ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மின்சாரம் தேவையில்லா பிரிஜ்.

View previous topic View next topic Go down

மின்சாரம் தேவையில்லா பிரிஜ்.

Post by சிவா on Thu Feb 10, 2011 8:51 am
மின்சாரம் தேவை இல்லை
பீரோவுக்கான தோற்றம் இல்லை
ஆனால் குளிர் உண்டு;
காய்கனிகளை கெடாமல் வைக்க
வழியும் உண்டு! - அது என்ன?


`மண் கலன் குளிரூட்டி'
என்று இந்தப் புதிருக்கு விடை சொல்கிறார், நுண் உயிரி ஆராய்ச்சியாளர் முருகன்.

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சியை சேர்ந்தவர் இவர். பரமக்கல்யாணி கல்லூரியில் விலங்கியல் பட்டப் படிப்பை முடித்து, மேற்படிப்புகள் கற்று முனைவர் ஆகியிருக்கிறார். பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். வயது 37.

காற்று, மண் துகள்களில் கண்ணுக்கு தெரியாமல் கலந்திருக்கும், நன்மை தரும் நுண்ணுயிரிகளை மனிதர்களுக்குப் பயன்படச் செய்வதுதான் முருகனின் ஆய்வின் நோக்கம். நானோ தொழில்நுட்பம் வரை சென்று அதற்கான ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார்.

`பற்களில் புளூரின் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, சத்துக் குறைபாடுகளுக்கு, சுத்தப்படுத்தப்படாத குடிநீரும், விஷத்தன்மை கொண்ட உணவும்தான் காரணம்' என்று சொல்லும் முருகன், தண்ணீரை சுத்திகரிக்க மண்பாண்டத்தால் உருவான நீர் வடிகட்டி, இயற்கை சுடுமண் `பிரிஜ்' (மண் கலன் குளிரூட்டி) ஆகியவற்றை உருவாக்கி உள்ளார்.

மேலும் பல விந்தையான, உபயோகமான சமையல் பொருட்களையும் உருவாக்கியிருக்கும் முருகனிடம் பேசியதில் இருந்து...

நம் நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, `பிரிஜ்' எனப்படும் குளிர்சாதனப் பெட்டியை மண்பாண்டத்தில் வடிவமைத்து விட்டார்கள். அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள், ராஜஸ்தான் மண்பாண்டக் கலைஞர்கள். தற்போது கடைகளில் கிடைக்கும் இந்த வகைக் குளிரூட்டிகளை ஆராய்ந்தபோது சில குறைபாடுகளை அறிய முடிந்தது. அதாவது இவற்றில், 2 நாட்கள் மட்டுமே காய்கறி, கனிகளைப் பாதுகாக்க முடியும்.

உருளையாக இருக்கும் பெரிய குடுவையின் நடுவே இன்னொரு சிறிய குடுவையை வைக்கிறார்கள். இரண்டு குடுவைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் 10 முதல் 12 லிட்டர் தண்ணீர் விடப்படுகிறது. சிறிய குடுவையில் காய், கனிகளை வைக்கிறார்கள். குடுவையை மூடியபின் பார்த்தால், மாயாஜாலப் படங்களில் காட்டும் `ஜீபூம்பா' மந்திரஜாடி போன்று பெரியதாக இருக்கிறது. அதன் உள்ளே காய்கறி இருக்கும் சிறிய குடுவையில் 25 முதல் 27 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. காற்றின் ஈரப்பதம் 80 முதல் 85 சதவீதமாகப் பராமரிக்கப்படுகிறது.

இந்த அமைப்பில், 2 குடுவைகளுக்கு நடுவே தண்ணீர் இருப்பதால் காய்கறி வைத்து இருக்கும் பகுதிக்குள், நீர்க்கசிவு ஏற்படுகிறது. கவனிக்காமல் விட்டால், நீர்க்கசிவு அதிகரித்து காய், கனிகளை அழுக வைத்துவிடும். 2 குடுவைகளுக்கு இடையே, காற்றுப் புக வழி இல்லை என்பதால் தண்ணீரும் 2 நாட்கள் வரைதான் கெட்டுப் போகாமல் இருக்கும்.

இந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் விதமாகத்தான் நான் புதிய மண்கலன் குளிரூட்டியை அறிவியல்பூர்வமாக உருவாக்கினேன். அடுப்பின் மீது பம்பரம் நிற்பது போன்று இதன் தோற்றம் இருக்கிறது. இதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டால் போதும். இதிலும் 2 குடுவைகள். 2-வது குடுவையின் உள்ளே காய்கறிகள், பழங்களை வைக்க வேண்டும். உள்பகுதியில் குடுவையின் கீழே, நனைந்த செங்கல் துண்டுகள் பல இடப்படும். பம்பரம் போன்ற மேற்பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டு உள்ள வளைவின் மீது ஒரு லிட்டர் தண்ணீரும் ஊற்றப்படும்.


மேல்பகுதி திறந்திருப்பதால் தண்ணீர் சீக்கிரம் கெடுவதில்லை. உள்ளே இருக்கும் காய், கனிகளுக்கும், போதிய ஈரப்பதம் கிடைக்கிறது. ஈரத்தை உறிஞ்சி 20 நாட்கள் வரை வைத்திருக்கும் திறன் செங்கலுக்கு இருப்பதால், அடிப்பகுதியின் ஈரப்பதம் சிறிய குடுவையின் உள்ளே கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இதனால் காய்கறிகள் 23 டிகிரி வெப்பநிலையில் ஒரு வாரம் வரை கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன. ஈரப்பதம் 90 சதவீதம் வரை பராமரிக்கப்படுகிறது.

பழங்கால முறையை விட நான் கண்டுபிடித்த மண் கலன் குளிரூட்டி சிறந்தது என்றாலும், இதிலும் சில குறைகள் இருந்தன. அடிப்பகுதியில் செங்கல் துண்டுகள் இருப்பதால் ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது கடினம். கீழே விழுந்தாலும் சேதாரம் ஆகிவிடும்.

இதனால், இதே அடுப்பு வடிவத்தில் `சிம்பிள்' தோற்றமாக மூன்றாவது மண்கலன் குளிரூட்டியை உருவாக்கினேன். 2 குடுவைகளை வைத்தால்தானே பிரச்சினை? எனவே ஒரே குடுவையாக மாற்றினேன். அதற்குள் காய்கறிகளை போட்டு வைக்கலாம். இதன் மேல்பகுதியில் உள்ள ஒரு வளைவு அமைப்பில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றினால் போதும். அடுப்பு போன்ற அடிப்பகுதியில் துவாரங்கள் இருப்பதால் காற்று உள்ளே செல்வது எளிது. இந்த முறையிலும் 90 சதவீத ஈரப்பதம் கிடைக்கிறது. 23 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது.

இந்த அமைப்பிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. குடுவையில் பலவகைக் காய்கறிகளை ஒன்றாக போட்டு வைத்து இருப்போம். அடிப்பகுதியில் இருக்கும் காய்கறிகள் முதலில் தேவைப்பட்டால் அனைத்து காய்கறிகளையும் வெளியே எடுத்து, குறிப்பிட்ட காய்கறிகளை எடுத்துக்கொண்டு, மற்றவற்றைத் திரும்பவும் குளிரூட்டியில் வைக்க வேண்டியிருக்கும். அந்தக் கஷ்டத்தைப் போக்க, `தபால் பெட்டி' வடிவ மண்கலன் குளிரூட்டியைத் தயார் செய்தோம். இதற்கான மண்ணைச் சேகரித்தபோது, ஆய்வகத்தில் வைத்து வளர்த்த சில நுண் மண் உயிரிகளையும், மண்கலவையுடன் சேர்த்தோம்.

அப்போது ஒருவித பளபளப்பு, புதுமையான தன்மையை அந்த மண் கலவை அடைந்தது. குறிப்பிட்ட நுண்ணுயிரிகள் மனிதனுக்கு நன்மை செய்பவை.

அவை கலந்த மண் கலவையை `தபால் பெட்டி' வடிவில் வார்த்து, அடுப்பில் வைத்துச் சுட்டு எடுத்தோம். இதன் அடிப்பகுதியில், தபால் பெட்டியில் இருப்பது போன்ற ஒரு திறவையை அமைத்துள்ளேன். அதன் வழியே, அவ்வப்போது எந்தக் காய், கனி தேவைப்படுகிறதோ, அதை எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை காய்கனிகள், பழங்களைப் பாதுகாக்க முடியும் என்பது இந்தக் குளிரூட்டியின் சிறப்பு. தபால் பெட்டி குடுவையின் திறவைக்கு மேலே ஒரு அடுக்கு உள்புறமாக உருவாக்கப்பட்டு, அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதில் ஈரப்பதம் 95 சதவீதம் கிடைக்கிறது. 23 டிகிரி வெப்பம் நிலவுகிறது. தண்ணீர் வாசம் இருந்தாலே பூஞ்சை, பாசிக்கு கொண்டாட்டம்தான். எனவே அவை தொற்றாமல் இருக்க சுண்ணாம்பைப் பயன்படுத்தி உள்ளோம்'' என்று தனது மண்கலன் குளிரூட்டியைப் பற்றி விரிவாக விளக்கிக் கூறினார் முருகன்.


தொடர்ந்து, அதன் நன்மைகளையும் பட்டியலிட்டார் அவர்-

"நவீன மின்சார குளிர்சாதன பெட்டியின் பயன்கள் அதிகம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், புளோரோகுளோரோபாம் போன்ற நச்சு வாயு ஆபத்துகள் இருக்கின்றன. மின்சாரமும் கணிசமாக செலவாகிறது. அதற்கு, நான் உருவாக்கிய மண்கலன் குளிரூட்டி தீர்வாக இருக்கும். இதில் வைக்கப்படும் காய், கனிகளின் வெளித்தோற்றம் ஒரு வாரம் வரை மாறாது. மணம், சுவை, கடினத்தன்மை போன்றவை ஒரு வாரத்துக்கு பின்னரும் சராசரியாக 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கும். மின்சார குளிர்சாதன பெட்டியில் கூட இந்த அளவுக்கு இருக்காது.

இந்தக் குளிரூட்டி தவிர, 3 குடுவை அடுக்கு நீர்வடிகட்டி, மண்பாண்ட `குக்கர்' உள்பட பல சமையல் பொருட்களைத் தயாரித்திருக்கிறேன். அனைத்தும் உலோகப் பாத்திரங்களைப் போல சீக்கிரம் சூடாகும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பொருட்களை எல்லாம் வர்த்தக ரீதியில் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப் பெரும் முதலீடு தேவைப்படுகிறது. இப்போது நான் உயர் ஆராய்ச்சிக்காக சவூதி அரேபியா செல்கிறேன். அங்கிருந்து நாடு திரும்பியதுமே நவீன மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்குவேன்.

என் ஆராய்ச்சிக்கு பரமகல்யாணி கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் ரஞ்சித்சிங் தலைமையிலான குழுவினர் உறுதுணையாக இருந்தனர். புதுடெல்லியில் உள்ள மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதி உதவியுடன் இதுவரை ஆய்வுகளை மேற்கொண்டு வந்தேன். பல ஆய்வரங்கங்கள், கருத்தரங்குகளில் எனது கண்டுபிடிப்புகளைக் காண்பித்து பாராட்டுகள் பெற்று உள்ளேன்'' என்று பெருமிதம் பொங்கக் கூறினார், முருகன்.

இயற்கையுடன் தொழில்நுட்பத்தைக் கலந்து மக்கள் பயன்பெறச் செய்யும் முருகனின் முயற்சிக்கு ஒரு `சபாஷ்'!

தினதந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மின்சாரம் தேவையில்லா பிரிஜ்.

Post by அகீல் on Thu Feb 10, 2011 9:25 am

avatar
அகீல்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 338
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: மின்சாரம் தேவையில்லா பிரிஜ்.

Post by krishnaamma on Thu Feb 10, 2011 10:19 am


நம் நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, `பிரிஜ்' எனப்படும் குளிர்சாதனப்
பெட்டியை மண்பாண்டத்தில் வடிவமைத்து விட்டார்கள். அந்தப் பெருமைக்குச்
சொந்தக்காரர்கள், ராஜஸ்தான் மண்பாண்டக் கலைஞர்கள். தற்போது கடைகளில்
கிடைக்கும் இந்த வகைக் குளிரூட்டிகளை ஆராய்ந்தபோது சில குறைபாடுகளை அறிய
முடிந்தது. அதாவது இவற்றில், 2 நாட்கள் மட்டுமே காய்கறி, கனிகளைப்
பாதுகாக்க முடியும்.உருளையாக இருக்கும் பெரிய குடுவையின் நடுவே
இன்னொரு சிறிய குடுவையை வைக்கிறார்கள். இரண்டு குடுவைகளுக்கு இடையே உள்ள
இடைவெளியில் 10 முதல் 12 லிட்டர் தண்ணீர் விடப்படுகிறது. சிறிய குடுவையில்
காய், கனிகளை வைக்கிறார்கள். குடுவையை மூடியபின் பார்த்தால், மாயாஜாலப்
படங்களில் காட்டும் `ஜீபூம்பா' மந்திரஜாடி போன்று பெரியதாக இருக்கிறது.
அதன் உள்ளே காய்கறி இருக்கும் சிறிய குடுவையில் 25 முதல் 27 டிகிரி
வெப்பநிலை நிலவுகிறது. காற்றின் ஈரப்பதம் 80 முதல் 85 சதவீதமாகப்
பராமரிக்கப்படுகிறது.இந்த அமைப்பில், 2 குடுவைகளுக்கு நடுவே
தண்ணீர் இருப்பதால் காய்கறி வைத்து இருக்கும் பகுதிக்குள், நீர்க்கசிவு
ஏற்படுகிறது. கவனிக்காமல் விட்டால், நீர்க்கசிவு அதிகரித்து காய், கனிகளை
அழுக வைத்துவிடும். 2 குடுவைகளுக்கு இடையே, காற்றுப் புக வழி இல்லை
என்பதால் தண்ணீரும் 2 நாட்கள் வரைதான் கெட்டுப் போகாமல் இருக்கும்.
நான் சிறியவளாக் இருக்கும் போது இந்தமாதிரி ஃபிரிஜ் ஐ உபயோகித்துள்ளார்கள் என் பெற்றோர். 1 வாரம் வரை அதில் காய்கறிகள் வைக்கலாம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மின்சாரம் தேவையில்லா பிரிஜ்.

Post by மஞ்சுபாஷிணி on Thu Feb 10, 2011 10:27 am

மிக அருமையான தகவல் டெக்னாலஜி டெவலப்மெண்ட் ஆவதால் நமக்கு நன்மைகள் கிடைத்தாலும் அதில் தீமைகளும் அடங்கி இருக்கிறது..

அருமையான புதுவகையான ப்ரிட்ஜ் முறையை பார்த்ததும் கண்டிப்பாக இதை மார்க்கெட்ல நியாயவிலையில் விற்றால் ஏழைகளும் பயன் பெறும்படி அமையும் இந்த ஃப்ரிட்ஜ் வாங்கலாமே....
வாழ்த்துக்கள் இப்படி ஒரு சாதனை புரிந்ததற்கு...
அன்பு நன்றிகள் சிவா பகிர்ந்தமைக்கு...

க்ரிஷ்ணாம்மா ஆச்சர்யமா இருக்கேப்பா அப்ப இந்த வகை மண்பாண்டம் நீங்க உபயோகிப்பதால் இயற்கை வளம் குறையாத உணவும் நம் உடலுக்கு நலனை சேர்க்கிறது என்பதை அறியவும் முடிந்ததுப்பா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மின்சாரம் தேவையில்லா பிரிஜ்.

Post by krishnaamma on Thu Feb 10, 2011 10:46 am

@மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான தகவல் டெக்னாலஜி டெவலப்மெண்ட் ஆவதால் நமக்கு நன்மைகள் கிடைத்தாலும் அதில் தீமைகளும் அடங்கி இருக்கிறது..

அருமையான புதுவகையான ப்ரிட்ஜ் முறையை பார்த்ததும் கண்டிப்பாக இதை மார்க்கெட்ல நியாயவிலையில் விற்றால் ஏழைகளும் பயன் பெறும்படி அமையும் இந்த ஃப்ரிட்ஜ் வாங்கலாமே....
வாழ்த்துக்கள் இப்படி ஒரு சாதனை புரிந்ததற்கு...
அன்பு நன்றிகள் சிவா பகிர்ந்தமைக்கு...

க்ரிஷ்ணாம்மா ஆச்சர்யமா இருக்கேப்பா அப்ப இந்த வகை மண்பாண்டம் நீங்க உபயோகிப்பதால் இயற்கை வளம் குறையாத உணவும் நம் உடலுக்கு நலனை சேர்க்கிறது என்பதை அறியவும் முடிந்ததுப்பா...

ஆமாம் மஞ்சு, அப்ப அதன் பேர் "காதி ஃபிரிஜ்" எங்க அப்பா நான் 7 ம வகுப்பு படிக்கும் போது வாங்கி வந்தார். எங்களுக்கு ஒரே ஆச்சர்யம் மற்றும் சந்தோஷம். நான் அந்த ஃபிரிஜ் ஐ பற்றி என் சைட் லேயும் எழுதி உள்ளேன். இப்ப காதி இல் அது போல் கிடைக்குமா தெரியல புன்னகை ரொம்ப நாள் நாங்க அதை உபயோகித்தோம் , கிட்டத்தட்ட 5 , 6 வருடங்கள் புன்னகை சிவாவின் இந்த கட்டுரையாள் எனக்கு பழய நினைவுகள் வந்துவிட்டது. அதற்க்கும் ஒரு நன்றி சிவா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மின்சாரம் தேவையில்லா பிரிஜ்.

Post by அருண் on Thu Feb 10, 2011 11:15 am

உன்மயிலே அறிய கண்டு பிடிப்பு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மின்சாரம் தேவையில்லா பிரிஜ்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum