ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

வணக்கம் நண்பர்களே
 T.N.Balasubramanian

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

பசு மாடு கற்பழிப்பு
 SK

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை

View previous topic View next topic Go down

பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை

Post by ப்ரியா on Fri Jan 21, 2011 9:35 am

காவலன்

'

காதலன் ஆனால்..?!’ -மூன்றே வார்த்தைதான் கதை!

ராஜ்கிரண் மேல் மகா அபிமானம் வைத்திருக்கிறார் விஜய். கொலை மிரட்டல் காரணமாக ராஜ்கிரணின் மகள் அசினுக்கு பாடிகார்டாகச் செல்கிறார். விஜய்யின் 24X7 கெடுபிடியில் வெந்து தவிக்கிறார் அசின். விஜய்யை ரூட் மாற்றிவிடுவதற்காக செல்போனில் குரலை மாற்றிக் காதல் பேசுகிறார். ஒரு கட்டத்தில் செல்போன் காதலி மீது விஜய் வைத்துஇருக்கும் காதலில் நெகிழ்ந்து அவரிடம் தான் யார் என்கிற உண்மையைச் சொல்லத் தயாராகிறார் அசின். 'அசின் விஜய்யோடு ஊரைவிட்டு ஓடப் போகிறார்’ என்று கசியும் தகவலால் இருவரையும் சிறைப்படுத்துகிறார் ராஜ்கிரண். ரயில் நிலையத்தில் காதலி காத்திருப்பாள் என்று விஜய் பரிதவிக்க ராஜ்கிரண் அவரை நம்ப மறுக்கிறார். 'நான் இங்கு உங்களுடன்தான் இருப்பேன்!’ என்று ராஜ்கிரணைச் சமாதானப்படுத்தி விஜய்யை அனுப்பிவைக்கிறார் அசின். ரயில் நிலையத்தில் விஜய் காத்திருக்க காதலி வராவிட்டால் விஜய்யைக் கொல்வதற்கு ராஜ்கிரணின் ஆட்கள் காத்திருக்கிறார்கள். அசின் வந்தாரா? விஜய் உயிர் பிழைத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

மலையாள 'பாடிகார்டை’த் தமிழ் பேச வைத்திருக்கிறார் இயக்குநர் சித்திக். பெரிய இடத்துப் பெண் மேல் காதல் கொண்டு எஜமானின் கோபம் சம்பாதிக் கும் பழைய காவலன் கதைதான். அதில் செல் காதல் கொஞ்சல்ஸை அப்டேட் செய்துகொடுத்திருக்கிறார் சித்திக்.

பில்ட் - அப் ஓப்பனிங்இ சூப்பர்மேன் சூரத்தனம் பஞ்ச் பராக்கிரமம் ஆக்ஷன் அவதாரம் என எந்த அலட்டல் மிரட்டலும் இல்லாத 'ஸோ ஸாஃப்ட்’ விஜய் சினிமா! காதலியை முதன்முதல் சந்திக்கப் போகும் தவிப்பில் பூங்கா இருக்கையில் இடறி விழுந்து சமாளிப்பதும் 'எனக்காக வேண்டிக்கங்க!’ என்று கலங்கிய கண்களுமாக... வெல்கம் விஜய்!

கணக்குக்கு இல்லாமல் கணக்காகக் கதையை நகர்த்தும் ஹீரோயினாக... அசின். கலாட்டா காதல் கலக்கம் என கியர் மாற்றி நடிப்பதில் நல்ல தேர்ச்சி. படம் நெடுக வராவிட்டாலும் தலை காட்டும் சமயம் எல்லாம் தியேட்டரை அதிரச் செய்கிறார் வடிவேலு. 'கண்ணதாஸா... யேசுதாஸா?’ 'பாரதியாரா... பாரதிராஜாவா..? பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு!’ என்று சொதப்பும் காட்சிகளில் அக்மார்க் வடிவேலு வெடி. தனது காப்பிரைட் கம்பீரத்துடன் வளைய வருவதைத் தவிர ராஜ்கிரணுக்கு வேறு பெரிய வேலை இல்லை.

க்ளைமாக்ஸ் உண்மையிலேயே அதிரவைக்கும் திருப்பம்தான். ஆனால் அதைத் தவிரஇ மற்ற அனைத்தும் நாம் கணிக்கும் திசையிலேயே பயணிக் கிறது. விஜய்க்கு நேரிலேயே பார்க்காதஇ அதிகம் இம்ப்ரஸ் பண்ணாத செல்போன் காதலி மேல் அத்தனை தீவிரமாகக் காதல் தோன்றுவது ஏன்? டூப் லெட்டராகவே இருந்தாலும் போலீஸுக்கு வந்த உத்தரவில் விஜய் பாடிகார்டாகச் செல்வது கல்லூரிக் குள் வளைய வருவது போன்ற லாஜிக் மீறல்களை காமெடி கலாட்டாக்களுக்காகப் பொறுத்துக்கொள்ள வேண்டும்போல!

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு வானவில் வண்ணங்களை படம் முழுக்கப் பரப்பி இருக்கிறது. பின்னணி இசைக்கு அழுத்தம் சேர்த்த வித்யாசாகர் பாடல்களுக்கு இன்னும் விட்டமின் சேர்த்திருக்கலாம்!

இண்டஸ்ட்ரியில் விஜய்யின் ஸ்டேட்டஸுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறான் இந்தக் 'காவலன்’!


நன்றி விடுப்பு
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை

Post by ப்ரியா on Fri Jan 21, 2011 9:41 am

ஆடுகளம்சீறிப் பாயும் சேவல் சண்டைப் பின்னணியில் குரோதமும் துரோகமும் கொப்பளிக்க மனித மனங்கள் ஆவேசமாகப் போரிடும் களம் - இந்த 'ஆடுகளம்’!

வட்டாரத்தில் பெயர்பெற்ற சேவல் சண்டைக்காரர் 'பேட்டைக்காரன்’ வ.ஐ.ச.ஜெயபாலன் (அறிமுகம்). அவரது சிஷ்யப் பிள்ளைகள் தனுஷ் மற்றும் கிஷோர். ஜெயபாலனிடம் சேவல் போட்டியில் மோதி ஒருமுறையாவது ஜெயித்துவிட வேண்டும் என்பது இன்னொரு போட்டியாளர் இன்ஸ் பெக்டர் நரேனின் கனவு. போட்டியில் தேறாது என்று ஜெயபாலன் அறுக்கச் சொன்ன சேவலை வளர்த்துப் பாதுகாக்கும் தனுஷ் ஜெயபாலன் - நரேனுக்கு இடையிலான சேவல் மோதலில் அதைக் களமிறக்குகிறார். வெற்றியும் பெறுகிறார். இது ஜெயபாலனுக்கு ஈகோவைக் கிளறிவிடுகிறது. அது பொறாமையும் பொறுமலும் வன்மமும் வக்கிரமுமாக மாற... ஜெயபாலன் தந்திரங்களால் தனுஷை வீழ்த்தத் துடிக்கும் போராட்டங்களை உயிர்ப்புடன் சொல்கிறது கதை.

வழக்கமான மதுரை சினிமா என்று எதிர் பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் இனிய ஏமாற்றம். மதுரை தமிழர்களின் குருதியில் கலந்துவிட்ட ஒரு கலாசார விளை யாட்டைக் களமாகத் தேர்ந்தெடுத்து அதை நுட்பமாகச் செதுக்கியிருக்கும் வெற்றி மாறனுக்குப் பாராட்டுகள். உடல்மொழியும் குரல்மொழியும் மதுரை இளைஞனாக மாற்றி இருக்கிறது தனுஷை. ஆங்கிலோ இந்தியப் பெண்னின் பின்னால் பித்துப் பிடித்து அலைவது குருவின் குரோதம் தெரியாமல் வெகுளித்தனத்தால் தன் வாழ்க்கையைத் தொலைப்பது இறுதியில் உண்மை உணர்ந்து உடைந்து கலங்குவது என 'கருப்பு’ பாத்திர மாகக் கரைந்து கலந்திருக்கிறார் தனுஷ்.

படத்தில் தனுஷக்கு ஈடுகொடுக்கும் களநாயகன் பேட்டைக்காரனாக நடித்து வாழ்ந்திருக்கிறார் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். போலீஸ் ஸ்டேஷனில் நரேனிடம் அவமானப்படுவது தனுஷின் வளர்ச்சியை எரிச்சலோடு கவனிப்பது தன் மனைவி கிஷோர் தனுஷ் என ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு பொய்யைச் சொல்லி துரோகத்தின் விளையாட்டை நிகழ்த் திக்காட்டுவது என்று ஜெயபாலனின் ஆடுகளம் அசுரகளம்.

டாப்ஸி பொம்மைப் பொண்ணு. நடிக்க வாய்ப்பு இல்லாமல் வெள்ளாவி தேவதையாக உலா வருவதோடு சரி! உறவுக்காக உருகுவது கோபத்தில் முறுக்குவது என்று மனிதர்களின் பலம் பலவீனத்தை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் கிஷோர். படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் கதைக்குக் கனம் சேர்க்கிறார்கள்.
மதுரையின் ராத்திரி சேவக்கட்டு மைதானம் என்று இடங்களின் தன்மைக்கு ஏற்ப மறைந்து நிறைந்து விளையாட்டு காட்டுகிறது வேல்ராஜின் கேமரா. ஜி.வி.பிரகாஷின் இசையில் 'யாத்தே’ பாடலுக்குத் தியேட்டரே கைலியால் முகத்தை மூடி குலுங்கிக் குலுங்கிக் குத்தாட்டம் போடத் துடிக்கிறது. படத்தின் முதல் பாதி யிலேயே சேவல் சண்டையின் அதீத பரபரப்பு நிகழ்ந்து முடிந்துவிடுவதால் பின் பாதியின் மிக நீண்ட பயணம் அலுப்பூட்டுகிறது. தனுஷ்- டாப்ஸி காதலும் அந்நியமாகத் துருத்துகிறது. கலாசாரத் தடங்களையும் மனித மனதின் உருமாற்றங்களையும் இவ்வளவு அழகாக இதற்கு முன் எந்தப் படமும் சொன்னதில்லை என்றவகையில் இந்தக் களம் புதிது!

நன்றி விடுப்பு
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை

Post by ப்ரியா on Fri Jan 21, 2011 9:45 am

சிறுத்தைசென்னை பிக்பாக்கெட் 'ராக்கெட்’ ராஜா ஆந்திரா போலீஸ் ரத்தினவேல் பாண்டியன். இருவரின் உருவ ஒற்றுமை ஆள் மாறாட்ட அடிதடி வேட்டையுமே 'சிறுத்தை’.

கார்த்தியும் சந்தானமும் லோக்கல் திருடர்கள். திடீரென்று கார்த்தியிடம் வந்து சேரும் ஒரு குழந்தை அவரை 'அப்பா’ என்கிறது. மர்மத்துக்கு விடை தேடினால் குழந்தையின் உண்மையான அப்பா ரத்தினவேல் பாண்டியன் (இன்னொரு கார்த்தி). ஆந்திர ரௌடிகளின் உடம்பில் கபடி ஆடிய சின்சியர் போலீஸ் ஆபீஸர். அநியாய அட்டூழிய ரௌடிகளில் முக்கால்வாசிப் பேரை போலீஸ் கார்த்தி வேட்டையாடிவிட்டு மரணம் அடைகிறார். மீதமுள்ள 'தலை’களை பிக்பாக்கெட் கார்த்தி பார்சல் செய்வது யுத்த சத்த ரத்த க்ளைமாக்ஸ்!

தெலுங்கில் ஹிட் அடித்த 'விக்ரமார்குடு’வை சூடு காரம் சுவை குறையாமல் தமிழ்க் கடுகு போட்டுத் தாளித்து இருக்கிறார் இயக்குநர் சிவா. ஊரையே மிரட்டும் ரௌடிகள் ஒடுங்கி வாழும் மக்கள் என 18-ம் நூற்றாண்டுப் பழங் கஞ்சியை பட்டாக் கத்தி வெட்டுக் குத்து மாசாலா பூசிப் படைத்து இருக்கிறார்.

முதன்முறையாக இரு வேடங்களில் கார்த்தி. காமெடிக்கு ராக்கெட் அடிதடிக்கு ரத்னவேல் என வஞ்சனை இல்லாத வெரைட்டி விருந்து. திருட நுழைந்த திருமண வீட்டில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்று மதி மயங்குவதும் தமன்னாவுடனான காதலுக்காக அலைந்து திரிவதுமாக வெளுத்துக் கட்டியிருக்கிறார் கார்த்தி. முழு மசாலா படத்தை ஒற்றை ஆளாகத் தாங்கி நிற்பதில் கார்த்தியிடம் அபார தேர்ச்சி! 'சூப்பர்மேனுக்கே’ சவால் விடுவதுபோல எப்போதும் டஜன் ஆட் களைப் பரலோகத்துக்கு பாக்கெட் பண்ணிக்கொண்டே இருக்கும் ஒன்மேன் போலீஸ் டிபார்ட்மென்ட்டாக போலீஸ் கார்த்தி பரபரப்பது... காதுல பூ!

தம்மாத்துண்டு இடுப்பைத் திரையில் சரித்துக்கொண்டே நிற்கும் 'லைஃப் டைம் கேரக்டர்’ தமன்னாவுக்கு. மற்றபடி விசேஷம் இல்லை. சம்பவங்கள் இல்லாத முதல் பாதி முழுக்க 'சந்தான’ சாம்ராஜ்யம்! 'எத்தனையோ கடையில திருடிட்டேன். கடைசியில மருந்துக் கடையிலயே திருட வெச்சுட்டியேடா!’ என்று கலங்கிச் சதாய்ப்பதிலும் 'அது என்னடா எல்லா ரௌடிக்கும் 'டேய்’ங்கிறதுதான் ரிங்டோனா?’ என்று கலாய்ப்பதிலும் 'அட்றா சக்கை... அட்றா சக்கை’ அப்ளாஸ்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை மூளைக்கு வேலை வைக்காத திரைக்கதை! 'இவ்வளவு மோசமான ஒரு ஊர் எப்படி இந்தியாவில் இருக்க முடியும்?’ 'பிக்பாக்கெட் கார்த்தி எப்படி போலீஸ் கார்த்தியாக போலீஸ் யூனிஃபார்ம் அணிய முடியும்?’ என்று படம் முழுக்க முளைத்துக் கிளம்புகின்றன கேள்விகள்.

அந்த ஆந்திர ரௌடிகள் காமெடியில் சந்தானத் துக்குச் சவால்விடும் கிக்கிலி பிக்கிலி பிஸ்கோத்துகள். அனலடிக்கும் ஆந்திர வெயிலுக்குக் கறுப்பு போர்வை போர்த்தி நடமாடுகிறார் ஒருவர். 'ஆப்ஷன் ஏ சொல்லியிருக்கான். அப்போ அங்கேதான் குண்டு வெடிக்கும்!’ என்று கைப்புள்ள கணக்காகக் கதறித் திரிகிறார் இன்னொருவர். போலீஸ் அதிகாரி கார்த்தி மிடுக்காகச் செய்ய முடியாத காரியத்தைத் திருடன் கார்த்தி காமெடியாகச் செய்து முடிப்பது இரண்டு கேரக்டர்களையுமே காலி செய்கிறதே?

சிங்கத்தைப் பார்த்து சிறுத்தை கற்றுக்கொள்ள வேண்டும்!

நன்றி விடுப்பு
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை

Post by கலைவேந்தன் on Fri Jan 21, 2011 10:08 am

அது சரி... இளைஞன் என்னாச்சு...?

எல்லா விமர்சனமும் ஒரே இடத்தில் பார்க்க வசதியாக இருக்கிறது..

மிக்க நன்றி வாலு..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை

Post by அன்பு தளபதி on Fri Jan 21, 2011 12:19 pm

விஜய்க்கு நீண்ட நாளுக்கு பின் ஒரு வெற்றி படம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை

Post by ரபீக் on Fri Jan 21, 2011 12:24 pm

தெளிவான விமர்சனத்திற்கு நன்றி பிரியா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை

Post by ARR on Fri Jan 21, 2011 2:23 pm

பகிர்வுக்கு நன்றி..

அதானே.. இளைஞன் என்னாச்சு..?
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum