ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அருணா ஷான்பாக்!. இன்றைய தலைப்பச் செய்திகளில் மறுபடியும் இடம்பிடித்திருக்கும் பெயர்.

View previous topic View next topic Go down

அருணா ஷான்பாக்!. இன்றைய தலைப்பச் செய்திகளில் மறுபடியும் இடம்பிடித்திருக்கும் பெயர்.

Post by கண்ணன்3536 on Wed Mar 09, 2011 8:51 pm
கோமா நிலையில் 37 ஆண்டுகள் கழித்திருக்கும் 62 வயதுப் பெண்ணிற்குக் கோரப்பட்ட கருணைக் கொலை அனுமதியை மறுத்திருக்கிறது இந்தியச் சட்டம். இதனால் இன்று மறுபடியம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கும் அந்தப் பெண்ணிற்கு என்ன நடந்தது ?. அருணாவைக் கொலை செய்ய உதவுங்கள் என, எழுத்தாளர், செய்தியாளர், யெஸ். பாலபாரதி தன் வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரை அருணாவுக்கு நடந்த கொடுமையை அப்படியே சொல்கிறது. அவருக்கான நன்றிகளுடன் அக்கட்டுரையை இங்கே மீள்பதிவு செய்கின்றோம்

அருணாவைக் கொலை கருணைக் கொலை செய்ய உதவுங்கள் !

‘உங்களுக்கு மேரி டிரின்டிக்னன்டை தெரியுமா….?’

“தெரியாது…”

‘எலிசபெத் ராட்-க்ரானெஜ்-ஐ…?’

“தெரியாதுங்களே…”

‘என்னங்க… இவங்களை எல்லாம் தெரியாதுங்கிறீங்க… இவங்கலெல்லாம் பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த வெளிநாட்டுக்காரங்க…’ என்று விடை சொன்னவரின் கையில் வார இதழ் ஒன்று இருந்தது.

“அப்படியா… எனக்கு வெளிநாட்டுக்காரங்கள பத்தியெல்லாம் தெரியாதுங்க… அதுவும் பெண்விடுதலைக்காக குரல் கொடுத்தவங்களை சுத்தமா தெரியாது. ஆனா… இவை பற்றி எல்லாம் பேசுற நம்ம நாட்டுல பெண்கள் நெலமை எப்படி இருக்குன்னு மட்டும் தெரியும்க…”

‘அவங்களுக்கு என்னங்க… நல்லா தானே இருக்காங்க…?’ என்று ஆதங்கத்துடன் சொன்னவரிடம்… நான் மும்பையில் பத்திரிக்கையாளனாய் பணியாற்றிய போது எழுத முடியாமல் போன ஒரு அபலைப் பெண்ணின் கதையை சொல்லத் தொடங்கினேன்.

சாதாரண மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்தவர் அருணா ஷான்பாக். இவருக்கு மூத்தவரும் சகோதரி தான். மரபு மீறா பழமைவாதக் குடும்பம் அது. ஆனால்… காலத்தின் கட்டாயத்தால் வீட்டுப் பெண்களை வேலைக்கு அனுப்ப சம்மதித்தது குடும்பம்.

சிறுவயது முதல் சமூக சேவையில் ஆர்வம் கொண்ட அருணா நர்ஸ் படிப்பை தேர்வு செய்தார். நன்கு படித்து தேறியவுடன் மும்பையின் ‘கிங் எட்வர்ட் மெமோரியல்’(கே.ஈ.எம்) மருத்துவமணையில் டிரைனிங் நர்ஸாக வேலைக்கு சேர அழைப்பு வந்தது. ஏகப்பட்ட கனவுடன் கர்நாடக மாநிலத்திலிருக்கும் சிமோகா (இது தான் இவரின் சொந்த ஊர்)-வை விட்டு மும்பைக்கு ரயிலேறினார் அருணா.

தனது இருபத்தியோராவது வயதில்(1966-ல்) கே.ஈ.எம் மருத்துவ மனையில் பயிற்சி நர்ஸாக சேர்த்துக் கொள்ளப்பட்டவரின் ஒழுங்கு, சுறுசுறுப்பு, நோயாளிகளிடத்து கனிவுடன் சேவையாற்றும் பாங்கு… என எல்லாவற்றையும் கண்ட நிர்வாகம் தேர்வு மூலம் நிரந்தர பணியாளராக்கிக் கொண்டது.

கருப்பு-வெள்ளை படங்களில் நடித்த டி.ஆர். ராஜகுமாரி போன்ற முகச் சாயலில் மிக மிக அழகாய்த் தோன்றியவர் அருணா. ‘சுண்டினால் ரத்தம் வரும்’ என்பார்களே அப்படியான சிவப்பு நிறம். எப்போதும் உதட்டோரம் புன்னகையுடன் வலம் வரும் அருணாவுக்கு கே.ஈ.எம்-ல் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. சில வருடங்களிலேயே மராட்டி மொழியில் சரளமாக பேசவும், படிக்கவும் கற்று தேறி விட்டார்.

நோயாளிகள் முதல் மருத்துவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமானவராகிப் போன அருணாவிடம் ஏதோவொரு காந்த சக்தி இருந்ததாகவே எல்லோரும் நம்பினார்கள். அடம் பிடிக்கும் குழந்தைகள் முதல் அடாவடி பண்ணும் பெரியவர்கள் வரை இவரின் புன்னகைக்கு முன் மண்டியிட்டனர்.

அருணாவின் அழகிலும், அறிவிலும் மயங்கி தனது மனதை பறிகொடுத்தார் டாக்டர். சந்திப் தேசாய் என்பவர். இவரும் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட… அருணாவின் குடும்பத்தினரோ எதிர்ப்பை காட்டினர். அதனால் பதிவுத் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டது இந்த காதல் ஜோடி.

ஆனால் அருணாவின் மகிழ்ச்சியும் கனவுகளும் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. ஆம்… அந்த சமயத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும்… அதிரச்செய்த அக்கொடுமையான சம்பவம் நடந்தேறியது.

எத்தனை கனவுகளோடு கே.ஈ.எம் மருத்துவமணைக்குள் அடி எடுத்து வைத்திருப்பாரோ… அதே மருத்துவ மனையின் கீழ் தளத்தில்(பேஸ்மெண்ட்) ‘சோகன்லால் பார்த வால்மீகி’ என்பவனால் 1973-நவம்பர்-27 மாலை 4.50-க்கும், 5.50க்கும் இடைப்பட்ட காலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகிறார் அருணா. இந்த வால்மீகியின் தந்தை இதே மருத்துவமனையில் ‘முக்கதம்’ (மேற்பார்வையாளர்) ஆக வேலை பார்த்து வந்தார். அவரின் சிபாரிசின் பேரிலேயே தற்காலிக பணியாளனாக சேர்த்துக்கொள்ளப்பட்டவன் தான் சோகன்லால் பார்த வால்மீகி. இவனின் வெறிக்கு இரையான அருணா மயக்கமடைந்தார். அந்நிலையிலும் அவரைவிடாமல் பலமுறை தின்று தீர்த்து, பின் அங்கிருந்து ஓடி விட்டது அந்த மிருகம்.

மறுநாள் காலை 7 மணிக்கு வேலைக்கு வந்த செக்யூரிட்டி தான் முதலில் அருணாவை பார்த்திருக்கிறார். அதுவும் ஒட்டுத்துணி கூட இல்லாமல்… இடுப்பு பிரதேசம் முழுவதும் ரத்தமான ரத்தமாய் காட்சியளிக்க… உதடு, மார்பு, வயிறு என பல இடங்களில் நகக்கீறலும், பற்களின் தடங்களுமாய் அருணா கிடந்த கோலம் ஒருகணம் அவரை உலுக்கியிருக்கிறது.

அருணா இறந்து விட்டார் என்றெண்ணிய அந்த செக்யூரிட்டி, மேலதிகாரிகளுக்கு தகவல் தர… அவர்கள் வந்து பார்க்க… உயிர் இருப்பதைப் பார்த்ததும், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டார்.

கிட்ட தட்ட பதினைந்து மணி நேரம் சுயநினைவின்றி…. ஏகப்பட்ட ரத்தப் போக்கும் சேர்ந்து ஏற்பட்டதன் விளைவு… நினைவு மீண்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் நினைவிழந்து கோமா நிலைக்குப் போனார் அருணா. அந்த நினைவு மீண்ட தருணங்களில் வால்மீகி பற்றியும் சொல்லியிருக்கிறார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் வெளியே செய்தி கசிந்து விடாமல் பார்த்துக்கொண்டது.

ஆனாலும், எப்படியோ செய்தி வெளியே கசிந்து.. நவம்பர் 29ம் தேதி எல்லா மும்பை பத்திரிக்கைகளின் எட்டுகால செய்தியானது. அருணா பலாத்காரத்திற்கு பலியாகிப் போனார் என்று தெரிந்தவுடன் அவரின் குடும்பம் கையை விரித்தது. அவரை தங்களின் மகளே இல்லையென தலை மூழ்கியது. குடும்பமே தலை மூழ்கிய பின் மருத்துவ நிர்வாகமும் காவல்துறையில் இக்கொடுஞ்செயலை வழக்காக பதிவு செய்ய வில்லை.

காக்கி உடுப்புக்குள்ளும் நல்ல மனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ‘லஷ்மண்-நாயக்’ ஓர் உதாரணம். இவர் அப்பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர். பத்திரிக்கைகளின் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு இவரே வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினார். இவர் விசாரணையில் ஆர்வம் காட்டுவது கண்டு, இவருக்கு தேவையான உதவிகளை செய்ய முன் வந்தார் ‘பிங்கி விரானி’ என்ற பத்திரிக்கையாளர்.

இவ்விருவரின் கூட்டு முயற்சியால் ‘சோகன் லால் பார்த வால்மீகி’ கைது செய்யப் பட்டான். அவனது அடையாளமே தன் பெயரை கையில் பச்சை குத்தி இருப்பது தான். சாட்சியங்களின் மூலமும், விசாரணைகளின் வெப்பத்திலும் இவன் உண்மையை ஒப்புக்கொள்ள, குற்றவாளி என்பது நிரூபணமாகிறது. ஏழாண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது.

1973ல் நடந்த இக்கொடுமையான சம்பவத்திற்கு காரணமான ‘சோகன் லால் பார்த வால்மீகி’ தண்டனைக்காலம் முடிந்து.. வெளியே வந்து… மும்பையின் ஜனத்திரளில் கரைந்து போய் விட்டான். ஆனால் அருணா….?

இன்றும் படுக்கையில் கிடக்கிறார். பணியாற்றிய அதே மருத்துவமனையில் இருக்கிறார். ஆசியாவிலேயே மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் மிகப்பெரிய மருத்துவமனை என்ற பெருமை வாய்ந்த கே.ஈ.எம். மருத்துவமனை, நீதி மன்ற உத்தரவின் பேரிலேயே இன்றும் கவனித்து வருகிறது.

இருபத்தி ஐந்தாவது வயதில் வீழ்ந்த அருணாவுக்கு இன்று வயது அறுபத்தி இரண்டு!

கிட்டதட்ட முப்பத்தி ஏழு ஆண்டுகள்…… எல்லா உறவுகளும் உதறித்தள்ளிய நிலை…. படுத்த நிலையிலேயே ‘எல்லா’ கடன்களையும் கழிக்கும் அவலம்….. உடலில் ஆங்காங்கே… புரையோடிய புண்கள் என தனது மீதி வாழ்க்கையைப் படுக்கையிலேயே கழித்து வருகிறார் அருணா.

பொதுவாக கோமாவில் போனவர்களின் உடலுறுப்புகள் அசையுறாது என்பார்கள். அவர்களுக்கு பசி, உறக்கம் போன்ற எதுவும் தெரியாத நிலையில் இருப்பார்கள். ஆனால் அவர்களின் இதயம் மட்டும் இயங்கி வரும். அருணாவின் விழிகளின் ஓரத்திலிருந்து இன்றும் கண்ணீர் வடிந்த படி இருக்கிறது. அக்கண்ணீர் சொல்லும் கலைந்த கதைகள் நமக்குத் தெரியும்.

படுக்கையில் வீழ்ந்துவிட்ட அருணா இனியும் கண்ணீர் வடிக்க வேண்டுமா? ஆண்டாண்டு காலமாய் மருத்துவம் படிக்கும் புதியவர்களுக்கு சோதனைக்கூடமாக அருணா பயண்பட வேண்டுமா? எல்லாவற்றையும் இழந்து அருணா வடிக்கும் கண்ணீர் நிற்க… ஒரே வழிதான் உண்டு!

மனித உரிமை ஆர்வலர்கள் கொடி பிடித்து கோஷம் போடலாம்… பரவாயில்லை. அவர்களுக்கு மனதின் வலி பற்றி தெரியாது. நீங்களும் படித்து விட்டு அமைதியாக போக மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

அருணாவின் கண்ணீருக்கு தீர்வு கருணைக் கொலை மட்டுமே!

- நன்றி: விடுபட்டவை -37 வருடங்களாக கோமாவில் இருக்கும் நர்சு அருணாவின் கருணை கொலைக்கு அனுமதி தர முடியாது

சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

37 வருடங்களாக கோமாவில் இருந்து வரும் நர்சு அருணாவின் கருணை கொலைக்கு அனுமதி தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மும்பை கெம் மருத்துவமனையில், நர்சாக பணியாற்றி வந்தவர் அருணா ராமச்சந்திர ஷான்பாக். கடந்த 1973-ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி, இவரது வாழ்வில் ஒரு கறுப்பு நாளாக அமைந்தது. அந்த நாளில் அவருடன் பணியாற்றி வந்த துப்புரவுத்தொழிலாளி ஒருவர் அவரை பலாத்காரம் செய்து, கழுத்தை நாய்ச்சங்கிலி கொண்டு இறுக்கினான். இதில் அவரது மூளைக்கு செல்லக்கூடிய ஆக்சிஜன் நின்று போனதால் கோமாவில் ஆழ்ந்தார். இந்த கொடுமை நிகழ்ந்தபோது அருணாவுக்கு வயது 23.

அன்றிலிருந்து 37 ஆண்டு காலமாக அருணா, (தற்போது 60 வயது), தான் பணியாற்றி வந்த அதே கெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள் அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி, சிகிச்சை அளித்து வந்தாலும்கூட, அவரது பரிதாப நிலையை கண்டு மனம் பொறுக்காமல் எழுத்தாளர் பிங்கி விரானி என்பவர், அருணாவை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அனுமதி தர முடியாது

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இவ்வழக்கை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் ஆகியோர் விசாரித்து, அருணாவை கருணை கொலை செய்ய அனுமதி தர முடியாது என்று நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினர்.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:- நமது நாட்டில் `ஆக்டிவ் யுதானாசியா' என்கிற கருணை கொலை சட்ட விரோதமானதாகும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் `பேசிவ் யுதானாசியா'வுக்கு (ஒரு நோயாளி மருத்துவ சாதனங்களின் உதவியோடு உயிர் வாழ்கிறபோது, அவருடைய உயிர் பிரிவதற்காக அனுமதித்து, அந்த உயிர் காக்கும் சாதனங்களை விலக்கிக்கொள்வதுதான் `பேசிவ் யுதானாசியா') அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த தீர்ப்பே அமலில் இருக்கும்

இந்த வழக்கில் சம்பவம், உண்மைகள், சந்தர்ப்பசூழல், மருத்துவ ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்கிறபோது, அருணா கருணை கொலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டியவர் அல்ல.

கருணை கொலை தொடர்பாக நமது நாட்டில் ஒரு சட்டம் இயற்றப்படும் வரையில், இந்த வழக்கில் இந்நீதிமன்றம் வழங்குகிற தீர்ப்பே `ஆக்டிவ் யுதானாசியா' மற்றும் `பேசிவ் யுதானாசியா' (கருணை கொலை மற்றும் உயிர்காக்கும் மருத்துவ சாதனங்களை விலக்கிக்கொண்டு உயிர் பிரியச்செய்வது) தொடர்ந்து அமலில் இருக்கும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

டாக்டர்கள் கருத்து

கருணை கொலை பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்காவில் ஆரேகான், வாஷிங்டன் பகுதிகளில் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அருணாவின் கருணை கொலைக்கு அனுமதி மறுத்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள் கருத்து வருமாறு:- டாக்டர் தேவிபிரசாத் ஷெட்டி (இதய மருத்துவர், பெங்களூர்): சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கருணை கொலையை கையாளுகிற அளவுக்கு நமது நாடு மனமுதிர்ச்சி அடையவில்லை. உரிய காலத்துக்கு முன் மரணம் நிகழச்செய்வதையும், கருணை கொலையை சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பதையும் இந்த தீர்ப்பு தடுக்கும்.

டாக்டர் பி.கே.கோயல்: கருணை கொலை என்பது உணர்வுப்பூர்வமான விஷயம். இது தவறாக பயன்படுத்தப்படக்கூடும். இதை நாம் கருணை கொலை என்று அழைத்தாலும் கூட அதில் கருணை இல்லை. கொலைதான் இருக்கிறது. இரண்டு வார்த்தைகளும் இணைந்தே இருக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அறிந்ததும் மும்பையில் நர்சு அருணாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் கே.இ.எம். ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் நர்சுகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு மகளிர் தினத்தில் தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் தெரிவித்தனர்.
avatar
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 752
மதிப்பீடுகள் : 86

View user profile http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Re: அருணா ஷான்பாக்!. இன்றைய தலைப்பச் செய்திகளில் மறுபடியும் இடம்பிடித்திருக்கும் பெயர்.

Post by மஞ்சுபாஷிணி on Wed Mar 09, 2011 10:25 pm

இப்ப இந்தம்மா பற்றிய முழு விவரமும் அறிந்தேன் சோகம்

ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் போல அன்பும் புன்னகையுமா வளைய வந்தவருக்கு நல்லவாழ்க்கை கிடைக்க போகிறதே என்ற வேளையில் இப்படி ஒரு அரக்க ரூபத்தில் வந்து தொலையனுமா பாவி பாவி... சோகம்

என் அம்மா மூணு நாளா கேட்டுக்கிட்டே இருந்தாங்க. இப்ப தான் படிச்சிட்டு அம்மாவிடம் விவரம் சொன்னேன்...

தகவல் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கண்ணன்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அருணா ஷான்பாக்!. இன்றைய தலைப்பச் செய்திகளில் மறுபடியும் இடம்பிடித்திருக்கும் பெயர்.

Post by கலைவேந்தன் on Wed Mar 09, 2011 10:48 pm

வேதனை மனத்தைப் பிழிகிறது..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அருணா ஷான்பாக்!. இன்றைய தலைப்பச் செய்திகளில் மறுபடியும் இடம்பிடித்திருக்கும் பெயர்.

Post by ரபீக் on Wed Mar 09, 2011 11:52 pm

இப்படியெல்லாம் நடந்திருக்குமா ? மனதை உருக்கும் நிகழ்வு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அருணா ஷான்பாக்!. இன்றைய தலைப்பச் செய்திகளில் மறுபடியும் இடம்பிடித்திருக்கும் பெயர்.

Post by கண்ணன்3536 on Thu Mar 10, 2011 9:14 am

மரணம் தான் அவருக்கான விடுதலை
avatar
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 752
மதிப்பீடுகள் : 86

View user profile http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Re: அருணா ஷான்பாக்!. இன்றைய தலைப்பச் செய்திகளில் மறுபடியும் இடம்பிடித்திருக்கும் பெயர்.

Post by சிவா on Thu Mar 10, 2011 9:31 am

///இருபத்தி ஐந்தாவது வயதில் வீழ்ந்த அருணாவுக்கு இன்று வயது அறுபத்தி இரண்டு!///

படித்து முடித்ததும் மனதில் ஏற்பட்ட வலியை தடுக்க முடியவில்லை! இவரின் குடும்பத்தினர் மனித ஜென்மங்களா என்பதில் சந்தேகம் உள்ளது.

காவல்துறை அதிகாரி லஷ்மண்-நாயக், பத்திரிக்கையாளர் பிங்கி விரானி போன்ற நல்ல இதயம் படைத்தவர்கள் இன்னும் இருப்பதால்தான் நாடு இன்னும் சுடுகாடாக மாறாமல் உள்ளது. இந்த இருவருக்கும் என் வாழ்த்துகள்.

எது எப்படி இருப்பினும் இந்த வழக்கில் கருணைக்கொலை மிகவும் அவசியமானது என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள். இதற்கு மேலும் அப்பெண்மணி எழுந்து நடப்பார்கள் என கோர்ட் எதிர்பார்க்கிறதா?

வழக்கின் முடிவு எவ்வாறு இருந்தாலும், கருணைமிக்க மருத்துவர் எவராவது இப்பெண்மணியின் துயரத்திற்கு விடை கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்!

பகிர்வுக்கு நன்றி கண்ணன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அருணா ஷான்பாக்!. இன்றைய தலைப்பச் செய்திகளில் மறுபடியும் இடம்பிடித்திருக்கும் பெயர்.

Post by உதயசுதா on Thu Mar 10, 2011 9:52 am

ஆமாம்ப்பா இந்தம்மாவை கருணை கொலை பண்றது தான் நல்லது.
சுய நினைவே இல்லாமல் எத்தனை காலத்துக்கு இவர் துன்பம் அனுபவிப்பார்.மரணம்தான் இவருக்கான விடுதலை ஆகும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum