புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_m10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_m10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_m10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_m10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_m10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_m10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_m10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_m10தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் கருணா 2 வருடம் மறைந்திருந்தாரா?


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 23, 2010 3:35 am

நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல திடுக்கிடும் தகவலோடு வெளியாகி உலகையே அதிரவைக்கும் விக்கி லீக்ஸ் இணையம் இலங்கை குறித்தும் பல சூடான தகவல்களை வெளிப்படுத்தி வருகிறது. இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர்ட் ஓ பிளேக், 2007 மே 18-ம் தேதி தூதரகத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா ஆகியோரைப்பற்றிய அதிர்ச்சி யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன !

ஆயுதக் குழுக்களான ஈ.பி.டி.பி., கருணா குழு ஆகியவற்றுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நெருக்கம் இருந்ததையும், இவர்களுக்கு சந்திரிகா காலத்தில் இருந்து தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்பட்டதையும், விக்கிலீக்ஸ் ஆதாரங் களுடன் வெளியிட்டுள்ளது. புலிகள் என்று சந்தேகப் படுபவர்களைக் கடத்திச் சென்று கொலை செய்தார். சிறுவர்களைத் தனது ஆயுதக் குழுவில் கட்டாயப்படுத்தி கருணா சேர்த்தார். வியாபாரிகளிடம் பணத்தை வசூலித்துக்கொள்ள இந்த இரு ஆயுதக் குழுக்களுக்கும் கோத்தபய ராஜபக்ஷே அங்கீகாரம் அளித்தார்! என்று சொல்கிறது விக்கிலீக்ஸ். உச்சகட்டமாக, போரினால் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டு இருந்த அப்பாவித் தமிழ்ப் பெண்களை, சிங்கள ராணுவத்தினரின் தேவைக்காகப் பலவந்தப்படுத்தி கருணா விபச்சாரிகளாக்கினார் என்று அமெரிக்க தூதர் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2005 கிறிஸ்துமஸ் தினத்தில், மட்டக்களப்பு தமிழ் எம்.பி-யான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டதிலும், 2006 நவம்பர் 10-ம் தேதி இன்னொரு எம்.பி-யான நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டதிலும் கருணா ஆட்களின் பங்கு இருப்பதாகத் தன்னிடம் சிலர் கூறியதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டு உள்ளதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது.

டக்ளஸைப் பற்றியும் விளாவாரியாக விவரிக்கும் ரோபேட் ஓ ப்ளேக், கருணாவைப் பற்றிய முக்கிய தகவலைச் சொன்னதுதான் இந்த தகவலில் ஹைலைட் ! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2004-ல் பிரிந்த கருணா, 4,000 பேருடன் வெளியில் வந்தார். இதனால், புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், கருணாவைப் பாதுகாப்பாக இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு அனுப்பிவைத்தார் அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா. பிறகு, தமிழ்நாட்டில் இருந்து 2006 ஜூலையில்தான் கருணா இலங்கைக்குத் திரும்பினார். இலங்கையில் இல்லாத காலகட்டத்திலும், கருணா வெளிநாட்டில் இருந்தபடியே தன் ஆயுதக் குழுவை இயக்கிக்கொண்டு இருந்தார்! என்று அமெரிக்கத் தூதரே சொல்லி இருக்கிறார்.

இதுபற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் பிரச்னையைக் கிளப்பினார்கள். ஆனால், அந்த விவகாரம் பெரிதாக எழுந்துவிடாமல் அமுக்கப்பட்டது. இப்போது அமெரிக்க தூதர் ஒருவரே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கருணா, தமிழகத்துக்கு வந்ததாகக் குறிப்பிடப்படும் 2004-ம் ஆண்டில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்துகொண்டு இருந்தது. அப்போது, இங்கு பரந்தன் ராஜன் என்பவரின் தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி எனப்படும் ஈ.என்.டி.எல்.எஃப்-ம், கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனப்படும் டி.எம்.வி.பி-யும் இணைந்து தமீழீழ ஐக்கிய விடுதலை முன்னணி எனும் கூட்டு முன்னணியை உருவாக்கினார்கள். இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, அமைதித் தீர்வுக்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருந்தபோது, தமிழகத்தில் இந்த சேர்க்கை மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. தமிழகத்தில் நிலவிய புலி ஆதரவை உடைக்கும்படியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல காரியங்கள் நடத்தப்பட்டன.

இங்கு நடக்கும் ஈழத் தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில், இந்தக் குழுவினர் கலந்துகொண்டு கருணா வெளியேறியது நியாயமே என்று விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும், வெளியீடு களையும் விநியோகம் செய்வதில் தீவிரம் காட்டினர். சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருணாவைப் பற்றிய பிரசுரத்தை இக்குழுவினர் விநியோகிக்க முயன்றபோது, பெரியார் தி.க. அமைப்பினர் அதை எதிர்த்ததால், பிரச்னை ஏற்பட்டது. கடைசியில் கருணா ஆதரவாளர்கள் அங்கு இருந்து விரட்டப்பட்டனர். ம.தி.மு.க. ஊர்வலம் ஒன்றிலும் இதேபோலப் பிரசாரம் நடத்த முயன்றபோது கருணா ஆதரவாளர்களுக்கும், ம.தி.மு.க-வினருக்கும் மோதல் ஏற்பட்டது.

மாவீரர் நாளில் புலிப் போராளிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்தும் உரையைப்போலவே, கருணாவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் உரையாற்றுவதைப் போன்ற ஒரு வீடியோ தயாரிக்கப்பட்டது. தமிழகத்தில் 150 வீடியோ கேசட்டுகள் தயாரிக்கப்பட்டு, 30 ஆயிரம் படிகள் எடுக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள அகதி முகாம்களில் இவற்றை விநியோகிக்கவும் செய்தனர். பிரபாகரனை ஹிட்லராகச் சித்தரித்து போஸ்டர்கள் அடிக்கப்பட்டு, அகதி முகாம் உள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன. கருணா ஆதரவாளர்களின் இந்தச் செயல்பாடுகளை அறிந்த தமிழீழ ஆதரவாளர்கள் கோபமும் ஆவேசமும் அடைந்தனர். கருணா ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் பல இடங்களில் மோதலும் ஏற்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் ஆபத்து உண்டானது! என இலங்கை ஆய்வாளர் ஒருவரே அப்போது எழுதினார்.

கருணா குழுவின் இந்த எதிர்ச் செயல்பாடுகளால் புலிகளின் தலைமை கடும் கோபமடைந்தது. எதிரிகளின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளில்இறங்கியது.

இதற்கிடையில், தமிழகத்தில் சேர்ந்து இயங்கிய கருணா, பரந்தன் ராஜன் குழுவினர் இங்கு இருந்தபடியே இலங்கையிலும் நடவடிக்கையை விரிவுபடுத்தினார்கள். இதற்காக, தமிழகத்தில் 18 ஆண்டுகள் தங்கி இருந்த பரந்தன் ராஜன் குழுவின் முக்கிய ஆளான ரங்கப்பா என்பவர் இலங்கைக்குச் சென்றார். அங்கு போய் சிறிது காலத்திலேயே கொழும்பு புறநகர்ப் பகுதியில் அவர் கொல்லப்பட்டார். ராஜன் குழுவின் முக்கிய மூளையாக செயல்பட்ட மனோ மாஸ்டர் என்பவரும் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். திடீரென அவரும் கடத்தப்பட்டார். கருணாதான் அவரைக் கடத்தியதாக மனோவின் தாயார் யாழ்ப்பாணம் மனித உரிமை கவுன்சிலில் முறையிட்டார். அவர் விஷயத்தில் இன்று வரை சரியான தகவலே இல்லை.

இலங்கையில் இப்படி கருணா ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்த நிலையில், தமிழகத்தில் 2004 டிசம்பர் 5-ம் தேதி பரந்தன் ராஜன் உள்பட அவரது குழுவினர் ஒன்பது பேர் திடீரெனக் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரப்பட்டன. குடும்பத்தினருடன் பல மணி நேரம் உரையாட அனுமதிக்கப்பட்டது. வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டனர். டெல்லி தரப்பில் இருந்து அவர்களுக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது. பதிலுக்கு அவர்கள், விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராட 3,500 போராளிகள் தயார், என ஆதரவு கேட்டனர் என்று இலங்கை பத்திரிகைகளில் வெளிப்படையாகவே எழுதினார்கள்.

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள், மீண்டும் இந்தியாவுக்குள் வர மாட்டோம் என்ற உத்தரவாதத்தின் பேரில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போன மச்சான் திரும்பிவந்த கதையாக, சில மாதங்களில் கருணாவின் ஆதரவாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர். ஈழத்தில் படுகொலை கள் அதிகரிக்க அதிகரிக்க, தமிழகத்தில் புலிகளுக்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டேபோனது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து இயங்க முடியாமல் கருணா ஆதரவாளர்கள் தவித்தனர். அந்த நேரத்தில், பரந்தன் ராஜன் பெங்களூருவில் இந்திரா சர்வதேச அகடமி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அநாதைக் குழந்தைகள் காப்பகத்தை உள்ளடக்கிய இந்த நிறுவனத்துக்கு, டெல்லியில் இருந்து ஆசியும், ஆதரவும், உதவிகளும் பெருமளவில் வழங்கப்பட்டன என்பதை அந்தக் குழுவினரே பகிரங்கமாகச் சொல்கிறார்கள்.

இப்படியான சூழலில், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி முடிந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதன் பிறகு, 2006 ஜூலைவாக்கில் கருணா மீண்டும் இலங்கைக்குச் சென்றார் என்கிறது விக்கிலீக்ஸ் தகவல்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இங்கு கருணா ஆதரவாளர்கள் வெளிப் படையாகவே இயங்கினார்கள் என்று சொல்லும் இலங்கை ஆய்வாளர் ஒருவர், சமாதான ஒப்பந்தத்தை புலிகள் மீறியதாக நார்வே அமைதிக் குழுவுக்கு கோடம்பாக்கம் முகவரியில் இருந்து மனோ மாஸ்டர் புகார் அனுப்பியதாகக் குறிப்பிடுகிறார்.

சென்னையைப் பொறுத்தவரை கே.கே.நகர், கோடம் பாக்கம் பகுதிகளிலும், அகதி முகாம்களில் சேலத்தை மையமாகவைத்தும் கருணா ஆதரவாளர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். இதைத் தவிர, கருணா குழுவுக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு நீலகிரி மாவட்டத்தில் 90 கோடி மதிப்புள்ள ஒரு எஸ்டேட் இருக்கிறது. தேடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் சிறிது காலம் தலைமறைவாக இருக்க வேண்டுமானால், நீலகிரி எஸ்டேட்தான் அவர்களின் முக்கிய மறைவிடம். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், எதிரிகளின் கண்ணிலும் படாமல் அந்த எஸ்டேட்டில் பல ஆண்டுகள் பாதுகாப்பாகத் தங்குவதற்கான ஏற்பாடுகள் பலமாக வழங்கப்பட்டு இருந்தன. இதில்தான் கருணா தங்கி இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் உளவுப் பிரிவு அதிகாரிகள்.

தமிழினப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்த கருணா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தங்கியது தமிழ்நாட்டிலா ? என்ற அதிர்ச்சியில் இருந்து மீளாத தமிழ் உணர்வாளர்களுக்கு, இன்னும் என்னென்ன அதிர்ச்சிகளைத் தரக் காத்திருக்கிறதோ விக்கிலீக்ஸ் !


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 23, 2010 11:06 am

அட இவ்வளவு விஷயங்கள் நடந்துருக்கா ...... இவனுங்களையெல்லாம் தாண்டி எப்படி தமிழீழத்தை அடைய முடியும் ?!!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Dec 24, 2010 12:22 am

எங்க ஊருல தான் இருந்திருக்கான் கருங்காலிப்பய. தெரியாமப் போச்சே. தமிழீழம் இன்னும் ௧௦ ஆண்டுகளுக்குள் கிடைத்துவிடும். அதற்கான அனைத்து வேளைகளும் செவ்வனே நடந்து வருகின்றன.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக