ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்! அடுத்து அரங்கேற இருப்பது..?
 பழ.முத்துராமலிங்கம்

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 பழ.முத்துராமலிங்கம்

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆன்மீக சிந்தனைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:28 am

சத்ய சாய் பாபா

* நாம் நம் கடமையைச் செய்கிறோம் என்பதை மட்டுமே எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதில் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே கடமையைத் தள்ளிப் போடக் கூடாது. அப்பொறுப்பினை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வெற்றி தோல்விகள் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.


* இருண்ட அறையில் அசுத்தமும், தூசியும் நிறைந்து இருக்கும். நாளடைவில் தேள், பாம்பு போன்ற விஷஜந்துக்களும் ஒளிந்து கொள்ள ஏதுவாகும். அதே அறையை சுத்தமாக்கி, கதவு ஜன்னல்களைத் திறந்து வைத்தால் வெளிச்சமும், நல்லகாற்றும் வர வழியுண்டாகும். அதுபோல, மனம் என்னும் வீட்டில் காமம், கர்வம், பொறாமை போன்ற விஷஜந்துக்களை நுழைய விடாமல் அன்பு என்னும் ஒளியை பரப்புங்கள். தூய்மை என்னும் காற்றையும் நிரப்புங்கள்.


* கண்ணிமையில் பூசிய கருநிற மை கண்ணுக்குள் படிவதில்லை. நீரில் இருக்கும் தாமரை மலர் சேற்றினைத் தீண்டுவதில்லை. கடவுளை முற்றிலுமாக உணர்ந்த மனிதர்கள் உலகவாழ்வில் ஈடுபட்டாலும், அவர்கள் மனம் அதில் ஈடுபடுவதில்லை. எப்போதும் இறைவனையே எண்ணிக் கொண்டு இருப்பர்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:31 am

காஞ்சிப் பெரியவர்


இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரினங்களும் ஒரு நாள் இந்த உலகை விட்டு பிரிந்து செல்லத்தான் வேண்டும். மனிதர்களாகிய நாம், ஆடு மாடு மாதிரி இறக்க கூடாது. ஆனந்தமும், அமைதியும் நிரம்பி அதன்பின் இந்த உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அதுதான் பூரணத்துவம் ஆகும்.
பூரணத்துவத்திற்கு வேண்டிய காரியங்களை நாம் செய்வதாக இருந்தால் நம்மை நாம் அறிய வேண்டும். நமக்கு சாப்பாடு வேண்டும். உத்தியோகம் வேண்டும். கல்யாணம் செய்து மக்களை பெற்று இல்லற தர்மத்தை கடைப்பிடித்தாக வேண்டும்.

ஒழுக்கமாக நான்கு பேருக்கு உதவியாக நல்ல பெயருடன் வாழ்ந்த மனிதன், இந்த உலகத்தை விட்டு பிரியும் போது சமுதாயம் அவனுக்காக கண்ணீர் வடிக்கிறது. தானும் அமைதியடைந்து பிறருக்கும் தன்னால் முடிந்தவரை அமைதியை தந்து வாழக்கற்று கொள்பவனே மனிதர்களுள் சிறந்தவனாகிறான்.

தாயிற் சிறந்த தெய்வம் இல்லை;
சந்நியாசம் வாங்கிவிட்ட மகன் எதிரே வந்தால் தந்தையாக இருந்தாலும் வணங்க வேண்டும். ஆனால் சந்நியாசம் வாங்கிவிட்டாலும் தாயை வணங்கித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் தாயை விட சிறந்த தெய்வம் வேறெதுவும் இல்லை.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:39 am

ஸ்ரீ அரவிந்தர்

* வலிமை, ஆனந்தம் போன்ற குணங்களின் பிறப்பிடமாக அமைதி உள்ளது. அத்தகைய அமைதி ஒவ்வொருவரின் உள்மனதிலும் உள்ளது. எனவே, அதனை வேறு எங்கேயோ இருப்பதாக எண்ணி வெளியில் தேட வேண்டாம். தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்கும் திறனுள்ள மனம், அமைதியின் வடிவமாக இருக்கும். அமைதியாக இருப்பவர்கள் எந்த செயலையும் சிறப்பாகவும், குறையில்லாமலும் செய்பவர்களாகவுமே இருப்பார்கள். எனவே, மனதில் இருக்கும் அமைதியை உணர்ந்து கொண்டு செயலாற்றுங்கள்.


* மனதிற்குள் மறைந்திருக்கும் ஞானத்தை வெளிப்படுத்த அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். உங்களிடம் யாரும் சத்தமிட்டு பேசினால், நீங்களும் பதிலுக்கு அப்படியே பேச வேண்டுமென்பதில்லை. அவரது பேச்சிற்கு அமைதியை பதிலாக கொடுங்கள். அதிலேயே அவர் எதிர்பார்க்கும் பல பதில்கள் புதைந்திருக்கும். அதனை புரிந்து கொள்ளும்வரையில்தான் அவர் சத்தமிட்டுக் கொண்டிருப்பார். எதிர்பார்த்த விடை கிடைத்துவிட்டால் அமைதியாக சென்று விடுவார். ஏனென்றால், அமைதியானது விவரிக்கமுடியாத பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.


* எந்த செயலையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு செயல்கூட இறைவனின் கருணையால்தான் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தியானம் செய்து இறைவனை வழிபடுவதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன், அர்ப்பணிப்பிலும் கிடைக்கும். ஏனெனில் அர்ப்பணிப்பும் ஒரு தியானம்தான்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:41 am

ஸ்ரீ அன்னை

யாராவது ஒருவர் உங்கள் மீது கோபப்பட்டால் அவருடைய கோப அதிர்வுகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் விலகியே நில்லுங்கள். எவ்விதமான ஆதரவோ, பதிலோ கிடைக்காவிட்டால் கோபக்காரரின் வேகம் தணிந்து விடும். தவறு என்பது அறியாமல் செய்யும் பிழையாகும். ஆனால், தவறினால் உண்டாகும் பாடத்தை உணர்ந்து திருத்திக் கொள்வது சரியான வழிமுறையாகும்.

மிகவும் கடுமையான உடல் வேதனையைக் கூட, அமைதியுடன் எதிர்கொள்ளும் போது கடுமை குறைந்து விடும். அதைத் தாங்கக் கூடிய சக்தி உடலுக்கு கிடைத்து விடும். பயம் என்பது ஒரு பெரும் குற்றமாகும். இந்த உலகத்தில் கடவுளின் செயலை நிறைவேற விடாமல், அதை அழிக்கக் கூடிய கடவுள் விரோத சக்திகளில் ஒன்றாக பயம் இருக்கிறது.

அதனால் பயத்தை அறவே விட்டொழியுங்கள். "என்னுடைய அறிவு தான் மிகமிக உயர்ந்தது. மற்ற எல்லாரையும் விட நான் எல்லா வகையிலும் சிறந்தவன். ஆகவே, மற்றவர்கள் சொல்வது யாவும் தவறானவை' என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.கடவுள் உணர்வு ஒன்று தான் மனிதர்களுக்குக் கிடைக்கும் உண்மையான உதவியாகும். அதில் தான் நாம் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும். கடவுளிடமிருந்தே நமக்கு எல்லா வல்லமையும் உண்டாகிறது.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:43 am

விவேகானந்தர்

மகத்தான பணிகளைச் செய்ய பிறந்திருக்கும் என் குழந்தைகளே! சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகா யத்தில் முழங்கும் இடியோசை கேட்டும் நீங்கள் அஞ்சாதீர்கள். எதற்கும் துணிவு கொண்டவர்களாய் எழுந்து நின்று போராடுங்கள். மிருகபலத்தால் யாரும் எழுச்சி பெறமுடியாது. ஆன்மிக பலம் ஒன்றால் மட்டுமே நாம் வீறு கொண்டு எழமுடியும். உண்மை, நேர்மை, அன்பு போன்ற நற்பண்புகள் உங்களுக்கு துணை செய்வதாக அமையட்டும். சுயநலமில்லாத மனிதன் மரணத்திற்குக் கூட அஞ்ச வேண்டியதில்லை.

ஆடம்பர வாழ்வில் ஈடுபாடு கொண்டவர்கள், வாழ் வில் எப்போதும் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தாதவர் கள், ஆசை வயப்பட்டு அதன் பின்னர் செல்பவர்கள், சுயநலம் கொண்டவர்கள், பிறர் துன்பம் கண்டு மகிழ்பவர்கள் இவர்கள் எல்லாம் ஒரு நாளும் இறையனுபவத்தை பெற இயலாது.
மனிதகுலம் பிழையிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை. மாறாக, உண்மையிலிருந்து உண்மைக்குத் தான் பிரயாணம் செய்கிறது. அதாவது நாம் அனைவருமே தாழ்ந்த உண்மையிலிருந்து உயர்ந்த உண்மைக்கு செல்கிறோம் என்பதை உணருங்கள்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:43 am

ஔவையார்


பசிப்பிணி என்ற பாவி ஒருவனைப் பிடித்து விட்டால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை, அறிவுடைமை, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காதல் ஆகிய குணங்கள் மறைந்து விடும். தி வருவாய்க்குத் தக்க வகையில் செலவு செய்ய வேண்டும். வரவுக்கு மீறிச் செலவு செய்பவன் மானத்தை இழப்பான். நல்லது கெட்டதை பிரித்தறியும் அறிவினை இழந்து விடுவான். திருடன் என்று பெயர் எடுப்பான். ஏழு பிறப்பிலும் பாவத்தைச் செய்ய வேண்டி வரும்.

துன்பங்களைச் சேர்த்து வைக்கும் இடமாக உடல் இருக்கிறது. இந்த பொய்யான வாழ்க்கை நிலையானது என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். சேர்த்து வைத்த பொருளைக் கொண்டு வறியவர்களுக்கு உதவி செய்யுங்கள். நாம் செய்யும் தர்மமே நம் துன்பத்தைப் போக்க வல்லது.நெல்லுக்கு பாய்ச்சிய நீர் வாய்க்கால் வழியாகப் புல்லுக்கும் பாய்வது போல, மண்ணுலகில் நல்லவர் ஒருவர் இருந்தாலும் அவருக்காகவே மழை பொழிகிறது. அம்மழைநீரால் உலகில் உள்ள அனைவரும் பயன் பெறுகின்றனர். நாம் வருந்தி அழைத்தாலும் நமக்கில்லாத பொருள் கிடைக்காது. நமக்கான பொருளை வேண்டாம் என்று புறக்கணித்தாலும், அது நம்மை விட்டு நீங்காது. இந்த உண்மையை அறியாமல் மனிதர்கள் வருந்துகின்றனர்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:44 am

கிருஷ்ண பிரேமி சுவாமி

* ரோஜா செடியிலிருந்து புஷ்பத்தை மட்டுமே பறிக்க வேண்டும். அதிலுள்ள முள்ளை சீவ வேண்டிய தில்லை. அதுபோல, படிக்கும் நூல்களில் இருந்து தேவையான சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்றவற்றை தள்ளிவிடுங்கள்.


* கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அது போல, அஞ்ஞானிகளின் மனதில் பல சந்தேகங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கும். அதை தீர்க்க நினைப்பது கடல் அலைகளை அடக்க முயல்வதாகும்.


* கடிகாரம் இயற்கையாகவே இயங்குவது போலத் தோன்றினாலும், சாவி கொடுக்க ஒருவன் எப்படி வேண்டுமோ அதுபோல், உலகம் இயங்க காரணகர்த்தாவாக கடவுள் ஒருவர் இருக்கிறார்.


* உடலுக்குள் உள்ள உயிரையே யாராலும் காண முடியவில்லை. அப்படியிருக்க உயிருக்கும் உயிரான கடவுளை யார் தான் காண முடியும்? உடலின் இயக்கத்தைக் கொண்டு உயிர் இருப்பதை அறிகிறோம். அதுபோல, உலகத்தின் இயக்கமே கடவுளின் இருப்பினை உணர்வதற்கு போதுமானதாக இருக்கிறது.


* காற்றுக்கு உலர்த்துவது தர்மம். நெருப்புக்கு சுடுவது தர்மம். தண்ணீருக்கு நனைப்பது தர்மம். அதுபோல மனிதர்களுக்கு ஒழுக்கம் ஒன்றே தர்மமாக இருக்கிறது.


* ஈரமண்ணில் தான் செடி வளர்கின்றது. காய்ந்த மண்ணில் பட்டு விடுகிறது. அது போல, இரக்கம் உள்ள மிருதுவான இதயத்தில் தான் பக்தி வளர்கிறது. கடினமான இதயத்தில் பக்தி போன்ற உயர்ந்த விஷயங்கள் தோன்றுவதில்லை
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:45 am

தாயுமானவர்

* உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.


* மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனமே புத்துணர்வுடனும், செயலாக்கம் மிக்கதாகவும் இருக்கும். சோர்வடைந்த உள்ளத்தால் எவ்வித பயனும் இல்லை. அவர்களால் அடுத்தவருக்கும் நன்மைகள் செய்ய முடிவதில்லை. அத்துடன் உடன் இருப்பவர்களுக்கும் துன்பம்தான் விளைகிறது. சோர்வுடன் இருக்கும் ஒருவரைக் காணும் மற்றொருவர், தனக்கும் துன்பம் வந்துவிட்டது போலவே கவலை கொள்கிறார். எனவே, துன்பத்துடன் இருப்பவர்கள், யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருப்பதே நல்லது. அந்த வேளையில் தனக்கு துன்பம் நேர்ந்ததற்கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிறிது நேரம் தனிமையில் அதற்கான காரணத்தை சிந்தித்து விட்டாலே, அதனால் பயன் ஒன்றுமில்லை என்பது புலப்பட்டுவிடும். ஆகவே, ஒன்றுமில்லாத சோர்வை விரட்டி, மகிழ்ச்சியுடன் இருங்கள்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:46 am

சாந்தானந்தர்

* நெருப்பு காட்டையே அழித்து விட்டு மேலும் பெரிய காடு கிடைக்காதா என்று ஏங்கி இருப்பதைப் போல பேராசையாகிய காமசிந்தனையும் மனிதனை உயிருடன் சித்ரவதை செய்து அடியோடு அழிக்கக் காத்திருக்கிறது.

* கர்ப்ப கிரகத்தில் இருக்கும் தெய்வத்தை திரைச்சீலை மறைத்து இருப்பது போல, மனிதனின் ஆத்மாவை, ஆசை எனும் திரை மறைத்து இருக்கிறது.

*விருப்பும் வெறுப்பும் ஆகிய இரண்டுமே நரகத்தின் வாசலில் நம்மைக் கொண்டு சேர்க்கும். கடவுள் இவ்விரண்டும் அற்றவராக இருக்கிறார். அவருடைய வடிவம் சத்திய சொரூபமாகும்.

*விருப்பு வெறுப்பு உடையவனை அழிக்க தனியாக எதிரி எவனும் வேண்டியதில்லை. அவன் மனநிலையே அவனை அழிக்க தயாராக நிற்கிறது. கொடிய சத்துருவாக இருக்கும் தீயஎண்ணங்களை விடுத்து அருள் எண்ணங்களை மனம் நாட வேண்டும்.

* கடவுளை அடையும் தகுதியை வளர்த்துக் கொள்பவன் தானே கடவுளாக மாறிவிடுகிறான்.

* தங்கத்தைத் தேடாதே. மனதை மாசற்ற தங்கமாக மாற்றிக் கொள். தங்கப்பாத்திரத்தில் எது வைத்தாலும் கெடுவதில்லை. அதனால் மனதை தங்கமாக்கிக் கொள்ளுங்கள்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:47 am

ராமகிருஷ்ணர்


மக்களில் பலர் புகழ் வேண்டியோ அல்லது புண்ணியம் பெற வேண்டியோ தர்மம் செய்கின்றனர். அத்தகைய செயல்கள் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை. பரோபகாரம் செய்பவர்கள் இறைவனுக்காக மட்டுமே செய்வதே சிறந்ததாகும். இறைவனுடைய நியதியில், உலகில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் இடமுண்டு. அதனால், நம்முடைய கொள்கை தான் சிறந்தது. மற்றவர்கள் கொள்கைகள் தப்பானவை என்று எண்ணம் கொள்வது கூடாது. பிறருக்குப் போதிப்பது சுலபமல்ல.

ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:48 am

தேஜோமயானந்தர்


தியானத்தில் ஈடுபடுவோரின் மனநிலையைப் பொறுத்தே நம் மனம் ஒருநிலைப்படும். கூடிய வரை நன்கு ஓய்வு எடுத்த நிலையில் மனம் தெளிவாக இருக்கும். அந்நிலையில் தியானத்தில் அமர்வது நல்லது. அதனாலேயே தியானம் செய்ய அதிகாலைப் பொழுதே நல்லது என்று கருதுகிறார்கள். யோகப்பயிற்சியில் நல்ல அனுபவம் வாய்ந்த நிபுணரிடம் கற்றுக் கொண்டு, மூச்சைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளைப் பழகியவர்கள் தியானம் செய்யத் தொடங்கும் போது மிக விரைவில் மனதைக் கட்டுப்படுத்தலாம். ஒருமுகப்பட்ட மனம் தியானத்தில் லயிக்க ஆரம்பிக்கும். நம்முடைய சிந்தனையில் இருக்கும் அனுபவங்கள் யாவும் தியானத்தின் போது உருவெடுத்து எண்ணத்தில் தோன்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து தியானத்தை விடாது பழகும் போது தான் இந்த எண்ணங்கள் மறையத் தொடங்கும். பின்னர் தியானம் செய்ய அமர்ந்த சிறிது நேரத்திலே நம் மனம் ஒருமுகப்படுவதை உணரலாம்.தியானத்தில் நாம் சாட்சியாக மட்டுமே இருந்து நம் எண்ணங்களை கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கப் பழகும் போது நாம் அந்த எண்ணங்களில் ஆழ்ந்து விடாமல் படிப்படியாக விலகி நிற்க முடியும். நாளும் கடமையாக தியானம் பயில்பவனால் எண்ணங்களைக் கடந்து மனதைக் கட்டுப்படுத்த முடியும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:49 am

வினோபாஜி


* கடவுளை நிச்சயமாகக் காணமுடியும். அதற்கு தேவை நம்பிக்கை.


* பணத்தை மட்டுமே குறிக் கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது. பிறர் நன்மைக் காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.* மனிதர்களுக்குள் சமத்துவம் மிக அவசியம். ஆனால், அன்பில்லாத சமத்துவத்தால் பகைதான் மிஞ்சும்* இவ்வுலகில் ஆசையில்லாதவன் இறைவன் மட்டுமே. எனவே, அவனை நீங்கள் பின்தொடருங்கள். உள்ளத்திலுள்ள ஆசைகளைக் களைவதற்கு அவன் ஒருவனால் மட்டுமே முடியும்.* அராஜகச் செயல்கள் பெருகுவதற்கு காரணமே மன உறுதியின்மைதான். அஹிம்சை நெறியுடைய நாட்டிற்கு காவல்துறை தேவையில்லை. தொண்டர் படையே போதுமானது.* கொடுப்பதால் தான் செல்வம் பெருகுகிறது. ஈவதில் தான் மனிதனுக்கு இன்பம் பிறக்கிறது. தன்னுடையது என்ற உரிமையும் எண்ணமும் இதற்கு பாதகம் செய்கிறது.* சூரியன் எத்தகைய வேற்றுமையுமின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒளி தருகிறது. அதுபோல் நாமும் யாரிடமும் வித்தியாசம் இல்லாமல் பழக வேண்டும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:50 am

பாரதியார்


தனக்குத் தானே தலைவனாயிருக்கும் அளவிற்கு தன்னை தகுதிப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன் ஆவான். இப்படிப்பட்டவன் ஆண்டவனுக்கு நிகராக மதிக்கத் தக்கவன். தரும சிந்தனை என்பது உயர்ந்தவர்களுக்கு மட்டுமே உள்ள குணம் என்று நினைக்கிறோம். அது ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை கடமையாகும். தியானத்தை ஒருபோதும் கைவிடாதீர்கள். அதனால் உண்டாகும் சக்தியை எளிதாக எடை போடாதீர்கள். மனிதன் தான் நினைத்தபடியே வாழும் தகுதியை தியானம் தரவல்லதாகும். கலியுகம் எதுவரை நீடிக்கும் என்றால், மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை நீடிக்கும். அநியாயம் நீங்கினால் உலகில் கலியின் ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.

இந்த உலகத்திலுள்ள எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் வறுமைத்துன்பம் மிகவும் கொடியது. வறுமையே எல்லாச் சிறுமைகளிலும் மோசமான சிறுமையாகும். மற்ற உயிர்களிடம் கருணையும் அன்பும் கொண்டால் உயிர் வளரும். அன்பிருக்கும் இடத்தில் ஜீவசக்தி குடிகொண்டிருக்கும். அவனிடத்தில் உலகவுயிர்கள் அனைத்தும் நட்போடு உறவாடும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:50 am

காந்தீஜி


சத்தியம் என்பது மயிரிழையினை விட மென்மையானதும், நுட்பமானதும் ஆகும். அதே நேரம் கற்பாறையை விடவும் கடினமும் உறுதியும் கொண்டது. அதனால் சத்தியம் தான் பின்பற்ற மிக எளிதானது. அதே சமயத்தில் மிக கடினமானதும் அதுவே. சமுதாயத்தில் நலிந்த மக்களுக்குச் சேவை செய்து வருவதன் மூலமே சத்தியமாகிய கடவுளை ஆராதிக்க முடியும். மக்கள் சேவையையே கடவுள் மிகவும் விரும்புபவராய் இருக்கிறார்.ண கோடி சூரியன்களைப் போன்ற பிரகாசம் கொண்ட சத்தியம் எனும் ஜோதியை தரிசனம் செய்ய வேண்டுமானால், அகிம்சை எனும் தர்மவழியைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை. சத்திய தரிசனம் செய்ய விரும்புபவன் துரும்பையும் விட தன்னை தாழ்த்தி பணிவோடு இருக்க வேண்டும். வாழ்வில் பணிவுடன் தன் கடமையைச் செய்பவர்களுக்கு உறுதியாக சத்திய தரிசனம் கிடைக்கும். உள்ளத்தின் உண்மை ஒளியே சத்தியம். எத்தனை குழப்பங்கள் நம்மைச் சூழ்ந்தாலும் சத்தியவழியில் நடப்பவனுக்கு உள்ளத்தின் உண்மை ஒளி மங்காது.

சத்தியம் ஒருவனுக்கு கவசம் போன்றது. அதுவே ஒரு மனிதனை எப்போதும் எதிலிருந்தும் காப்பாற்ற வல்லது.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:51 am

மாதாஅமிர்தனந்தமயி


துன்பமயமான உலகைப் படைத்தவர் கொடியவர் என்று சிலர் நினைக்கிறார்கள். பணக்காரர்கள் சொகுசாக வாழும்போது மற்றவர்கள் வறுமையில் வாடுவது நியாயமா என்று பலர் வருந்துகிறார்கள். இதுவா கடவுளின் கருணை? என்று பலரும் மனம் நொந்து கொள்கின்றனர்.உண்மையில் கடவுள் சோதனைகளை மட்டுமே கொடுக்கும் கொடியவர் அல்ல. அவர் கருணை வடிவானவர். நியாயமான ஆசைகளைக் கொண்டு ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு கடவுளின் கருணை என்றைக்கும் உண்டு. பேராசை கொண்டு அலையாதீர்கள். தர்மநெறிமுறைகளை பின்பற்றி சத்திய வழியில் நடப்பவர்களை கடவுள் நிச்சயம் கரைசேர்க்க தவறுவதில்லை. வேகத்துடன் எதையும் அணுகாதீர்கள். விவேகத்தை வளர்த்துக் கொள்வது பலவழிகளில் நமக்குத் துணை செய்யும். "அம்மா' என்று ஆண்டவனின் திருப்பாதங்களை சரண்புகுந்து நீயே எனக்குத் துணை என்று கூக்குரல் எழுப்புங்கள். உன்னையன்றி எனக்கு யார் துணை என்று மன்றாடுங்கள். ஜகன்மாதாவின் மனம் உருகி நிச்சயம் உங்களை தனதாக்கிக் கொள்வாள். எது நமக்கு வாழும் வகை என்பதை பல ரிஷிகள் நமக்கு போதித்துச் சென்றிருக்கிறார்கள். அவ்வழிகளை பின்பற்றினால் வாழ்க்கை மேன்மை பெறும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:52 am

சத்குரு ஜக்கி வாசுதேவ்


* அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும், நேசம் செலுத்தி அவர்களால் விரும்பப்படுபவராக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களால் அவ்வாறு இருக்க முடிவதில்லை. இந்த அன்பு நிலையை அடைவதற்கு, மற்றொருவரின் உதவி தேவையில்லை. ஆனால், அன்பு என்பது மற்றொரு நபரின் தூண்டுகோல் இருந்தால் மட்டுமே வெளிப்படும் என்ற மாயையான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளார்கள். அன்பு என்பதை தனிமையில் இருக்கும்போது நமக்கு நாமே கூட செலுத்திக் கொள்ளலாம். பிறர் மீது, அன்பு செலுத்த விரும்புபவர்கள், அதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டாலே போதும்.


* தற்போது மற்றவர்களை எப்படி பயன்படுத்துவது என்பதின் இலக்கணமாகத்தான் அன்பு கருதப்படுகிறது. ஒருவர் யார் மீது அன்பு செலுத்துகிறாரோ, அவர் இவரது விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்ற வரைமுறையும் வகுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தங்களுக்கு பிடிக்காத கொள்கை உடையவர்களை விரும்புவதில்லை. இத்தகைய செயல் வியாபாரமாக கருதப்படுமே தவிர நிச்சயமாக அன்பாக இருக்காது.


* ஒருவருக்கு பொருளோ, இன்பமோ தேவைப்படும் நேரத்தில் அதனை அடைவதற்காக சம்மந்தப்பட்ட நபரிடம் அன்பு செலுத்தக்கூடாது. உண்மையான அன்புடன் இருந்தால் விரும்பும் அனைத்தும் எளிதாக கிடைக்கும் என்ற மனப்பக்குவம் மக்களிடம் வர வேண்டும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:52 am

யோகானந்தர்


* மனிதன் அனுபவிக்கும் ஒவ்வொரு உணர்வும் அவனது மனதை பொறுத்துதான் அமைகிறது. பணம் நிறைந்த ஒருவனது மனம், தான் ஏழையாக இருப்பதாகவும், இப்போது இருப்பதில் திருப்தி இல்லை என்றும் எண்ணினால், இல்லாதவனைப் போலவே தான் தன்னை உணர்வான். ஆகவே, மனதை எப்போதும் திருப்தி உணர்வு கொண்டதாக வைத்திருங்கள்.


* ஒருவன், மற்றொருவனால் ஏமாற்றப்படும்போது மனம் உடைகிறான். அப்போது ஆறுதல் சொல்ல யாரும் இல்லாவிட்டால், தனக்கு உதவிக்கு யாரும் இல்லையே என்று எண்ணி வருந்துகிறான். இது சரியான எண்ணமல்ல. ஏனெனில், உலகில் ஆதரவற்றவர்கள் என்று யாருமே இல்லை. ஒவ்வொருவருக்கும் இறைவன் ஆதரவு தருபவனாகவே இருக்கிறான். உங்களை யார் கைவிட்டாலும் அவன் நிச்சயமாக கைவிடமாட்டான்.


* மனிதர்கள் இறைவனின் வடிவங்களே. அவர்கள் யாராலும் வெற்றி கொள்ள முடியாத அளவிற்கு திறமையுடையவர்களாக இருக்கின்றனர். எனவே, பெரிய தோல்வி வந்தால்கூட அதற்காக கலங்காதீர்கள். ஏனெனில், நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்பதில், உங்களைவிட இறைவன்தான் அதிக ஆர்வமுள்ளவனாக இருக்கிறான்.


* பணம் இருந்தால் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்றும் எண்ணாதீர்கள். பணக்காரர்கள் வெளியில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தோன்றினாலும், அவர்களுக்குள்ளும் பல துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, உங்களுக்கு நிகழ்பவற்றை இன்பமாகவே எடுத்துக்கொள்ளுங்கள்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:53 am

சாரதாதேவியார்


* ஒவ்வொருவரும் குருவை சார்ந்து வாழுங்கள். அவரது சொல்கேட்டு அப்படியே நடந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு செய்யும் துன்பத்தை கூட நன்மையாக கருதி ஏற்றுக் கொள்ளுங்கள். குரு, தீமையான ஒருவிஷயத்தை உங்களுக்கு சொல்கிறார் என்றால் அதனால் மிகப்பெரும் நன்மை ஒன்று காத்திருக்கிறது என்பது உண்மை.


* ஒருவருக்கு ஏற்படும் இன்பமும், துன்பமும் அவர்களது கர்மபலன்களுக்கு ஏற்பவே நிகழ்கிறது. ஆனால், இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பதால் அதனை முழுமையாக நம்மிடமிருந்து விலக்க முடியாவிட்டாலும், அதன் வலிமையையாவது குறைத்து விடலாம். கர்மபலன்படி, உங்களுக்கு பெரிய காயம் ஒன்று ஏற்படுவதாக இருந்தால், இறைநாமத்தை சொல்லி அவரை வழிபட்டதன் பலனால் மிகச்சிறிய காயம் மட்டும் ஏற்படும்படி அமைந்துவிடும்.
* நீங்கள் இங்கு இருப்பதும், இல்லாததும், ஒரு செயலை செய்வதும், செய்யாமல் இருப்பதும் உங்களது விருப்பப்படி நிகழ்வது இல்லை. அது இறைவனின் விருப்பப்படி நடக்கிறது. அவர் நீங்கள் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் நீங்கள் அதன்படிதான் நடப்பீர்களே தவிர, வேறு வழியில் நிச்சயமாக செல்ல முடியாது. எனவே, உங்களை இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள்.


* லாபம் கிடைக்கிறது என்பதற்காக பொய் பேசாதீர்கள். உண்மை பேசுபவன் இறைவனுக்கு பிடித்தமானவன் ஆகிறான். விரைவாகவே அவரை அடைந்து விடுகிறான்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:54 am

திருவள்ளுவர்


* உள்ளத்தில் இருக்கும் குற்றங்கள் நீங்கவும், அறவழியில் நடக்கவும் வாய்மையை வலியுறுத்தும் அறநூல்களை தேர்ந்தெடுத்து கற்க வேண்டும். படிப்பதோடு நின்றுவிடாமல் அதன்படி நடக்கவும் வேண்டும். அறவழியில் நடப்பவர்களின் மனம் தூய்மையாக இருக்கும். தூயவர்களுக்கு அனைத்துமே சொந்தமானதாகும்.
* மனிதர்கள் அனைவருக்கும் கண்கள் இருக்கிறது. அதனைக் கொண்டு புறப்பொருளை பார்க்கிறார்கள். இதற்காக கண் உள்ளவர்கள் அனைவரும் பார்வையுடையவர்கள் என்று கருதக்கூடாது. கல்வியை சரியான முறையில் கற்று, அதற்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவரே உண்மையில் கண் உள்ளவர் ஆவார். கல்லாதவர்களுக்கு இருக்கும் கண்கள், புண்களாகவே கருதப்படும். அந்த புண்களுக்கு வலியை மட்டும்தான் உணரமுடியுமே தவிர எதனையும் படித்தறியும் திறன் இருக்காது.


* நிலத்தில் எவ்வளவு ஆழம் தோண்டுகிறீர்களோ அந்த அளவிற்கு நீர் சுரக்கும். மக்களுக்கு கற்பிக்கப்படும் கல்வியும் இதைப்போலவே அறிவை பெருக்கித்தருமே தவிர, சற்றேனும் குறைவாக கொடுக்காது. எனவே, அனைவரும் கற்றுத்தேர வேண்டும்.


* கற்றவர்கள் நற்குணங்கள் உடையவர்களாக இருப்பார்கள். தம்மைவிட மூத்தோருக்கும், குருவிற்கும் பணிந்து நடப்பார்கள். தம்முடன் நீண்டநாள் பழகிய நல்ல நண்பர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் விலகி செல்லும்போது வருத்தம் கொள்வார்கள். இவர்களே, அனைவரிலும் உயர்ந்தவராக கருதப்படுவார்கள்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:54 am

கபீர்தாசர்

* நதியானது கடலில் சங்கமமாவது போல் என் மனம் இறைவனாகிய உன்னிடம் சங்கமமாகிறது.

* ஞானத்தின் யானை மேல் ஏறித் தியானம் என்ற ஆசனம் போட்டு அமர்ந்துகொள். நாய் போன்றது உலகம். நன்றாகக் குரைக்கட்டும். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

* இறைவா! உன்னிடம் நான் போகம், முக்தி ஒன்றையும் கேட்கமாட்டேன். எனக்கு பக்தியை தானமாக அருள்வாயாக. வேறு ஒருவரிடமும் இரத்தல் செய்ய மாட்டேன். உன்னைத்தான் இரப்பேன்.

* நீ ஜபமாலை உருட்டலாம், நெற்றியில் திருநீறு பூசலாம், நீண்ட ஜடை தரிக்கலாம். ஆனால், உள்ளத்தில் கொடிய விஷமிருந்தால் எப்படி கடவுளைக் காண முடியும்?

* பூஜை, சேவை, நியமம், விரதம் எல்லாம் வெறும் விளையாட்டுக்களே. ஆண்டவனை உள்ளத்தால் தொட வேண்டும். கடவுள் திருநாமத்தை நெஞ்சில் ஒரு வினாடி மனம் கசிந்து நினைத்தாலும் போதும்.

* மீனுக்கு நீரிலும், உலோபிக்குக் காசிலும், தாய்க்கு மகளிடமும், பக்தனுக்கு ஆண்டவனிடமும் பற்று அதிகம்.

* உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்து கொள்வார்கள். ஒருவரும் மனதை அவ்விதம் செய்து கொள்வதில்லை.

* கடவுள் ஒருவரே; எல்லா ஜீவராசிகளும் அவருடைய சொரூபமே. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ''அவர் என் கடவுள், இவர் அவன் கடவுள், உன் கடவுள் வேறு,'' என்ற பிரிவினை எல்லாம் ஏன்?

* காலம் தவறாது நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பதுமே முக்தியளிக்கும் என்று நினைத்தால் மீன்களுக்கும், விவசாயக் கருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:55 am

பகவத் கீதை


* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்.

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.

* வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.

* சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:56 am

சிவானந்தர்


பொருள் சம்பாதிப்பதற்கான வழிவகைகளைத் தேடுவதே இன்றைய கல்வியின் நோக்கமாக இருக்கிறது. மாணவனை ஒழுக்கமுடையவனாகவும், ஆன்மிக எண்ணம் உடையவனாகவும் மாற்றும் வகையில் கல்வித்தரம் அமைய வேண்டும்.
கல்வி என்பது மனிதவாழ்வின் முக்கிய அம்சங்களாக ஒழுக்கம், அன்பு, தூய்மை, சகிப்புத்தன்மை, தைரியம், வாய்மை, அடக்கம், சேவை, தியாகம் ஆகிய உயர்பண்புகளை வளர்க்கும் விதத்தில் அமைய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்கபோதனை வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். படிப்பு முடிந்த பின்பும் மாணவ வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணக்கூடாது. மனிதன் வாழ்வின் இறுதிவரை மாணவர்களாக இருந்து வரவேண்டும். நல்ல விஷயங்களை கேட்பதற்கு மாணவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். உள்ளக்கட்டுப்பாடு என்பது மாணவ பருவத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. சுயகட்டுப்பாட்டினை மாணவப் பருவத்தில் கடைபிடிப் பவர்கள் வாழ்வில் ஈடுபடும் போது நல்ல சமுதாயத்திற்கு வாய்ப்பாக அமைகிறது. மாணவர் வாழ்வில் ஆசிரியரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆசிரியர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருந்தால் மட்டுமே மாணவர்களை நல்லமுறையில் வழிநடத்த இயலும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:56 am

ரமணர்


மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்னையே இங்குதான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் . நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள். ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும். உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:57 am

சின்மயானந்தர்


ஒருவன் தன் வேண்டாத தீய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவும், தவறான வழியில் பணம் சம்பாதிக்கவும் கொலை செய்கிறான். அதனால் அவனது வாழ்நாளே வீணாகிறது. ஆனால், நாட்டைக் காக்க எல்லைக்குச் செல்லும் போர்வீரன் அங்கே எதிரிகளைச் சுட்டு வீழ்த்துகிறான். போர்புரிவதைத் தன் கடமையாகச் செய்கிறான். அதன் பின் தேசத்திற்குள் வந்தபின் யாரைக் கொல்லலாம்? என்று அவன் அலைவதில்லை.பிரசவ சமயத்தில் தேவைப்பட்டால் கர்ப்பிணிப்பெண்ணுக்கு மருத்துவர் பிராந்தியைக் கொடுக்கிறார். அவளும் அதைக் குடித்து விடுகிறாள். ஆனால், பெண்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாவதில்லை. குழந்தையுடன் வீடு திரும்பியபின், அவள் எங்கே அந்த பிராந்தி? என்று கேட்பதில்லை. ஆனால், குடிகாரனின் நிலைமை அப்படியல்ல. அவனால் நாள்தோறும் குடிக்காமல் இருக்க முடிவதில்லை.ண நம்முடைய நோக்கம் உயர்ந்ததாக சுயநலமில்லாததாக இருந்தால் நாம் செய்யும் செயல்களின் வாசனை நம்மை பாதிப்பதில்லை. இப்படி, ஒவ்வொரு கடமையையும் பரோபகாரமாகச் செய்யும் போது பந்தங்களில் சிக்கிக்கொள்ள மாட்டோம். ஏற்கனவே சுயநலத்துடன் சில செயல்களைச் செய்திருந்தாலும் கூட, அதன் பாதிப்பும் நம்மை விட்டு முழுமையாக நீங்கி விடும். இந்த ரகசியத்தையே "கர்மயோகம்' என்று ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin on Fri Oct 31, 2008 2:58 am

சித்தானந்தர்


* வெளிப்பொருட்கள் மீதான மோகமே மனிதர்களை தீய நிலைக்கு தள்ளுகிறது. இவற்றிலிருந்து விடுபட உள்மனம் சுத்தமாகவும், நல்ல முடிவை எடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மனிதர்களின் மனமும், அறிவும் ஒரு செயலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. இதை தவிர்த்து வெளிப்பொருட்களால் எந்த செயலையும் செய்து விட முடியாது. இந்த சக்திகளை ஒன்றாக திரட்டி, உறுதியுடன் செயல்பட தொடங்கினால் வெளிப்பொருட்களின் பாதிப்புகளை வென்று விடலாம்.

* எந்த செலையும் 'முடியாது' என்று ஒதுக்கி வைக்காதீர்கள். ஒரு செயலை பற்றிய சரியான எண்ணம் இல்லாதவர்கள்தான் அதனை செய்யாமல் இருப்பார்கள். அதனை நிச்சயமாக செய்ய வேண்டும் என முடிவெடுத்து செயல்பட துவங்கினால், முதலில் தோல்வி கிடைப்பதுபோல தெரிந்தாலும், கடின முயற்சியால் அதில் வெற்றி காணலாம். சந்தேகம் இல்லாத மனிதர்கள் எந்த செயலையும் மிக எளிதாக செய்து விடுவார்கள்.

* மனிதர்கள் ஒவ்வொருநாளும் புதுப்புது சூழலையும், வாய்ப்புகளையும் சந்திக்கிறார்கள். அதற்கேற்ப தங்களது அறிவை பயன்படுத்தி, உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும். புதிய சூழலை கண்டு அச்சம் கொண்டு ஒதுங்கிவிட்டால், வாழ்வில் வெற்றி பெற முடியாது. உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அது சரிப்படாது என்று ஒதுங்கிக் கொள்வதைவிட, அதனை தன்னம்பிக்கையுடன் செயல்படுத்தி வெற்றி காண வேண்டும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum