புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_m10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10 
21 Posts - 66%
heezulia
மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_m10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_m10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10 
63 Posts - 64%
heezulia
மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_m10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_m10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_m10மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி.சிவமிற்கு ஒரு திறந்த மடல்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jan 14, 2011 1:00 am

கடந்த வருடம் இலங்கை சென்று திரும்பிய ஆன்மீகச் சொற்பொழிவாளர் திரு சுகி சிவம் அவர்கள் சன் தொலைக்காட்சிக்கு இந்த நாள் இனிய நாழ் நிகச்சிக்காக அறிவுரை ஒன்றை வழங்கியிருந்தார். அதில் புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழ் நாட்டு மக்களும் தேவையில்லாத வெட்டி வேலைகளை நிறுத்தி, ஈழ மக்களுக்கு உதவவேண்டும் எனவும், நாம் செய்யும் வெட்டி வேலைகளால் ஈழத்தில் உள்ள மக்களுக்கு ஆபத்து எனவும் கூறியுள்ளார். அதாவது அவர் வெட்டி வேலை என இங்கே குறிப்பிடுவது போராட்டங்களையும், அரசியல் நகர்வுகளையும் தான் என்பதை, தனது ஆன்மீக சொற்பொழிவு ஆற்றலூடாக நாசூக்காகச் சொல்லியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=yCZCiBcezss
மக்கள் இப்போது யாழ்ப்பாணத்தில் நிம்மதியாக இருப்பதாக அவர் தனது தொடக்க உரையில் தெரிவித்துள்ளார், ஆனால் அங்கே நடக்கும் தொடர்கொலைகளும், கொள்ளைகளும், கலாச்சார சீர்கேடுகளும் இவர் கண்களுக்குப் படவில்லையா ? எப்படித் தெரியும் மதிப்புக்குரிய திரு சுகி சிவம் அவர்களே !... நீங்களாகச் சென்றீர்களா இல்லை அழைக்கப்பட்டுச் சென்றீர்களா ? விருந்தினராகச் சென்ற உங்கள் பார்வைக்கு என்ன தெரிந்திருக்கும். அங்கே கொடுக்கப்பட்ட மரியாதை எதை எதை மறைத்திருக்கும் என எங்களுக்கும் தெரியும்
!

ஒரு ஆன்மீகவாதி சொன்னால் அவையெல்லாம் உண்மைதான் என தமிழர்கள் நம்புவார்கள் என்ற திட்டத்திற்கமையவே இவர் ஆற்றிய சொற்பொழிவு அமைந்திருந்தது. கடந்த காலத்தில் நடந்ததை மறந்து, தமிழர்களே நீங்கள் அரசுடன் ஒத்துப்போங்கள் ! நடந்ததைக் கதைத்துக் கொண்டு இருந்தால் என்ன நடக்கும் ? என்பதே இவர் வாதமாக அமைந்திருந்தது. அதற்கும் ஒருபடி மேலேபோய், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஈழத்தில் உள்ள தமது வீடுகளை அகதிகளுக்காகக் கொடுக்கதயாரா ? என்று கிடுக்கிப்பிடி போட்டு கதைக்கும் அளவுக்கும் மாறிவிட்டார் இந்த ஆன்மீகவாதி
.

தாம் கொல்லப்பட்டு விடுவோமோ என்று பயந்து ஓடிய தமிழர்கள் என புலம் பெயர் தமிழர்களை வர்ணித்தும் உள்ளார். அகதிகளாக இருக்க இடம் இல்லாது, சிலர் தாய் தந்தையரோடு, சிலர் படிப்பதற்காக, சிலர் அச்சுறுத்தல் காரணமாக என வெளிநாடுகளுக்கு தப்பி வந்தனர். ஆனால் இவர் பார்வையில் அனைவரும் உயிருக்கு பயந்து ஓடிவந்தவர்கள் என்றே பொருள். அதாவது நடந்ததை மறக்கவேண்டுமாம் ... நல்ல உதாரணம் ஒன்று உள்ளதே திரு.சுகி.சிவம் அவர்களே ! இதுவும் உங்கள் சமய மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளில் இருந்து நாம் கேட்டவைதான் கூறட்டுமா
?

தன்னைக் கொல்லவருவது ஒரு பசுவாக இருந்தால்கூட அதனைக் கொல்லலாம் என கிருஷ்ணபகவான் கூறியிருப்பதாக நீங்களே பல தடவை கூறியிருக்கிறீர்கள். அதன் அடிப்படையிலேயே தன்னைக் கொல்லவந்தவனைக் கொல்ல தமிழர்கள் கைகளில் ஆயுதங்களைத் தூக்கினர் அது ஞாயம் தானே ! மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனனுக்கும் இடையே மூண்ட போர் எதற்காக ? நாடுகள் வேண்டாம் 5 வீடுகளை மட்டும் தாருங்கள், எங்களிடம் இருந்து அபகரித்த இடங்களை திருப்பித் தாருங்கள் என பஞ்சபாண்டவர்கள் கேட்டதால் போர் மூண்டதே, அதில் கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கம் நிற்க காரணம் என்ன ? நீங்கள் சொல்வது படி பார்த்தால் கிருஷ்ணபரமாத்மாவே தீவிரவாதியா
?

மதிப்புக்குரிய திரு.சுகி சிவம் அவர்களே ! ஆன்மீக தளத்தில் நின்று ஆற்றிவரும் கருத்துக்களின் அடிப்படையிலேயே தங்களிடம் எமது உணர்வுகளையும் கேள்விகளையும் கருத்துக்களையும் முன் வைக்கின்றோம். ஆன்மீகம் என்றாலே ஆன்மாவின் "ஈகம்" என்பது பொருள்படுமே. "ஈகம்" என்பது கருணையாகும். கருணையின் ஊற்றே உயிர்களை மதிப்பதாகும். உயிர்களை மதிப்பது என்பது அவரவருக்கு இந்த உலகில் வாழும் தனிமனித உரிமையை எற்றுக் கொள்வதாகும். அப்படியாயின் சிங்களம் எங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டுள்ளதா ? எம்மை ஒரு மனித இனமாக மதிக்கிறதா
?

ஈழத்தில் தமிழர்கள் ஒவ்வொரு விநாடிப் பொழுதுகளையும் அச்சத்துடனேயே கழிக்கிறார்கள் என்பதை தங்களால் உணரவே முடியாது. அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும. சுற்றுலா ரீதியில் போய் வரும் தங்களுக்கு அதனைப் புரிந்து கொள்ள முடியாது. தங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்புகளை கணக்கில் வைத்து தமிழர்களின் வாழ்க்கையும் இவ்வாறுதான் இருக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டிருக்கின்றீர்கள்
...

கடந்த காலங்களில் நடந்தவற்றை மறந்துவிட்டு எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திப்பதால் எவ்வித பலனும் இல்லையெனவும் சொல்லிருக்கின்றீர்கள். இன்று என்பது இல்லாவிட்டால் நேற்று என்பது கிடையாது. நேற்றாகிய இன்றைய பொழுது நடந்த வலிகளே தமிழர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன என்பதை ஆன்மீகவாதியாகிய தாங்கள் ஏன் உணர்ந்து கொள்ளவில்லை, ஏன் அறிந்து கொள்ளவில்லை
?.

முள்ளிவாய்க்காலில் 40,000பேர் கொல்லப்பட்டுள்ளனர். 90,000யிரம் தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். 25,000த்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனர்கள் ஆகியுள்ளனர். வாழ்நாள் முழுவதும் வேலைசெய்து, சிறுகச் சிறுகச் சேமித்து வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேமித்துக் கட்டிய தமிழர்களின் வீடுகள் நொடிப்பொழுதில் தரைமட்டமாகியுள்ளது. அதனைப் பார்த்த அம்மையும் அப்பனும் கதறி அழும்போது அவர்கள் பிள்ளையாக நீங்கள் இருந்திருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டீர்கள்
!

ஒரு நாளல்ல இரு நாளல்ல இலங்கைத் தமிழர்கள் சுமார் 60 ஆண்டுகாலமாக வேதனையுடன் வாழ்பவர்கள். தமிழர்கள் மீது கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை மறக்கச் சொல்லுகிறீர்களே உங்களுக்குத் தெரியுமா இவைகளெல்லாம்
?

இனக்கலவரங்கள் நடைபெறும்போதெல்லாம் எரியும் நெருப்பிற்குள் உயிருடன் தூக்கியெறியப்பட்ட தமிழர்களை மறக்கச்
சொல்லுகின்றீர்களா ?

தமிழ்ப் பெண்களின் மார்புத்துணியை கிழித்தெறிந்து அதிலே சுடு தாரால் சிங்களச் சிறீ எழுதியதை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?. இல்லை கிருஷாந்தி மற்றும் தமிழப் பெண்களை நடுவீதியில் வைத்து பாலியல் கொடுமை செய்தார்களே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?

தமிழர்களின் வீடுகள் கடைகள் என இனக்கலவரங்களின் போது தீக்கிரையாக்கப்பட்டனவே, எண்ணிலடங்காத சொத்துக்கள் சூறையாடப்பட்டதே அவற்றை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?

போர்க் காலங்களில்கணவனுக்கு முன்னால் மனைவியும் பெற்றோருக்கு முன்னால் பெண்பிள்ளைகளும் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனரே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?

மனைவிக்கு முன்னால் கணவனும் பெற்றோருக்கு முன்னால் பிள்ளைகளும் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனரே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?

கைதுசெய்யப்பட்டட ஆண்களும் பெண்களும் போர் விதிமுறைகளுக்கப்பால் கைகள் பின்னால் கட்டப்பட்டு தலையில் சுட்டுக் கொன்றார்களே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?

இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு பலர் வீடு திரும்பாத நிலையில், வீட்டுற்கு வருவார்களா இல்லை வரமாட்டார்களா என பல ஆண்டுகளாக அழுது புலம்பும் தாய்மார்களை மறக்கச் சொல்லுகிறீர்களா ?

இல்லை போர் முடிந்த பின்னர் சரணடையச் சென்ற பொது மக்களை, தந்தைக்கு முன் மகளையும், தாயாருக்கும் முன் சொந்த மகனையும் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமலே வந்து சரணடையவேண்டும் எனக் கூறி மானபந்தப் படுத்தியதை மறக்கச் சொல்கிறீர்களா ? இதில் எதை மறக்கச் சொல்கிறீர்கள் ?

யாரை வெட்டி வேலைபார்க்கிறீகள் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ? தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்களே.. அதைப்போலத்தான் தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் இன்னல் கண்டு எங்களுக்காகக் குரல் கொடுக்கின்றனர், அவர்களை வெட்டிவேலை பார்பதாக ஒரு ஆன்மீகவாதியாகிய நீங்கள் சொல்வதா ? சொற்பொழிவு ஆற்றுவது சுலபம், பட்டுப் பார்த்தால் தான் அதன் வலி புரியும். இத்தனையும் அனுபவித்து, அறிந்து, பறிகொடுத்து, வந்தவன் தான் புலம்பெயர் தமிழன் அவன் என்றும் ஓயப்போவது இல்லை, உங்கள் சொற்பொழிவால் மாறபோவதும் இல்லை !


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jan 14, 2011 1:04 am

நான் இங்கு இணைத்துள்ள காணொளி தெரிகிறதா? எனக்கு எதுவும் தெரியவில்லை. பார்த்துச் சொல்லுங்களேன்

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Jan 14, 2011 4:40 am

காணொளி தெரிகிறது ..நன்றி நிசாந்தன்
லிங்க் இல் கிளிக் செய்து பார்க்க கூடியதாlக உள்ளது.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 14, 2011 8:05 am

அன்புச்சகோதரர் நிசாந்தன் அவர்கட்கு
வணக்கம்.
திரு சுகி சிவம் அவர்களின் ஈழத் தமிழர்களின் பேச்சைக் கொஞ்சம் தவிர்த்து விட்டு மற்ற விரிவுரையைக்கேளுங்கள். அவற்றில் ஆணவமான போக்குத் தான் புலப்படும். நான் ஆன்மீகத்தில் பற்றுக் கொண்டவள் தான், ஆனால் இவருடைய உரையை பல நாட்களுக்கு முன்பே கேட்பதை ஒதுக்கி வைத்து விட்டேன். தங்களுடைய பதிவில் சில வரிகளை என்னால் ஏற்க முடியவில்லை (அகதிகளாக இருக்க இடம் இல்லாது, சிலர் தாய் தந்தையரோடு, சிலர் படிப்பதற்காக, சிலர் அச்சுறுத்தல் காரணமாக என வெளிநாடுகளுக்கு தப்பி வந்தனர்.) இவ்வாறு சென்றவர்கள் மிகச் சிலரே. அமரர் நேதாஜி அவர்கள் கூட வெளி நாட்டில் இருந்து கொண்டு தான் போராட வேண்டி இருந்தது. தமிழர்கள் சாகட்டும். அதைப் பற்றிச் சுகி சிவத்துக்கு அக்கரை இல்லாமல் போகட்டும். சுகி சிவத்தின் அறிவுரை கேட்டு யாரும் நடக்கப் போவதில்லை. ஆனால் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப் பட்டனவே, ஆன்மீகவாதியான சுகி சிவம் அதைப் பற்றி ஒரு வார்த்தை எதிர்ப்பாவது சொன்னாரா? வெளி நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்கள் தங்கள் வீடுகளைத் தருவார்களா என்று கேட்கிறார்? அவைகள் தாம் மண் மேடுகளாகி விட்டனவே. இவர் ஆன்மீகச் சொற்பொழிவினால் சம்பாதித்த செல்வத்தில் சிறிதளவாவது அழிக்கப் பட்ட வழிபாட்டுத் தலங்களைச் சீரமைக்கக் கொடுப்பாரா? எங்கெங்கு தர்மமும் சத்தியமும் அழிக்கப் படுகிறதோ அங்கங்கு தர்மமும் சத்தியமும் அழிவதில்லை. அதனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் சவங்கள் என்ற முது மொழி தெரியாதவர், ஒதுக்கித் தள்ளப் பட வேண்டிய குப்பைகளில் இவர் ஒருவர். இதற்கு மேல் என்ன எழுத?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக