ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 esamy

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கர்ப்பம் தரிக்கும் காலம் எது தெரியுமா ?

View previous topic View next topic Go down

கர்ப்பம் தரிக்கும் காலம் எது தெரியுமா ?

Post by krishnaamma on Sun Dec 19, 2010 6:15 pm

சிறு குடும்பத் திட்டத்தை மத்திய அரசு வலியுறுத்துகிறது. "நாம் இருவர், நமக்கு மூவர்' போய், "நாம் இருவர், நமக்கிருவர்' வந்து, இப்போது, "நாம் இருவர், நமக்கொருவர்' என்பது, கொள்கை முடிவாகி விட்டது. கருத்தடைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்து விட்டது. எனினும், கருத்தடை குறித்து, பெரும்பாலான பெண்கள் அறிந்து கொள்ளவே இல்லை. மூட நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் தான் பரவலாகக் காணப்படுகின்றன.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண், கர்ப்படைய மாட்டார்...
* மாதத்திற்கு ஒரு முறை செக்ஸ் வைத்து கொண்டால், குழந்தை உருவாகாது...
* தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டால் தான், குழந்தை உருவாகும்...
* கருத்தடை செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல...
இதுபோன்ற நம்பிக்கைகளில் உழல்வதால், 23 சதவீதப் பெண்களுக்கு, திட்டமிடா கருவுறுதல் ஏற்படுகிறது.

கருத்தரிப்பு காலம் மற்றும் மகப்பேறு ஆகியவை ஏற்படும் நேரங்களில், நம் உடல் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்; கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். கருத்தடைக்கு, பெண்களுக்கென பாதுகாப்பு வழிமுறைகள் நிறைய உள்ளன. மாதத்தில், குறிப்பிட்ட சில தினங்களில் மட்டுமே பெண்கள் கருத்தரிக்க முடியும்.

ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் தொடங்குவதற்கு, 14 நாட்கள் முன்னதாக, சினைப்பையிலிருந்து முட்டை வெளியேறும். அது 12 முதல் 24 மணி நேரமே உயிருடன் இருக்கும். ஆணின் விந்து 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். இந்த நாட்களில் உடலுறவை தவிர்த்தால், கர்ப்பம் தரிக்காமல் தவிர்க்கலாம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு, மிகச் சரியாக மாத விடாய் ஏற்படுவதில்லை என்பதால், இந்த நடைமுறை சாத்தியப்படுவதில்லை. பெண்களின் பிறப்புறுப்பில் தடவிக் கொள்ளும் நோநோக்சினால் - 9 என்ற களிம்பு, கருத்தடைக்கு ஏற்ற மருந்து. உடலுறவின் போது இதை தடவிக் கொள்ளலாம். ஒரு மணி நேரம் வரை பயன் தரும். எனினும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மருத்துவச் சீட்டு இல்லாமலேயே மருந்து கடைகளில் கிடைக்கும் களிம்பு இது.

விந்துவை அழிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம். கூடவே, ஜவ்வு போன்ற ஒரு தடைக் கருவியும் (டயாப்ராகம்) பயன்படுத்த வேண்டும். உடலுறவுக்குப் பின் எட்டு முதல் 12 மணி நேரம் வரை இதை அகற்றக் கூடாது; ஆனால், 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.

பெண்கள், "காப்பர் டி'யும் பொருத்தி கொள்ளலாம். மூன்று, ஐந்து, 10 ஆண்டுகள் வரை பயன்பாடு கொண்ட, "காப்பர் டி'க்கள் கிடைக்கின்றன. மகப்பேறு மருத்துவர் மூலம் இதைப் பொருத்திக் கொள்ளலாம். வெளிநாட்டு தயாரிப்புகளும் கிடைக்கின்றன. "காப்பர் டி' கருவியை, அரசும் இலவசமாக வினியோகிக்கிறது. பெண்களுக்கு உடலில் புரோஜெஸ்டரோன் அளவை அதிகரிக்கும் வகையிலான ஊசிகளும் உள்ளன.

அவற்றை 12 வாரத்திற்கு ஒரு முறை போட்டு கொள்ள வேண்டும். இந்த ஊசி போட்டுக் கொள்வோர் உடல் எடை அதிகரிக்கும். மாதவிடாய் சரியாக ஏற்படாது. விட்டு விட்டு ரத்தப்போக்கு இருக்கும். இதனால், சினைப்பையிலிருந்து முட்டை வெளியேறும் காலம் எதுவென கண்டறிய முடியாத நிலை ஏற்படும். கருத்தடைக்கு வாய்வழி மாத்திரைகளும் உள்ளன. இவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டரோன் அடங்கியவை இவை.

பல நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்கின்றன. அரசு, "மாலா டி' என்ற பெயரில், இலவசமாக இந்த மருந்தை வினியோகிக்கிறது. தொடர்ந்து 21 நாட்கள் இதை சாப்பிட வேண்டும். பின், ஏழு நாள் இடைவெளி விட்டு, மீண்டும் சாப்பிட வேண்டும். சில நேரங்களில், இடைவெளி காலத்திலும் சில மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அவை, மாதவிடாயை சீர்படுத்தி, கருத்தடை ஏற்படுத்துகின்றன. இவற்றை சாப்பிட்டால், புற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்படாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், புரோஜெஸ்டரோன் மட்டும் அடங்கிய மாத்திரைகளை சாப்பிடலாம்.

இந்த மாத்திரையை, இடைவெளி இல்லாமல் சாப்பிடலாம். சமீபத்தில், ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டரோன் அடங்கிய வளையம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பெண்கள், பிறப்புறுப்பில் அணிந்து கொள்ள வேண்டும். மூன்று வாரங்களுக்கு இதை அணிந்த பின், ஒரு வார இடைவெளியில் புதிதாக இன்னொன்றை அணிய வேண்டும்.
இதை பெண்களே அணிந்து கொள்ளும் வகையில், எளிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாத்திரை சாப்பிடவில்லை என்ற கவலையில் உள்ளவர்கள், மாத்திரையை தவிர்த்து, இந்த முறையை கையாளலாம்.
ஆண்கள், ஆணுறைகளைப் பயன்படுத்தலாம். உடலுறவின் முழு நேரமும் இதைப் பயன்படுத்த வேண்டும். கூடவே, விந்துக்கொல்லி களிம்புகளையும் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பற்ற மற்றும் பலருடனான உடலுறவு, பாலியல் ரீதியான நோய்களை உருவாக்கும். இதனால் ஏற்படும் ஹெப்பாடைட்டிஸ் பி வைரஸ் மற்றும் எச்.ஐ.வி., தொற்று ஆகியவை, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
ஆணுறை மட்டுமே இதுபோன்ற நோய்களை தவிர்க்க உதவும். பாதுகாப்பற்ற உடலுறவு, கருத்தரிக்கும் நிலையை ஏற்படுத்தும். அடுத்த மாதவிடாய் எதிர்நோக்கி காத்திருக்கையில், இது, "டென்ஷனை' ஏற்படுத்தும்.
இதை தவிர்க்க, உடலுறவுக்கு பிந்தைய, "மார்னிங் ஆப்டர்' மாத்திரைகளை பயன்படுத்தலாம். மருத்துவச் சீட்டு இல்லாமல் இதை வாங்கக் கூடாது என்றாலும், பெரும்பாலான மருந்து கடைகளில் இது கிடைக்கிறது.

உடலுறவு முடிந்த உடனேயே, இந்த மாத்திரையை சாப்பிட்டு விட வேண்டும். 72 மணி நேரத்திற்குள் சாப்பிட்டால், 80 சதவீத பாதுகாப்பு கிடைக்கும். இந்த மருந்து, புரோஜெஸ்டரோன் மட்டுமோ அல்லது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டரோன் ஆகியவை இரண்டுமோ, அதிகளவு கொண்டதாக இருக்கும். தினமும் சாப்பிடும் மாத்திரைகளை விட, இது வீரியம் நிறைந்தது. இதை தவிர, 12 மணி நேர இடைவெளியில் சாப்பிடக் கூடிய மாத்திரைகளும் உள்ளன.

கரு உருவாகிவிட்டால், இந்த மாத்திரைகள் பயன் தராது. கருக்கலைப்புக்கென உள்ள மாத்திரைகளை சாப்பிட வேண்டி இருக்கும். அவையும், கடைசி மாதவிடாய் நாளிலிருந்து 49 நாட்கள் வரை மட்டுமே பயன்படும். மேலே கூறப்பட்ட அனைத்துமே, மிகவும் அரிதாக பயன்படுத்தக் கூடியவையே. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல. தொடர்ந்து பயன்படுத்தினால், ஆரோக்கியம் கெட்டு விடும்.

டாக்டர் கீதா மத்தாய்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: கர்ப்பம் தரிக்கும் காலம் எது தெரியுமா ?

Post by கலைவேந்தன் on Sun Dec 19, 2010 7:14 pm

மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி கிருஷ்ம்மா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கர்ப்பம் தரிக்கும் காலம் எது தெரியுமா ?

Post by சாந்தன் on Sun Dec 19, 2010 7:20 pm

பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி கிரிஸ்மா
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கர்ப்பம் தரிக்கும் காலம் எது தெரியுமா ?

Post by krishnaamma on Tue Dec 28, 2010 2:55 pm

நன்றி நண்பர்களே புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: கர்ப்பம் தரிக்கும் காலம் எது தெரியுமா ?

Post by சிவா on Tue Dec 28, 2010 2:58 pm

@சாந்தன் wrote:பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி கிரிஸ்மா

கிரிஸ்மா அல்ல சாந்தன், கரிஷ்மா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கர்ப்பம் தரிக்கும் காலம் எது தெரியுமா ?

Post by ராஜா on Tue Dec 28, 2010 3:08 pm

@சிவா wrote:
@சாந்தன் wrote:பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி கிரிஸ்மா
கிரிஸ்மா அல்ல சாந்தன், கரிஷ்மா!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கர்ப்பம் தரிக்கும் காலம் எது தெரியுமா ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum