ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா on Sun Dec 19, 2010 9:22 pm

First topic message reminder :

மாலை நேரம். வீட்டு வாயிலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே... முன் அறையில் தாத்தா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதிலேயே மூழ்கிப் போயி ருந்த அவரது கவனத்தை, ‘லொட்டு...புட்டு’ என்று ஏதோ சத்தம் திசை திருப்பியது. நிமிர்ந்த தாத்தாவை, முறைத்துப் பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பேரன்.

புத்தகத்தை மூடி வைத்த தாத்தா, ‘‘காலைக் கழுவிட்டு உள்ளே வா!’’ என்றார் சற்றுக் கறாராக.

‘‘செருப்பு போட்டுக்கிட்டுத்தானே போனேன். வெறுங் காலோடவா போனேன்?’’ என்று முணுமுணுத்தபடியே கால்களைக் கழுவிக் கொண்டு தாத்தாவை நெருங்கினான் பேரன். வெளியில் சுற்றிவிட்டு வந்ததனால் உண்டான வியர்வையும் அடங்கவில்லை; தாத்தாவின் கறார் வார்த்தைகளால் உண்டான வருத்தமும் அடங்கவில்லை அவனுக்கு.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு வந்து, மகனிடம் நீட்டினாள் தாயார்.

‘‘கொஞ்ச நேரம் கழிச்சுக் குடி!’’ என்றார் தாத்தா.

கோபம் பொத்துக் கொண்டு வந்தது பேரனுக்கு.

‘‘பிராணனை வாங்கறியே தாத்தா! உன் காலத்து சமாசாரத்தை எல்லாம் இந்தக் காலத்துல யார் சீண்டுறா? விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு. இந்தக் காலத்துல போய்.... உதவாததையெல்லாம் சொல்லிக்கிட்டு...’’ என்று வெடித்தான் பேரன்.

சிரித்தார் தாத்தா. ‘‘உதவாதது எதையும் நம்ம முன்னோர்கள் சொல்லிட்டுப் போகலை. என்ன சொன்னே? விஞ்ஞான வளர்ச்சியா, ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ! அணுவைப் பற்றின சிந்தனைகூடத் தோணாத அந்தக் காலத்துலேயே விஞ்ஞான உண்மைகளை சொன்னவங்க நம்ம பெரியவங்க. அதைப் பத்தி விளக்கமா சொன்னா தான் உனக்குப் புரியும். இந்தா, அதுக்கு முன்னாடி இப்ப தண்ணீரைக் குடி!’’ என்றபடி தண்ணீரை பேரனிடம் நீட்டினார் தாத்தா.

‘இந்தத் தாத்தா பொய் சொல்றாரா? அல்லது ஏதாவது உண்மை இருக்குமா?’ என்ற குழப்பத்துடன் தண்ணீரை வாங்கிக் குடித்த பேரன், ‘‘என்ன தாத்தா சொல்றே? நம்ம பெரியவங்க... விஞ்ஞான உண்மை... அது இதுன்னு என்னென்னவோ சொல்றே? இதெல்லாம் உண்மையா?’’ என்றான்.

தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘நான் சொல்றேன். நீயே தீர்மானிச்சுக்கோ! அணுவைப் பற்றி மேல் நாட்டுக்காரங்க யாரும் யோசிக்காத அந்தக் காலத்துலேயே அதுபத்தின விஷயங்களை நம்ம பெரியவங்க விளக்கமா சொல்லியிருக்காங்க தெரியுமா? கம்பராமாயணத்துலயும் இதுபத்தி ஒரு தகவல் உண்டு. யுத்த காண்டத்துல, ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்றான். அப்ப அவன் ஹிரண்யகசிபுவை பத்திச் சொல்றதைப் படிக்கிறேன், கேளு...

‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’ என்று தன் மகனைப் பார்த்துச் சீறினான் ஹிரண்யகசிபு. பிரஹ்லாதன் பதில் சொன்னான்: ‘சாணிலும் உளன். ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்!’

‘அணுவுக்குள் அணுவாக இறைவன் இருக்கிறான்’ என்பதைச் சொல்ற இந்த இடத்துல, அணுவை நூறு(சத) கூறுகளாகச் செய்து, அதில் ஒரு சதவிகித அணுவை ‘கோண்’ என்று, கம்பராமாயணம் குறிப்பிடுது’’ என்ற தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் ஆச்சரியப்பட்டான்.

ஓரக்கண்ணால் அவனது வியப்பை ரசித்தபடி தாத்தா தொடர்ந்தார்: ‘‘பிளக்க முடியாததுன்னு சொல்லப்பட்ட அணுவைப் பிளந்து, ஒரு சதவிகித அணுவுக்கும் தமிழில் பெயர் வெச்சுட்டாங்க அந்தக் காலத்துலயே! ஆனால், எனக்குத் தெரிஞ்சு இன்னிக்கும் ஒரு சதவிகித அணுவுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படலை. சரி... மேலே சொல்றேன். கம்ப ராமாயணமே, அணுவின் செயல்பாட்டையும் சொல்றது.

போர்க்களத்தில் இந்திரஜித் இறந்து கிடக்கிறான். அவன் தாயார் மண்டோதரி அழுகிறாள். ‘தலை சிறந்த வீரனான உன்னை& இந்திரனையே வென்று இந்திர ஜித் என்று பெயர் பெற்ற உன்னைக் கொன்று விட்டார்களே! அணு ஆயு தத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது’ என்கிறாள்.

அந்த வரி: உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!

எங்கோ ஓரிடத்தில் சுவிட்சை அழுத்தியதும் அணு ஆயுதம் சீறிக் கிளம்பும். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கறது. இதைத் தான் கம்ப ராமாயணம், ‘உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!’னு சொல்றது!’’ தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் பெருமூச்சு விட்டான்!

தாத்தா தொடர்ந்தார்: ‘‘இப்போ கால் கழுவுற விஷயத்தைச் சொல்றேன். கவனமா கேள்! நின்றாலும் நடந்தாலும் உட்கார்ந்தாலும் நம்ம கால் மட்டும்தான் தரையில் பட்டுக்கிட்டிருக்கும். இப்படிக் கண்ட இடத்துலயும் அலையுற கால்கள்ல ஏராளமான கிருமிகள் ஒட்டிக்கிட்டிருக்கும். கால் கழுவாம இருந்தா அவ்வளவு கிருமிகளும் கால் களில் உள்ள நகக் கண் வழியா உள்ளே புகுந்து வியாதியை உண்டாக்கும். அதனாலதான் நம்ம பெரியவங்க காலைக் கழுவிட்டு உள்ளே வரச் சொன்னாங்க.

என்னதான் கழுவினாலும் ஒன்றிரண்டு கிருமிகள் கால்களில் ஒட்டிக் கிட்டிருந்தா, என்ன செய்யுறது?

அதுக்காகவே வீட்டு வாசப் படியில் மஞ்சள் பொடியைக் குழைத் துப் பூசி வெப்பாங்க. காலைக் கழுவிட்டு மஞ்சள் பூசின வாசப்படி வழியா உள்ளே நுழைஞ்சா, காலில் மிச்ச மீதி இருக்கும் கிருமிகளும் அழிஞ்சு போயிடுமாம். தலை சிறந்த கிருமி நாசினி மஞ்சள் என்பதை தெரிஞ்சதாலதான் நம்ம பெரியவங்க அப்படி செஞ்சாங்க. இதே போல சாப்பிடறதுக்கு முன் னாலயும் சாப்பிட்ட பிறகும் கால் கழுவறதும் நல்லது. இதனால ஜீரண உறுப்புகள் பலப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். புரிஞ்சுதா?’’ என்றார் தாத்தா.

பிரமிப்பில் இருந்த பேரன் வாயைத் திறந்தான். ‘‘புரிஞ்சுது தாத்தா... புரிஞ்சுது! இதையெல்லாம் உணர்ந்து ஃபாலோ பண்றதாலதான், உங்களை மாதிரி பெரியவங்க வயசானாலும் கரும்பைக் கடிச்சு சாப்பிடுறீங்க. நாங்களோ...’’ என்ற பேரனை இடைமறித்த தாத்தா, ‘‘கரும்பையே ஜூஸாகக் கேட்கறீங்க!’’ என்றார் கலகல சிரிப்புடன்.

‘‘அது போகட்டும் தாத்தா! நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும், அம்மா தந்த தண்ணீரைக் குடிக்க விடாம, அப்புறமா குடிக்கலாம்னு சொன்னீங்களே, அது ஏன்? சொல்லுங்க!’’ என்றான்.

‘‘இதற்கு உண்டான பதிலைப் பெரிய புராணம் சொல்றது. அதையும் சொல் றேன்’’ என்றார் தாத்தா.

‘‘சேக்கிழார் எழுதினதுதானே?’’ என் றான் பேரன்.

ஆச்சரியப்பட்டார் தாத்தா. ‘‘அடடே... சேக்கிழார் எழுதினதை எல்லாம் சரியாச் சொல்றியே... பரவாயில்லை!’’ எனப் பாராட்டினார்.

‘‘தாத்தா! இந்தக் காலத்துப் பசங்களான எங்களைப் பத்தி தப்பாவே நினைச்சுக்கிட்டிருக்கீங்க போல! கொஞ்சம் கொஞ்சமாவது எங்களுக்கும் தெரியும். மற்றதைத் தெரிஞ்சுக்கிற ஆர்வமும் இருக்கு! ஏற்கும்படி சொல்ல வேண்டியது அனுபவசாலியான பெரியவங்க கடமை! சரி... சரி! நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லுங்க. பாராட்டெல்லாம் அப்புறமா வெச்சுக்கலாம்’’ என்று ஆர்வத்துடன் கேட்டான் பேரன்.

தாத்தா சொன்ன பதில், அடுத்த விஞ் ஞான ஆச்சரியம்!


Last edited by சிவா on Sun Dec 19, 2010 10:02 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by பிரகாசம் on Wed Feb 02, 2011 10:04 am

நல்ல கருத்து.... நன்றி
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by மஞ்சுபாஷிணி on Wed Feb 02, 2011 1:55 pm

@சிவா wrote:
இடி இடிப்பதற்கும் அர்ஜுனனுக்கும் என்ன சம்பந்தம்?

தலைக்குள்ளாற இருக்கற எல்லாம், தலையில இருக்கற மயிர்க்கால்கள் வழியாத்தான் வெளியில வந்தாக ணும். ஒட்டுமொத்தமா வர்ற அதெல்லாம் தலையிலியே தேங்கிப் போச்சுன்னு வெச்சுப்போம். அவ்வளவுதான். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்ங்கறது மாறிப் போய், எல்லா விதமான வியாதிங்களுக்கும் சிரசே பிரதானம்னு ஆகிப் போயிடும். அது கூடாதுங்கறதுக்காகத்தான், கொழந்தயா இருக்கும்போதே, ‘குலதெய்வத்துக்கு முடி இறக்கறது’னு செஞ்சாங்க. இது இல்லாம...’’ என்று தாத்தா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நடுத்தர வயதுக்காரர் ஒருவர் எழுந்து, ‘‘குறுக்கால பேசறேன்னு கோவிச்சுக்காதீங்க! குலதெய்வம்னா அது எது? அதை எப்பிடித் தெரிஞ்சுக்கறது? எங்க குலதெய்வம் எதுன்னு தெரியாது. என்ன செய்ய ணும்னு, நீங்கதான் சொல்லணும்!’’ என்றார்.

ஒரு விநாடி நிதானித்த தாத்தா, ‘‘இப்ப சொல்றது, கேள்வி கேட்ட இவருக்கு மட்டுமில்ல. எல்லாருக்காகவும்தான். குலதெய்வ வழிபாட்டை விட்டுட்டு, நாம மத்த என்ன பிரார்த்தன செஞ்சும் பலனில்லைனு பெரியவங்க எல்லாம் விசேஷமா சொல்லுவாங்க. குலதெய்வம்ங்கறது நம்ம இஷ்டத்துக்கு வெச்சுக்கறது இல்ல. நம்ம முன்னோர்கள்ல ஒருத்தர், தனது பக்தி யின் மூலமா தெய்வத்தை நேருக்கு நேரா அல்லது கனவுல பார்த்து இருப்பாங்க. அப்ப அந்த சாமி, ‘நான் இன்ன சாமி. நான்தான் உனக்குக் குலதெய்வம்’னு சொல்லியிருக்கும். இப்படி முன்னோர்கள் மூலமா, அந்த வழியில வந்ததுதான் குலதெய்வம்.

சில குடும்பங்கள்ல முன்னோர்களே, ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’னு வள்ளு வர் சொல்ற மாதிரி, தெய்வ நெலையில இருந்துருப்பாங்க. அப்படிப்பட்ட அந்த முன்னோர்களே, குலதெய்வமா இருக்கறதும் உண்டு.

அப்படிப்பட்ட குலதெய் வத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, தவறாம வருஷத்துக்கு ஒரு தடவையாவது வழிபாடு செய்யணும். குலதெய்வம் எது? அது எங்க இருக்குனு தெரி யாதவங்க கவலைப்பட வேணாம். திருப்பதி வேங்கடாசலபதியக் குல தெய்வமா வெச்சுக்கலாம். குலதெய்வம் எதுனு காலப்போக்குல தானா தெரிய வரும். இப்ப வாங்க! முடி இறக்கறதப் பத்தி, மேல பார்க்கலாம். இந்த மாதிரி குலதெய்வத்துக்குத்தான், முடி எடுக்கறதுங்கற பழக்கத்த வெச்சு, முன்னோர்கள் செஞ்சாங்க.

அதுக்கு அப்பறமா முடி வளர்ந்த உடனே, இஷ்ட தெய்வப் பிரார்த்தனைங்கற பேர்ல, இன்னொரு தடவை, அதாவது ரண்டாந் தடவ முடி இறக்குவாங்க. இது எதுக்கு? அம்மாவோட வயத்துல இருந்தபோது, தலையில ஊறிக் கெடக்கற அழுக்குல, அநேகமா எல்லாமே மொதத் தடவ மொட்டை போட்டப்பவே போயிருக்கும். மிச்சமீதி இருக்குறது ஒட்டுமொத்தமா, மொதல் மொட்டைக்கு அப்பறமா முடி வளரும்போது வெளியில வந்துருக்கும். அத, இஷ்ட தெய்வப் பிரார்த்தனைங்கற பேர்ல, ரண்டாந் தடவை முடி இறக்குறப்போ ‘க்ளீன்’ செஞ்சுருவாங்க. அவ்வளவுதான்; இனிமே தலைக்கு உள்ள எந்த விதமான கெட்ட ரத்தம், சதை, மலம், ஜலம்னு எதுவுமே இருக்காது. இப்படி முடி இறக்கறதுங்கற பேர்ல, ஆரோக்கியத்தச் சொல்லி வெச்சாங்க நம்ம பாட்டன், பூட்டன்லாம்.

இப்ப வாங்க! இந்தக் காலத்துல நல்லா வெகுவாப் பல இடங்கள்லியும் பரவிக் கெடக்கற ஒரு தப்பைப் பார்க்கலாம். இப்பல்லாம் முக்காவாசி எல்லா வீடுகள்லியும், பாடற மெஷின் ஒண்ணு இருக்கு. நமக்கு வேணுங்கற சாமி நாமாவை அதுபாட்டுல நாள் பூரா சொல்லிக்கிட்டே இருக்கும். இப்ப அந்த மெஷின்லியே புதுசா ஒண்ணு, எல்லார் வீட்லயும் கத்துது. இதுல சாமி நாமா கூட, காயத்ரி மந்திரம் மாதிரியான சில சூட்சுமமான மூல மந்திரங்களயும் சேர்த்து, கத்தும்படியா ஏற்பாடு பண்ணி இருக்காங்க. அதுவும் அந்த மந்திரங்கள எந்த விதமான முறையும் இல்லாம, தபேலா டோலக்கு, கீ போர்டுல ஸ்ருதினு சேர்த்துக் கலந்து ஒரு வழி பண்ணி இருக்காங்க, அது தப்பு. உங்க யார் வீட்லியாவுது அப்படிப்பட்ட மெஷின் இருந்தா, தயவு செஞ்சு காயத்ரி மந்திரம் மாதிரி மூல மந்திரங்களப் பாடும்படியா வெக்காதீங்க. முன்னோர்கள் சொன்னத, நம்ம சௌகரியத்துக்காக நம்ம இஷ்டப்படி மாத்தக் கூடாது.

உதாரணமா, ‘பலமா இடி இடிக்கும்போது ‘அர்ஜுனா! அர்ஜுனா’னு சொல்லு! பயம் போயிடும்’னு சொல்லுவாங்க. உடனே, ‘இது எப்படி? அர்ஜுனனுக்கும் இடிக்கும் என்ன சம்பந்தம்? என்னய்யா காது குத்துறீங்க’னு கேக்கற வாதக்காரர்களும் உண்டு.

காது குத்தல... ஆனா, அது காது சமாசாரம் தான். பலமா இடி இடிக்கும்போது பல பேருக்கு அந்த இடி சத்தத்துல ‘கப்’புனு காது அடைச்சுக்கும். அப்ப ‘அர்ஜுனா, அர்ஜுனா’னு சொன்னா, வாய் திறந்து குவிஞ்சு அப்பறமா பிளக்கும். வேண்ணா சொல்லிப் பாருங்க! அப்படிச் சொல்றதுனால தாடைகள் நல்லா அகன்று போய், காத்து வெளியேறும். அடைச்சிக்கிட்டு இருந்த காது ‘பளிச்’சுனு சரி ஆயிடும். இதத்தான் நாம, கொழந்தையா இருக்கறப்ப, நம்ம பெரிய வங்க, ‘காண்டவ வனத்த அர்ஜுனன் எரிக்க ஆரம்பிச்சான். தேவேந்திரன், மழையயும், இடியையும் அனுப்பி அதத் தடுக்கப் பார்த்தான். ஆனா, அதயும் தாண்டி அர்ஜுனன் ஜெயிச்சான். அதுனால இடி இடிச்சா அர்ஜுனா அர்ஜுனானு சொல்லு! பயம் போயிடும்’னு சொல்லி வெச் சாங்க!’’ என்றார் தாத்தா.

சற்று நிதானித்து விட்டு, ‘‘இங்க இருக்கற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் ஒண்ணு, அதுவும் நம்ம சாஸ்திரங்கள் சொன்னதுல இருந்து சொல்லப் போறேன். இன்னக்கி இருக்கற காலகட்டத்துல இதெல்லாம் எடுபடுமானு தெரியல. இருந்தாலும் சொல்லித்தான் ஆகணும். இருட்டு பரவ ஆரம்பிச்ச உடனே விளக்கைத் தேடி ஏத்தறோமில்லயா, அது போல, தயவு செஞ்சு கூர்மையா கேட்டு மனசுல பதிய வெச்சுக்குங்க!

நம்ம சாஸ்திரங்களும் முன்னோர்களும் சொன்னதுல முக்கியமான ஒண்ணு ஆணும் பெண்ணும் தொட்டுப் பேசிப் பழகக் கூடாது. பெத்த அப்பனா இருந்தாலும், தான் பெத்த பொண்ணை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்பறமா தொட்டுப் பேசக் கூடாது.

‘என்ன சார்! நீங்களும் உங்க சாஸ்திரங்களும். பெத்த அப்பா, தான் பெத்த பொண்ணத் தொட்டுப் பேசக் கூடாதுங்கறீங்களே. இது என்ன நியாயம்?’னு மனசுக்குள்ளயே வாதப் பிரதிவாத வண்டிங்கள ஓட்டாதீங்க!

‘ஆபோசிட் செக்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர்’னு பிற்காலத்துல இங்கிலீஷ்காரன் சொன்னான். அதுக்கு முன்னாலியே அதுனால வர்ற பிரச்னைகள மனோ ரீதியா அலசி ஆராஞ்சு, சாஸ்திரங்கள்ங்கற பேர்ல சொல்லி வெச்சவங்கதான் நம்ம முன்னோர்கள்.

எந்த நேரத்துல மனசு கெட்டுப் போகும்னு எதுவும் சொல்ல முடியாது. பெத்த அப்பாவா இருந்தாலும், தான் பெத்த பொண்ணிடமே முறைகேடா நடக்க முயற்சி பண்ணி, அவங்க கதையையே முடிச்ச தகவல்கள் சமீப காலமா பத்திரிகைகள் பலதுலயும் வந்தத, நீங்கள்லாம் படிச்சு இருப்பீங்க. அதுனால வாதப் பிரதிவாதம் பண்ணி எதையாவது பேசறவங்க பேசட்டும்... இந்த மாதிரி நல்லதையெல்லாம் உங்க கொழந்தைங்களுக்கு, பெத்தவங்களான நீங்க சொல்லிக் குடுங்க. அது உங்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. இப்ப, கொழந்தைங்களுக்கு எல்லாம், அதாவது படிக்கற பசங்களுக்கு முக்கியமா ஒண்ணு சொல்லப் போறேன்
...’’

அருமையான விஷயங்கள் அடங்கிய தொகுப்புன்னு சொல்லலாம் இதை...
நிறைய பேருக்கு குலதெய்வம்னா யாருன்னு தெரியாம என்ன வழிபாடுன்னு குட தெரியாம இருக்காங்க... ஆனால் இங்க இவர் சொன்னது போல குலதெய்வவழிபாடும் பித்ருக்கள் வழிபாடும் இல்லன்னா வீட்டில் நல்லது நடப்பது தடைபடும்னு எங்கம்மா கூட சொல்ல கேட்டிருக்கேன்.. அருமையான விஷயங்களை பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா on Wed Dec 28, 2011 2:23 pm


கொடிமரம் உணர்த்துவது என்ன?


தாத்தா தொடர்ந்து பேசிக் கொண் டிருந்தார்: ‘‘நம்ம கோயில்கள்ல சாமி சந்நிதி செவுத்துல (சுவரில்) க்ஷிமிமிமி-கி, ஙீ-ஙி, மிஙீ-ஞி என்றெல்லாம், கறுப்பா எண்ணெயால தீட்டி வெச்சுருப்பாங்க.

அதாவது படிக்கற பசங்க, பாஸ் பண்ணணுங்கறதுக்காக இப்படிக் கன்னா பின்னான்னு தீட்டி வெச்சுருப்பாங்க. இதைவிட மிகப் பெரிய பாவம் _ சித்திர சபைனு சொல்ற குற்றாலத்துல இருக்கற அபூர்வ ஓவியங்கள்ல, ‘ஐ லவ்...’னு சொல்லி ஆணியால எழுதி வெக்கறது! அந்த மாதிரி சாந்நித்தியம் உள்ள ஓவியங்கள, இவ்வளவு காலம் நெலச்சு இருக்கற மாதிரி இனிமே தீட்ட முடியுமானு தெரியல. இன்னும் பல கோயில்கள்ல நவக்கிரகத்த சுத்தி இருக்கற செவுத்துல எல்லாம் பால் கணக்கு, தயிர் கணக்குக்கு கோடு போட்டு வெச்ச மாதிரி, இத்தன சுத்துங்கற கணக்குக்காகக் கறுப்பா கோடு கோடா போட்டுக் கன்னங்கரேல்னு ஆக்கி வெச்சுருப்பாங்க. இனிமே கொழந்தைங்களோ, பெரியவங்களோ யாரும் கோயில் செவுத்துல கன்னபின்னானு கரிக்கோடு போடக் கூடாது. இப்படி செஞ்சா விபரீத பலன்னு சாஸ்திரம் சொல்லி வெச்சுருக்கு!’’ என்றார் தாத்தா.\

அதன் பிறகு அவ்வளவு நேரம், தான் சொன்ன வற்றைச் சுருக்கிக் குறிப்புகளாக இரு நிமிடங்களில் சொல்லி முடித்த தாத்தா, தனது உரையை அந்த மேடையில் நிறைவு செய்தார். பலமாகக் கை தட்டினார்கள் மக்கள். தாத்தா மேடையிலிருந்து கீழே இறங்குவதற்குள் பலர் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

அவர்களின் அன்பு மழையில் நனைந்த தாத்தா, நீண்ட நேரத் தாமதத்துக்குப் பிறகு வீடு திரும்பினார். விடுமுறை முடிந்து, மகள் வீட்டில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்த தாத்தா ஊர் திரும்பினார்.

மகன் மருமகள், பேரன் பேத்தி என நால் வரும், ‘‘என்ன... பொண்ணு வீட்டுல டேரா போட்டு முடிச்சாச்சா? நீங்க எப்ப வருவீங்கனு நூறு தடவை, கோயில்காரங்க கேட்டுட்டாங்க... ஒருவேளை பொண்ணு வீட்லியே செட்டில் ஆயிட்டீங்களோனு நெனச்சோம்!’’ எனக் கிண்டலடித்தார்கள்.

‘‘எல்லாம் தெரியும்டா எனக்கு. வரும்போதே, கோயில்ல பொறுப்பா இருக்கறவங்க வழியில பாத்துப் பேசிட்டாங்க’’ என்றபடி தானும் கிண்டலில் கலந்து கொண்டார் தாத்தா.

அன்று கோயில் திருவிழாவின் முக்கிய நாள். தாத்தா அங்கே சிறப்புரையாகப் பேச வேண்டிய நாளும் அன்றுதான். மாவிலைத் தோரணங்களும் இடையிடையே வண்ணமயமான சீரியல் பல்புகளும் மேடையை அலங்கரித்தன. சுறுசுறுப் பாக மேடையேறினார் தாத்தா.

‘‘அனைவருக்கும் வாழ்த்துகள். ‘நாமும் நமது ஆலயங்களும்’ எனும் தலைப்பில், உங்களுடன் சில கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளப் போகிறேன். நம்ம நாட்டுல கோயில்கள் ஏராளம். அந்தக் கோயில்களுக்குப் பலப்பல மகான்களும் ஸித்த புருஷர்களும் போய், அந்தந்த சாமி மேல பாட்டெல்லாமும் பாடி வெச்சுருக்காங்க. எந்தவொரு கோயிலும், சாமி சக்திக்குக் கொறச்சல் இல்லாம நெறஞ்சுதான் இருக்கு. நாமும் பல பேரு, அந்தக் கோயில்களுக்கு எல்லாம் போறோம். ஆனா, எல்லாருக்கும் சாமியோட அருள் கெடைக்க மாட்டேங்குதே. அது ஏன்?’’ என்றார் தாத்தா. யாரும் பதில் சொல்லவில்லை.

‘‘சரி! நான் உங்களுக்குப் புரியும்படியாவே உதாரணம் சொல்றேன். எங்க வீட்டு டி.வி.யில கேபிள் டி.வி. தெரிய மாட்டேங்குது. ஏன்?’’ தாத்தா.

‘‘கேபிள் கனெக்ஷன் குடுத்துருக்க மாட்டீங்க!’’ என ‘பளிச்’சென்று பதில் வந்தது கூட்டத்தில் இருந்து.

தாத்தாவுக்கு குஷி பிறந்து விட்டது. ‘‘வாங்க... வாங்க. என்னோட வழிலயே வரீங்க. கேபிள் கனெக்ஷன் குடுத்திருந்தாலும் நமக்கு வேண்டிய சேனல்களை ட்யூன் பண்ணி இருக்கணும். ட்யூன் பண்ணி இருந்தாலும், அந்த அந்த சேனலுக்கு உண்டான பட்டனைத் தட்டினாத்தான, அந்த அந்த சேனல் தெரியுது’’ என்றார்.

முன் வரிசையில் இருந்தவர்கள், ‘ஆமாம்’ எனத் தலையாட்டினார்கள்.

தாத்தா தொடர்ந்தார். ‘‘அந்த மாதிரிதான் கோயில்லயும். கோயில்ல எந்தெந்தப் பகுதி எதை எதைச் சொல்லுதுனு மொதல்ல நம்ம மனசுல ட்யூன் பண்ணிக்கணும். அந்த அந்த சந்நிதில நிக்கும்போது, அததுக்கு உண்டான பட்டனத் தட்டி விட்றா மாதிரி என்ன செய்யணுமோ அதைச் செய்யணும்.

நம்ம உடம்பும் கோயிலும் ஒண்ணு. உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம். வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்; தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்; கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கேனு திருமந்திரத்துல திருமூலர் சொல்றாரு. விரிவா புரியும்படியா சொல்றேன்.

ஸ்வாமி இருக்கற எடம், மூலஸ்தானம் கர்ப்ப கிருகம், கருவறைனு சொல்றோமே அது தலை. சிரப் பத்ம ஸ்தானம்னு சொல்லுவாங்க. மூல ஸ்தானத்துக்கு அடுத்தபடியா இருக்கற எடத்த, அந்தராளம்னு சொல்லுவாங்க. அது முகம். அதுக்கு அடுத்ததா இருக்கறது, அர்த்த மண்டபம்னு பேரு. அது கழுத்து. அதுக்கும் அடுத்ததா இருக்கறத, மகா மண்டபம்னு சொல்லுவாங்க. இது மார்பும் தோளும் சேர்ந்த எடம். இவ்வளவு நேரமா பார்த்த எல்லாத்தயும் சுத்தி இருக்கறது, பிரகாரம். அது தொடை, முழந்தாள்கள். கோபுரம்னு சொல்றோமே, அது பாதம். இந்த மாதிரி, கோயில்ங்கறது நம்ம உடம்ப ஒட்டியே அமைஞ்சு இருக்கும்.

அடுத்ததா துவஜ ஸ்தம்பத்தப் பார்க்கலாம். கொடி மரம்னு சொல்றோமே அதுதான். இது வீணை தண்டு போல (முதுகுத் தண்டில்) மூலாதாரத்துல ஆரம்பிச்சு மேல்நோக்கிப் போகிற பிரம்ம நாடி. இடை கலை பிங்களைங்கற பிராணவாயுவ நடு நாடியில நிறுத்தி, கொஞ்சங்கூட அசையாமல் தியானித்தால், பிராண வாயு நிற்கும்; பிராணவாயு நின்றால், மனம் நிற்கும்; மனம் நின்றால், ஐம்பொறிகளும் நிற்கும்;

அவை அடங்கினால், விஷயங்கள் அடங்கும்; அவை அடங்கினால் பேதாபேதங்கள் இருக்காது; ஆத்மாவை உணர்ந்து அனுபவிப்போம். அதன் பின் பிரம்மானந்தம் தோன்றும். இதை நமக்குப் புரிய வெக்கணும்ங்கறதுக்காகத்தான் கோயில்ல கொடி மரத்த, மூலஸ்தானத்துக்கு நேரா நிறுத்தி வெச்சு இருப்பாங்க...’’ என்ற தாத்தா, ‘‘நான் சொல்ற ஒவ்வொரு விஷயத்தையும் உங்க மனசுல நல்லா பதிய வெச்சுக்கணும்’’ என்று அடுத்த விஷயத்தை ஆரம்பித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by பது on Wed Dec 28, 2011 3:26 pm

சூப்பருங்க

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா on Fri Dec 27, 2013 4:36 am

கோயிலில் எப்படி வழிபட வேண்டும்?

‘‘விழாவுல, கோயில்ல கொடி ஏத்துவோம். அப்பறமா சாமி வெளியில வந்து தரிசனம் குடுப்பார்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஏங்க! கொடி ஏத்தறாங்களே... கோயில்ல, சாமி எந்தக் கட்சின்னு கேலி பண்ணிப் பிரயோஜனம் இல்லை. இதயெல் லாம் எதுக்காக செஞ்சு வெச்சாங்கனு தெரிஞ்சுக்கணும்.

சரி... தீபங்களப் பாக்கலாம். கோயில்ல சாமிக்கு, சிறிசும் பெருசுமா பல வகையா தீபங்களக் காமிப்பாங்க. ஜோதி மயமான சாமிக்கு இது எதுக்கு? கொஞ்சம் ஆழமா பாக்க வேண்டிய விஷயம் இது.

நம்ம உடம்புல மூலாதாரம்னு சொல்ற இடத்துல கீழ் நோக்கியபடி தூங்கிய நிலையில இருக்கற குண்டலினிங்கற பாம்பை, மூலக்கனலை மூட்டி எழுப்பணும். ‘மூலாதாரத்தின் மூண்டெழு கனலை’னு ஒளவையார் சொல்றார். அப்படி எழும்பின குண்டலினிங்கற பாம்பு மூலாதாரம், ஸ்வாதிஷ் டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞைங்கற ஆறு சக்கரங்களையும் தாண்டிப் போய் சந்திரனோட அமிர்த தாரைகள் (ஊற்று) பொங்கி வழியும். அதை அனுபவசாலிகளான யோகிகள் அனுபவிப்பார்கள்.

அவர்களின் கண்களுக்கு மின்மினி, மின்னல், தீபம், பந்தம், சூரியன், சந்திரன் ஆகியவற்றின் பிரகாசங்களைப் போல, அருள் ஒளி (வெளிச்சம்) உதிக்கும். அந்த மகான்களோட அனுபவத்தை நாமும் அடையணும்னு நமக்குப் புரிய வெக்கறதுக்காகத்தான் தீபங்களக் காமிக்கறாங்க.

இப்பிடி பாரத நாட்டுக்கே, அதுவும் குறிப்பா தமிழ் நாட்டுக்கே பெருமை சேக்கற கலைச் செல்வங்களான நம்ம கோயில்களப் பத்தியும், அதுங்களோட அடிப்படை உண்மை என்னங்கறதப் பத்தியும் நம் முன்னோர்களும், மகான்களும் சொல்லிச் சொல்லியே, பேப்பர் பேனா அச்சு இதெல்லாம் இல்லாத காலத்துல இருந்து நம்ம காலம் வரைக்கும் கொண்டாந்து சேர்த்துட்டாங்க. இத எல்லாம் வருங்காலப் புள்ளைங்களுக்கு எளிமையாக் கொண்டு சேக்கறது நம்ம பொறுப்பு!’’ என்ற தாத்தா சற்று நிறுத்தினார்.

இதுதான் சந்தர்ப்பம் என்று, கையில் இறுக்கிப் பிடித்த பையுடன், கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து, ‘ஏங்க! பெரியவரே! எங்க ஊர்ல சாமி, வடக்க பாத்தபடி இருக்கு. அதுக்கு எதுக்கால, தெக்க பாத்தபடி விழுந்து கும்பிட்டா தப்புன்னு சொல்றாங்க. எப்பிடி எப்பிடி எந்தத் தெசயப் பாத்துக் கும்புடணும்ங்கறதக் கொஞ்சம் சொல்லுங்க! நாம் போயி எங்க ஊர்ல மக்களாண்ட சொல்லுவேன்ல’’ எனக் கேட்டார்.

‘‘அடுத்தது அதத்தான் சொல்லப் போறேன். சாமி எந்தப் பக்கம் பார்த்து இருந்தா, நாம எப்படி வணங்கணும்; எந்தப் பக்கம் நின்னு தரிசனம் பண்ணனும், கோயிலுக்குள்ள எந்த எந்த சந்நிதியில எப்பிடி எப்பிடி வழிபாடு செய்யணும்ங்கறதப் பாக்கலாம். இத எல்லாரும் நல்லா மனசுல வாங்கிக்கிட்டு, அப்படியே உங்க புள்ளைங்களுக்குச் சொல்லிக் குடுத்து அவங்களையும் பழக்கப்படுத்துங்க!’’ என்ற தாத்தா, நிதான மாகச் சொல்லத் தொடங்கினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா on Fri Dec 27, 2013 4:39 am


‘‘கோயிலுக்கு வரும்போது, குளிச்சுட்டு நல்லா தூய்மையான உடைகளைப் போட்டுக்கிட்டு, அவங்க அவங்க சம்பிர தாயப்படி நெத்தியில இட்டுக்கிட்டு வரணும். கோபுரத்தைப் பாத்ததும் அதையே சாமியா நெனச்சு, ரெண்டு கையயும் தலைக்கு மேல கூப்பி வணங்கணும். பெண்கள் தலைக்கு மேல கை கூப்பி வணங்கக் கூடாது. அவங்கள்லாம் நெஞ்சு வரைக்கும் கை கூப்பி வணங்கணும். அப்பறமா, கோயிலுக்குள்ள நுழையணும்.

கோயிலுக்குள்ள நுழைஞ்சிட்டோம். சாமி கிழக்க பாத்து இருக்கற சந்நிதின்னு வெச்சுப் போம். பலிபீடத்தோட அக்கினி மூலைக்கு (தென் கிழக்கு) எதிரா, அதும் பக்கத்துல தலைய வெச்சு வடக்குப் பக்கம் பாத்து, ஆம்பளங்க அஷ்டாங்க நமஸ்காரம் செய்யணும். தலை, நெத்தி, ரெண்டு கை, ரெண்டு முழங்கால், ரெண்டு காது இந்த ஆறும் தரையில படும்படியா செய்யறது அஷ்டாங்க நமஸ்காரம்.

அஷ்டாங்க நமஸ்காரம் செய்யும்போது நம்ம ரெண்டு கையும் வடக்க நீட்டி வணங்கணும். அதுக்கு அப்பறமா, மொதல்ல வலக் கை, அப்பறமா இடக் கையை அப்பிடியே பின்னால கொண்டு வரணும். அதுக்கு அப்பறமா மொதல்ல வலக் காது, பிறகு இடக் காதுங்கற முறைப்படி காதுங்க தரையில படும்படியா வணங்கணும்.

ஆனா, லேடீஸ் இப்பிடி அஷ்டாங்க நமஸ்காரம், அதாவது எட்டு அங்கங்களும் பூமியில படும்படியா நமஸ்காரம் செய்யக் கூடாது. அவங்களுக்குப் பஞ்சாங்க நமஸ்காரம்தான். பஞ்சாங்க நமஸ்காரம்னு சொன்ன உடனே, சரி! பஞ்சாங்கத்தக் கையில வெச்சுக்கிட்டு நமஸ்காரம் பண்ணணும்னு நெனக்கக் கூடாது. தலை, ரெண்டு கை, ரெண்டு முழங்காலுங்க... இந்த அஞ்சு அங்கங்களும் தரையில படும்படியா செய்யறதுதான் பஞ்சாங்க நமஸ்காரம்.

கொடிமரத்தைத் தாண்டி கோயிலுக்குள்ள போயாச்சுன்னா, எந்த சந்நிதிலியும் யாரும் கீழ விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது. இப்படி கொடி மரத்துக்கிட்ட முடிச்சதுக்கு அப்பறமா, நந்திபகவான் கிட்ட நின்னு அவர் அனுமதிய மானசீகமாக வாங்கிக்கிட்டு உள்ள போவணும். மொதல்ல புள்ளயாரை வணங்கணும். தலையில குட்டிக்கிட்டுத் தோப்புக்கரணம் போடணும். பெண்கள் தலையில குட்டிக்கலாமே தவிர, தோப்புக்கரணம் போடக் கூடாது. பிள்ளயார் முன்னால, லேடீஸ்ங்களுக்குத் தோப்புக்கரணம் கெடையாது.

இப்ப நாம கிழக்க பாத்த சந்நிதியப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம். சாமிக்கு வலக் கைப் பக்கமா நின்னு, வடக்கு திசையப் பாத்தபடி கும்புடணும். ஆண்கள் கையைத் தலைக்கு மேல தூக்கியும், பெண்கள் நெஞ்சோடு நெஞ்சா கை கூப்பி வெச்சும் கும்புடணும். இனிமே தெற்கு பாத்து இருக்கற சாமி சந்நிதியில எப்படிப் பண்ணணும்னு பாக்கலாம். பலிபீடத்துகிட்ட, தென்மேற்கு திசை பக்கத்துல ஏற்கெனவே சொன்னபடி தலை வெச்சு (கால்கள் தெற்குப் பக்கமாக இருக்கும்படி) அஷ்டாங்க நமஸ்காரம் செய்யணும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம்தான் பண்ணணும்.

பிள்ளயார் வழிபாடு ஏற்கெனவே சொன்ன மாதிரிதான். சாமி சந்நிதிக்குப் போன உடனே சாமிக்கு வலக் கைப் பக்கமா நின்னு, அதாவது மேற்குத் திசையில நாம நின்னு கிழக்க பாத்தபடி கும்புடணும். அடுத்தது, மேற்கே பாத்து இருக்கற சாமி சந்நிதியில என்ன செய்யணும்னு சொல்றேன். பலிபீடத்து கிட்ட தென்மேற்கு திசை பக்கத்துல முன்னாடியே பாத்த மாதிரி ஆண்களும், பெண்களும் தலை வடக்கேயும், காலு தெற்குப் பக்கமாகவும் இருக்கற மாதிரி நமஸ்காரம் பண்ணணும். பிள்ளயார் வழிபாடு வழக்கப்படி. உள்ள சாமி சந்நிதியில சாமிக்கு இடப் பக்கமா நின்னு, அதாவது நாம தெற்கே நின்னு வடக்க பாத்தபடி கும்புடணும்.

இப்ப வடக்கே பாத்தா மாதிரி இருக்கற சந்நிதியில எப்படி சாமி தரிசனம் பண்ணணும்னு பார்ப்போம்.

பலிபீடத்தோட வாயு மூலையில அதாவது வடமேற்கு திசையில தலைய வெச்சு, கால மேற்குப் பக்கமா நீட்டி ஏற்கெனவே சொன்ன மாதிரி நமஸ்காரம் செய்யணும். பிள்ளயாருக்கு எப்பிடி வழிபாடு பண்ணணும்னு உங்களுக்கே தெரியும். அத முடிச்சுட்டு உள்ள சாமி சந்நிதிக்குப் போன உடனே சாமிக்கு இடக் கைப் பக்கமா, மேற்கே நின்னு கிழக்கே பாத்தபடி தரிசனம் பண்ணணும்.

மூலவரையும், சுத்தி உள்ள தெய்வங்களயும் தரிசனம் பண்ணிட்டு அப்பறமா, மூலஸ்தான அம்பாள தரிசனம் செய்யணும். எந்த எந்த சாமிய தரிசனம் செய்யறோமோ, அந்த அந்த சாமிக்கு உண்டான ஸ்தோத்திரங்களத் தெரிஞ்சா சொல்லலாம். அதுக்குனு பாட்டுப் பாடறோம் பேர் வழின்னு கத்தக் கூடாது. அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாமச் சொல்லணும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by krishnaamma on Fri Dec 27, 2013 2:43 pm

வாவ் ! மீண்டும் இந்த திரில போஸ்ட் பண்ணதுக்கு ரொம்ப சந்தோஷம் புன்னகை தொடருங்கள் சிவா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum