ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ராஜா Today at 2:46 pm

» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by ராஜா Today at 2:45 pm

» ஏழை
by sasi143kumar Today at 2:44 pm

» அறிமுகம்
by பிளேடு பக்கிரி Today at 2:43 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 2:43 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ராஜா Today at 2:41 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by prabatneb Today at 2:36 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 2:35 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by யினியவன் Today at 2:33 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:29 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

விண்டோஸ் 7 மாறப் போறீங்களா !

View previous topic View next topic Go down

விண்டோஸ் 7 மாறப் போறீங்களா !

Post by மதன் on Mon Dec 20, 2010 10:01 am

மெதுவாக மக்களிடையே புதிய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும், ஆபீஸ் 2010க்கும் மாற வேண்டும் என்கிற ஆசை வளர்ந்து வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற விரும்புகிறவர்கள் முன் உள்ள கேள்வி, இந்த புதிய சிஸ்டம் 32 பிட் ஆக இருக்க வேண்டுமா? அல்லது 64 பிட்டாக இருக்கலாமா? என்பதுதான். இது குறித்து பல வாசகர்கள் நமக்கும் கடிதங்கள் எழுதி உள்ளனர். இந்த பிரச்னை குறித்து இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டம் மாற விரும்புபவர்கள், முதலில் எந்த எடிஷனுக்கு மாறப் போகிறார்கள் என்பதனை முடிவு செய்திட வேண்டும். குறைந்தது மூன்று வகையான பிரிவுகள் உள்ளன. விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், விண்டோஸ் 7 புரபஷனல் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இந்த மூன்றில் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சற்று விலை குறைந்தது. அல்டிமேட் விலை அதிகம். விலைக்கேற்ற வகையில் கூடுதல் வசதிகள் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
தனி நபர் பயன்பாட்டிற்கு, விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் எடிஷனே போதுமானது. மற்ற இரண்டும் பெரும்பாலும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கம்ப்யூட்டர் வல்லுநர்கள் பயன்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதனை முடிவு செய்த பின்னரே, 32 அல்லது 64 பிட் சிஸ்டம் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த இரண்டுக்கும் என்ன வேறுபாடு? கீழே காணலாம்.
1. உங்கள் கம்ப்யூட்டரில், 64 பிட் இணையான சிபியு ப்ராசசர் இருப்பின், 64 பிட் விண்டோஸ் 7 எடிஷன் பதிய வேண்டும். இதற்கு கம்ப்யூட்டருடன் வந்த குறிப்புரையில் சிபியு குறித்த தகவல்களைப் பார்க்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவரிடம், 64 பிட் செக்கர் போன்ற புரோகிராம்களை இயக்கிப் பார்க்கலாம்.
2. 32 பிட் சிஸ்டத்தில் ராம் மெமரி யூனிட் 4 கிகா பைட் வரையறையுடன் கிடைக்கிறது. அதாவது, இன்னும் கூடுதலாக ராம் மெமரியை நீங்கள் இன்ஸ்டால் செய்தாலும், 4 கிகா பைட் மெமரி மட்டுமே செயல்படும். இதனை விலக்கி, கூடுதலாகச் செயல்பட வைக்க, நிறைய செட்டிங்ஸ் அமைப்பினை மேற்கொள்ள வேண்டும். சாதாரணமாகப் பயன்படுத்துவோருக்கு அது இயலாது. இந்த 4 கிகா பைட் ராம் மெமரியும் முழுமையாக விண்டோஸ் இயக்கத்திற்குக் கிடைக்காது. வீடியோ கார்ட் போன்ற சாதனங்கள் இந்த ராம் மெமரி இடத்தைத் தான் எடுத்துக் கொள்கின்றன. மைக்ரோசாப்ட், 64 பிட் விண்டோஸ் 7 எடிஷனில், ராம் மெமரியில் பயன்பாட்டிற்குக் கிடைப்பதனைத் தானாக வரையறை செய்துள்ளது. விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் எடிஷனுக்கு 16 ஜிபி, அல்டிமேட் மற்றும் புரபஷனல் எடிஷனுக்கு 192 ஜிபி என வரையறுத்துள்ளது.
3. 64 பிட் எடிஷனில் பல கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. டேட்டா எக்ஸிகியூஷன் பாதுகாப்பு மற்றும் கெர்னல் பாதுகாப்பு ஆகியன தரப்பட்டுள்ளன. இதனால் நம் பயன்பாட்டின் போது என்ன தடை ஏற்பட்டாலும், இழப்பு எதுவும் நேராது.
4. சில தடைகளும் விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்குவதில் உள்ளன. இது சில பயனாளர்களுக்கு அதிகச் சிக்கலைக் கொடுக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டத்தின், 64 பிட் எடிஷனில், 16 பிட் அப்ளிகேஷன்கள் இனி இயங்கவே இயங்காது. எனவே பல ட்ரைவர் அப்ளிகேஷன்கள் மாற்றப்பட வேண்டும். சில ஹார்ட்வேர் சாதனங்களும் இதனுடன் இணைந்து இயங்காத நிலை ஏற்படும்.
5. தற்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான 32 பிட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்,64 பிட் சிஸ்டத்தில் தொடர்ந்து இயங்கும். ஆனால் சில அப்ளிகேஷன்கள் இயங்கா நிலை அல்லது (32 பிட் சிஸ்டத்தில் இயங்கும் வேகத்தைக் காட்டிலும் ) மிக மிக மெதுவாக இயங்கும் நிலை ஏற்படும்.
6. விண்டோஸ் 64 பிட் எடிஷன்களில், விண்டோஸ் 7 இன்ஸ்டலேஷன் ஹார்ட் டிரைவில் சற்றுப் பெரிய அளவில் அமையும். விண்டோஸ் 7, 32 பிட் எடிஷன்களுக்கு, மைக்ரோசாப்ட் 16 கிகா பைட் ஸ்பேஸ் இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளது. 64 பிட் எடிஷன்களுக்கு 20 கிகா பைட் இடம் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
மேலே கூறியுள்ள தகவல்கள் இன்னும் உங்களுக்கு ஒரு தெளிவைத் தரவில்லை என்றால், உங்களிடம் உள்ள, நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும், கட்டாயமாக நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களின் தன்மைகளைக் குறித்துக் கொண்டு, பின் மேலே கூறப்பட்டுள்ளவற்றை இணைத்துப் பார்த்தால் தெளிவு கிடைக்கும்.
இருப்பினும் சுருக்கமாக ஒரு முடிவிற்கு வரலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிபியு, விண்டோஸ் 64 பிட் எடிஷனுக்கு இணைவாக இயங்குவதாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரியை 4 கிகாபைட் அல்லது கூடுதலான அளவிற்கு உயர்த்துவதாக இருந்தால், 64 பிட் விண்டோஸ் எடிஷன் இன்ஸ்டால் செய்திடலாம்.
ஆனால், நீங்கள் இன்னும் பழைய 16 பிட் சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்தால், அல்லது அந்தக் காலத்து கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்தில் இருந்தால், விண்டோஸ் 32 பிட் சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடலாம்.

நன்றி : கம்ப்யூட்டர் மலர்

மதன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum