புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
53 Posts - 46%
heezulia
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
44 Posts - 39%
T.N.Balasubramanian
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
3 Posts - 3%
jairam
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
2 Posts - 2%
சிவா
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
1 Post - 1%
Manimegala
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
174 Posts - 49%
ayyasamy ram
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
15 Posts - 4%
prajai
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
6 Posts - 2%
Jenila
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_m10இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 9:37 am

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Sethu01
இதுதான் நான் போலந்தில் வென்றது!

சதுரங்கத்தில் இந்தியாவின் இப்போதைய இளம் `கிராண்ட் மாஸ்டர்' நம் சென்னையைச் சேர்ந்த சேதுராமன்தான். ஆனால் அந்த அலட்டலே இல்லாமல் வெகு இயல்பாகச் சிரிக்கிறார் இந்த சதுரங்கப் புலி.

``போலந்தில் சமீபத்தில் நடைபெற்ற வொய்வாடா கோப்பை போட்டியில் சாம்பியனாகி மூன்றாவது `ஜி.எம். நார்ம்' பெற்று `கிராண்ட் மாஸ்டர்' ஆனேன். தற்போது சர்வதேச தரவரிசைப் பட்டியலில் எனது நிலையை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறேன்'' என்று அமைதியாகப் பேசுகிறார்.

`போலந்தில் இறுதிப் போட்டி எப்படியிருந்தது?' என்று கேட்டால்,

``வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன்தான் அங்கு புறப்பட்டேன். இந்தியாவில் இருந்து சென்ற விமானம் தாமதமானதால் ஆரம்பச் சுற்றுப் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரே போட்டி நடைபெற்ற இடத்தில் போய் இறங்கினேன். ஆனாலும் `டென்ஷன்' ஆகாமல் விளையாடி வெற்றியைத் தட்டினேன். இறுதிப் போட்டியில், தற்போதைய 16 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியனான டிராகன் கமினை சந்தித்தேன். அந்தப் போட்டியில் `டிரா' செய்தாலே போதும், மூன்றாவது `ஜி.எம். நார்ம்' பெற்று `கிராண்ட் மாஸ்டர்' ஆகிவிடலாம் என்ற நிலை. ஒருகட்டத்தில், `டிரா' செய்துகொள்ளலாமா என்று நான் கேட்டும் கமின் மறுத்துவிட்டார். அதன்பின் அதிரடியாக விளையாடி அவரை வீழ்த்தினேன்.

எனக்குத் தற்போது 17 வயதாகிறது. 18 வயதாவதற்கு முன் `கிராண்ட் மாஸ்டர்' ஆகிவிட வேண்டும் என்ற மெலிதான பதற்றம் இருந்தது. அதன்படி சாதித்துவிட்டதில் நிம்மதி கலந்த மகிழ்ச்சி'' என்று புன்னகைக்கிறார்.

`சதுரங்கத்தில் நீங்கள் இந்த உயரத்தை எட்டியதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?' என்ற கேள்வியைப் போட்டால்,

``முதல் காரணம் எங்கப்பா பனையப்பன். சதுரங்கத்தில் தேசிய அளவு வீரரான அவரைப் பார்த்துத்தான் நானும் இவ்விளையாட்டில் ஆர்வம் கொண்டேன். நான் சதுரங்கத்தில் உயர்ந்து வருவதைப் பார்த்து, எனக்காக தனது `அக்கவுண்டன்ட்' வேலையையே விட்டுவிட்டு முழுநேரமும் என்னைக் கவனிக்க ஆரம்பித்தார்.
போட்டிகளில் உடன் வந்து ஊக்குவித்தார். அப்புறம், அம்மா தெய்வானை. அவரும் செஸ்சில் நன்கு தேர்ச்சி பெற்றவர். எனது முதல் பயிற்சியாளர் அம்மா என்று சொல்லலாம். இப்போது என்னுடன் போட்டிகளுக்கு வருபவரும் அம்மாதான். அவர் கூடவே இருப்பது, தெம்பு.

போலந்தில் நடைபெற்ற போட்டிக்குக் கூட அம்மா உடன் வந்திருந்தார். அங்கு மைனஸ் 17 டிகிரி என்ற விறைக்கவைக்கும் குளிர். நாங்கள் எடுத்துப் போன குளிர் ஆடைகள் போதாமல், போட்டி அமைப்பாளர்கள் வேறு கனத்த ஆடைகளைக் கொடுத்தார்கள். அம்மாதிரிச் சூழ்நிலையில் அம்மா, சாதம், ரசம் என்று நம்மூர் உணவைத் தயார் செய்து கொடுத்தது நிம்மதியாக இருந்தது. அவர் அருகில் இருப்பதும் ஒரு `மாரல் சப்போர்ட்'.

`கிராண்ட் மாஸ்டர்' ஆனதும் நீங்கள் பெற்ற முதல் பாராட்டு யாரிடமிருந்து?' என்று கேட்டோம்.

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Sethu03

`நமது உலக சாம்பியனும், என்னுடைய நலம் விரும்பியுமான விஸ்வநாதன் ஆனந்த், பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அகில இந்திய சதுரங்கச் சம்மேளனத்தின் செயலாளர் டி.வி. சுந்தர், தமிழ்நாடு சதுரங்கக் கழகத்தின் தலைமைச் செயலாளர் முரளிமோகன் போன்றோர் பாராட்டினார்கள்.''

`கிராண்ட் மாஸ்டர்' ஆனதற்குப் பின் எப்படியிருக்கிறது?' என்று கேட்டபோது,

``கொஞ்சம் பொறுப்புச் சுமை கூடியிருப்பதாக நினைக்கிறேன். என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன். பிற இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதால், இனி விளையாடும் போட்டிகளில் கூடுதல் கவனத்தோடு ஆடுவேன். `அட்டாக்கிங்' முறையில், கொஞ்சம் `ரிஸ்க்' எடுத்து ஆடுவது எனது பாணி. பலரும் அதுகுறித்து எச்சரித்திருக்கிறார்கள். எனவே இனிமேல் எனது ஆட்டங்களில் மேலும் கவனமாக இருப்பேன்'' என்றவரிடம், `குடும்பத்தில் அனைவரும் சதுரங்கத்தில் தேர்ந்தவர்களாக இருப்பது உதவியாக இருக்கிறதா?' என்று கேட்டோம்.

``நிச்சயமாக. குடும்பத்தில் அனைவருமே சதுரங்கம் அறிந்தவர்களாக இருப்பது சாதாரணமாகப் பயிற்சி பெறவும், அதுகுறித்து விவாதிக்கவும், ஆட்டங்களுக்கு விïகங்கள் வகுக்கவும் உதவியாக இருக்கிறது. செஸ் அறிந்தவர்களாக இருப்பதால், ஒரு செஸ் வீரனின் கஷ்ட, நஷ்டங்களும் அவர்களுக்குப் புரியும். `கிராண்ட் மாஸ்டர்' அதிபன் போன்றோரை நண்பர் வட்டமாகப் பெற்றிருப்பதும் கை கொடுக்கிறது.''

`மூளை விளையாட்டான சதுரங்கத்துக்கு உடல் தகுதி அவசியமா?'

``ஒரே இடத்தில் மூன்று, நான்கு மணி நேரத்துக்கு உட்கார்ந்து, மூளையைக் கசக்கும் விளையாட்டு இது. எனவே உடல்தகுதி மிகவும் முக்கியம். முன்னாள் ஆசிய தடகள வீரர் ஆனந்த் நடராஜனிடம் உடல்தகுதிப் பயிற்சி பெற்று வருகிறேன். யோகா, தியானத்தில் கவனம் செலுத்துகிறேன்.''

`அடுத்து...?'

``தற்போது சர்வதேச `ரேட்டிங்'கில் 2547 புள்ளிகளுடன் உள்ள நான், தொடர்ந்து சிறப்பாக விளையாடி எனது தரநிலையை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதன் மூலம் `உலக சாம்பியன்' என்ற எனது அடுத்த கனவை நோக்கி முன்னேற முடியும். அது எளிதான விஷயமில்லை. கடின உழைப்பும், தொடர்ச்சியாக வெற்றி பெறுவதும் முக்கியம். ஆனால் ஓர் ஐந்தாண்டு காலத்தில் அதைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது!'' -மென்மையாக, ஆனால் தீர்க்கமாகச் சொல்கிறார் சேதுராமன்.

இவர், காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.காம். முதலாமாண்டு படித்து வருகிறார். பிற பெற்றோரைப் போல `படி... படி...' என்று துரத்தாமல் சேதுராமனின் சதுரங்கத்துக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டுவிட்ட இவரது பெற்றோரும் பாராட்டுக்குரியவர்கள். அதனால்தான் இவர்கள் வீட்டில் அடுத்த சாம்பியனும் தயாராகி விட்டார்.

அவர்... சேதுராமனின் தம்பி முருகப்பன்!

--------------------------------------------------------

சேதுராமன் - இதுவரை...

* 2003- புதுடெல்லியில் தேசிய 11 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் 2-வது இடம்.

* 2004- சிங்கப்பூரில் 12 வயதுக்கு உட்பட்ட ஆசிய இளையோர் போட்டியில் சாம்பியன்.

* விஜயவாடாவில் 13 வயதுக்கு உட்பட்டோர் தேசியப் போட்டியில் சாம்பியன்.

* 2005- மும்பையில் தேசிய சப்-ஜுனியர் சதுரங்க சாம்பியன்.

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Sethu02
கோப்பைகளுடன்...

* 2006- மும்பையில் 16 வயதுக்கு உட்பட்ட காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம்.

* 2007- சர்வதேச மாஸ்டர் பட்டம்.

* அல் அய்னில் ஆசிய இளையோர் 14 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்.

* 2008- வியட்நாமில் உலக சப்-ஜுனியர் செஸ் சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம்.

* நாக்பூரில் காமன்வெல்த் 16 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்.

* துருக்கியில் இளையோர் சதுரங்க ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம்.

* 2009- துருக்கியில் 16 வயதுக்கு உட்பட்ட உலக சதுரங்க சாம்பியன்.

* 2010- போலந்தின் வொய்வாடா கோப்பை போட்டியில் வெற்றி. கடைசி `ஜி.எம். நார்ம்' பெற்று `கிராண்ட்மாஸ்டர்.'

தினத்தந்தி!



இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Tue Jan 25, 2011 1:22 pm

பெருமைக்குரிய செய்தி!!
சேதுராமன் மேன்மேலும் வெற்றிகளைக்குவிக்க என் வாழ்த்துகள்.



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jan 25, 2011 2:57 pm

வாழ்த்துக்கள் சேதுராமன் ..... மென் மேலும் வெற்றிகளை குவித்து நம் இனத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என இறைவனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் ...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 25, 2011 3:14 pm

பெருமை பட வேண்டிய விஷயம்.... இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   677196 இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   677196 இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   677196
நன்றி தல இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   678642 இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   678642




இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன்!   Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக