ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 சிவனாசான்

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்

View previous topic View next topic Go down

ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்

Post by மஞ்சுபாஷிணி on Tue Jan 25, 2011 5:14 pm

ஹயக்ரீவரை வணங்கினால்... தேர்வில் அசத்தலாம்!

கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதிதேவியின் குரு, வேதம் மீட்டுத் தந்த பகவான் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஸ்ரீஹயக்ரீவர். தமிழகத்தில் உள்ள ஆலயங்களில், இவருக்கு தனிச்சந்நிதிகள் குறைவு.

கும்பகோணம் மேலக்காவிரியில், தனிக்கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். மடியில் ஸ்ரீலட்சுமியைத் தாங்கியிருப்பதால், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எனும் திருநாமத்துடன் அருள்புரிந்து வருகிறார் இவர்.

காவிரிக் கரையில், வடக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்து மாணவர்களின் வருகையை தினமும் காணமுடிகிறது, இங்கே!

வியாழக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு உகந்த ஏலக்காய் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், மந்த நிலையில் உள்ள மாணவர்கள்கூட, அதிக மார்க் எடுத்து அசத்துவார்கள் என்பது நம்பிக்கை.

மாதந்தோறும் திருவோணம் நட்சத்திர நாளில், இங்கு ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை மனதாரப் பிரார்த்தித்து, பிறகு தினமும் அவரது மூலமந்திரத்தை ஜபித்துவிட்டுப் படிக்கத் துவங்கினால், பாஸ் மார்க் என்ன... அதிக மார்க்குகள் எடுத்து அசத்தலாம் என்கின்றனர் மாணவர்கள். எனவே, இந்தக் கோயிலில் நடைபெறும் ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொள்ள, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து, பிரார்த்திக்கின்றனர். தேர்வுக் காலங்களில் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசித்து, அவருடைய திருப்பாதத்தில் பேனா- பென்சில்களை வைத்து வழிபட்டு, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மனமுருகப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.

அசுவினி, மகம் மற்றும் மூல நட்சத்திர தினங்களில் ஸ்ரீஹயக்ரீவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபட, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு ஸ்ரீசரஸ்வதிதேவியும் பஞ்ச லோக விக்கிரகமாக இருந்து அருள்பாலிக்கிறாள். மாதந்தோறும் சுக்லபட்ச நவமி தினத்தில் (அமாவாசையிலிருந்து 9-ஆம் நாள்) நடைபெறும் ஸ்ரீசரஸ்வதிதேவி மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், படிக்கும் பாடங்கள் மனதில் நன்றாகப் பதியும் என்கின்றனர். அனுமனையும் இங்கு தரிசிக்கலாம். சொல்லின் செல்வன் அல்லவா?! தேர்வில் வெற்றிக்கனி பறிக்க, வாயுமைந்தனையும் வணங்கி வழிபடுகிறார்கள், மாணவர்கள்!

‍ நன்றி இரா.மங்கையர்க்கரசி (சக்தி விகடன்)
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்

Post by ARR on Tue Jan 25, 2011 5:43 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்

Post by பிளேடு பக்கிரி on Tue Jan 25, 2011 6:16 pm

இது தெரியாம நான் படிச்சு முடிச்சுட்டேன் ....

நன்றி மஞ்சுக்காavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்

Post by krishnaamma on Tue Jan 25, 2011 6:52 pm

ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு(கல்வி வளர)

ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

ஸ்ரீஹயக்ரீவர் ஸ்லோகம்

ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே

இதை தினமும் 108 முறை சொன்னால் நல்லது. முடியாவிடில் 18 முறையாவது சொல்லணும். முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.

நன்றி மஞ்சு புன்னகை


Last edited by krishnaamma on Tue Jan 25, 2011 9:41 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்

Post by krishnaamma on Tue Jan 25, 2011 7:13 pmசென்னை நங்க நல்லூரில் ஒரு லக்ஷ்மி ஹயக்க்ரீவர் ஆலயம் இருக்கு. பெருமாள் ரொம்ப நல்லா இருக்கும். அவருக்கு வியாழக்கிழமை களில் ஏலக்காய் மாலை சார்ற்றுவது வழக்கம். நானும் கிருஷ்ணா காக போட்டுள்ளேன். படிக்கும் பசங்க போடணும் அல்லது அவர்களின் அம்மா போடலாம். அப்பா போடக்கூடாது புன்னகை அப்படி ஒரு வழக்கம் . நிஜமாகவே பலன் கிடைக்கும் , முயன்று பாருங்கள்.

ALL THE BEST !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்

Post by கலைவேந்தன் on Tue Jan 25, 2011 7:31 pm

பக்தி மணம் கமழும் பகிர்வுக்கு நன்றி மஞ்சு..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்

Post by nandhtiha on Tue Jan 25, 2011 7:57 pm

வணக்கம்


ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்துவதன் தத்துவம்.
A RITUAL IS AN ACTION WHICH DONE WITH INTENTION AND ATTENTION. சடங்கு என்பது
குறிகோளுடனும் கவனத்துடனும் செய்யப்படும் ஒரு கிரியை ஆம்,வாசனை மிகுந்த ஏலக்காய் ஹயம் என்னும் அசுவத்திற்கு
உணவு இல்லையே. இதில் உள்ளர்த்தம் ஒன்று உள்ளது, அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு
பெயரும் உண்டு, அசுவம் என்பதற்கு ஒளிக் கதிர் என்ற ஒரு பொருளும் உண்டுசூரியனைப் பற்றிச் சொல்லுங்கால் “ சப்த யுஞ்ஜந்தி
ரதம் ஏக சக்ரம், ஏகோ அஸ்வோ வஹதி, சப்த நாமா என்கிறது நூல். அதாவது சூரியனை ஏழு
குதிரைகள் இழுத்து வருகின்றன அவனுடைய ஒற்றைச் சக்கரத்தேரை ஒரு குதிரை தான் இழுத்து
வருகிறது அதற்குத் தான் ஏழு பெயர் என்பது இதன் பொருள். அதாவது சூரியனுடைய ஒளிக்
கற்றையைப் பிரித்தால் ஏழு வர்ணங்களைக் கொடுக்கும் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறக்
கீற்றாக மாறும் என்பதாகும், வாஜி என்பதை பிரதி பிம்ப முறையில் பார்த்தால் ஜீவா
என்றாகும். மூச்சுக் காற்றுக்கும் அசுவம் என்று பெயர், பிரச்சர்த்தன விதாரணாப்யாம்
வா ப்ராணஸ்ய என்று யோக நூல் கூறும் அதன் பொருளாவது சரியான முறையில் பூரக கும்பக
ரேசகங்களைச் செய்தால் அறிவு தெளிவுறும் என்பதாம். ஏலக்காய்க்கு திராவிடி என்ற ஒரு
பெயரும் உண்டு, காரணம் அதற்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இருக்கும். அந்த
மூன்று பிளவுகள் எதனைக் குறிக்கின்றன என்று ஒரு வினா எழும். தொல்காப்பியம் கல்வி
பற்றிக் கூறுங்கால் வேண்டிய கல்வி ஆண்டு மூன்றிறவாது என்றது,, அதற்கு உரை
எழுதியவர் அந்த மூன்று ஆவது அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் என்று உபநிஷத்
கூறும் தத்வமஸி என்ற பொருளைச் சுட்டி நின்றது, ஆனால் அமரர் மு ராகவ ஐயங்கார் உரை
எழுதுங்கால் கற்க வேண்டிய கல்வியை மூன்றாண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றார். கல்வி கரையில கற்பவர் நாள் சில .ஆனால் என் கருத்து வேறு படுகிறது, கொள்ளுவோர் கொள்ளலாம் தள்ளுவோர் தள்ளலாம்.


கற்றீண்டு மெய்ஞ்ஞானம் காண்பார் தலைப் படுவார்


மற்றீண்டு வாரா நெறி என்ற குறளுக்கு உரை எழுதிய பரிமேல்
அழகர்கற்றலாவது மூவகைப் பட்டது. அவையாவன 1.கேள்வி, 2.
விமர்சம். 3 பாவனை. அதாவது கேட்ட கல்வியை
விமர்சித்து (ஆய்ந்து) அதன் பொருளை உள் மனத்தில் உருவகப் படுத்தலே பாவனை ஆகும்.
இதனைத்தான் ஏலக்காய் உணர்த்துகிறது,கம்பன் கூறிய வரிகளுடன் முடிக்கிறேன்


பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும்


பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ


என்றும் மாறா அன்புடன்


நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்

Post by அன்பு தளபதி on Tue Jan 25, 2011 9:31 pm

நந்திதா அக்கா மிக அற்புதமான விளக்கம் புதிய செய்தி அக்கா இது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்

Post by சிவா on Tue Jan 25, 2011 9:37 pm

@ARR wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா..!

ரிப்பீட்டு! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்

Post by nandhtiha on Tue Jan 25, 2011 10:16 pm

அனைவருக்கும் வணக்கம்
என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்கட்கும் இளவலுக்கும் என் உளமார்ந்த நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum