ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா

View previous topic View next topic Go down

தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா

Post by சிவா on Sun Mar 13, 2011 12:14 pm

17 வயதில் காதல்.
18 வயதில் பெற்றோரை எதிர்த்து திருமணம்.
திருமணமான முதல் நாளே கணவரின் மறுபக்கம் தெரிந்து அதிர்ச்சி.
19 வயதில் தாய்மை.
20 வயதில் கணவரின் அளவற்ற போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்பட்ட விரக்தி.


இத்தனையையும் தாண்டி, மெல்ல மெல்ல எழுந்து தன்னம்பிக்கையோடு முன்னேறிய பெண்ணுக்கு அடுத்து விழுந்தது அடியல்ல.. இடி! ஆசை ஆசை யாய் வளர்த்த மகளுக்கு திருமணம் செய்து வைத் தார். மணமான 30 வது நாளிலே அவர் விபத்தில் சிக்கி, இறந்தார். எப்படி இருக்கும் அந்த தாய்க்கு?!

- இப்படி விதியின் சதியால் சுருட்டி மூலையில் தூக்கி வீசப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி படிக்கும் போதே... யார் அவர்? இப்போது எப்படி இருக்கி றார்? என்ற கேள்வி உங்களுக்குள் எழத்தான் செய்யும்..!

அதற்கு பதிலாய் நிமிர்ந்து, உயர்ந்து நிற்கிறார் பெட்ரீஷியா. இழப்பும், வலியும் இன்னும் முழுமை யாய் நீங்காவிட்டாலும், "யாருக்குத்தான் இல்லை கவலையும், கண்ணீரும்! பிறந்தோம்... வளர்ந் தோம்... கவலைப்பட்டோம்.. கண்ணீர்விட்டோம் என்று வாழ்க்கையை முடித்துக் கொள்ளாமல் போராடிவென்று நம்மாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துத்தானே ஆகவேண்டும்..'' என்கிறார். இந்த சாதனை நாயகி இப்போது ஹோட்டல் தொழில் மூலம் தினமும் உணவு சமைத்து வழங்கு வது பல ஆயிரம் பேருக்கு!பெட்ரீஷியா, நாகர்கோவிலில் பிறந்தவர். பெற்றோர்: தாமஸ் ஜெயராஜ்-விக்டோரியா. இருவரும் சென்னையில் மத்திய அரசுப் பணியில் இருந்ததால், இவருடைய கல்வியும் சென்னையிலே தொடர்ந்தது.

"பசி என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தேன். அதனால் சிறுமியாக இருந்தபோது ஒரு நாள் அம்மாவிடம், `பசி என்பது எப்படி இருக்கும்?' என்று கேட்டேன். `அதை ஒரு நாளும் நீ உணரவேண்டிய நிலை வராது' என்று கூறி என்னை வளர்த்தார்கள். ஆனால் பெற்றோர் சொல்கேளாமல் நானாகப் போய் பசிக்குள்ளும், பட்டினிக்குள்ளும் விழுந்தேன்..''- என்று பழைய நினைவுகளுக்குள் மூழ்குகிறார், பெட்ரீஷியா.

பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு சுறுசுறுப்பும், குறுகுறுப்புமாய் கல்லூரி ஒன்றில் சேர்ந்து படித்திருக்கிறார். அங்குள்ள கேன்டீனில் எப்போதும் கூட்டம் அலைபோதும். அதனால் தன் தோழிகளோடு மெரினா கடற்கரை பகுதியில் இருந்த திறந்தவெளி ஹோட்டலுக்கு சென்றிருக் கிறார். சாப்பிட்டிருக்கிறார். சிறுவயதிலே அத்தையோடு சமையல் அறைக்குள் புகுந்து தனக்கு பிடித்ததை புதிது புதிதாய் சமைத்து சுவைத்த ஆர்வத்தில், அந்த ஹோட்டலின் சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்திருக்கிறார். உள்ளே செல்ல, உரிமையாளரான இளைஞர் அனுமதி தர, அவர்களுக்குள் நட்பு வளர.. அது காதலாகிவிட்டது.

"அந்த 17 வயதில் என்ன நடந்தது? எப்படி காதலில் விழுந்தேன்? என்று எனக்கு இன்னும் புரியவில்லை. என்னைவிட அவருக்கு 13 வயது அதிகம். அவசரப்பட்டுவிட்டேன். அவரது நண்பர்கள், என் தோழிகள் புடைசூழ ரகசிய திருமணம் செய்தோம். அதை வீட்டில் சொன்னதும் அம்மா அழுத அழுகை இன்றும் என் கண்முன்னே நிற்கிறது. எந்த மகளும், தாய் அப்படி அழ காரணமாக இருக்கக்கூடாது. கணவரோடு வாழச் சென்றேன். தனிக் குடித்தனம். திருமணமான அன்றே கணவரின் மறுபக்கம் தெரிந்து நான் நொறுங்கிப்போனேன். போதைப் பொருள் இல்லாவிட்டால் அவரால் வாழ முடியாது என்பதை உணர்ந்தேன்.

மறுநாள் காலையிலே பசி என்றால் என்ன என்பது தெரிந்தது. பல் துலக்கவேண்டும் என்றால், பேஸ்ட் வேண்டும். பிரஷ் வேண்டும். அதை எல்லாம் வாங்க பணம் வேண்டும். சமைக்க வேண்டும். அதற்கு பொருட்கள் வாங்கவேண்டும். கைகளை பிசைந்துகொண்டு கண்ணீர் விட்டேன். அம்மாவிடம் நான் பசி என்றால் என்ன என்று முன்பு கேட்டதற்கு அன்று பதில் கிடைத்தது.

`நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டேன்' என்று கண்ணீரோடு பெற்றோர் முன்னால் போய் நிற்க மனது இடந்தரவில்லை. போராடி வாழலாம் என நினைத்தேன். அதற்குள் என் பெற்றோருக்கு என் கணவரின் `பழக்கம்' பற்றி தெரிந்துவிட்டது. நானும் கர்ப்பமாகிவிட்டேன். 7 வது மாதத்தில் பிரசவத்திற்காக என்னை அம்மா அழைத்துச்சென்றார். தாய்மாமா விக்டரும் எனக்கு உறுதுணையாக இருந்தார். மகன் பிரவீன் ராஜ்குமார் பிறந்தான். பின்பு மகள் பிரதீபா சாண்ட்ரா பிறந்தாள்...''

எல்லா கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு பெட்ரீஷியா வாழ்க்கையில் போராடத் தொடங்கினார். வீட்டில் இருந்தே ஊறுகாய் தயாரித்து தனது தாயார் மூலம் விற்பனை செய்தார். வியாபாரம் சூடுபிடிக்க, கேன்டீன்கள் காண்டிராக்ட் எடுத்து நடத்த தொடங்கினார். பொருளாதார ரீதியில் அவர் தலை நிமிர, பிள்ளைகள் இருவரும் நன்றாக படித்து அம்மாவுக்கு பக்கபலம் ஆனார்கள். மகன் கப்பல் கேப்டனுக்குரிய படிப்பை வெளிநாட்டில் மேற்கொண்டார். அழகு மகள் சென்னை யிலே கல்லூரி படிப்பை தொடர்ந்தார். இந்த தருணத்தில் பெட்ரீஷியாவின் கணவர் இறந்து போனார்.

"என் குழந்தைகள்தான் என் உலகம் என்று ஆனது. மகள் திருமணத்தை சிறப்பாக நடத்தி கண்குளிர பார்க்க ஆசைப்பட்டேன். அவள் கல்லூரி படிப்பை முடித்த நான்காம் நாளே ஜாம்ஜாமென்று திருமணத்தை நடத்திவைத்தேன். அவர்கள் மகிழ்ச்சியாக தேனிலவு பயணத்தை முடித்துவிட்டு வந்தார்கள். பின்பு உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சென்றார்கள்...''- சொல்லும்போதே பெட்ரிஷீயாவின் கண்களில் நீர் துளிர்க்கிறது. குரல் தழுதழுக்கிறது. திருமணமான 30 வது நாளே புதுமணத் தம்பதிகள் அச்சரப்பாக்கம் அருகில் விபத்தில் சிக்கி அந்த இடத்திலே உயிரிழந்துவிட்டார்கள்.

"எப்படியாவது என் மகள் பிழைத்துக்கொள்வாள் என்று நம்பிக்கையோடு ஓடினேன். என் நம்பிக்கை பொய்த்துப்போனது. வெகு தாமதமாக அந்தப் பகுதிக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஒன்றும், `உயிரற்ற உடலை ஏற்றமாட்டோம்' என்று கூறிக்கொண்டு திரும்ப வந்திருக்கிறது. கடைசியில் ஒரு காரின் டிக்கியில் உடல்களை ஏற்றிவந்தார்கள். மகளின் மரணம் என் வாழ்க்கையை அப்படியே தலைகீழாகப் புரட்டி முடக்கிப்போட்டுவிட்டது..''- என்கிறார்.

மகள் விபத்தில் சிக்கி மரணமடைந்த அதே இடத்தில், அவர் நினைவாக `கார்டியன் ஏஞ்சல்ஸ்' என்ற இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெட்ரீஷியா தொடங்கி இயக்கிவருகிறார்.

மகளின் இழப்பில் இருந்து சேவை மூலம் ஓரளவு மீண்ட இவர், வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த மகனை அழைத்து, தன் ஹோட்டல் தொழிலை கவனிக்கச் செய்திருக்கிறார். தாயும், மகனும் சேர்ந்து தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பறக்கும் பெட்ரீஷியா அங்கிருந்து புதிய விஷயங்களை கற்று வந்து தன் தொழிலை மேம்படுத்துகிறார். `டிï டிராப்ஸ்' என்ற பொக்கே தயாரிப்பு நிறுவனத் தையும் நடத்துகிறார். `பிக்கி' இவரை மிகச் சிறந்த பெண் தொழிலதிபராக தேர்ந்தெடுத்து விருது வழங்கியுள்ளது.

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இவரிடம்...

உங்கள் வாழ்க்கை மூலம் நீங்கள் மற்றவர்களுக்கு உணர்த்தும் பாடம் என்ன?

"என்னைப் பார்க்கும் பலரும் `அவங்களுக்கு என்ன நல்லா இருக்காங்க' என்று கூறுவார்கள். எனக்கு தோல்விகள் மிக அதிகம். ஆனால் ஒரு படி சறுக்கும்போது இருபடிகள் மேலே ஏறி விடுவேன். முடியாது என்று எதையும் நான் விட்டதில்லை. என் மகள் இறந்ததும் என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நானும் நினைத்தேன். என்னை அறிந்தவர்களும் நினைத்தார்கள். ஆனால் அதில் இருந்தும் மீண்டுவிட்டேன். மரணம் எல்லோருக்கும் பொதுவானது. அந்த இழப்பு எப்போது, எப்படி நிகழ்ந்தாலும் சமாளித்து நிலைகொள்ள எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு வீழ்ச்சி ஏற்பட்டாலும் சாதிப்பதற்கு அது ஒரு தடையல்ல என்பதுதான் என் வாழ்க்கை மூலம் இந்த சமூகத்திற்கு நான் சொல்ல விரும்பும் பாடம்..''

உங்கள் சாதனையின் எல்லை எது என்று நினைக்கிறீர்கள்?

"எனக்கு எல்லை என்று எதுவும் கிடையாது. எல்லையை நிர்ணயித்துக்கொண்டால் அதற்கு மேல் செல்ல முடியாது. நான் ஓடும் நதி. கடந்து போய்க்கொண்டே இருப்பேன்..''


17 வயதிலே காதலித்த நீங்கள், அதன் மூலம் டீன்ஏஜ் பெண்களுக்கு சொல்ல விரும்புவது?

"அந்த வயதில் காதலிக்கவே கூடாது. அது வாழ்க்கையைப் பற்றி எதுவும் புரியாத இனக் கவர்ச்சிக் காலம். நான் காதலில் விழுந்து, கஷ்டப்பட்டு முன்னேறியிருந்தாலும் பட்ட வலிகள் ஏராளம். சின்ன வயதிலே காதலித்து கல்யாணம் செய்து வாழ்க்கையை இழந்தவர்கள் மிக அதிகம். அதனால் காதலிக்காதீர்கள். பெற்றோரை அழவைத்துவிட்டு நண்பர்கள் சொல்கேட்டு ரகசிய திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் அதற்குரிய தண் டனையை அனுபவித்துதான் ஆகவேண்டும். நான் அந்த தண்டனையை பலமுறை அனுபவித்து விட்டேன்''

காதல் கணவர் நல்லவர் இல்லை என்று தெரியும்போது போராடி அவரை திருத்துவது சிறந்ததா? ஒதுக்கிவிடுவது சிறந்ததா?

"இன்று திருமணம், நாளை டைவர்ஸ் என்று போய்விடக்கூடாது. கணவரை திருத்த போராட வேண்டும். சினிமாக்களில் கெட்டவரை நல்லவராக திருத்த முடியும் என்று காட்டுகிறார்கள். நானும் அதை நினைத்து போதை மீட்பு மையத்தில் என் கணவரை சேர்த்து இரவு, பகல் பாராது கஷ்டப்பட்டு பராமரித்து மீட்டுக்கொண்டு வர முயன்றேன். முடியவில்லை. மோசமான சூழல்களை எதிர்கொண்டு போராடி வெல்லும் பெண்களால்தான் சிறந்த பெண்மணிகளாக முடியும்"

எதிர்கால லட்சியம்?

"பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு வீட்டில் சுவையான உணவை சமைக்க நேரம் இல்லை. அவர்கள் பாக்கெட் புட், ரசாயனம் கலந்த உணவை வாங்கி சாப்பிடுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியம் கெடுகிறது. அந்த நிலையை மாற்ற அவர்கள் விரும்பும் தரமான உணவை தினமும் வீடுகளுக்கு கொண்டுசென்று கொடுக்கும் விதத்தில் என் தொழிலை மேம்படுத்தப் போகிறேன்'' என்று கூறும் பெட்ரீஷியாவிற்கு அன்பும், ஆதரவும் வழங்கிக்கொண்டிருக்கிறது அவரது குடும்பம். மகன் பிரவீன் ராஜ்குமார், மருமகள் பிரவீணா, பேரக் குழந்தைகள் இவரை சோர்ந்து போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அம்மாவும், அப்பாவும் இன்றும் அரண்போல் காக்கிறார்கள்.

தினதந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா

Post by ரபீக் on Sun Mar 13, 2011 12:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா

Post by உதயசுதா on Sun Mar 13, 2011 12:29 pm

ஒரு சிறிய தோல்விக்கே துவண்டு விடும் மனம் கொண்ட பெண்களுக்கு இவர் ஒரு சிறந்த முன்னுதாரணம்.இவரது வாழ்க்கைய எத்தனை தைரியமா போராடி ஜெய்த்து இருக்கார்.
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா

Post by Manik on Sun Mar 13, 2011 12:30 pm

தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த முன்னுதாராணம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா

Post by மஞ்சுபாஷிணி on Sun Mar 13, 2011 7:41 pm

பெண்கள் மனதளவில் பலவீனப்படும்போது வருங்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது....

பிள்ளைகளின் தேவைகள் பெற்றோர்கள் பார்த்து பார்த்து செய்யும்போது காதல் மட்டும் ஏன் பிள்ளைகள் தானா ஓடி போய் விழறாங்களோ...

விதியின் கொடுமை மகளின் மரணம்.....

அவசர உதவிக்கு தானே ஆம்புலன்ஸ் ஹூம்....

இத்தனையும் கடந்து வெற்றிகளை சாதிக்கும் பெட்ரிஷியாவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum