புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
3 Posts - 2%
bala_t
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
280 Posts - 42%
heezulia
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_m10பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:33 pm

பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் 300px-Month_general

சித்திரை மாதம்


சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் துவக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்களையும், அனைவரும் விரும்புவது உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். ஏதாவது ஒரு லட்சியத்தை மனதில் கொண்டு அதை நறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள். எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக அறிவியல் மற்றும் காவல் துறைகள் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்றவை. உங்கள் முயற்சியில் மின்னல் வேகம் இருக்கும். எதற்கும் கலங்காத மனம் உண்டு.

இந்த வேகத்தை செயல்படுத்தும்போது மற்றவர்களை பகைத்துக்கொள்ள வேண்டி வரும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் சக தொழிலாளர்களை விரட்டி வேலை வாங்க வேண்டியிருக்கும். அப்போது அவர்கள் உங்களை அக்னி போல நனைத்து ஒதுங்கிப்போவார்கள். உங்களை திட்டுவார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும். வேலை செய்யாமல் ஏதாவது ஒரு மூலையில் முடங்கி இருப்போம் என்ற எண்ணமே உங்களுக்கு பிடிக்காது. சூரியனின் பலத்தால் உங்களிடம் ஆற்றல் அதிகம். செவ்வாய் உங்கள் சக்தியை வெளிப்படுத்தும். சுக்கிரன் உங்களை எதிர்ப்பவர்களை விரட்டியடிக்கும் தன்மையைக் கொடுப்பார். இன்னும் கொஞ்சநாள் கழித்து ஒரு காரியத்தை செய்வோமே என்று ஒதுக்கிவைக்கும் பழக்கம் உங்களிடம் இல்லை. பெரிய துணிவைப் பெற்றுள்ள நீங்கள், உங்கள் மனதிற்குள் கோழை என்றே உகளை எண்ணிக்கொள்வீர்கள்.

இதற்கு காரணம் அவசரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புடனும், ஆத்திர உணர்வுடனும், உணர்ச்சி கிளர்ந்தெழுவதாலும் ஏற்படும் நிரம்புத்தளர்ச்சியால் யாரைப் பார்த்தாலும் கத்தத் தொடங்கிவிடுவீர்கள். இந்த கோபத்தை அடக்க நீங்கள் பழகிக்கொண்டால் உங்கள் வாழ்க்கை சித்திரை சூரியன் போல பிரகாசமாக அமையும். பொதுவாகவே சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிக அதிகமாக இருக்கும். சூரியனின் வெப்ப சூழலில் பிறந்ததால் ஏற்படும் ஆத்திரமே இது. இதற்கு உடல் நிலத்தையும் பேணிக்கொள்வதன் முலம் ஆத்திரத்தை அடக்கலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். வாரம் ஒரு முறையாவது குளிர்ந்த நீரில் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். திருத்தலங்களுக்கு சென்று அங்கு ஓடும் ஆறுகளில் மூழ்கி நீராடவேண்டும்.

சித்திரை மாதத்தில் பிறந்த பெண்கள் நிடை, உடை, பாவனைகளில்கூட கவர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இந்த கவர்ச்சியின் காரணமாக மற்ற மாதங்களில் பிறந்தவர்கள் உங்களிடம் பொறாமை கொள்வார்கள். ஆனால் உங்கள் உள்மனதை புரிந்துகொண்டால் அவர்கள் உங்களிடம் ஆயுள் முழுவதும் நிட்புடனும் உறவுடனும் இருப்பார்கள். மொத்தத்தில் உங்கள் முன்கோபத்தை மட்டும் தவிர்த்துவிட்டால் உங்களை வெல்ல யாராலும் முடியாது. உங்கள் இளம் வயதில் நீங்கள் கோபக்காரராக இருப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் திருமணமான பிறகு இந்த கோபத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.



பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:34 pm

வைகாசி மாதம்

வைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெறுவார்கள். இதை மற்றவர்களிடம் சொல்லி, எனது அனுபவத்தில் நான் இன்னின்ன துன்பங்களையும் இன்பங்களையும் சந்தித்திருக்கிறேன். என்னை முன் உதாரணமாகக் கொண்டு நடந்துகொள்ளுங்கள் என கூறுவர். இதனால் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக பாவிக்கும் பழக்கம் இவர்களிடம் உண்டு. இவர்கள் திடகாத்திரமான உடலமைப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு நோய் ஏற்பட்டாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் டாக்டரிடம் போகக்கூட வேண்டாம் என நினைத்து தங்கள் பணியை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதேநேரம் இவர்களிடம் பொறுமை அதிகம் என்பதால் வேலையை முடிக்க அதிகநேரம் எடுத்துக் கொள்வார்கள்.

இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பதுபோல் இந்த மாதத்தில் பிறந்த தொழிலதிபர்களாக இருந்தாலும் சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவரவர் துறையில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை வேலைகளை தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பு வராவிட்டாலும் அதைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். தங்கள் அனுபவ அறிவால் படித்தவர்களை விட சிறப்பாக செயல்படுவார்கள்.

இவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். ஆனால் யாராவது இவர்களிடம் சண்டை போட்டால் கடைசிவரை விடாப்பிடியாக நின்று அதில் வெற்றி பெறும்வரை போராடுவார்கள். ஆனால் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு என்னதான் பொருள் வந்தாலும் அது கையில் நிற்காத அளவிற்கு செலவழிந்து போவதுண்டு. செலவுகளை கட்டுப்படுத்த முயன்றாலும், வீட்டில் உள்ள மற்றவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு செலவழிக்க வேண்டிய அவசியம் வந்துவிடும். இவர்கள் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள். சிறு குடிசையாக இருந்தாலும் கூட அதனுள் நுழைந்தால் பெரிய மாளிகைக்குள்ளோ அல்லது புனிதமான கோயிலுக்குள்ளோ வந்ததுபோன்ற உணர்வு ஏற்படும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யாரிடமும் லேசாக பழகமாட்டார்கள். பழகியவர்கள் இவர்களுக்கு துரோகம் நினைத்தால் காலம் முழுவதும் அவர்கள் முகத்தில் விழிக்கமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சோம்பல் அதிகம்.

வேகமாக வேலை செய்துகொண்டிருக்கும்போதே திடீரென சோம்பல் தலைதூக்கி அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். பணம் இவர்களிடம் சேராமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான். இவர்களுக்கு லேசில் கோபம் வராது. கோபம் வந்தால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல கடுமையான கோபம் வரும். இந்த குணத்தை மட்டும் நீங்கள் மாற்றிக்கொண்டால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. இதுபோல சோம்பல் ஏற்படும் நேரங்களில் மட்டும் அதை எப்படியாவது விடுத்து பணியில் தீவிரம் காட்டினால் வாழ்வில் வருத்தம் என்பதே இருக்காது.



பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:35 pm

ஆனி மாதம்

ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள் வாழ்க்கையில் மிகவும் முன்னேறத் துடிப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, தானும் சிரித்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்கள். இவர்களிடம் சிந்திக்கும் சக்தி அதிகம். சிந்தித்ததை செயல்படுத்த வேண்டும் என்றும் கருதுவார்கள். அதேநேரம் இவர்களுக்கு குணம் அடிக்கடி மாறுபடும். ஒரு வேலையை துவங்கி அதை செய்து கொண்டிருக்கும்போதே இன்னொரு வேலையில் கால் வைப்பார்கள். இதனால் பழைய வேலை கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு. எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எடுத்த வேலையை முடித்துவிட்டு, அடுத்த வேலைக்கு செல்வது நலம் பயக்கும்.

இவர்கள் மற்றவர்களை மயக்கும் வகையில் பேசுவார்கள். இந்த பேச்சைக்கொண்டு இவர்கள் எழுத்து மற்றும் மேடைப்பேச்சில் ஈடுபட்டால் எதிர்காலம் சிறக்கும். இவர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் சந்தேகப்படுவதும் உண்டு. இதை தவிர்க்க முயல வேண்டும். ஆரம்பிக்கும் முன்பே தீர ஆலோசித்து ஒரு வேலையை தொடங்கினால் இந்த பிரச்னைக்கு இடம் இருக்காது. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஞாபகசக்தி மிக்கவர்கள். ஆனியில் பிறந்தவர்கள் நகைச்சுவை பிரியர்கள். இவர்கள் ரோஷக்காரர்கள். மற்றவர்கள் ஏதாவது தங்களுக்கு இடையூறு செய்தால் அதற்காக வருத்தப்படவும் செய்வார்கள். எரிந்தும் விழுவார்கள். இவர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

இவர்களில் யாரையாவது தொழில் காரணமாகவோ பிற காரணங்களாலோ பிரிய வேண்டி வந்தால் அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி அற்றவர்கள். இவர்கள் கட்டட வேலை, வண்டி இழுத்தல் போன்ற வேலைகளை செய்ய தயங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாக விரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பணக்காரர்கள் தொழிலதிபர்களாக இருக்கவே விரும்புவார்கள். சிறு சிறு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு பைனான்ஸ் தொழில் சரியாக வராது. இவர்கள் வட்டி வாங்கும் குணம் உடையவர்கள் அல்ல. அதே போல பிறரிடம் கடன் வாங்கினாலும் உடனே திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்கப் பரக்க வேலை பார்ப்பார்கள்.

இவர்களில் சிலர் கெட்டவர்களுடன் சகவாசம் வைத்து அதனால் வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தீயவற்றில் இருந்து மீண்டு நல்லதையே செய்து பழகினால் மீண்டும் தீமைகள் இவர்களை அணுகாது. இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இவர்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதே நேரம் குழந்தைகளால் சிறிது காலம்வரை கஷ்டப்படுவார்கள்.



பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:36 pm

ஆடி மாதம்

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத்தை திட்டமிடுவதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அந்த கற்பனைகளை செயல்படுத்துவதற்காக என்னென்ன வித்தைகளை செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால் இவர்கள் காட்டும் பாசத்தை வேறு யாராலும் காட்ட இயலாது. குடும்பத்தின் மீதுள்ள பாசத்தை மனதிற்குள் வைத்துக்கொண்டு, பெற்றவர்களிடமோ மற்றவர்களிடமோ காட்டமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் மொழி மீது அதிக விருப்பம் இருக்கும். தமிழில் அதிக மார்க் வாங்குவார்கள். இந்த மாதத்தை கடக மாதம் என சொல்வதுண்டு.

கடகத்திற்குரிய சின்னமான நண்டைப்போல இவர்கள் மற்றவர்களை பேச்சில் கடித்தும் விடுவார்கள். அதே நேரம் முன்னெச்சரிக்கையாக ஒதுங்க வேண்டிய நேரத்தில் நண்டு ஓடி ஒளிந்துகொள்வது போல மறைந்தும் கொள்வார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பணம் ஈட்ட வேண்டுமென்று திட்டமிட்டு அதை மட்டும் செயல்படுத்துவதில் இறங்கிவிட்டால் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அதேநேரம் பணம் நம்மைத் தேடி வரட்டும் என இருந்துவிட்டால் பிற்காலத்தில் மிகவும் நொந்துகொள்ள வேண்டி வரும். இவர்கள் அரசியலில் ஈடுபட்டால் பழைய தலைவர்களுக்கு சிலை எடுத்தே சம்பாதித்துவிடுவார்கள். இவர்களை யாராவது திட்டினால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே நேரம் யானையைப் போல மனதில் வைத்துக்கொண்டு மறக்கமாட்டார்கள். இவர்களிடம் ஞாபகசக்தி அதிகம். இவர்களுக்கு ஒரே ஒரு அறிவுரையை சொல்லியாக வேண்டும்.

இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் மிக அதிகமான நட்பு கொண்டுவிடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையூறு ஏற்பட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல விரக்தியின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள். இவ்வாறு செய்யாமல் நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேறுவதை யாராலும் தடுக்கமுடியாது. ஆடி மாதத்தில் பிறந்த பெண்களால் பெற்றோர்கள் மகிழ்ச்சி குறைந்தே இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் பெற்றவர்கள் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.



பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:37 pm

ஆவணி மாதம்

ஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதிப்பவர்களாக இருப்பார்கள். எதையும் உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும் என்ற குணமுடையவர்கள். இதன் காரணமாக இவர்களிடம் பிடிவாத குணமும் இயற்கையாகவே அமைந்திருக்கும். இவர்கள் செய்வது மட்டுமே சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்ற எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள்.

இந்த மாதத்தில் பிறந்த கடைக்குட்டி குழந்தைகளின் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தை பார்த்து இவர்கள் பிறந்த சிம்ம ஸ்தானத்தில் இருந்து சூரியனின் இருப்பைப் பொறுத்து எந்த அளவுக்கு கவுரவமாக வாழலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தர்களாக மாறுவார்கள். ஏனெனில் இந்த மாதங்களில் பிறந்தவர்களின் கொள்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும்.

இவர்களிடம் நிதான புத்தி இருக்கும் அளவிற்கு அவசரமும் இருக்கும் என்பதால் சில காரியங்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே அவசர குணத்தை மட்டும் விட்டுவிட்டால் நல்லது. இவர்களிடம் சிக்கனம் அதிகம். அதேநேரம் வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிப்பார்கள். இவர்களின் உபசரிப்பை பொறுத்தே உறவினர்களும் நண்பர்களும் இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுவார்கள். இவர்களுக்கு கடன் வாங்குவது பிடிக்காது. அதுபோல கடன் கொடுக்கவும் பிடிக்காது. யாரிடமாவது கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டால் அதற்கு பதிலாக ஏதாவது கடன் கொடுத்த நபருக்கு உபகாரம் செய்துவிட முயற்சி செய்வார்கள்.

அதிகாரம் செய்யும் சுபாவம் இவர்களிடம் அதிகம். இவர்களுக்கு ஏற்ற மனைவி அமைவது மிகவும் கடினம். இதன் காரணமாக வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டதாக கருதி மனம் உடைந்து போவார்கள். எனவே திருமணத்தின்போது தகுந்த மணமகளையோ, மணமகனையோ தேடிக்கொள்வது நல்லது. ஆரம்பகாலத்தில் நாத்திகராக இருக்கும் இவர்கள் காலப்போக்கில் மிகப்பெரிய ஆத்திகராக மாறிவிடும் சூழல் ஏற்படும்.



பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:38 pm

புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்களின் எதிர்பாராத முன்னேற்றத்தால் மற்றவர்கள் இவர்களைக் கண்டு பொறாமைப்படுவதுண்டு. இவர்களுக்கு தொழில் ரீதியாக பின்னால் என்ன நடக்கும் என்பதை கிரகிக்கும் சக்தி உண்டு. எனவே தொழில் மற்றும் வியாபாரத்தில் இவர்களை வெற்றிகொள்ள யாராலும் முடியாது.

கல்வியிலும் இவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அறிவியல் துறையில் ஈடுபட்டால் இவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புத்தகம் படிப்பதில் இவர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். யாராவது தவறு செய்தால் அவர்களை தட்டிக்கேட்கும் குணம் இவர்களிடம் உண்டு. அத்துடன் திரும்பவும் அந்த தவறை செய்யாமல் இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு சென்று வருவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களிடம் சில குறைகளும் உண்டு.

இயற்கையாகவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும்கூட ஒரு லட்சியத்தை மேற்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டுமென நினைக்கமாட்டார்கள். இவர்களுக்குரிய திறமை இவர்களுக்கே தெரியாமல் போய்விடுவது தான் பெரிய குறையாகும். இவர்கள் சந்தேக மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள். இப்போதைக்கு கிடைத்ததுபோதும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும். எனவே பின்னால் வரப்போகும் பெரிய லாபத்தை விட்டுவிடுவார்கள். இதையெல்லாம் தவிர்த்து ஒரு லட்சியத்துடன் வாழ்ந்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இவர்களுக்கு கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். இதைத் தவிர்த்து சத்துள்ள உணவை அளவோடு சாப்பிட்டால் இவர்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இந்த மாதத்தில் பிறந்த பெண்களை கணவன்மாருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இவர்கள் தங்கள் கணவன் வீட்டு வேலை உட்பட அனைத்தும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களில் பலருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். எனவே தக்க பரிகாரம் செய்து இவர்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.



பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:38 pm

ஐப்பசி மாதம்

ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். இந்த மாதத்தில்தான் ராஜராஜசோழன் பிறந்தான். அவர் கட்டிய தஞ்சை கோயில் காலத்தால் அழியாத ஒன்று. அவரைப் போலவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரிய திட்டமாகவே போடுவார்கள். இதனாலேயே இவர்கள் அரசியல்வாதிகளாக ஆவதற்கு தகுதி கொண்டவர்கள்.

இவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். பெண்களிடம் பழகுவதில் இவர்களைப் போல் வல்லவர்களை காணமுடியாது. ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களின் நட்பை பெண்களும் விரும்புவார்கள். இவர்களிடம் பொறுமை அதிகம். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் உண்டு.

இவர்களில் சைவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட அசைவம் சாப்பிட வேண்டும் என விரும்புவார்கள். பிறரது தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதில் இவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்களிடம் உணர்ச்சிவசப்படும் பழக்கம் அதிகம். பிறர் முன்னிலையில் கவுரவமாக வாழவேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மனைவிக்கு பயப்படமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு மூத்த சகோதரர்கள் இருப்பது அபூர்வமான ஒன்றாகும். நீதித்துறையில் நுழைந்தால் இவர்கள் ஜொலிப்பார்கள்.இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எந்த வேலையையும் தாமதமாகவே செய்வார்கள். தெய்வபக்தி அதிகமாக இருந்தாலும் இவர்களிடம் கர்வமும் அதிகமாக இருக்கும்.

கல்லூரிக்கு சென்று படிக்காவிட்டாலும் சாதாரண கல்வி அறிவு உள்ளவர்கள்கூட ஏதாவது வேலை செய்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என எண்ணுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நகைகள், உடைகள் மீது ஆர்வம் அதிகம். ஆனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் சிரமம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்துவிடும். அவ்வாறு நடக்காவிட்டால் மிகவும் தாமதமாகிவிடும்.



பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:39 pm

கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த பயத்தைப் போக்கி துடிப்புள்ளவர்களாக விளங்க இவர்கள் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரை வணங்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள். எனவே இவர்கள் செய்யும் செயல்கள் நல்லதாகவே அமையும். ஜோதிடம் கற்றுக்கொள்ளும் தகுதி இவர்களிடம் உண்டு.

இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளின் காதுகளை டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. கார்த்திகை இடியும் மின்னலும் உடைய மாதம் ஆதலால் இந்த சத்தத்தைக் கேட்டு குழந்தைகளின் காதுகள் பாதிக்கப்படலாம் என கூறுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இளமையிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். அந்த சோதனைகளால் ஆத்திரம் ஏற்பட்டு செய்யக்கூடாத செயல்களை செய்து விடுவதும் உண்டு. எனவே பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது. இவர்கள் இயற்கையிலேயே தாகம் உடையவர்களாக இருப்பார்கள்.

ஆத்திரக்காரர்களாக இருப்பதால் இவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு அடிக்கடி கோயிலுக்கு செல்வார்கள். இப்படியே சென்றுகொண்டிருக்கும் இவர்கள் பெரும் பக்தர்களாக மாறி ஞான மார்க்கத்திற்கே சென்றுவிடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்குரிய மாதம் இது. எனவே முருகனை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் வணங்கிவந்தால் சகல சவுபாக்கியங்களுடன் விளங்குவார்கள். இவர்கள் குழந்தையைப் போல மற்றவர்களிடம் பழகுவார்கள்.

இந்த மாதத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு சகல பாக்கியங்களும் உண்டாகும். இந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதையாக நடப்பார்கள். விரதங்கள், தானம், தர்மம் செய்வதில் வல்லவர்கள். இந்த பெண்களுக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். இதனால் கணவன் மனைவி இடையே சிறு மனஸ்தாபங்கள் வரலாம். இதைத் தவிர்த்துவிட்டால் இந்தப் பெண்களை அசைக்க யாராலும் முடியாது. இவர்களுக்கு அரசு துறைகளில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். லாட்டரி விஷயத்தில் ஆர்வம் கூடுதலாக இருக்கும். இதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.



பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:40 pm

மார்கழி மாதம்

குளிர்ந்த மாதமான மார்கழியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். ஒரு காரியத்தை துவங்கினால் அதை முடிக்காமல் தூங்க மாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம், அரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள் ஏற்றவை. இதில் ஈடுபட்டால் இவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும். ஆடம்பரத்தில் இவர்கள் விருப்பம் கொண்டவர்கள். சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் அதிகமாக செலவழிக்க வேண்டும் என விரும்புவார்கள். இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கையின் பின்பகுதியில் சிரமப்படுவார்கள். எனவே இவர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டு எதிர்காலத்தைப் பற்றி யோசித்து நடந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் ஒரு சைக்கிளில் சென்றால்கூட வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதே நேரம் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இடிந்து போவார்கள். இந்த நேரத்தில் இறைவனை வணங்கி அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். சிறந்த எழுத்தாளர்களாகவும் இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் முக்கியமான எதைப்பற்றியாவது எழுதினால் அது உலகின் தலைவிதியையே மாற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இவர்களுக்கு கெட்ட சிநேகிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கெட்டவர்களுடன் சேர்ந்து மோசமான உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் வாய்ப்பு அதிகம். இதற்காக பின்னால் மிகவும் வருத்தப்படுவார்கள். அதே நேரம் படிப்பில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு திருமணத்தில் அதிக விருப்பம் இருக்காது. அதேநேரம் ஆண்கள் பெண் நண்பர்களுடனும், பெண்கள் ஆண் நண்பர்களுடனும் வாழ்வதற்கு பிரியப்படுவார்கள். மொத்தத்தில் சுதந்திரமான வாழ்க்கையை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் விரும்புவர். எனவே பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும்.



பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 1:41 pm

தை மாதம்

தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு செலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்து செலவு செய்வார்கள். கடமையில் கெட்டிக்காரர்கள். உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு பணம் கொடுத்தாவது காரியத்தை சாதித்துக் கொண்டு விடுவார்கள். இதன்மூலம் ஏராளமான வருமானம் பெறுவார்கள். தை மாதத்தில் பிறந்தவர்களை நம்பி மற்றவர்கள் எந்தக் காரியத்திலும் இறங்கக்கூடாது.

இவர்களுக்கு விவசாயம் மற்றும் மனைகள் வாங்கி விற்பது ஏற்ற தொழிலாக இருக்கும். இந்த மாதமே விவசாய மாதம் என்பதால் இவர்கள் முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுவது பெரும் லாபம் தரும். அதே நேரம் இவர்கள் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றிகள் பெருகும். இவர்கள் ஒரு அழகிய அல்லது பயனுள்ள பொருளைப் பார்த்தால் அந்தப் பொருளைவிட அதை செய்தவரையே பாராட்டுவார்கள்.

அப்படிப்பட்டவர்களை சென்று பார்த்து தாங்களும் அந்த தொழிலில் இறங்கினால் என்ன என்று நினைப்பவர்கள். தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். வயதான காலத்தில் கூட மேக்கப் போட விருப்பப்படுவர். மற்ற பெண்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். இவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் இருப்பது அபூர்வமான விஷயம். திருமணமான பிறகு கணவர் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசிப்பதைவிட தனது பொறுப்பில் எவ்வளவு உள்ளது என்று கணக்குப்போடும் குணம் இவர்களிடம் உண்டு. காதல் விஷயத்தில் இவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்துவராது.

குழந்தைகளை வளர்க்க தை மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். அவர்களது முன்னேற்றத்தில் மிக மிக கவனமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதில்லை. இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு திரும்பத்திரும்ப விஷயங்களை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் என்ன சொன்னாலும் தங்கள் இஷ்டம் போலவே நடந்து கொள்வார்கள். அதே நேரம் படிப்பிலும் விளையாட்டிலும் குழந்தைகள் அதிக கவனம் செலுத்துவார்கள்.



பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக