ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 T.N.Balasubramanian

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள்

View previous topic View next topic Go down

இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள்

Post by ரபீக் on Sun Dec 12, 2010 12:19 pm

ஒவ்வொரு ஆண்டும் 78 ஆயிரம் பெண்கள் பிரசவ காலத்திலோ அல்லது குழந்தை பிறந்த 42 நாட்களுக்குள்ளோ இறந்துபோகிறார்கள்’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.
’சாம்பிள் ரெஜிஸ்ட்டிரேசன் சிஸ்டம்` எனப் படும் மத்திய அரசு நிறுவனம். இந்த தாய்மார்கள் 15 முதல் 49 வயதுக்குள்ளான வர்கள். மகப்பேறு கால மரணவிகிதம் அதிகமாவதற்கான காரணங்கள்…

பால்ய விவாகம்:

பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. பூப்பெய்தி விட்டாலும் மகப்பேறுக்கு தகுதியான உடல்வளர்ச்சியை அவர்கள் பெறுவதற்கு முன்பும் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இத்தகைய திருமணங்கள் மகப்பேறு கால மரணத்துக்கு வழிவகுத்து விடுகிறது.

ஊட்டச்சத்து இல்லாமை:

கர்ப்பிணிப் பெண்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு தேவை யான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் ரத்தசோகை எனப்படும் அனீமியா நோய்க்கு ஆளாகி பிரசவ காலத்தில் உயிரிழப்புக்கு உள்ளாகிறார்கள்.

பாதுகாப்பற்ற முறையில் செய்யும் கருக்கலைப்பு:

பெண்களில் பலரிடம் கருக்கலைப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. தகுதியற்றவர்களிடம் அவர்கள் கருக்கலைப்பு செய்துகொள்வது, மரணத்தில் கொண்டு விட்டுவிடுகிறது!

மேம்படுத்தப்படாத பிரவச இடம்:

கிராமப்புற பெண்களில் பெரும்பாலோர் நவீனப்படுத்தப்பட்ட மருத்துவ மனைகளுக்கு பிரசவத்திற்குச் செல்வதில்லை. வீடுகளில் தாய்-சேய் நலம்பேணும் உபகரணங்கள் ஏதுமின்றி பாதுகாப்பற்ற முறையில் பிரசவம் செய்து மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.

கிராம ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படாமை:

பெரும்பாலான கிராமப்புற மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய்மார்களின் நலம்காக்கும் வசதிகள் இல்லை. அதனால் சுகப்பிரசவத்திற்கு பின்பு தாய்மார்கள் இறந்து போகும் சூழல் ஏற்படுகிறது.

மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை அசாம் மாநிலத்தில் தான் மிக அதிகம். அங்கு திஸ்பூரில் உள்ள லல்மாட்டி கிராமத்தில் வசிக்கும் பிரான்ஜிட் தேகா என்பவர் தனது 18 வயதான மனைவி கல்பனா தேகாவை முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்த போது, மனைவி வயிற்றில் முழு வளர்ச்சியுடன் இருந்த குழந்தை இறந்து பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்தபோது குழந்தையுடன் தாயும் இறந்து போனாள். “மருத்துவமனையில் என்ன தப்பு நடந்தது என்று தெரியவில்லை. எங்கள் பகுதியில் பல பெண்கள் பிரசவகாலத்தில் இறந்திருக்கிறார்கள்” – என்று அதிர்ச்சியுடன் கூறுகிறார், கல்பனாவின் கணவர்.

லான்செட் என்கிற மருத்துவப் பத்திரிகை உலக அளவில் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2008-ல் நிகழ்ந்துள்ள மகப்பேறுகால மரணங்களில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு ஆகிய ஆறு நாடுகளில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

ராஜஸ்தானில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை 388 என்று பதிவாகியுள்ளது! அங்குள்ள கிராமங்களில் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே பார்க்கப்படுகின்றன. நகரத்து பெண்கள் பிரசவத்திற்கு நவீன வசதிகள் நிறைந்த `மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனைகளைத் தேடும்போது, கிராமத்து கர்ப்பிணிகள் எந்த வசதியுமற்ற ஆஸ்பத்திரிகளைத்தான் தேடிச் செல்கிறார்கள்.

பொருளாதார வசதிமிகுந்த மராட்டியம், குஜராத் மாநிலங்களில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை முறையே 130 மற்றும் 160 எனப்பதிவாகியுள்ளது. போதிய நிதிவசதி இருந்தும் அரசின் கவனக்குறைவால் கிராம மருத்துவமனைகளில் மகப்பேறு காலத்தில் தாயின் நலம்பேணும் வசதிகள் மிகக்குறைவாகவே உள்ளன! அங்குள்ள டாக்டர்களில் நூற்றிலொருவர் தான் மகப்பேறு சிகிச்சைக்கான பயிற்சி பெற்றுள்ளனர். மகப்பேறு சிகிச்சை பயிற்சிபெற்ற டாக்டர்களிலும் 2 சதவீதம் பேர் தான் சிசேரியன் ஆபரேஷன் செய்யும் பயிற்சி பெற்றுள்ளனர். இம்மாதிரியான குறைகள் நிவர்த்தி செய்யப்படாதவரை யிலும் மகப்பேறுகால மரணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

சமீபத்தில் அரசின் சுகாதாரத்துறை எடுத்துள்ள கணக்கீட்டின்படி 1 லட்சத்து ஐம்பது ஆயிரம் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களில் டாக்டர்களே இல்லை என்கிறது. ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கீட்டின்படி 74000 சுகாதார வல்லுனர்கள் தேவை என்று கணக்கிட்டுள்ளது!

உலக சுகாதார நிறுவனம், பொதுமக்கள் சுகாதார நலனிற்காக செலவிடும் நாடுகளின் வரிசைப் பட்டியலில் இந்தியா 71-ம் இடத்திலுள்ளது என்கிறது.

கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பி. எக்பால். “கேரளாவில் கர்ப்பமாகும் பெண்களில் 33 சதவீதம் பேருக்கு ரத்தசோகை நோய் உள்ளது. கேரளாவில்தான் இந்தியாவிலேயே மிகஅதிகமான அளவில், 35 சதவீத கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்யப்படுகிறது!” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க ஹார்வர்டு பொதுநல சுகாதார மருத்துவநல நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2015-ல் இந்தியாவின் மகப்பேறு கால மரணவிகிதம் 254-லிருந்து 100 ஆகக்குறைந்து விடும் என்று நம்புகிறார்கள்

விடுப்பு குழுமம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum