, நாட்டிலும் சரி எதுவும் நடந்துவிடமுடியாது என்ற எண்ணம், அவனுக்கு அரசர் மீது இருந்த மதிப்பைப் பலமடங்கு உயர்த்தி விட்டது.எனினும் தன் வாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது அவனுக்குக் கோபத்தைத் தந்தது.... தன்னால் நினைத்தபடி எதையும் செய்துவிடமுடியாது என்ற எண்ணம் தலைதூக்கியபோது ஆத்திரமல்ல இயலாமை அவனை மேற்கொண்டது.நடைப்பிணமாக வீரர்களுடன் விருந்தினர் விடுதிக்குத் திரும்பினான் உதயகுமரன். அவன் மனதில் உற்சாகம் அற்றே போய்விட்டது.தான் எடுக்கப்போகும் முடிவால் யார் யாருக்கு என்ன நடக்கக் கூடும் என்று சிந்தித்துப்பார்த்தே களைத்துப்போனான். வழியில் யாருடனும் எதுவும் பேசவில்லை. அவனது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன் அவனைக் குழப்பவில்லை. அவன் குதிரைகூட துள்ளல் நடையில்தான் போய்க் கொண்டிருந்தது. எஜமானைக் குழப்ப அதற்கும் இஸ்டம் இருக்கவில்லை.அன்று பூரணை முழுநிலவு நாள்! ஏற்கனவே அடிவானில் தங்கத்தாம்பாளம் போல் சந்திரன் அடிவானில் உதயமாகிக் கொண்டிருந்தான்.

தொடரும்......

தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:33 pm

அன்று பூரணை முழுநிலவு நாள்! ஏற்கனவே அடிவானில் தங்கத்தாம்பாளம் போல் சந்திரன் அடிவானில் உதயமாகிக் கொண்டிருந்தான்.

இனி...

குறுநாவல் பகுதி 12


[You must be registered and logged in to see this image.]

ரங்கநாயகி இரண்டு மூன்றுநாட்கள் சரியாகச் சாப்பிடவும் இல்லை தூங்கவும் இல்லை. உதயகுமரன் சொன்னவைகளையே மனதுக்குள் இரைமீட்டு முடிவெடுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.உதயகுமரன் தனக்காக, தன் பதவி, குடும்பம், உற்றார்உறவினர் ஏன் அவனுக்கு கிடைக்கக்கூடிய எதிர்காலத்தையே உதறித்தள்ள முன்வந்துவிட்டான் என்றால், அவனது அன்பு எவ்வளவு உறுதியானது உண்மையானது என்று எண்ண எண்ண அவன் மனதில் உயர்ந்து கொண்டே போனான்.அதே நேரம் தானும் அதற்கீடாக சகலதையும் சகலரையும் துறந்து அவனே தஞ்சம் என்று அவன் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொண்டு அவனோடு சென்றுவிடவேண்டியதுதான். அதிலும் அவளுக்கு முடிவெடுக்கச் சிரமமாக இருந்தது.

தன்னை வளர்த்து ஆளாக்கி அறிவூட்டி... தன் கடைசிக் காலத்துக்கென தன்னையே நம்பியிருக்கும் தன் தந்தையை விட்டுச் செல்வது துரோகம் ஆகாதா? யாரோடும் அவளால் இதுபற்றி கலந்து பேச முடியவில்லை. அவளுக்கு நெருங்கிய சினேகிதி என்று யாரும் இருந்ததில்லை. குழப்பம் கூடக் கூட பசி குறைந்தது.வயிறு வெறுமையாக நித்திரை தொலைந்தது. இதற்கிடையில் நாளை மறுநாள் அவர் என்னைச் சந்திக்கும்போது என்ன கூறப்போகிறாரோ... நான் என்ன சொல்லப்போகிறேனோ? என்ற பதைபதைப்பு அவளுக்குள் உருவாகத் தொடங்கிற்று.இதுவரைக்கும் தன்னைப்பற்றியோ, தன்வாழ்க்கை எப்படி அமைந்திருக்கவேண்டும் என்பதைப் பற்றியோ கொஞ்சமும் கவலையின்றி திரிந்தவளுக்கு, எல்லாம் அப்பாவுக்கு தெரியும்... அவர் பார்த்துக் கொள்வார்... என்ற முனைப்பில் வாழ்ந்தவளுக்கு... இப்போது எல்லாம் ஒரே சுமையாகத் தெரிந்தது. இதைவிட குடமுருட்டியாற்று பக்கம் போகாமல் இருந்திருக்கலாம்.... அவரைக் காணாமல் இருந்திருக்கலாம்.... இந்த உறவை தொடங்காமலே இருந்திருக்கலாம் என்ற சிந்தனைகூட
களைத்துப்போன அவள் மனதில் இருந்து வந்தது.


கோணேஸ்வரா நான் சிறு பெண். என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. நீயே ஒரு வழிகாட்டு. அதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு, அத்தையை துணைக்கு கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போய்வந்தாள்.சதுர்வேத மங்கலத்தில் படைவீரர்களுக்குள் ஒரு விவாதமே நடந்து கொண்டிருந்தது. நாளை சுட்டெரிக்கும் கோடை வெயில் பயணமா? இன்றேல் இதோ வெண்ணிலவு பகலாய்க் காயும் குளிரான இரவில் புறப்பட்டு தம்பன் கோட்டையில் ஆறுதலாக ஓய்வெடுப்பதா?

சதுர்வேத மங்கலத்தின் விழா பரபரப்பு, சந்தடி, இரைச்சல்கள் சரியாக ஓய்வெடுக்க அவர்களை அனுமதித்திருக்கவில்லை. எவ்வளவு விரைவாகத் தம்பலகாமம் செல்லமுடியுமோ அவ்ளவுக்கு அதிகமாக ஓய்வெடுக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் இறுதியில் வந்து சேர்ந்தார்கள்.இதற்கு தளபதியின் ஒப்புதல் வேண்டுமே, இளஞ்செழியனைப் பார்த்தார்கள். அவனுக்கு தளபதியைக் குழப்ப விருப்பமில்லை. யோசித்தான்....இவர்கள் சொல்வதுபோல் பயணத்தை விரைவுபடுத்தினால், அவரும் அவரது முடிவைப்பற்றி ரங்கநாயகி அம்மையாருடன் சீக்கிரம் பேசி அவரது குழப்பத்திற்கெல்லாம் முடிவு கட்டலாம் அல்லவா?... இளம் பராயத்து நண்பனான அவனுக்கு உதயகுமரன் ரங்கநாயகி பற்றி தன்னுடன் அதிகம்பேசாதது குறித்துக் கொஞ்சம் உள்ளூர மனவருத்தம்தான். இருந்தாலும் அவன் இத்தனை தூரம் கலங்கி நின்றதை அவன் அறியான்.ஆதலால்.... விரைவில் ஒரு முடிவைக் காண்பது நல்லது என்றே பட்டது. உதயகுமரனை நெருங்கினான். பிரபோ! (என்னதான் நண்பனாக இருந்தாலும் தளபதிக்குரிய மரியாதையை அவன் கொடுக்கத் தயங்கியதில்லை.) முழுநிலவின் வெளிச்சத்தில் பயணப்பட்டு சீக்கிரமே கோட்டையைப் போயடைந்தால் ஆறுதலாக ஓய்வெடுக்கலாம் என்று படையினரின் ஆசையாக இருக்கிறது. தங்கள் முடிவு?என்று இழுத்தான்.எதிர்காலம் பற்றியே முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் இது பற்றி என்னமுடிவெடுப்பது? எப்போதாவது போகத்தானே போகிறோம். இப்போது போனால் என்ன? பிறகு போனால் என்ன. இருந்தாலும் படைவீரர்களின் நலனில் அவனுக்கு இருந்த அக்கறை அவனுக்கு சரி அவர்களிஷ்டம் போல் புறப்படலாம் ஆயத்தமாகச் சொல் இரவு உணவான பிறகு ஒரு நாழிகையானதும் புறப்படலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டான்.தொடரும்......


தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:39 pm

எதிர்காலம் பற்றியே முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் இது பற்றி என்னமுடிவெடுப்பது?எப்போதாவது போகத்தானே போகிறோம். இப்போது போனால் என்ன? பிறகு போனால் என்ன.

இனி...

குறுநாவல் பகுதி 13

[You must be registered and logged in to see this image.]


தம்பன் கோட்டைப்பயணம் பின்னிரவுப்பொழுதில் புறப்பட்டது.
பிரயாணம் செய்யும் வழி காட்டுப்பாதையாகவும், இராக்காலமாகவும் இருந்ததால், தளபதிக்கு முன்பும் பின்பும் வீரர்கள் பாதுகாப்பாக வர அணிவகுத்தனர்.


வழமைபோல் உதயகுமரன் அதைவிரும்பவில்லை. தன்னைத் தொடர்ந்து சகலரையும் வருமாறு பணித்துவிட்டு தன் வெண்புரவியிலமர்ந்து அந்தக் காட்டு வழியால் முன்னால் குதிரை மீது போய்க் கொண்டிருந்தான்.அவன் பணித்ததுபோல குதிரைப் படைவீரர்கள் வந்து கொண்டிருந்தனர். அந்த 18 முழப்பாதையில் வெண்ணிலவு எறித்து ஒரு வெள்ளிப்பாதையாகவே மாறிவிட்டது. ஆயினும் வண்டில் வழிக்கு அண்மித்து கிளைபரப்பி நின்ற பெரு விருட்சங்களின் அடிகளில் இருள் சூழ்ந்து நின்றது. மணல் வழிகளில் குதிரைகள் நடந்துவருவதால் பெரிதாக அரவம் எழவில்லை.எனினும், குதிரையில் ஆட்கள் வருவதையறிந்த ஆட்காட்டிப் பறவைகள் அடிக்கடி கத்திக் கொண்டு பறந்து சென்றன. பின்னிரவின் ஆரம்பம் அது.... கரடிகளின் உறுமல்கள்.... காட்டு யானைகளின் பிளிறல்கள்.... ஒரு விசித்திரமான பின்னணியைக் கொடுத்துக் கொண்டிருந்தன.சமயங்களில் புலிகளின் கர்ச்சனைகள் அச்சத்தைக் கொடுத்தன. அதைக்கேட்டு குதிரைகளும் தயங்கின. ஆந்தையின் அலறலோடு கலந்து ஒலித்த நரிகளின் ஊளை ஒலி... மனதுக்குக் கிலி கொடுத்தது. அந்தச் சத்தம் இளஞ்செழியனுக்கு நல்லதாகப் படவில்லை. ஏக்கத்தோடு ஒலிப்பதுபோல் இருந்தது. தொடங்கிவிட்ட பயணத்தை நிறுத்தவும் தளபதி விரும்பமாட்டார். இளஞ்செழியனுக்கு சகுனங்களில் கொஞ்சம் நம்பிக்கையுண்டு.இதைப் போய் தளபதியிடம் கூறினால்... நரிகளின் சுபாவமே அது... நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்.என்று ஒதுக்கித்தள்ளிவிடுவான். மூன்றாம் ஜாமம் நெருங்கிக் கொண்டிருந்தது. உதயகுமரனின் மனம் பேதலித்துப் போய் இருந்தது.... தனது கவனத்தையும், அவன் உஷாரையும் இழந்து வெகு நேரமாயிற்று.... இடையே ஒருமுறை அவர்களைத் திரும்பிப் பார்த்தான்... அவர்கள் தூக்கக் கலக்கத்தில் சற்றுப் பின்தங்கியே வந்து கொண்டிருந்தனர்.அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டாலும் குறிப்பான ஒன்றிலும் அது குவிந்திருந்ததாகக் காணோம். வெறுமையாக அவன் முன்னால் பார்த்தபடி சென்று கொண்டிருந்தான். உண்மையில் அவனுக்காக அவன் புரவிதான் நடந்து கொண்டிருந்தது. சிந்தனையோ ரங்கநாயகியிலும், தாயிலும், அரசரிலுமாக மாறிமாறி அலைபாய்ந்து கொண்டிருந்தது.அவர்களுக்கு எதிரேயுள்ள ஒரு காட்டுப் பூமிக்கடியில் ஒரு மலைத்தொடர் உருவாகி, நேர்க்கோடு இழுத்தது போல் பூமிக்குமேல் ஒரு முழம் வரை உயர்ந்தும், சில இடங்களில் பதிந்தும் இருந்தது. இந்த மலைச்சரிவை கல் நெருக்கம் என்றழைத்து வந்தனர். அந்தக் கல் நெருக்கத்தில் ஒரு பாலைமரம் நன்கு கிளைபரப்பி வெட்டப்படாமல் பெரும் மலைபோல் வளர்ந்திருந்தது. அந்தப் பால் நிலவு வேளையிலும் அந்த மரத்தைச் சுற்றிலும் காரிருள் அப்பிக் கிடந்தது. அதன் இருளில் எவர் நின்றாலும் கண்டு கொள்ள முடியாதபடி இருந்தது.அந்த மரத்தின் கீழ் நின்று, அதன் தாழ்வான கிளையொன்றில் துதிக்கையைப் போட்டபடி கொழுப்பான தனியன் - காட்டுயானை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. உதயகுமரன் அவ்விடத்தை அண்மித்தபோது, ஆள்காட்டிப் பறவை ஒன்று உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டு பறந்தது. அதன் ஓசையில் விழித்துவிட்ட தனியன், நிலவு வெளிச்சத்தில் குதிரைமீது அமர்ந்து வரும் உதயகுமரனைக் கண்டது. மெல்ல மரத்தைச் சுற்றி ஒரு அடி முன்வைத்தது.சரியாகக் குதிரை மரத்தண்டை வந்ததும் வேகமாக முன்நகர்ந்த யானையைக் கண்டு குதிரை கனைப்பதற்குள் பாய்ந்து துதிக்கையை நீட்டி உதயகுமரனை அப்படியே உயரத்தூக்கியது. யானையின் துதிக்கையைத் தன் முகத்திற்கெதிரே கண்டபோதுதான் உதயகுமரன் விழிப்படைந்தான். இயல்பாகவே அவனது கை குறுக்காக ஓடி வாளுக்காக நீண்டபோது காலம் கடந்து விட்டது. ஒரு பிளிறலுடன் அவனை அப்படியே அலக்காகத் தூக்கி அவ்விடத்திலேயே நிலத்தில் அறைந்ததுடன் தன் முன்னங்காலால் அவன் வயிற்றிலும் மிதித்துவிட்டு காட்டின் மறு பக்கம் ஓடி மறைந்தது.

[You must be registered and logged in to see this image.]

யானையின் பயங்கர பிளிறலைக் கேட்ட வீரர்கள் நித்திரைக்கலக்கத்திலேயே குதிரைகளைத் திருப்பி சிறிது தூரம் ஓடிச் சென்று காட்டுக்குள் மறைந்து கொண்டனர்.சில மணித்துளிகள்வரை யாரும் சத்தம் எழுப்பவில்லை. அரவம் அடங்கி அமைதி நிலவியது. தமது குதிரைகளைக் கடிவாளத்தில் பிடித்தபடி வாளை உருவிக் கொண்டு முன்னேறினர்.அப்போதுதான் தளபதியின் வெண்குதிரை தனியே, தனது முன்காலால் தரையைத் தட்டி தலையை மேலும் கீழும் அசைத்தபடி நிற்பதைக் கண்டு கிலேசம் கொண்டனர். குதிரையின் அருகில் ஒருவர் கிடப்பது தெரிந்தது. கடவுளே என்று ஓலமிட்டுக் கொண்டு ஓடிவந்து பார்த்தனர்.


தளபதிதான்... தலையால் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. வயிற்றுப் பகுதி இடுப்புப் பட்டியுடன் சேர்ந்து நசுங்கிக் கிடந்தது.


பிரபோ என்று அலறிய இளஞ்செழியன் குனிந்து சுவாசம் வருகிறதா என்று பார்த்தான்.

பிரபு! போய்விட்டீர்களா பிரபு?, என்று அவன் ஓலமிட்டபோது உண்மையைப் புரிந்துகொண்ட வீரர்கள் வாய்விட்டு அலறத் தொடங்கினார்கள். வெகுநேரம் ஆயிற்று அவர்கள் அழுகை நிற்க.

தொடரும்......


தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:50 pm

பிரபு! போய்விட்டீர்களா பிரபு?, என்று அவன் ஓலமிட்டபோது உண்மையைப் புரிந்துகொண்ட வீரர்கள் வாய்விட்டு அலறத் தொடங்கினார்கள். வெகுநேரம் ஆயிற்று அவர்கள் அழுகை நிற்க.

இனி...

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் நிறைவுப்பகுதி

[You must be registered and logged in to see this image.]

தம்பன் கோட்டை அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. கலிங்கவிஜயவாகு மன்னரின் எருதுக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கோட்டைக்கான கொடி அரைக்கம்பத்தில் ஏற்றிவிடப்பட்டது. கொம்பு, குழல், தப்பட்டை, தாரை, பறை போன்ற வாத்தியங்கள் சோகமாக ஒலித்துக் கொண்டிருந்தன.அலங்கரிக்கப்பட்ட முன் மண்டபத்தில் தளபதியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசருக்கு சேதி அனுப்பப்பட்டு பதில் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.உதயனை, யானை போட்ட கல்லிலிருந்து விடிவதற்கு முன்னமே, தளபதியின் உடலை கோட்டைக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டான் இளஞ்செழியன்.(கல் நெருக்கக் காட்டுப்பகுதியைத் தற்போதைய அரசுகள் வெடிவைத்து அழித்து குடியேற்றங்களை உருவாக்கி வயல்பூமிகளாக மாற்றிக் கொடுத்திருக்கின்றன. காட்டில் இருந்த உதயனை யானை போட்ட கல் என்று காரணப்பெயராக அழைக்கப்பட்ட பகுதி இப்போதும் வயல்வெளிகளுக்கு மத்தியில் அதே பெயரோடு அறியப்பட்டு கிடக்கிறது)இளஞ்செழியன்தான் முதலில் சுயநினைவுக்கு வந்தவன். உடனடியாக பத்து வீரர்களை சதுர்வேதமங்கலம் நோக்கி அரசரிடம் எப்படியாவது சேதியைச் சொல்லி பதிலைக் கொண்டு வருமாறு பணித்துவிட்டு, இன்னும் பத்துப்பேரை கடும்விரைவில் கோட்டைக்குள் சென்று ஆயத்தங்கள் செய்யுமாறு பணித்து விட்டு, உதயகுமரனின் உடலை நன்கு போர்வையால் சுற்றி குதிரைமேல் கிடத்தி தம்பன் கோட்டை நோக்கி மீதி வீரர்களுடன் விரைந்தான்.தளபதி பொறுப்பை ஏற்ற சொற்ப காலங்களிலேயே அனைவரது அன்பையும் தன் எளிமையான பண்புகளால் கவர்ந்திழுத்திருந்த தளபதியின் சாவு பற்றி அறிந்ததும் எல்லோரும் வாய்விட்டுக் கதறினர்.


ஊர் மத்தியில் சேதி பரவி சாரி சாரியாக வந்து மரியாதை செலுத்திச் சென்றனர் மக்கள். சோகத்தின் மத்தியிலும் கண்ணீர் தாரையாக வடிந்து நிற்க படைவீரர்கள்மரியாதை அணிவகுத்து நின்றனர்.


ரங்கநாயகி விடிந்ததும் விடியாததுமாக வீட்டு முற்றத்தில் வந்து நின்று கொண்டிருந்தாள்.... அவள் மனம் வெறுமையாகக் கிடந்தது உற்சாகம் உடலிலும் இருக்கவில்லை. அவள் உணர்விலும் இருக்கவில்லை.


தீடீரென்று தடதடவென்று குதிரைக்குளம்பொலி அவர்களது வீட்டுப்பக்கம் வந்து கொண்டிருந்தது. அவர் வருகிறாரோ என்று நினைத்த மாத்திரத்திலே அவள் இதயம் அவனைப் பார்த்துவிட தொண்டைக்குழிவரை வந்துவிட்டது போலிருந்தது. வந்தது உதயகுமரனில்லை. ஒரு போர்வீரன்! செய்தியை இளஞ்செழியன் அனுப்பியிருந்தான்.அவன் சொன்ன சேதியைக் கேட்டதும் அப்பா| என்ற ஒரு அலறல் அவள் அடித்தொண்டையில் இருந்து வந்தது. பிறகு கொஞ்ச நேரம் கோட்டை இருந்த பக்கம் திரும்பி சலனம் ஏதுமின்றி
நின்றவள் அப்படியே மயங்கி வீழ்ந்தாள்.மதியத்திற்கு முன்னதாக அவளை மயக்கம் தெளியப் பண்ணி அத்தையும், சில பெண்களுமாக கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அவனைக் கடைசித் தடவையாகப் பார்க்க வேண்டும் என்று போராடத் தொடங்கிவிட்ட அவளை,அடக்கவேண்டுமானால் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலை கண்டு அவளை அழைத்து வந்தனர்.உதயகுமரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நெற்றித் திலகம் அவனது முகத்தின் கவர்ச்சியை தூக்கலாக்கியது. வயிற்றுப்பகுதி சேதத்தை மறைக்கவோ என்னவோ அவனது வாளும் கேடயமும் வைக்கப்பட்டிருந்தன. அவனது உயிரற்ற உடலைக் கண்டதும் அவள் அலறிக் கத்திக்கொண்டு விழுந்து மூர்ச்சையானாள். அவளுக்குள் ஒரு நரம்பு அறுந்தமாதிரி ஒரு உணர்வுடனேயே அவள் நினைவிழந்தாள்.மாட்டுவண்டி எடுத்துவந்து பிரேதம் போல அவளை வீடு கொண்டு சென்றனர். அவளுக்கு நினைவு தெளிய ஒரு நாளாயிற்று. அதற்கிடையில் உதயகுமரனை அரசரின் ஆக்ஞைப்படி சதுர்வேத மங்கலத்திற்கு மங்கலத்தேரில் வைக்கப்பட்டு எடுத்துக் கொண்டு போகப்பட்டது. தம்பலகாமம் பிரதேசம் அடங்கிலும் ஒரே சோகமயம்தான்.இதற்கிடையில் மரக்கட்டைபோல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட மகளைக் கண்டதும் வைத்திலிங்கம் பிள்ளை சிறு பிள்ளை போல அரற்றத் தொடங்கிவிட்டார். அவரைத் தேற்றுவதே பெரும்பாடாயிற்று.தம்பை நகர் என்ற தம்பலகாமத்து இராஜ வைத்தியர் நமச்சிவாயப் பரியாரியாரின் உயிர் காக்கும் மிர்தி சஞ்சீவி மாத்திரைப் பிரயோகமே அவளைப் பிழைக்கச் செய்தது.ரங்கநாயகி இறந்துவிடுவாள் என்றே பலரும் நம்பினர். ஆயினும் பிழைத்துக் கொண்டாள். கொடிய கருநாக சர்ப்பத்தின் வாயில் அகப்பட்டுத் தப்பிய தேரைபோல சில காலம் ஒடுங்கிக் போயிருந்தாள்.முன்னாள் தளபதி தம்பருக்கே மருத்துவம் செய்து வித்தைகாட்டிய இராஜாங்க வைத்தியரின் கைராசியால் ரங்கநாயகியும் சற்றுத் தேறலானாள். அவளது சங்கீதத் திறமை, அழகு இரண்டையும் கேள்விப்பட்டு எத்தனையோ பல ஊர்களிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். தன் அருமை மகளைத் தன் கண் மூட முன்னமே ஒரு நல்லவன் கையில் கொடுத்து அவளை ஒப்பேற்றி விடவேண்டும் என்ற நினைவிலேயே இருந்த வைத்திலிங்கம் பிள்ளை வரன்களை வரச்சொல்லி அவளது பதிலைக் கேட்டபோது, ரங்கநாயகி ஒரு தர்பாரே நடத்திவிட்டாள்.அப்பா என் அன்பர் பயங்கர மரணம் அடைந்த சேதியைக் கேட்டதுமே நான் இறந்திருக்க வேண்டும். பாவி ஏன் உயிரோடு இருக்கிறேனோ தெரியவில்லை. அப்பா... நீங்கள் நான் இருக்கின்ற காலம் வரை இந்த நிம்மதியுடன் இருக்கவிடுவதாக இருந்தால் திருமணம் என்ற பேச்சை என் காது கேட்கச் சொல்லாதீர்களப்பா!அவள் கேவிக் கேவி அழலானாள். அவரும் அவளுடன் சேர்ந்து அழுதார். இனி அவளிடம் இந்தப் பேச்சை எடுப்பதேயில்லை... அவளாக ஒரு முடிவுக்கு வந்தாலொழிய... நானாக அவளை நெருக்கக் கூடாது என்று அவள் இஷ்டத்திற்கு விட்டுவிட்டார்.
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Tue Aug 18, 2009 6:50 pm

சின்ன வயதிலேயே வெள்ளை உடுத்து விதவைக்கோலம்பூண்ட ரங்கநாயகி, சமயங்களில் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பில் நின்று சத்தமாக ராகங்களை இசைப்பாள். அதை உதயகுமாரன் கேட்கவேண்டும், கேட்டுக்கொண்டிருப்பான் என்ற உணர்வு அவளுக்குள் இருக்கும், அல்லாது போனால் கலிங்கத்து விஜயன் கட்டி கலகக்காரர்களால் அழிக்கப்பட்டுப் பின்னர் குளக்கோட்டன் மன்னனால் கட்டப்பட்ட தம்பலகாமம் கோணேச்வரர் ஆலய தெற்கு வாயிலுக்கு எப்போதாவது வருவாள். உள்ளே எழுந்தருளி இருக்கும் கோணேஸ்வரப் பெருமானை நோக்கி இரு கரங்களையும் சிரசில் கூப்பி

[You must be registered and logged in to see this image.]

நீர்வளச் சிறப்பும் நிலவளச் சிறப்பும்
நிகரில்லாப் பெருவளம் கொழிக்கும்
ஊரதன் பெயரே தம்பலகாமம்
உழவர்கள் வாழ்ந்திடும் பேரூர்
சீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த
கோயில் குடியிருப்பெனும் பதியில்
கூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த
கோண நாயகர் அமர்ந்தாரே


என்று தன் குயில்க் குரலால் பாடுவாள். அப்போது தானும் உதயகுமரனும் குடமுருட்டியாற்று வெண்மணற்பரப்பில் அமர்ந்து பாடிய நாட்கள் நினைவுக்கு வரும். அவள் கண்கள் இரண்டும் அருவியாய் மாறும்.முற்றும்.


{ நன்றி - படங்கள் இணையத்தில் இருந்து }

தம்பலகாமம்.க.வேலாயுதம்
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by jeevaraj on Wed Aug 19, 2009 4:59 pm

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்


[You must be registered and logged in to see this image.]

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.

வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.

1917 இல் தம்பலகாமத்தில் பிறந்த இவர் சிறுவயதுமுதலே இசை, நாடகம்,கூத்து என்பவற்றில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பினை 5ம் வகுப்பபுக்கு மேல் தொடரமுடியாது போனது.

இருந்தும் இடைவிடாத வாசிப்பு பழக்கமும், இயற்கையாகவே அமைந்த இலக்கிய ஆற்றலும் அவரை எழுத்துலகில் மிளிரவைத்த தென்றால் அது மிகையாகாது.


அவர் வீரகேசரி நிருபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் ‘தம்பலகாமம்’ செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல் ,கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும், அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தவர்.


தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 அன்று தனது 92 வது வயதில் இயற்கை எய்தினார்.
avatar
jeevaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.geevanathy.com/

Back to top Go down

Re: ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum