புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:49

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:33

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:22

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:11

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu 21 Mar 2024 - 21:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
47 Posts - 73%
Dr.S.Soundarapandian
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
2 Posts - 3%
prajai
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
1 Post - 2%
Rutu
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
1 Post - 2%
Pradepa
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
223 Posts - 22%
sugumaran
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
18 Posts - 2%
prajai
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
8 Posts - 1%
Rutu
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_m10நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed 2 Feb 2011 - 16:28

அயோத்தி வழக்கில் வெளியான நீதிமன்றத் தீர்ப்பு குறித்த தன்னுடைய எண்ணங்களை தெளிவுபடுத்துகிறார், இந்தியாவில் வகுப்புவாதம் பற்றி தீவிர ஆய்வு செய்து பல நூல்களை எழுதியுள்ள பிரபல வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர் கே.என்.பணிக்கர்.

அயோத்தி வழக்கில் வெளியான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து?
நீதிமன்றம், ஒரு சமரசத் தீர்வுக்கு முயன்றது போலத் தோன்றுகிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினரையும் திருப்திப்படுத்துவதற்காகத்தான் அந்த நிலத்தை மூன்று துண்டாக்கியிருக்கிறார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றி எந்த அடிப்படையில் முடிவெடுப்பது என்று இத்தீர்ப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை. இத்தீர்ப்பு, நீதித்துறை மேற்கொண்டிருக்க வேண்டிய நடவடிக்கைக்கு மாற்றமானதா என்ற சந்தேகமும் எழுகிறது. அவ்வாறு இருந்தாலும் இந்தத் தீர்ப்பிற்கு மற்றொரு கோணமும் இருக்கிறது. நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் இத்தகைய முடிவை நோக்கி நீதிமன்றம் சென்றிருக்கிறது.

சாதாரணமாக, ஒரு வழக்கில், ஆதாரங்களின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். ஆனால், ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள். இது, நீதித்துறையின் இயல்பான நடைமுறைக்கு விரோதமானது. இது குறித்து பல வழக்குகளிலும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அந்த வழக்குகளெல்லாம் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தவை. ஆதாரங்களுக்கு மாற்றாக பிற அளவுகோலைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட இத்தீர்ப்பு சரியல்ல.

ஆதரங்களைக் கணக்கில் எடுக்காமல் நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பு, சட்டரீதியாக எவ்வளவு தூரம் செல்லுபடியாகும்?
உச்சநீதிமன்றத்துக்குச் செல்லும்போதுதான் அவ்விடயம் தெளிவாகும். உண்மையில். சட்டரீதியாகப் பார்த்தால் இத்தீர்ப்பு செல்லுபடியாகாது. காரணம், தீர்ப்பு முழுக்க முரண்பாடுகளே நிரம்பியிருக்கின்றன. வரலாறுகளிலும், ஏராளமான முரண்பாடுகளைக் காண முடியும். அயோத்தியில் வரலாற்று ரீதியாக என்ன நிகழ்ந்தது என்ற தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேசமயம் வரலாறு இங்கு முக்கியப் பிரச்சனையே அல்ல என்ற ரீதியில் ஒரு நீதிபதி பேசுகிறார். வரலாற்றில் இருந்து விடுபட்டு மக்களின் நம்பிக்கையைத்தான் கணக்கில் கொள்ளவேண்டுமென்று அவர் விவரிக்கிறார். அப்படியானால் ஒருபுறம் வரலாற்றை ஆதரிப்பதும் மறுபுறம் அவ்வரலாற்றைப் புறம்தள்ளவும் செய்யும்போது அதில் ஒரு முரண்பாடு ஏற்படுகிறது. ஒன்று, வரலாற்றைப் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். வரலாறு நீதிமன்றத்தின் வரம்பிலுள்ள விடயமல்ல. அவ்விடயத்தில் ஒரு அபிப்பிராயத்தைச் சொல்ல நீதிமன்றத்தால் இயலாது. வரலாற்று ஆசிரியர்களின் அபிப்பிராயம்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பு என்பது நம்கண்முன் நடந்த ஓர் யதார்த்த நிகழ்வு. இவ்வழக்கில் இப்போதாவது தீர்ப்பு வருவதற்கு காரணம், மசூதி தகர்க்கப்பட்டதாகக்கூட இருக்கலாம். இல்லையெனில், நீதிமன்ற நடவடிக்கைகளின் வாயிலாக இன்னும் காலதாமதம் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், மசூதி தகர்க்கப்பட்டது குறித்து நீதிமன்றம் மௌனம் காக்கிறதே?
பாபர் மசூதி தகர்க்கப்பட்டது ஓர் பலப்பிரயோகம்(கட்டாய வன்முறை) மூலம் நிகழ்த்தப்பட்ட சம்பவம். அது முதலில் இந்துக்கள் தரப்பிலிருந்துதான் வந்தது. ஆனால், அந்தப் பலப்பிரயோகம் 1949லேயே துவங்கிவிட்டது. பலப்பிரயோகம் மூலம்தான் அன்று மசூதிக்குள் சிலைகலைக் கொண்டுவந்து வைத்தனர். துவக்கத்தில் சுமார் 50 பேரும், பின்னர் ஆயிரக்கணக்கானவர்களும் தலையிட்டுத்தான் மசூதிக்குள் சிலைகள் கொண்டு வைக்கப்பட்டன. அதற்கு யாருடைய ஒப்புதலும் பெறப்படவில்லை. எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் மாவட்ட நீதிபதிக்கும், மற்றவர்களுக்கும் விடயம் தெரியவருகிறது.

தங்கள் உரிமையை நிலைநாட்ட இந்துக்கள் வைத்த முதல் அடியே பலப்பிரயோகத்தின் மூலம்தான். அந்த பலப்பிரயோகம் பின்னர், குறிப்பாக 1980களுக்குப் பிறகு, அதிக வலிமைப் பெற்றது. அதன் பின்விளைவாகத்தான் பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இத்தீர்ப்பு என்றுகூட சொல்லலாம். காரணம், தீர்ப்பில் இந்துக்களின் பலப்பிரயோகம் பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. அந்த பலப்பிரயோகம்தான் இந்திய அரசியலை வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றது என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

அயோத்தி வழக்கின் வரலாற்றை பாபர் மசூதி தகர்ப்புடன் தொடர்புபடுத்தாமல் புரிந்துகொள்ள இயலாது. தங்களுக்கு விருப்பமான ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதும், அவ்வாறு அல்லாதவை பற்றி மௌனம் காப்பதையும்தான் நீதிமன்றம் இங்கே செய்தது. அதாவது, பாபர் மசூதி தகர்ப்பைப் பற்றி எதுவும் கூறவில்லை என்பதன் மூலம், இந்துத்துவ அமைப்புகளின் வன்முறையை நியாயப்படுத்துகிறது என்பதுதான் இதன் பொருள். இதில் கவனிக்க வேண்டிய பிரதான அம்சமும் இதுவே.

இந்துக்களின் ஆலயத்தை தகர்த்துவிட்டு கட்டப்பட்ட ஒரு மசூதி இங்கே இருக்க அனுமதிக்க முடியாது என்ற ரீதியில்தானே நீதிமன்றத்தின் கணிப்பு அமைந்துள்ளது. அப்படியானால், மசூதி தகர்க்கப்பட்ட இடத்தில் ஆலயம் எழுப்புவது மட்டும் எப்படி நியாயமாகும்?
மசூதிக்கு முன்பு அந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்று நீதிமன்றம் கூறுகிறது. ஆனால் எந்த அடிப்படையில் அத்தகைய நிலைப்பாடு எடுக்கப்படுகிறது என்பது தெளிவாக்கப்படவில்லை. வரலாற்றாசிரியர்களும் அவர்களது ஆய்வுகளும் அத்தகைய முடிவை நோக்கி நம்மை செலுத்தவில்லை. மதசார்பற்ற எந்த வரலாற்றாய்வாளரும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவுமில்லை. வகுப்புவாத அமைப்புகள்தான் இத்தகைய வாதங்களை முன்னெடுத்துச் செல்கின்றன.

2003இல நடைபெற்ற அகழ்வாராய்ச்சி முடிவைத்தான் நீதிமன்றம் பரீசீலனைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது மூன்று ஆதாரங்கள் கிடைத்தன என்று வாதிடுகிறார்கள். அன்று கோயிலின், உடைந்த தூண்களின் மிச்ச சொச்சங்களும், சிதிலமடைந்த சிலைகளும், கல்வெட்டுகளும் கிடைத்தனவாம்.

1960இல் ‘இராமாயணத் திட்டம்’ என்ற பெயரில் பி.பி.லால் அவர்களின் தலைமையில்தான் முதன்முதலாக அங்கே அகழ்வாராய்ச்சி நடந்தது. மிகப் பிரபலமான தொல்லியல் நிபுணர் அவர். Archeological Survey Of Indiaவின் இயக்குநராகவும் இருந்தார் என நினைக்கிறேன். அன்று அவர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் ஆலயத்தின் மிச்சசொச்சங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. தூண்களைப் பற்றியோ, சிலைகளைப் பற்றியோ அவர் எதுவும் கூறவில்லை. அவரது ஆய்வில் கோயில் பற்றி சிறு குறிப்பு கூட இல்லை. அவ்வாறு அந்த இடத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த அகழ்வாராய்ச்சியில் இத்தகைய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அதன்பிறகு, 2003 இல் B.J.P. ஆட்சிக்காலத்தில் தான் முன்புபோல் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது கிடைத்ததாகச் சொல்லப்படும் ஆதாரங்கள் தெளிவாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதைப் பரிசோதித்த மண்டல், ரத்னாகர் போன்றவர்களின் அபிப்பிராயப்படி, அவ்வாறு மிச்ச சொச்சங்கள் என்று நம்ப இயலாதவையாகும். ஒரு குழியிலிருந்துதான் இத்தகைய சிலைகள் கிடைத்துள்ளன. அதை எப்படி ஆதாரமாக ஏற்றுக்கொள்ள இயலும்? இது தொல்லியலின் அடிப்படைத் தத்துவங்களுக்கே எதிரானது. கிடைத்த கல்வெட்டுகளோ, தகர்க்கப்பட்ட மசூதியின் கற்களுக்கும், மரத்துண்டுகளுக்கும் இடையிலிருந்து கிடைத்தவையாகும். அதன் கால கட்டத்தைக்கூட நிர்ணயிக்க முடியவில்லை. அதனால்தான் நீதிமன்றம் கூறும் ஆதாரங்கள் குறித்து வரலாற்றாசிரியர்களுக்கும் தொல்லியல் துறையினருக்கும் பலத்த சந்தேகங்கள் எழுகின்றன. ஆனால், நீதிமன்றமோ அவற்றைப் பெரிய ஆதாரங்கள் போல் ஏற்றுக்கொண்டிருக்கிறது.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed 2 Feb 2011 - 16:35

உயர்நீதிமன்றம் தற்போது வழங்கியிருப்பது பெரும்பான்மையினரின் நம்பிக்கையை முன்வைத்து, சட்டத்திற்குப்புறம்பான ஒரு தீர்ப்பாகும். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல உள்ளது. காலங்கள் பல கடந்த பின்னர், அன்றைய அரசியல், சமூகங்களைத் திருப்திப்படுத்தும் மீண்டும் இதேபோன்ற ஒரு தீர்ப்புதான் உச்சநீதிமன்றத்திலிருந்தும் வருமென்றால், இங்கே நீதிமன்றம் மற்றும் சட்டங்களுக்கு என்னதான் பொருளிருக்க முடியும்?
உச்சநீதிமன்றம், இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுமா என்று இப்போது கூற முடியாதல்லவா. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புதான் இப்போது வெளிவந்திருக்கிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய வழக்குகளில் முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றங்கள்தானா என்றொரு கேள்வியும் எழுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலும் பழுதுகள் இருந்தால் பின்னர் ஒன்றும் செய்ய முடியாதல்லவா? அதுதானே இறுதி வாக்கு.

அதனால்தான், இப்பிரச்சனையில் ஓர் அரசியல் முடிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்கிறேன். நீதிமன்றம் இப்போது வெளியிட்டிருப்பது ஒரு அரசியல் தீர்ப்பு. அரசு என்ன செய்திருக்க வேண்டுமோ அதை நீதிமன்றம் செய்திருக்கிறது. ஆனால், அரசுதான் அந்த சமரச முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு அதில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அரசு இவ்விடயத்தில் ஒரு முடிவுவெடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அதை விளக்கவும் செய்திருக்கவேண்டும்.

ஒருபுறம் அமைதியாகத் தோன்றினாலும், மறுபுறம் சமூகத்தில் தீவிர கலவரச் சூழல் படர்ந்துள்ள இந்தியாவில், அத்தகைய அரசியல் தீர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்த இயலும்? அது எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும்?
நீங்கள் கூறும் சூழல் தொண்ணூறுகளுக்குப் பின்னர் உருவானவை. அதற்கு முன்பு இது பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. ஒரு வழக்கு நடந்தது. அவ்வளவுதான். இதை அரசியல் மயமாக்கியபோதுதான் பிரச்சனை வெடித்தது. பின்னர், அதை ஓர் இயக்கமாக மாற்றினர். அமைப்புகள்தான் அதைக் கையாள்கிறது. இந்த வழக்கைத் தொடர்ந்த அமைப்புகள் இந்தியாவில் இந்துக்களின் பிரதிநிதிகளா?

வாரியம் இங்குள்ள இசுலாமியர்களின் பிரதிநிதிகளா? அவ்வாறு தாங்கள்தான் சமூகங்களின் பிரதிநிதிகள் என்று கூற இத்தகைய அமைப்புகளுக்கு என்ன உரிமை? அதனால் இதெல்லாம் அமைப்புகளின் விருப்பங்கள்தானே தவிர, மக்களின் விருப்பங்கள் அல்ல. அதை நாடு உணரவேண்டும். அரசு அதை உணர வேண்டும். இராசீவ் காந்தியும், நரசிம்மராவும் இதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்துத்துவத்தைப் பயன்படுத்தாமல் அதற்கெதிரான நிலைப்பாட்டை அவர்கள் மேற்கொண்டிருந்தால், அன்றே ஒரு தீர்வு காணமுடிந்திருக்கும். நீங்கள் இதில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று அமைப்புகளிடம் கூற அரசு துணிச்சல் காட்ட வேண்டும்.

அவ்வாறு நிகழுமென்று கூற முடியுமா? இவ்விடயத்தில் நீதிமன்ற நடைமுறைகளின் இறுதியில் கிடைக்கப்போகும் தீர்ப்புக்கு பயந்து, நாட்டையே பீதியடையச் செய்யும் விதம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த அரசு தானே இங்கு இருக்கிறது. அத்தகைய அரசு, முன்னின்று ஓர் அரசியல் முடிவு எடுத்து அதை நடைமுறைக்குக் கொண்டுவரும் என்றா நினைக்கிறீர்கள்?
அதனால்தானே, அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது என்று கூற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அது தனது கடமையைச் செய்யாமல் பயந்து ஒளிந்து கொள்கிறது. இத்தகைய நிகழ்வுகள் இவ்வாறு வளர்ந்ததற்கு பல கட்டங்கள் இருந்தன. ஒவ்வொறு கட்டத்திலும் அரசு அவர்களிடம் சரணடைந்தது. அத்வானியின் ரத யாத்திரையும், பாபர் மசூதி தாக்கப்பட்ட நிகழ்வும் நமது சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றம். 500 வருட பழமைவாய்ந்த புராதனச் சின்னமான பாபர் மசூதியைப் பாதுகாக்க இங்கே சட்டங்கள் உண்டு. அதில் ஒரு சிறிய கீறல் ஏற்படுத்துவது கூட தண்டனைக்குரிய குற்றம். அப்படியிருந்தும் மசூதியை இடித்து கரசேவையில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்படவில்லையே. ஏன்? இலட்சக்கணக்கான இராணுவ வீரர்களைக் கொண்ட நாடு நம்முடையது. அன்று அவர்கள் செயலிழந்து நின்றதற்கு என்ன காரணம்? சரி, அத்வானியையும் தேசிய தலைவர்களையும் கைது செய்யவில்லை. மசூதியைத் தகர்ப்பதில் ஈடுபட்ட மூன்றாம்நிலை தலைவர்களைக்கூட ஏன் கைது செய்ய முடியவில்லை? அரசின் பல்வீனம் இதற்குக் காரணம். அத்தகைய பல வீனங்கள்தான் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்குவதற்கும் காரணம்.

ஒரு வரலாற்றாசிரியர் என்ற நிலையில் நீங்கள், எத்தகைய தீர்ப்பை எதிர்பார்த்தீர்கள்?
நான் விரும்பிய தீர்ப்பும் எதிர்பார்த்த தீர்ப்பும் வேறாக இருந்தது. உயர்நீதிமன்றம் இப்பிரச்சனையை மத்திய அரசிடமே ஒப்படைக்கும் என்று எதிர்பார்த்தேன். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடமே திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். ஏனெனில், தீர்ப்பு யாருக்குச் சாதகமாக வந்தாலும் அது பிரச்சனைகளை உருவாக்கும். இப்போது வழங்கப்பட்ட தீர்ப்பைப்போல ஒரு சமரசத் தீர்வாக இருந்தாலும் அதிலும் அதிருப்தியாளர்கள் இருப்பார்கள். யாருக்கும் நிறைவான திருப்தி இருக்காது. இந்த வழக்கில் இரு தரப்பினருக்கும் வெளியே ஏராளமான இந்துக்களும், இசுலாமியர்களும் உள்ளனர். தீர்வுக்கான நடவடிக்கைகளில் அவர்களையும் பங்குபெறச் செய்திருக்க வேண்டும்.

அது இவ்வழக்கில் மேலும் சிக்கலை ஏற்படுத்தாதா?
சிக்கலுக்குள்ளாக்குவதல்ல; சனநாயகப்படுத்துவது அவசியம். ராமயென்ம பூமி இயக்கம் வந்தபோது இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள், பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவாக இருக்கவில்லை. கோயில் எங்குவேண்டுமானாலும் அமைக்கலாம். இராமர் பிறந்த இடம் என்பது அயோத்தி முழுவதும்தானே. அதனால்தான் மத நம்பிக்கையுள்ள இந்துக்களுக்கு மசூதி தகர்ப்பில் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால், இப்பிரச்சனையை B.J.P.யும் பிறரும் பல வழிகளிலும் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டனர். அவ்வாறு இந்த வழக்கிற்கு வெளியே இரு தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கி, பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர, நீதிமன்றம், மத்திய அரசிடமே திருப்பி அனுப்பும் என்றே நான் எதிர்பார்த்தேன்.

ஆனால், நான் விரும்பிய தீர்வு அதுவல்ல. உண்மையில் அயோத்தி, இந்தியாவின் பல்வேறுபட்ட பண்பாட்டின் மையப்புள்ளியாகும். ஆயிரக்கணக்கான ஆலயங்களும், ஏராளமான மசூதிகளும் அங்கே இருந்தன. புத்தவிகார்களும், சைனர்களும் கூட இருந்தனர். ஏறக்குறைய, இந்தியாவின் அனைத்து மதங்களின் கலாச்சாரங்களும், பண்பாட்டு அடையாளங்களும் அங்கு இருந்தன. இது தர்க்க விடயமாக, பிரச்சனைக்குரிய இடமாக வந்துவிட்டால், அரசே அந்த இடத்தைக் கையகப்படுத்தி ஒரு சமய மையமாக(Religious Center) மாற்றியிருக்க வேண்டும். இங்கு இந்துக்கள் ஆலயமும், இசுலாமியர்கள் மசூதியும் கட்டிக்கொள்ளலாம். புத்தவிகார்களும், தேவாலயங்ளும் கூட அமைத்துக் கொள்ளலாம். அதன் மத்தியில் பல்வேறு மத நம்பிக்கையாளர்களும் விவாதங்களில் பங்கெடுக்கும் விதம் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் மசூதியும், ஆலயமும், தேவாலயமும் ஆண்டாண்டு காலமாக அருகருகில் இருக்கின்றனவே. இதுவரை அங்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டதுண்டா? அதுபோன்ற ஒரு இடமாக அயோத்தியை மாற்ற வேண்டும். இது வெறும் தத்துவபேச்சு என்று தோன்றலாம். இப்பிரச்சனை அத்தகைய தத்துவார்த்த நிந்தனைகளையே கோருகிறது. அவ்வாறு தத்துவார்த்தமாக சிந்திக்க நமது பிரதமருக்கோ, குடியரசுத்தலைவருக்கோ முடியுமானால், எதிர்காலத்தில் வரவிருக்கும் இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கும் அது ஒரு தீர்வாக அமையும். இப்போதைய தீர்ப்பு, தற்போது உருவாகியுள்ள பிரச்சனைகலைவிடவும், எதிர்காலத்தில் என்னென்ன சிக்கலான பிரச்சனைகளை உருவாக்கப்போகிறதோ என்பதையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed 2 Feb 2011 - 16:40

இத்தீர்ப்பு, வழக்கிற்கு வெளியே மேலும் பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துமல்லவா?இங்குள்ள ஆயிரக்கணக்கான மசூதிகள், இந்து ஆலயங்களைத் தகர்த்துக் கட்டப்பட்டவையென்று சங்பரிவார் உரிமை கொண்டாடுகிறது.இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட விடயத்தில் நீதிமன்றம் மௌனம் காப்பது, சங்பரிவாருக்கு மேலும் உரிமம் வழங்கப்பட்டது போலாகாதா?
நிச்சயமாக. அங்கேதான் இத்தகைய நம்பிக்கைகளின் சிக்கல் வருகிறது.பல்வேறுபட்ட நம்பிக்கைகள் கொண்ட மக்கள் இங்கே வாழ்கிறார்கள்.மதுராவிலும் காசியிலும்கூட நம்பிக்கைகள் இருக்கின்றன.அதன் அடிப்படையில் போனால் அது இங்கு மேலும் பல விரும்பத்தகாத பிரச்சனைகளையே உருவாக்கும்.பிறகு, வரலாற்றில் நிகழ்ந்தவைகளைத் திருத்துவது இயலாத காரியமாகிவிடும்.

அயோத்தி வழக்கு, ஆங்கிலேயரிடம் வந்தபோது வரலாற்று வரிசையில்(Status Que) நிலை நிறுத்துவது என்பதாக இருந்தது அவர்களுடைய தீர்மானம். 500 வருடங்களுக்கு முன்னர் என்ன நடந்தது என்று பார்த்து அதையெல்லாம் மாற்றிக்கொண்டிருக்க முடியாது.தற்போது என்ன நிலவுகிறதோ அதை அவ்வாறே நீடிக்கச் செய்ய வேண்டும்.அப்படித்தான் முடிவு எடுக்கப்பட வேண்டும்.

நமது நாட்டை ஒரு கலாச்சார பாசிசத்தை நோக்கி இட்டுச் செல்லும் தீர்ப்பா இது?
இது இந்துமதச் சாயையுள்ள தீர்ப்பு.இதில் இந்துத்துவ சார்பு காணலாம்.அது பாசிசத்தை நோக்கிச் செல்லும் என்பதல்ல. அது சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதைப் பொறுத்த விடயம்.இப்பிரச்சனையில் இந்துக்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, நிதானமாக, பொறுப்புடன் எதிர்கொண்டிருக்கிறார்கள்.இதனையொட்டி ஒரு சிறிய கலவரம் கூட எங்கும் ஏற்படவில்லை.

இவ்வாறு பொறுப்புடன் நடந்துகொண்ட மக்கள், ஒருவேளை ஏதாவது ஒரு பிரிவினருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இதேபோலத்தான் நடந்துகொண்டிருப்பார்கள் என்று எண்ண இயலுமா?
அவ்வாறு ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் இப்போதுபோல் பொறுமையைக் கடைப்பிடித்திருப்பார்கள் என்று சொல்ல இயலாது.காரணம், இதில் ஈடுபட்டவர்கள் இப்பிரச்சனையைத் தங்களுக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள்.இப்போதுகூட அதிருப்தியின் அறிகுறிகள் தெரிகிறதே.இருந்தாலும், வெறுப்புக்கும், கலவரத்திற்குமான வாய்ப்பாக அதை யாரும் பயன்படுத்தவில்லை.இது மிகப்பெரிய விடயம்.இத்தீர்ப்பை எந்த தரப்பினரின் வெற்றியாகவோ தோல்வியாகவோ பார்க்ககூடாது.அவ்வாறு பார்த்தால் பிரசனைகள்தான் தோன்றும்.நீதித்துறையின் செயல்பாடுகளை, அதன் சிக்கல்களை விவாதிக்கலாம்; எதிர்க்கலாம்.அதற்கப்பால் சென்றுவிடக் கூடாது.

ஊடகங்கள் இது ஒரு சிறப்புத் தீர்ப்பு என்று புகழ்பாடுகின்றனவே, ஊடகங்களுக்கு ஞாபக மறதியா?
அடிப்படை அம்சங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் ஊடகங்கள் இத்தீர்ப்பை எதிர்கொண்டிருக்கின்றன. மூன்று தரப்பினருக்கும் பங்கு கிடைத்துள்ளதால் அனைவரின் பிரச்சனைகளும் தீர்ந்திருக்கின்றன என்ற கணிப்பில்
ஊடகங்கள் இருக்கின்றன. வழக்கு விவாதங்கள், நீதிபதிகளின் கருத்துகள் போன்ற பிரச்சனையின் சிக்கலை ஊடகங்கள் பார்க்க தவறிவிட்டன. பலரும் தீர்ப்பை முழுமையாக வாசிக்கவேயில்லை. காப்சூல் வடிவில் ஊடகங்கள் வழங்கும் விபரங்களைப் பார்க்கும் எவராலும் இதிலுள்ள பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்துகொள்ளவியலாது. தீர்ப்பை ஆழமாக பரிசோதிக்கும் போதுதான் பிரச்சனையின் ஆழம் புரியத் தொடங்கும்.

தீர்ப்பிற்கு ஆதாரமாக நீதிமன்றம் கூறும் ஏ.எசு.ஐ.(அகழ்வாராய்ச்சி)யின் அறிக்கை என்ன சொல்கிறது?
அந்த அறிக்கை அறிவியல் ரீதியானது என்று ஒருவரும் நம்பவில்லை. அதாவது எந்த வரலாற்றாசிரியரும் நம்பவில்லை. அங்கே நடந்த அகழ்வாராய்ச்சி பற்றி இரண்டு வரலாற்றாசிரியர்கள் புத்தகம் எழுதி உள்ளனர். அதில் அகழ்வாராய்ச்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். சாதாரணமாக, இத்தகைய அகழ்வாராய்ச்சிக்கு களக்குறிப்பேடு(Field Diary) அத்தியாவசியமானது. அகழ்வாராய்ச்சியின் போது நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் குறிப்பெடுத்தல் அவசியம். ஆனால், அந்த குறிபேட்டை யாரும் பார்க்கவில்லை. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறதென்று யாருக்கும் தெரியாது. அதை வழங்கக் கோரி பலரும் ஏ.எசு.ஐ.க்கும், அமைச்சருக்கும் மனு கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் எதன் அடிப்படையில் ஏ.எசு.ஐ. இந்த முடிவை எடுத்தது என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மசூதி இருந்த இடத்தில் மண்ணைத் தோண்டியிருக்கிறார்கள்(Manual Excavation). இத்தகைய அகழ்வாராய்ச்சியின் முடிவில் ஒரு பொருள் கிடைக்கும் போது, அது எங்கே இருந்து கிடைத்தது என்பது மிக முக்கியமானது. அதை அவ்விடத்திலிருந்து மாற்ற வேண்டுமெனில் சில வழிமுறைகளும், சட்டங்களும் உண்டு. இங்கே அத்தகைய எந்த மரபுகளும் பின்பற்றப்படவில்லை. அவ்வாறு கிடைத்ததாகச் சொல்லப்படும் கல்வெட்டுகள் வேறு இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லவா? சிலைகள் விடயமும் அவ்வாறுதான். ஒரு குழியிலிருந்து சில சிலைகள் மொத்தமாக கிடைத்தன. அவை அங்கே இருந்ததாகச் சொல்லப்படும் கோயிலுக்குச் சொந்தமானதா அல்லது வேறு ஏதேனும் இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டதா, அதன் கால நிர்ணயம் என்ன பொன்றவை தெளிவாக்கப்படவில்லை. பழமையை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளும் அகழ்வாராய்ச்சி கோரும் நிபந்தனைகளும் தொல்லியல் மரபுகளும் இங்கு பின்பற்றப்படவில்லை என்பதே உண்மை.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed 2 Feb 2011 - 16:44

இவ்வாறு, பிறரால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அமைப்பா இந்திய அகழ்வாராய்ச்சித் துறை?
எ.எசு.ஐ. என்பது ஒரு தொழில்நுட்ப அமைப்பு. ஏராளமான நிபுணர்கள் அங்கே பணிபுரிகின்றனர். அதனால் இப்படியெல்லாம் குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது.

இதுவரை அகழ்வாராய்வின் கள ஆய்வறிக்கையை(Field Report) வெளியிடாமல் இருப்பதால், அதில் சந்தேகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதல்லவா?
வெளியிடக்கூடாது என அதிகாரப்பூர்வமாகச் சொல்லலாம்தான். அது துறை ரீதியான தீர்மானம். ஆனால், கள அறிக்கை அகழ்வாராய்ச்சியின் தொடர்புடையது. அறிக்கை வழங்கப்பட்ட பின்னர் இனி அதை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்கின்றனர். அது சரியல்ல. அனைவரும் காணவும் ஆய்வு செய்யவும் அதை வெளியிட வேண்டும்.

இன்னொரு ஆட்சியின்போது நடந்த அகழ்வாராய்ச்சியாக இருந்திருந்தால் வேறொரு அறிக்கை கிடைத்திருக்கும் என்று எண்ண இயலுமா?
அவ்வாறு சொல்லவியலாது. இந்த அறிக்கை சரியல்ல என்ற எண்ணத்தில்தான் அப்படி கூறப்படுகிறது. இந்த அறிக்கை சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம். முழுமையான ரீதியில் அறிவியல் முறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்று பரிசோதித்த பின்னரே அதைப்பற்றிக் கூற இயலும்.

நமது தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சித் துறைகள் அரசியல் மயமாக்கப்படுகிறதா?
B.J.P.ஆட்சிக்காலத்தில் அவ்வாறு அரசியல் மயமாக்கப்பட்டிருந்தது. ஏ.எசு.ஐ. மற்றும் வரலாற்று ஆய்வுக் கவுன்சில் கூட அரசியல் மயமாக்கப்பட்டிருந்தது. அதில் பணிபுரிந்தவர்கள் B.J.P.யின் அல்லது இந்துத்துவத்தின் ஆதரவாளர்களாக மாறினர். அப்படிப்பட்டவர்கள் மட்டும்தான் அந்தத் துறைகளின் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர்.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களிலும் அத்தகையவர்கள் இருந்திருப்பார்கள் அல்லவா?
நிச்சயமாக, அத்தகையவர்கள்தான் ஆய்வை மேற்கொண்டார்கள். இல்லையெனில், இதுபோன்ற அறிவியலுக்கு விரோதமான கண்டுபிடிப்புகள் வந்திருக்காதே.

அயோத்தி குறித்து எழுதப்பட்டுள்ள வரலாறுகள் எதுவரை உள்ளன?
அயோத்தி பற்றிய ஆதி குறிப்புகள் இதிகாசங்களில் தான் உள்ளன. அயோத்தி என்ற இடம் இதுதான்; இங்கேதான் இராமர் பிறந்தார் என்பதெல்லாம் இதிகாசங்களிலிருந்து கிடைத்தவையாகும். இதிகாசங்கள் சரியாகத்தான் இருக்கும் என்பதல்ல. வரலாற்றைப் புரிந்துகொள்ள அது உதவுமென்றாலும், இதிகாசம் வரலாறு ஆகமுடியாது. ஆவணங்களின் அடிப்படையில் இலக்கியங்களும் வேதநூல்களும் வருவது வெகுபின்னர்தான். கி.மு.300 காலக்கட்டம் வரையுள்ள அயோத்தியின் வரலாற்றைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், அங்கு புத்த-சைன குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு.

இசுலாமிய பண்பாட்டின் கூறுகள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுல்தானேட் கட்டிட அமைப்புகள் அங்கே காணப்படுகின்றன. பாபர் மசூதியிலும் அவற்றைக் காணலாம். அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது கிடைத்த சுண்ணாம்பு கற்களும், சுர்க்கியும் அதற்கு ஆதாரங்களாகும். இர்பான் அபீப், இசுலாமியக் கட்டட கலையின் ஆதாரங்களாக அதைக் குறிப்பிடுகிறார். அதற்கு முன்னர் அத்தகைய கட்டுமான முறைகல் இந்தியாவில் இருந்ததில்லை. அங்கே ஒரு இசுலாமிய குடியிருப்பு இருந்திருக்கலாமென்றும் இர்பான் கூறுகிறார்.

கோயில் தகர்க்கப்பட்ட பின்னர்தான் மசூதி நிர்மாணிக்கப்பட்டதாக நிச்சயமாக கூறவியலாது. அங்கே நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. இசுலாமிய மன்னர்கள், நம்பிக்கையின் அடிப்படையிலும் பிற அரசியல் காரணங்களுக்காகவும் ஆலயங்களை இடித்திருக்கலாம். அவ்வாறு இடிக்கப்பட்டிருந்தால், அதற்காக எல்லா மசூதிகளையும் இடித்துவிட்டு மீண்டும் அந்த இடத்தில் கோயில்களை எழுப்புவது தீர்வாக அமையாது. இதெல்லாம் வரலாற்றில் மாச்சர்யங்களின் பாகமாக நிகழ்பவை. வளர்ச்சியடைந்த நாகரிக சமூகம் அவ்வாறு சிந்திக்கக் கூடாது.

மசூதி இயல்பக உருவானதல்ல. அங்கு உடல் சுத்தம் செய்வதற்கான நீர்த்தேக்கத் தொட்டியோ, குளமோ இல்லை. மினாராக்களுக்கு இசுலாமியத் தன்மையில்லை என்றெல்லாம் வாதங்கள் எழுகின்றனவே?
இசுலாமியக் கட்டடக் கலை அல்ல என்று கூறுவது சரியல்ல. ஒரே மாதிரி இருக்கும் மூன்று மினாராக்கள் பற்றித்தான் அவ்வாறு கூறுகிறார்கள். இசுலாமிய கட்டடக் கலையுடன் நெருங்கிய தொடர்பு மசூதிக்கு இருந்தது. 1949வரை இசுலாமியர்கள் அங்கே தொழுகை நடத்தி வந்ததை நாம் அறிவோம். அதனாலேயே அது ஒரு மசூதிதான். அப்போது நிச்சயமாக அங்கே தண்ணீர்த் தொட்டி இருந்திருக்கும் தானே?

‘பாபர் நாமா’வில் இந்தக் காலகட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் சில பக்கங்கள் காணாமற்போன பின்னணி குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறதே?
அதில் சந்தேகம் ஒன்றுமில்லை. பன்னிரெண்டு பக்கங்கள் காணாமற்போயுள்ளன. பாபர், வேட்டைக்குச் சென்றபோது அது நிகழ்தது. பாபர் நாமா எழுதிக் கொண்டிருக்கும்போது காற்று வீசியதால் சில பக்கங்கள் காணாமற்போயின. அது, இந்த ஒரு வருட நிகழ்வுகளை விவரிக்கும் 12 பக்கங்களாக இருந்தன.

இத்தீர்ப்பு, இடதுசாரிகளுக்கும், இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களுக்கும் கிடைத்த பதிலடி என்று சங்பரிவார் அறிவுயீவிகள் கூறுகிறார்களே?
இதில் பதிலடி ஒன்றுமில்லை. வரலாற்றைப் புரிந்துகொள்ள இயலாத சிலர், வரலாற்றுக்கு எதிராக முடிவெடுத்திருக்கிறார்கள். வரலாற்றின் அடிப்படையில் இதற்கு தீர்வு கிடைக்குமென்று எந்த வரலாற்றாசிரியரும் எப்போதும் எதிர்பார்த்ததில்லை. இதில் வரலாறு பிரதான அம்சம் அல்ல. மதசார்பற்ற இடதுசாரி வரலாற்றாசிரியர்களும் அவ்வாறுதான் கருதினார்கள்.

ஆனால், வரலாற்று ரீதியான கேள்விகள் எழுப்பபட்டால் வரலாற்றுக்கு உண்மையக நடந்துகொள்ள வேண்டும். வரலாற்றை அறிவியல் கண்கொண்டு பார்க்கவேண்டும். ஆனால், விடயங்கள் அவ்வாறு செல்லவில்லை என்பதை உணர்ந்துகொண்டதால்தான் மதச்சார்பற்ற இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் B.J.P. ஆட்சிக்காலத்திலும், இன்றும் வரலாற்று குறித்த விளக்கங்களை அளிக்கிறார்கள்.

அன்று, B.J.P. வரலாற்றைத் தங்கள் விருப்பப்படியெல்லாம் திருத்த முயன்றது. இன்று, நீதிமன்றம் வரலாற்றையே ஏற்க மறுக்கிறது.


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed 2 Feb 2011 - 19:37

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தினேஷ்.தி
தினேஷ்.தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 25/11/2014

Postதினேஷ்.தி Tue 25 Nov 2014 - 4:40

[/justify]

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 25 Nov 2014 - 5:56

நீதிமன்றம் வரலாற்றை நிராகரிக்கிறது-1 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக