ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 pkselva

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்

View previous topic View next topic Go down

முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்

Post by சிவா on Fri Feb 11, 2011 7:55 am

முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் வள்ளியூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே அமைந்துள்ள இக்கோயிலைக் கடந்து செல்லும் வாகனங்கள் கோயிலுக்கு அருகே நிறுத்தி, அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.மேலும் தங்களால் முடிந்த காணிக்கைகளையும் செலுத்துகிறார்கள்.

கோயிலுக்கு அருகில் சாலையோரத்தில் மிகப்பிரமாண்டமான இசக்கியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோயில் நோக்கிச் செல்லும் அல்லது அங்கிருந்து திரும்பும் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் கண்டிப்பாக அம்மன் கோயில் அருகே நின்று, அதில் பயணிப்பவர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றால் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடக்காது என்பது நம்பிக்கை.

எனவே பாதுகாப்புடனும், தாங்கள் செல்லக்கூடிய காரியங்கள் வெற்றி அடையவும் இந்த கோவிலை வணக்கி சென்றால் நல்லது நடக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.

அதேபோல் அரசுப் பேருந்துகள் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் பகுதியைக் கடந்து செல்லும் போது, பேருந்தில் பயணிப்பவர்கள் சாலையில் கோயிலை நோக்கி தங்களின் காணிக்கைகளை வீசுகிறார்கள். அந்த காணிக்கைகளை கோயில் அருகில் இருப்பவர்கள் எடுத்து உண்டியலில் சேர்ப்பிக்கிறார்கள்.

இது தவிர, வாகனங்களின் ஓட்டுநர்களும் தங்களின் வண்டிகளுக்கு இசக்கியம்மன் கோயிலில் பூஜை செய்வதையும் காண முடிகிறது. நெடுஞ்சாலையின் வளைவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில், வழிபட்டுச் செல்வோருக்கு விபத்துகள் நேராது என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இங்குள்ள அம்மன் வாகனங்களுக்கு வழித்துணையாக வந்து, விபத்தில் இருந்து காத்து அருள்வதாக அங்கு வரும் வாகன ஓட்டிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

ஆடியில் அமர்க்களம்::

முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் திருவிழா மிகப்பெரிய திருவிழாவாகும். சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மாட்டு வண்டிகள் முதல் கார், ஜீப்,மினிவேன் உள்ளிட்ட பல வாகனங்களில் வந்து, ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபடுகின்றார்கள்.

இந்த நாளில் முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலுக்கு ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர தை மாதத்தில் மலர் அபிஷேகமும் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் நடைபெறும் மலர் அபிஷேகத்தைக் காண கண் கோடி வேண்டும்.

போக்குவரத்து வசதி::

சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் மற்றும் பஸ் வசதி உள்ளது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் இந்த கோவில் உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்

Post by SK on Fri Feb 11, 2011 12:27 pm

நன்றி நன்றி நன்றி நன்றி
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3441
மதிப்பீடுகள் : 476

View user profile

Back to top Go down

Re: முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்

Post by யாதுமானவள் on Fri Feb 11, 2011 1:34 pm

வணக்கம் தோழர் சிவா,

முப்பந்தல் இசைக்கி அம்மன் வேறு யாருமல்ல அது நம் தமிழ் மூதாட்டி அவ்வையார் தான். இக்கோவிலின் வரலாறு எனக்கொரு தமிழ்ப் புலவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை இங்கு பதிவிடுவதில் மிக்க மகிழ்சியடைகிறேன்.
ஒரு முறை மழையில் நனைந்து பசியோடு ஒரு குடிசைக்குள் ஔவை நுழைகிறார். அது, தந்தையை இழந்து ஏழ்மையில் ஆதரவற்று தனியே வாழ்ந்த பாரி மன்னனின் மக்களான அங்கவை, சங்கவையின் குடிசை. தந்தையின் நண்பரான ஔவையைக் கண்டதும் அப் பெண்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தந்தையைப் போல் அவருக்கு விருந்தளிக்க வசதியில்லை. தங்களுக்காகக் சமைத்திருக்கிற எளிய கீரை உணவை இடுகிறார்கள். தமிழ்ப் புலவருக்கு நம்மால் நல்ல உணவை அளிக்க முடியவில்லையே என வருந்துகிறார்கள். ஆனால் அவ்வுணவை உண்ட கவிஞருக்கோ அது அமுதமாகப் படுகிறது. வயிறும் மனமும் நிறைய, ஔவை பாடுகிறார்:

`
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறையிட்டுப் - பொய்யே

அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்

கடகம் செறியாதோ கைக்கு?

ஆஹா! என்ன அருமை! சூடாக, நல்ல நறுமணமிக்கதாய், வேண்டியமட்டும் தின்னும்படியாய் நிறைய நெய்விட்டு `கீரை` என்று பொய் சொல்லி விட்டு அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறாh;கள்? இந்தக் கைகளுக்கு இரத்தினக் கடகம்(வளையல்) அல்லவா செய்து போட வேண்டும்?` என்று உருகுகிறார். (அடகு என்றால் கீரை )


அந்தப் பாரியின் மகள்கள் அங்கவை சங்கவைக்கு அவ்வையாரே திருமணம் செய்து வைத்தார். அத் திருமணத்திற்கு சேர, சோழ, பாண்டியர் ; ஆகிய மூவேந்தர்களையும் அழைத்திருந்தார். மூவேந்தர்களுக்கும் தனித்தனியாகப் பந்தலிட்டு அவர்களை வரவேற்றுச் சிறப்பித்தாரம். ஆனால் திடீரென்று அந்தத் திருமணத்திற்கு பொருளுதவி செய்வதாக இருந்த வள்ளல் ஏதோ காரணத்தினால் உதவி செய்யமுடியாமல் கைவிட்ட நிலையில் மூவேந்தர்களுக்கும் விருந்து வைக்க வேண்டுமே என்ன செய்வது எனத் தவித்த அவ்வை, அங்கு அடியோடு வெட்டப்பட்ட ஒரு பனமரத்தின் அடிப்பாகம் மட்டும் இருப்பதைக் கண்டு அங்கு சென்று கீழ்வரும் பாடலைப் பாடினாராம்.

திங்கட் குடையுடை சேரனும் சோழனும் பாண்டியனும்

மங்கைக்(கு) அறுகிட வந்துநின் றார்மணப் பந்தலிலே

சங்கொத் தவெண் குருத்(து) ஈன்றுபச் சோலை சலசலத்து

நுங்குக் கண்முற்றி அடிக்கண் சிவந்து நுனிகறுத்து

பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே !


"பனந்துண்டமே! சந்திரன்போன்ற வெண்கொற்றக் குடையுடைய
சேரனும் சோழனும் பாண்டியனும் திருமணப்பந்தலிலே மணமக்களுக்கு

அறுகிட்டு வாழ்த்துவதற்கு வந்து நிற்கிறார்கள். சங்கைப்போல வெள்ளிய
குருத்து விட்டு, சலசலவென்று பச்சை ஓலை தழைக்கப்பெற்று, நுங்குகளின்

கண்கள் முற்றி, அடிக்கண் சிவந்து, நுனி கறுத்து உள்ள பனம்பழங்களை

ஆளுக்கு மும்மூன்று தரக்கடவாய்!" என்று கூற, அவ்வையின் இசைக்கு (பாடல்) இசைந்து அவ்வாறே அப்பனை மரமும் தந்ததாம்.


மூவேந்தர்களுக்கும் தனித்தனி பந்தலிட்டு அவர்களை வரவேற்ற இடம் முப்பந்தல் என்ற பெயர்பெற்று அவ்விடத்தில் அவ்வைக்கு கோவில் கட்டி இப்போதும் வழிபட்டு வருகின்றனர் என்று கூறிய அக்கோவில்தான் இந்த இசைக்கிஅம்மன் என்ற மிகப்பழமையான கோவில். இக்கோவில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளதென்று கூறினார்.

இந்த அருமையான பதிவினால் என்ன் நினைவுகளைப் பசுமைப் படுத்தியதற்கு நன்றி.

அன்புடன்,

யாதுமானவள்Last edited by யாதுமானவள் on Fri Feb 11, 2011 2:08 pm; edited 1 time in total
avatar
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 40

View user profile

Back to top Go down

Re: முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்

Post by சிவா on Fri Feb 11, 2011 1:49 pm

முப்பந்தல் ஊரின் பெயர்க் காரணமும், இசக்கியம்மன் யார் என்பதையும் உங்களின் சரித்திர விளக்கத்தின் மூலம் அறிந்துகொண்டோம், மிக்க நன்றி யாதுமானவள்....
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்

Post by பிரகாசம் on Fri Feb 11, 2011 1:53 pm

avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்

Post by பிளேடு பக்கிரி on Wed Feb 16, 2011 12:04 pm

யாதுமானவள்.... சிவா அண்ணாavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்

Post by உதயசுதா on Wed Feb 16, 2011 2:09 pm

நான் கேள்வி பட்டிராத கோவில் இது.பகிர்ந்தமைக்கு சிவாவுக்கும்,அந்த கோயில் பற்றி விளக்கம் கொடுத்த யாதுமானவளுக்கும் நன்றி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum