ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 ayyasamy ram

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 ayyasamy ram

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 Dr.S.Soundarapandian

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
 Dr.S.Soundarapandian

கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Go down

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Jan 24, 2011 1:10 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..



உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!


Last edited by ARR on Mon Jan 24, 2011 1:16 pm; edited 1 time in total
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down


Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Sep 28, 2011 1:25 pm

அதிபொண்ணு wrote:நகைச்சுவையோடு நுட்பமான பதில்களையும் ரசிக்கிறேன் மகிழ்ச்சி

நன்றி அணு..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sun Oct 02, 2011 12:27 pm

உலகப் போர் நடந்தபோது ஹிட்லர் ஒரு பிரத்யேக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். தன்னுடைய விசுவாசமான 50 ராணுவ அதிகாரிகளை அழைத்து இங்கிலாந்தை தாக்குவது எப்படி என்று வியூகம் அமைத்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென்று ஒரு தும்மல் சப்தம்.. வரைபடத்தில் கவனமாயிருந்த சர்வாதிகாரி, உணர்ச்சியற்ற குரலில் கேட்டார்..

" யார் இங்கே தும்மியது..?'

ஆழ்ந்த மௌனம்தான் பதிலாய்க் கிடைக்க வெகுண்ட சர்வாதிகாரி, இப்போது சொல்லவில்லையென்றால் உங்களில் 10 பேரை சுட்டுக்கொல்ல உத்தரவிடுவேன்..!

மீண்டும் மௌனம்.. முதல் வரிசையில் அமர்ந்திருந்த 10 பேரை ஹிட்லரின் அந்தரங்க காவல் படையான "கெஸ்டபோ" அமைப்பினர் வெளியில் அழைத்துச் சென்றனர்.. பின்னர் பல சுற்றுகள் வெடி முழங்கும் ஓசை..

மறுபடியும் ஹிட்லர் கேட்டார்..

"இப்போதாவது சொல்கிறீர்களா.. அல்லது மேலும் 10 பேரை பரலோகம் அனுப்பட்டுமா..?"

மீண்டும் பேரமைதி.. மீண்டும் வெடிச் சத்தம்.. மீண்டும் ஹிட்லர் கேட்க, ஒரு இளம் அதிகாரி நடுங்கும் உடலுடன் எழுந்து நின்று சொன்னான்..

" மன்னியுங்கள் ஜெனரல்... நான் தான் தும்மினேன்..."

ஹிட்லர் மெல்ல அவனை நோக்கி நடந்து வந்து அவன் கரத்தைப் பற்றி வலுவாக குலுக்கிவிட்டு சொன்னார்..

"நன்றி மகனே.. தும்மல்கள் என்னைப் பொறுத்தவரை ராசியான சகுனங்கள்...!".
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sun Oct 02, 2011 12:31 pm

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது அவரைப் பற்றியும் நாஜிகளைப் பற்றியும் துணிந்து ஜோக் அடித்தவர்கள் உண்டு. அவர்கள் ரகசியமாகத்தான் சிரித்தார்கள் என்றாலும் அதுவே மிக அதிகத் துணிச்சல்தான். ஜோக் சொன்னது வெளியே தெரிந்தால் மரண தண்டனைதான்.

நாஜிகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட (லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட) யூதர்களின் நகைச்சுவைக்கு ஒரு எ.கா.:

இரண்டு யூதர்கள் ஹிட்லர் ஆட்சியை நக்கல் அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, விசாரணையற்ற மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு பதிலாக தூக்கிலிடச் சொல்லி திடீர் உத்தரவு வருகிறது.

ஒரு யூதர் இன்னொரு யூதரிடம் சொல்கிறார்: “பாத்தியா, அவனுகட்ட துப்பாக்கி குண்டு ஜாஸ்தி இல்ல போல..!.”
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sun Oct 02, 2011 12:32 pm



முன்னொரு காலத்தில் அமெரிக்கர்களுக்கு பிரிட்டிஷ்காரர்களைக் கண்டாலே பிடிக்காமல் இருந்தது.அப்போது அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக இருந்த ஹாலி பாக்ஸ் பிரபு இந்த போக்கை மாற்ற விரும்பி அமெரிக்கா முழுதும் சுற்றுப்பயணம் செய்து நல்லெண்ணக் கூட்டங்கள் நடத்தினார். அவ்வாறு ஒரு கூட்டம் முடிந்து புறப்படும் போது ஒரு குடியானவர் ஹாலியை அணுகிச் சொன்னார்..

" அய்யா.. நாங்கள் பிரிட்டிஷாரை வெறுத்ததற்கு காரணம் 'அவர்கள் எங்களை விட புத்திசாலிகள்' என்று நம்பியதால்தான். இன்று உங்கள் பேச்சைக் கேட்டதும் அது வீண் பயம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இனி உங்களை நேசிக்க எந்த தடையும் இல்லை...!"
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sun Oct 02, 2011 12:32 pm

காவடிச்சிந்து பாடுவதில் பெரும் புகழ் பெற்றவர் புலவர். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். இவர் ஒரு குறு நில மன்னரின் அவைப்புலவராக இருந்தார். ஒருநாள் ஒரு ஏழை விவசாயி அவரிடம் வந்து, " அய்யா.., மன்னரிடம் சொல்லி எனக்கொரு ஒரு ஆடும், ஒரு மூட்டை அரிசியும் வாங்கித் தாருங்கள்" என வேண்டினார்.

இதைக் கேட்ட ரெட்டியார், " நீங்கள் கேட்டதில் ஒன்று நடக்கும்.. ஒன்று நடக்காது..!" என்றார். உடனே ஏழையின் முகம் வாடி விட்டது. மெல்லச் சிரித்த ரெட்டியார், " அய்யா.. கவலைப் படாதீர்கள்.. நீங்கள் கேட்டவை கிடைக்கும்.. அதில் ஆடு 'நடக்கும்.'. அரிசி மூட்டை 'நடக்காது' .. ! இதைத்தான் அப்படிச் சொன்னேன"
என்றாராம்..!

________________________________________________________

ஆதாரம் ; சான்றோர் வாழ்வில்.... ஆசிரியர் ; புலவர்.அ.சா. குருசாமி.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sat Oct 29, 2011 8:02 pm

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்.. அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.. வழக்குரைஞர் வசீர் ஹசன் என்பார் வாதாடுகையில் ஒரு சிறு கணக்குப் பிழை செய்து விட்டார்..நீதியரசரும் வெள்ளையருமான பென்னட் உடனே எள்ளி நகையாடியபடி, இந்தியர்களுக்கு சிறு கூட்டல் கணக்கு செய்து கொடுக்க நான் லண்டனிலிருந்து வரவேண்டி இருக்கிறது என்றார்.

உடனே வசீர் ஹசன், "வெள்ளை நீதிபதிக்கே நாங்கள் காலையில் இருந்து சட்ட நுணுக்கங்களை விவரித்துக் கொண்டிருக்கிறோம்.. இந்த சிறு கணக்கை எங்களுக்காக நீங்கள் செய்யலாம்..தவறில்லை" என்றார் சூடாக..

ஏற்கனவே சிவந்து போயிருந்த நீதிபதியின் முகம் அவமானத்தால் இன்னும் சிவந்து போனது.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sat Oct 29, 2011 8:04 pm

ஒருமுறை தமிழக சட்டமன்றத்தில் பால்வளத்துறை மான்ய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. வெகுநேரமாகிவிடவே, அவைத்தலைவர் க. ராசாராம் அவர்கள், உறுப்பினர் திரு.குமரி அனந்தன் அவர்களை விரைவில் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டினார். இலக்கியச் செல்வரோ தனக்கே உரிய கவிதை நடையில், "மாலை மயங்குகிற நேரம்.. கண்ணன் குழல் ஊதிக் கொண்டிருக்கிறான்.. மாடுகள் வீடு திரும்புகின்றன.. " என வர்ணிக்க...

அவைத்தலைவர் குறுக்கிட்டு," நேரம் ஆகிவிட்டபடியால் மாடுகளை சீக்கிரம் ஓட்டிச் செல்லும்படி உறுப்பினரை வேண்டுகிறேன்.." என்று அறிவிக்கவே, அவை குலுங்கியது.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sat Oct 29, 2011 8:06 pm

இந்திரா பிரதமராக இருந்த போது அவருக்காக ஒரு குறும்படம் தனியாகத் திரை யிடப்பட்டது. படச் சுருளைப் பொருத்தி இயந்திரம் இயக்கப் பட்டபோதிலும் படம் நெடுநேரம் ஓடத் தொடங்கவில்லை. பிரதமர் முகம் சிவந்து, இயக்கிக்கொண்டிருந்த பணியாளரைப் பார்வையால் சுட்டெரிக்க, "மேடம், மன்னிக்கணும். இது அமெரிக்காவிலிருந்து வந்த படம். புரொஜக்டரோ, ரஷ்யாவில் செஞ்சது. இரண்டும் ஒத்துழைக்க மறுக்கிறது. நான் என்ன செய்ய?' என்று அப்பிராணி முகத்துடன் சொன்னவரின் நகைச்சுவை, பூவாளியாகக் கோபக் கனலை அணைத்தது; பிரதமரின் முகத்தில் பளிச்சென்று ஒரு புன்னகையைப் பூக்க வைத்தது.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sat Oct 29, 2011 8:07 pm

ஒருமுறை பெர்னாட்ஷா ஒற்றையடிப் பாதையில் நடந்துபோய்க் கொண்டிருந்தார். எதிரே அவரைப் பிடிக்காத ஒருவர் வந்தார். பெர்னாட்ஷாவின் அருகில் அவர் வந்ததும், "நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை'' என்றார்.

"நான் வழி விடுவேன்'' என்று இறங்கி நடந்தார் பெர்னாட்ஷா.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by பாலாஜி on Sat Oct 29, 2011 9:51 pm

அனைத்தும் அருமை , படித்தேன் , ரசித்தேன் ,வியந்தேன் ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by பது on Sat Oct 29, 2011 10:36 pm

நல்லா இருக்கு

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sun Oct 30, 2011 2:25 pm

நன்றி பாலா மற்றும் பட்
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum