ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 சிவா

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அகநானூறு

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:28 am

First topic message reminder :

பாயிரம்

நின்ற நீதி, வென்ற நேமி,
பழுதில் கொள்கை, வழுதிய ரவைக்கண்,
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து
வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ,
அருந்தமிழ் மூன்றுந் தெரிந்த காலை,
ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்,
நெடிய வாகி யடிநிமிர்ந் தொழுகிய
இன்பப் பகுதி யின்பொருட் பாடல்,
நானூ றெடுத்து நூல்னவில் புலவர்,
களித்த மும்மதக் களிற்றியா னைநிரை,
மணியடு மிடைந்த அணிகிளர் பவளம்,
மேவிய நித்திலக் கோவை, யென்றாங்கு,
அத்தகு பண்பின் முத்திற மாக
முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்
கருததெனப் பண்பினோ ருரைத்தவை நாடின்,
அவ்வகைக் கவைதாம் செவ்விய வன்றி,
அரியவை யாகிய பொருண்மை நோக்கிக்,
கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத்
தகவொடு சிறந்த அகவல் நடையாற்,
கருததினி தியற்றி யோனே பரித்தேர்
வளவர் காக்கும் வளநாட் டுள்ளும்
நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற்,
கெடலருஞ் சிறப்பின், இடையள நாட்டுத்
தீதில் கொள்கை மூதூ ருள்ளும்,
ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்
செம்மை சான்ற தேவன்
தொன்மை சான்ற நன்மை யோனே.

இத் தொகைக்குக் கருத்து அகவலால் பாடினான் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down


Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:44 am

25. பாலை

"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்,
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
பைந் தாது அணிந்த போது மலி எக்கர்,
5 வதுவை நாற்றம் புதுவது கஞல,
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில்
படு நா விளி யானடுநின்று, அல்கலும்
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண்,
10 சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர்
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன,
இகழுநர் இகழா இள நாள் அமையம்
செய்தோர் மன்ற குறி" என, நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
15 வாராமையின் புலந்த நெஞ்சமொடு,
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என,
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர் வாழி தோழி! பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
20 பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன்,
இன் இசை இயத்தின் கறங்கும்
கல்மிசை அருவிய காடு இறந்தோரே.பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:45 am

26. மருதம்

கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப்
5 புலத்தல் கூடுமோ தோழி! அல்கல்
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
10 'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ,
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
15 வீங்க முயங்கல் யாம் வேண்டினமே;
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
செவிலி கை என் புதல்வனை நோக்கி,
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ
20 செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என்
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு,
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்,
சிறு புறம் கவையினனாக, உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய்
25 மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே?தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:45 am

27. பாலை

"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம் அழ,
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார்,
5 செல்ப" என்ப' என்போய்! நல்ல
மடவைமன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
10 நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
தௌ¢ நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,
15 வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்
குருதியொடு துயல்வந்தன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:46 am

28. குறிஞ்சி

மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி!
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங் கால் தோறும்
5 இருவி தோன்றின பலவே. நீயே,
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,
பரியல் நாயொடு பல் மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,
10 கிள்ளைத் தௌ¢ விளி இடைஇடை பயிற்றி,
ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என,
பிறர்த் தந்து நிறுக்குவள்ஆயின்,
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:46 am

29. பாலை

"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,
கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப,
5 செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்
மாவின் நறு வடி போல, காண்தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
10 வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண்
தாழக் கூறிய தகைசால் நல் மொழி
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி
15 வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
20 எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!வினை முற்றி மீண்ட தலைமகன், 'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:47 am

30. நெய்தல்

நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
5 உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
பெருங் களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
10 பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங் கானல் வந்து, 'நும்
15 வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே?பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:47 am

31. பாலை

நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என,
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
5 இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு,
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
10 புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,
'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
15 மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே.'பிரிவிடை ஆற்றாளாயினாள்' என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:47 am

32. குறிஞ்சி

நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
5 சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
10 இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என்
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
கடிய கூறி, கை பிணி விடாஅ,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின்
15 சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து,
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,
20 என் குறைப் புறனிலை முயலும்
அண்கணாளனை நகுகம், யாமே.பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்.- நல்வெள்ளியார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:48 am

33. பாலை

வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
5 வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
10 தௌ¤யா நோக்கம் உள்ளினை, உளி வாய்
வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
யாமே எமியம் ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை,
15 நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள்,
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல.
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம்
செய்வினை ஆற்றுற விலங்கின்,
20 எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே?தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:48 am

34. முல்லை

சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
5 செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல்
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
தௌ¢ அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
10 செல்க, தேரே நல் வலம் பெறுந!
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,
15 'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என,
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே.வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:48 am

35. பாலை

ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்
5 முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
10 போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம்
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து அணிந்து,
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன்
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல
துஞ்சா முழவின் கோவற் கோமான்
15 நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை,
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு,
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற் கீரத்தனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:49 am

36. மருதம்

பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
5 அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
10 திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
15 சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
நார் அரி நறவின் எருமையூரன்,
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
20 எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:49 am

37. பாலை

மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
5 வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி,
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
10 வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை,
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
15 பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,
மருதமர நிழல், எருதொடு வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:50 am

38. குறிஞ்சி

விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
5 வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன்.
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
10 நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல்
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து;
15 பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
கூஉம் கணஃது எம் ஊர்' என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே.தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:50 am

39. பாலை

'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து,
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
5 ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,
10 அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு,
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென,
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,
15 அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப்
பரந்து படு பாயல் நவ்வி பட்டென,
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,
'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின்
20 ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின்
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
25 போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே!பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச் செங்கண்ணனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:51 am

40. நெய்தல்

கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப,
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
5 அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை,
தாழை தளரத் தூக்கி, மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனைய,
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
10 அறாஅலியரோ அவருடைக் கேண்மை!
அளி இன்மையின் அவண் உறை முனைஇ,
வாரற்கதில்ல தோழி! கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை
15 செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை
அகமடல் சேக்கும் துறைவன்
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே!தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:51 am

41. பாலை

வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
5 குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தௌ¢ விளி புலம்தொறும் பரப்ப,
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
10 நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
15 அம் கலுழ் மாமை கிளைஇய,
நுண் பல் தித்தி, மாஅயோளே?தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:51 am

42. குறிஞ்சி

மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
5 நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
10 பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை,
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்தமாறேதலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- கபிலர்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:51 am

43. பாலை

கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
5 நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
10 மை இருங் கானம் நாறும் நறு நுதல்,
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
அளியரோ அளியர்தாமே அளி இன்று
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
15 இன் துணைப் பிரியும் மடமையோரே!தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரையாசிரியர் நல்லந்துவனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:52 am

44. முல்லை

வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
5 முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
10 அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
15 அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:53 am

45. பாலை

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
5 ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே, காதலர். மாமை,
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
10 தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
15 அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார்,
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:53 am

46. மருதம்

சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
5 அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
10 வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
15 ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:53 am

47. பாலை

அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
5 கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து,
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
10 ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,
குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி,
15 இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன்
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத் தோள், பாயும்
நோய் அசா வீட, முயங்குகம் பலவே.தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:54 am

48. குறிஞ்சி

'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம்
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
5 மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
10 பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
15 எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி,
நாணி நின்றனெமாக, பேணி,
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப்
20 பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து,
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே.
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன்
25 மகனே தோழி!' என்றனள்.
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே.செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது. - தங்கால் முடக் கொற்றனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Guest on Sat Oct 25, 2008 7:54 am

49. பாலை

'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
5 கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ!
10 விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர்,
15 செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே!உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அகநானூறு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum