ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை பற்றி - கோபால்
 T.N.Balasubramanian

மாலை நேரம் மழை தூறும் காலம்
 Devi Vennimalai

“ நீரா ” பானம்...!!
 T.N.Balasubramanian

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 T.N.Balasubramanian

உங்கள் ஒத்துழைப்பு தேவை.
 T.N.Balasubramanian

அதுக்கு பேரு பதுங்கு குழி மொழியாம்..!!
 T.N.Balasubramanian

உங்கள் கருத்தென்ன ?
 T.N.Balasubramanian

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!
 Devi Vennimalai

தயவு செய்து தரவிறக்கு கொள்ளுங்கள் - மனிதனும் மர்மங்களும் - நூல்
 s.karnan

வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
 velang

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
 sridevimuthukumar

புனிதமானவர் தினகரன்-நாஞ்சில்
 krishnaamma

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
 krishnaamma

நான் காயத்ரி
 krishnaamma

நரகாசுரனை கொன்னது யாரு?
 krishnaamma

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

புத்தகம் படிக்கலாம் வாங்க.
 krishnaamma

வலையில் வசீகரித்தவை
 krishnaamma

தமிழ்நேசன் அவர்களுக்கு
 yuvarajej

கறி இல்லாததால் நின்று போன திருமணம் - மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த விருந்தினர்
 krishnaamma

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
 krishnaamma

மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
 krishnaamma

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
 krishnaamma

வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி
 krishnaamma

அட்சயதிரிதியை அன்று எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்?
 T.N.Balasubramanian

ஞாபகங்கள்
 சசி

வரலாற்றுத் துணுக்குகள்
 sugumaran

தோள் மீது கை
 M.Jagadeesan

விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
 ayyasamy ram

எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
 ayyasamy ram

மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
 ayyasamy ram

புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா?
 T.N.Balasubramanian

கணவன் – மனைவி ஜோக்
 T.N.Balasubramanian

நீ எப்போது கற்க போகிறாய் ?
 T.N.Balasubramanian

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 krishnaamma

அருமையான கடவுள் படங்கள் :)
 krishnaamma

இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம்
 ayyasamy ram

கிண்டல் என்பது...!
 ayyasamy ram

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 M.Jagadeesan

ஒரு சபதம்...
 krishnaamma

நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்...!!
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

உனக்கு நீதான் - சிறுவர் பாடல்
 krishnaamma

ரோஜாக்களை விற்பவன்
 krishnaamma

படித்ததில்_ரசித்தது....
 T.N.Balasubramanian

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்
 krishnaamma

பொன்விழா – கவிதை
 krishnaamma

எங்ஙனம் – கவிதை
 krishnaamma

ஆலாபனை செய்யும் கொசுக்கள்…
 krishnaamma

சிறுவர் பாடல்: யாருடைய குழந்தை?
 krishnaamma

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier
 krishnaamma

64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
 krishnaamma

வாழ்விற்கு அழகு சொந்தக்கால்…!
 krishnaamma

ஏனோ தடை செய்தாய் !
 krishnaamma

மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை.
 krishnaamma

தூக்கு தண்டனை – நகைச்சுவை
 krishnaamma

கரும்பலகை கதிரவனே..!
 krishnaamma

பயங்கர தண்ணி கஷ்டம்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik on Mon Dec 20, 2010 11:52 am

First topic message reminder :

முன்குறிப்பு :-
வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .

இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


நமக்கு கதையினா ரொம்ப புடிக்கும் , எனக்கு கத உடுரதுனா ரொம்ப ரொம்ப புடிக்கும் அதான் கதையுடன் தொடங்கலாமேனுட்டு ஹி ஹி கொசிகாதிங்க இனிமே சீரியசுதான்

அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.

அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.

மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.

சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.

1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?

3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?

4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?

5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?

இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.

மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .

பின்குறிப்பு :- இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு அன்பு மலர்Last edited by balakarthik on Tue Dec 28, 2010 5:32 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23828
மதிப்பீடுகள் : 2124

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by பிஜிராமன் on Sat May 12, 2012 10:46 am

பெரும்பாலும் ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக அல்லது ஓய்விற்காக மேற்கொள்ளப்படுவது ஹாபி என்பதாகும் இது வருவாய் சார்ந்த உழைப்பூதியத்தைக் காட்டிலும் ஆர்வம் மற்றும் இன்பம் நுகர்தலுக்காக பழக்கப்படுத்தப்பட்டது.


மிக்க நன்றிகள் அண்ணா....

இது நிச்சயமாக ஹாபியாகாது ராமன் இதை கட்டாயம் ஹாபி என்று குறிப்பிடக்கூடாது மேலும் அப்படி ஹாபி என்று ஏதாவது குறிப்பிடவேண்டுமென்றால் ஷேர் ட்ரேடிங் போன்றவட்ட்ரை குறிப்பிடலாம்


புரிந்து கொண்டேன் அண்ணா.....மிக்க நன்றிகள் நா புன்னகை மகிழ்ச்சி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik on Sat May 12, 2012 12:51 pm

மிக்க நன்றிகள் ராமன் - தனிமடல் பார்க்கவும் சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

நவீன நிறுவனங்கள், தங்களது தேர்வு அமைப்பைப் பயன்படுத்தி தேவையான பணியாளர்களை தேர்வு செய்வது அல்லது இதற்கெனவே இருக்கும் தனியார் அமைப்புகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுவது. இதில் எந்த முறையானாலும் தகுதியான, திறமையான பணியாளர்களை தேர்வு செய்ய கீழ்காணும் நான்கு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1. கல்வி தகுதி
2. எழுத்துத் தேர்வு
3. குழுவிவாதம்
4. நேர்முகத் தேர்வு

முதல் கட்டம்: விண்ணப்பதாரரின் கல்வி தகுதி, அவர் விண்ணப்பம் அனுப்பி இருக்கும் முறை, அதில் பயன் படுத்தியிருக்கும் வார்த்தைகள், கடித வாசகங்களை எழுதி இருக்கும் முறை, கல்வி தவிர முன் அனுபவம், மற்றும் பிற துறைகளில் இருக்கும் திறமை போன்றவைகளை அடிப்படையாக வைத்து அந்த நபரின் விண்ணப்பத்தை தேர்வு செய்வது.

இரண்டாவது கட்டமான எழுத்து தேர்வில் விண்ணப்பதாரின் கல்வித்திறன் சோதித்து அறியப்படுகிறது.

முன்றாவதாக குழுவிவாதம் மூலம் அந்த நபரின் அறிவுத்திறன், குழுவாக செயல்படும் திறன், சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப பேசுதல் செயல்படுதல் போன்ற திறன்கள் மதிப்பிடப்படுகின்றன.

இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு விண்ணப்பதாரரின் பிற குணங்களை அறிய உதவுகிறது.

நேர்முகத்தேர்வின் போது பொதுவாக ஐந்து முக்கிய அம்சங்களை தேர்வாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். அவை

1.தனித்திறமைகள்
2. தலைமைப் பண்பு திறமை
3.தொழில்நுட்பம், கல்வி மற்றும் பணித்திறன்
4. பொது விஷயங்களில் ஆர்வம்
5.தனிப்பட்ட குணாதிசயங்கள்

இந்த ஐந்து அம்சங்களும் நிறைந்தவரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதே தேர்வாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த குணங்களும் திறமைகளும் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அவரிடம் கேள்விகள் கேட்பதன் மூலமும், பொதுவான விபரங்கள் குறித்து பேசுவதன் மூலமும்தான் அறிய முடியும். இந்த வழி முறையைப் பின்பற்றித்தான் ஒருவரிடம் என்ன திறமைகள் இருக்கின்றது என்பதை தேர்வாளர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.

எனவே அதற்கு ஏற்ப நேர்முக தேர்வில் கலந்து கொள்பவர்களும் செயல்பட்டு தங்களது அனைத்துத் திறமைகளையும் தேர்வாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல் படுவது மிக அவசியம். கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பது மட்டுமே வெற்றியைத் தந்து விடாது, நமது உற்சாகமான மன நிலையும், கலகலப்பானப் பேச்சுத் திறமையும், நமது கண்ணியமான உடல் அசைவுகளும் நம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை தேர்வாளர்கள் மனதில் தேற்றுவிக்க வேண்டும். அப்போது தான் ஏராளமான போட்டியாளர்கள் மத்தியில் நாம் தனித்து தெரிவோம்.

இதோ உங்களுக்காக ஒரு நேர்ர்முகதேர்வு பயிற்சி காணொளி இணைத்துள்ளேன் இதில் உங்கள் பலம் மற்றும் பலவினங்களை எவ்வாறு தெரிவிப்பதேன்று அருமையாக விளக்கியுள்ளார்கள்


மெலுன் சந்தேகங்கள் மற்றும் உதவி தேவைப்பட்டால் கேட்கவும் என்னால் முடிந்தவரை தீர்த்துவைக்கமுயல்கிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23828
மதிப்பீடுகள் : 2124

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik on Sat Jun 02, 2012 6:29 pm

மீண்டும் சில கருத்துகளுடன் இந்த பதிவை தொடர்கிறேன்

முதன் முதலாக ஒரு வேலையைச் செய்கிற போது மலையைப் பெயர்த்த களைப்பும் பெருமிதமும் நமக்கு உண்டாகும். அதையே தொடர்ந்து செய்கிற போது அது ஒரு வேலையாகவே தெரியாது. அதில் ஒரு Unconcious Competence வந்து விடும்.இதனால்தான் ஒரு வேடிக்கையான வாக்கியம் கூட உண்டு, ‘Everything is difficult before it becomes easy’ என்று.

சில மாதங்களுக்கு முன் இரண்டு Marketing Executiveக்களை தேர்ந்தெடுக்கிற பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். பொறுப்பு என்றால், விளம்பரம் எப்படிக் கொடுப்பது என்பதில் ஆரம்பித்து வருகிற விண்ணப்பங்களை வடிகட்டி நுழைவுத் தேர்வுக்கு தெரிவு செய்து, நுழைவுத் தேர்வு வினாத்தாள் அமைத்து, அதை திறனாய்ந்து நேர்முகப் பேட்டிக்கு ஆள் தெரிவு செய்து அதில் வருகிறவர்கள் தகுதியானவர்களா என்று தேர்ந்தெடுக்கிற வரை….

ஆயிரத்தி நானூறு விண்ணப்பங்கள்! இந்த முதல் வடிகட்டி கொஞ்சம் கவனமாகக் கையாள வேண்டியது. ஏகப்பட்ட விண்ணப்பங்கள் என்பதால் அலுப்பில் சில தகுதியான விண்ணப்பங்கள் விடுபட்டுப் போகிற வாய்ப்புகள் அதிகம். அதனால் உட்கார்ந்து ஒவ்வொன்றையும் கசடறக் கற்க வேண்டியிருந்தது.அவற்றிலிருந்து ஐம்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரிதான் ஆப்பர்சுனிட்டி அதிகம் என்று பீராய ஆரம்பித்தால், பாதிக்கு மேல் கேட்ட தகுதிகள் இல்லாதவர்கள். மீதியில் பாதி ஏற்கனவே அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர்கள். தகுதியும் சம்பளமும் சரியாக அமையப் பெற்றவர்களில் பலர் கேட்ட துறைக்கு தொடர்பில்லாத வேலைகள் செய்பவர்கள். எல்லாம் சரியாக இருப்பவர்கள் ரொம்ப சின்ன நிறுவனங்களில் இருப்பவர்கள்.

விண்ணப்பங்கள் பல ரகம்.இணைப்புக் கடிதம் இன்றி ஒரே பக்க பையோ டேட்டாக்கள், மிகச் சம்பிரதாயமான வாக்கியங்களுடன் எழுதப்பட்டவை (I beg to submit etc), பயங்கர உதாராக தயார் செய்யப்பட CV க்கள், அறுபத்தி நாலு பக்க விண்ணப்பங்கள்!, தன்னை இந்திரன் சந்திரன் என்று வர்ணித்துக் கொண்ட விண்ணப்பங்கள், ஒண்ணரையணா விஷயங்களை பெரிய்ய ராக்கெட் லான்ச்சிங் லெவெலில் மிகைப்படுத்தின விண்ணப்பங்கள், என்னை நம்பி ஏகப்பட்ட ஜீவன்கள் எப்படியாவது இந்த வேலையைக் கொடு என்று கண்ணீர் வாசகங்கள் அடங்கிய விண்ணப்பங்கள், இருக்கிற நிறுவனத்தின் மீது அதிருப்தி வெளிப்படுத்தும் விண்ணப்பங்கள்(கம்பெனி முழுக்க இன்ன ஜாதிக்காரர்கள் ஆதிக்கம், இன்ன மாநிலக்காரர்கள் ஆதிக்கம் என்கிற ரீதியில்), கம்பெனியிலேயே ஒரு ஓரமாக கொட்டாய் போட்டுக் கொடுத்து விடு அங்கேயே இருந்து அங்கேயே செத்துப் போவேன் என்கிற மாதிரி அதீத சத்தியங்கள்…..

உண்மையில் பல்வேறு விண்ணப்பங்கள் குறித்து ஒரு இடுகையே போடலாம்!கொஞ்சம் மனோதத்துவம், கொஞ்சம் காம்ப்ரமைஸ், கொஞ்சம் ரிஸ்க் எல்லாம் கலந்து நூறு விண்ணப்பங்கள் தேர்ந்தெடுத்தேன்.நுழைவுத் தேர்விலேயே எழுபது பேர் பணால்!ஆனால், ரிலவன்ஸ் இருக்கிற ஆசாமிகள் அதில் இருக்கிறார்களா என்று பார்த்து அங்கேயும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருந்தது.நேர்முகப் பேட்டி அதை விட சுவாரஸ்யம்.

கேட்டதற்கெல்லாம் சட் சட்டென்று ‘தெரியாது’ என்று சொல்லி விட்டு சடுதியில் எழுந்து போனவர்கள் ஒரு ரகம்.தெரியாது என்கிற சொல்லையே பயன் படுத்தாது கேட்டதற்கெல்லாம் தாங்கள் புரிந்து கொண்ட ரீதியில் பதில் சொன்னவர்கள்.உங்கள் கேள்வியையே எதிர் பார்க்காது ரேடியோ ஜாக்கி மாதிரி இடை விடாது பேசுகிற பிரகிரிதிகள். தங்களுக்கு வேண்டிய இடத்துக்கு உங்களை அழைத்துப் போகிற ஆசாமிகள். போலீஸ் விசாரணை மாதிரி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி பதுங்கியவர்கள்.எல்லாம் முடிந்து சம்பளப் பேரம் வரும் போது இசகு பிசகாக சம்பளம் கேட்டவர்கள்.(ஒருத்தர் கேட்ட சம்பளம் என் யூனிட் தலைவரையே அதிர வைத்தது). இன்னும் சிலர் அந்த சலுகை உண்டா, இந்த சலுகை உண்டா என்று அடுக்கடுக்காகக் கேட்கிற போது பேசாமல் நாம் ஏன் அவன் வேலைக்குப் போகக் கூடாது என்று தோன்ற ஆரம்பித்தது.

நாலு பேரை தேர்ந்தெடுப்பதற்குள் தாலி அறுந்து விட்டது.இரண்டு பேருக்கு உத்தரவு அனுப்பி விட்டு இரண்டு பேரை கண்டின்ஜென்சியாக ரிசர்வில் வைத்தோம். அதிலும் நான் சொன்ன இருவரில் என்னால் கொஞ்சமும் ஒப்புக்கொள்ள முடியாத, கொஞ்சம் தகுதிக் குறைவான ஆசாமியை பர்சான்னல் மேனேஜர் தேர்ந்தெடுத்தார். என்னைப் பேசவே விடாமல் ‘ப்ளீஸ் வெய்ட் அண்ட் ஸீ’ என்று அடக்கினார்.வந்த மூன்று மாதங்களில் நான் தேர்ந்தெடுத்த ஆசாமி ஓடி விட்டான்.

“ரொம்பத் தகுதியா இருக்கிறவனுக்கு மார்க்கெட் வால்யூ அதிகம். கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணா அவன் ஓடவும் மாட்டான், சின்சியராவும் இருப்பான்” என்பது இறுதியில் அவர் எனக்கு விளக்கிய நடைமுறைப் பாடம்!ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23828
மதிப்பீடுகள் : 2124

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by யினியவன் on Sat Jun 02, 2012 7:02 pm

உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்தது பயனுள்ளது பாலா.

என் அனுபவத்தில் நான் செய்வது இது தான் - எந்த தகுதி வேண்டுமோ அதற்கு ஒரு நிலை கீழே உள்ளவரே நன்று. கற்றுக் கொள்வார்கள் - அதோடு கொஞ்ச வருஷங்கள் நிலைப்பார்கள்.

கேட்கும் தகுதி இருப்பவர்கள் எனக்கு எல்லாம் தெரியும் மனப்பான்மை மற்றும் கொஞ்ச நாளில் இதை விட சேலஞ்சிங்கா இல்லை என்றால் அவர்களின் பெர்பார்மன்ஸ் குறைந்து விடும்.

இதற்கு ஒரு நிலையான சரியான முறை என்பது இல்லை - ஒவ்வொருவரும் ஒரு விதம். நாமளும் அதையே தானே செய்கிறோம் அடுத்த வேலைக்கு செல்லும் பொழுது - ஒரு பயலும் கூப்பிட மாடேன்றானே கொஞ்ச நாளா. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik on Sat Jun 02, 2012 7:06 pm

@யினியவன் wrote:என் அனுபவத்தில் நான் செய்வது இது தான் - எந்த தகுதி வேண்டுமோ அதற்கு ஒரு நிலை கீழே உள்ளவரே நன்று. கற்றுக் கொள்வார்கள் - அதோடு கொஞ்ச வருஷங்கள் நிலைப்பார்கள்.
நிச்சயமா இதை நான் அன்றுத்தான் புரிந்துகொண்டேன் என்ன இருந்தாலும் அனுபவம் அனுபவம்த்தான் கத்துக்குட்டி கத்துகுட்டித்தான் சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23828
மதிப்பீடுகள் : 2124

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by யினியவன் on Sat Jun 02, 2012 7:22 pm

பாலா இந்த தளத்தை பாருங்கள் - எப்படி அணுகுவது 64 கடினமான நேர்முக தேர்வு கேள்விகளை என்ற புத்தகத்தை. இது ஆங்கில புத்தகம் - தமிழாக்கம் செஞ்சா என் ஆயுசு முடிஞ்சிடும். நீங்க ஏற்கனவே பார்த்திருக்கலாம், படித்திருக்கலாம். முதல் பக்கத்தில் வேணுமுன்னா இணைத்து விடுங்கள் - நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

http://soulsearch.files.wordpress.com/2007/05/64interviewquestions1.pdf

pdf புத்தகத்தை இணைக்க முடியாதா இங்கு?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik on Sat Jun 02, 2012 7:28 pm

@யினியவன் wrote:பாலா இந்த தளத்தை பாருங்கள் - எப்படி அணுகுவது 64 கடினமான நேர்முக தேர்வு கேள்விகளை என்ற புத்தகத்தை. இது ஆங்கில புத்தகம் - தமிழாக்கம் செஞ்சா என் ஆயுசு முடிஞ்சிடும். நீங்க ஏற்கனவே பார்த்திருக்கலாம், படித்திருக்கலாம். முதல் பக்கத்தில் வேணுமுன்னா இணைத்து விடுங்கள் - நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

http://soulsearch.files.wordpress.com/2007/05/64interviewquestions1.pdf

pdf புத்தகத்தை இணைக்க முடியாதா இங்கு?

இந்த லிங்க் அப்படியே இருக்கட்டும் நான் இப்போத்தான் தரவிறக்கினேன் படித்து தமிழில் பதிவிடுகிறேன் தேவையானவர்கள் இதையே கூட தரவிரக்கிகொள்ளட்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23828
மதிப்பீடுகள் : 2124

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by யினியவன் on Sat Jun 02, 2012 7:32 pm

@balakarthik wrote:இந்த லிங்க் அப்படியே இருக்கட்டும் நான் இப்போத்தான் தரவிறக்கினேன் படித்து தமிழில் பதிவிடுகிறேன் தேவையானவர்கள் இதையே கூட தரவிரக்கிகொள்ளட்டும்
தமிழாக்கத்தை வரவேற்கிறோம். சூப்பருங்கavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by தர்மா on Sat Jun 02, 2012 7:37 pm

இண்டர்விஎவ் செல்லும் பொது கன்பிடேன்ஸ் லெவல் இருக்க வேண்டும் பெரும்பாலான இண்டர்விஎவ் வில் நாம் உள்ளே செல்லும்போதே பாதி நம்பிக்கை இழந்து தான் செல்கிறோம் அது தவிர்க்க படவேண்டும்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik on Sat Jun 02, 2012 7:47 pm

@தர்மா wrote:இண்டர்விஎவ் செல்லும் பொது கன்பிடேன்ஸ் லெவல் இருக்க வேண்டும் பெரும்பாலான இண்டர்விஎவ் வில் நாம் உள்ளே செல்லும்போதே பாதி நம்பிக்கை இழந்து தான் செல்கிறோம் அது தவிர்க்க படவேண்டும்
நிச்சயமாக இது மிகபெரும் பிரேச்சனைத்தான் தர்மா சார் நிறையா பேர் வேலை வாய்ப்பை இழப்பதற்கு இதுத்தான் முக்கிய காரணம் அதேநேரம் ஓவர் கான்பிடன்சும் ஒடம்புக்கு ஆகாது என்பதும் அதிமுக்கியம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23828
மதிப்பீடுகள் : 2124

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by பிஜிராமன் on Sat Jun 02, 2012 7:49 pm

அருமையான ஆரோக்கியம் நிறைந்த பதிவுகள் அண்ணா...மிக்க நன்றிகள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by தர்மா on Sat Jun 02, 2012 7:50 pm

சரியாக சொன்னீர்கள் தம்பி. இதை எல்லாம் மீறி நமக்கும் இண்டர்விஎவ் நடத்தும் நபருக்கும் கொஞ்சம் chemistry வேண்டும். இந்த அனைத்தும் கூடி தான் எதிர்காலம் தீர்மானிக்க படுகிறது. அதுவும் தனியார் துறையில் ஒரு நபரின் திறமை அடிகடி எடை போடபடுகிறது ஒவ்வொரு முறையும் புதிய நபர் பணியில் சேரும்போது.

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by தர்மா on Sat Jun 02, 2012 7:53 pm

எனது சிறய வேண்டுகோள் வேலை தேடுபவர்களுக்கு. நாம் செல்லும் நிறுவனத்தை பற்றிய அறிவு கொஞ்சம் சேகரித்து செல்ல வேண்டும் மேலும் அதன் pottiaalarkalai பற்றியும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால் வேலை செய்யபோகும் நிறுவனத்தை கூட தெரியாமல் நிறைய பேர் வந்து அதனால் வாய்ப்பை இழக்கிறார்கள்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by தர்மா on Sat Jun 02, 2012 7:54 pm

பீ ஜி விநாயக மெஸ் பற்றிய செய்தி பார்த்தீர்களா
@பிஜிராமன் wrote:அருமையான ஆரோக்கியம் நிறைந்த பதிவுகள் அண்ணா...மிக்க நன்றிகள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி
@பிஜிராமன் wrote:அருமையான ஆரோக்கியம் நிறைந்த பதிவுகள் அண்ணா...மிக்க நன்றிகள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by பிஜிராமன் on Sat Jun 02, 2012 7:57 pm

@தர்மா wrote:பீ ஜி விநாயக மெஸ் பற்றிய செய்தி பார்த்தீர்களா
@பிஜிராமன் wrote:அருமையான ஆரோக்கியம் நிறைந்த பதிவுகள் அண்ணா...மிக்க நன்றிகள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி
@பிஜிராமன் wrote:அருமையான ஆரோக்கியம் நிறைந்த பதிவுகள் அண்ணா...மிக்க நன்றிகள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமாம் அண்ணா பார்த்தேன்...பதிலிட மறந்தேன் மன்னிக்கவும் அண்ணா......நான் அந்த மெஸ் இல் அடிக்கடி சாப்பிடிருக்கிறேன் அண்ணா....நீங்கள் வெறும் விநாயகம் என்று கூறியதும் எனக்கு குழம்பி விட்டது........காசி விநாயகம் என்றிருந்தால், அட நம்ம மெஸ் என்று கூறி இருப்பேன் அண்ணா...... புன்னகை சூப்பருங்க
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik on Sat Jun 02, 2012 7:58 pm

@தர்மா wrote:சரியாக சொன்னீர்கள் தம்பி. இதை எல்லாம் மீறி நமக்கும் இண்டர்விஎவ் நடத்தும் நபருக்கும் கொஞ்சம் chemistry வேண்டும். இந்த அனைத்தும் கூடி தான் எதிர்காலம் தீர்மானிக்க படுகிறது. அதுவும் தனியார் துறையில் ஒரு நபரின் திறமை அடிகடி எடை போடபடுகிறது ஒவ்வொரு முறையும் புதிய நபர் பணியில் சேரும்போது.

நிச்சயமாக அதிலையும் இந்த நேர்முக தேர்வுக்கு காதிருக்கும்போழுதுத்தான் நிறையா பேருக்கு பயம் அதிகமாகிறது என்னை பொறுத்தவரை அந்த நேரத்தில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் நடவடிக்கைகளை கவனமாக பார்க்கவேண்டும் குறிப்பாக யாராவது வாடிக்கையாளர்கள் வந்தால் அவர்கள் எவ்வாறு பேசுகிறார்கள் என்ன கேட்கிறார்கள் அவர்களின் தேவைகள் அதற்க்கு ஊழியரின் நடவடிக்கை செயல்பாடுகள் போன்றவை கவனித்து நேர்முக தேர்வில் அதை நடுவில் கொஞ்சம் சேர்த்து சொன்னால் நம்மீது அவர்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு வரலாம் அதுவே நமக்கு வேலை கிடைக்க நல்ல பிரகாசமான வழியை காட்டும் மேலும் நமது உடை போன்றவை கூட சில சமயம் நமது நம்பிக்கையை குலைத்துவிடும் சில கம்பெனிகளில் நெற்றியில் விபுதி வைப்பது கூட பிழையாக என்ன வாய்பிருக்கிறது முடிந்தவரை சிம்பிளாகவும் அதேநேரத்தில் கம்பிரமாகவும் உடை அணிய பழகிக்கொள்ளவேண்டும் குறிப்பாக மத ரீதியிலான குறியீடுகளை தவிர்ப்பது நல்லது உதாரணத்திற்கு நெற்றியில் விபுதி பூசுவது போன்றவை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23828
மதிப்பீடுகள் : 2124

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by யினியவன் on Sat Jun 02, 2012 8:00 pm

@பிஜிராமன் wrote:ஆமாம் அண்ணா பார்த்தேன்...பதிலிட மறந்தேன் மன்னிக்கவும் அண்ணா......நான் அந்த மெஸ் இல் அடிக்கடி சாப்பிடிருக்கிறேன் அண்ணா....நீங்கள் வெறும் விநாயகம் என்று கூறியதும் எனக்கு குழம்பி விட்டது........காசி விநாயகம் என்றிருந்தால், அட நம்ம மெஸ் என்று கூறி இருப்பேன் அண்ணா...... புன்னகை சூப்பருங்க
உங்களுக்கு சோறு போட்ட பாவத்த கழுவ அவரு காசிக்கு போனதில இருந்து தான் காசி விநாயகம் மெஸ் ஆயிடுச்சாமே?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by பிஜிராமன் on Sat Jun 02, 2012 8:07 pm

எனக்கு ஆகஸ்ட் மாதம் நேர்முகத்தேர்வு இருக்கிறது அண்ணாக்களே.......உங்களின் இந்த பதிவுகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்........என்று நம்புகிறேன்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by தர்மா on Sun Jun 03, 2012 9:25 am

இண்டர்விஎவில் தயவு seithu யாரும் பரிதாபம் தேட முயர்ச்சிக்கதீர்கள். அது தான் முதல் disqualification

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik on Sun Jun 03, 2012 10:06 am

@பிஜிராமன் wrote:எனக்கு ஆகஸ்ட் மாதம் நேர்முகத்தேர்வு இருக்கிறது அண்ணாக்களே.......உங்களின் இந்த பதிவுகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்........என்று நம்புகிறேன்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராமன் நீங்கள் ரொம்ப திறமைசாலி.உங்களுக்கு நான் சொல்லிகொள்வது ஒன்றுத்தான் முதல் interview வேலை கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம் உங்கள் திறமையை மற்றவர்கள் அறியவே இல்லை என்று கவலை வேண்டாம் உன் திறமை வெளிப்படாததற்குக் காரணம் இருக்கிறது.சுகம். சௌகர்யம். பாதுகாப்பு.இவையெல்லாம் இருக்கும் வரை உன் திறமை வெளியே வரவே வராது.உன் சுகத்தை நீயே கெடுத்துக் கொள். உன் சௌகர்யத்தை அசௌகர்யாமாக்கிக் கொள். பாதுகாப்பில்லாதவனாக மாறு. உன் திறமை வெளி வரும். வந்தே தீரும். நோகாமல் நுங்கு தின்ன முடியாது. கழுத்தில் கத்தியை வை.நீ யாரென்று உலகம் அறியும். நிச்சயம் வெற்றி தான் ஆல் தி பெஸ்ட் ராமன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23828
மதிப்பீடுகள் : 2124

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by பிஜிராமன் on Sun Jun 03, 2012 10:48 am

சுகம். சௌகர்யம். பாதுகாப்பு.இவையெல்லாம் இருக்கும் வரை உன் திறமை வெளியே வரவே வராது


எவ்வளவு அருமையான விஷயம் அண்ணா...மிகவும் உண்மை அண்ணா.....

உன் திறமை வெளி வரும். வந்தே தீரும். நோகாமல் நுங்கு தின்ன முடியாது. கழுத்தில் கத்தியை வை.நீ யாரென்று உலகம் அறியும். நிச்சயம் வெற்றி தான் ஆல் தி பெஸ்ட் ராமன்

நிச்சயமாக அண்ணா......மிக்க நன்றிகள்....... புன்னகை நன்றி நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by பிஜிராமன் on Sun Jun 03, 2012 11:17 am

அண்ணா ஒரு உதவி,

பினான்ஸ் மற்றும் அக்கௌடன்சி க்ளோசரி pdf வடிவில் கிடைக்குமா அண்ணா ....தாங்கள் வைத்திருந்தாள் கொடுங்கள்....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by யினியவன் on Sun Jun 03, 2012 11:20 am

பைனான்ஸ் புத்தகமா? நிதி உதவின்னு நெனச்சு பாலா எஸ் ஆயிட்டாரு ராமன்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by பிஜிராமன் on Sun Jun 03, 2012 11:23 am

@யினியவன் wrote:பைனான்ஸ் புத்தகமா? நிதி உதவின்னு நெனச்சு பாலா எஸ் ஆயிட்டாரு ராமன்.

ஆமாம் அண்ணா.....பைனான்ஸ் புத்தகம் தான்....க்லோச்சரி உடன் வேண்டும்....

ஹா ஹா நிதி உதவி லாம் உங்க கிட்ட தான் கேட்பேன்...
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by யினியவன் on Sun Jun 03, 2012 11:26 am

இந்த இணையத்தில் பாருங்கள் ராமன்:

http://wps.pearsoned.co.uk/wps/media/objects/3507/3591169/glossary/glossary_fa.htmlavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum