ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கந்தசாமி - திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

கந்தசாமி - திரை விமர்சனம்

Post by சிவா on Fri Aug 21, 2009 11:41 pm

:நடிகர்கள்: விக்ரம், ஸ்ரேயா, கிருஷ்ணா, பிரபு, வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி.

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்;

இயக்கம்: சுசி கணேசன்.

ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன், ரமணா என்று ஹிட்டான அத்தனை படங்களும்கலந்த காக்டெய்ல் தான் கந்தசாமி. ஆனால், கலர்ஃபுல் காக்டெய்ல் என்பதால் எஸ்கேப் ஆகியிருக்கிறார்.


இருப்பவனிடம் எடுத்து இல்லாதவருக்குக் கொடுக்கும் எல்லோருக்கும் பிடித்த ராபின்ஹூட் கதைதான். அதை பிரம்மாண்டமாகச் சொல்லியிருக்கிறார்கள்.


குறைகளை எழுதி கோவில் மரத்தில் கட்டி வைத்தால் கைமேல் பலன் கிடைக்கிறது. கடவுள் கந்தசாமியே வந்து தீர்த்து வைக்கிறார் என்று மக்கள் கூட்டம் குவிய, பிராத்தனைகளும் குவிகின்றன.

சீட்டுக்களைப் பிரித்து பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வது சி.பி.ஐ. அதிகாரியான கந்தசாமி தலைமையில் ஒரு இளைஞர் பட்டாளம். பிரச்னையைத் தீர்ப்பது எந்தசாமி என்று ஆராய வரும் காவல்துறை அதிகாரி ஒருபக்கம்... கந்தசாமியிடம் பணத்தை இழந்துவிட்டு பழிவாங்கத் துடிக்கும் வில்லன்கள் இன்னொரு பக்கம்! என்னவாகிறார் கந்தசாமி என்பதுதான் கதை!


ஸ்டைலிஷான விக்ரம், கொஞ்சம் உடையும் கொஞ்சும் பேச்சுமாக ஸ்ரேயா, கோமாளிகளான வில்லன்கள், குண்டு உடம்பு போலீஸ் பிரபு, கதையோடு ஒட்டாத காமெடியன் வடிவேலு என்று எல்லா காம்பினேஷன்களையும் இந்தக் கதைக்குள் கோர்த்திருக்கிறார் இயக்குனர் சுசி. கணேசன்.


சூப்பர்மேன் ரேஞ்சுக்கு பறந்து பறந்து சாகசம் செய்யும் முதல் காட்சியிலேயே விக்ரம் பளிச்! அதன்பிறகு சாஃப்டான ஐ.பி.எஸ். அதிகாரியாக வரும்போதும், வில்லன்களோடு மோதும்போதும் படு ஸ்டைல். ஆனால், அவர் அந்நியனில் செய்த மூன்று கதாபாத்திரங்களையும் ஒரே கேரக்டரில் செய்வது போலத்தான் இருக்கிறது. கொக்கரக்கோவுக்கும் அந்நியனுக்கும் ஆறுவித்தியாசங்கள்கூட இல்லை.


பிரம்மாண்டமான செட்கள், சுத்திச் சுத்தி பறக்கும் ஹெலிகாப்டர், விதவிதமான கார்கள், உடைந்து நொறுங்கும் கண்ணாடிகள் என்று ஏகத்துக்கு செலவழித்தவர்கள் ஸ்ரேயா காஸ்டியூமுக்காகவும் கொஞ்சம் ஒதுக்கி இருக்கலாம். பலஇடங்களில் பற்றாக்குறை தெரிகிறது. (சென்சார் போர்டில் ஸ்ரேயாவுக்கு ரசிகர் மன்றமே இருக்கோ... இந்தப் படத்துக்கு யு சர்டிபிகேட் கொடுத்திருக்காங்களே!) ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் நாயகியைப் போல, கொஞ்சம் வில்லத்தனம், கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் நடிப்பு என்று வருகிறார்.


பிரபுவுக்கு டிரேட் மார்க் கேரக்டர்... ஹீரோயின்கள் மாதிரி இவரும் பிராண்ட் செய்யப்படுவது சலிப்பைத் தந்துவிடும். இளைய திலகம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

கதையோடு ஒட்டாமல் காமெடி செய்யும் வடிவேலு லேசாக புன்னகைக்க வைத்தாலும் ஸ்பீட் பிரேக்கர்தான்.

ஒளிப்பதிவும் இசையும் உட்கார வைக்கின்றன. அதிலும் பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் எம்.டி.வி ரேஞ்சில் இருக்கிறது. சில மிட்நைட் மசாலா!

இது போன்ற ராபின்ஹுட் கதைகளில் எல்லாம் ஏன் இப்படி கொள்ளையடிக்கிறேன் என்பதற்கு ஒரு வலுவான பிளாஷ்பேக் இருக்கும். இந்தப்படத்தில் அந்த ஏரியா கொஞ்சம் வீக்காக இருக்கிறது.


அதோடு, விக்ரமின் கூட்டாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவது ஒரு கட்டத்துக்கு மேல் சுவாரஸ்யத்தைக் குறைத்து களைப்பை உண்டாக்கி விடுகிறது. என்னதான் நல்ல காரியத்துக்காக என்றாலும் சி.பி.ஐ. டைரக்டர் வரைக்குமா விக்ரம் சொல்பேச்சு கேட்பார்கள்.


வில்லன்கள், போலீஸ் எல்லோருக்கும் யார் கந்தசாமி என்று தெரிந்த நிமிடத்தில் படம் முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆனால், அதன் பிறகும் கதை நீண்டு கொண்டே போய் மக்கள்கந்தசாமியைத் தெரியாது என்று கோர்ட்டில் சொல்வது, தோளில் வைத்து தூக்கிக் கொண்டு செல்வது எல்லாம் ரொம்ப ஓவர்!


கந்தசாமி... களைப்பு தெரியாமல் கட்டியிருந்தால் இன்னும் கலர்ஃபுல்லாக இருந்திருக்கும்!

@thenali

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கந்தசாமி - திரை விமர்சனம்

Post by ramesh.vait on Fri Aug 21, 2009 11:44 pm

அப்ப படம் பார்க்கலாம்
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கந்தசாமி - திரை விமர்சனம்

Post by சிவா on Fri Aug 21, 2009 11:46 pm

பார்க்கலாம் என்றுதான் தெரிகிறது, ஆனால் எப்பொழுது இணையத்தில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கும் என்று தெரியவில்லையே?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கந்தசாமி - திரை விமர்சனம்

Post by ramesh.vait on Fri Aug 21, 2009 11:50 pm

என்னiபொல இனையத்தில் இருந்து படம் பார்ப்பிர்களா? இனையத்தின் முகவரி கொடுக்க முடியமா மற்ற படங்களை தரையிருக்கவதற்கு
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கந்தசாமி - திரை விமர்சனம்

Post by சிவா on Fri Aug 21, 2009 11:53 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கந்தசாமி - திரை விமர்சனம்

Post by VIJAY on Tue Aug 25, 2009 9:34 am

ஸ்ரேயா எப்படி.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கந்தசாமி - திரை விமர்சனம்

Post by VIJAY on Tue Aug 25, 2009 10:40 am

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கந்தசாமி - திரை விமர்சனம்

Post by srinivasan on Tue Aug 25, 2009 11:15 am

avatar
srinivasan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 520
மதிப்பீடுகள் : 3

View user profile http://www.eegarai.net/

Back to top Go down

Re: கந்தசாமி - திரை விமர்சனம்

Post by சிவா on Sat Aug 29, 2009 12:04 am

கறுப்பு பணத்தை கொள்ளையிட்டு ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கும் சி.பி.ஐ. அதிகாரி கதை.

முருகன் கோவில் மரத்தில் ஏழைகள், பணக்கஷ்டங்களை தீர்க்க வேண்டி துண்டு சீட்டுகள் எழுதி கட்டிச்செல்கின்றனர். மறுநாள் அவர்கள் வீட்டு வாசல்களில் கடவுள் கந்தசாமி பெயரில் பணப்பைகள் கிடக்கின்றன.

இந்த செய்தி நாடெங்கும் பரவி மக்கள் கூட்டம் கோவிலில் அலைமோதுகிறது. போலீசார் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். டி.ஐ.ஜி. பிரபு உண்மையை கண்டு பிடிக்க வருகிறார்.

இன்னொரு புறம் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு சி.பி.ஐ. அதிகாரி விக்ரம் கறுப்பு பண முதலைகளை வேட்டையாடி கோடி கோடியாய் பணத்தை மீட்கிறார். பாங்கியில் ஆயிரம் கோடி மோசடி செய்து பதுக்கிய ஆஷிஷ் வித்யார்த்தி வீட்டிலும் சோதனை நடத்தி கட்டுகட்டாய் பணம் எடுக்கிறார். இதனால் ஆத்திரமாகும் ஆஷிஸ் மகள் ஸ்ரேயா விக்ரமை பழி வாங்க துடிக்கிறார்.

கறுப்பு பணத்துடன் சொகுசு பஸ்சில் சுற்றும் ராஜ்மோகனையும் விக்ரம் சிக்கவைத்து ஒரு கிராமத்தை தத்தெடுக்க செய்கிறார்.

விக்ரமால் பாத்திக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தந்திரமாக தங்கள் வலையில் விழவைக்கின்றனர். அப்போது கறுப்பு பணத்தை கொள்ளையிட்டு கந்தசாமி கடவுள் பெயரில் ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கும் நபர் விக்ரம் என்ற அதிர்ச்சி தகவல் தெரிகிறது. போலீசில் காட்டி கொடுக்காமல் இருக்க தங்களிடம் இருந்து பறித்த பணத்தை திருப்பி தரவேண்டும் என கெடு வைக்கின்றனர். விக்ரம் அதை ஏற்பது போல் நடிக்கிறார். அவர்கள் கூட்டாளிகளுடன் கை கோர்த்து செயல்படுகிறார். அப்போது வெளிநாட்டு பாங்கிகளில் இந்தியர்கள் மேலும் ஆயிரக்கணக்கான கோடி கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பது தெரிய வருகிறது. அவர்களை பிடிக்க காய்நகர்த்துகிறார். அந்த கூட்டத்தின் முக்கிய புள்ளி அலெக்சை கைது செய்து ஆதாரங்களுடன் நிருபிக்க முயற்சிக்கிறார். அப்போது கறுப்பு பண கும்பல் அலெக்சை கொல்கிறது. டி.ஐ.ஜி. பிரபுவும் விக்ரமை அடையாளம் கண்டு கைது செய்ய நெருங்குகிறார். கறுப்பு பண முதலைகளை மக்கள் மன்றத்தில் தோலுரிப்பதும் சட்டத்தின் பிடியில் இருந்து எப்படி தப்புகிறார் என்பதும் கிளைமாக்ஸ்...

ஹாலிவுட் ஸ்டைலை பிரதிபலிக்கும் அதிரடி சண்டை சாகச படம். விதவிதமான கெட்டப்புகளில் அசத்துகிறார் விக்ரம்.

ஏழை பெண் கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு கொடுத்த பணத்தை அபகரிக்கும் மன்சூர் அலிகானை சேவல் கோழி வேஷத்தில் கொக்கரக்கோ என கூவியும் கோழி போல் நடந்தும் அந்தரத்தில் தாவியும் பறந்து துவம்சம் செய்யும் ஆரம்பமே சூப்பர்மேன் ஸ்டைல்.

சோளக்கொல்லையில் அதே ரூபத்தில் கத்தி ஈட்டிகளுடன் பாயும் ரவுடிகளை அந்தரத்தில் பறந்து தாக்கி அழிப்பது “சீட்” நுனியில் உட்கார வைக்கும் சண்டை. அது படமாக்கப்பட்டுள்ள விதம் ஆங்கில படங்களுக்கு சவால் விடுகிறது.

ஐஸ்வர்யாராய் போல் அழகி வேண்டி கோவில் மரத்தில் துண்டு சீட்டு கட்டும் சார்லி கோஷ்டிக்கு பாடம் புகட்ட பெண் வேடமிட்டு நடனமாடி நையபுடைக்கும் சீன்கள் கலகலப்பானவை.

சி.பி.ஐ. அதிகாரி கெட்டப்பில் மிடுக்கு காட்டுகிறார். மெக்சிகோவில் கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் வில்லன்களுடன் மோதி அழிக்கும் சண்டைக் காட்சி பிரமிப்பு. ஆக்ஷனில் இன்னொரு சிகரம் தொட்டுள்ளார் விக்ரம்.

ஸ்ரேயா வில்லி காதலி, கவர்ச்சியில் தாராள மயம்... ஆடையிலும் மேக்கப்பிலும் அன்னியமாய் தெரிகிறார்.

பிரபு அமைதியான போலீஸ் அதிகாரியாக பளிச்சிடுகிறார். தேங்காய் கடை தேனப்பனாக வரும் வடிவேலு காமெடி பெரிய பலம். பக்தர்களிடம் பணம் வசூலிக்க கந்தசாமி போல் வேடமிட்டு மன்சூர்அலிகானிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகளும் போலீசை வைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பிரபு விசாரணை நடத்தும் போது குளித்து துணி துவைக்கும் சீன்களும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. கிருஷ்ணா, ஆஷிஸ் வித்யார்த்தி, அலெக்ஸ் வில்லத்தனங்கள் மிரட்டல்...

வில்லன் கிருஷ்ணாவின் சொகுசு பஸ் ஸ்ரேயாவின் ஆடம்பர படுக்கை அறை பிரமிக்க வைக்கின்றன.

“ஹைடெக்” தரத்தில் ஹாலிவுட்டுக்கு இணையான ஆக்ஷன் படம் கொடுத்துள்ளார் இயக்குனர் சுசிகணேசன். கந்தசாமியாக விக்ரம் செய்யும் தர்மகாரியங்களுக்கு உதவும் சக கூட்டாளிகளின் நெட்வொர்க் வலுவானவை. “கறுப்பு பணம்” என்பது பழைய கருவாக இருந்தாலும் காட்சிகளின் புதுமை விறுவிறுப்பு ஏற்றுகிறது.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. “எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி” பாடல் முணு முணுக்க வைக்கிறது. என்கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

மாலைமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கந்தசாமி - திரை விமர்சனம்

Post by thesa on Sat Aug 29, 2009 12:28 am

@சிவா wrote::


கந்தசாமி... களைப்பு தெரியாமல் கட்டியிருந்தால் இன்னும் கலர்ஃபுல்லாக இருந்திருக்கும்!
சரியா சொன்னிங்க சிவா அண்ணே...
முதல் நாள் படத்துக்கு போய் மண்டை காய்ந்து விட்டேன்....
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கந்தசாமி - திரை விமர்சனம்

Post by மரகதமணி1980 on Sun Aug 30, 2009 4:05 pm

ஒரே டிக்கெட்டில் 4 பழைய படங்கள் பார்த்த திருப்தி (ஜென்டில்மேன், முதல்வன், ரமணா, அந்நியன்) ‍. (நன்றி : ஆனந்த விகடன்)

மரகதமணி1980
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 72
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கந்தசாமி - திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum