ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

View previous topic View next topic Go down

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by தமிழ்நேசன்1981 on Sat Dec 25, 2010 7:56 pm

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!'
என்று சொல்கிறார்கள்.


இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில்
இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று,
நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' .

வணங்குவதை தவிர்க்கும் நேரம் சுவாமியை கும்பிடக்கூடாத நேரம் என்ற ஒன்றும் இருக்கிறது. எது தெரியுமா?

விழாக்காலங்களில் உற்சவர் வீதியுலா வரும் போது, கோயிலுக்குள் சென்று
மூலவரையும், பரிவார தெய்வங்களையும் வணங்குவதைத் தவிர்க்கலாம். இந்நேரத்தில்
மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம் என்பதால், உள்ளே சென்று வணங்கினாலும்
பயனில்லை என்பர்.

திருப்பதி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளான கருடசேவையின் போது, சுவாமி உலா
வரும் வரை நடை அடைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில்! இப்போது கூட்டம்
காரணமாக சிறிதுநேரம் மட்டும் தரிசனத்தை நிறுத்தி வைக்கிறார்கள்.
நைவேத்யத்திற்காக திரையிட்டிருக்கும் போது, உள்ளே உற்றுப்பார்த்து
வணங்கக்கூடாது. வலம் வரவும் கூடாது.
www.hi2web.comநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by Raju_007 on Sat Dec 25, 2010 8:08 pm

நன்றி பயனுள்ள தகவல்களுக்கு.
avatar
Raju_007
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by தமிழ்நேசன்1981 on Sat Dec 25, 2010 8:25 pm

மகிழ்ச்சி நண்பரே...நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by அகீல் on Sun Dec 26, 2010 8:41 pm

avatar
அகீல்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 338
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by கலைவேந்தன் on Sun Dec 26, 2010 10:31 pm

தகவலுக்கு நன்றி நண்பரே..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by nandhtiha on Mon Dec 27, 2010 12:15 am

அனைவருக்கும் வணக்கம்


மாங்கல்யம் …… சதம் என்பது மந்திரம் அல்ல. இது ஒரு
சுலோகம். ஆபத்ஸ்தம்ப க்ருஹ்ய சூத்திரத்தில் சப்த பதி என்று சொல்லக்கூடிய தீவலம்
வருவது தான் கூறப் பட்டுள்ளது,திருப்பாவை பாடிய ஆண்டாளும் மாங்கல்ய தாரணம் பற்றிக்
கூறவே இல்லை,


வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்


பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்


காய்சின மாகளிறு அன்னான் என் கை பற்றித்


தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்


என்று தான் பாடினாள்

சிலம்பிலும்


மாமுது பார்ப்பான் மறை வழி காட்டத்


தீவலம் செய்து என்று தான் இருக்கிறது,

தாலி கட்டுதல் என்பதைப் பற்றி சிலம்புச் செல்வர் ம
பொ சி அவர்களுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையே கடுமையான வாதப் போர்
நடந்திருக்கிறது. கண்ணதாசனின் வாதம் தாலி என்பது தமிழர் வழக்கமில்லை என்பது தான்


ஆனால்

கம்பன் கலை அற நிலைப் பதிப்பில்


பூக்கொய் படலம்


916


மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே
வந்துஉற இக் கோலம் பெற்றிலன் என்றால் உடன் வாழ்வு
இப்பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இப்பேர் அணி
என்று ஓர்விறலிக்கு ஈவாள் ஒத்து இழை எல்லாம்
விடுவாளும்
«

மறலிக்கு ஊண் நாடும் –
கூற்றுவனுக்கு உணவு தேடித் தருகிற; கதிர் வேலான் – ஒளியுமிழும் வேல் ஏந்திய (என்)
கணவன்; இடையே வந்து உற- என்னிடம் சேர்ந்து பொருந்துதற்கு; இக்கோலம் –
இவ்வலங்காரத்தை; பெற்றிலேன் – (நான்) பெறவில்லை; என்றால் – என்னக் கூடுமாயின்;
இப்பிறவிக்கு உடன் வாழ்வு ஒல்லேன் – இப்பிறவியில் இவ்வுடலோடு வாழ்வதற்கு (இனி
நான்) உடன்படேன்; இப்பேர் அணி என் செய்வது” – இப்பெரிய அலங்காரம் என்ன
பயனைத்தருவதாம்? என்னா – என்று இழை எல்லாம் – (தான் அணிந்திருந்த) ஆபரணங்களை
எல்லாம்; விறலிக்கு ஈவாள் ஒத்து – விறலிக்கு ஈந்து விடுவாள் போன்று; விடுவாளும்
–கழற்றித் தருபவளும்.


அணிகளால் தன்னைப் புனைந்து
கொண்டு கணவன் வருகைக்குக் காத்திருந்தாள் ஒருத்தி; நெடும் பொழுதாகியும் செயல்
ஆற்றச் சென்ற கணவண் வாராமை அவள் நெஞ்சை வருத்தியது, இந்த அலங்காரக் கோலத்தோடு
அவனைக் கூடி மகிழப் பெறாத இவ்வணிகளும் உடலும் எதற்கு? என்று வெறுத்தவள் அணிகலன்களை
எல்லாம் வேறு ஒருத்திக்குத் தந்து விட்டாள். (தீயில் வீழ்ந்து) இறக்கத்
துணிந்தவர்கள் தமது அணிகலன்களைத் தமது விருப்பத்திற்கு இடம் ஆயினார் கையிற்
கொடுப்பது மரபாதலால் விறலி கையில் கொடுத்து விடுவாளாயினள். “ இழையெல்லாம்
விடுவாளும்” என்றாலும் மங்கல அணியினைத் தவிர்த்து மற்றவை எல்லாம் கொடுத்தாள் என்று
பொருளாகக் கொள்க. ஏனெனில் ஈகையரிய இழையணி (புறம் 127;5) அதுவாகலின் மங்கல அணியில்
பிறிதணி மகிழாள் (சிலம்பு 4:50) என்பார் இளங்கோ அடிகளும். மற்றை நல் அணிகள் காண்
உள் புனைந்து அவன் கண்ணுக்கு இனியராய் இருக்க விரும்பிய மகளிரின் பண்பு இங்கு
சுட்டியவாறு. விறலிக்கு ஈவாள் ஒத்து என்பதனால் பழங்காலத்தில் ஆடிப் பாடும்
விறலியர்க்கு ஆபரணங்களை ஈயும் வழக்கம் புலனாம்.


இங்கு மங்கல அணி என்பது தாலியைக் குறிக்கும்

ஈகரை அன்பர்கள் சிந்தனைக்கு இதனைப் பதிவிட்டேன்.


என்றும் மாறா அன்புடன்


நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by தமிழ்நேசன்1981 on Mon Dec 27, 2010 12:24 am

தங்கள் கருத்துரைக்கு நன்றி சகோதரி....நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by சிவா on Mon Dec 27, 2010 8:01 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by Aathira on Mon Dec 27, 2010 9:26 am

தகவலுக்கு நன்றி .!


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by ராஜா on Mon Dec 27, 2010 10:25 am

இந்த பதிவை படித்தவுடன் , இதற்க்கு நந்திதா அக்கா அவர்களின் விளக்கம் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்,

நன்றி அக்கா , எளிமையாக புரிந்து கொள்ளும் படி இருந்தது உங்கள் விளக்கம்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by T.N.Balasubramanian on Mon Dec 27, 2010 2:42 pm

மாங்கல்ய தாரணம் / தாலி முடிதல் கல்யாண ஸம்ப்ரதாயதில் ஒரு அங்கம் இல்லை. கன்னிகாதானம், பாணிக்ரகணம், சப்தபதி (ஏழு அடி எடுத்து வைத்தல்) இவைதான் கல்யாண சடங்குகளில் முக்கியமானவை. ஜானவாஸம் (பிள்ளை யை ஊர்வலம் அழைத்து வரல் -) , காசி யாத்திரை , மாங்கல்ய தாரணம் இவைகள் எல்லாம் ஒரு சமூக நோக்குடன் செய்யப் பட்டவை.( A social security act).
ஊர்வலம் வருதல். ஊரார் பையனைப் பார்த்து, இவனுக்கு வேறு இடத்தில் எங்களுக்கு தெரிந்த அளவில் மணம் ஆகவில்லை. அப்படி ஆகி இருந்தால், அது விஷயம் சம்பந்தபட்டவர்களுக்கு தெரியபடுத்த கொடுக்கப் படும் ஸந்தர்பம்.
காசி யாத்திரை : மணமகனுக்கு , ஒரு ஸந்தர்பம். அவசியம் இருந்தால் கல்யாண பந்தத்திலிருந்து வெளியேற.
மாங்கல்ய தாரணம். /நகைகள். அவசியம் இருந்தால் கஷ்டக் காலத்தில் இருந்து வெளியேற.

சகோதரி நந்திதா அவர்கள் விளக்கம்/ மேற்கோள்கள் எப்பொழுதும் போல் மிகவும் தெளிவாகவும் /அருமையாக இருக்கிறது.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by தமிழ்நேசன்1981 on Mon Dec 27, 2010 2:51 pm

அருமையான விளக்கம் அய்யா! நன்றிகள் பலப்பல...நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by மோகன் on Mon Dec 27, 2010 2:58 pm

மகிழ்ச்சி
avatar
மோகன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1271
மதிப்பீடுகள் : 44

View user profile http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by Raja2009 on Tue Dec 28, 2010 6:22 pm

திரு ரமணியன் அவர்களுக்கு,

"காசி யாத்திரை : மணமகனுக்கு , ஒரு ஸந்தர்பம். அவசியம் இருந்தால் கல்யாண பந்தத்திலிருந்து வெளியேற" என்று கூறியுள்ளீர்கள்.

ஊரார், உறவினர் முன் நிச்சயதார்த்தம், விரதம் முதலிய சடங்குகள் நடந்த பின், காசியாத்திரையில் மணமகனுக்கு இந்த பந்தத்திலிருந்து விலக ஒரு வழி வைத்திருப்பது முறையாகுமா? அந்த பெண்ணுக்கும், பெண் வீட்டாருக்கும் அது அவமானத்தை தராதா?

மேலும் மணமகனுக்கு (தங்கள் கூற்றுப்படி) காசியாத்திரை மூலம் கொடுக்கப்பட்ட இந்த சந்தர்ப்பம் மணமகளுக்கும் வேறொரு சடங்கு மூலம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? தயவு செய்து விளக்கவும்.

ராஜா

Raja2009
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by T.N.Balasubramanian on Sat Jan 08, 2011 6:19 pm

@T.N.Balasubramanian wrote:மாங்கல்ய தாரணம் / தாலி முடிதல் கல்யாண ஸம்ப்ரதாயதில் ஒரு அங்கம் இல்லை. கன்னிகாதானம், பாணிக்ரகணம், சப்தபதி (ஏழு அடி எடுத்து வைத்தல்) இவைதான் கல்யாண சடங்குகளில் முக்கியமானவை. ஜானவாஸம் (பிள்ளை யை ஊர்வலம் அழைத்து வரல் -) , காசி யாத்திரை , மாங்கல்ய தாரணம் இவைகள் எல்லாம் ஒரு சமூக நோக்குடன் செய்யப் பட்டவை.( A social security act).
ஊர்வலம் வருதல். ஊரார் பையனைப் பார்த்து, இவனுக்கு வேறு இடத்தில் எங்களுக்கு தெரிந்த அளவில் மணம் ஆகவில்லை. அப்படி ஆகி இருந்தால், அது விஷயம் சம்பந்தபட்டவர்களுக்கு தெரியபடுத்த கொடுக்கப் படும் ஸந்தர்பம்.
காசி யாத்திரை : மணமகனுக்கு , ஒரு ஸந்தர்பம். அவசியம் இருந்தால் கல்யாண பந்தத்திலிருந்து வெளியேற.
மாங்கல்ய தாரணம். /நகைகள். அவசியம் இருந்தால் கஷ்டக் காலத்தில் இருந்து வெளியேற.

சகோதரி நந்திதா அவர்கள் விளக்கம்/ மேற்கோள்கள் எப்பொழுதும் போல் மிகவும் தெளிவாகவும் /அருமையாக இருக்கிறது.

ரமணியன்

நான் கூறியதில் திருத்தம் செய்யவேண்டி உள்ளது.
அந்த காலத்தில்,பாலப் பிராயத்திர்க்கு பிறகு குருகுல வாசம், பிரஹ்மச்சர்யம்,கிருகஸ்தாஷ்ரம்,வனாஷரம். இப்படி பேணுவது தான் முறை. .
குழந்தையாக பெற்றோரிடம் அன்பையும் அறிவையும் பெறுவது, பிறகு ஆசிரியர் மூலம் அறிவு வளர்ச்சி பெறுவது,
பிரஹ்மசாரி ஆக இருந்து செய்யவேண்டிய கடமைகள் ,பிறகு மணம் முடித்து புத்திர செல்வங்கள் பெற்று , அவர்களை வளர்த்து தந்தை ஸ்தானத்தில் கடமைகள் செய்து, பிறகு வனம் சென்று ஞான மார்கத்தில், ஈடுபடவேண்டும். இதுதான் நியதி.
ஒரு சிலர் பிரஹ்மச்சர்யம் முடிந்து , ஞான மார்கத்தில் நேரடியாக போக முயற்சிப்பர். அதற்கு பெண்ணின்
தகப்பனார் கல்யாணப்பையனிடம், நீ செய்ய வேண்டிய கடமைகள் கிரகஸ்தானாக இங்கு இருந்தே செய்ய உதவியாக நடந்து செல்வதற்காக பாதஅடிகள், வெய்யிலால் கஷ்டப் படாம இருக்க குடை ,அதை பிடித்துக் கொள்ள உறவினன், துஷ்ட ஜந்துக்கள் மூலம் துன்பம் வந்தால் தவிர்க்க கைக்குச்சி, படித்து அறிவு பெற புஸ்தகம் முதலியவை தருகிறேன். காசி செல்லாமல், இங்கு இருந்தே கடமைகள் செய்யுங்கள்.என் மகளை மணம் செய்விக்கிறேன். அவளும் உங்கள் கடமைகள் செவ்வனே செய்ய உதவியாக இருப்பாள் என்கிறார். ஆகவே காசி செல்ல வேண்டாம்.
இதுதான் தாத்பர்யம்.
முன்பு தவறாக விளக்கம் தந்ததற்கு , மனம் வருந்துகிறேன்.
ரமணீயன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by rajeshkumar on Sat Jan 08, 2011 7:05 pm


rajeshkumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 100
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum